Search This Blog

27.2.11

பார்ப்பனர் பற்றி வ.உ.சிதம்பரனார்

ஆரிய (மிலேச்ச)ரைப்பற்றி வ.உ.சிதம்பரனார்

பிராமணரல்லாதார்களாகிய தமிழர்களின் முன்னோர்கள் பிராமணர்களின் முன்னோர்களாகிய ஆரியர்களை மிலேச்சர் என்றும் யாகத்தின் பெயரால் கண்டவற்றையெல்லாம் தின்பவர்களென்றும்,

நினைத்தவற்றையெல்லாம் செய்பவர்களென்றும், சொல்லியும், நிகண்டு முதலிய நூல்களில் எழுதி வைத்தும், அவர்களைத் தொடாமலும்,

அவர்கள் தொட்ட பொருள்களைக் கொள்ளாமலும், அவர்களைத் தொட நேர்ந்தபோது குளித்தும் அவர்களை இழிவுபடுத்தி வந்தார்கள்.

அவ்விழிவை ஒழிப்பதற்கு வழி என்ன என்று அவ்வாரியர்கள் ஆலோசனை செய்தார்கள். உடனே தங்களைப் பிராமணர்கள் என்றும், மற்றைத் தமிழர்களெல்லாம் சூத்திரர்கள் என்றும், சொல்லவும் எழுதவும் தலைப்பட்டார்கள்.

அவ்வாறு தாங்கள் மேலான ஜாதியார் என்றும், தமிழர்களெல்லாம் கீழான ஜாதியார் என்றும் நடத்தையிலும் காட்டினார்கள்.

அந்த மருந்தையே தமிழர்கள் கைக்கொள்ளின் அவர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நோய் நீங்கிப்போம்.

அதாவது, பிராமணரல்லாத ஜாதியார்களில் ஒவ்வொருவரும் தாம் பிராமணருக்கு மேற்பட்ட ஜாதியாரென்று கருதிப் பிராமணர் மற்றை ஜாதியர்களை நடத்துகிறதுபோல் பிராமணர்களை நடத்தி வருவாராயின் தம் ஆரோப இழிவு நோய் போய்விடும். இந் நோய் முதலைப் போக்குவதற்கு வேறு மருந்து தேட வேண்டியதில்லை.

(ஆரோபம் _ ஏறுதல்)

-------------------------_ (5.11.1927இல் நடந்த சேலம் ஜில்லா மூன்றாம் அரசியல் மாநாட்டுக்குத் தலைமை தாங்கும்போது வ.உ.சி. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து எடுக்கப்பட்டது.

0 comments: