கே.டி.கே. தங்கமணி: தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி இங்கே பேசப்பட்டது. உயர் சாதிக்காரர்கள் என்றால் சில நேரம் கொஞ்சம் சூடு வந்துவிடுகிறது. தமிழ் இலக்கியத்திலேயே தன்னைப் புலைச்சி மகன் என்று இழித்துப் பேசிய காரணத்தினால் ஆபுத்திரன் சினமுற்றுச் சொன்னதாக இருக்கிறது.
அந்தப் பாடல்:-
ஆபுத்திரன் பின்பு அமர்நகை செய்து மாமறை மாக்கள் வருங்குலம் கேண்மோ! முதுமறை முதல்வர் முன்னர்த் தோன்றிய கடவுட் கணிகை காதலஞ் சிறுவர் அருமுறை முதல்வர் அந்தணர் இருவரும் புரிநூல் மார்பீர் பொய்யுரை யாமோ? சாலிக் குண்டோ தவறென உரைத்து நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப
-என்று தாயை அவமானப்படுத்தியதன் காரணமாக ஆபுத்திரன் கூறினான் என்று பாடல் உள்ளது.
இராம. அரங்கண்ணல்: இந்தப் பாட்டிற்கு விளக்கம் என்ன கூறமுடியுமா?
தங்கமணி: விளக்கம் இதுதான்;
ஆபுத்திரனைப் பார்த்து, உன்னுடைய தாய் சாலி கற்பிழந்தவள் என்ற முறையில் சில பார்ப்பனர்கள் ஏசியபோது, அவன் கோபமுற்று, உங்கள் சாதி என்ன என்பது தெரியாதா? பார்ப்பனர்களுடைய மூதாதையர்களான வசிஷ்டர், அகத்தியர் ஆகியோருடைய பிறப்பு எப்படி என்றால் அவர்கள் எல்லாம் பிரம்ம புத்திரர்கள்; அதாவது பிரம்மாவின் திருமகள் திலோத்தமைக்கும், பிரம்மாவிற்குமே பிறந்த குழந்தைகள்தான் வசிஷ்டரும் அகத்தியரும்! தந்தையே மகளை மணந்துகொண்ட ஜாதி உங்களுடையது என்று ஆபுத்திரன் சொல்வதாக அந்த இலக்கியத்திலே இருக்கிறது.
------------ தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்ச்சி - 7.3.1975
0 comments:
Post a Comment