Search This Blog

16.6.14

திராவிடர் கழகத்தைத் தடை செய்யக்கோரி பார்ப்பனர் தொடுத்த அழி வழக்கு

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு தள்ளுபடி செய்தது

மதுரை, ஜூன் 16-_ சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் சிவகாசியை சேர்ந்த வி. கார்த்திகேயன் என்ற பார்ப்பனர் திராவிடர் கழகத்தை தீவிரவாத இயக்கம் என்று அறி வித்து அதை தடை செய்ய வேண்டும் என்றும், பார்ப் பனர்களுக்கு எதிராக அவர்கள் இனி பிரச்சா ரமோ, கூட்டமோ ஆர்ப் பாட்டமோ செய்யக் கூடாது என்று தடை விதிக்கக் கோரி ஒரு ரிட் மனுவை தாக்கல் செய் திருந்தார். அந்த மனுவில் நவம்பர் 2012இல் சிறீ ரங்கத்தில் ''பிராமணாள் கபே'' என்று இருந்ததை ஆட்சேபித்து திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியதையும், திருவா னைக்காவலில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பார்ப் பனர்களுக்கு எதிராக அவதூறாகவும், வன் முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதாகவும் கூறியுள்ளார். 

மேலும் நாடார் ஸ்டோர், செட்டி யார் பள்ளி என்றிருப்பதை இவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். அந்த மனுவில் தாக்கல் செய்யப்பட்ட பத்தி 5இல் பார்ப்பனர் அல்லாத தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனமக்களும் பிற்படுத் தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இன மக்களும் அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையால் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னேறி சமூக பொருளாதார முன்னேற்றத்தை அடைந் ததோடு அவர்களுக் குள்ளாகவே சண்டை யிட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் அதுபோன்ற மனித உரிமை மீறல்கள், கொடு மைகள் மற்றும் கட்டுக் கடங்காத நடவடிக்கை களில் பார்ப்பனர்கள் ஈடுபடுவது இல்லை என்றும் கூறியுள்ளார். 

மேலும், திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார். ''பாம்பையும் பார்ப்பானையும் பார்த் தால் முதலில் பார்ப்பானைத் தாக்கு'' என்று கூறியிருந்தார். பெரியாருடைய தொண்டர்களும் பார்ப்பனர்களுக்கு எதி ராக வன்முறையை, தூண் டும் வகையிலும், ஆத்திரம் மூட்டும் வகையிலும் பிரச்சாரம் செய்து வரு கிறார்கள். எனவே திரா விடர் கழகத்தை தீவிர வாத இயக்கம் என்று அறிவித்து அரசு தடை செய்ய வேண்டும் என்றும், பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனீயத்திற்கும் எதிராக அவர்கள் ஆத் திரம் ஊட்டும் வகையில் பேசுவதையோ பொதுக் கூட்டம் நடத்துவ தையோ, ஆர்ப்பாட்டம் நடத்துவதையோ தடை செய்ய வேண்டும் என  உத்தரவிடக்கோரி அந்த மனு தாக்கல் செய்யப் பட்டது.


மனுதாரர் தரப்பில் ஜி. தாழைமுத்தரசு (தாழ்த்தப்பட்ட இனத் தவர்) வாதாடினார். இந்த மனு நீதியரசர்கள் ராமசுப்ரமணியம் மற்றும் வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீண்ட வாதுரையைக் கேட்ட நீதிபதி ராம சுப்பிரமணியம் அவர்கள் இந்த வழக்கு நிலை நிறுத்தத்தக்கதல்ல என்று கூறி, தள்ளுபடி செய்தார். நீதிமன்ற புறக்கணிப்பு   (13.6.2014) நடைபெற்றாலும் கூட மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் நீதி மன்றத்தில் முன்னிலையாக வாதாடியதும் நீதி யரசர் ராமசுப்பிரமணியம் மனுதாரருக்கு சமாதானமாக பேசிய கருத்துக்களும் பார்வையாளர் களை முகம் சுளிக்க வைத்தது. 

நீதிமன்ற வராண்டாவில் திராவிடர் கழக வழக்குரைஞர்கள் ந.இளங்கோ, மு.சித்தார்த்தன், எழில்  மற்றும் இனவுணர்வுள்ள வழக்குரைஞர்கள் ஆகியோர் பெரியார் வாழ்க! பெரியாரின் கொள்கை வெல்க! அகலட்டும் ஆரிய மாயை என்று ஒலி முழக்கமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனுதாரர் பாரா 5 இல் கூறிய கருத்துக்கு எதிராக பார்ப்பனர்கள் எவ்வா றெல்லாம் கொலை, கொள்ளை ஊழல்களில் ஈடுபட்டார்கள் என்பதை பட்டியலிட்டு துண்டு வெளியீடு அனைத்து வழக்குரைஞர்களுக்கும் வழங்கினர். அந்த துண்டு வெளியீடு பார்ப்பன வழக்குரைஞர்களுக்கும் பார்ப்பனர் அல்லாத வழக்குரைஞர்களுக்கும் புதிய சிந்தனையை ஏற் படுத்துவதாக அமைந்தது.
        
                            --------------------------"விடுதலை” 16-6-2014

22 comments:

தமிழ் ஓவியா said...


பூரணலிங்கனார்


மு. சி. பூரணலிங்கம் பிள்ளை (மே 25, 1866 - சூன் - 6, 1947) தமிழறிஞர். தமிழ் மொழியின் தொன் மையையும், உயர்வை யும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள "முந் நீர்ப்பள்ளம்" என்னும் ஊரில் 1866 இல் பிறந்தார். இவருடைய பாட்டனார் பெயரும் பூரணலிங்கம் தான். முந்நீர்ப்பள்ளத் தைச் சேர்ந்த சைவர்கள் "பூரணம்" என்று பெயர் வைத்துக் கொள்வது இயல்பு.

கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், பாளையங் கோட்டை இந்துக் கல் லூரி, சென்னை கிறிஸ் தவக் கல்லூரி, கோயம் புத்தூர் புனித மைக்கேல் கல்லூரி, மதுரை அமெ ரிக்கன் கல்லூரி, திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங் களில் ஆங்கிலப் பேரா சிரியராகப் பணியாற் றினார். ஆங்கிலப் பேரா சிரியராக இருந்த பூரண லிங்கம் பிள்ளை, தமிழ்ப் பற்றும், தமிழ் இன உணர் வும் கொண்டு வாழ்ந்த துடன் தமிழுக்குப் பெரும் பணியும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

நூல்கள் இயற்றல்: பூரணலிங்கம் பிள்ளை, தமிழில் 18 நூல்களையும், ஆங்கிலத்தில் 32 நூல் களையும் மற்றும், சட்ட நூல்களையும் எழுதியுள் ளார். திருக்குறள் முழு வதையும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பன்னிரண்டு பக்கங்களில் ஆராய்ச்சி முன்னுரை யும் எழுதினார். நீதிக்கட்சி நடத்திய ஜஸ்டிஸ் ஏட்டின் துணை ஆசிரியராகவும் இருந் துள்ளார். இவரால் எழுதப் பட்ட இராவணப் பெரியார் என்னும் ஆய்வு நூலை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் 1936ஆம் ஆண்டிலேயே முதல் பதிப்பாக வெளியிட்டது. அதற்குப் பின் பல பதிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன.

அந்நூலில் அவர் கூறுகிறார்: இராமா யணம் கட்டுக் கதையாக இருந்தாலும், இராவணன் ஒரு வீரன் என்பதில் சந்தேகமே இல்லை. திரா விடர்கள் இராவணனை ஒரு வீரப் புருஷனாகவே மதித்து வந்தார்கள். அவன் அனேக தேசங் களை வென்றதாகவும், ஆரியரை எதிர்த்துப் போராடியதாகவும் மதித் தார்கள். திராவிட சிசு வான சம்பந்தரும்கூட இராவணனைப் பாராட் டிப் பாடியிருக்கிறார். அவனது காலத்தில் அவன் பெரிய வீரனா கவே விளங்கினான் என்று ஆய்வு செய்து கூறியுள்ளார் பூரண லிங் கனார்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/82255.html#ixzz34oBuVxzc

தமிழ் ஓவியா said...

அர்ச்சகர்கள் பட்டினி!

ஆந்திர மாநிலம் தெலங்கானா மாநிலம் பத்ராச்சலத்தில் உள்ள கோயில் - ராமன் கடவுளுக்குப் பூஜைகள் செய்யும் போது ஸ்ரீ ராமச்சந்திர நமஹ என்று பாராயணம் செய்யாமல் ஸ்ரீராம நாராயண நமஹ என்று அர்ச்சகர்கள் மந்திரம் சொல்லி வருகிறார்கள். இதனைச் செவியுற்ற பக்தர்கள் இதுபோல் சொல்லக் கூடாது என்றார்கள் அர்ச்சகர்கள் இதனை ஏற்கவில்லை. கோயில் அதிகாரிகளிடம் பிரச்சினை சென்றது.

இனிமேல் ஸ்ரீ நாராயண நமஹ என்ற மந்திரத்தைச் சொல்லக் கூடாது; ஸ்ரீராமச்சந்திர நமஹ என்று தான் கூற வேண்டும் என்று அர்ச்ச கர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.

இதனை அர்ச்சகப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காலம் காலமாக நாங்கள் சொல்லிக் கொண்டு வரும் மந்திர வாசகத்தை மாற்ற முடியாது என்று கூறி பட்டினி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் தலை விரித்தாடுகின்றன. ஆனால் கடவுளை எப்படித் துதிப்பது என்பதில் குஸ்தி நடந்து கொண்டு இருக்கிறது.

இவ்வளவுக்கும் ராமன் யார் என்றால் நாராயணனின் (விஷ்ணுவின்) அவதாரம் தானாம் - இதில் நாராயணப் பெயரைச் சொன்னால் குடியா மூழ்கிப் போகும். வைணவர்களுக்குள் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென் கலை நாமம் போடுவதா என்று நீதிமன்றம் செல்லவில்லையா? சரி... அந்த இராமச்சந்திரமூர்த்தியாவது இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று பக்தர்கள் கனவிலும், அர்ச்சகர் கனவிலும், அதிகாரிகளின் கனவிலும்தான் சொல்லித் தொலைக்கக் கூடாதா? அது என்ன செய்யும்? அதுதான் குத்துக் கல்லாயிற்றே! அதனால் என்ன செய்ய முடியும்? மறைந்த கணபதி ஸ்தபதி சொன்னாரே - கடவுளை யார் கண்டது? நாங்கள் வடித்து வைத்தது தானே என்று சொல்லவில்லையா!

Read more: http://viduthalai.in/e-paper/82262.html#ixzz34oC7gzmd

தமிழ் ஓவியா said...

ஆட்சித் தலைவர் ஆகும் பார்வையற்ற பெண்

சென்னை அண்ணா சாலை சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் படித்த பெனோ ஷெபைன் என்ற பெண் அய்.ஏ.எஸ். தேர்வில் முதல் முயற்சிலேயே வெற்றி பெற்று மாவட்ட ஆட்சித் தலைவர் என்னும் நிலைக்கு உயர்கிறார்! பாராட்டுகள் - வாழ்த்துக்கள். தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை என்றாரே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - அது எவ்வளவுத் துல்லியமானது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

கண் பார்வையற்றவர் இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். பிறவி ஊனத்தைக் கர்மப் பலன் என்று நெஞ்சில் இரக்கமின்றிக் கூறி வரும் கருத்துக் குருடர்களுக்கும் இது ஓர் மரண அடியே!

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் நெல்சன் பிரியதர்சினி வெற்றிக்கும் நமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

Read more: http://viduthalai.in/e-paper/82262.html#ixzz34oCKEvct

தமிழ் ஓவியா said...

ஆட்சித் தலைவர் ஆகும் பார்வையற்ற பெண்

சென்னை அண்ணா சாலை சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் படித்த பெனோ ஷெபைன் என்ற பெண் அய்.ஏ.எஸ். தேர்வில் முதல் முயற்சிலேயே வெற்றி பெற்று மாவட்ட ஆட்சித் தலைவர் என்னும் நிலைக்கு உயர்கிறார்! பாராட்டுகள் - வாழ்த்துக்கள். தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை என்றாரே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - அது எவ்வளவுத் துல்லியமானது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

கண் பார்வையற்றவர் இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். பிறவி ஊனத்தைக் கர்மப் பலன் என்று நெஞ்சில் இரக்கமின்றிக் கூறி வரும் கருத்துக் குருடர்களுக்கும் இது ஓர் மரண அடியே!

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் நெல்சன் பிரியதர்சினி வெற்றிக்கும் நமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

Read more: http://viduthalai.in/e-paper/82262.html#ixzz34oCKEvct

தமிழ் ஓவியா said...


கழகத் தோழர்களே கவனியுங்கள்!



கட்சி ஜெயிக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள்! தோல்வியை நன்மையாக்கிக் கொண்டு இரட்டை வெற்றி அடையப் போகிறோம்.

ஆனால், நீங்கள் (தமிழ் மக்கள்) ஒவ்வொரு வரும் ஒரு குடிஅரசு விடுதலை வாங்கிப் படியுங்கள்!

குடிஅரசு வருட சந்தா 3-0-0
பகுத்தறிவு வருட சந்தா 1-0-0
மேற்படி இரண்டும் சேர்த்து
வரவழைப்பவர்க்கு 3-8-0
விடுதலை வாரம் இருமுறைக்கு வருடம் 1-க்கு 3-10-0

இப்பத்திரிகைகளைப் படித்தால்தான் அரசியல் உலகிலும், சமுதாய உலகிலும் என்ன நடக்கிறது என்கின்ற உண்மையை உணர முடியும். பார்ப்பனப் பத்திரிகைகள் வேண்டுமென்றே செய்யும் பொய்யான விஷமப் பிரச்சாரத்தின் யோக்கியதையை அறியக்கூடும். - (விடுதலை 18.4.1937 பக்.22)

இதனைப் படிக்கும் பொழுதே - பலருக்கும் ஆச்சரியமாக இருக்கக்கூடும். இப்பொழுது நடந்து முடிந்த தேர்தலை மனதிற் கொண்டு சொல்லப்பட்டதாகக் கூடத் தோன்றக் கூடும்.

1937 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றபோது தந்தை பெரியார் சொன்னவை -16ஆவது மக்களவைத் தேர்தலில் நீதிக்கட்சியின் வழி வந்த திமுக தோல்வியடைந்துள்ள இந்த நிலையில் மிகச் சரியாகவே பொருந்துவதைக் கவனிக்கத் தவறாதீர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பார்ப்பன ஊடகங்கள் எப்படி நடந்தனவோ, அதுபோலவே 1937ஆம் ஆண்டிலேயே இந்தப் பார்ப்பன ஊடகங்கள் ஒரு சார்பாக நடந்து கொண்டுள்ளன என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

அவர்கள் எப்பொழுதுமே நமக்கு எதிர்ப் பக்கம்தான்!

அரசியல் உலகிலும், சமுதாய உலகிலும் என்ன நடக்கிறது என்கின்ற உண்மையை உணர குடிஅரசு விடுதலை வாங்கிப் படியுங்கள் என்று 77 ஆண்டு களுக்குமுன் தந்தை பெரியார் கூறினார்.

இன்று அதே நோக்குக்காக விடுதலைக்குச் சந்தா சேர்ப்பீர் என்ற வேண்டுகோளைத் தமிழர் தலைவர் விடுதலை ஆசிரியர் அவர்கள் விடுத்துள்ளார்.

தோழர்களே! விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் இறங்கி விட்டீர்களா? உங்கள் மாவட்டத்துக்குள்ள இலக்குகளை நிறைவேற்றுவதில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?

இம்மாத இறுதிக்குள் இலக்குகளை வெற்றிகரமாக முடிப்பீர்! முடிப்பீர்! உதவாதினி ஒரு தாமதம் - உடனே புறப்படுவீர் மானமிகு தோழர்களே!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/82337.html#ixzz34wXbCaR8

தமிழ் ஓவியா said...

இந்தியா முழுவதும் மது விலக்காம்

இந்தியா முழுவதும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் திருவாளர் இராம. கோபாலன் வேண்டுகோள் விடுத் துள்ளார். நல்லது; மத்திய அரசு பிஜேபி கையில் தானே இருக்கிறது - இந்தியா முழுவதும் மது விலக்கைச் செயல்படுத்தும் வகையில் பொது சட்டம் ஒன்றைக் கொண்டு வரலாமே - யார் தடுத்தது? முதற்கட்டமாக பிஜேபி ஆளும் மாநிலங் களில் கொண்டு வந்து காட்டி, முன் மாதிரி நாங்கள் ஆட்சி நடத்தும் மாநிலங்கள்தான் என்று மார் தட்டலாமே!

ஒரு சேதி தெரியுமா? 2014 ஏப்ரல் 30ஆம் தேதி ஏடுகளில் வெளி வந்ததுதான்.

மோடி முதல் அமைச்சராக இருந்த போது குஜராத்தில் 23 லட்சம் மதுப் பாட்டில்கள் பறி முதல் என்பது தான் அந்தச் செய்தி. இதன் பொருள் என்ன? காந்தி பிறந்த மாநிலத்தில், மோடி ஆண்ட மாநிலத்தில்தான் இந்த லட் சணம்! இந்த நிலையில் இராம.கோபாலன்வாள் இப்படி யெல்லாம் பேட்டி கொடுக்கிறார். அவாள் பேட்டி கொடுத்தால் அப்படியே வெளியிடக் கூடிய அவாள் ஊடகங்களும், தொங்கு சதைகளான நம்மவாள் ஊடகங் களும்தான் இருக்கின்றனவே. இந்த நிலையில் அவாள் கொட்டாவி விட்டாலும் சேதியாக நான்கு பத்தி செய்தியாக வெளிவரும்தான்.



Read more: http://viduthalai.in/e-paper/82329.html#ixzz34wYLaCmb

தமிழ் ஓவியா said...

டாஸ்மாக் பிரச்சனை

இன்னொரு முக்கிய தகவல் நாள்தோறும் ஏடுகளில்; டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பெண்கள் நடத்தும் போராட்டம்தான் அது. பள்ளிகள் அருகிலும், மக்கள் நடமாடும் முக்கிய கடை வீதிப்பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் இருப்பது பெரும் தொல்லையாக இருக்கின்றன. பெண்கள் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கி வர முடிய வில்லை. ஆங்காங்கே குடித்து விட்டுக் கலாட்டா செய்கின்றனர். எனவே கடைகளை ஊருக்கு வெளியே வைக்க வேண்டும் என்பது தான் பெண்களின் கோரிக்கை, பெண்கள் மத் தியில் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது.

டாஸ்மாக் கடையை எங்கே வைப்பது என்பது குறித்து தெளிவான வழிமுறைகள் கூறப்பட்டு இருந்தும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி அனுமதி வழங்குவது யார்?
நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதி கரிப்பதற்குக் காரணம் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருப்பதுதான், எனவே நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை வைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

விதிகளும், ஆணைகளும் வெறும் காகிதக் குப்பைகள்தானா?

Read more: http://viduthalai.in/e-paper/82329.html#ixzz34wYYAxm8

தமிழ் ஓவியா said...

பொது இடத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி

இராமநாதபுரம் மாவட்டம் தேவிப் பட்டினத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கடற் கரையில் அவர்களுக்கே உரிய பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான காவல்துறை அனுமதியைப் பெறவில்லை. இந்த நிலையில் காவல் துறையினர் அவர்களைக் கைது செய்துள்ளனர். இதனை எதிர்த்து சென் னையைச் சேர்ந்த சங்பரிவார்க் கூட்டமும், பிஜேபியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள் ளனர். பழனி உள்ளிட்ட வேறு சில இடங்களி லும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

பொது இடத்தில் இது போன்ற பயிற்சி களைச் செய்யக் கூடாது என்று ஏற்கெனவே சுற்றறிக்கைகள் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். பயிற்சி என்றாலே அது வன்முறைக்கான பயிற்சி தான். மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பும் கூட! இந்த நிலையில் காவல்துறை தன் கட மையைச் செய்துள்ளது. இதனைப் பாராட்ட வேண்டுமே தவிர, எதிர்த்துப் போராடுவது எப்படி சரி? மத்தியில் ஆட்சிக்கு வந்து விட் டார்கள் அல்லவா? அந்தத் தைரியம் தான்!

Read more: http://viduthalai.in/e-paper/82329.html#ixzz34wYiDLfJ

தமிழ் ஓவியா said...


இறந்த பின்...


ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

Read more: http://www.viduthalai.in/page-2/82341.html#ixzz34wYwEsnE

தமிழ் ஓவியா said...


தமிழைப் புறக்கணித்த மெட்ரிக் பள்ளிகள்


தமிழைக் கட்டாயமாக்கும் கல்வித் திட்டத்தை தி.மு.க. ஆட்சியில் கலைஞர் அவர்கள் கொண்டு வந்தார். 2006 ஆம் ஆண்டில் அதற்கான சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி 2006-2007ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் பகுதி ஒன்று மொழிப் பிரிவில் தமிழ்க்கட்டாயம் என்பது சட்டத்தின் நிலை.

அதற்கடுத்து முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பில் தமிழ்க் கட்டாயம். இவ்வாறு படிப்படியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த வகுப்புகளில் தமிழ்க் கட்டாயமாக்கப்படும். அதன் மூலம் 2015-2016ஆம் கல்வியாண்டின் போது பத்தாம் வகுப்பில் (எஸ்.எஸ்.எல்.சி.) மொழித் தேர்வில் பகுதி ஒன்றில் தமிழ்க் கட்டாயமாக்கப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.

இந்த சட்டத்தில் எந்தவித குழப்பத்திற்கும் இடம் இல்லை. மெட்ரிக் பள்ளியாக இருந்தாலும் இதுதான் நடைமுறை.

அரசின் இந்தச் சட்டத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வராத சில தனியார்ப் பள்ளிகள் சிக்கலுக்குள் விழி பிதுங்கி நிற்கின்றன.

அரசின் சட்டப்படி தமிழை மொழிப் பிரிவில் கற்பிக்காத பள்ளிகளின் மாணவர்கள் 2015-2016 கல்வியாண்டின்போது தமிழ்க் கட்டாயத் தேர்வு என்று வரும் பொழுது திண்டாட வேண்டிய நிலையாகும்.

இந்த நிலைக்குக் காரணம் மாணவர்கள் அல்லர் - பள்ளி நிருவாகிகள்தான்; அரசின் சட்டத்தை அலட்சியமாகக் கருதி தமிழைப் போதிக்காதவர்கள் இப்பொழுது பெரும் அச்சத்துக்கு ஆளாகி விட்டனர். 2015-2016 ஆம் ஆண்டில் தமிழ்த் தேர்வை மாணவர்கள் எழுதியாக வேண்டுமே. இவ்வளவுக்கும் அரசின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு தமிழ்க் கற்றுத் தரப்படும் என்று உறுதியளித்தவர்கள்தான் இவர்கள்; சொன்னபடி நடந்து கொள்ளாமல் வேறு மொழிகளைக் கற்பித்து வந்தனர்.

இதிலிருந்து தப்பிக்க நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் சென்றுள்ளனர்.

மாணவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்; பெற்றோர்கள் சும்மா விடுவார்களா? அதற்காகத்தான் இந்த நீதிமன்றப் பிரவேசம். 2006ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தை அறிமுகப் படுத்தியபோதே - இந்தத் தனியார் கல்வி நிறுவ னத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திற்குச் சென்று முட்டி மோதிப் பார்த்தவர்கள்தான்.

அவ்விரு நீதிமன்றங்களும் தமிழ்நாடு அரசின் சட்டம் சரியானதே என்று ஆணி அடித்ததுபோல் தீர்ப்பு வழங்கிய பிறகும், இவர்கள் அவற்றையெல்லாம் உதாசீனப்படுத்தி விட்டு, தமிழுக்குப் பதிலாக வேற்று மொழிகளைப் பயிற்றுவித்தனர் இது. நீதிமன்ற அவ மதிப்பு மட்டுமல்ல; மாணவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கச் செய்யக் கூடிய அபாயகரமான செயலாகும்.

2015 - 2016 பத்தாம் வகுப்புத் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வைக் கட்டாயமாக்கக் கூடாது என்று கோரி தனியார் பள்ளி நிருவாகிகள் சார்பில் இப்பொழுது நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இதில் நீதிமன்றம் தெளிவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் 2006ஆம் ஆண்டிலேயே இதுகுறித்து நீதிமன்றம் தெளிவான தீர்ப்பைக் கூறிய பிறகு - அதற்கு மாறாக நீதிமன்றம் நடந்து கொள்ள முடியாதல்லவா?

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சரியாக நடந்து கொள்ள வேண்டும். கலைஞர் ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது என்பதற்காக வழக்கினை ஏனோதானோ என்று நடத்திடக் கூடாது.

அதே நேரத்தில் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? பள்ளி நிருவாகம் செய்த தவறுக்கு மாணவர்கள் எப்படிப் பொறுப்பாவார்கள்?

இரு தலைக்கொள்ளி எறும்பு என்பார்களே - அந்த நிலைதான் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

கல்வியாளர்கள் இதற்கொரு தீர்வு காண வேண்டும். வேறு பிரச்சினையாக இருந்தால்கூட கொஞ்சம் அலட்சியமாக இருந்து விடலாம்; இது மாணவர்களின் கல்விப் பிரச்சினையாயிற்றே!

ஒன்று மட்டும் உண்மை. அரசின் சட்டத்தையும் நீதிமன்றங்களின் தீர்ப்பையும் தூக்கி எறிந்து விட்டு, இப்படி நடந்து கொண்டிருக்கிறார்களே, மாணவர் களின் கல்வியிலும் விளையாடி இருக்கிறார்களே - இது மன்னிக்கப்படவே முடியாத ஒன்றாகும்.

Read more: http://www.viduthalai.in/page-2/82346.html#ixzz34wZ5sCST

தமிழ் ஓவியா said...


குற்றால அருவியிலே குளிப்பதுபோல் இருக்குது!



முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பதின்வயதில் பங்கேற்ற நினைவு! ஒருநாள் இருநாள் அல்ல. ஒரு வாரகால பெரியாரியல் பயிற்சிப்பட்டறை!.

கழகத்தலைவர் தமிழர்தலைவர், துணைத்தலைவர் கவிஞர், பெரியார் பேருரையாளர்கள் இராமநாதன், இறை யனார், ஆசான், துரைச்சக்கரவர்த்தி, மற் றும் துரைசந்திரசேகரன் என நீண்ட பயிற் சியாளர்களைக் கொண்ட களம் அது.
முப்பத்தேழு ஆண்டுகளைக்கடந்து பொன்விழாவை நோக்கி இதோ முப்பத்தி எட்டாவது ஆண்டில். திராவிடர் கழகத் தின் சார்பில் அதே குற்றாலத்தில் வருகிற 26.6.2014ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நான்கு நாட்கள் என விடுதலை செய்தி வெளியிட்டிருக்கிறது.

கேரள அரசுக்குச்சொந்தமான பயணி யர் மாளிகையில் தான் பெரும்பாலும் அப்போது பயிற்சிவகுப்புகள் நடக்கும். பயிற்சி முடிந்த அன்றே அடுத்த ஆண்டுக்கான தேதியை கழகப் பொறுப் பாளர்கள் முன்பதிவு செய்து விடுவார்கள் வெப்பந்தணிக்கும் உயர்ந்த கட்ட டம்.அதையும் தாண்டி நம்மை சூடேற்றும் வரலாற்று வகுப்புகள். பாடங்கள் அனைத்தும் இன்றும் பசுமையாய் .உங் களில் எத்தனை பேர் அனுபவித்திருக் கிறீர்கள்? எவ்வளவு பெற்றோர் உங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்திருக் கிறீர்கள்?

மானமும் அறிவும் ஊட்டி நம்மை தலைநிமிரச்செய்த தத்துவத்தலைவர் பெரியாரை, ஆண்டாண்டுகாலமாய் அடிமைப்பட்டுக்கிடந்த தமிழ்ச்சமூகத்தின் அடிமை விலங்கொடித்த அற்புத இயக் கத்தின் ஆற்றல் மிகு செயல்பாட்டை, நம்மை சூழ்ந்து கிடக்கும் காவிஇருள் சூழலை நம் பிள்ளைகள், இளைய தலைமுறையினர் அறிந்திருக்க வேண் டாமா? இது ஒரு கிடைத்தற்கரிய வாய்ப் பல்லவா?

குற்றாலக் குளியலோடு கலந்த கொள்கைப் பாடக் குவியல்! பாட்டி வடை சுட்ட கதைகள் பரிணாமவளர்ச்சி அடை யலாம். பரங்கிக்காரனை வாஞ்சிப் பார்ப்பான் சுட்ட கதையை திரிக்க விடலாமா? ஆஷ்துரையை வாஞ்சி அய்யர் சுட்டதன் நோக்கம் என்ன? நாடார் இனப்பெண்கள் தோள்சீலை அணியவே தடை! நாடகக் கொட்டகை யிலும், பேருந்திலும் தாழ்த்தப்பட்டவர் கள் அனுமதி மறுப்பு! இப்படி எத்தனை எத்தனை வரலாற்று நிகழ்வுகள். அன்றைக்கு இவற்றை எந்தப் புத்தகத்தில் படித்தோம்? நம் பகுத்தறிவுப் பேராசிரி யர்கள் பயிற்றுவித்தப் பாடங்கள் தான் இன்றும் பசுமரத்தாணிபோல் மனதில் பொதிந்து கிடக்கின்றன.

அடடா அரிய வாய்ப்பு! கறுப்புடை தரித்து பயிற்சிக்களம் காண புறப்படுங்கள்! குற்றாலத்தில் சந்திப்போம்!.

இடம்: வீ.கே.என் மாளிகை, குற்றாலம்.

- கி.தளபதிராஜ்

Read more: http://www.viduthalai.in/page-2/82359.html#ixzz34wZJWvMY

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் >>>


மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி!

மதிப்பிற்குரிய வீரமணி அய்யா அவர்களுக்கு,

நினைவில் வாழும் திருவனந்தபுரம் என். நயினார் அவர்களின் மூத்த புதல்வன் என். சுந்தரம் எழுதிக் கொண்டது.

எனது தகப்பனாரின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (14.6.2014) விடுதலை வளர்ச்சி நிதிக்காகவும், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்குமாக சேர்ந்து ரூபாய் 300/அய் இந்தியன் வங்கி சென்னையில் மாற்ற தகுந்த (ரூபாய் 300/-) காசோலையை இத்துடன் அனுப்பியுள்ளேன் (No.619290 Date: 10.6.2014)

இதை எனது தகப்பனாரின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் நன்கொடையாக ஏற்றுக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

- என்.சுந்தரம், திருவனந்தபுரம்
தங்களின் உணர்வுக்கு மிக்க நன்றி.

- ஆசிரியர்

Read more: http://www.viduthalai.in/page-2/82358.html#ixzz34wZXPKZO

தமிழ் ஓவியா said...

முக நூல் ஜோக்!

தேர்தல் முடிந்தும் கூட, மோடி குறித்த தேர்தல் பிரச்சாரத் தகவல்கள் பறிமாறப்பட்டு வருகின்றன. கடந்த ஒன்பது மாத தேர்தல் புனித யாத்திரையில், அவர் மூன்று லட்சம் கிலோ மீட்டர் தொலைவு அயராது பயணம் செய்திருக்கிறார்; 440 கூட்டங்கள் உட்பட 5187 நிகழ்ச்சி களில் பங்கேற்றிருக்கிறார். இவையெல்லாம் இன்றும் ஊடகங்களில் தொடரும் அம்சங்கள். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, முகநூலில் அண்மையில் வெளி வந்திருக்கும் ஜோக்: மோடி பதவி ஏற்றார். முதல் நாளிலேயே அவர் ரஷ்யாவை விலைக்கு வாங்கி விட்டார். உக்ரேன் நெருக்கடி தீர்ந்தது. சிறுமிகளைப் பிடித்துச் சென்ற போக்கோ பயங்கரவாதிகள் சிறுமிகளைத் திருப்பித் தந்து விட்டு, அனைவரும் ஆர்.எஸ்.எஸ்சில் சேர்ந்து விட்டனர். கதைகளில் வரும் கதாநாயகர்கள் போன்று மோடியின் தோற்றமும் மாறி வருகிறது. ரஜனிகாந்த் போன்று மோடியும் ஒரு கதாநாயகனாக மாறி வருகிறாரோ என்னவோ?

தமிழ் ஓவியா said...


பெண் விடுதலைக்கு போராடிய ரோசா லக்சம்பர்க்


19ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான ஆளுமை களில் ஒருவர் ரோசா லக்சம்பர்க். அவர் வாழ்ந்த குறுகிய காலத்துக்குள் மூன்று புரட்சிகளில் பங்கேற்றவர். சிந்தனையாளர். புரட்சியாளர். எழுத்தாளர்!

1871இல், ரஷ்ய மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த போலந்தில் பிறந்தார் ரோசா. 5 வயதில் இடுப்பு நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட போது, அவருடைய காலில் ஊனம் நிரந்தரமானது. பள்ளியில் படிக்கும்போதே நிறைய விஷயங்களை ஆர்வத்தோடு அறிந்துகொண்டார். நிறைய சிந்தித்தார். எதையும் தைரியமாக எதிர்கொள்ளக்கூடிய மனநிலையைப் பெற்றிருந்தார்.

1889இல், லியோ ஜோகித்சே நட்பு கிடைத்தது. இருவரும் நிறையப் பேசினார்கள். விவாதித்தார்கள். 1893இல், ரோசாவும் ஜோகித்சேவும் சேர்ந்து தொழிலாளர் குரல் பத்திரிகையை ஆரம்பித்தனர். போலந்தில் இருந்த சோசலிசக் கட்சியின் தேசியவாதக் கொள்கையை எதிர்த்து எழுதினார் ரோசா.

1898இல், ஜெர்மனைச் சேர்ந்த குஸ்தாவ் லூபெக்கைத் திருமணம் செய்துகொண்டு, ஜெர்மனியில் குடியுரிமை பெற்றார் ரோசா. அங்கு, சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்து வேலை செய்தார். இந்தக் காலகட்டத்தில் ரோசா உலக அளவில் மார்க்சிஸ்ட் சிந்தனையாளராகவும் பேச்சாளராகவும் அறியப்பட்டார்.

1905இல், ரஷ்யா சென்ற ரோசா, அங்கு நடைபெற்று வரும் புரட்சியை நேரில் கண்டார். லெனினைச் சந்தித்தார். போலந்திலும் புரட்சி மூலம் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்தது. வார்சா திரும்பியவர் தன் கருத்துகளை அழுத்தமாக எடுத்து வைத்தார். அரசாங்கம் ரோசாவைச் சிறையில் அடைத்தது.

முதல் உலகப் போருக்கான ஆயத்தங்கள் ஜெர்மனியில் நடைபெற்று வந்தன. பாட்டாளி மக்கள் உலகப் போரை எதிர்க்க வேண்டும் என்றும் அதற்கான போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் ரோசா போராடிக் கொண்டிருந்தார். 1919இல், கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்சம்பர்க் தலை மையில் ஜெர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது.

ஜெர்மனியில் இரண்டாவது புரட்சி வெடித்தது. 1919 ஜனவரி 15 அன்று ரோசாவையும் கார்ல் லீப்னெக்ட்டையும் ஃப்ரிகோர்ப்ஸ் என்ற ராணுவம் கைது செய்தது. ஓட்டோ ரூஞ்ச் என்ற ராணுவ வீரன் ரோசாவை துப்பாக்கியால் அடித்து கீழே தள்ளினான். ஹெர்மன் சூக்கோன் சுட்டுக் கொன்றான். அவரது உடல் லாண்ட்வெர் கால்வாயில் வீசப்பட்டது.

கார்ல் லீப்னெக்ட்டும் சுட்டுக் கொல்லப் பட்டார். 47 வயது வரையே வாழ்ந்தாலும் தெளிவான சிந்தனை, துணிச்சல் மிக்க போராட்டங்கள் மூலம் பாட்டாளி மக்களின் விடிவுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்தவர் ரோசா லக்சம்பர்க். அவருடைய பெயரில் லக்சம்பர்க் தத்துவம் இருக்கிறது. இன்று பெண் விடுதலையின் அடையாளமாக ரோசா உலகம் முழுவதும் அறியப்படுகிறார்!

Read more: http://www.viduthalai.in/page-7/82314.html#ixzz34waicHgu

தமிழ் ஓவியா said...


திராவிட இயக்கப் போராளி விருது பெற்ற ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையாருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டு


சென்னை சி.அய்.டி. காலனியில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் 15.6.2014 அன்று மாலை சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளையின் சார்பில் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையாருக்கு திராவிட இயக்கப் போராளி என்று வாழ்நாள் சாதனையாளர் விருதும், ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கிப் பெருமைப்படுத்தியது.

இந்நிகழ்ச்சியில், நக்கீரன் கோபால், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, அ.பாலகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இந்த விருதினை இன்று (17.6.2014) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நேரில் காண்பித்து, வாழ்த்து பெற்றார் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார். அவருக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார்.

உடன் கு.தங்கமணி, இ.திருமகள், அம்மையாரின் பெயர்த்தி ஆகியோர் உள்ளனர்.

Read more: http://www.viduthalai.in/page-8/82338.html#ixzz34wazEdRU

தமிழ் ஓவியா said...

இன்னும் எழுகிறேன்





என்னைப்பற்றி கசப்புக் கலந்த திரிக்கப்பட்ட பொய் வரலாற்றைப் புனைந்தாலும்
புழுதியில் போட்டு மிதித்தாலும்
அணுத்துகள் போல் எழுகிறேன்
இன்னும் மேலேமேலே

உங்களுக்கு என்துணிவு திகிலூட்டுகிறதா?
என் வீட்டில் எண்ணெய்க் கிணறு இருப்பதுபோல் இறுமாந்து இருக்கிறேனே அதனாலா?
எதற்கு என்மேல் இந்த இருட்டு முற்றுகை?

உலவும் நிலவாக
உதிக்கும் சூரியனாக
உறுதி அலைகளாக
உயர்கின்றன என் நம்பிக்கைகள்
அதனால்
எந்நிலையிலும் எழுகிறேன்
இன்னும் மேலே மேலே...

உடைந்த உள்ளத்துடன் தலை கவிழ்ந்து
கண்கள் கவிழ தோள் கண்ணீராய் வழிய
ஆற்றல் குன்றிய உணர்ச்சிமிக்க
என் கூக்குரலைக் கேட்க விரும்பினீர்கள் அல்லவா?
மட்டிலா துன்பம் தர கருதினீர் ஆனாலும்
என் தோட்டத்தில் பொன் சுரங்கம் இருந்து அதை
வெட்டி எடுப்பது போல் சிரிக்கின்றேனே இன்னும்
அந்தத் தன்னம்பிக்கை தகிக்கிறதா உங்களை?

சொற்களால் என்னைச் சுட்டு விடலாம்
கண்களால் என்னைப் பிளந்து விடலாம்
வெறுப்பால் என்னைக் கொன்று விடலாம்
ஆனாலும் காற்றாய் எழுகிறேன்
இன்னும் மேலே மேலே!

என் கவர்ச்சி நிலைகுலைய வைக்கிறதா? எனது தொடைகளின் சந்திப்பில்
வைரங்கள் வைத்துக் கொண்டு
நான் ஆடுவதுபோல் திகைக்கிறீர்களா?

வரலாற்றின் அவமானக் குடிசையிலிருந்து
நான் எழுகிறேன்
கடந்த கால வலியின் ஆழத்திலிருந்து
நான் எழுகிறேன்

நான் கருங்கடல்
திகிலும் அச்சமும் நிறைந்த இருளைவிட்டு
இன்பமும் எழுச்சியும் ஏந்திய
அகன்று குதிக்கும் அலைகளாய்
நான் எழுகிறேன்
களங்கமில்லாத விடியலை நோக்கி
நான் எழுகிறேன்
அடிமை மக்களின் நம்பிக்கையும் கனவுமாக
என் மூதாதையர் கொடுத்த பரிசுகளுடன்
நான் எழுகிறேன்...
நான் எழுகிறேன்...
நான் எழுகிறேன்...

தமிழில்: அருள்பேரொளி

தமிழ் ஓவியா said...

கால் பந்தாட்டத்தில் கடவுளின் கையாம்


- மயிலாடன்

மூட நம்பிக்கை எல்லாத் துறைகளிலுமே உண்டு என்கிறபோது விளையாட்டுப் போட்டிகளிலும் இல்லாமற் போய்விடுமா?

உலகக் கால்பந்து போட்டி என்னும் உற்சாகத்தில் விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் மெய்ம்மறந்துகிடந்தோம்.

கிரிக்கெட் என்பது வெள்ளைக்காரர்கள் எங்கெங்கெல்லாம் ஆட்சிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்களோ, அந்த நாடுகளில் மட்டுமே இடம்பெறக் கூடிய சோம்பேறி விளையாட்டாகும்.

ஒருவர் பந்து வீசுவார்; இன்னொருவர் அடிப்பார். மற்றொருவர் பந்தை விரட்டிக் கொண்டு ஓடுவார். எல்லைக்கோட்டருகில் நிற்பவர்களோ ஆட்டோகிராபில் கையொப்பம் போட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

கால் பந்தாட்டமோ, ஹாக்கியோ அத்தகையதல்ல; ஒவ்வொரு நொடியிலும் இரு அணிகளைச் சேர்ந்த 22 பேர்களும் சுறுசுறுப்புடன் அதிவேகத்துடன், பரபரப்பாகத் தயார் நிலையில் இருந்து தீரவேண்டியவர்கள்.

ஆனால், மூடநம்பிக்கை மற்ற போட்டிகளில் முட்டி மோதுவதுபோல, கால்பந்தாட்டத்திலும் உண்டு. கானா அணிக்கும், உருகுவே அணிக்கும் நடைபெற்ற போட்டியின்போது கானா அணியைச் சேர்ந்த ஒருவர் அடித்த பந்து கோல் நோக்கிப் பறந்தது. அந்த நேரத்தில் உருகுவே நாட்டு அணியின் லூயிஸ் சாரஸ் என்பவர், அந்தப் பந்தைக் கோலுக்குள் போகாமல் கையால் தடுத்துவிட்டார் (கோல் கீப்பரைத் தவிர மற்றவர்கள் கையில் தடுத்தால் அது குற்றமாகும்). செய்த குற்றத்துக்காக நடுவரால் சாரஸ் வெளியேற்றப்-பட்டார் என்றாலும், இதுகுறித்து சாரஸ் என்ன கூறினார் என்பதுதான் முக்கியமானதாகும்.

அந்தப் பந்தைக் கையால் நான் தடுத்தது குற்றம்தான். அப்படிச் செய்திராவிட்டால், அந்தப் பந்து எங்கள் கோலுக்குள் போயிருக்கும். நாங்கள் தோல்வி அடைந்திருப்போம். எனவே, அந்தப் பந்தை என் கைதான் தடுத்தது என்றாலும், அது என் கையல்ல, கடவுளின் கை! அதுதான் தடுத்தது என்று சமாதானம் கூறினார்.

பொதுவாக, தவறு செய்பவர்கள் அதற்கான பொறுப்பைத் தாங்கள் ஏற்காமல் கடவுளின்மீது பழி போடுவது பொறுப்பற்ற வாடிக்கைதான். அந்தக் குற்றத்தைத்தான் உருகுவே ஆட்டக்காரரான சாரசும் செய்தார்.

ஒரு கேள்வி, கையால் பந்தைத் தடுத்தது குற்றம் என்பது அவருக்கே தெரியும். தெரிந்திருந்தும், பந்தைத் தடுத்தது கடவுள் கை என்றால், தவறுக்குத் துணை போகக்கூடியவர் கடவுள் என்று விளங்கவில்லையா? விளையாட்டாக இருந்தாலும் அதில் ஒழுக்கம் தேவையில்லையா?

சரி, அவர் கைதான் கடவுள் கையாயிற்றே, அவர் ஏன் வெளியேற்றப்பட்டார்? அவர் அணி அடுத்த போட்டியில் ஏன் தோற்றது? கடவுள் சக்தி அவ்வளவுதானா? அட, பரிதாபத்திற்குரிய கடவுளே, பக்தர்களே உங்களை நினைத்தால் கழிவிரக்கம்தான் ஏற்படுகிறது.

ஸ்பெயின் 5_1 என்ற கோல்களில் டென்மார்க்கை வென்றது. இங்கிலாந்து பராகுவேயையும், பிரேசில் போலந்தையும் வீழ்த்தின. மேற்கு ஜெர்மனி 1_0 என்ற கோலில் மொரோக்கோவையும், மெக்சிகோ பல்கேரியாவையும் வீழ்த்தின. காலிறுதியில் பிரான்ஸ் பிரேசிலை வீழ்த்தியது. பெல்ஜியம் ஸ்பெயினை வெளியேற்றியது. மேற்கு ஜெர்மனி மெக்சிகோவை வெளியேற்றியது. அர்ஜென்டினா 2-_1 என்ற கோல்களில் இங்கிலாந்தை வென்றது. அர்ஜென்டினாவின் முதல் கோல் கடவுளின் கை போட்ட கோல் என்று பின்னால் மரடோனாவால் வர்ணிக்கப்பட்டது. தனியாக வானில் வந்த பந்தைப்பிடிக்க இங்கிலாந்து கோல்கீப்பர் பீட்டர் ஷெல்டனும், அதைத் தன்வசப்படுத்த மரடோனாவும் வானில் தாவினர். ஆனால் மரடோனா அந்தப் பந்தை தனது கையால் குத்திக் கோலாக்கினார். நடுவரும் லைன்ஸ்மேன்களும் அதைக் கவனிக்கவில்லை. அடுத்து மரடோனா அடித்த கோல் அபாரமான கோலாகும். உலகின் சிறந்த கால்பந்து வீரரான மரடோனா கடைசி வரை இந்தக் கோலுக்கு மன்னிப்புக் கேட்கவில்லை. அரை இறுதியில் மேற்கு ஜெர்மனி 2_-0 என்ற கோல்களில் பிரான்சை வீழ்த்தியது. மற்றொரு அரை இறுதியில் அர்ஜென்டினா 2-_0 என்ற கோல்களில் பெல்ஜியத்தை வென்றது. இறுதியாட்டத்தில் அர்ஜென்டினா 3_-2 என்ற கோல்களில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி ஃபிபா கோப்பையைக் கைப்பற்றியது.

ஒன்றைக் கவனிக்க வேண்டும். கடவுள் என்ற உணர்வு தவறு செய்வதைத் தடுக்கவில்லை; மாறாக தவறு செய்பவர்கள் தப்பிக்கத் துணைப் போகிறது. இதன் மூலம் ஒழுக்கக்கேட்டுக்கு அரணாகத்தானே இருக்கிறது. இதுகுறித்து எந்த ஆன்மிகவாதிகளும் வாய்திறப்பதில்லையே _ ஏன்?

குறிப்பு: 2014-இல் உலகக் கோப்பைக்கான கால்பந்தாட்டம் ஜூன் 13 அன்று தொடங்குகிறது

தமிழ் ஓவியா said...

பூமியைவிட 2 மடங்கு பெரிய கோள்

பூமிக்கோளில் இருந்து 560 ஒளி ஆண்டுகள் (ஓர் ஒளி ஆண்டு என்பது சுமார் 6 டிரில்லியன் மைல்) தொலைவில் நாம் வாழும் பூமியைவிட இரண்டு மடங்கு பெரிய கோள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியைவிட 17 மடங்கு எடையுள்ள இந்தப் புதிய கோளின் சுற்றளவு 18 ஆயிரம் மைல்கள் ஆகும். 45 நாள்களுக்கு ஒருமுறை சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிவரும் இந்தக் கோளினை, ஹார்வர்டு ஸ்மித்சானியன் வானியல் இயற்பியல் மய்யத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து, கெப்ளர்_10சி என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தக் கோளினைக் கண்டு பிடித்திருப்பது தங்களுக்கு மிகுந்த வியப்பினை அளித்துள்ளதாக விஞ்ஞானி சேவியர் டைஸ்கியூவும், இது அனைத்து பூமிகளின் காட்சில்லா போன்றது. இந்தக் கோளில் உயிர் வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலை உள்ளது என்று டிமிட்டர் சாஸ்செலோவ் அவர்களும் கூறியுள்ளார்கள்.

தமிழ் ஓவியா said...

பரிதவிக்கும் பாபநாசம்

தாமிரபரணி ஆறு வடக்கு நோக்கிப் பாயும் பாபநாசத்திற்குச் சென்றால் பாவங்கள் நீங்கும் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கின்றனர். திதி கொடுக்கும்போது புதிய வேட்டி சேலைகளை ஆற்றில் போட்டால் அது முன்னோர்களைச் சென்றடையும் என்று ஆற்றில் போட்டுவிட்டுச் செல்கின்றனர்.

இப்படி அடுக்கடுக்காக மூடநம்பிக்கைகளைச் சுமந்து வருபவர்களின் மூலமாக துணி சோப்பு, குளியல் சோப்பு மூலம் ஒரு நாளைக்கு 585 கிலோ கழிவுகளும், பேஸ்ட், ஷாம்பு, எண்ணெய் பாட்டில்கள் மூலம் 185 கிலோ கழிவுகளும் ஆடைகளின் அழுக்கு, எண்ணெய், பூ, வாழை இலை போன்றவற்றின் மூலம் ஒரு நாளைக்கு 291 கிலோ குப்பையும் எல்லாவற்றுக்கும் மேலாக மனிதக் கழிவுகள் 200 கிலோ, பரிகாரத் துணிகள் 200 கிலோ ஆக மொத்தம் ஒரு நாளைக்கு சுமார் 1591 கிலோ கழிவுகள் பாபநாசத்தில் கலப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதைத் தூய்மை செய்யும் பணியில் இதுவரை 125 டன் துணிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

உலகத் தலைவர்கள் பெண்களை மதிக்கிறார்களா?

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி சார்பில் வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பெண்களின் கல்வித் தேவை குறித்துப் பேசினார். இது தொடர்பாக அந்நிகழ்ச்சியில் மேலும் கூறியதாவது:-

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு அல்லது ஹார்வேர்டு பல்கலைக்கழகங்களில் தங்களது பெண் குழந்தைகள் கல்வி பயில்வதற்குச் சென்றால் பெருமிதம் கொள்ளும் உலகத் தலைவர்கள், அதற்கு அப்பால் அவர்களது கல்வியைப் பற்றியோ அவர்களது தேவையைப் பற்றியோ ஏதும் சிந்திப்பதில்லை.

இதன்மூலம் சமூகக் கோட்பாடுகளை உலகத் தலைவர்கள் மதிக்காமல் இருப்பது தெரிய வருகிறது. ஆகவே, தலைவர்கள் தங்களது மகள்களின் கல்விக்கு மட்டுமல்ல, தனது நாட்டின் ஒட்டுமொத்த மகள்களுக்காகவும் சிந்திக்க வேண்டும்.
பெண்களை மதிக்கும் மனப்பான்மையை உலகத் தலைவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழ் ஓவியா said...

தொடங்கியது காவிக்கூட்டத்தின் மிரட்டல் ஆட்டம்!




வரலாற்றுப் பாட நூல்களைத்
திரிக்கும் அவலம்

காவிக்கும்பல் ஆட்சிக்கு வந்தாலே அவர்களின் முதல் பார்வை விழும் இடம் அவர்களுக்கு எப்போதுமே பாதகமாக இருக்கும் வரலாறு தான். இதோ இந்த முறை மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் கச்சை கட்டிக் கிளம்பிவிட்டது காவிக்கும்பல். அதுவும் இம்முறை முழு வலுவோடு இருப்பதாகக் கருதப்படுவதால், வேகம் கொஞ்சம் கூடுதலாகத் தானே இருக்கும்.

பிரபல பாடநூல் வெளியீட்டு நிறுவனமான ஓரியன்ட் பிளாக்ஸ்வான் நிறுவனத்தின் வரலாற்றுப் பாடநூலுக்கு எதிராக சட்ட அறிவிக்கை (லிமீரீணீறீ ழிஷீவீநீமீ) அனுப்பியதன் மூலம் கணக்கைத் தொடங்கியுள்ளார் தினநாத் பத்ரா என்பவர். இதையடுத்து அந்த நிறுவனம் அதனுடைய பல்வேறு நூல்களை மறுஆய்வு செய்து கொண்டுள்ளது. இவற்றுள் கல்வியாளர் மேகா குமார் எழுதியுள்ள 1969லிருந்து அகமதாபாத்தில் நடக்கும் மதவாதம் மற்றும் பாலியல் வன்முறை என்ற நூலும் மறு ஆய்வு செய்யப்படும் நூல்களின் பட்டியலில் இருப்பதாக ஓரியன்ட் பிளாக்ஸ்வான் நிறுவனம் அவருக்குத் தெரிவித்ததை அடுத்து இந்தத் தகவல் வெளியே வந்துள்ளது. இந்த நூல் 1969, 1985 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் அகமதாபாத் நகரத்தில் நடைபெற்ற கலவரங்களின் போது முஸ்லிம் மதப் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகளைக் குறித்து ஆய்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் சார்ந்த கல்வியியலாளரான தனக்கு சமீபத்திய தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட மாறுதல் கவலையளிப்பதாகக் கூறியுள்ளார் மேகா குமார்.

சரி, யாரிந்த தினநாத் பத்ரா?

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் வித்யபாரதி கல்வி குழுமங்களின் பொதுச் செயலாளராக இருந்தவர் தினநாத் பத்ரா. தற்போது சிக்ஷா பச்சாவோ அந்தோலன் சமிதி என்ற நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். வித்யபாரதி பயன்படுத்தும் பாடநூல்கள் சிறுபான்மையினருக்கு எதிராகவும், குழந்தைத் திருமணம், சதி என்ற உடன்கட்டை ஏறுதல் ஆகியவை இந்தியக் கலாச்சாரம் என்பது போலவும் இன்னமும் பல மூடநம்பிக்கை களைக் கொண்டுள்ளது என்று குற்றம்சாட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதன் கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அதை எதிர்த்து 2001ஆம் ஆண்டு லீகல் நோட்டீஸ் அனுப்பியவர் தினநாத் பத்ரா.

வரலாறு மற்றும் சமூக அறிவியல் பாடநூல்களில் உள்ள தகவல்களை எதிர்த்து (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) எதிராக 2006ஆ-ம் ஆண்டு பொதுநல வழக்குத் தொடர்ந்தவரும் இவரே! அவ்வழக்கு பழங்காலத்தில் ஆரியர்கள் மாட்டிறைச்சி உண்பார்கள் என்று பாடநூலில் இருப்பதை எதிர்த்து பதியப்பட்டிருந்தது என்பதும், அந்தக் கருத்தைப் பாடநூலில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2007ஆ-ம் ஆண்டு அன்றைய மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக இருந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான், தினநாத் பத்ராவின் அறிவுரைப்படி, மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து பாலியல் கல்வியை நீக்கினார். மேலும், பாலியல் கல்வியைப் போதித்தால் சட்டப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டி டெல்லி பள்ளி ஆசிரியர்களுக்குக் கடிதம் அனுப்பியது சிக்ஷா பச்சாவோ அந்தோலன் சமிதி.

2008ஆம் ஆண்டு, டெல்லி பல்கலைக்கழக வரலாற்றுப் பாடத்திட்டத்தில் இருந்து ராமாயணம் தொடர்பான ராமானுஜனின் கட்டுரையை நீக்க வழக்குத் தொடர்ந்தவர்களில் தினநாத் பத்ராவும் ஒருவர்.

2010ஆம் ஆண்டு, இந்துக்கள் தொடர்பான வரலாற்று நூலை வெளியிட்ட பென்குயின் நிறுவனத்திற்கு எதிராகவும், இந்து ராஷ்டிரம் தொடர்பாக கட்டுரை வெளியிட்ட பிரான்ட்லைன் ஆசிரியர் இந்து ராமுக்கு எதிராகவும் லீகல் நோட்டீஸ் அனுப்பினார் தினநாத் பத்ரா.

இப்படித் தொடரும் செயல்களுக்கு மத்தியில் இப்போது நவீன இந்திய வரலாறு குறித்து சேகர் பந்தோபாத்யாய எழுதி ஓரியன்ட் பிளாக்ஸ்வான் வெளியிடும் நூலுக்கு எதிராகவும் தினநாத் பத்ரா கிளம்பியுள்ளார். சேகர் பந்தோபாத்யாய எழுதியுள்ள நவீன இந்திய வரலாறு குறித்த நூல் மிகச் சிறந்த வரலாற்று நூல், அந்த நூலைத் தடை செய்ய யாராவது முயன்றால், அது இந்திய ஜனநாயகத்தின் மீதும் அறிவுலகத்தின் மீது விழும் மிகப் பெரிய அடியாக அமையும். தினநாத் பத்ராவுக்கு அந்த நூலில் பிரச்சினை இருந்தால் அந்த நூலைத் தடை செய்வதற்குப் பதிலாக அந்த நூலுக்கு மறுப்பாக ஒரு நூலை எழுதட்டும் என்று கூறியுள்ளார் பிரபல வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குகா.

தினநாத் பத்ராவின் சட்ட அறிவிக்கையை அடுத்து தனது பல நூல்களை ஓரியன்ட் பிளாக்ஸ்வான் நிறுவனம் மறுஆய்வு செய்வது என்று தன்னிச்சையாக முடிவெடுத்து இருப்பது எண்ணற்ற வரலாற்று, சமூக சிந்தனை யாளர்களைக் கவலையடைய வைத்துள்ளது. இவ்வாறு மிரட்டல்களின் மூலமாக வரலாற்றைத் திரிக்க முயலும் மதவாத அமைப்பினரின் செயல்கள், ராமச்சந்திர குகா சொல்லியுள்ளது போல, இந்திய ஜனநாயகத்தின் மீதும் அறிவுலகத்தின் மீது விழும் மிகப் பெரிய அடியாகவே அமையும்.

- திராவிடப் புரட்சி

தமிழ் ஓவியா said...

விவசாயத்தை வாழ விடு அல்லது மாற்றுப் பாதைக்கு வழி செய்!


எச்சரிக்கைக் குரல் எழுப்பிய
திராவிடர் விவசாயத் தொழிலாளர் எழுச்சி மாநாடு


திருவாரூரில் 26.5.2014 அன்று நடைபெற்ற திராவிடர் விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசும்போது, விவசாயம் என்பதை வருணாசிரம முறையில் பாவத் தொழிலாகக் கூறும் மனுதர்மம்- பார்ப்பனர்கள் தான் தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மிராசுதாரர்களாக உள்ளனர். அந்த பாவப்பட்ட தொழிலின் இலாபத்தை அனுபவிப் பவர்களாக பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். ஆனால் வயலில் உழைக்கும் விவசாயிகளின் நிலையோ அன்று தொட்டு இன்றுவரை பரிதாப நிலைதான்.

நகர்ப்புறங்களில் மக்கள் அனுபவிக்கும் எல்லா வசதிகளும் கிராமப் பகுதியில் உள்ளவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று 1944ஆம் ஆண்டிலேயே இதுபற்றிச் சிந்தித்து தம் கருத்தினை தந்தை பெரியார் வெளியிட்டுள்ளார்கள்.

மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் தொடங்கிய புரா திட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் கூறிய அந்தக் கருத்தின் அடிப் படையில் தான் தஞ்சை வல்லத்தைச் சுற்றியுள்ள 67 கிராமங்களைத் தத்தெடுத்து பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்த ஆசிரியர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் 10 கிராமங்களில் ஆய்வு செய்து அங்கும் புரா திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்றும் அறிவித்தார்.

காவிரி நீர்ப் பங்கீடு, நீர் சேமிப்பு, விவசாயிகளுக்கான இழப்பீடு, மானியம் முறையாகச் சென்றடைதல் உள்ளிட்ட தீர்மானங்களுடன் பெண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைக் களைதல், ஆண் - பெண் ஊதிய வேறுபாட்டை நீக்குதல், விவசாயத் தொழிலாளர்களுக்கு முதியோர் காப்பகங்கள் போன்ற இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான 12 முக்கியத் தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஒன்று விவசாயத்தை வாழ வைக்க வேண்டும்; அல்லது விவசாயிகளுக்கு மாற்றுத் தொழில் செய்யும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். விவசாயிகளை வாயாரப் புகழ்ந்துவிட்டு அவர்களது வாழ்வை உறிஞ்சக் கூடாது என்று ஒலித்த குரல் விவசாயிகளைப் புறக்கணித்து விட்டு வளர்ச்சி பேசும் அத்தனைப் பேருக்குமான எச்சரிக்கையும் அறைகூவலும் ஆகும். திருவாரூர் மாநாடு பெரியார் பார்வையில் புதிய அணுகுமுறையில் விவசாயிகளைப் பார்த்திருக்கிறது; இனி வழிகாட்டும்.