Search This Blog

8.2.11

கோவணாண்டிக்கு எதற்குத் தங்கத் தேர்?
பழனி கோயிலுக்கு விரைவில் தங்கரதம் செய்யும் பணி துவங்கப்படுகிறதாம்; ஏற்கெனவே உள்ள பழைய தங்க ரதம் 63 ஆண்டுகளாக ஓடவில்லையாம். எட்டுகோடி ரூபாய் செலவில் தங்கத்தாலான பிரார்த்தனைத் தொட்டில் செய்யப்பட்டுள்ளது.

திருத்தணி முருகன் கோயிலுக்குத் தங்க விமான கோபுரம் - 25 கோடி ரூபாய் செலவில் 100 கிலோ தங்கம் கொண்டு உருவாக் கப்பட்டுள்ளது - அதற்கு குடமுழுக்கும் நடைபெற்றுள்ளது.

ஒருமுறை, மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்தான் கேட்டார். அவன்தான் (முருகன்) கோவணாண்டியாயிற்றே - ஒன்றும் வேண்டாம் என்று சென்றவனாயிற்றே - அவனுக்கு எதற்குத் தங்கத் தேர்? என்று அர்த்தமுள்ள வினாவைக் கேட்டார்.

அடிகளார் ஒன்றும் நாத்திகர் அல்லர்; ஆத்திக மெய்யன்பர்தான்; மடாதிபதி தான். அவருக்குத் தோன்றிய அந்த நல்லறிவு மற்றவர் களுக்கு இல்லாமற் போனது ஏன்?

இந்தப் பழனி கோயில், தமிழர்களின் ஆதிக்கத்தில் தான் இருந்தது. போகர் என்னும் சித்தரால் நவபாஷாண மூலிகைகளால் உருவாக்கப்பட்டதுதான் பழனியாண்டவன். போகரின் சீடர் புலிப்பாணியாரும் அவருக்குப் பிறகு அவர் வழி வந்த சீடர்களும்தான் பூசை செய்து வந்தனர். திருமலை நாயக்கர் என்பான் ஆட்சி வந்தாலும் வந்தது (1623-1659) பார்ப்பனர் ஆதிக்கக் கொடி நிர்வாணமாகப் பறந்தது. திருமலையின் போர்த் தளபதியாக (தளவாய்) ஒரு பார்ப்பான், பெயர் ராமப்பய்யன். பழனி கோயிலுக்குச் சென்றான்; அங்கு பூசை செய்பவர்களோ சூத்திரர்கள். அவர்கள் கைகளால் பிராமணனாகிய நான் எப்படிப் பிரசாதம் பெற்றுக் கொள் வது? என்ற அந்தக் கேள்வி ஆணையாகப் பிறந்தது. விளைவு - கொடுமுடி சரஸ்வதி அய்யன், மருதூர் தம்பாவய்யன், நாட்டார் அய்யன் கோயில் சுப்பய்யன், கரூர் முத்தய்யன், கடம்பர் கோயில் அகிலாண்டய்யன் ஆகிய பார்ப்பனப் பாம்புகள், சூத்திரன் கட்டி வைத்த புற்றில் புகுந்தன. இன்று வரை அதே நிலைதான் தொடர்கிறது.

இராமன் பிறந்த இடத்தில் பாபர் மசூதி வந்து விட்டது என்று பாபர் மசூதியை இடித்த கூட்டம் இதற்கு என்ன பதில் கூறுமோ?

கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுந்த இந்த வரலாற்றுக்கு ஆதாரம் உண்டு. திருமலையரசனின் அமைச்சன் ராமப்பய்யனின் பழனி கோயில் செப்பேடு இன்றளவும் உள்ளது. அது போலவே ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை பி.ஏ., பி.எல்., எழுதி, பழனி கோயில் தேவஸ்தானம் 1944இல் பதிப் பித்த நூலிலும் காணப்படுகிறது.

தந்தை பெரியார் அவர்களின் செயலாளர் - மறைந்த புலவர் மானமிகு கோ. இமயவரம்பன் அவர்களால் எழுதப்பட்ட பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் - மன்னர்கள் வீழ்ச்சியும் எனும் நூலில் இது போன்ற அரிய தகவல்கள் ஏராளம் உண்டு.

கோயில்களில் தங்கமும், ஆபரணங்களும் பிற்காலத்தில் அரசர்களால் அளிக்கப்பட்டு, பார்ப்பனச் சுரண்டலுக்கு வழி வகுக்கப்பட்டது.

நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் மட்டுமே வருமானம் உடைய மக்கள் 70 விழுக்காடு உள்ள நாட்டில் குழவிக் கல்லுக்குத் தங்கத் தேரும், தங்கத் தொட்டிலும் கேட்குதோ!

-------------- மயிலாடன் அவர்கள் 8-2-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

5 comments:

SIDDHAR SIVA said...

கோவணஆண்டிக்கு எதற்கு தேர் என்று கேட்பவர்களே முதலில் இந்து தமிழனுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சிந்தித்தீர்களா

இங்க இருக்கிற ஒவ்வொரு முஸ்லீமுக்கும், கிறிஸ்த்தவருக்கும் சோறு போடுரது இந்த கோவண ஆண்டிதான்

இங்க இருக்கிற முஸ்லீம் மெக்கா போரதுக்கு கவர்மெண்ட் நிதி கொடுத்து அனுப்பி வைக்குது,

அதே போல கிறிஸ்த்தவர்களை பெத்தலகேமுக்கு அரசு நிதி உதவியில் அனுப்பி வைக்கிறது,

ஆனால் இங்க இருக்கிறவன் பார்ப்பான் இல்லை இந்துதமிழன் இந்த கோவண ஆண்டியை பார்க்கனுமுனா
பஸ்சில ஆரம்பிச்சு கோயில் வரைக்கும் சிறப்புக்கட்டணம் கேட்டு அரசாங்கம் கொள்ளை அடிக்குது,

ஒன்னுமே இல்லாத ஆண்டியை பார்க்க போறவனையும் ஆண்டியா ஆக்குறததுதான்
அரசாங்கத்தோட வேலையா, ஏன் அரசு இலவச பஸ் விடுறது,

மூடநம்பிக்கைவாதிகளாகிய இந்துக்களோட கோயில் வருமனாத்தை வாங்கி மற்ற மூடநம்பிக்கைவாதிகளான பிற மதத்துக்காரனுக்கு
செலவு செய்யுற அயோக்கியத்தனம் இங்கே தான் நடக்குது,

இது மதசார்பற்ற நாடுதானே அப்ப எல்லா சர்ச்சு மற்றும் பள்ளிவாசல்களிலும் உண்டியலை வைக்க வேண்டியது தானே

மூடநம்பிக்கைவாதிகளாகிய இந்துக்கள் கோயில் உண்டியல்ல காசு போடுறவரைக்கும் தான் இவங்களால ஆட்சியே
நடத்த முடியும் நாங்க காசு போடுறத நிறுத்தினா

எல்லாரும் மெக்காவுக்கும் ஜெரூசலத்துக்கும் ஓட வேண்டியதுதான்,

குன்றக்குடி அடிகளார் போன்ற ஆன்மீக துரோகிகளை என்ன செய்வது

அடிகளார் என்ன அறப்பணி மற்றும் ஆன்மீகப் பணிசெய்திருக்கிறார் மடத்தின் சொத்துக்களைக் காத்துக்கொண்டு
ஏசி காரிலே வலம்வரும் இவர்களை மடாதிபதி என்று சொல்வதே கேவலம்.

ஒரு மடாதிபதி கடவுள்மறுப்பு இயக்கமான தி.க மற்றும் தி.மு.க மாநாட்டில் கலந்துகொண்டு
கடவுள் மறுப்பு நுால்களை வெளியிடுகிறாார்.இவர் எப்படி அடிகளாராக இருக்க முடியும்.

இவருக்கு முருகனை பற்றி பேச அருகதை
இல்லை,

இவர்போன்ற போலி மடாதிபதிகளை தண்டிக்க புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்,

தங்கத்தேர் ஒன்னும் ஒங்க அப்பன் வீட்டு பணத்துல வாங்கல இந்துக்களோட ( மூடநம்பிக்கைவாதிகள்) பணத்துலதான் வாங்கறாங்க

மூடநம்பிக்கைவாதிகளாகிய எங்களோட உண்டியல் பணத்துல வயிறு வளர்க்கிற பகுத்தறிவு வாதிகளே சிந்தியுங்கள்.

SIDDHAR SIVA said...

கோவணஆண்டிக்கு எதற்கு தேர் என்று கேட்பவர்களே முதலில் இந்து தமிழனுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சிந்தித்தீர்களா

இங்க இருக்கிற ஒவ்வொரு முஸ்லீமுக்கும், கிறிஸ்த்தவருக்கும் சோறு போடுரது இந்த கோவண ஆண்டிதான்

இங்க இருக்கிற முஸ்லீம் மெக்கா போரதுக்கு கவர்மெண்ட் நிதி கொடுத்து அனுப்பி வைக்குது,

அதே போல கிறிஸ்த்தவர்களை பெத்தலகேமுக்கு அரசு நிதி உதவியில் அனுப்பி வைக்கிறது,

ஆனால் இங்க இருக்கிறவன் பார்ப்பான் இல்லை இந்துதமிழன் இந்த கோவண ஆண்டியை பார்க்கனுமுனா
பஸ்சில ஆரம்பிச்சு கோயில் வரைக்கும் சிறப்புக்கட்டணம் கேட்டு அரசாங்கம் கொள்ளை அடிக்குது,

ஒன்னுமே இல்லாத ஆண்டியை பார்க்க போறவனையும் ஆண்டியா ஆக்குறததுதான்
அரசாங்கத்தோட வேலையா, ஏன் அரசு இலவச பஸ் விடுறது,

மூடநம்பிக்கைவாதிகளாகிய இந்துக்களோட கோயில் வருமனாத்தை வாங்கி மற்ற மூடநம்பிக்கைவாதிகளான பிற மதத்துக்காரனுக்கு
செலவு செய்யுற அயோக்கியத்தனம் இங்கே தான் நடக்குது,

இது மதசார்பற்ற நாடுதானே அப்ப எல்லா சர்ச்சு மற்றும் பள்ளிவாசல்களிலும் உண்டியலை வைக்க வேண்டியது தானே

மூடநம்பிக்கைவாதிகளாகிய இந்துக்கள் கோயில் உண்டியல்ல காசு போடுறவரைக்கும் தான் இவங்களால ஆட்சியே
நடத்த முடியும் நாங்க காசு போடுறத நிறுத்தினா

எல்லாரும் மெக்காவுக்கும் ஜெரூசலத்துக்கும் ஓட வேண்டியதுதான்,

குன்றக்குடி அடிகளார் போன்ற ஆன்மீக துரோகிகளை என்ன செய்வது

அடிகளார் என்ன அறப்பணி மற்றும் ஆன்மீகப் பணிசெய்திருக்கிறார் மடத்தின் சொத்துக்களைக் காத்துக்கொண்டு
ஏசி காரிலே வலம்வரும் இவர்களை மடாதிபதி என்று சொல்வதே கேவலம்.

ஒரு மடாதிபதி கடவுள்மறுப்பு இயக்கமான தி.க மற்றும் தி.மு.க மாநாட்டில் கலந்துகொண்டு
கடவுள் மறுப்பு நுால்களை வெளியிடுகிறாார்.இவர் எப்படி அடிகளாராக இருக்க முடியும்.

இவருக்கு முருகனை பற்றி பேச அருகதை
இல்லை,

இவர்போன்ற போலி மடாதிபதிகளை தண்டிக்க புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்,

தங்கத்தேர் ஒன்னும் ஒங்க அப்பன் வீட்டு பணத்துல வாங்கல இந்துக்களோட ( மூடநம்பிக்கைவாதிகள்) பணத்துலதான் வாங்கறாங்க

மூடநம்பிக்கைவாதிகளாகிய எங்களோட உண்டியல் பணத்துல வயிறு வளர்க்கிற பகுத்தறிவு வாதிகளே சிந்தியுங்கள்.

நம்பி said...

//மூடநம்பிக்கைவாதிகளாகிய எங்களோட உண்டியல் பணத்துல வயிறு வளர்க்கிற பகுத்தறிவு வாதிகளே சிந்தியுங்கள். //

உங்களை யார் காசு போட சொன்னது...நாலு பேருக்கு உதவு...படிக்காத ஏழைகளுக்கு உன் பணத்தை கொண்டு கல்வி புகட்டு...அடி மட்டத்திலிருக்கும் பாமரனை மேலே கொண்டு வா...உனக்கு சம்மாக அவனை மாற்று...நீ இருக்கும் சமூகத்தை ஏற்றத்தாழ்வற்ற சமுதாயமாக மாற்று...இதை யாரும் தடுக்கவில்லையே...அதற்காக அந்த காசை செலவு பண்ணு...

உண்டியலில் யார்? யார்? காசுபோடுகிறார்கள்? என்று கருக்காக படம்பிடித்து காண்பிக்கிறதா?...இந்த சமயத்துக்காரன் காசு போட்டான் இந்த சமயத்துக்காரன் காசு போடவில்லை என்றா காட்டுகிறது?...எத்தனை ஏழை மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய பணமோ..? எத்தனை தொழிலாளிகளின் குடும்பங்களை வஞ்சித்த பணமோ...? எவரை கொலபாதகம் புரிந்த பணமோ..? நாட்டிற்கு சொந்தமான பணத்தினை ஏமாற்றி எத்தனை கோடிகள் வரி ஏய்ப்பு செய்த பணமோ....? எத்தனை பேரிடம் கையூட்டு பெற்ற பணமோ...? எத்தனை பெண்களின் வாழ்க்கையை கெடுத்த பணமோ...? அது எந்த சமயத்தவரை, எத்தனை சமயத்தொழிலாளர்களை வஞ்சித்த பணமோ? யாருக்கு தெரியும்...?

உமது சாலை என்ன உமது ஒருவரின், குடும்பத்தின் வரிப்பணத்தில் போடப்பட்டதா..? (அதை வைத்து ஒரு அங்குலம் சாலை கூட போடமுடியாது, மின்சாரம் பெற முடியாது..)கோடிக்கணக்கான ஏழை மக்களின், பிளாட்பாரத்தில் தூங்குபவர்களின் வரிப்பணத்தில் போடப்பட்டது..(ஒவ்வொரு பொருளுக்கும் வரி...வரி செலுத்தாதவர்கள் என்று இங்கு யாருமே இல்லை...இங்கு யாரும் இலவசமாக வாழவில்லை)....மின்சாரம்...தொழிற்சாலைகள், அத்தியாவசிய உணவுப்பண்டங்கள்...சோறு...பொட்டு...புண்ணாக்கு எல்லாம் என்ன ஒரு சமயத்தவர் விளைவித்த்ததா...? இவர் விளைவித்ததை தொடமாட்டேன் என்று ஒதுக்கித்தான் விட்டோமா?

இல்லை உயிர் காக்க ரத்தம் தேவைப்படும் பொழுது...இந்த சமயத்தவர் ரத்தம் வேண்டாம், இந்த சாதிக்கரானின் கிட்னி வேண்டாம்...சட்னியும் வேண்டாம்...இதயம் வேண்டாம் என்று இறப்பைத்தான் தழுவிக்கொள்கிறார்களா...? அப்போது எந்த தீண்டத்தகாதவனின் ரத்தமும் பொருந்தும்...அப்போது தீட்டு கிடையாது...உயிராச்சே.(போனா தலைமயிராச்சே என்று எவரும் இருப்பது கிடையாது)..ஏன்? அப்போது தீட்டு பார்க்கவேண்டியது தானே...எனக்கு என பார்ப்பனனின் கிட்னி மட்டுமே வேண்டும்...பார்ப்பனனின் ரத்தம் மட்டுமே வேண்டும்...என்று ஒரு வீம்புடன் இருந்திருக்கலாமே!..சாதி வெறியர்களின், மதவெறியர்களின் எண்ணிக்கையாவது குறைந்திருக்குமே...!

இப்படி ஒவ்வொன்றும் எல்லா மக்களின் ஒத்துழைப்புடன் தான் நடைபெறுகிறது...மனிதன் ஒரு சமுதாய விலங்கு...ஊட்டி மலைமேல் தனியாக வீடுகட்டி கொண்டு மின்சாரம் கொடு என்றால் மின்சாரவாரியம் உமக்கு செலவு செய்து இணைப்பு கொடுக்காது..முதலில் வீடு கட்டும் பணிக்கே ஆள்வரமாட்டார்கள்...அதற்கு அதிக பொருட்செலவு செய்யவேண்டும்...அந்த பொருளும் பல மக்களின் உழைப்பில் வந்தவைகள்...இதெல்லாம்...கம்யூனிச பொருண்மை வாதங்களில் வருபவைகள்...படத்தில் கேட்டிருக்கலாமே...செங்கலில் இருந்து உழைப்பை கழித்துவிட்டால் வெறும் மண் தான்...ஒரு பொருள் என்றால் அதில் பல தரப்பட்டவர்களின் உழைப்புக்கள் இடங்கியது....ஒரு சமூகத்துக்காகத்தான் எல்லாமே...சமூகத்தில் அனைவரது பங்களிப்பும் உண்டு..இதில் எவரையும் பிரிக்க முடியாது.

இந்து மதம் பார்ப்பன மதம்...அது திராவிடர்களின் மதமல்ல...கடவுள் நம்பிக்கையுள்ளவர் என்று ஒருவரும் கிடையாது..இருந்திருந்தால் கோயிலில் கொலை நடந்திருக்குமா..? காமசாஸ்திரம் படித்திருப்பார்களா...? சைவமும் வைணவமும் சண்டை போட்டுக்கொண்டிருக்குமா...? நீ உயர்ந்தவன் நான் உயர்ந்தவன் என்று..என் கடவுள் உயர்ந்தவன்...உன் கடவுள் மட்டம் என்று....சண்டை போட்டுகொண்டிருப்பார்களா...? கடவுள் தண்டிக்கமாட்டாரா? பயமில்லையா...? இங்கே யார் நம்பிக்கையுள்ளவர்கள்? யார் நம்பிக்கையற்றவர்கள்...?

...கடவுளை உண்மையுடன் நம்புகிறார்களா? இவர் ஆத்திகவாதி என்று அளக்க எந்த கருவியும் இல்லை....எல்லாம் மரணபயத்தினால் வந்த நம்பிக்கைகள்.

நம்பி said...

//மூடநம்பிக்கைவாதிகளாகிய இந்துக்களோட கோயில் வருமனாத்தை வாங்கி மற்ற மூடநம்பிக்கைவாதிகளான பிற மதத்துக்காரனுக்கு
செலவு செய்யுற அயோக்கியத்தனம் இங்கே தான் நடக்குது,//

மூடநம்பிக்கைவாதி என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி....

அப்படி என்றால் வெளிநாட்டில் இருந்து இங்கே கடன் பெறுகிறோமே...அது கிருத்துவ சமயத்தவர்கள் பணம் தானே....இன்னும் பல வெளிநாட்டில் இருந்து பெட்ரோலியம் வாங்குகிறோமே அது இஸ்லாம் சமயத்தவர்களின் பொருள் தானே...(என்ன எங்கோ பலமா இடியோ இடி என முரண்பாடாக இடிக்கிறதே...?)

இதற்காக அவர்களும் மார்தட்டிக்கொள்ள முடியாது...நீங்களும் மார்தட்டிக்கொள்ள முடியாது...மூடநம்பிக்கைவாதி என்று மட்டும் வேண்டுமானால் மார் தட்டி சொல்லிக்கொள்ளலாம்.

குன்றக்குடி அடிகளாரைப்பற்றி எழுதிய கைகள் பாவம் புண்ணியக்கொலை செய்த ஊத்தாச்சாரி சங்கராச்சாரியரை (ஜெயந்திர்ரை) மட்டும் எழுத மறந்தது ஏன்...? அவா செய்தா நோ குத்தமா....அவ்வளவு நல்லவளா அவா...? அவா அவா என்று சொல்லிங்கொண்டு இருந்தால் ஏதுங்காணும் புவா...? புவாவுக்கு விதை போடனும்...ஏர் உழனும்...நாத்து நடனும்..களை பறிக்கணும்...உரம் வைக்கணும்...பாதுகாக்கணும்...அறுவடை பண்ணணும்...கூலி கொடுக்கணும்..அதுக்கப்புறம்...விலை விக்கணும்...அதுகப்புறம் தான் நமக்கு புவா...என்னக்காவது இதை விதைத்து அறுவடை செய்திருப்பானா...? தனக்கு வேண்டிய சோற்றுக்கு ஆவது விதைச்சு உழைச்சு அறுவடை செய்து மகிழ்ச்சியுடன் உண்டிருப்பானா? மூட்டை தூக்கி பார்க்க சொல்லு வலி தெரியும்...பார்ப்பனன்...இதுவரைக்கும். அடுத்தவ உழைப்பில மஞ்சகுளிப்பவன் தானே பார்ப்பனன்...

எவ்வளவு சொன்னாலும்....

நம்பி said...

//தங்கத்தேர் ஒன்னும் ஒங்க அப்பன் வீட்டு பணத்துல வாங்கல இந்துக்களோட ( மூடநம்பிக்கைவாதிகள்) பணத்துலதான் வாங்கறாங்க//

ஊருக்கே ஒரு அப்பன் கிடையாது...அப்படி சொல்லவும் முடியாது..சொன்னா அசிங்கம்..வரும் பணமெல்லாம் எங்கப்பன் வீட்டு பணம் என்று சொந்தங்கொண்டாடவும் முடியாது...எல்லோருடைய அப்பன்கள் வீட்டு பணமும் சேர்ந்தது தான்...வரிப்பணம்..ஏழை, பாழை படிச்சவன், படிக்காதவன், பணம் படைத்தவன், மொள்ளமாறி, முடிச்சவிக்கி.. என எல்லோரும் சேர்ந்தது தான் நாடு...

இல்லையென்றால் பார்ப்பனர் பண்ணுகின்ற கஷ்டனமான வேலையான மணியாட்டுகிற வேலைக்கு மாதா மாதம் சம்பளம் கொடுக்க முடியாது...

ஆன்மீக பலத்தால் எதையும் பெற முடியும் என சொல்லமுடியுதே..? அந்த பலத்தை வைத்து கொஞ்ச நாள் கட்டவண்டி இழுத்து வயித்த கழுவினா தான் என்னா?

அப்பதானே அடுத்தவ கஷடம் தெரியும்...?

வர்ணத்தை கூட இப்படி எழுதிக்கலாம் இதுல நம்பிக்கையில்ல, இருந்தாலும் பிரம்மாவின் தலையில பிறந்தவன் திராவிடன்...காலில் பிறந்தவன் பார்ப்பனன் என்று கூறி பிரச்சாரம் பண்ணு....அவ்வளவு யோக்கியவானாக இருந்தால்.

அதை ஏன் செய்யமாட்டேன்கிற...அது இழிவு என்பதால தானே...? இழிவை தூக்கி திராவிடன் தலைமேல வைச்சுட்டு என்ன நியாயம் பேசற...வாயத்துறந்து இது நாள் வரைக்கும் மருந்துக்கு கூட பாவம் என்று சொல்லமாட்டேங்கிறேயே! அவ்வளவு புத்திசாலி....அவ்வளவு சோம்பேறி....