Search This Blog

1.2.11

பார்ப்பனர்பற்றி விவேகானந்தர்

நான் ஆரியன் மற்றையோர் மிலேச்சர் என்று எண்ணுகிற எண்ணம் அறியாமையிலிருந்து பிறந்தது. அறிவு விளக்கத்தின் வடிவமாய் வேதத்துக்கு பாஷ்யகாரராய் விளங்குகின்றவரிடத்து வர்ணாசிரமப் பிரிவுகள் இருத்தல் தகுமா?வேதங்களில் ரிஷி என்பதற்கு மந்திர திரஷ்டா எனப்பொருள் காணப் பட்டது. அம் மொழி கழுத்திலே பூணூலைத் தாங்கிய அனைவர்களையும் குறிப்பதில்லை. வருணப்பிரிவு பின்பு ஏற்பட்டது. வேதம் சத்தத்தின் இயற்கையை உடையது.

புத்தருடைய துறவுக் கொள்கையை இந்து சமயம் கவர்ந்து கொண்டது: புத்தரைப் போன்ற துறவு வாழ்க்கையுடைய வேறு ஒரு மனிதன் இவ்வு லகத்தில் பிறக்கவில்லை

புராணங்களில் பலவும், மனுதர்மம் போன்றனவும் மகாபாரதத்தில் பெரும்பகுதியும் பிற்காலத்திலெழுந்தன. பகவான் புத்தர் அவற்றுக்கு முற்பட்டவர்

(ஆதி) சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப்போல மிகவும் கூர்மையாக இருந்தது. அவர் வாதம் -புரிவதில் வல்லவர், மகாபண்டிதர்; அதில் அய்ய மில்லை. என்றாலும் அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை; அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப்பட்டது.

மேலும் அவர் தமது பிராம்மணத் தத்துவத்தில் பெருமை பாராட் டுபவர். இக்காலத்துத் தென்னிந்திய பிராம்மண புரோகித வகுப்பார் போல, அவர் இயற்றிய வேதாந்த சூத்திர வியாக்கியானத்தில் பிராம்மணர் அல்லாத வகுப்பார், மேலாகிய பிரம்ம ஞானத்தை அடையமாட்டார் என்று எவ்வளவு வாதாடுகிறார்! அவர் காட்டும் நியாயங்களோ எவ்வளவு வியப்பாக இருக்கின்றன!

விதுரன் பிரம்ம ஞானத்தை அடைந்தான்; அது முற் பிறவியிலே அவன் பிராம்மணத் திருமேனியோடு பிறந்த காரணத்தால் அத்தகைய ஞானத்தை அடைந்தான் என்று சொல்லவும் வேண்டுமா? அய்யோ பாவம்! பிராம்மணத்துவத்தை இவ்வளவு தூரம் இழுத்து வாதாடுவதில் என்ன பயன்?

உயர்ந்த மூன்று வருணத்தாரும் வேதங்களை ஓதுவதற்கும் பிரம்மத்தை அடைவதற்கும் உரியவர் என்று வேதம் கூறவில்லையா? வேதப்பிராமணத்திற்கு எதிராகச் சங்கரர், இந்த விஷயத்தில் தமது புத்திசாலித்தனத்தைக் காட்டுவது வேண்டப்படாத ஒன்று.

* இந்நாள்களில் தாழ்ந்த வகுப்பார் வேலை நிறுத்தம் செய்யும் இயக்கம் எவ்விடத்திலும் பரவிவருவது இதற்கு ஒரு சான்றாகும். உயர்ந்த வகுப்பார் எவ்வளவு முயன்று பார்ப்பினும், தாழ்ந்த வகுப்பாரை இனி அடக்கி வைக்க முடியாது.

தாழ்ந்த வகுப்பாருக்கு உரிமையாகிய நலன்களை அவர்கள் அடையச் செய்வதே உயர்ந்த வகுப்பார் தாமும் நன்மையடைவதற்குத் தகுந்த நெறியாகும்.

புரோகிதராகிய நீங்கள் வேத வேதாந்தங்களையும், அத்தகைய உயர்வு டைய சாத்திரங்களையும் பிராமண ரல்லாதார் படித்தல் கூடாது என்றும் தொடுதலுங்கூடாதென்றும் கட்டளை யிட்டு விட்டீர்கள்;

நீங்கள் அவர்களை எப்போதும் தாழ்த்தினீர்கள்; சுயநலத் தைக் கருதி இவ்வண்ணம் செய்தீர்கள். சமய சாத்திரங்களை உங்களுக்கே உரியவை என்றீர்கள். விதிவிலக்கு உங் கள் கையில் உள்ளவை எனச் சொல்லி விட்டீர்கள்.

இந்தியாவில் உள்ள ஏனைய ஜாதியார்களைக் கீழானவர்கள் என்றும் தீயவர்கள் என்றும் பலமுறை சொல்லி, அவர்கள் தங்களை உண் மையில் அத்தகையவர்களே என்று நம் பும்படி செய்து விட்டீர்கள்.

ஒரு மனிதனைப் பார்த்து நீ தாழ்ந்தவன்; இழிவுடையவன் எனக் காணும் போதெல்லாம் சொல்லி வருவானாயின் நாளடைவில் அவன் அதை விரும்பி உண்மையிலேயே தான் தாழ்ந்தவன் என்று நினைப்பது இயல்பு, இதனை மனோவசியம் என்பர். பிராம்மணரல் லாத வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகின்றார்கள்.

பிராமணர்களுடைய சாத்திரங்களிலும் மந்திரங்களிலும் அவர்கட்குள்ள நம்பிக்கைகள் நீங்குகின்றது. மேலை நாட்டுக் கல்வி பரவியதால், பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்தில் பதுமாநதியினுடைய கரைகள் இடிந்து விழுவது போல அழிந்து போகின்றன.

பெண்கள் ஞானத்தையும், பக்தியையும் அடைவதற்குத் தகுதியற்றவர்கள் என்று எந்த சாத்திரத்திலே கண்டாய்? புரோகிதர்கள் வேதங்களை அத்தியாயனம் பண்ணுவதற்கு ஏனைய ஜாதி மக்கள் தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கித் தள்ளிய இந்த இழிவான காலத்தில், பெண்களுடைய உரிமை களையும் நீக்கிவிட்டார்கள்.

நமது நாட்டு ஏழை மக்கள் உணவின்றிப் பட்டினியாயிருப்பதைக் காணும் பொழுது பூஜை முதலிய கிரியைகளையும், கல்வியையும் எடுத் தெறிந்து விட்டு, ஊர் ஊராகச் சென்று சாதனையினாலும், அய்ம்புலன் அடக் கத்தினால் வந்த ஆற்றலினாலும் பணக்காரருடைய மனத்தைத்திருப்பி பணம் திரட்டி ஏழைகளுக்குத் தொண்டு புரிவதில் வாழ்நாள் முழு வதையும் கழிக்க வேண்டுமென்னும் எண்ணம் எனக்கு உண்டாகிறது.
-------------------" விடுதலை” 29-1-2011

0 comments: