Search This Blog

4.6.14

கலைஞர்பற்றி பெரியார்-அண்ணா- பேராசிரியர்

வாழ்த்துகிறார் பெரியார்!

மாண்புமிகு கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு 49ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா நடப்பது குறித்து நான் மிகுதியும் மகிழ்ச்சிய டைகிறேன்.

டாக்டர் அவர்களது வாழ்நாள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பற்றி சிந்திப்பதிலும், தொண்டாற்றுவ திலுமே நடந்து கழிவதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து திருப்தி அடைந்து வருகிறேன்.

டாக்டர் செய்து வருகிற காரியங்கள் பெரிதும் மற்றவர் சிந்திக்கக்கூட பயப்படும்படியான காரியங்கள் என்பதோடு, அவைகளை வெகு எளிதிலே செய்து முடித்து விடுகிறார்.

இதன் பயனாகவே அரசியல் உலகில் அவருக்கு எதிர்ப்பாளர்கள் அதிகமாகி வருகிறார்கள். காரணம், டாக்டர் அவர்களது ஆட்சி நீண்ட நாளைக்கு நிலைத்து விடுமோ என்கின்ற பொறாமையும் வேதனையும்தான் என்றாலும், டாக்டர் அவர்கள் யாருடைய எதிர்ப்புக் கும் பயப்படாமல் எப்படிப்பட்ட தொல்லைக்கும் சளைக்காமல் துணிந்து காரியமாற்றி வருகிறார். 

பொதுவாகவே சமுதாயத்துறையில் சீர்திருத்த தொண்டு ஆற்றினால் யாருக்கும் சுய நலக்காரருடையவும், பழைமை விரும்பி களினுடையவும் எதிர்ப்பு ஏற்பட்டுத் தான் தீரும். கலைஞர் டாக்டர் அவர்களுடைய புரட்சிகரமான தொண்டுக்கு எதிர்ப்பும், தொல்லையும் ஏற்படுவது அதிசயமல்ல. அவற்றைப்பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல் துணிந்து தொண்டாற்றி வரும் டாக்டர் அவர்களை மனதாரப் பாராட்டி அவர் வாழ்வு எல்லையற்று நீண்டு மக்களுக்கு புதிய உலகம் ஏற்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

                           ----------------------------- ஈ.வெ.ராமசாமி, 3.6.1972



கணிக்கிறார் பெரியார்! 

அண்ணாவின் மறைவுக்குப்பின் கலைஞர் திரு. கருணாநிதி அவர்கள் தலைமையில் உள்ள அமைச்சரவை தமிழகப் பெரு மக்கள் அனைவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் அளவுக்குக் காரியங்களைச் சிறப்பாகச் செய்து வருவதுடன், இப்படிப்பட்ட ஒருஆட்சி மாறினால், இனி நம் தமிழர் சமுதாயத்தின் கதி அதோ கதி ஆகி விடுமென்று துணிந்து சொல்லும் அளவுக்கு மக்கள் நல ஆட்சியாக நடந்துகொண்டிருப்பதுடன் மிகவும் பாராட்டத்தக்க வகையிலும் பணியாற்றி வருகிறது.



எச்சரிக்கிறார் பெரியார்!

எனது 92ஆவது ஆண்டு செய்தியாக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் இந்த ஆட்சியை இன்னும் ஒரு பத்தாண் டுக்குப் பாதுகாத்து வர வேண்டு மென்பதே ஆகும்.

தேசம், மிருகப் பிராயத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது.
யாரும், எப்படிப்பட்டவரும் எந்த இழிவான காரியத்தைச் செய்யவும் பயப்படுவ தில்லை. ஒழுக்கம், நேர்மை, நாணயம், அமைதி என்பது பெரும்பாலோரிடம் காண முடிவதில்லை.

பொதுவில் பார்த் தால் நமது நாடுதான் இந்தியாவிலேயே பாதுகாப்பான நாடு என்று கருதத் தக்கதாய் இருந்து வருகிறது.

இதற்குக் காரணம் தி.மு.க. ஆட்சி தான் என்று உறுதியாய்க் கூறுகிறேன். எனவே இதற்கு ஏதாவது மாற்றம் ஏற்படுமானால் அதை வேறு எந்த ஆட்சி வந்து மக்களை இன்றைய நிலைக்கு கேடில்லாமல் ஆளமுடியும்?
சுருக்கமாகச் சொல்ல வேண்டு மானால், இந்த ஆட்சிக்கு மாற்றம் ஏற்படுமானால் அடுத்துவர இருப்பது பார்ப்பன ஆட்சிதான் அதாவது வர்ணா சிரமத்தை நிலை நிறுத்தும் ஆட்சிதான். இது உறுதி; உறுதியேயாகும். 

--------------------------------- தந்தை பெரியார் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் அறிக்கையில் (17.9.1970).
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கலைஞர்பற்றி அண்ணா
 

என்னை முழுவதும் அறிந் தவர்கள்தான் கழகத்திலே இருக்கிறார்கள். அதிலே முற் றிலும் அறிந்தவர் என்று சொல் லத் தக்கவர்களிலே கருணா நிதிக்கு மிகச் சிறந்த இடமுண்டு.

நான் கவலையோடு இருக் கிறேன் என்றால், முதன்முதல் கண்டுபிடிக்கக்கூடியவர் கருணாநிதிதான். கோபமாக இருக்கிறேன் என்றால், முதன் முதல் கண்டுபிடிக்கக் கூடியவர் கருணாநிதிதான். நான் கோபமாக இருப்பது தெரியாமல் என்னிடத்திலே ஏதாவது பேசி நான் கோபமாக நாலு வார்த்தை சொன்ன பிறகு அண்ணா கோபமாக இருக்கிறார் என்று சொல்பவர் நாவலர்.

கலைக்கு இருக்கும் ஒரு விசேடம் அது.  கவலைப்பட்டு நடிக்கிறானென்றால், மற்றவர்களும் அதை உணர்ந்து அல்லது அந்தக் கணமே அறிந்து மற்றவர்களைக் கவலைப் பட வைப்பதுதான் கலைஞனுடைய திறமை. அதைப் போல என்னுடைய கோபதாபங்களை, என்னுடைய கவலைகளை உடனுக்குடன் நொடிப்பொழுதில் அறிந்து அதை மாற்ற வேண்டும் என்று அக்கறையோடு நல்ல முறையில் துணை புரிவதில் கருணாநிதிக்கு ஈடு கருணாநிதிதான்.

அவர் மூலமாக நானும் நாடும் இன்னும் நிரம்ப எதிர்பார்க்கிறோம். இப்பொழுது செய்திருக்கின்ற காரியங்களைப் போல் பலமடங்கு அதிகமான காரியங்கள் அவருடைய திறமையின் மூலம் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய திருக்கிறது.

-------------------------------------------(1968இல் அண்ணா ஆற்றிய உரையிலிருந்து)
-----------------------------------------------------------------------------------------------------------------------------

கலைஞர்பற்றி பேராசிரியர்
கோயம்புத்தூரில் திமுகவின் அய்ந்தாவது பொது மாநாடு 1975 டிசம்பர் 25, 26 தேதிகளில் நடைபெற்றது.

26ஆம் தேதி மாநாட்டுக்கு திமுக தலைவர் கலைஞர் தலைமையேற்றார். தலை வரை வழிமொழிந்த திமுக பொரு ளாளர் பேராசிரியர் க. அன்பழகன் உரையாற்றிய கவிதை நடை வருமாறு:

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொன்ன
அன்பு இதயத்தை தம் இதயமாகப் பெற்ற
கலைஞரை வழிமொழிகிறேன்.
அண்ணாவின் தூங்காத இதயமே தலைமை ஏற்க வா! அல்ல, அல்ல
தூங்காத இதயம் மட்டுமல்ல,
அறிஞர் அண்ணாவின் ஆற்றல்மிக்க இதயமே
தலைமை ஏற்க வா!
உனக்குரிய இடத்தில் அமர வா, வா! அல்ல, அல்ல;
உனக்குரிய பணியை ஆற்ற வா! அல்ல, அல்ல;
என்றும் பணியாற்றும் நீ அதைத் தொடர வா!
என்று கலைஞரை அழைத்து,
நானும் அவரை வழிமொழிந்தேன்
என்ற பெருமையைத் தேடிக் கொள்கிறேன்
எனக் குறிப்பிட்டார்.

- ( கலைஞரின் நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகம் - பக்கம் 500)
----------------------------------------------------------------------------------------------------------------------------
       --------------------------"விடுதலை” 3-6-2014

18 comments:

தமிழ் ஓவியா said...


ஜூன் 3

இந்நாள் - திராவிடர் இயக்க வரலாற்றில் மட்டுமல்ல - தமிழ்நாட் டின் வரலாற்றிலும் ஒரு முக்கிய கல்வெட்டைப் பிரசவித்த பொன்னாள்! கலைஞர் பிறந்த நாள் (1924) என்றாலும் அந்நாள் எத்தகையது!

தமிழ்நாட்டின் வரலாற்றில் ஜாதிகளைக் கடந்து சமயங்களைப் புறந்தள்ளி, மொழி உணர் வால் ஓரினம் என்ற தமிழினக் கோட்பாட்டை உணர்ச்சிப் பொங்க உரு வாக்கிய ஒரு போராட் டம் உண்டு என்றால் அது 1938 இந்தி எதிர்ப் புப் போராட்டமாகும்.

சக்ரவர்த்தி ராஜகோ பாலாச்சாரியார் (ராஜாஜி) சென்னை மாநிலத்தின் பிரதமராக இருந்தபோது, பள்ளிகளில் இந்தித் திணிப்பை அறிவிப்பு செய்தார் (10.8.1937).

தந்தை பெரியார் தலைமையில் தமிழினம் பொங்கி எழுந்தது. சமஸ் கிருதத்தைப் படிப் படியாகப் புகுத்தவே இந்தியைக் கொண்டு வருகிறேன் என்று பச்சையாக சென்னை இலயோலா கல்லூரியில் பேசினாரே!

ஆம், பூனைக்குட்டி வெளியில் வந்தது - சும்மா இருப்பாரா சுய மரியாதைச் சூரியன் தந்தை பெரியார்?

தோள் கட்டி, தொடை தட்டி போர்க் குரல் எழுப் பினார் அதன் விளைவு இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர்களுக்காக சிறைச் சாலை கதவு முதன் முதல் திறந்த நாள் தான் இந் நாள் (1938).

இந்நாளில்தான் சென்னை கோடம்பாக்கத்தில் இந்தி எதிர்ப்பு மாநாடு - தமிழ்க் கடல் மறைமலை அடிகளாரின் தலைமையில்.

இந்தி ஒழிய வேண் டும் அல்லது நான் ஒழிந்து போக வேண்டும் என்று பல்லடம் பொன்னு சாமி என்ற தோழர் பிரதம அமைச்சர் ஆச்சாரியா ரின் வீட்டு முன் பட்டி னிப் போராட்டம் நடத் தினார். அந்தக் காரணத் துக்காகவும் இன்றுதான் (ஜூன் 3 -1938) சிறைக் கொட்டடியில் தள்ளப் பட்டார்.

மறைமலை அடிகள் தலைமையில் கோடம் பாக்கம் மாநாட்டுக்கு இந்தத் தகவல் கிடைத் தது தான் தாமதம், மாநாடு - ஊர்வலமாக உருப் பெற்றது.

பிரதமர் ராஜாஜி வீட்டுமுன் களம் அமைக் கப்பட்டது முழங்கினர் தலைவர்கள் சி.டி. நாய கம் (இந்தி எதிர்ப்பின் முதல் சர்வாதிகாரி) காஞ்சி மணிமொழியார் சாமி சண்முகானந்தா ஆகியோர் இரவு 12 மணி வரை முழங்கினர். முடி வில் அவர்களும் சிறைப் பிடிக்கப்பட்டனர்.

இந்தி எதிர்ப்புக்காக அன்று திறந்த சிறைச் சாலை 21.2.1940 இல் தான் முற்றுப் பெற்றது. இந்த நாளை மறக்கத்தான் முடியுமோ!

- மயிலாடன்

Read more: http://www.viduthalai.in/e-paper/81456.html#ixzz33d3hUvFk

தமிழ் ஓவியா said...

கலைஞர் பிறந்த நாள் சிந்தனை எது?

தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழ் நாடெங்கும் இன்று கொண்டாடப்படு கின்றது. அந்த வாழ்த்துக்களோடு நாமும் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றுபவர்கள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்து வருகிறார்கள். குறிப்பாக நடந்து முடிந்த 16ஆம் மக்களவைத் தேர்தல் குறித்தும், சிறப்பாக தேர்தல் குறித்தும், முக்கியமாக தமிழ்நாட்டில் திமுக தோல்வி அடைந்தது குறித்தும் கருத்துக்களும், தகவல்களும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

நடந்து முடிந்த தேர்தலில் மாநில அரசின் அத்துமீறல்கள், தேர்தல் ஆணையத்தின் ஒரு சார்புப் போக்கு, ஊடகங்களின் நடு நிலை பிறழ்ச்சி, வாக்குகள் விலைப் பேசப்பட்டது பற்றியெல்லாம் பலரும் பேசியுள்ளனர்.

கலைஞர் பிறந்த நாள் விழா நாடு தழுவிய அளவில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதில் காணப்படும் மக்கள் திரள் இளைஞர்கள் எழுச்சி - தேர்தல் முடிவுகளால் திமுக துவண்டுப் போய் விடவில்லை என்பதை வெளிப்படுத்தியிருப்பது நல்லதோர் அறிகுறியாகும்.

இதற்கு முன்பும் கூட திமுக இத்தகைய தோல்வி களைச் சந்தித்ததுண்டு. அதற்குப் பிறகு புதுச்சேரி யையும் சேர்த்து 40க்கு 40 இடங்கள் வெற்றி பெற்றி ருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் தேர்தல் தோல்வியையே அறியாதவர் என்று கணிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அவர்களின் அ.இ.அ.தி.மு.க. 1980இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் தோற்று இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதுண்டு.

தி.மு.க.வைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே அடிக் கட்டுமானமுள்ள கட்சி அமைப்பைக் கொண்டதாகும். அதன் காரணமாகத்தான் 13 ஆண்டுகள் ஆட்சியில் அமரும் வாய்ப்பை இழந்த நிலையில் மீண்டும் ஆட்சி லகானைப் பிடித்தது.

அதே நேரத்தில் 1967இல் தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சிப் பீடத்துக்கு வர முடியவில்லை. தி.மு.க. நிலையோ முற்றிலும் வேறானது.

இந்த நேரத்தில் முக்கியமாக எண்ணிப் பார்க்க வேண்டிய கருத்தொன்றுண்டு. திமுக ஆட்சிக்கும், மற்ற கட்சி ஆட்சிக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சாலைகள் போடுவார்கள்; தெரு விளக்குகளைப் போடுவார்கள் - பாலங்களைக் கட்டத்தான் செய்வார்கள்.

இவற்றையெல்லாம் கூட வேறு எந்த ஆட்சியிலும் நடக்காத அளவுக்குப் பெரிய அளவில் சாதித்துக் காட்டிய தி.மு.க ஆட்சி - வேறு எந்த அரசியல் கட்சிக் கும் இல்லாத தந்தை பெரியார் அவர்களின் சமுதாய மறுமலர்ச்சிக் கருத்துகள் கொண்டதால் இந்தியா விலேயே வேறு எங்கும் சாதிக்கப்படாதவற்றைத் தனித் தன்மையுடன் சாதித்துக் காட்டியிருக்கிறது.

எடுத்துக்காட்டாக பெரியார் நினைவு சமத்துவ புரங்களை எடுத்துக் கொள்ளலாம்; ஜாதி மதங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று கருதி, பொருத்தமாக தந்தை பெரியார் பெயரை அதற்குச் சூட்டிய பெரு மகன்தான் மானமிகு கலைஞர்அவர்கள். தமிழுக்குச் செம்மொழித் தகுதி, தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, சமூக சீர்திருத்தத்துறை - என்ற வரிசையில் சீர் தூக்கிப் பார்க்கட்டும்; கலைஞர் அவர்களின் பக்கத்தில் வந்து நிற்கும் தகுதிகூட வேறு யாருக்கும் கிடையாதே!

தமிழ் ஓவியா said...

இன்னும் சொல்லப் போனால் இது போன்ற சிந்தனை இல்லாததோடு மட்டுமல்ல; கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்தத் திட்டங்களை பலவீனப்படுத்தும் மனப்போக்கும் அத்திட்டங்களை மேலே வளர்க்கும் மனமற்ற போக்கும்தான் இன்றைய மாநில ஆட்சியில் பச்சையாகத் தெரிகின்றன.

நியாயமாக இப்படி நடந்து கொண்டதற்காக அ.இ.அ.தி.மு.க.வுக்கு நடந்து முடிந்த தேர்தலில் நாட்டு மக்கள் சரியான பாடத்தைப் போதித்திருக்க வேண்டும்;

நடந்து இருப்பதோ தலை கீழ்!

இந்த நேரத்தில் இதுபற்றிதான் சிந்திக்க வேண்டும்.

கலைஞர் ஆட்சியின் தனித்தன்மையான சாதனைகள் மக்களைச் சென்றடையவில்லையா அல்லது கலைஞர் ஆட்சியின் சமுதாய மறுமலர்ச்சித் திட்டங்களை முடக்கிய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் பிற்போக்கான நடவடிக்கைகள் மக்களுக்குத் தெரியாமல் போய் விட்டதா? என்பது தான் முக்கியமான வினாவாக இருக்க முடியும்.

இதில் ஊடகங்களின் நடுநிலை தவறிய ஒரு சார்புக்கு முக்கிய இடம் உண்டு. இன்னொரு காரியத் தையும் இந்த ஊடகஙங்கள் செய்தன. தேர்தல் நெருங்க நெருங்க - திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு வளர்ந்து வருகிறது என்ற தொனியில் செய்திகளைக் கசிய விட்டதுகூட ஆளுங் கட்சிகளை மறைமுகமாக விழிப்படையச் செய்யும் தந்திரமே!

நிலையைப் புரிந்து கொண்ட ஆளும் கட்சியோ தேர்தல் ஆணையத்தைக் கையில் போட்டுக் கொண்டு வாக்குகளை விலை பொருளாக்கி விட்டது.

வாக்குகள் வாங்கப்பட்டன. பணப் பட்டுவாடா நடைபெற்றதைத் தடுக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையமே வெட்கமின்றி ஒப்புக் கொண்டதே.

முத்தமிழ் அறிஞர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டி ருக்கும் அதே வேளையில், ஆக்க ரீதியான சிந்தனை கள், செயல் திட்டங்களுக்கு அடுத்தடுத்துத் தேவைப் படுகிறார்.

கலைஞர். - அவர்களின் பிறந்த நாள் விழாவின் சிறப்பு என்பது இதில் நாம் பெறும் வெற்றியைப் பொறுத்ததாகும்.

Read more: http://www.viduthalai.in/page-2/81468.html#ixzz33d4357m6

தமிழ் ஓவியா said...


முன்னேற்றம்


தொழிலாளர்களின் விடுதலையே தமிழர்களின் விடுதலை; பார்ப்பனரல்லாதாரின் விடுதலையாகும். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பது உண்மையில் தொழிலாளர் முன்னேற்றமே! - (விடுதலை, 21.6.1939)

Read more: http://www.viduthalai.in/page-2/81467.html#ixzz33d4XU5fd

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?

பொன்னார் மேனி யன் (சுந்தரர்)

சுடலைப் பொடி நிறத் தவன் (சம்பந்தர்)

பவளம் போல் மேனி யன் (அப்பர்)

- சிவனைப் பற்றி அடி யார்கள் இப்படிப் பாடி வைத்துள்ளார்களே - ஒரு ஆசாமி எப்படி இத்தனை நிறம் உடைய வனாக இருக்க முடியும்? பச்சோந்தியோ!

Read more: http://www.viduthalai.in/e-paper/81463.html#ixzz33d4lTMKZ

தமிழ் ஓவியா said...


புரட்சியின் நோக்கம்


எதற்காகப் புரட்சி? இன்றுள்ள இழிவுகள், குற்றங்கள், அக்கிரமங்கள் ஒழிவதற்காக. இவற்றுக்கு இருப்பிடங்கள் யாவை, காரணகர்த்தா யார் என்பதை உணரவேண்டும். உணர்ந்து அவற்றை அழிப்பதற்கு ஆவன செய்யவேண்டும்.

_ (குடிஅரசு, 23.12.1944)

Read more: http://www.viduthalai.in/page-2/81522.html#ixzz33imFIFih

தமிழ் ஓவியா said...

பிறந்த நாளா? புத்துணர்வு பிறந்த நாளா?

தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை - இலட்சக்கணக்கானவர்கள் நிரம்பி வழிய நடைபெற்றது.

தேர்தலில் கடுந்தோல்வியைச் சந்தித்த ஒரு கட்சி, அக்கட்சியின் தலைவரின் பிறந்த நாளை மய்யப்படுத்திக் கிளர்ந்து எழுந்திருக்கிறது என்பதற்கான அடையாளமாக இந்தப் பிறந்த நாள் விழா அமைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். இயல்பாக வேறு எங்கும் காண முடியாத அதிசயம்தான் இது.

வெறும் அரசியல் கட்சியாக மட்டுமே தி.மு.க. இருந்திருந்தால், அரசியல் லாபம் கிடைக்கும் கட்சிகளின் மடிகளில் போய் விழுந்திருப்பார்கள். காற்றடிக்கும் பக்கம் பறந்தே போயிருப்பார்கள்.

தி.மு.க.வில் ஏனிந்த நிலை ஏற்படவில்லை என்பதற்கு தி.மு.க.வின் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் மானமிகு க.அன்பழகனார் அவர்கள் அக்கூட்டத்தில் சொன்ன அந்தக் கருத்துத்தான் சரியானதாக இருக்க வேண்டும்.

வெறும் அரசியல் கட்சி என்பதையும் கடந்து சமுதாய கொள்கைகள் இதற்கு இருப்பதே காரணமாக இருக்க முடியும்; தானும், கலைஞர் அவர்களும் சிறு வயதிலேயே தந்தை பெரியார் அவர்களின் தன்மானக் கொள்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதால், அவற்றில் இந்த வயதிலும் உறுதியாக இருக்கிறோம்; அந்தத் தத்துவம் மேலும் தேவை என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று இனமானப் பேராசிரியர் அவர்கள் அழுத்தமாகத் தெரிவித்ததும், அதனை வழிமொழிகின்ற வகையில் கலைஞர் அவர்கள் மேலும் அழுத்தம் கொடுத்துப் பேசியதும் இராயப்பேட்டைக் கூட்டத்தின் தனி முத்திரையாகும். இலட்சக்கணக்கான அளவில் கூடிய அந்தக் கூட்டத் தில் இளைஞர்களுக்குப் பஞ்சமில்லை. இரு தலைவர் களும் எடுத்து வைத்த அந்தக் கருத்துகள், அந்த இளை ஞர்களைப் பெரிய அளவில் பாதித்திருக்கும் என்பதில் அய்யமில்லை.

தி.மு.க. நடத்தும் எந்தப் பொதுக்கூட்டத்திலும் இந்த அடிப்படை இலட்சியக் கோட்பாடுகள் எடுத்துச் சொல்ல சொல்லத்தான் தி.மு.க.வுக்கு அப்பாற்பட்ட தமிழின இளைஞர்களைப் பெரிதும் ஈர்க்கும்.

இன்றுள்ள சிக்கலோ இந்த அடிப்படை கருத்துகள் சமூகநீதித் தகவல்கள் இளைஞர்களிடத்தில் போதிய அளவில் போய்ச் சேரவில்லை என்பதுதான்.

சமூகநீதிச் சித்தாந்தத்தின் அடிநீரோட்டத்தை அவர்கள் தெரிந்திருந்தால், நீயா, நானா? நிகழ்ச்சிகளில், ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முதலில் ஒழியவேண்டும்? என்று பேசுவார்களா?

தமிழ் ஓவியா said...


தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க. ஆட்சி ஒரு சட்டம் கொண்டு வருகிறது; அந்த ஆட்சி தோற்கடிக்கப்படுகிறது; அந்தச் சட்டத்தை ரத்து செய்து மீண்டும் புராண மூடத்தனத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் வருஷங்களை அனுமதிக்கிறது அ.தி.மு.க. அரசு; இதுபற்றிய சரியான புரிதல் நம் இன மக்களுக்கு, இளைஞர்களுக்கு இருந்திருக்குமேயானால், எவ்வளவுப் பெரிய போராட்டம் வெடித்துக் கிளம்பி இருக்கவேண்டும்? பார்ப்பனீய சிந்தனையோடு ரத்து செய்த ஆட்சிக்கு வாக்குச் சீட்டுமூலம் பாடம் கற்பித் திருக்கவேண்டுமே! அது நடக்கவில்லை என்கிறபோது, திராவிடர் இயக்கத்தின் பகுத்தறிவு, இனமானக் கருத்துகள் இந்தப் புதிய வரவு வாக்காளர்களுக்குக் கொண்டு செல்லுவதுபற்றித்தானே சிந்திப்பது சரியாக இருக்க முடியும்!

தேர்தல் தோல்விக்கான காரணங்களில் இத்திசைக் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை.

இராயப்பேட்டைக் கூட்டத்தில் விழா நாயகர் கலைஞர் அவர்கள் நமது நாட்டு ஊடகங்கள்பற்றி எடுத்துச் சொன்ன கருத்துகள் முக்கியமானவை.

ஏடுகள் ஒரு சார்பு நிலையை ஏன் எடுக்கவேண்டும்? வெளிப்படுத்தவேண்டிய தகவல்களை ஏன் இருட்டடிக்கவேண்டும்? என்ற நியாயமான வினாவை ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில் கேட்கிறேன் என்று கலைஞர் கேட்டாரே - இதற்கு நேர்மையான பதில் அளிக்கும் அறிவு நாணயம் நம் நாட்டு ஊடகங் களில் கிடையாது என்பது வெட்கக்கேடே!

ஆட்சி அதிகாரத்திற்கு அஞ்சுவது, விளம்பர வருமானத்திற்குத் தாள் பணிவது என்று ஆகிவிட்டால், பத்திரிகைகளின் நோக்கம் என்பதே - அதன் ஆளுமை என்பதே அறவே அறுபட்டு விழுந்த பட்டமாகிவிட்டது என்றே பொருள்!

மூன்றாவதாக தி.மு.க. தலைவர் என்ற முறையில் கலைஞர் அவர்கள் எடுத்துச் சொன்ன கருத்து கட்சி அமைப்பு முறையில் மாற்றங்கள் வரும் - கூர்தீட்டப்படும் - புதுப் பொலிவோடு புதுப் புனலாகப் பொங்கி வரும் என்பதாகும்.

எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிப்பு, சீரமைப்பு, தேவைப்பட்டால் களை எடுப்பு என்பதெல்லாம் - வேளாண்மையில் கடைப்பிடிக்கும் யுக்தி போன்றவையே!

சுருக்கமாகச் சொன்னால், மக்களவைத் தேர்தல் தோல்வி என்பது தி.மு.க. தீரத்துடன் போர் வீரனாக முகிழ்த்து எழுவதற்குக் காரணமாகிவிட்டது என்று கருத இடம் இருக்கிறது.

இதற்குக் கட்சித் தலைவர் அவர்களின் பிறந்த நாள் அமைந்தது - வேறு எந்த கட்சியிலும் நினைத்துப் பார்க்க முடியாதே!
தொடரட்டும் நன்முயற்சிகள்!

Read more: http://www.viduthalai.in/page-2/81523.html#ixzz33imSMIHc

தமிழ் ஓவியா said...


சிறகு இருந்தும் பறக்க முடியாத பறவையைப்போல் எமது போராட்டமும் நிலைகொண்டு நிற்பது ஏன்?


ஈழத்தில் வாழும் எம் உறவுகளின் வாழ்வு, வளம், எதிர்காலம் எல்லாமே எமது இறுதிப் போராட்டமான அரசியல் போரில்தான் தங்கியிருக்கிறது. ஆனால். அய்ந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த எமது அரசியல் போரை அதன் அந்தத்திற்கு எடுத்துச் செல்ல வல்ல பலர் எம்மிடையே இருந்தும், தேவைக்கும் அதிகமான ஆதாரங்களை அந்த ஆண்டவன் எமக்குத் தந்திருந் தும், சிறகு இருந்தும் பறக்க முடியாத பறவையைப்போல், எமது போராட்டமும் நிலைகொண்டு நிற்பது ஏன்?

சிங்கள அரசின் அடிதடிகளுக்கு மத்தியிலே, காலிமுகாம் திடலிலே, காந்தி தேசமே பெருமைப்படும் விதத்தில் சத்தியாக்கிரகத்தை நடத்தி அறவழிப் போராட்டத்தின் மகிமையை எடுத்துக் காட்டினோம். வீரம் நிறைந்த செயல் களால், தீரம் செழிந்த பங்களிப்பால் போருக்கு அர்த்தத்தையும், போர் முனைக்கு இலக்கணத்தையும் கொடுத் தோம். ஆனால், ஆண்டுகள் பல சென்றும், எமது அரசியல் போர் செயலிழந்து நிற்பதற்கு யாரப்பா காரணம்?

இன அழிப்பை கொள்கையாகவும், மகாவம்சத்தை மார்க்கமாகவும் கொண்டு ஜனநாயகம் என்ற போர்வையிலே சர் வாதிகார ஆட்சி புரியும் சிங்கள அரசின் மத்தியிலே எமக்காகப் போராடும் தமிழர் கூட்டமைப்பின் தேவைகளை நாம்தானே நிவர்த்தி செய்யவேண்டும். இதனால் தானே, சிங்கள அரசின் கைகளில் தமிழீழம் இருக்கும் வரை அரசியல் போரை அங்கு நடத்துவது சாத்தியமற்றது என உணர்ந்த, தேசிய தலைவர் அதனை வாய்ப்பும், வசதியும் மிக்க புலம்பெயர் மக்களிடம் ஒப்படைத்தார். எமது அரசியல் போரை முன்னெ டுக்க, அதனை முன்னெடுக்கும் அணிக்கு சர்வதேச அங்கீகாரம் தேவை. இல்லை யேல், அவர்கள் ஆதரவை, பங்களிப்பை எப்படி எம்மால் பெறமுடியும்? அய்ந்து ஆண்டுகளாகியும், எந்த ஒரு புலம்பெயர் அணியாலும் அந்த அங்கீ காரத்தைப் பெற முடியாதது, சர்வதேசத் தில் இந்த அணிகளுக்குள்ள மதிப்பை யும், அதிலும் மேலாக இவர்கள் திறமை யையும் எமக்கு எடுத்துக் காட்ட வில்லையா? இந்த அங்கீகாரம்; பேரம்பேசி பெறும் உரிமையல்ல, தகுதி வாய்ந்த அணிக்கு சர்வதேசம் வழங்கும் சலுகை, சன்மானம்.

அய்ந்து ஆண்டுகளுக்கு முன், அந்த கொடிய நாள்களில், எம் உறவுகளுக்காக; கொட்டும் பனியிலும், ஒரு கையில் பிள்ளையும் மறுகையில் கொடியுமாக இலட்சக்கணக்கில் உலகெலாம் நாம் திரண்டெழுந்தபோது எமக்கு இருந்த, தேச மீட்புக்கான உணர்வும், எம் உறவுகள் மீது நாம் கொண்ட அன்பும், பாசமும் என்றும் மாறாது என்பது உண்மையா னால், வலிமைமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தை மய்யமாகக் கொண்டு, தேசிய தலைவரின் இலட்சியப் பாதை யில் பயணிக்கவல்ல ஓர் அணி, தகுதி வாய்ந்த உறவுகளால், மாற்றாரும் மதிக் கும் விதத்தில், உருவாக்கப்படவேண்டும்.

ஆண்டுக்கு ஓர் மாநாடும், ஒரு இராப் போசனமும் நடத்துவதை இலட்சியமாகக் கொண்டு, அய்.நா. மனித உரிமை சபை மாநாட்டிற்கு பார்வையாளர்கள் செல் வதை தேசமீட்பின் உச்க்கட்டமென ஜாலம் புரியும் இப்புலம் பெயர் அணிகள்; எமது போராட்டத்தின் திசையை மாற்றி சிங்கள அரசின் விருப்பைப் பூர்த்தி செய் வதை நிறுத்தி, திறமைக்கும் விசுவாசத் துக்கும் முதலிடம் கொடுக்கும் புனிதம் நிறைந்த புது அணியில் இணைவதே மேல். தமிழர் கூட்டணியை (TULF) ஆனந்த சங்கரி அபகரித்து தமிழரைத் தலைகுனிய வைக்க முயன்றபோது கலங்கிய தமிழி னம்; தமிழர் தேசிய கூட்டமைப்பை (TNA) உருவாக்கி வானில் வட்டமிடவில் லையா? அறவழிப்போராட்டத்தை வழிநடத்தி உள்நாட்டு மோதலை இலங்கை- இந்திய பிரச்சினையாக்கிய தந்தை செல்வாவின் சிறந்த தலைமை போல், ஆயுதப்போரை அதன் அந்ததுக்கு கொண்டு சென்று இலங்கை- இந்தியப் பிரச்சனையை சர்வதேச விவ காரமாக்கிய எம் காவியத்தின் நாயகன் தேசியத் த்லைவரைப் போல், எமது இறுதிப் போரை முன்னெடுத்து எம் தேசத்தை மீட்க வல்ல ஓர் திறமைமிக்க தலைமையும் எமக்கு வேண்டும்.

எம் இனத்தின் வெற்றியும் தோல்வி யும், எமது எதிரியான சிங்கள அரசின் கையிலல்ல, எம் உறவுகளான உங்கள் கைகளில்தான் தங்கியிருக்கிறது. அமைப்புகள், சங்கங்கள், தனியார் அழைக்க தொ.இ: கனடா 416 829 1362.

sivalingham@sympatico.ca

Read more: http://www.viduthalai.in/page-2/81524.html#ixzz33imrKoeW

தமிழ் ஓவியா said...


ஜெர்மனியில் தமிழர் தலைவர்: விமான நிலையத்தில் வரவேற்பு


ஜூன் 2ஆம் தேதி காலை சென்னை யில் புறப்பட்ட தமிழர் தலைவரும், பல்கலைக் கழக வேந்தருமான டாக்டர் கி. வீரமணி, துணைவேந்தர் பேராசிரியர் நல். இராமச்சந்திரன் ஆகிய இருவரும் ஓமான் விமானம் மூலம் மஸ்கட் வழியாக மாலை 6.30 மணிக்கு (ஜெர்மானிய நேரம்) பிராங்க்பர்ட் பன்னாட்டு விமான நிலை யத்திற்கு வந்தடைந்தனர்.

விமான நிலையத்தில் கொலோன் பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் யுல்ரித் நித்லஸ், (பேராசிரியர் மற்றும் தலைவர் தெற்காசிய, தென்கிழக்கு ஆசிய இந்தியயியல் மற்றும் தமிழ் உயராய்வு நிறுவனம்) மற்றும் இத்துறையில் பணி யாற்றும் சுவன் ஓர்ட்மான் ஆகிய இருவரும் வந்து வரவேற்று தங்கள் வருகை வருங்காலத்தில் பல நல்ல பணிகளை ஆற்றுவதற்கு ஏதுவாக அமையுமெனக் கூறி மகிழ்ந்தனர்.

பின்னர் பிராங்பர்ட்டிலிருந்து 250 கி.மீ. தொலைவில் இருக்கும் கொலோன் நகருக்கு ஜெர்மானியில் இயங்கும் அதி வேக ரயில் மூலம் (அய்ம்பது நிமிடங்களில்) அழைத்துச் செல்லப்பட்டார்கள். மேலும் இந்த நிகழ்வு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் கொலோன் பல்கலைக் கழகமும் 2012ல் ஏற்படுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும்.

பின்னர் கொலோனில் உள்ள இபிஸ் என்ற (Hotel IBIS) தங்கும் விடுதியில் தங்கி மற்ற பணிகளை தொடர்ந்து வருகிறார்கள்.

- என்னார்சி

Read more: http://viduthalai.in/e-paper/81573.html#ixzz33ojMKRzA

தமிழ் ஓவியா said...


23 வயது முசுலீம் பட்டதாரி அடித்து கொல்லப்பட்ட கொடுமை! மோடி ராஜ்ஜியத்தில் முதல் விக்கெட் என்று குறுஞ்செய்தி


பூனாவில் மதவெறி வன்முறையாட்டங்களில் முதற்பலி

23 வயது முசுலீம் பட்டதாரி அடித்து கொல்லப்பட்ட கொடுமை!

மோடி ராஜ்ஜியத்தில் முதல் விக்கெட் என்று குறுஞ்செய்தி

பூனா, ஜுன் 5- மோடி ராஜ்யத்தில் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டதாக பஹிலி விக்கெட் பட்லி என்னும் குறுஞ்செய்தியை ஹிந்துத் துவாவாதிகள் அப்படித் தான் குறுஞ்செய்திகளை அனுப்பி கொண்டாடி வருகின்றனர். மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி, சிவசேனை கட்சியின் நிறுவனத் தலை வர் பால் தாக்கரே ஆகி யோரின் இயல்புக்கு மாறாக சித்தரிக்கப்பட்ட படத்தை முகநூலில் தக வல் தொழில்நுட்ப பட்ட தாரி வாலிபரான 23 வய துள்ள மொஹ்சின் சாதிக் ஷேக் என்பவர் பதிவு செய்ததாக (எந்தவித ஆதா ரமும் இல்லை) குற்றம் சுமத்தப்பட்டார்.

அதைத் தொடர்ந்து ஹிந்துத்துவா மத வெறியர்களால் பூனா வின் பல்வேறு பகுதி களிலும் வன்முறை வெறி யாட்டங்கள் அரங்கேற்றப் பட்டன. இந்த வன்முறை வெறியாட்டங்களில் சிவ சேனைக்கட்சி, பாஜக, ஹிந்து ராஷ்டிர சேனா உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் ஈடுபட்டனர். தர்மவீர் சிதை சாம்பாஜி மகராஜ் என்ற பெயரில் தான் பதிவு செய்யப் பட்டுள்ளது (31.5.2014).

வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு ஷேக் உயிரி ழந்ததை அடுத்து, முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டது என்கிற குறுஞ்செய்தியை இந்துத்துவாவாதிகள் 25பேர் முதலில் அலை பேசிகள்மூலமாக பரப்பி உள்ளனர் என்று பூனாவின் காவல்துறை இணை ஆணையர் சஞ்சய்குமார் கூறுகிறார்.

குறுந்தாடியுடன் பச்சை நிற பதானி குர்தா அணிந்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த ஷேக்கை வழிமறித்து பூனா வுக்கு வெளியே ஹடாப்சர் பகுதியில் இருசக்கர வண் டியிலிருந்து கீழே தள்ளி விட்டு ஹாக்கி விளை யாட்டுத் தடியால் ஷேக்கின் தலையில் சரமாரியாகத் தாக்கிவிட்டு, அவர்மீது கல் எறிந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பதற்றமான அந்த பகுதியில் 12 மணி நேரத்துக் கும் மேலாக காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஷேக் உடனிருந்த உறவி னர் ஒருவர் காயமின்றி தப்பியோடி மேலும் இருவரை அழைத்து வந்து ஷேக்கைக் காப்பாற்ற முயன்றுள்ளார். காப்பாற்ற வந்த அமீன் ஷேக்(30), இஜாஸ் யூசூப் பக்வான்(25) ஆகிய அவர்களும் தாக் கப்பட்டு காயமடைந்தனர்.

சிவாஜியின் சிலை சேதமானதாக ஏற்பட்ட வதந்தியை அடுத்து, ஹிந்து பெண் முசுலீம் ஒருவரால் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும் வதந்தி பரவியதைத் தொடர்ந்து வன்முறைக் கும்பல் ஒன்று சேர்ந்து பதற்றமான சூழ் நிலை ஏற்பட்டது. கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில், கைது செய்யப்பட்ட 13 பேரில் ஏழுபேர் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வர்களில் ஹிந்து ராஷ்டிர சேனாவின் தலைவரான தனஞ்செய் தேசாய்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. தாக் கியவர்களின் இரு சக்கர வண்டிகளை காவல்துறை யினர் பறிமுதல் செய்துள் ளனர். வண்டிகளின் ஆவ ணங்களின்படி மற்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ள னர். பூனா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அனைவரை யும் ஜுன் 9ஆம் தேதிவரை காவலில் அடைக்க உத்தர வானது. கடந்த பத்து ஆண்டு களுக்கும் மேலாக பூனா வைச்சுற்றி உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் ராஷ்டிர சேனாவின் தலை வரான தேசாய்மீது பல் வேறு கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன.

கல வரங்களில், வன்முறையில் ஈடுபட்டு பணம்பறிப்பது உள்ளிட்ட பல்வேறு குற் றங்களின் பின்னணியைக் கொண்டுள்ளவர் ராஷ்டிர சேனாவின் தலைவரான தேசாய் ஆவார்.

குறிப்பு: சமூகக் கல வரம் நடைபெற வேண் டும் என்ற தீய நோக்கத் தோடுதான் இந்த முகநூல் பதிவு நடந்துள்ளதுஎன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறி யுள்ளது குறிப்பிடத்தக்க தாகும். (கலவரம் பற்றிய விரிவான தகவல்கள் 2ஆம் பக்கத்தில் காண்க).

Read more: http://viduthalai.in/e-paper/81570.html#ixzz33ojZnChy

தமிழ் ஓவியா said...


முயல வேண்டும்



தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க் கையின் இலட்சியமாகக்கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயல வேண்டும்.
_ (விடுதலை, 20.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/81581.html#ixzz33ok3R1tI

தமிழ் ஓவியா said...


அன்றைய கீதாச்சாரம் தான்; இன்றைய மோடிச்சாரம்


- குடந்தை கருணா

முக நூலில் மராட்டிய மன்னன் சிவாஜி, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே குறித்து கேலி செய்து சித்திரங்கள் வெளிவந்ததை எதிர்த்து, புனேயில், சிவசேனா மற்றும் ஹிந்து ராஷ்டிர சேனா என்கிற அமைப்பும் வன்முறையில் ஈடுபட்டனர். சாலை யில் கல் எறிந்து கலவரம் செய்ததில் 250 பேருந்துகள் நொறுக்கப்பட்டன; மூன்று காவலர்கள் படுகாயம் அடைந்தனர். காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த முகநூல் செய்தியை வெளியிட்டது யார் என ஆரம்பத்தில் தெரியாத நிலையில், குறிப்பிட்ட சிறுபான்மை மக்கள் தான் என திட்டமிட்டு, மென் பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர், ஹிந்து ராஷ்டிரா சேனா எனும் வன்முறைக் கும்பலால் தாக் கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்.

சமூகக் கலவரம் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இந்த முக நூல் பதிவே நடந்துள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை கருத்து கூறி உள்ளது. இந்த முகநூல் 2013-இல் துவக்கப் பட்டுள்ளது.

பொய்யான முகவரியை உருவாக்கி, ஆரம்பத்தில், பொது வான செய்திகளை வெளியிட்டு, பலரையும் விருப்பம் உடையவர் களாக ஆக்கி, இறுதியாக, இந்த பதிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதே போன்றுதான், உத்தரபிரதே சத்தில், பொதுத்தேர்தல் நடைபெறு வதற்கு சில மாதங்களுக்கு முன், முசாபர்நகர் கலவரம் உருவாக்கப் பட்டது; போலியான வீடியோ தயாரிக்கப்பட்டு, அதில் இரு சிறு வர்களை, ஒரு வன்முறைக் கும்பல் அடிப்பது போன்று தயாரித்து, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்கள்; கலவரம் உரு வாயிற்று. உண்மை என்னவென்றால் அந்த வீடியோ காட்சிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆப்கானிஸ் தானில் நடைபெற்ற ஒரு கலவரத்தின் வீடியோ என பின்னர் தெரிந்தது. ஆனால், அதற்குள், கலவரம் நடை பெற்று, சிறுபான்மையினர், வீட்டை துறந்து, முகாம்களில் தங்கினர்; வாக்கு அறுவடையை யார் பெற் றனர் என அனைவருக்கும் தெரியும்.

அஸ்ஸாமிலும், மியான்மரிலும், இஸ்லாமியர்கள் மீதான தாக் குதலைக் கண்டித்து மும்பை ஆசாத் மைதானத்தில், ஆகஸ்டு, 2012-இல் நடத்தப்பட்ட பேரணி, கலவரமாக மாறியது. இருவர் இறந்தனர். இதன் காரணமாக, தாங்கள் தாக்கப்படு வோம் என பயந்து, தென்னிந்தியா வில், குறிப்பாக, கர்நாடகாவில் வேலை பார்த்து வந்த வட கிழக்கு மாநில மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து, ஆயிரக்கணக்கில் அஸ்ஸா மிற்கும், பிற பகுதிக்கும் சென்றனர். தற்போது, பொதுத் தேர்தலில், முதல் முறையாக பாஜக, அஸ்ஸாமில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற் றுள்ளனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள், மகாராஷ்டிரா மாநிலத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேலைகளை, சங் பரிவார் தொடங்கிவிட்டது. இதன் பாதிப்பு, அடுத்து, பீகார், ஜம்மு காஷ்மீர் என தேர்தல் வரக்கூடிய மாநிலங்களுக் கும் செல்லும் என்பது உறுதி.

அன்றைய கீதாச்சாரம் தான்; இன்றைய மோடிச்சாரம்.

எது திட்டமிட்டு நடந்ததோ, அது நன்றாகவே திட்டமிட்டு நடந்தது.

எது திட்டமிடப்பட்டு நடக்கி றதோ, அது நன்றாகவே, திட்ட மிடப்பட்டு நடக்கிறது.

எது திட்டமிடப்பட்டு நடக்க இருக்கிறதோ, அதுவும், திட்டமிடப் பட்டு நன்றாகவே நடக்கும் - எச்சரிக்கை.

Read more: http://viduthalai.in/page-2/81592.html#ixzz33okBUdAw

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் உண்மை முகம்!

மத்தியில் பி.ஜே.பி. ஆட்சியில் அமர்ந்து விட்டது என்றாலும், அதன் சிந்தனைகள் - செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமையவில்லை.

குறிப்பாக, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகளும், செயல் முறைகளும் அப்படியே நகல் எடுக்கப்பட்டது போலத்தான் உள்ளன என்கிற ஒரு கருத்து, இவ்வளவு சீக்கிரத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கவில்லை. நரேந்திரமோடி பிரதமராகப் பதவியேற்ற நிகழ்விலிருந்தே அது தொடங்கி விட்டது. வெளி நாட்டுப் பிரதமர்களை அதிபர்களைத் தம் பதவியேற்பு விழாவுக்கு அழைத்ததுகூட பழைய காலத்து மன்னர்களின் மனப்பான்மை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் சார்க் நாடுகளுக்கு அழைப்பு என்ற பேரில், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை அழைத்தது - பலரும் எதிர்பாராதது!

பி..ஜே.பி.யை ஆதரித்தவர்களேகூட, மோடிதான் அடுத்த பிரதமர் என்று தேர்தல் பிரச்சார மேடைகளில் அனல் கக்கியவர்கள்கூட பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டார்கள்.

வெளிநாட்டுக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை இவைகளில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடு கிடையாது என்று பல நேரங்களிலும் சொல்லப்பட்டு வந்தது உண்மை என்றாகி விட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை அயல் உறவுத் துறைகளில் ஆக்ரமித்துக் கொண்டுள்ள பார்ப்பனர் களும், மலையாளிகளும் ஈழத் தமிழர்ப்பிரச்சினையில் சிங்களவர்களுக்கு அண்ணன்மார்களாகத்தான் நடந்து கொண்டு வருகிறார்கள் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டே வந்திருக்கிறது.

அண்டை நாடுகளுடன் உறவு என்ற தேன் தடவப்பட்ட சொற்கள் கேட்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் இலங்கையைப் பொறுத்த மட்டில், இந்தியா எப்படித் தான் நெளிவு சுளிவுகளுடன் நடந்து கொண்டாலும் அல்லது அவர்கள் மொழியில் நளினமாக நடந்து கொண்டாலும் சரி, இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு எந்த வகையிலும் இணக்கமாக இருந்ததில்லை.

உலகின் வல்லரசு ஆகத் துடிக்கும் 125 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவை சுண்டைக்காய் இலங்கை இளக்காரமாகத்தான் பார்க்கிறது.

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை ஒரு தரப்பாக முறித்துக் கொண்டதே - இதுதான் இந்தியாவை இலங்கை மதிக்கும் இலட்சணமா?

இந்தியாவுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியை இலங்கை நிறைவேற்றியுள்ளது? விரல் விட்டு சொல்லட்டுமே பார்க்கலாம்.

மனித உரிமைக் கவுன்சிலின் முன் போர்க் குற்றவாளியாக நிற்கும் ரத்த வெறி கொண்ட ஓநாயை மோடியின் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தது - மனித உரிமையின் மீதோ, மனிதநேயத்தின் மீதோ அக்கறை உள்ளவர்கள் செய்யக் கூடிய காரியமல்ல.

காங்கிரசின்மீது அதிருப்தி இருந்தாலும்கூட மன்மோகன்சிங் பதவியேற்ற தருணத்தில்கூட ராஜபக்சே அழைக்கப்படவில்லையே!

அது ஒரு பக்கம் இருக்கட்டும்; ராஜபக்சே டில்லி வந்து சென்ற சில நாள்களிலேயே தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகிறார்கள் - சிறைபிடிக்கப்படுகிறார்கள் என்றால் இதுதான் ராஜபக்சே மோடிக்குக் காட்டும் முதல் மரியாதையா!?

மோடி வந்தால் புது அத்தியாயம் பூக்கும் என்று முண்டா தட்டியவர்களின் முகமெல்லாம் இப்பொழுது கறுத்துப் போய் விட்டதே!

இது ஒரு பக்கம் என்றால், பொருளாதாரக் கண்ணோட்டத்தில் என்ன வாழ்கிறது? இந்தியப் பாதுகாப்புத் துறையிலும் அந்நிய முதலீடு என்ற அபாய அறிவிப்பு வந்துள்ளது. முந்தைய அரசு பாக்கி வைத்து விட்டு சென்ற துறைகளை எல்லாம் இந்த அரசு பூர்த்தி செய்யத் தொடங்கி விட்டதோ!

பாதுகாப்புத்துறை என்பது எவ்வளவு முக்கிய மானது! இரகசிய கொள்கைகளும், திட்டங்களும் கொண்டது. கப்பலில் ஓட்டை விட்டுக் கொண்டு பயணம் செய்வது போல இத்துறையிலும் அந்நிய முதலீடு என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

முந்தைய பி.ஜே.பி. ஆட்சியில் பொதுத்துறையை விற்பதற்கென்றே ஒரு தனித்துறை உருவாக்கப்பட்டது (Disinvestment Dept) அருண்ஷோரி தான் அதற்கு அமைச்சராகவும் இருந்தார்.

அதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இந்த வகையில் முந்தைய அரசை முந்திக் கொண்டு ஓடி முதல் பரிசைத் தட்டிச் செல்லும் என்பதில் அய்யமில்லை.

வெகு சீக்கிரத்தில் பிஜேபி தன் முழு முகத்தைக் காட்டத் தொடங்கி விடும். (இலகான் ஆர்.எஸ்.எஸிடம் தானே உள்ளது) நாடு இதைப் பார்க்கத்தானே போகிறது!

Read more: http://viduthalai.in/page-2/81583.html#ixzz33okLAU41

தமிழ் ஓவியா said...


செவ்வாய் கோளில் இமயமலையை விட 2 மடங்கு பெரிய எரிமலை


செவ்வாய் கோளில் ஏராளமான எரிமலைகள் இருப்பது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரிய எரிமலை ஒன்று செவ்வாய் கோளின் வடபகுதியில் இருப்பதை அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த எரிமலை இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை விட 2 மடங்கு பெரிதானது என்று அவர்கள் கூறியுள்ளனர். நமது சூரிய குடும்பத்திலேயே இதுதான் பெரிய எரிமலையாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மலை இருக்கும் பகுதியை சுற்றி முழுவதும் எரிமலை சாம்பல் குழம்புகள் நிரம்பி இருக்கின்றன.

Read more: http://viduthalai.in/page-7/81590.html#ixzz33oldWFnr

தமிழ் ஓவியா said...


கோவில் - பக்திச் சமாச்சாரங்கள் கத்திக்குத்து - சாலை விபத்து - உயிரிழப்பு... இத்தியாதி... இத்தியாதி...


சென்னை, ஜூன் 5- மூட நம்பிக்கை நிகழ்வுகளால் ஏற்படும் உயிரிழப்புகளும், பொருட்சேதமும், தகராறும் அன்றாடம் நடைபெறும் வழக்கமாகி விட்டது. அவற்றை தொகுத்து இங்கே கொடுக்கப் பட்டிருக்கிறது.

கோவில் விழாவில் தகராறு 4 பேருக்கு கத்திகுத்து 3 பேர் கைது

வாடிப்பட்டி அருகே கோவில் விழாவில் சாமி பெட்டி எடுத்து வருவதில் நடைபெற்ற தகராறில் 4 பேருக்கு கத்தி குத்து விழுந்தது. இதன் காரணமாக காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது ஆண்டிபட்டி. இங்கு சடையாண்டி, காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதில் சாமி பெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதில் சடையாண்டி கோவில் தெரு வைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 50) என்பவர் வீட்டில் இருந்து சாமி பெட்டி கொண்டு வருவது வழக்கமாம்.

இந்த ஆண்டும் அவரது வீட்டில் இருந் சாமி பெட்டியை எடுத்து வந்தனராம். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் நீ சாமி பெட்டியை எடுத்து கொண்டு வந்து கொடுத்ததோடு விட்டுவிடு, நாங்கள் தான் சாமிபெட்டியை தூக்கி செல்வோம் என்று கூறினாராம்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முத்துகிருஷ்ணன் அவரோடு வந்த முத்துமனோகரன், பாலமுருகன், முத்துராஜா, அழகர், முத்துகுமார் மற்றும் அடையாளம் தெரிந்த 4 பேர்களும் சேர்ந்து தகராறில் ஈடுபட்டனராம்.

அந்த மோதலில் ராஜேந்திரன் அவரது உறவினர் களான முத்துகண்ணன், பிரபாகரன், கோபி ஆகியோரை முத்துக்கிருஷ்ணன் தரப்பினர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனராம்.

இதில் ராஜேந்திரனுக்கு கையி லும், முத்துகண்ணனுக்கு வயிற்றிலும், பிரபாகரனுக்கு மார்பிலும், கோபி என்பவருக்கு வலது மார்பு மற்றும் இடுப்பு பகுதியிலும் கத்திகுத்து காயம் விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் மதுரை பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணன், முத்துராஜா, அழகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-8/81580.html#ixzz33olqoGJ6

தமிழ் ஓவியா said...

சின்ன சேலம் வீரபத்ரசாமி கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனாம்



சின்னசேலம் வீரபத்ரசாமி கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினராம்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் குரும்பர் தெருவில் குரும்பர் இனத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீரபத்ரசாமியை குல தெய்வமாக வணங்கி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊரணி பொங்கல் விழா கொண்டாடுவார்கள்.

அப்போது, அவர்கள் தலையில் கோவில் பூசாரி தேங்காய் உடைத்து வீரபத்ரசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமாம்
அதன்படி நேற்று வீரபத்ரசாமிக்கு ஊரணி பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி, வீரபத்ரசாமியை மலர்களால் அலங் கரித்து சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றதாம்.

அதைத்தொடர்ந்து, தோட்டப்பாடி காட்டுப்பகுதியி லிருந்து இன்னிசை மேள தாளங்கள் முழங்க சக்தி அழைப்பு நிகழ்ச்சி கோவில் வளாகத்தை வந்த டைந்தது. பின்னர், தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்த 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் வரிசையாக அமர்ந்தனர். அப்போது கோவில் பூசாரி, பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்து அவர்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி னாராம்.

Read more: http://viduthalai.in/page-8/81580.html#ixzz33om5uziw

தமிழ் ஓவியா said...

இன்றைய நம் கேள்வி???

இன்று உலகு சுற்றுச் சூழல் நாள். (ஜூன் 5). அரசால் தடை விதிக்கப் பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள் உட்பட பகிரங் கமாக விற்பனையாகிக் கொண்டு இருக்கிறதே இது எப்படி!?

Read more: http://viduthalai.in/e-paper/81577.html#ixzz33omTQ43t