Search This Blog

5.2.11

சர்வ சக்தி உள்ள கடவுளுக்கு மனுஷனை நம்பும்படி செய்ய முடியவில்லையே!

கடவுள்பற்றி துணுக்குத் துக்கடா! சித்திரபுத்திரன்

சுப்பன்:

சர்வ சக்தியுள்ள கடவுளை நம்பமாட்டேன் என்கிறானே இந்தப்பாவி, எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்க மாட்டேன் என்கிறானே.

ராமன்:

அதுமாத்திரம் அதிசயமில்லப்பா, பசியா வரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக் கிடக்கிறார். ஒருவன் கூட ஒருகை கூழ் ஊத்த மாட்டேங்கிறானே.

சுப்பன்:

பசியா வரம் பெற்றவனுக்கு கஞ்சி என்னத்துக்கு? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன்:

இதுதான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்:

என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன்:

சர்வ சக்தி உள்ள கடவுள் என்கிறாய். அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்ய முடியவில்லை என்றால் இது முட்டாள்தனமான சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது பசியாவரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட்டம் இருக்கிறதோ அதேபோல் சர்வ சக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும் அவனை நம்பச் செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதுமாகும்.

----------------சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் எழுதிய துணுக்கு - “ விடுதலை” 22.2.1972

1 comments:

தமிழ் ஓவியா said...

செய்தியும் - சிந்தனையும் அப்பொழுது எங்கே போனது புத்தி?

கேள்வி: தமிழகத்தில் முதலமைச்சர் கருணாநிதியின் பொற்கால ஆட்சி நடக்கிறது என்று சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் கூறியிருப்பது பற்றி?

பதில்: ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஒரு அரசியல் கட்சியில் சேர்வதற்குக் கூட தடை ஏதும் இல்லை என்பதால், இந்த மாதிரி முழுக்க முழுக்க அரசியல் பிரச்சாரத்தை ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி செய்வதற்கு சட்டரீதியாகத் தடை கிடையாது. அதனால் இந்த மாதிரிப் பிரச்சாரம் இந்தக் காலத்தில்தான் நடக்கும்; முன்பு, இப்படிப் பேசுவதை ஓய்வு பெற்ற நீதிபதிகள் தங்களுடைய கவுரவத்திற்கு இழுக்காகக் கருதியிருப்பார்கள்.
துக்ளக் (26.1.2011)

எதிலும் சோ ராமசாமி அய்யர்வாளுக்குப் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாத பார்வைதான் - புத்திதான். பாபர் மசூதி இழப்பைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநில ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க. சங்பரிவார்க் கும்பல் மேற்கொண்ட உண்ணாவிரதத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் என்பதைக்கூட மறந்து திருவாளர் ஆர். வெங்கட்ராமன் அய்யர்வாள், உண்ணாவிரதம் இருந்தாரே - அப்பொழுது இந்தப் புத்தி எங்கே மேயப் போனது சோ பார்ப்பனருக்கு? குடியரசுத் தலைவர் பதவி என்பது சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவியைவிட சிறியதோ!
ஹி... ஹி....

கேள்வி: தமிழகத்தில் ஜாதி ஒழிந்து கலை வாழ்வு, பகுத்தறிவு வாழ்வு மலர்ந்திட வேண்டும் என்பதற்காக பெரியார், அண்ணா வழியில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்று முதல்வர் கலைஞர் பேசியுள்ளாரே.

பதில்: ஜாதியை ஒழிப்பவர்கள் - ஒரு ஜாதியை மட்டும் குறி வைத்து, பகை உணர்வுகளைத் தோற்றுவித்து, துவேஷத்தை வளர்க்க முனைய மாட்டார்கள். கலைஞர் செய்வது இதுதான். கலைஞர் சொல்கிற மாதிரி பெரியார் செய்ததும் அதுதான்.
(துக்ளக் 2.2.2011)
தந்தை பெரியாரோ, கலைஞரோ ஒரு ஜாதியை மட்டும் குறி வைத்து பகை உணர்வைத் தூண்டுவதாகவே இருக்கட்டும். (அப்படி பகை உணர்வைத் தூண்ட வேண்டும் என்று அவர்கள் நினைத்திருந்தால் ஒரு புல், பூண்டு கூடத் தமிழ்நாட்டில் இருந்திருக்காது. காந்தியாரை ஒரு மராட்டிய பார்ப்பான் படுகொலை செய்தபோது தந்தை பெரியார் கொஞ்சம் கண் ஜாடை காட்டியிருந்தால் அக்கிரகாரம் எல்லாம் பொசுங்கிப் போயிருக்கும்)
ஜாதியைக் கெட்டியாகப் பாதுகாக்கவும், ஊடகங்களைக் கைகளில் வைத்துக் கொண்டும், அந்த ஒரு ஜாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும், ஆன்மீகம் என்ற பெயராலே ஜாதி உணர்வுகளைத் தூண்டவும் ஒரு ஜாதி இருக்குமேயானால் அதனை எதிர்க்காமல், விமர்சிக்காமல் மடியிலே தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவார்களா?
ஜாதி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் உரிய பயிற்சி பெற்று அர்ச்சகர் ஆகலாம் என்றால் அந்தக் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த 13 பேர் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றால், அவர்களை எதிர்க்காமல், ஏணையில் படுக்க வைத்து ஆராரோ ஆராரோ என்று தாலாட்டுப் பாடுவார்களா?
தமிழர்களின் அளவுக்கு விஞ்சிய சகிப்புத் தன்மையால் ஒரு கூட்டம் நடமாடுகிறது என்பதுதான் உண்மை. வீணாக சீண்ட வேண்டாம் - சிண்டர்களின் கூட்டம்!
- கருஞ்சட்டை --"விடுதலை” 4-2-11