Search This Blog

18.6.14

இலங்கையில் இஸ்லாமிய மக்களின் நிலை!ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதைபோல இலங்கையில் சிறுபான்மை மக்களான தமிழர்களைக் கொன்று குவித்து - தமிழர்கள் என்ற அடையாளமே இல்லாமல் ஆக்கும் மூர்க்கத்தனமான இனப் படுகொலையில் ஈடுபட்ட இலங்கை சிங்களப் பேரினவாதக் கும்பல் இப்பொழுது மற்றொரு சிறுபான்மை மக்களான முஸ்லிம்களைக் குறி வைத்துவிட்டனர்.


சிங்களவராக உள்ள ஒருவர் மட்டுமே இலங்கையில் அதிபராக முடியும் என்று சட்டத் திருத்தம் செய்து வைத்துள்ளவர்களிடம் இதைத் தவிர வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?


இலங்கை - களுத்துறை மாவட்டம் அளுக்கமப் பகுதி சிங்கள இளைஞர்களுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த தமிழர்களான முஸ்லிம் இளைஞர்களுக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட சண்டை. முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள இனவெறிக் கலவரமாக மாற்றப் பட்டு விட்டது.


கோதா பிட்டிய, மீரிபென்ன அட்ஹி கர கொட பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. அவர்களின் வணிக நிறுவனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன என்பதோடு முஸ்லிம்களும் தாக்கப்பட்டனர்.


காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக்கூட எடுத்துச் செல்ல முடியாத நிலை!


விடு அளுத்கம, தர்கா நகர் பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் சிங்கள இன இளைஞர்களுக்கு இலங்கை ராணுவமும் துணை போனது என்கிற செய்தி மிகக் கேவலமானதும், அதிர்ச்சியூட்டக் கூடியதுமாகும்.


ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தும் சிங்கள வெறி அமைப்பான பொது பல சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் வீடுகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் தீ வைத்து வெறியாட்டம் போட்டுள்ளனர்.


அய்.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை  எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அரசும் எச்சரித்துள்ளது. இந்தியா உள்பட எந்த நாடும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வில்லை என்பது கண்டனத்திற்குரியதாகும்.

இந்தியாவில் இப்பொழுது ஆட்சிப்பீடத்தில் உள்ள அரசோ, வெளிநாடுகளில் இந்துக்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்ளும். இதனை வெளிப்படையாகவே தேர்தல் அறிக்கையில் பி.ஜே.பி. வெளியிட்டு விட்டது.

இலங்கையில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறபோது பி.ஜே.பி.க்கே உரித்தான பார்வைதான் மேலோங்கி நிற்கும் என்பது எளிதிற் புரிந்துகொள்ள கூடியதே!

ஒன்றை மட்டும் இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும்; மதப் பிரச்சினை என்று வந்துவிட்டால், உலகில் எண்ணற்ற நாடுகள் முஸ்லிம்களுக்கு உண்டு என்பதை மறந்துவிட  கூடாது!

இலங்கைக்குக் கிடைக்கும் பெட்ரோல், டீசல், எரிவாயு வரை பிரச்சினையை ஏற்படுத்திவிடும் என்பது நினைவிருக்கட்டும்!

எல்லாவற்றிற்கும் சீனா வந்து கைலாகு கொடுக்கும் என்று மனப்பால் குடிக்கவேண்டாம். இந்த நேரத்தில் பாகிஸ்தானும் ஒன்றைச் சிந்திக்கவேண்டும்.

தமிழர்கள் பாதிக்கப்பட்டபொழுது இலங்கைக்குக் கைகொடுத்த பாகிஸ்தான் - இப்பொழுது அங்கு முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்களே இப்பொழுது தன் முகத்தை பாகிஸ்தான் எங்கே கொண்டு போய் புதைத்துக் கொள்ளப் போகிறது?

இனம், மதத்தை விட்டுத் தள்ளுவோம். மனிதாபிமானம், மனித உரிமைகள் என்பதுபற்றிச் சிந்திக்கவேண்டாமா?

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை எதற்குச் சீண்ட வேண்டும்? இன்னொரு மனிதனைத் தாக்குவதாலோ, கொல்லுவதாலோ ஏற்படுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றா?

உயர்ந்த பண்பாடுகளை ஒழிப்பதுதான் மதம் என்ற கண்ணோட்டம் என்பது இப்பொழுதாவது விளங்கவில்லையா?

மதம் என்ற சொல்லுக்கு வெறி என்ற பொருளும் உண்டு; அதுதான் இப்பொழுது இலங்கையில் நடந்திருக்கிறது.

அதுவும் மானுடத்துக்கு அன்பையும், அறநெறிகளையும் போதித்த கவுதமப் புத்தரால் உண்டாக் கப்பட்ட மார்க்கத்தை சிங்களவர்கள் இப்படிக் கொச்சைப்படுத்தி வருவது வெட்கக்கேடே! புத்த நெறி வெறியாக்கப்பட்டதால், வந்த கேடுதான் இது!

உலக நாடுகள் இலங்கையைத்  தனிமைப் படுத்தித் தண்டிக்காதவரை அது திருந்தப் போவதில்லை என்பது கல்லின்மேல் எழுத்தாகும்!

               -------------------------------------”விடுதலை” தலையங்கம் 18-06-2014

16 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


பஞ்சகவ்யம் என்றால் பால், தயிர், மாட்டு மூத்திரம் (கோமியம்), சாணி, நெய் இவற்றின் கலவைதானே! இதனைப் பக்தியின் பெயரால் தட்சணை கொடுத்து மனிதன் குடிக்கிறானே- இந்து மதத்தில் என்று நாம் கேள்வி கேட்டால், அதற்கு என்ன விளக்கம் சொல்கிறார்கள் தெரியுமா?

பாலில் - சந்திரன்

தயிரில் - வாயு பகவான்

மாட்டு மூத்திரத்தில் - வருணதேவன்

சாணியில் - அக்னி பகவான்

நெய்யில் - சூரிய பகவான் இருப்பதாகக் கதை அளக் கிறார்களே, விஞ்ஞான ரீதியாக இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் சங்கராச் சாரியார் இந்தப் பஞ்ச கவ்யத்தைக் குடிப்பாரா?

சரி, மாட்டு சாணிக்கே இவ்வளவு சக்தி என்றால், மனித சாணிக்கு...?

Read more: http://viduthalai.in/e-paper/82379.html#ixzz352kUnUlB

தமிழ் ஓவியா said...


நுகம்பலில் இரு பிரிவினர்க்கிடையே மோதல் - அரசு தலையிட்டுத் தடுத்திடுக!


செங்கற்பட்டு வட்டம், சித்தாமூர் ஒன்றியம், நுகம்பல் ஊராட்சியில் இரு பிரிவினர்க்கிடையே ஏற்பட்ட மோதலில் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டுள்ளன. கோவில் திருவிழாவை முன்வைத்து இந்தக் கொடுமை நடந்திருக்கிறது. காவல்துறை ஒரு சார்பாக செயல்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் பதற்றத்துடன் சொல்லுகிறார்கள்.

மற்றொரு தருமபுரி நாயக்கன் கொட்டாயாக மாறுவதற்குமுன் தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ளுமா?

Read more: http://viduthalai.in/e-paper/82381.html#ixzz352kvW9OG

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


மவுனம்

செய்தி: காவிரி மேலாண்மை வாரியம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச் சர் உமாபாரதி கருத்துக் கூற மறுப்பு!

சிந்தனை: பி.ஜே.பி. ஆட்சியில் துறை அமைச் சர், துறைத் தொடர்பான கேள்விக்குப் பதில் சொல்ல மாட்டார்கள். துறைக்குச் சம்பந்தமே இல்லாத அமைச்சர்கள் அனந்த குமாரும், வெங்கய்ய நாயுடுவும்தான் பதில் சொல்லுவார்கள் போலும்!

Read more: http://viduthalai.in/e-paper/82384.html#ixzz352l3pQxT

தமிழ் ஓவியா said...


அளவுக்கு மீறிய உற்சாகம்


உற்சாகமாக இரு, தைரியமாக இரு என்கின்ற அறிவுரைகள் சிறந்தவையேயாகும். ஆனால், அளவுக்கு மீறிய உற்சாகமும், கண்மூடித்தனமான துணிவும் பயனளித்துவிடாது என்பதோடு, எதிர்ப்பான பலனைக் கொடுக்கக் கூடியதாகவும் ஆகிவிடலாம். - (குடிஅரசு, 29.9.1945)

Read more: http://www.viduthalai.in/page-2/82385.html#ixzz352pVCGDu

தமிழ் ஓவியா said...


2012 ஆசிரியர் தகுதித்தேர்வில் 55 சதவிகித மதிப்பெண் பெற்றவர்களுக்கும் தேர்ச்சி தகுதி கிடைக்க வேண்டும்
நமது தமிழக முதல்வர் அவர்கள் 2014 இல் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத் தில் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீட்டு பிரி வினரில் 55 சதவிகித மதிப்பெண் பெற்ற வர்களும் அரசு வேலை பெற தகுதியு டையவர்கள் என்று அறிவித்தார்கள்.

அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அரசு பணியில் சேர காத்திருக்கிறார்கள். இதே போன்று 2012 ஆம் ஆண்டில் நடை பெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வுக்கும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 55 சதவிகித மதிப்பெண் தேர்ச்சி பின்பற்ற வேண்டும் என்று சட்டசபையில் பல தலைவர்கள் எடுத்துக்கூறியும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

2012 ஆசிரியர் தகுதித்தேர்வுக்கும் இம் முறை பின்பற்றப்பட்டால் எம் போன்ற பலரது வாழ்வு வசந்தமாகும்.

2010 ஆம் ஆண்டில் மே மாதத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு தகுதித்தேர்வு எழுத வேண்டிய அவசிய மில்லை.

அவர்களுக்கு உரிய பணியிடம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் 2010 மே மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவர்களுக்கு இதுவரை பணியிடம் வழங்கப்பட வில்லை.

ஒருவர் ஆசிரியர் தகுதிபெற வேண்டு மானால் கண்டிப்பாக மூன்று ஆண்டுகள் கல்லூரியில் சேர்ந்து படித்து இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என 2012 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் முற்றிலும் தொலைதூரக் கல்வி மூலம் பயின்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர் நிரந்தர பணியிடம் பெற்றுள்ளனர்.

எனவே, இதுகுறித்து நமது தமிழக அரசு, எம் போன்றவர்களுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி அளிக்கப்பட்டு தகுந்த பணியிடம் அளிக்கவேண்டும் என்று பணிவன்புடன் வேண்டுகிறோம்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள

வேலையில்லா மாற்றுத்திறனாளி
மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்

Read more: http://www.viduthalai.in/page-2/82390.html#ixzz352pfUgZv

raajsree lkcmb said...

என்னாது? தமிழர்களான முஸ்லிம் இளைஞர்களுகளா? யாருப்பா அவங்கள்ல்லாம் ? அப்படி யாரும் இங்கு இல்லையே .. சத்தமா சொல்லாதிங்க, அப்புறம் சிங்களவனை அடிக்க சேர்த்து வச்ச பெட்ரோல் குண்ட எல்லாம் உங்க தலையில போட்டுடுவானுங்க ....

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......பஞ்ச மூலிகை

துளசி - பக்தியை வளர்க்கும்

சங்குப்பூ - பெருஞ்செல்வம் கிட்டும்

விருட்சிப்பூ - நோய் தீர்க்கும்

குவளைப்பூ - குழந்தை பாக்கியம் கிட்டும்

ஆவாரம்பூ - கடன் தொல்லை தீரும்

ஓர் ஆன்மீக இதழ் இவ்வாறு கூறுகிறது.

இதனைப் பார்த்தால், அரசு தேவையில்லை, மருத்துவமனை தேவை யில்லை, வாங்கிய கட னைத் தீர்க்க உழைக்கத் தேவையில்லை, மூடத் தனம் + சோம்பேறித்தனம் தான் ஆன்மீகமா?

Read more: http://viduthalai.in/e-paper/82451.html#ixzz358GdpIN9

தமிழ் ஓவியா said...


இங்கல்ல...


கத்தார் நாட்டில் ஷபியத் கலிஃபா பகுதியில் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்ற இந்தியருக்கு 40 சவுக்கடி தண்டனை வழங்கிட நீதிபதி உத்தரவிட்டார். ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ஒன்றரை மாதங்களுக்கு ரத்துச் செய்யப்பட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/82458.html#ixzz358GqdMIR

தமிழ் ஓவியா said...


யாரிடம் மரியாதைநம் மக்களின் மரியாதை காட்டும் தன்மைகள் எல்லாம் அனேகமாய் செத்துப் போனவர்களிடமேயொழிய, இருப்பவர்களிடமில்லை.
_ (குடிஅரசு, 22.3.1931)

Read more: http://viduthalai.in/page-2/82459.html#ixzz358H0ybt8

தமிழ் ஓவியா said...


தலைக்கொரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காயா?

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு இணங்க, மேற்பார்வைக் குழுவினை அமைப்பதற்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவைக் குழு வழங்கி யுள்ளது.

வெள்ளைக்காரர்கள் ஆட்சியின்போது, இயற்கைச் சூழலைப் பயன்படுத்தி முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது.

அப்படி அந்த அணையை உருவாக்கியவர் களுக்குத் தெரிந்ததெல்லாம், மக்களுக்குப் பயன் படவேண்டும்; குறிப்பாக விவசாயம் சிறப்பாக நடை பெற அப்படி ஒரு திட்டம் தேவை, என்பது மட்டும் தான் அவர்களின் பொதுநலச் சிந்தனையாக இருந்தது!

வெள்ளைக்காரன் வெளியேறிய சுதந்திர இந்தியாவிலோ, அந்த மக்கள் நலன் தூக்கி எறியப்பட்டு, சுயநல அரசியல் நலன் என்ற புதிய சிந்தனைத் தேக்கம் உருவாக்கப்பட்டுவிட்டது.

அதன் விளைவுதான் காவிரி நீர்ப் பிரச்சினையும், முல்லைப் பெரியாறுப் பிரச்சினையும்.

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கலாம். அதற்கான உறுதியோடுதான் அது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் கீழ்மட்டம் அகலம் 200 அடி. மேல் மட்ட அகலம் 21 அடி. உலகில் இவ்வளவு உறுதி யான கீழ்மட்ட கட்டுமானம், வேறு எங்கும் கிடையாது.

அணை இடிந்துவிடும் - இடுக்கி மாவட்டம் மூழ்கிவிடும் என்று மலையாள மனோரமா என்ற ஏடு கிளப்பி விட்ட பீதி - இன்றுவரை சிக்கலுக்கான கடு முடிச்சாக மாறி விட்டது.

கேரளாவில் கட்டப்பட்ட இடுக்கி அணைக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காததால், குறுக்கு வழிச் சிந்தனையாக முல்லைப் பெரியாறு அணையின் பக்கம் அவர்களின் கண்கள் திரும்பின என்பதுதான் உண்மையின் இரகசியம்.

நிபுணர்கள் அறிக்கை கொடுத்தும், அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், 142 அடி தண்ணீரைத் தேக்கிக் கொள்ளத் தடை போட்டு வருகிறது கேரள மாநில அரசு.

1979 முதல் இந்தச் சிக்கல் தொடர்கிறது. அதன் தீய விளைவு என்ன தெரியுமா? 86 ஆயிரம் ஏக்கர் இரு போக நிலங்கள் ஒரு போகம் ஆயின. 38 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யவே முடியாத அவல நிலை.

உச்சநீதிமன்றத்தின் ஆணையை செயல்படாமல் ஆக்க குறுக்கு வழியைக் கேரள அரசு தேர்வு செய்துள்ளது. நீர்ப் பரப்புப் பகுதியில் ஆனவச்சால் என்ற இடத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப்பெரிய அளவில் வாகனங்கள் நிறுத்தத்திற்காக என்று சொல்லி, கேரள வனத்துறை அமைத்து வருகிறது.

காலங்கடந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையை மேற்பார்வையிடும் குழு அமைக்க மத்திய அமைச்சரவை முன்வந்துள்ளது, வரவேற்கத் தக்கதாகும். இதற்கும் ஏதாவது குறுக்குச்சால் ஓட்டாமல் இருக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.

அதேநேரத்தில், இன்னொன்றையும் இதில் கவனிக்கத் தவறக்கூடாது. முல்லைப் பெரியாறு அணைக்கு இப்படி ஓர் உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது போலவே, காவிரி நீர்ப் பிரச்சினையிலும் காவிரி மேலாண்மை வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை அமைத்திட இதே மத்திய அமைச்சரவை இதுவரை ஏன் அனுமதியளிக்கவில்லை?

இதற்குள்ளும் அரசியல் புகுந்திருக்கிறது என்பதில், எவ்வித அய்யமும் இல்லை.

இந்த அரசியல் நிலை குறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வெளி யிட்ட அறிக்கையில் (விடுதலை, 12.6.2014) குறிப் பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பி.ஜே.பி.,க்குச் செல்வாக்கு இல்லை; கருநாடகத்தைப் பொறுத்தவரை செல்வாக்கு உண்டு. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, கருநாடக மாநிலத்தில் தன் கட்சிக்குள்ள செல்வாக்கை ஏன் கெடுத்துக் கொள்ளவேண்டும் என்று மத்திய பி.ஜே.பி. ஆட்சி நினைக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் தெரிவித்த கருத்தினை இந்த இடத்தில் சிந்தித்துப் பார்த்தால், மத்திய பி.ஜே.பி. ஆட்சியின் இரட்டை அணுகுமுறையை, அரசியல் உள்நோக்கத்தோடு பிரச்சினையை அணுகும் போக்கை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

இது ஏதோ இரு மாநிலங்களின் பிரச்சினையாகக் கருதிடக் கூடாது - இது இன்றைய மத்திய பி.ஜே.பி. அரசின் நேர்மையையே சந்தேகிக்கும் - கேள்விக் குறியாக்கும் என்பதை மறந்துவிடவேண்டாம்!

தலைக்கொரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காயா? என்பார்கள். முல்லைப் பெரியாறுக்கு ஓர் அளவு கோல் - காவிரிக்கு வேறொரு அளவுகோலா? எதிலும் அரசியல் என்பது ஆபத்தானதே!

Read more: http://viduthalai.in/page-2/82460.html#ixzz358HCy0IB

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள் எப்படிப்பட்டவர்கள்?


விமர்சனங்கள் கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதி என்று மதுரை உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது. மதம் மனி தனை மடையர்களாக ஆக்கிவிட்டதை இன்றைய அறிவுலகம் அடையாளம் காட்டிவிட்டது. இதற்கு விலையாக தனது இன்னு யிர் நல்கியவர்கள் 18 ஆம் நூற்றாண் டின் கலிலியோ, கோபர் நிகஸ் போன் றோர் என்பதை உலகறியும். இருப் பினும் இன்றும் நீதி மன்றங்கள் மத போதனை மனிதனின் மனதை மாய்த் திடும் தண்டனைக்கு உரிய செயலைச் செய்வதாக அறிவித்திட தயங்குகின் றன. இல்லாததை இருப்பதாக நம்பிடச் செய்வதற்கு மடமும் கோயிலும் கொடி யும் கதையும் பொய்யுரையும் சம் பிராதயமும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட கொள்கையில் அகப்பட்டோர் இல்லாததை இல்லை என்று சொல்வதைக் கேட்பது பாவம் என்ற கொள்கையில் வாடுகின்றனர். மனம் புண்படுவதாக நீதி மன்றம் நாடுகின்றனர். நீதிமன்றங்களோ இல்லாததை இருப்பதாக சாதிப்போரது சொல்லும் செயலும் உண்மையின்பால் பற்று கொண்ட மனித மனங்களை புண் படுத்துவதை உணரும் உள்ளமில்லா தவர்களை நீதியாளர்களாகக் கொண் டுள்ளது. அதாவது நாத்திகர் மனது ஆத் திகம் பேசி வேள்வி காத்திடும் கயமை கண்டு கண்கலங்குகிறது. வேள்வி யாத்திடும் பார்ப்பன வித்தகர்கள் என்றும் தங்களது கைப்பணம் செல விட்டு மதத்தினை மதக்கொள்கையை அல்லது கடவுளைக் காப்பதில்லை.

அத்தகைய செயலுக்கு மண்ணின் மைந்தனது பொருளும் வரிப்பணமும் அவர்களது ஏமாற்று வேள்விக்கு அவிஸ் ஆவது கண்டிக்கத் தக்க தன்றோ? இத்தகைய இழி செயலை செய்வதற்கு இந்து மதம் என்ற போர் வையில் கடவுளின் முகத்தில் உதித்த வர்களாகிய பார்ப்பனர்கள் மட்டுமே உரிமை கொண்டவர்கள் என்ற சனா தன தர்மத்தை மண்ணின் மைந்தர்கள் மீது திணிப்பது கண்டிக்கத் தக்க தன்றோ? இதற்கு இந்து மதம் காத்திடும் சாதிக் கொள்கையை உயர்த்திப் பிடித்திட இப்படிப்பட்ட பிராமணாள் காபி கிளப் என்றும் சங்கர மடம் என்றும் ஜன் கல் யாண ஜன் ஜாக்ரத் என்றும் இந்த பார்ப்பனர் கூட்டம் கரவு மனத்தோடு திராவிட இனத்தை வேட்டையாடு வதை என்ன சொல்ல? ஆரிய கலாச் சாரத்தில் திராவிட சமுதாயம் தனது அறிவை அறிதலை இழந்துவிட்டதை யார் அறிவார்? காக்கும் கடவுள் பூணூல் அணிந்து கொண்டால் அது யாரை காப்பாற்றும்? என்ற கேள்வியை வள்ளலார் எழுப்பினார். மனிதனின் கால் மற்றவரின் காலில் தவறாகப் பட்டுவிட்டால் துடிதுடித்து போகிறான். மன்னியுங்கள் என்கிறான். காரணம் மனிதனை மனிதன் மதிப்ப தால் அவனது மனது கொண்ட அன்பு இப்படிப்பட்ட நிலையைத் தருகிறது. ஆனால் பூணூல் அணிந்த நடராசப் பெருமான் திராவிட இனத்தானை தனது காலடியில் போட்டு மிதிப்பதில் இன்பம் கண்டால் அவன் யாருக்கு அருள் தருவான் என்ற கேள்வி இன் றைய திராவிட இனத்திற்கும் இல்லா மல் போனதற்கு வழி வகுப்பது இது போன்ற சாதியப் பிரகடனங்களால் வரும் பயன்பாடன்றோ? மனிதனை காலில் போட்டு மிதித்திடும் சாமி சிலைகளை திராவிடன் கை எடுத்து கும்பிட்டு நிற்பது வேதனையன்றோ? சாதி ஒழிய வேண்டும் என்பது சட்ட மாகியுள்ள நிலையில் பிராமணாள் கிளப் என்று நிறுவனப் பெயர் நாட்டு வது சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடித்து இன்றைய மண்ணின் மைந் தர்களை அசுரர்களாக சூத்திரர்களாக சித்தரித்திட துடித்திடும் சங்கரர்களின் சதிச் செயலன்றோ? எனவே நாத்திகனின் சொல்லும் செயலும் ஆத்திகனது மனத்தைப் பண் படுத்துகிறது என்பது ஒரு மன நோயா ளியின் உணர்வு என்பதை நீதிமன் றங்கள் உணரவேண்டும். உண் மையில் பார்ப்பனர்களின் சொல்லும் செயலும் வேள்வியில் அழி பொரு ளாகும் நெய்யும் பாலும் உடையும் பொருளும் மண்ணின் மைந்தர்களின் உயிர் காத்திடும் உயர் பொருள் என் பதை நீதிமன்றங்கள் உணர வேண்டும். நீதிமன்றங்களை எதிர்த்து குரல் கொடுப்பது தண்டணைக்கு உரிய செயலன்று என்பதை நீதிமன்றங் களுக்கு உணர்த்த வேண்டும்.

காரணம் 2ஜி போன்ற கொள்கை முடிவுகளைக்கூட தண்டனை முறைச் சட்டத்திற்கு உட்படுத்தியது கண்டிக்கத் தக்கச் செயல். அதுபோன்றே இந்து சமய அறநிலையத்தின் துணையோடு ஆகமம் நியதி என்ற பெயரில் அன் றாடம் சிலைகளுக்கு பால் அபிஷே கம், நெய் அபிஷேகம் என்று மனித உயிர் காக்கும் பொருட்களை வீணடிப் பது தண்டனைக்கு உரிய செயல் என் பதை இன்றைய நீதிமன்றங்கள் உணர்ந் திட வேண்டும். வேறு எந்த மதத்திலும் இப்படிப்பட்ட அழி செயல்களை ஆக மம் நியதி என்று மதிப்பது உண்டா? திராவிட இனம் தனிப்பெரும் குணம் கொண்ட சங்கத் தமிழ் இனம். அது இன்று பார்ப்பனர்களது கைப்பாவை யாகி விட்டது. அது இலவசத்திற்கு (ஒரு சில கோடிகளுக்கு) ஏங்கும் திராவிடக் கோழைகளாகிவிட்டது. குனிந்து நின்று கும்பிடு போடும் மந்திரிகளாகிவிட்டது

- கவிஞர் சீனிபழனி, வருமானவரி அதிகாரி (ஓய்வு)
கொளத்தூர், சென்னை-99.

Read more: http://viduthalai.in/page-2/82472.html#ixzz358HcBOkO

தமிழ் ஓவியா said...

இந்திதான் தொடர்பு மொழியா? உள்துறை முடிவுக்கு கலைஞர் கண்டனம்


சென்னை, ஜூன் 19-_ தொடர்பு மொழியாக இந்தியை முதன்மைப்படுத்தும் மத்திய உள்துறையின் முடிவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:-_

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னுரி மைப்படி வெளியிடப்படும் ஆணை -_ சமூக வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது என்ற தலைப்பில் ஒரு ஆங்கில நாளேடு (தி எகானமிக் டைம்ஸ்) 17.-6.-2014 அன்று செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று கட்டளையிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முதன்முறையாக முடிவெடுத்துள்ளது. வெளிநாடுகளின் தலைவர்களுடன் உரையாடுவதற்கு இந்தி மொழியையே பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அவரது விருப்புரிமையையொட்டி, அரசு அதிகாரிகள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்வதற்கு இந்தி மொழியையே பயன்படுத்திட வேண்டும். 27-.5-.2014 அன்று மத்திய உள்துறை அமைச்சகம், அரசும் அரசு அதிகாரிகளும் சமூக வலைத் தளங்களில் இந்தியைப் பயன்படுத்துவதைக் கட்டாய மாக்கி ஆணை பிறப்பித்துள்ளது.

அனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளும், அலுவலர்களும் ட்விட்டர், பேஸ்புக் போன்ற தங்களுடைய சமூக வலைத் தளங் களில் இந்தியை அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்; ஆனால், இந்தியைப் பயன்படுத்து வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். (It is ordered that Government Employees and Officials of all Ministries, Departments, Corporations, or Banks, who have made official accounts on “Twitter”, “Face Book”, “Google”. “You Tube” or “Blogs” should use Hindi, or Both Hindi and English but give priority to Hindi) மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டு, அது நடைமுறைப் படுத்தப்படுவது உறுதி செய்யப்படுதல் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, டிவிட்டரில் இந்தி மொழியைத் தான் பயன்படுத்துகிறார் என்று ஆங்கில நாளேட்டின் செய்திக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

இந்தித் திணிப்பின் தொடக்கமே!

ஒருவரது விருப்பத்திற்கு மாறாக, அவர் மீது அரசா ணையின் மூலம் இந்தி மொழியைத் திணிப்பதற்கான செயலின் ஆரம்பம்தான் இது என்பதை யாரும் மறுத்து விட முடியாது. 1938ஆம் ஆண்டில் இந்தியைக் கட்டாய பாடமாக்கிய போதும், 1965ஆம் ஆண்டில் இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போதும் ஏற்பட்ட பேரெழுச்சியையும், கிளர்ச்சியையும் சரித்திரம் விரிவாகப்பதிவு செய்து வைத்திருக்கிறது. மொழிப் போர்க்களங்கள் இன்னும் உலர்ந்து போய் விடவில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவு - ஆட்சி மொழி பற்றிய பிரிவு - கட்டாயமாக அரபிக் கடலிலே தூக்கி எறியப்பட வேண்டுமென்றும்; நல்ல நாட்டுப்பற்றுள்ள, நுண்ணறிவுள்ள இந்தியக் குடி மக்களான தமிழ் மக்களை, கோபம் கொண்ட பிரிவினைக்காரர்களாக மாற்றும் சட்டமே இது என்றும்; மூதறிஞர் ராஜாஜி அவர்கள் எடுத்துரைத்து எச்சரித்ததை யாரும் மறந்து விடவில்லை. 4.-3.-1965 அன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நடந்த விவாதத்தின்போது, பா.ஜ.க. வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமானஅடல் பிகாரி வாஜ்பாய் முன்னிலையில், பேரறிஞர் அண்ணா அவர்கள் மொழிப் பிரச்சினையை புனராலோசனை செய்து ஒரு திருப்திகரமான முடிவு காணும் வரை, ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக நீடிக்கட்டும்; எல்லா தேசிய மொழிகளும், ஆட்சிமொழிகளாகும் வரை, ஆங்கிலம் இருக்கட்டும்; பிறகு இந்திய மொழி ஒன்று வளர்ந்து தகுதி பெற்றுத் தொடர்பு மொழியாகும் வாய்ப்பைக் காலப் போக்குக்கு விட்டு விடலாம் என்று அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் வகையில் விளக்கியதை மறந்து விடத் தான் முடியுமா?

பண்டித நேருவின் வாக்குறுதி!

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, நம் தாய்மொழியாம் தமிழ் மொழியைக் காத்திடவும், இந்தித் திணிப்பை எதிர்த்திடவும், எண்ணிலடங்கா இழப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளதோடு, தொடர்ந்து அவ்வழியில் பணியாற்றிடவும் உறுதி பூண்டுள்ளது. இந்தி பேசாத மக்கள் விரும்புகின்ற காலம் வரையில், மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்றும், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப் பட மாட்டாது என்றும், பண்டித நேரு வழங்கிய வாக்குறுதி எப்பொழுதும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் தனது உரையில், அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும், மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும் இதுவரை அதற்கான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவதற்கு உரிய வகையில் ஆட்சி மொழிச் சட்டத்தில் தேவையான திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். அதன் அடிப்படையில் திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியான, இலக்கியப் பண்பாட்டு வளம்நிறைந்த, தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்க வேண்டும் .இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட காலமாக மேற்கொண்டு வரும்நிலைப்பாடாகும்.

வேண்டாம் அவசரம்!

இந்தியத் திருநாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் பேணிக் காத்து வளர்த்திடும் நோக்கில், அரசியல் சட்டம் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாகப் பாவிக்காமல், அவற்றில் ஒன்றான இந்தி மொழிக்கு மட்டும் முன்னுரிமையும், முதல் இடமும் கொடுத்திட முற்படுவது , இந்தி பேசாத இந்தியக் குடிமக்களிடையே பேதத்தைப் புகுத்தி, அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிடும் முயற்சியின் முதற்கட்டமாகவே கருதப்பட நேரிடும். இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் ஒருமித்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திட ஆக்கப் பூர்வமான முயற்சிகள் அடுக்கடுக்காகத் தேவைப்படும் நிலையில், அவசரப்பட்டு தொடர்பு மொழிப் பிரச்சினையில் ஈடுபாடு காட்டுவது கால விரயத்தையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்தி விடும். எனவே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பொருளா தார வளர்ச்சியையும், சமூக மேம்பாட்டையும் முன்னெடுத்துச் செல்வதிலேயே கருத்தூன்றிச் செயல் படவேண்டுமென்பதே நாட்டின் நலன் நாடுவோர் அனைவரது விருப்பமும் வேண்டுகோளுமாகும்.

Read more: http://viduthalai.in/page-3/82475.html#ixzz358HqGlqU

தமிழ் ஓவியா said...


புறநகர் ரயில்களில் தனியாக செல்லும் பெண்களுக்கு தொல்லைகள் ஏற்பட்டால் 90031 61710க்கு டயல் செய்யலாம்


சென்னை, ஜூன் 19_ புறநகர் ரயில்களில் இரவில் தனியாக செல்லும் பெண் கள், ரயில்வே பாதுகாப்பு படையின் உதவி மைய எண்ணுக்கு தகவல் தெரி வித்து பாதுகாப்பு பெற லாம் என்று சென்னை கோட்ட ரயில்வே பாது காப்பு படை முதுநிலை கண்காணிப்பு ஆணையர் கே.கே.அஷ்ரப் தெரிவித் துள்ளார்.

சென்னை கோட்டத் தின் முதுநிலை கண் காணிப்பு ஆணையராக பொறுப்பேற்றுள்ள கே.கே. அஷ்ரப், அளித்த பேட்டி:

புறநகர் ரயில்களில் இரவு நேரங்களில்தான் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் நடக்கிறது. தாம்பரம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி வரை செல்லும் இரவு நேர ரயில்களில் ஆயுதம் தாங் கிய ரயில்வே பாதுகாப்பு படையினர் 2 பேர் பாது காப்புக்கு சென்று வருகின் றனர்.

சில நாட்களுக்கு முன் செங்கல்பட்டு ரயில்நிலை யம் அருகே ரயிலில் செயின் பறிப்பு சம்பவம் நடைப்பெற்றுள்ளது. எனவே இரவு நேர கண் காணிப்பு தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள் ளது. இதன்மூலம் ஏற்கென வே 98 புறநகர் ரயில்களில் இருந்த கண்காணிப்பு பணி மேலும் 12 ரயில் களுக்கு விரிவுபடுத்தப்பட் டுள்ளது.

மேலும் திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் வழியாக ஜோலார்பேட் டை, ரேணிகுண்டா வரையிலும், கும்மிடிப் பூண்டியில் இருந்து கூடூர் வரையிலும் இந்த இரவு நேர கண்காணிப்பு பணி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அதுமட்டுமின்றி செங்கல்பட்டு சம்பவம் தொடர்பாக குற்றவாளி களை கண்டுபிடிக்க 6 பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணையில் இறங்கியுள் ளனர். விரைவு ரயில்களில் உள்ள பெட்டிகளில் ரயில் வே பாதுகாப்பு படையின் உதவி மய்ய எண்கள் விளம்பரம் செய்யப் பட்டுள்ளது போன்று புறநகர் ரயில் பெட்டிகளி லும், குறிப்பாக பெண்கள் பெட்டியிலும் விளம்பரம் செய்யப்படும்.

இரவு நேரங்களில் தனியாக பயணம் செய்ய அச்சப்பட்டால், ஏதாவது தொல்லைகள் ஏற்பட்டால் பெண்கள் உடனடியாக 90031 61710 என்ற உதவி மய்ய எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்க லாம். பிரச்சினை ஏற்பட்ட பிறகு புகார் செய்வதை காட்டிலும், தாங்கள் தனியாக பயணம் செய்து கொண்டிருப்பதை உதவி மய்ய எண்ணில் பெண் பயணிகள் தெரிவித்து பாதுகாப்பு பெறலாம். இவ் வாறு அஷ்ரப் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-5/82447.html#ixzz358IqJhNs

தமிழ் ஓவியா said...


இலங்கையில் இஸ்லாமியர்கள்மீது தாக்குதல் தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம்

சென்னை, ஜூலை 19- இலங்கையில் இஸ் லாமியர்கள்மீது சிங்களவர்கள் வன்முறை வெறியாட்டம் போடுவதைக் கண்டித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை வெள்ளையரிடமிருந்து பெற்றுக் கொண்ட நாள் முதலாக, பெரும்பான்மைச் சிங்களவர், அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி சிறு பான்மையினரான தமிழர்கள், இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கு உரிய பாதுகாப் பளித்து அரவணைத்து ஆட்சி செலுத்துவ தற்குப் பதிலாக, அவர்களுக்கெதிரான மோதல் போக்கினையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள்.

இலங்கை அரசின் இத்தகைய மோதல் போக்கின் காரணமாகவே, இலங்கையில் சிறுபான்மை மக்களாக உள்ள தமிழர்களைத் தாக்கிச் சின்னாபின்னப்படுத்திய சிங்கள வெறியர் கள், கடந்த சில நாள்களாக மற்றொரு சிறுபான்மைப் பகுதியினரான முஸ்லீம்கள், அவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதால் அவர்களையும் தாக்கத் தொடங்கியுள்ளார் கள். 2012 ஆம் ஆண்டு மியான்மா நாட்டில் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 300 பேர் கொல்லப்பட் டனர்.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக வும், தொடர்ச்சியாகவும் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலும், இந்த இரு பிரிவினருக்கும் இடையே அடிக்கடி வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கொழும்பு நகருக்கருகில் அலுதமா பகுதியில் கடந்த நான்கு நாள்களுக்கு முன் திடீரென வன் முறை மூண்டு, முஸ்லீம்கள் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மோதலில் மூன்று பேர் பலியாகியிருக்கிறார்கள். நூற்றிற் கும் மேற்பட்டோர் படுகாயமுற்றிருக்கிறார் கள்.

மேலும் பள்ளிவாசல்களும், முஸ்லீம் களுக்குச் சொந்தமான வீடுகளும், கடை களும் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. இதற்கிடையே இலங்கை அரசின் அமைச்சர் பைசர் முஸ்தபா என்பவர், கல்லுரி விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது மற்றொரு பிரிவைச் சேர்ந்த வர்கள், அவரைத் தடுத்து நிறுத்தியதோடு, அவரைக் கல்லுரியிலிருந்து வெளியேற விடாமல் சிறைப்பிடித்திருக்கிறார்கள்.

பின்னர் காவலர்கள் வந்து ஒரு மணிநேரத் துக்குப் பின் அவரை மீட்டிருக்கிறார்கள். முஸ்லீம்களுக்கு எதிராக புத்தமதத்தினர் மற்றும் இலங்கை அரசின் ஆதரவு பெற்ற குழுக்கள் இந்தத் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.

சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிரான இலங்கையின் இந்தக் கடினமான போக் குக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள் ளது. வேறு பல நாடுகளும் கண்டனம் தெரி வித்துள்ளன. தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து தங்கள் கண்ட னத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.

இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத் திலே போராட்டம் நடத்திப் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இது குறித்து இங்கேயுள்ள மத்திய, மாநில அரசுகள் எதுவும் தெரிவிக்காத நிலையில் இருக்கின்றன.

இலங்கையில் இதுவரை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி இனப் படுகொலை நடத்தி முடித்ததை அடுத்து, இஸ்லாமியர்களும் கடுமையாகத் தாக்கப் படுகின்ற நிலையில், அவர்களைப் பாது காக்கும் வகையில் இங்கேயுள்ள மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/82483.html#ixzz358JEupLK

தமிழ் ஓவியா said...


மூடத்தின் முடை நாற்றம்: ஆட்சியாளர்களின் தீய நடவடிக்கைகளால் சபரிமலையில் தெய்வ அருள் குறைந்துள்ளதாம்


திருவனந்தபுரம், ஜூன் 19_ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் தீய நட வடிக்கைகளால் சபரிமலை யில் தெய்வ அருள் குறைந்து வருவதாக தேவபிரசன்னத் தில் தெரிய வந்துள்ளதாம்.

கடந்த 2006ஆம் ஆண்டு சபரிமலை அய்யப் பன் கோயிலில் பிரபல ஜோதிடர் பரப்பனங்காடி உண்ணிகிருஷ்ண பணிக் கர் தலைமையில் தேவ பிர சன்னம் நடத்தப்பட்டது. அப்போது, சபரிமலை கோயிலில் ஒரு இளம் பெண் தரிசனம் செய்ததா கவும், அவர் அய்யப்பவிக் ரகத்தை தொட்டதாகவும் உண்ணிகிருஷ்ண பணிக் கர் கூறினார்.

மறுநாளே நடிகை ஜெயமாலா, தான் சபரி மலை கோயிலுக்கு தரி சனம் செய்ய வந்ததாகவும், அப்போது நெரிசலில் தடுமாறி விழுந்தபோது அய்யப்பன் விக்ரகத்தை தொட்டதாகவும் கூறியிருந் தார். இதுகுறித்து குற்றப் பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உண்ணிகிருஷ்ண பணிக் கரும், நடிகை ஜெயமாலா வும் நாடகமாடியது தெரிய வந்தது.

இந்த சம்பவத்திற்கு பின்னர் கடந்த 8 ஆண்டு களாக சபரிமலையில் தேவ பிரசன்னம் நடத்தப்பட வில்லை. இந்நிலையில், சபரிமலையில் மாளிகை புரம் கோயில், பஸ்மக் குளம் உட்பட சில பகுதி களில் சீரமைப்பு பணிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக தேவபிரசன் னம் நடத்த முடிவு செய் யப்பட்டது. இதன்படி, கோழிக்கோடு செறுவள் ளியை சேர்ந்த ஜோதிடர் நாராயணன் நம்பூதிரி தலைமையில் நேற்று தேவ பிரசன்னம் தொடங்கியது. இதில் 3 முக்கிய ஜோதிடர் கள் உட்பட 15 பேர் கலந்து கொண்டனர். மாலை 5 மணியளவில் தேவபிர சன் னம் நிறைவடைந்தது.

பின்னர் ஜோதிடர் நாராயணன் நம்பூதிரி கூறியதாவது:

சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் ஆட்சியாளர் கள் மற்றும் சில அதிகா ரிகள் கடந்த பல ஆண்டு களாக சில தீய நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்கள் மீது தெய்வ கோபம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக சபரிமலையில் தெய்வ அருள் குறைந்து வருகிறது. எனவே தெய்வ அருளை அதிகரிக்கும் வகையில் உட னடியாக பரிகார பூஜை களை தொடங்க வேண்டு மாம். பரிகார பூஜைகள் நடத்தினால் மட்டுமே பழைய தெய்வ அருளை திரும்ப கொண்டுவர முடி யுமாம்.

அய்யப்பனுக்கும் மாளி கைபுரத்து அம்மனுக்கும் சபரிமலையில் நடத்தப் பட்டு வரும் பல செயல் களில் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. இதற்கு பரிகார மாக சபரிமலையில் உள்ள அதிகாரிகளும் ஊழியர் களும், விளிச்சுசொல்லி (கடவுளிடம் மன்றாடுதல்) பிராயசித்த சடங்குகளை நடத்த வேண்டுமாம்.

(அதிலும் பார்ப்பனச் சுரண்டல் தானோ!)
_ இவ்வாறு நாராயணன் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/82482.html#ixzz358JMYNCg