Search This Blog

22.2.11

பிரபாகரன் தாயார் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற தொல். திருமாவளவனைத் தடுப்பதா?

பிரபாகரன் தாயார் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனைத் தடுப்பதா?

துக்கம் விசாரிக்க அவருக்கு மீண்டும் அனுமதி பெற்றுத் தரவேண்டும்!


மத்திய அரசுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தாயாரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவனை விமான நிலையத்திலேயே தடுத்து, அனுமதி மறுத்து, வந்த விமானத்திலேயே அவரைத் திருப்பி அனுப்பிய இலங்கை அரசைக் கண்டித்தும், துக்கம் விசாரிக்கச் செல்லுவதற்கு அவருக்கு மீண்டும் அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் அருமைத் தாயார் திருமதி பார்வதி அம்மாள் அவர்கள் இரண்டு நாள்களுக்குமுன் இலங்கை யாழ்ப்பாணத்தில் காலமானதையொட்டி, மனிதநேயத்துடன் அவர்களுக்கு இறுதிமரியாதை செலுத்த விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் திருமாவளவன் அவர்கள் நேற்றிரவு இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்று, அவர் விமான நிலையத்தில் இறங்கியபோது, அவருக்கு இலங்கைச் சிங்கள இராஜபக்சே அரசு உள்ளே செல்ல அனுமதி மறுத்து, அவரை வந்த விமானத்திலேயே திரும்பிச் செல்லுமாறு பிடிவாதம் காட்டி, சிங்கள அரசின்அதிகாரிகள் அவரை சென்னை திரும்பும்படிச் செய்துவிட்ட கொடுமையைக் கேட்டு உணர்ச்சியும், மனிதநேயமும் உள்ள நமது நெஞ்சங்கள் குமுறுகின்றன.

தோழர் தொல். திருமாவளவன் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல; இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினரும்கூட (எம்.பி.).

இலங்கையில் நடப்பது காட்டாட்சியா?


ஏற்கெனவே இந்திய அரசு அனுப்பிய தூதுக் குழுவில் சென்று, இராசபக்சேவிடமே நேரில் விவாதித்துத் திரும்பிய குழுவினரில் ஒருவர் - அவரை ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூடாது என்று திருப்பி அனுப்புவது பச்சை பாசிசப் போக்கு அல்லவா? காரணத்தைக் கூறுங்கள் என்று பல முறை அவர் வற்புறுத்தி அதிகாரிகளிடம் வாதாடியும் பலனில்லை.

அவர் அரசியல் நிகழ்வுக்குப் போகவில்லை; துக்க நிகழ்ச்சி - மரண வீட்டுக்குச் செல்வதுகூட கூடாது என்றால், அங்கு காட்டாட்சியா நடக்கிறது?

மத்திய அரசு பரிகாரம் தேட வேண்டும்


இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடு இன்றி இலங்கை அரசின் போக்குக்குக் கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டும்.

தனிப்பட்ட தொல். திருமாவளவனுக்கு ஏற்பட்ட அவமானமோ, பின்னடைவோ அல்ல இது. இந்தியப் பேரரசுக்கு ஏற்பட்ட அவமானம் என்ற நிலைப்பாட்டுடன், கொதிப்புடன் மத்திய அரசின் வெளியுறவுத் துறை இதனை எண்ணிப் பரிகாரம் தேட வேண்டும்.

மீண்டும் அனுமதி தேவை!


ஏற்கெனவே பிரபாகரனின் தந்தையார் திரு. வேலுப்பிள்ளை அவர்கள் மறைந்தபோது செல்ல அனுமதித்துவிட்டு, இப்போது மட்டும் மறுப்பதேன்? தமிழக மீனவர்களை இலங்கை அரசு காக்கை குருவிகளைப் போல சுட்டுக் கொல்லுவது, சிறைப்பிடிப்பது, மத்திய அரசு தலையிடுவது, பிறகு விடுதலை எனும் நாடகம் நடத்துவது - ஒரு வாடிக்கையான வேடிக்கைக் கூத்தாகி விட்டது!

மத்திய அரசு இதுகுறித்து இலங்கைத் தூதரிடம் பேசித் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதும், மீண்டும் அவருக்கு அனுமதி வழங்கி துக்கம் விசாரிக்க உதவுவதும் அதன் முக்கியக் கடமையாகக் கருத வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

-----------------------கி. வீரமணி தலைவர், திராவிடர் கழகம் "விடுதலை” 22-2-2011

2 comments:

தமிழ் ஓவியா said...

கொழும்பிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம்:

தொல்.திருமாவளவன் ஆவேசம்!

சென்னை, பிப்.22- விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இலங்கை சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அவரது கட்சி யின் பொறுப்பாளர் களை இலங்கை விமான நிலையத்தி லேயே மடக்கி இந்தியா விற்கு திருப்பி அனுப் பப்பட்டதற்கு தொல். திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளதாவது:

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் அன்னை பார்வதி அம் மாள் கடந்த 20.2.2011 அன்று அதிகாலையில் வல்வெட்டித் துறை பொது மருத்துவமனை யில் இயற்கை எய்தி னார். இன்று (22.2.2011) மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அந்த இறுதி வணக்க நிகழ் வில் கலந்துகொண்டு விடு தலைச் சிறுத்தை களின் சார்பில் மரி யாதை செலுத்துவதற் காக நேற்று (21.2.2011) நள்ளிரவு 12.30 மணி யளவில் கட்சிப் பொறுப்பாளர் கள் வெற்றிச்செல்வன், இளஞ்சேகுவேரா ஆகி யோருடன் கொழும்பு சென்றோம்.

கொழும்பு விமான நிலையத்தில் சிங்கள அரசின் குடிவரவுத் துறை அதிகாரிகள் எங் களை வழிமடக்கி, இலங்கைக்குள் நுழைய உங்களுக்கு அனுமதி யில்லை. இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்!'' என்று கூறினர்.

நாங்கள் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயாரின் இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொள் வதற்காகவே வந்திருக் கிறோம். வேறெதுவும் உள்நோக்கம் இல்லை. ஆகவே எங்களை அனு மதிக்க வேண்டும்'' என்று வாதாடினோம். அவ் வாறு அனுமதிக்க இய லாது. நீங்கள் வந்த அதே விமானத்தில் திரும்பிச் செல்லுங்கள்'' என்று வற்புறுத்தினர்.

நான் ஏற்கெனவே பலமுறை இலங்கைக்கு வந்திருக்கிறேன். இந்திய நாடாளுமன்றக் குழுவி லும் ஓர் உறுப்பினராக வந்து போயிருக்கிறேன். நான் சமூக விரோதி அல்ல. இந்திய நாடாளு மன்ற உறுப்பினர் என் கிற முறையில் எனக்கு மதிப்பளிக்காவிட்டாலும், இந்திய அரசுக்காவது நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். இது தனிப் பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட அவமானம் என்பதைவிட இந்திய அரசுக்கும், இந்திய தேசத்திற்கும் இழைக்கும் பெரும் அவமதிப்பே ஆகும்.

இதை இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் உரிமைப் பிரச்சினையாக எழுப்புவேன்'' என்றும் எச்சரிக்கை விடுத்தேன். மேலும் என்னையும் என்னுடன் வந்தவர் களையும் எதற்காகத் திருப்பி அனுப்புகிறீர்கள் என்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமான அறிக்கையினை அளிக்க வேண்டும் என்று நான் வற்புறுத்தினேன்.

அவ் வாறு வழங்க இயலாது என்று மறுத்ததோடு எங்களை வலுக்கட்டா யப்படுத்தி அனுப்புவதி லேயே குறியாக இருந் தனர். பிரபாகரன் அவர் களுக்கு மட்டுமின்றி இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் அன்னையாய் விளங்கும் பார்வதி அம்மாளுக்கு மரியாதை செலுத்துவ தற்குக்கூட அனுமதிக் காத, ஈவிரக்கமில்லாத கொடுங்கோலன் இராஜபக்சேவையும், சிங்கள இனவெறி அர சையும் விடுதலைச் சிறுத் தைகள் மிக வன்மை யாகக் கண்டிக்கிறது.

அன்னை பார்வதி அம்மாள் இறப்பை யொட்டி ஈழத்தில் கருப்புக்கொடிகள் ஏற்றக்கூடாது எனவும் ஆங்காங்கே அவரின் உருவப்படங்கள் வைத்து மரியாதை செலுத்தக்கூடாது எனவும் சிங்கள இன வெறியன் ராஜபக் சேவின் இராணுவ கொடுநெறி அரசு கெடு பிடி செய்து வருகிறது.

அன்னை பார்வதி அம்மாளுக்கு தமது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தத் துடிக்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்குக்கூட அஞ்சுகிற வகையில் ராஜபக்சேவின் இராணு வம் மக்களை அச்சு றுத்தி வருகிறது.

கடுக ளவும் கருணையில்லாத கொடூரன் ராஜபக் சேவின் இத்தகைய தமி ழர் விரோதப் போக்கு எல்லையற்று நீண்டு கொண்டே போகிறது. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி தமிழ் நாட்டுத் தமிழர்களுக் கும் இந்திய ஆட்சியா ளர்களுக்கும் சவால் விடுகிற வகையில் ராஜ பக்சேவின் அணுகுமுறை கள் தொடர்கின்றன. லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த இனவெறி பிடித்த கொலைவெறி யன் இராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பது இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான என்னை திருப்பி அனுப்பியதிலி ருந்தே அறியலாம்.

இந்நிலையில் இந்திய, தமிழக அரசுகள் ராஜபக்சே கும்பலைக் கடுமையாக எச்சரிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

மேலும் தமிழகத் திலுள்ள இலங்கைத் தூதரகத்தை உடன டியாக அப்புறப்படுத்த வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது. நேரிலே மரியாதை செலுத்த முடியா விட்டாலும் அன்னை பார்வதி அம்மாளுக்கு லட்சோப லட்சக்கணக் கான விடுதலைச் சிறுத் தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக் கத்தை தமிழகத்திலிருந்து செலுத்துகிறோம்.

-இவ்வாறு தொல். திருமாவளவன் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

திருமாவளவன்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மையார் அவர்களின் இறுதி நிகழ்ச் சியில் பங்கேற்க விடு தலைச் சிறுத்தைகளின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் விமானம் மூலம் இலங்கைக்குச் சென்றார்.

விமான நிலைய அதிகாரிகள் பார்வதி அம் மையாரின் இறுதி நிகழ்ச் சியில் பங்கேற்க அவரை அனுமதிக்கவில்லை.

சென்ற விமானத் திலேயே இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். இதனைக் கண்டித்துத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டார்.

விடுதலை சிறுத் தைகள் கட்சி, தொல் திருமாவளவன் தலைமை யில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட் டத்தையும் நடத்தியது. ஆயிரம் பேருக்குமேல் கைது செய்யப்பட்டனர்.

நிலைமை முற்றிப் போய் விட்ட நிலையில், இலங்கை யில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரி சூலானந்த ஃபெரரோ கூறியுள்ள விளக்கத்தைக் கேட்டால் விலா நோகும்படி சிரிப்பை உண்டாக்குகிறது.

தென்னை மரத்தில் ஏன் ஏறினாய் என்று ஒருவன் கேட்க, புல் பறிக்கத்தான் என்று ஏறியவன் பதில் சொன்னானாம். அதைவிட படுதமாஷாக இருக்கிறது இலங்கை அதிகாரியின் பதில்.

திருமாவளவன் என்ன காரணத்துக்காக இலங்கை வந்தார் என்பதுபற்றிச் சரி யாகச் சொல்லவில்லை யாம்.

யாழ்ப்பாணப் பகுதியில் மீனவர்கள் கொந்தளிப்பாக உள்ளனராம். இந்த நேரத் தில் தமிழக அரசியல்வாதி யான திருமாவளவன் அங்கு செல்வது விரும் பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துமாம். அதற் காகத்தான் அவரை அனு மதிக்கவில்லையாம்.

வேண்டுமானால் பார்வதி அம்மையாரின் இறுதி நிகழ்ச்சியில் திருமாவள வன் பங்கு கொள்ள இப் பொழுது அனுமதிப்போம் என்றும் கூறியுள்ளார்.

கேழ்வரகில் நெய் வடிகிறது என்று ஒருவன் சொன்னால் கேட்பார்க்குப் புத்தி எங்கே போச்சு என்ற ஒருபழமொழி உண்டு.

பார்வதி அம்மையாரின் இறுதி நிகழ்ச்சியில் பங் கேற்கத்தான் வந்திருக் கிறேன் என்று திருப்பித் திருப்பி விமான நிலைய அதிகாரிகளிடம் சொன் னதை அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார் - திருமா. அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை அந்த அதிகாரிகள்.

ஆனால் உண்மைக்கு மாறாக அவ்வாறு எதையும் திருமாவளவன் சொல்லு வில்லை என்று இலங்கை குடியேற்றத்துறை அதிகாரி சொல்லுகிறார் என்றால் எந்த எல்லைக்கும் சென்று பொய் சொல்லத் தயங் காதவர்கள் அவர்கள் என் பது விளங்கவில்லையா?

துக்கம் விசாரிக்கச் செல்லலாமே தவிர, இப் பொழுது சென்று யாரு டைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வார், தோழர் திருமாவளவன்?

யாருடைய இறுதி ஊர்வலம் இலங்கையில் விரைவில் நடக்க உள்ளது? அதைச் சொன்னால் கொஞ்சம் நல்லது!
- மயிலாடன் -”விடுதலை” 23-2-2011