Search This Blog

9.2.11

ஏன் கிரிக்கெட்டைப் பார்ப்பனர்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள்?


கபாடியும் - கிரிக்கெட்டும்

ஒரு காலத்தில் ஹாக்கி என்பது இந்திய மண்ணுக்குரிய விளையாட்டாக இருந்தது. ஹாக்கி என்றால் இந்தியா, இந்தியா என்றால் ஹாக்கி என்று கூறும் அளவுக்கு ஓங்கு புகழ் பெற்றிருந்தது. பாகிஸ்தான் பிரிவினைக்குப்பிறகு அதில் தொய்வு ஏற்பட்டது. பிற்காலத்தில் இந்த விளையாட்டில் அடி எடுத்து வைத்த நாடுகள் எல்லாம் முன்னணியில் ஒளிர்கின்றன.

இந்தியா இதில் பின்னடைந்ததற்குக் காரணம் - கிரிக்கெட் என்னும் வெள்ளைக்காரர்கள் ஆட்டம் - இந்தியாவின் வெள்ளைக்காரர்களான பார்ப்பனர்கள் கையில் சரண் அடைந்ததால், கிரிக்கெட் மேலோங்கி ஹாக்கி பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.

ஊடகங்கள் பார்ப்பனர்கள் கையில் வசமாகச் சிக்கிக் கொண்டு இருப்பதாலும், பார்ப்பனர்கள் இதனை கையில் எடுத்துக் கொண்டதாலும் மக்கள் மத்தியில் கிரிக்கெட்டுக்கு ஒரு மகத்துவம் ஏற்படும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

விவசாயம் பார்ப்பனர்களுக்கான தொழில் இல்லை என்பதால் எப்படி அது நசிந்து போனதோ, அதே நிலைதான் விளையாட்டில் வருணாசிரமக் கண்ணோட்டம் இந்த நாட்டில் எல்லாத் துறைகளிலும் புகுந்து புறப்பட்டுக் கொண்டுதானிருக் கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

ஏன் கிரிக்கெட்டைப் பார்ப்பனர்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள்? ஹாக்கி, கால்பந்து, கபாடி போட்டிகளில் ஏன் அவர்கள் பங்கு கொள்வதில்லை என்பதைச் சிந்திக்க வேண்டும்.


இந்த விளையாட்டுகளில் உண்மையான திறன் குடி கொண்டிருக்கிறது. அதிக உழைப்பும், அதிகத் திறனும் இருந்தாலன்றி இந்த விளையாட்டுகளில் பங்கு கொள்ள முடியவே முடியாது. இந்த விளையாட்டுகளில் பங்கு பெறும் அத்தனைப் பேர்களும் அத்துணை நேரத்திலும் சுறுசுறுப்புடனும், கவனத்துடனும் சிரத்தையுடனும் இருந்தே தீர வேண்டும்.

கிரிக்கெட்டில் அப்படியல்ல. ஒருவர் பந்துவீசுவார்; ஒருவர் அடிப்பார்; ஒருவர் ஓடுவார், அவ்வளவுதான். மற்றவர்கள் அந்த நேரத்தில் பொழுதுபோக்காக நின்று கொண்டிருப்பார்கள். எல்லையில் நின்றுகொண்டு இருப்பவர்கள் ரசிகர்களுக்கு ஆட்டோகிராபில் கையொப்பம் போட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பார்கள்.

எதிலும் நளினமான, அலட்டிக் கொள்ளாதவற்றையெல்லாம் தட்டிப் பறித்துக் கொள்வது பார்ப்பனர்களின் தனித் தந்திரமாகும்.

சம்பளம் என்று எடுத்துக் கொண்டாலும் கிரிக்கெட்டில் கொள்ளையோ கொள்ளை. ஆண்டு சம்பளம் கோடிக்கணக்கில்; ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனிச் சம்பளம். அதிலும் உள்நாட்டில் ஆடினால் ஒரு வகை அளவுகோல் (Rate); வெளிநாடுகளில் ஆடினால் கூடுதல் தொகை.

4 ஓட்டம் (Four) ஓடினால் அதற்கு சிறப்புத் தொகை; 6 ஓட்டம் ஓடினால் (Sixer)அதற்கொரு தொகை அவற்றை அளிப்பதற்கே புரவலர்கள் (Sponsors) உண்டு. சூதாட்டம் (Match Fixing)

இந்தத் தொகை போதாது என்று விளம்பரம் மூலம் கோடி கோடியாக சம்பாத்தியம்! விளையாடினாலும், விளையாடா விட்டாலும் மாற்றாளாக (Substitute) உள்ளவர்களுக்கும் அந்தக் கொள்ளைச் சம்பளம் உண்டு.

கிரிக்கெட் குழுவில் இடம் பெறுவதற்கு வெளியிலிருந்து ஏராளமான அழுத்தங்கள் உண்டு. குழுவில் இடம் பெற்றுள்ளவர்களைக் காட்டிலும் மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் வெளியில் ஏராளம் உண்டு. அந்தப் பார்ப்பனர்க் கோட்டைக்குள் மற்றவர்கள் நுழைவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

இப்பொழுதுகூட விளையாட்டுக்காரர்களைத் தேர்வு செய்யும் குழுவிற்குச் சென்னையைச் சேர்ந்த ஒரு பார்ப்பனர்தான் தலைவராக இருக்கிறார். கேட்க வேண்டுமா?

இதில் ஓர் உண்மை என்னவென்றால் பார்ப்பனர் அல்லாத கபில்தேவ் குழுத் தலைவராக (CAPTAIN) இருந்தபொழுது தான் இந்தியா உலகக்கோப்பையை வென்றது.

தென்னாப்பிரிக்காவில் மண்ணுக்குரியவர்கள் கருப்பர்கள். ஆனால் அங்கு கிரிக்கெட் யார் கையில் இருக்கிறது என்றால் வெள்ளையர்கள் கையில். அங்கும் பிரச்சினை ஏற்பட்டதால் கிரிக்கெட்டில் இடஒதுக்கீட்டுக்கு வழி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட வெள்ளைக்காரர்களும், பார்ப்பனர்களும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவர்கள்தானே!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சடுகுடு என்பது இந்த மண்ணுக்குரிய சிறப்பான வீரமும், விவேகமும் செறிந்த விளையாட்டாகும். ஆற்று மணலிலும், கட்டாந்தரையிலும், உபகரணங்கள் எதுவும் தேவையின்றி மிக எளிதாகக் கோடு கிழித்துக்கொண்டு ஆடும் விளையாட்டாகும்.

என்ன கொடுமை என்றால் இப்பொழுது கிராமப்புறங்களில், வயல்களில்கூட கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். காரணம், இந்த ஊடகங்கள்தான்.

சினிமா போதைபோல கிரிக்கெட் போதை இளைஞர்களைக் கிறங்கச் செய்துவிட்டது. இந்தப் போதையிலிருந்து நம் இளைஞர்களை, மாணவர்களைக் காப்பாற்றவும், தமிழர்களின் வீர விளையாட்டை மீட்டெடுக்கவும் பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தைத் திராவிடர் கழகம் தொடங்கி இருக்கிறது. இதுவரை சென்னை, தஞ்சாவூர், திருப்பத்தூர், காரைக்குடி, சிங்காரப்பேட்டை ஆகிய இடங்களில் பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு இளைஞர்கள் மத்தியில் புத்துணர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து தூத்துக்குடியில் நடத்தப்பட உள்ளது.

அண்மையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கத்தைக் கொண்டு வந்து கொடுத்தது கபடிதான், தமிழ்நாட்டைச் சேர்ந்த - பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கவிதா இதில் முக்கிய வீராங்கனையாக ஜொலித்தார் என்பது தமிழர்களுக்கான பெருமையாகும்.

அவருக்குப் பாராட்டு விழாவை தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு டி.பி.எம். மொய்தீன்கான் தலைமையில் திராவிடர் கழகம் நடத்தி, விருதும் அளிக்கப்பட்டது.

பாராட்டு விழாவில் பங்கு கொண்ட திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் புரவலருமான மானமிகு கி.வீரமணி அவர்கள், சடுகுடு போட்டி ஒலிம்பிக்கில் இடம் பெறச் செய்வதற்கான முயற்சி தொடங்கப்பட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தினார்.

கபாடி விளையாட்டில் இதுவரை 20 நாடுகள் பங்கு கொண்டு வருகின்றன. இன்னும் 12 நாடுகள் கூடுதலாகப் பயிற்சி கொள்ளுமானால், ஒலிம்பிக்கில் இடம் பிடித்து விடும் - அப்படி ஒரு நிலை வரும்பொழுது தமிழ் மண்ணின் புகழ் பாரெல்லாம் பட்டொளி வீசும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை. ஊருக்கு ஊர் பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தினை கழகத் தோழர்கள் குறிப்பாக இளைஞரணி, மாணவரணித் தோழர்கள் தொடங்க வேண்டும்.

பண்பாட்டுப் புரட்சி விளையாட்டிலும்கூட நடைபெற்றாக வேண்டும்.

------------------ "விடுதலை” தலையங்கம் 7-2-2011

8 comments:

இளங்குமரன் said...

இந்த அருமையான கட்டுரையை வாசிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
இதனை என் முகப்புத்தகத்தில் மறுபதிவு செய்ய அனுமதி தேவை.

நன்றி.
அன்புடன்
இளங்குமரன்
http://ezhutheni.org

Unknown said...

யார் என்ன மாதிரி திறமையாக பேசினாலும் மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், பார்ப்பணர்கள் ஆதிக்கம் இந்தியா முழுவதும் பல விஷயங்களில் அளவு மீறியே காணப்படுவது உண்மைதான். உதாரணத்துக்கு ஜெயா தொலைக் காட்சியில் இடம்பேறும் தமிழகம் உய்ய சில பார்ப்பணர்கள் மட்டுமே அரசியலை அலசுவது. அதற்காக பார்ப்பணர்கள் அல்லாதோர் நம்மை கொள்ளை அடிக்கும் போது அதை நாம் ஆதரிப்பதுவும் நடு நிலை ஆகாதே?

நம்பி said...

சிறந்தப் பதிவு...தேவையானப்பதிவு...தமிழ் ஒவியாவுக்கு மிக்க நன்றி!

ஐரிஷ் இல் பிறந்த சிறந்த அறிஞரும், இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்றவருமான அறிஞர் பெர்னாட்ஷா கிரிக்கெட் பற்றி கூறிய கருத்து இது தான்...''11 முட்டாள்கள் விளையாடுவதை 11000 முட்டாள்கள்'' பார்க்கின்றனர் என்பதை மேல் நாட்டில் தோன்றிய விளையாட்டை மேல்நாட்டு அறிஞரே மிகக்கேவலாமாக விமர்சித்துள்ளார்...அது உருவாக்க்கப்பட்ட நாடான இங்கிலாந்திலும் டென்னிஸ் மற்றும் கால்பந்திற்குத்தான் முதன்மையான இடம்...பணித்தினால் கொழுத்துப்போனவர்கள் நேரத்தை செலவிட வழியில்லாதவர்கள்...பொழுதை கழிப்பதற்காக, சோம்பேறித்தனமாக திரிபவர்கள், உடலுழைப்பை பற்றி அறியாதவர்கள் கண்டுபிடித்த விளையாட்டுதான் கிரிக்கெட்...அதை பார்ப்பனன் தூக்கி கொண்டு திரிவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை...அவர்கள் அப்படிப்பட்டவர்கள் தானே...விவசாயம் பார்த்த பார்ப்பனரை கண்டதுண்டா? தனது வய்ற்றக்கான உணவையாவது விதைத்து அறுவடை செய்து நாமே சமைத்து சாப்பிடுவோம் என்று எண்ணியதுண்டா?... ரிக்ஷா இழுத்த பார்ப்பனரை கண்டதுண்டா?...வண்டி இழுத்தை பார்ப்பனரை கண்டதுண்டா?...மூட்டை தூக்கிய பார்ப்பனரை கண்டதுண்டா?...கழிவறையை சுத்தம் செய்த பார்ப்பனரை கண்டதுண்டா?...சமையல் செய்த பார்ப்பனரை பார்த்திருக்கலாம்...இல்லாவிட்டால் தீட்டாகிவிடுமே...? இரந்துண்ட பார்ப்பனரை பார்த்திருக்கலாம்...காசுக்கும், அரிசிக்கும் தீட்டு கிடையாதே...? அதை உருவாக்கியவனை பார்த்தால் தான் தீட்டு...மணியாட்டி நோகாமல் நோன்பு கும்பிடும் பார்ப்பனரை கண்டிருக்கலாம்...? சிலைக்குத் தீட்டு கிடையாதே...அதை காலால் மிதித்து அதன்மீது ஏறி சிலை வடித்தவனுக்கு...அதை வைக்க கோயில் கட்ட கல்லையும் மண்ணையும் தலையில் சுமந்து உயிர் விட்டவனுக்குத்தான் தீட்டு...அவன் செய்த சிலையை அவன் தொட்டாலே தீட்டு...பார்ப்பனர் விபத்தில் அகப்பட்டு ரத்த வெள்ளத்தில் இயிரை காக்க இன்னொருவர் ரத்தத்தை ஏற்றினால் தீட்டா...? இல்லை அந்த ரத்தம் கொடுத்தவனுக்குத்தான் தீட்டு...? சிறுநீரகம் கொடுத்தவனுக்குத்தான் தீட்டு...சீறுநீரகத்தை வாங்கிப் பொருத்திக் கொண்ட பார்ப்பனனுக்கு தீட்டு இல்லை...எங்கே என் உயிர் போனாலும் பரவாயில்லை பார்ப்பனனுடைய ரத்தம் மட்டுமே வேண்டும் என்று எந்த பார்ப்பனனாவது தீட்டு பார்க்கட்டுமே...ஏ நெகட்டிவ், பி பாசிட்டிவ் எல்லாம் வேண்டாம்...என் பார்ப்பனனுடைய இதயம், சிறுநீரகம், ரத்தம் மட்டுமே வேண்டும்...என்று சொல்லட்டுமே...அப்படி வைராக்கியமாக இருந்தால் முழுப்பார்ப்பனியமும் இந்த தீட்டிலேயே அழிந்து விடும்.....இப்படி பட்ட மூட, மூர்க்க, மனுதநேயமற்ற எண்ணத்துடன் இருக்கும் பார்ப்பனர்கள் தான் கிரிக்கெட்டை ஆதரிப்பார்கள்...இப்படிப்பட்டவர்களைத்தான் பெர்னாட்ஷா குறிப்பிட்டிருக்கிறார். மற்றவர்கள் கால்பந்தை, ஹாக்கியை, கபடியை ஆதரிப்பார்கள்...நம்மிடம் தோன்றிய (கபடி,ஹாக்கி) விளையாட்டுக்கள்...ஆசியாவின் பிறநாடுகளில். ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் பின்பற்ற படுகிறது...சிறந்த விளையாட்டாகவும் கருதப்படுகிறது...அதில் தொடர்ந்து வெற்றி முகத்தையும் காட்டிவருகிறார்கள். பதக்கப்பட்டியலிலும் முதலிடத்தில் வருகிறார்கள்.

அர்ஜென்டைனா வீரர் மாரடோனா குடிசைப்பகுதியான சேரிப்பகுதியில் பிறந்தவர் தான்...அங்கேயே தேங்காய் மட்டையை காலால் உதைத்து விளையாடி பயிற்சி பெற்று மிகச்சிறந்த கால்பந்தாட்டக்காரராக உருவானவர் தான். உழைப்பவன் விளையாடும் விளையாட்டுக்கள்...அதான் உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது. உழைப்பவனுக்கே இவ்வுலகம் சொந்தம்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பெரியார் வீர விளையாட்டுக் கழகம் -மிக நல்ல அருமையான முயற்சி .
சிறக்க வாழ்த்துக்களுடன்
எனது ஆதரவும் .
வாழ்க .வளர்க .

தமிழ் ஓவியா said...

உலகக் கோப்பை!

உலகக் கோப்பை கிரிக் கெட் வரும் 19 ஆம் தேதி துவக்கப்படுகிறது. இந்த முறை இந்தியாதான் கோப் பையைத் தட்டிப் பறிக்கப் போகிறது என்று மூக்கை சொறிந்து விடுகிறார்கள் விமர்சகர்கள்.

அதற்குள் மும்பையில் இந்தியா கோப்பையை வென் றெடுக்க வேண்டும் என்பதற் காக சித்தி விநாயகர் கோயி லில் விசேஷ பூஜை நடத்தப் பட்டதோடு, சாமி ஊர்வலத் தையும் நடத்தியுள்ளனர்.

இந்துத்துவா மனப் பான்மை என்ற ஒன்று இருக் கிறது. எதிலும் பக்தி ஆஷா டத்தைத் திணிப்பது என்பது அதன் ஆசாரக் குணமாகும். மனிதனின் திறமை, தன் னம்பிக்கை, உழைப்பு இவற் றின் மரியாதையைக் குலைப் பது என்பதுதான் அதன் திரிசூலமாகும்.
கடவுள் சக்தியால் இந் தியா வெற்றி பெறவேண்டும் என்றால், வெற்றி எப்படி விளையாட்டு வீரர்களுக்குச் சொந்தமாக முடியும்?

வெற்றிக்குக் காரணம் கடவுள் சக்தியென்றால், தோல்வி அடையும்போது கடவுளின் தோல்வி என்று ஒப்புக்கொள்வார்களா? அத்தகைய அறிவு நாணயம் எல்லாம் இந்த இந்துத்துவா பார்ப்பனீய மரபில் கிடையவே கிடையாது.

கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாதான் கோப்பையை வெல்லப் போகிறது என்று பிரபல ஜோதிடர்கள் எல்லாம் துண் டைப் போட்டுத் தாண்டினார் கள். தோல்வியில் முடிந்தது என்றவுடன், துண்டைக் காணோம், வேட்டியைக் காணோம் என்று குதிகால் பிடரியில் இடிபட ஓடினார்கள்.

சென்னை அண்ணா நகரில் கடந்த உலகக் கோப் பையின் போது கிரிக்கெட் விநாயகர் கோயிலே உரு வாக்கப்பட்டது. வலது கையில் மட்டை (பேட்) வைத்திருப்பதுபோல ஒரு விநாயகரும், இடது கையில் மட்டை (பேட்) வைத்திருப்பது போல மற்றொரு பிள்ளை யாரும் பிரதிஷ்டை செய்யப் பட்டன.

பிள்ளையாரைத் தோத் தரிக்கும் பாடல்கள் அடங் கிய குறுந்தகடு (சி.டி.) வெளியிடப்பட்டது. இந்தி யிலும், சமஸ்கிருதத்திலும் அந்தப் பாடல்கள் அமைந்த திலிருந்தே பார்ப்பனர்கள் தான் இதன் பின்னணியில் இருக்கின்றனர் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. (கிரிக்கெட்டே பார்ப்பனர்களுக்கான தனி உடைமைதானே!)

குறுந்தகடில் இடம் பெற்ற கிரிக்கெட் பஜன் வருமாறு:

ஏகாதச சிரச கிரிக்கெட் கணபதி
ஸ்வாகதம் சரணாகதம்
தஷிண நான திரிலோச்சன
கிரிக்கெட் கணபதி ஸ்வாகதம்
சரணாகதம்
வாமஹஸ்த திரிலோச்சன கிரிக்கெட்
கணபதி ஸ்வாகதம் சரணாகதம்
ஓம் பவுண்டரி மார்னே வாலே நமஹ
ஓம் சிக்சர் மார்னே வாலே நமஹ
ஓம் ஆல் ரவுண்டராய நமஹ
ஓம் கேட்ச் பக்கட்னே வாலே நமஹ
இந்தி, சமஸ்கிருதத் துக்கு இடையிடையே இங் கிலீஷும் வேறு.
அத்தோடு விட்டார்களா?

சென்னை குரோம் பேட்டை எஸ்.சி.எஸ். மெட்ரி குலேசன் மேல்நிலைப்பள்ளி யில் சிறப்பு யாகம் ஒன்றையும் நடத்தினார்கள். 1500 மாண வர்கள் அதில் கலந்துகொண் டனர். (ஆதாரங்கள்: இந்தியா டுடே, 21.3.2007).

இவ்வளவு செய்தும் இந் திய அணி ஊத்திக்கிட்டது தான் மிச்சம்!
கிரிக்கெட் மட்டுமல்ல, பார்ப்பனிய இந்துத்துவாவின் கடைசி வேர் இருக்கும் வரைக்கும் வீரம், விவேகம், கம்பீரம், தன்னம்பிக்கை அனைத்தும் காயடிக்கப்பட்டு விடும் என்பதை உணர்க!

- மயிலாடன் "விடுதலை” 9-2-2011

தமிழ் ஓவியா said...

//இந்த அருமையான கட்டுரையை வாசிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
இதனை என் முகப்புத்தகத்தில் மறுபதிவு செய்ய அனுமதி தேவை.//

நல்ல செய்திகளை பரப்ப யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். அனுமதி வழங்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

//பெரியார் வீர விளையாட்டுக் கழகம் -மிக நல்ல அருமையான முயற்சி .
சிறக்க வாழ்த்துக்களுடன்
எனது ஆதரவும் .
வாழ்க .வளர்க .//

நன்றி அய்யா.

நம்பி said...

சிட்னி கிரக்கெட் விளையாட்டுக்குழுவில் இடம்பெற்றதில் 7 பார்ப்பனர்...அனில் கும்ளே,ராகுல் திராவிட், வி.வி.எஸ். லக்ஷமன்,சச்சின் டென்டுல்கர், சவுரவ் கங்குலி,ஆர்.பி.சிங்,இஷான்ட்த் ஷர்மா...ஒரு ஜாட் இனத்தவர் யுவராஜ் சிங், ஒரு ரஜபுத்திரர் எம்.எஸ. தோனி, ஒரு இசுலாமியர் வாசிம் ஜாப்பர், ஒரு சீக்கியர் ஹர்பஜன் சிங்....

அதாவது 9 இந்து...(7 மேல்வகுப்பினர் என்று சொல்லக்கூடியாவர்கள்)...இரண்டு இந்து அல்லாதவர்.

இப்பொழுது...? ஒரு வலைப்பதிவில் தெரிவிக்கப்பட்ட தகவல்....

http://churumuri.wordpress.com/2008/01/05/just-4-of-population-but-7-brahmins-in-indian-xi/