Search This Blog

19.6.14

தேர்தல் வெற்றி தோல்வி கலைஞரிடம் பாதிப்பை ஏற்படுத்தாது அவர் மானமிகு சுயமரியாதைக்காரர்!




தேர்தல் வெற்றி தோல்வி கலைஞரிடம் பாதிப்பை ஏற்படுத்தாது
அவர் மானமிகு சுயமரியாதைக்காரர்!
தண்டையார்ப்பேட்டையில் தமிழர் தலைவர் முழக்கம்


- நமது சிறப்புச் செய்தியாளர்
கி.வீரமணி
சென்னை, ஜூன் 19- முத்தமிழ் அறிஞர் கலைஞர் மானமிகு சுயமரியாதைக்காரர், வெறும் தேர்தல் வெற்றி - தோல்வி அவரைப் பாதிக்காது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா இவ்வாண்டு வெகு எழுச்சியோடு நடைபெற்று வருகிறது.

91 ஆம் ஆண்டில் கலைஞர்

91 ஆம் ஆண்டில் ஜூன் 3 இல் அடியெடுத்து வைத் தார். நடைபெற்ற 16 ஆவது மக்களவைத் தேர்தல் தி.மு.க. வுக்கு அதிர்ச்சி தரத்தக்க தோல்வியாக அமைந்த நிலையில், தலைவரின் பிறந்த நாள் அதனைத் தூக்கி நிறுத்திய அதிசயம் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது.

வேறு ஒரு கட்சியாக இருந்தால், அது துவண்டு போயி ருக்கும். தி.மு.க.வுக்கு உள்ள அடிக்கட்டுமானமும், தொண் டர்களின் பலமும், அரசியல் கட்சியாக இருந்தாலும் அதற் கென்றுள்ள சமுதாயக் கொள்கையும், சமூகநீதித் தத்துவ மும்தான் தோல்விகளைத் துச்சமாகத் தூக்கி எறியச் செய்திருக்கிறது. வடசென்னையில் சேணியம்மன் கோவில் தெருவில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி.கே.சேகர் பாபு அவர்களால் முன்னின்று நடத்தப்பட்ட கட்சித் தலை வரின் விழா உண்மையிலேயே வித்தியாசமாக அமைந்தது.

ஆக்கப்பூர்வமான விழா!

ஆர்ப்பாட்டம், வாணவேடிக்கை, மின் அலங்காரம், மிகப்பெரிய சுவரொட்டிகள் இவைதான் விழாவுக்கான அடையாளம் என்ற மனப்பான்மையை மாற்றிக் காட்டி விட்டது இவ்விழா.

391 பெண்களுக்கு இலவசப் பயிற்சி

391 பெண்களுக்குத் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கும் தொடக்க விழாவாக, இது அமைந்திருந்தது தனித்தன்மையானதாகும்.
தையல் பயிற்சி, அழகு கலைப் பயிற்சி, கணினிப் பயிற்சி என்ற மூன்று முத்தான பயிற்சிகள் 391 பெண்களுக்கு இல வசமாக அளிக்கும் ஏற்பாடு என்றால், என்ன சாதாரணமா?

ஒரு நாள் வாணவேடிக்கையுடன் முடிந்துவிடாமல் ஆறு மாதப் பயிற்சிக்குப்பின் தன் கையில் ஒரு தொழில் இருக்கிறது என்ற பக்கபலத்துடன் பெண்கள் தலைநிமிர்ந்து நடந்து செல்லும் ஒரு தைரியத்தையூட்டும் நிகழ்ச்சி என்றால், மிகையாகாது.

நாட்கள் 10; நிகழ்ச்சிகள் 16

கலைஞர் அவர்களின் பிறந்த நாள் 10 நாள்கள் - அதில் 16 தொடர் நிகழ்ச்சிகள் வடசென்னையில் என்றாலும், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் கருப்பொருளும், உள் ளடக்கமும் உன்னதமானது -  தொலைநோக்குச் சிந்தனை யானதாகும்!

391 பெண்களுக்குத் தொழில் முனைவோர் இலவசப் பயிற்சியினைத் தொடங்கி வைக்க திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களை ஏன் அழைத்தார் கள்? என்பதற்கான காரணத்தை மாசில்லா மா.சுப்பிரமணி யம் என்று அன்போடு அழைக்கப்படுபவரும், சென்னை மாநகர மதிப்புறு முன்னாள் மேயரும், தி.மு.க. இளைஞரணியின் மாநிலத் துணைச் செயலாளருமான மானமிகு மா.சுப்பிர மணியம் அவர்கள் மிக அழகாகக் குறிப்பிட்டார்.

தந்தை பெரியார் அவர்களின் கொள்கை என்று வரும்பொழுது அதில் பெண்ணுரிமைக்கு முன்னுரிமை உண்டல்லவா! அதனால்தான் அந்தத் தாய்க் கழகத்தின் தலைவரை அழைத்திருக்கிறோம் என்று பொருத்தமாகச் சொன்னார். இந்த விழாவில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கைதான் பெரிய அளவில் இருந்தது.

அதனையே முன்னிறுத்தி திராவிடர் கழகத் தலைவர் தன் உரையை தொடங்கினார்.

கண்ணுக்கு எட்டியவரை பெண்களாகக் காட்சி அளிக் கிறீர்கள். நாற்காலிகளை எல்லாம் பெண்களாகிய நீங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டீர்கள்.

பெரியாரின் சாதனையல்லவா!

இங்கே ஆண்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள். பெண்கள் நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு இருக் கிறீர்கள். பெண்கள் வர வர ஏற்கெனவே நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஆண்கள் எழுந்திருந்து பெண்களுக்கு நாற்காலிகளை விட்டுக் கொடுத்து நிற்கிறார்கள்!

ஒரு அய்ம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன் இதனை நினைத்துப் பார்க்க முடியுமா? ஆண்கள் எதிரில் பெண்கள் உட்கார்ந்திட முடியுமா?
இன்றைக்கு இந்த மாற்றம் வந்தது எப்படி? அதற்குக் காரணம் யார்? பாடுபட்டவர்கள் யார்? என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும் அல்லவா இந்த மாற்றத்திற்குக் காரணம்!

1929 செங்கற்பட்டு மாநாட்டுத் தீர்மானம்

1929 ஆம் ஆண்டிலேயே செங்கற்பட்டில் நடைபெற்ற சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை தேவை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்குமுன் அப்படி ஒரு குரல் யாராவது கொடுத்தார்கள் என்று சொல்ல முடியுமா?

1929 இல் தந்தை பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார் என்றால், அவர் சீடர் கலைஞர் முதலமைச்சராக வந்து 1989 இல் பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்றினார் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர்,
(இந்த இடத்திலே நினைவூட்டத்தக்கது. 1989 மே 6 இல் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிய சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தபோது, செங்கற்பட்டு மாநாட்டைப்பற்றியும், அதில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தையும் விளக்கிக் கூறியதோடு, மறக்காமல் நன்றி உணர்வின் வெளிப்பாடாக முதலமைச்சர் கலைஞர் என்ன சொன்னார் தெரியுமா?
இந்தச் சட்டம் நிறைவேறுகிற இந்த நேரத்தில், இதற்கு அடிகோலிய பழம்பெரும் தலைவர்கள் அத்தனைப் பேருக்கும் இந்தத் தீர்மானங்கள் செங்கற்பட்டு சுயமரி யாதை மாநாட்டிலே அன்றைக்கு முன்மொழிந்த சபாபதி முதலியார், இன்று இல்லை என்றாலுங்கூட, அவர்களு டைய திக்கு நோக்கி, தெண்டனிட்டு, வணக்கம் தெரிவித்து, அந்தச் சுயமரியாதை மாநாட்டுக்கு அடிகோலிய தந்தை பெரியார் அவர்கள் வாழ்க! அவருடைய வழித் தோன்றல் பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்க, வாழ்க! என்றுகூறி, இந்தச் சட்டத்தை நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்றாரே, அது என்ன சாதாரணமா?)


கலைஞரின் நகைச்சுவை
 
கலைஞர் அவர்களிடம் இயல்பாகவே அமைந்துள்ளது நகைச்சுவையாகும். எந்த நிலையிலும் அந்த உணர்வை அவர் வெளிப்படுத்தக் கூடியவர்.

மருத்துவமனையில் முதுகுத் தண்டுவடத்தில் மிகப்பெரிய அறுவைச் சிகிச்சை நடந்தது. மயக்கம் தெளியவில்லை. கலைஞரைக் கவனித்துக் கொள்ள மூத்த செவிலியரை ஏற்பாடு செய்திருந்தார்கள். 

கலைஞர் மயக்கம் தெளிந்து, கண் விழித்தவுடன், தாக உணர்வு அதிகமாக இருக்கும் இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு. அந்த நிலை ஏற்படும். அப்பொழுது அதிகமாக தண்ணீரைக் கொடுத்துவிடக் கூடாது என்று அறிவுரை கூறியிருந்தனர் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்.

அதுபோலவே, மயக்கம் தெளிந்து, கண் விழித்தபோது கலைஞர் அவர்கள் செவிலியரை அழைத்துத் தண்ணீர் கேட்டுள்ளார். அந்தச் செவிலியர் என்ன செய்தார்? தண்ணீரில் பஞ்சை நனைத்து, நாக்கில் தடவியுள்ளார். மறுபடியும் தண்ணீர் கேட்டபோது முன்பு செய்ததுபோலவே செய்திருக்கிறார் அந்தச் செவிலியர். அந்த நிலையிலும் கலைஞர் அந்தச் செவிலியரைப் பார்த்து, ஏனம்மா - உன் பெயர் காவேரியா? என்று கேட்டு இருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை. என் பெயர் காவிரி இல்லை அய்யா என்று சொல்லியிருக்கிறார்.

கடுமையான அறுவை சிகிச்சை நடந்த நிலையிலும்கூட அவரிடம் உள்ள அந்த நகைச்சுவை உணர்ச்சி அதுவும் நாட்டு நலனோடு கலந்த நகைச்சுவை குன்றிடவில்லை. நகைச்சுவை உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம்; கலைஞர் அவர்கள் 91 வயது என்றாலும், அதனைத் திருப்பிப் போட்டால் 19 - என்கிற அளவுக்குத் துடிப்போடு இருப்பதற்கான காரணங்களுள் ஒன்று அந்த நகைச்சவை உணர்வாகும்.

- கலைஞர் விழாவில், திராவிடர் கழகத் தலைவர், 18.6.2014


மேலும் கழகத் தலைவர் குறிப்பிட்டதாவது:

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்குப் பிறகுதான் நாடாளுமன்றத்தில் கூட பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பதுதான் உண்மை வரலாறு!

சொந்தக்காலில் நிற்கவேண்டும் பெண்கள்

ஒரு வீட்டில் நான்கு குழந்தைகள் இருந்தால், முதலில் பெண் குழந்தையைப் படிக்க வையுங்கள் என்றார் பெரியார். பெண்கள் சொந்தக்காலில் நிற்கவேண்டும் - வருவாய் ஈட்டவேண்டும் என்று சொன்னவரும் பெரியாரே!
இன்றைக்கு நமது சேகர் பாபு அவர்கள் பெண்களுக் காக ஏற்பாடு செய்துள்ள தொழில் முனைவோர் பயிற்சி என்பது தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்கு உகந்த ஒன்றே!

பெண்மையைப் போற்றுவோம் - பேதமை நீக்குவோம்! என்று அழைப்பிதழிலே கருத்துச் செறிவான வாசகத்தை அச்சிட்டுள்ளனர்.

பேதமில்லாப் பெருவாழ்வு என்றார் தந்தை பெரியார்; இந்து வருணாசிரமத் தன்மைப்படி நம் நாட்டுப் பெண்கள் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர், பஞ்சமர்களுக்கும்கீழ் நிறுத்தப்பட்டவர்கள்தான் நம் நாட்டுப் பெண்கள்.
அப்படி உரிமை மறுக்கப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட மக்களைத் தூக்கி நிறுத்துவதும், உரிமையைப் பெற்றுத் தருவதும்தான் சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகம்.

அந்த இயக்கத்தின் வழிவந்தவர்களாகிய நாம் பிறந்த நாள் விழா கொண்டாடிக் கொண்டு இருக்கிறோமே முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு!
ஒரு வார இதழ் கலைஞரைப் பேட்டி கண்டது.

உங்களைப் பற்றி நீங்கள் ஒரு வரியில் சுய விமர்சனம் செய்யுங்களேன் என்பது கேள்வி.

கலைஞர் அவர்களின் பதில் என்ன தெரியுமா?

பொத்தானைத் தட்டினால் கணினியிலிருந்து வெளிவருவது போன்ற பதில் அது.

மானமிகு சுயமரியாதைக்காரன்! என்பதுதான் அந்தப் பதில். இந்த ஒரே வரியில்தான் முழுக் கலைஞரும் ஒளிர்கிறார்.

இந்த நிலையுடைய கலைஞரை வெறும் தேர்தல் தோல்வி பாதிப்பை ஏற்படுத்த முடியுமா? என்ற வினாவை எழுப்பினார்.

(கலைஞர் அவர்களே, பின்வருமாறு கூறுகிறார்:

நாம் எதிர்பார்க்கின்ற தேர்தல் சிம்மாசனத்தில் அமர்வதல்ல. இவைகளையெல்லாம் விடப் பெரியது சமுதாயத்தை எழுச்சியுள்ளதாக ஆக்குவது. தமிழன் தமிழனாக வாழ்கிறான் என்ற நிலையை அவனிக்கு எடுத்துக்காட்டுவதுதான் நாம் வெற்றி பெறவேண்டிய தேர்தல் என்பதை மறந்துவிடாமல்,  நீங்கள் பணியாற்றவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் - என்று 2.6.2008 இல் சென்னையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது - திராவிடர் கழகத் தலைவர் கூறிய கருத்தினை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வது பொருத்தமானது).

மேலும் திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக்காட்டியது,

கலைஞருக்குப் பிறந்த நாள் விழா என்பது அவருக்குப் புதிதாகப் பெருமை சேர்ப்பதற்காக அல்ல.

இத்தகு விழாமூலம் அவர் கடைப்பிடித்துவரும் கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல - நம் மக்கள் - நம் இளைஞர்கள் எழுச்சி பெறுவதற்காகவே தான்.

பதவிக்கும் - தொண்டுக்கும் சம்பந்தம் கிடையாது

பதவியில் இருந்தால்தான் தொண்டு செய்ய முடியும் என்று கருதத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால், நாம் நினைக்கிற - விரும்புகிற தொண்டினைச் செய்ய சில நேரங்களில் பதவிகள் தான் தடையாகக் கூட இருக்கும்.

இங்கே பெண்களுக்குத் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளார் நமது சேகர்பாபு என்றால், பதவியில் இல்லாத நிலையில்தானே!

ஜெர்மனியில் நமது கொள்கைப் பிரச்சாரம்

ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் நான் கலந்துகொண்டுதான் வந்திருக்கிறேன். இவ்வாண்டு நான் இருக்க முடியாத நிலை - ஜெர்மனியில் உள்ள பல்கலைக் கழகங்களின் அழைப்பை ஏற்றுச் சென்றிருந்தேன். சுற்றுலாவுக்காகச் செல்லவில்லை; தந்தை பெரியாரின் தத்துவம், திராவிடர் இயக்கச் சாதனைகள், கொள்கைகள்பற்றியும், அங்குள்ள பல்கலைக் கழகங்களில் சிறப்புரையாற்றினேன்.

கலைஞர் பிறந்த நாள் அன்று அங்கு அவரைப்பற்றிப் பேசினேன். அவருடைய நகைச்சுவை உணர்வுகளை எடுத்துக்காட்டியபொழுது அவர்கள் எல்லாம் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

கலைஞர் அவர்களுடைய இந்தப் பிறந்த நாளை ஆக்கப்பூர்வமான செயல்பாடாக ஆக்கி இருப்பது பாராட்டுக்குரியது.

அதற்காக நமது சேகர்பாபு அவர்களையும், அவருக்கு ஒத்துழைத்த கழகத் தோழர்களையும் பாராட்டுகிறேன்.

தேர்தல் வெற்றியை விட வாழ்க்கையில் நமது கொள்கையில் வெற்றி பெறவேண்டும் - அதுதான் முக்கியம் என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.

நிகழ்ச்சி
தி.மு.க. தலைவர் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா வடசென்னை - தண்டையார்ப்பேட்டை ஆர்.கே.நகர் சேணியம்மன் கோவில் தெருவில் நேற்று (18.6.2014) மாலை 6 மணிக்குச் சிறப்புடன் நடைபெற்றது.

391 பெண்களுக்குத் தொழில் முனைவோர் பயிற்சி (தையல் பயிற்சி, அழகுக் கலைப் பயிற்சி, கணினிப் பயிற்சிகள்) தொடக்க விழாவாக எழிலுடன் நடைபெற்றது. அவற்றைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுவதற்காக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டு இருந்தார்.
விழாவிற்குப் பல வகைகளிலும் உதவி புரிந்த தோழர்கள் அனைவருக்கும் விழாக் குழுவின் சார்பில் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், வடசென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் எண்ணூர் மோகன், ஏழுகிணறு கோ.கதிரவன் மற்றும் கழகத் தோழர்கள் வந்திருந்தனர்.
பயிற்சி நடக்கும் இடத்தையும், பயிற்சிகளுக்கான ஏற்பாடுகளையும் தமிழர் தலைவர் பார்த்துப் பாராட்டினார். இரவு 8.30 மணிக்கு விழா நிறைவுற்றது.
தி.மு.க. கழக வட்ட செயலாளர் ப.குமார் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் பார்வதி நாராயணசாமி, செங்கை சண்முகம், ந.மனோகரன், மா.நெடுமாறன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் இரா.மதிவாணன், செங்கை சிவம், சேகர்பாபு ஆகியோர் உரையாற்றிய பின், பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சியைத் தொடங்கி வைத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

சேகர் பாபு அல்ல - சேவை பாபு

நண்பர் சேகர் பாபு என்று கூறுவதைவிட சேவை பாபு என்று சொல்லும் அளவுக்கு அவரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

தொடர்ந்து 10 நாள்கள் கலைஞர் விழாவைச் சிறப்புடன் நடத்தி வருகிறார். ஆக்கப்பூர்வமாகவும் நடத்துகிறார்.

இந்த அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளவர்களின் பட்டியலைப் பார்த்தேன், எண்ணியும் பார்த்தேன் - 300 பேர்கள் இடம்பெற்றுள்ளனர். கழகத்துக்காகப் பாடுபடும் தோழர்களை மறக்காமல் பதிவு செய்துள்ளார். தொண்டர்களை மதித்தால்தான் நம் தொண்டுக்கும் மரியாதை என்பதை நன்கு உணர்ந்தவர் சேகர்பாபு. ஓர் அருமையான கருத்தினை அவர் எடுத்துச் சொன்னார். பேச்சு எப்பொழுது தேவைப்படுகிறது என்றால், நமது செயல்பாட்டை விளக்கவே என்றாரே - மிகச் சிறப்பான கருத்து - வெறும் பேச்சு செயலாகாது - செயல் இருக்கும் இடத்தில் இருக்கும் பேச்சுதான் முக்கியம். அதற்கொரு எடுத்துக்காட்டுதான் நமது சேகர் பாபு என்ற சேவை பாபு.

- சேணியம்மன் கோவில் தெரு கூட்டத்தில் தமிழர் தலைவர்


அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றால் என்ன?

நம் பெண்களுக்கு இலக்கணம் சொன்னவர்கள் எதைச் சொல்லி வைத்தார்கள்? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று சொன்னார்கள். பெண் என்றால், அச்சப்பட்டுக் கொண்டுதான் இருக்கவேண்டுமாம்! அடங்கி ஒடுங்கிக் கிடக்கவேண்டும் என்ற பொருளில்தான் அதனை முதலில் வைத்தார்கள். அடுத்தது மடம் என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு. என்றாலும், மடமை, அறியாமை என்றும் சொல்லி வைத்துள்ளனர்.

அடுத்து நாணம் - எதற்கெடுத்தாலும் பெண்கள் வெட்கப்பட்டுக் கொண்டே வெளியில் வராமல் முடங்கிக் கிடக்கவேண்டும்.

நான்காவது பயிர்ப்பு! அந்தச் சொல்லுக்கு என்ன பொருள் என்று தெரியாமலேயே சொல்லிக் கொண்டிருக்கிறோம்! பயிர்ப்பு என்றால், அகராதி என்ன சொல்லுகிறது?

அசுத்தம், அருவருப்பு, குற்சிதம் இதுதான் பயிர்ப்பு என்பதற்கான பொருள்.
குற்சிதம் என்றாலும் இதே பொருள்தான்.

பெண் என்பவர் அசுத்தமாக இருக்கவேண்டுமா?

அருவருப்பாகத்தான் இருக்கவேண்டுமா?

இங்கே நமது சேகர்பாபு அவர்கள் அழகுக் கலை பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளார்.

பெண் என்றால் அவருவருப்பாக இருக்கவேண்டும் என்பதற்கு எதிரானது இது. அந்த வகையிலும் வரவேற்கத்தக்கது. இப்பொழுதெல்லாம் திருமண வரவேற்பு மாலை 6 மணி என்று அழைப்பிதழில் போட்டியிருந்தாலும், 6 மணிக்குச் சென்றால் மணமகன் இருப்பார், மணமகள் இருக்கமாட்டார். கேட்டால், பியூட்டி பார்லருக்குச் சென்றுள்ளதாகக் கூறுவார்கள். அந்த அளவுக்கு இந்தக் கலை முக்கியத்துவம் பெற்றுள்ளது. வருவாய் ஈட்டக்கூடிய ஒரு தொழிலாக வளர்ந்துள்ளது.

கணினிப் பயிற்சியும் இங்குத் தொடங்கப்படுகிறது. இன்றைக்குக் கணினிதான் உலகம் என்றாகிவிட்டது. பெண்கள் சமைக்கவேண்டும் என்றாலும், அதற்கும் கணினியில் இடம் உண்டு. எந்தக் குழம்பு வைப்பது - எந்தக் கறி சமைப்பது என்று முடிவு செய்வது என்பதைக் கணினியைத் தட்டினால் விவரங்கள் கிடைக்கின்றன.

உப்பு எவ்வளவு? கடுகு எவ்வளவு? மிளகு எவ்வளவு? என்று அளவுவரை தகவல்களைக் கூறும் வேலையைக் கணினி எடுத்துக்கொண்டு இருக்கிறது. பெண்கள் என்றால் கூலியில்லாத சமையற்காரர்கள் என்ற பத்தாம் பசலித்தனத்துக்கு விடை கொடுக்கிறது இத்தகைய பயிற்சிகள்.
பெண்களுக்குக் கொடுக்கப்படும் இந்தப் பயிற்சிகளுக்கு எங்களது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமோ, பெரியார் நூற்றாண்டு நினைவுப் பாலிடெக்னிக்கோ, சமுதாயப் பாலிடெக்னிக்கோ எந்த வகையில் உங்களுக்கு உதவலாம் என்று சம்பந்தப்பட்ட வர்களுடன் கலந்து பேசி, வேண்டிய உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம் (பலத்த கைதட்டல்).

கலைஞர் பிறந்த நாள் விழாவில், தமிழர் தலைவர்
                        “விடுதலை ” 19-06-2014

17 comments:

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்? .......



பஞ்ச மூலிகை

துளசி - பக்தியை வளர்க்கும்

சங்குப்பூ - பெருஞ்செல்வம் கிட்டும்

விருட்சிப்பூ - நோய் தீர்க்கும்

குவளைப்பூ - குழந்தை பாக்கியம் கிட்டும்

ஆவாரம்பூ - கடன் தொல்லை தீரும்

ஓர் ஆன்மீக இதழ் இவ்வாறு கூறுகிறது.

இதனைப் பார்த்தால், அரசு தேவையில்லை, மருத்துவமனை தேவை யில்லை, வாங்கிய கட னைத் தீர்க்க உழைக்கத் தேவையில்லை, மூடத் தனம் + சோம்பேறித்தனம் தான் ஆன்மீகமா?

Read more: http://viduthalai.in/e-paper/82451.html#ixzz358GdpIN9

தமிழ் ஓவியா said...


இங்கல்ல...


கத்தார் நாட்டில் ஷபியத் கலிஃபா பகுதியில் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்ற இந்தியருக்கு 40 சவுக்கடி தண்டனை வழங்கிட நீதிபதி உத்தரவிட்டார். ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ஒன்றரை மாதங்களுக்கு ரத்துச் செய்யப்பட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/82458.html#ixzz358GqdMIR

தமிழ் ஓவியா said...


தலைக்கொரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காயா?

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு இணங்க, மேற்பார்வைக் குழுவினை அமைப்பதற்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவைக் குழு வழங்கி யுள்ளது.

வெள்ளைக்காரர்கள் ஆட்சியின்போது, இயற்கைச் சூழலைப் பயன்படுத்தி முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது.

அப்படி அந்த அணையை உருவாக்கியவர் களுக்குத் தெரிந்ததெல்லாம், மக்களுக்குப் பயன் படவேண்டும்; குறிப்பாக விவசாயம் சிறப்பாக நடை பெற அப்படி ஒரு திட்டம் தேவை, என்பது மட்டும் தான் அவர்களின் பொதுநலச் சிந்தனையாக இருந்தது!

வெள்ளைக்காரன் வெளியேறிய சுதந்திர இந்தியாவிலோ, அந்த மக்கள் நலன் தூக்கி எறியப்பட்டு, சுயநல அரசியல் நலன் என்ற புதிய சிந்தனைத் தேக்கம் உருவாக்கப்பட்டுவிட்டது.

அதன் விளைவுதான் காவிரி நீர்ப் பிரச்சினையும், முல்லைப் பெரியாறுப் பிரச்சினையும்.

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கலாம். அதற்கான உறுதியோடுதான் அது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் கீழ்மட்டம் அகலம் 200 அடி. மேல் மட்ட அகலம் 21 அடி. உலகில் இவ்வளவு உறுதி யான கீழ்மட்ட கட்டுமானம், வேறு எங்கும் கிடையாது.

அணை இடிந்துவிடும் - இடுக்கி மாவட்டம் மூழ்கிவிடும் என்று மலையாள மனோரமா என்ற ஏடு கிளப்பி விட்ட பீதி - இன்றுவரை சிக்கலுக்கான கடு முடிச்சாக மாறி விட்டது.

கேரளாவில் கட்டப்பட்ட இடுக்கி அணைக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காததால், குறுக்கு வழிச் சிந்தனையாக முல்லைப் பெரியாறு அணையின் பக்கம் அவர்களின் கண்கள் திரும்பின என்பதுதான் உண்மையின் இரகசியம்.

நிபுணர்கள் அறிக்கை கொடுத்தும், அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், 142 அடி தண்ணீரைத் தேக்கிக் கொள்ளத் தடை போட்டு வருகிறது கேரள மாநில அரசு.

1979 முதல் இந்தச் சிக்கல் தொடர்கிறது. அதன் தீய விளைவு என்ன தெரியுமா? 86 ஆயிரம் ஏக்கர் இரு போக நிலங்கள் ஒரு போகம் ஆயின. 38 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யவே முடியாத அவல நிலை.

உச்சநீதிமன்றத்தின் ஆணையை செயல்படாமல் ஆக்க குறுக்கு வழியைக் கேரள அரசு தேர்வு செய்துள்ளது. நீர்ப் பரப்புப் பகுதியில் ஆனவச்சால் என்ற இடத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப்பெரிய அளவில் வாகனங்கள் நிறுத்தத்திற்காக என்று சொல்லி, கேரள வனத்துறை அமைத்து வருகிறது.

காலங்கடந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையை மேற்பார்வையிடும் குழு அமைக்க மத்திய அமைச்சரவை முன்வந்துள்ளது, வரவேற்கத் தக்கதாகும். இதற்கும் ஏதாவது குறுக்குச்சால் ஓட்டாமல் இருக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.

அதேநேரத்தில், இன்னொன்றையும் இதில் கவனிக்கத் தவறக்கூடாது. முல்லைப் பெரியாறு அணைக்கு இப்படி ஓர் உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது போலவே, காவிரி நீர்ப் பிரச்சினையிலும் காவிரி மேலாண்மை வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை அமைத்திட இதே மத்திய அமைச்சரவை இதுவரை ஏன் அனுமதியளிக்கவில்லை?

இதற்குள்ளும் அரசியல் புகுந்திருக்கிறது என்பதில், எவ்வித அய்யமும் இல்லை.

இந்த அரசியல் நிலை குறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வெளி யிட்ட அறிக்கையில் (விடுதலை, 12.6.2014) குறிப் பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பி.ஜே.பி.,க்குச் செல்வாக்கு இல்லை; கருநாடகத்தைப் பொறுத்தவரை செல்வாக்கு உண்டு. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, கருநாடக மாநிலத்தில் தன் கட்சிக்குள்ள செல்வாக்கை ஏன் கெடுத்துக் கொள்ளவேண்டும் என்று மத்திய பி.ஜே.பி. ஆட்சி நினைக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் தெரிவித்த கருத்தினை இந்த இடத்தில் சிந்தித்துப் பார்த்தால், மத்திய பி.ஜே.பி. ஆட்சியின் இரட்டை அணுகுமுறையை, அரசியல் உள்நோக்கத்தோடு பிரச்சினையை அணுகும் போக்கை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

இது ஏதோ இரு மாநிலங்களின் பிரச்சினையாகக் கருதிடக் கூடாது - இது இன்றைய மத்திய பி.ஜே.பி. அரசின் நேர்மையையே சந்தேகிக்கும் - கேள்விக் குறியாக்கும் என்பதை மறந்துவிடவேண்டாம்!

தலைக்கொரு சீயக்காய், தாடிக்கொரு சீயக்காயா? என்பார்கள். முல்லைப் பெரியாறுக்கு ஓர் அளவு கோல் - காவிரிக்கு வேறொரு அளவுகோலா? எதிலும் அரசியல் என்பது ஆபத்தானதே!

Read more: http://viduthalai.in/page-2/82460.html#ixzz358HCy0IB

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள் எப்படிப்பட்டவர்கள்?


விமர்சனங்கள் கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதி என்று மதுரை உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது. மதம் மனி தனை மடையர்களாக ஆக்கிவிட்டதை இன்றைய அறிவுலகம் அடையாளம் காட்டிவிட்டது. இதற்கு விலையாக தனது இன்னு யிர் நல்கியவர்கள் 18 ஆம் நூற்றாண் டின் கலிலியோ, கோபர் நிகஸ் போன் றோர் என்பதை உலகறியும். இருப் பினும் இன்றும் நீதி மன்றங்கள் மத போதனை மனிதனின் மனதை மாய்த் திடும் தண்டனைக்கு உரிய செயலைச் செய்வதாக அறிவித்திட தயங்குகின் றன. இல்லாததை இருப்பதாக நம்பிடச் செய்வதற்கு மடமும் கோயிலும் கொடி யும் கதையும் பொய்யுரையும் சம் பிராதயமும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட கொள்கையில் அகப்பட்டோர் இல்லாததை இல்லை என்று சொல்வதைக் கேட்பது பாவம் என்ற கொள்கையில் வாடுகின்றனர். மனம் புண்படுவதாக நீதி மன்றம் நாடுகின்றனர். நீதிமன்றங்களோ இல்லாததை இருப்பதாக சாதிப்போரது சொல்லும் செயலும் உண்மையின்பால் பற்று கொண்ட மனித மனங்களை புண் படுத்துவதை உணரும் உள்ளமில்லா தவர்களை நீதியாளர்களாகக் கொண் டுள்ளது. அதாவது நாத்திகர் மனது ஆத் திகம் பேசி வேள்வி காத்திடும் கயமை கண்டு கண்கலங்குகிறது. வேள்வி யாத்திடும் பார்ப்பன வித்தகர்கள் என்றும் தங்களது கைப்பணம் செல விட்டு மதத்தினை மதக்கொள்கையை அல்லது கடவுளைக் காப்பதில்லை.

அத்தகைய செயலுக்கு மண்ணின் மைந்தனது பொருளும் வரிப்பணமும் அவர்களது ஏமாற்று வேள்விக்கு அவிஸ் ஆவது கண்டிக்கத் தக்க தன்றோ? இத்தகைய இழி செயலை செய்வதற்கு இந்து மதம் என்ற போர் வையில் கடவுளின் முகத்தில் உதித்த வர்களாகிய பார்ப்பனர்கள் மட்டுமே உரிமை கொண்டவர்கள் என்ற சனா தன தர்மத்தை மண்ணின் மைந்தர்கள் மீது திணிப்பது கண்டிக்கத் தக்க தன்றோ? இதற்கு இந்து மதம் காத்திடும் சாதிக் கொள்கையை உயர்த்திப் பிடித்திட இப்படிப்பட்ட பிராமணாள் காபி கிளப் என்றும் சங்கர மடம் என்றும் ஜன் கல் யாண ஜன் ஜாக்ரத் என்றும் இந்த பார்ப்பனர் கூட்டம் கரவு மனத்தோடு திராவிட இனத்தை வேட்டையாடு வதை என்ன சொல்ல? ஆரிய கலாச் சாரத்தில் திராவிட சமுதாயம் தனது அறிவை அறிதலை இழந்துவிட்டதை யார் அறிவார்? காக்கும் கடவுள் பூணூல் அணிந்து கொண்டால் அது யாரை காப்பாற்றும்? என்ற கேள்வியை வள்ளலார் எழுப்பினார். மனிதனின் கால் மற்றவரின் காலில் தவறாகப் பட்டுவிட்டால் துடிதுடித்து போகிறான். மன்னியுங்கள் என்கிறான். காரணம் மனிதனை மனிதன் மதிப்ப தால் அவனது மனது கொண்ட அன்பு இப்படிப்பட்ட நிலையைத் தருகிறது. ஆனால் பூணூல் அணிந்த நடராசப் பெருமான் திராவிட இனத்தானை தனது காலடியில் போட்டு மிதிப்பதில் இன்பம் கண்டால் அவன் யாருக்கு அருள் தருவான் என்ற கேள்வி இன் றைய திராவிட இனத்திற்கும் இல்லா மல் போனதற்கு வழி வகுப்பது இது போன்ற சாதியப் பிரகடனங்களால் வரும் பயன்பாடன்றோ? மனிதனை காலில் போட்டு மிதித்திடும் சாமி சிலைகளை திராவிடன் கை எடுத்து கும்பிட்டு நிற்பது வேதனையன்றோ? சாதி ஒழிய வேண்டும் என்பது சட்ட மாகியுள்ள நிலையில் பிராமணாள் கிளப் என்று நிறுவனப் பெயர் நாட்டு வது சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடித்து இன்றைய மண்ணின் மைந் தர்களை அசுரர்களாக சூத்திரர்களாக சித்தரித்திட துடித்திடும் சங்கரர்களின் சதிச் செயலன்றோ? எனவே நாத்திகனின் சொல்லும் செயலும் ஆத்திகனது மனத்தைப் பண் படுத்துகிறது என்பது ஒரு மன நோயா ளியின் உணர்வு என்பதை நீதிமன் றங்கள் உணரவேண்டும். உண் மையில் பார்ப்பனர்களின் சொல்லும் செயலும் வேள்வியில் அழி பொரு ளாகும் நெய்யும் பாலும் உடையும் பொருளும் மண்ணின் மைந்தர்களின் உயிர் காத்திடும் உயர் பொருள் என் பதை நீதிமன்றங்கள் உணர வேண்டும். நீதிமன்றங்களை எதிர்த்து குரல் கொடுப்பது தண்டணைக்கு உரிய செயலன்று என்பதை நீதிமன்றங் களுக்கு உணர்த்த வேண்டும்.

காரணம் 2ஜி போன்ற கொள்கை முடிவுகளைக்கூட தண்டனை முறைச் சட்டத்திற்கு உட்படுத்தியது கண்டிக்கத் தக்கச் செயல். அதுபோன்றே இந்து சமய அறநிலையத்தின் துணையோடு ஆகமம் நியதி என்ற பெயரில் அன் றாடம் சிலைகளுக்கு பால் அபிஷே கம், நெய் அபிஷேகம் என்று மனித உயிர் காக்கும் பொருட்களை வீணடிப் பது தண்டனைக்கு உரிய செயல் என் பதை இன்றைய நீதிமன்றங்கள் உணர்ந் திட வேண்டும். வேறு எந்த மதத்திலும் இப்படிப்பட்ட அழி செயல்களை ஆக மம் நியதி என்று மதிப்பது உண்டா? திராவிட இனம் தனிப்பெரும் குணம் கொண்ட சங்கத் தமிழ் இனம். அது இன்று பார்ப்பனர்களது கைப்பாவை யாகி விட்டது. அது இலவசத்திற்கு (ஒரு சில கோடிகளுக்கு) ஏங்கும் திராவிடக் கோழைகளாகிவிட்டது. குனிந்து நின்று கும்பிடு போடும் மந்திரிகளாகிவிட்டது

- கவிஞர் சீனிபழனி, வருமானவரி அதிகாரி (ஓய்வு)
கொளத்தூர், சென்னை-99.

Read more: http://viduthalai.in/page-2/82472.html#ixzz358HcBOkO

தமிழ் ஓவியா said...

இந்திதான் தொடர்பு மொழியா? உள்துறை முடிவுக்கு கலைஞர் கண்டனம்


சென்னை, ஜூன் 19-_ தொடர்பு மொழியாக இந்தியை முதன்மைப்படுத்தும் மத்திய உள்துறையின் முடிவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:-_

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னுரி மைப்படி வெளியிடப்படும் ஆணை -_ சமூக வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது என்ற தலைப்பில் ஒரு ஆங்கில நாளேடு (தி எகானமிக் டைம்ஸ்) 17.-6.-2014 அன்று செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று கட்டளையிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முதன்முறையாக முடிவெடுத்துள்ளது. வெளிநாடுகளின் தலைவர்களுடன் உரையாடுவதற்கு இந்தி மொழியையே பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அவரது விருப்புரிமையையொட்டி, அரசு அதிகாரிகள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்வதற்கு இந்தி மொழியையே பயன்படுத்திட வேண்டும். 27-.5-.2014 அன்று மத்திய உள்துறை அமைச்சகம், அரசும் அரசு அதிகாரிகளும் சமூக வலைத் தளங்களில் இந்தியைப் பயன்படுத்துவதைக் கட்டாய மாக்கி ஆணை பிறப்பித்துள்ளது.

அனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளும், அலுவலர்களும் ட்விட்டர், பேஸ்புக் போன்ற தங்களுடைய சமூக வலைத் தளங் களில் இந்தியை அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்; ஆனால், இந்தியைப் பயன்படுத்து வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். (It is ordered that Government Employees and Officials of all Ministries, Departments, Corporations, or Banks, who have made official accounts on “Twitter”, “Face Book”, “Google”. “You Tube” or “Blogs” should use Hindi, or Both Hindi and English but give priority to Hindi) மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டு, அது நடைமுறைப் படுத்தப்படுவது உறுதி செய்யப்படுதல் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, டிவிட்டரில் இந்தி மொழியைத் தான் பயன்படுத்துகிறார் என்று ஆங்கில நாளேட்டின் செய்திக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


குடும்ப அட்டை தொடர்பான புகார்கள் தெரிவிக்க தொலைப்பேசி எண்கள் அறிவிப்பு


சென்னை, ஜூன் 19- குடும்ப அட்டை பெறு வதில் பிரச்சினைகள் ஏதே னும் இருந்தால் அவை குறித்து செல்பேசியில் புகார்களைத் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டை பெறு வதற்கு விண்ணப்பித்த பிறகு அதன் நிலைமை குறித்து செல்பேசி குறுஞ் செய்தி மற்றும் மின்னஞ் சல் மூலம் விண்ணப்ப தாரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் உதவி ஆணை யாளர் அலுவலகங்களில் அமைச்சர் இரா.காமராஜ் புதன்கிழமை ஆய்வு நடத்தினார். இந்த அலுவ லகங்களில்தான் மக்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கும் பணிகள் நடை பெறுகின்றன.

புதிய குடும்ப அட்டை கோரி மனு செய்தவர் களுக்கு, 60 நாள்களுக்குள் உரிய ஆய்வுக்குப் பிறகு தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். மேலும், மனுக்களை நிராகரிக்கும் போது அவற்றின் விவரங் களை மனுதாரர்களுக்கு தாமதமின்றி தெரியப் படுத்த வேண்டும் எனவும், செல்போன் அல்லது மின்னஞ்சல் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மனுவின் நிலை குறித்து தகவல் தெரிவிக்க வேண் டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தப் பட்டனர்.

எஸ்.எம்.எஸ்.-மின் னஞ்சல்: விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலை, குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.,) அல்லது மின்னஞ்சல் மூலமாக தவறாமல் வழங்க வேண் டும். குறிப்பிட்ட காலக்கெ டுவுக்குள் தகவல் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் சம்பந்தப்பட்ட துணை ஆணையாளர் வடக்கு அல்லது தெற்கு அல்லது மண்டல உதவி ஆணையர் கள் ஆகியோரின் செல்பேசி குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கைகள் அனுப்பியும் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறும் தகவல்கள் கிடைக்காவிட்டால், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறை ஆணையா ளரின் அலுவலக மின்னஞ் சல் முகவரிக்கு தகவல் அனுப்பலாம். அலுவலர் களின் செல் பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிகள், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறையின் இணையத ளத்தில் அளிக்கப்பட் டுள்ளது.

தொலைபேசி எண்கள்: நுகர்வோர் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் தங்க ளது புகார்களைத் தெரி விக்க, சென்னை மாநகரில் உள்ள அந்தந்த மண்டல அலுவலக உதவி ஆணை யாளர்களைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், ஆணையாளர் அலுவலகத் தில் செயல் படும் புகார் பிரிவையும், தொடர்பு கொள்வதற்கு வசதியாக ஏழு தொலை பேசி எண்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. குறுஞ் செய்தி அனுப்ப வேண்டிய தொலைபேசி எண்கள்:

94454 64748, 72999 98002, 86800 18002, 72000 18001. புகார்களைத் தெரி விக்க தொலைபேசி எண் கள்: 72990 08002, 86800 28003, 72000 48002.

Read more: http://viduthalai.in/page-5/82449.html#ixzz358IgMcX8

தமிழ் ஓவியா said...


புறநகர் ரயில்களில் தனியாக செல்லும் பெண்களுக்கு தொல்லைகள் ஏற்பட்டால் 90031 61710க்கு டயல் செய்யலாம்


சென்னை, ஜூன் 19_ புறநகர் ரயில்களில் இரவில் தனியாக செல்லும் பெண் கள், ரயில்வே பாதுகாப்பு படையின் உதவி மைய எண்ணுக்கு தகவல் தெரி வித்து பாதுகாப்பு பெற லாம் என்று சென்னை கோட்ட ரயில்வே பாது காப்பு படை முதுநிலை கண்காணிப்பு ஆணையர் கே.கே.அஷ்ரப் தெரிவித் துள்ளார்.

சென்னை கோட்டத் தின் முதுநிலை கண் காணிப்பு ஆணையராக பொறுப்பேற்றுள்ள கே.கே. அஷ்ரப், அளித்த பேட்டி:

புறநகர் ரயில்களில் இரவு நேரங்களில்தான் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் நடக்கிறது. தாம்பரம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி வரை செல்லும் இரவு நேர ரயில்களில் ஆயுதம் தாங் கிய ரயில்வே பாதுகாப்பு படையினர் 2 பேர் பாது காப்புக்கு சென்று வருகின் றனர்.

சில நாட்களுக்கு முன் செங்கல்பட்டு ரயில்நிலை யம் அருகே ரயிலில் செயின் பறிப்பு சம்பவம் நடைப்பெற்றுள்ளது. எனவே இரவு நேர கண் காணிப்பு தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள் ளது. இதன்மூலம் ஏற்கென வே 98 புறநகர் ரயில்களில் இருந்த கண்காணிப்பு பணி மேலும் 12 ரயில் களுக்கு விரிவுபடுத்தப்பட் டுள்ளது.

மேலும் திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் வழியாக ஜோலார்பேட் டை, ரேணிகுண்டா வரையிலும், கும்மிடிப் பூண்டியில் இருந்து கூடூர் வரையிலும் இந்த இரவு நேர கண்காணிப்பு பணி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அதுமட்டுமின்றி செங்கல்பட்டு சம்பவம் தொடர்பாக குற்றவாளி களை கண்டுபிடிக்க 6 பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணையில் இறங்கியுள் ளனர். விரைவு ரயில்களில் உள்ள பெட்டிகளில் ரயில் வே பாதுகாப்பு படையின் உதவி மய்ய எண்கள் விளம்பரம் செய்யப் பட்டுள்ளது போன்று புறநகர் ரயில் பெட்டிகளி லும், குறிப்பாக பெண்கள் பெட்டியிலும் விளம்பரம் செய்யப்படும்.

இரவு நேரங்களில் தனியாக பயணம் செய்ய அச்சப்பட்டால், ஏதாவது தொல்லைகள் ஏற்பட்டால் பெண்கள் உடனடியாக 90031 61710 என்ற உதவி மய்ய எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்க லாம். பிரச்சினை ஏற்பட்ட பிறகு புகார் செய்வதை காட்டிலும், தாங்கள் தனியாக பயணம் செய்து கொண்டிருப்பதை உதவி மய்ய எண்ணில் பெண் பயணிகள் தெரிவித்து பாதுகாப்பு பெறலாம். இவ் வாறு அஷ்ரப் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-5/82447.html#ixzz358IqJhNs

தமிழ் ஓவியா said...


மூடத்தின் முடை நாற்றம்: ஆட்சியாளர்களின் தீய நடவடிக்கைகளால் சபரிமலையில் தெய்வ அருள் குறைந்துள்ளதாம்


திருவனந்தபுரம், ஜூன் 19_ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் தீய நட வடிக்கைகளால் சபரிமலை யில் தெய்வ அருள் குறைந்து வருவதாக தேவபிரசன்னத் தில் தெரிய வந்துள்ளதாம்.

கடந்த 2006ஆம் ஆண்டு சபரிமலை அய்யப் பன் கோயிலில் பிரபல ஜோதிடர் பரப்பனங்காடி உண்ணிகிருஷ்ண பணிக் கர் தலைமையில் தேவ பிர சன்னம் நடத்தப்பட்டது. அப்போது, சபரிமலை கோயிலில் ஒரு இளம் பெண் தரிசனம் செய்ததா கவும், அவர் அய்யப்பவிக் ரகத்தை தொட்டதாகவும் உண்ணிகிருஷ்ண பணிக் கர் கூறினார்.

மறுநாளே நடிகை ஜெயமாலா, தான் சபரி மலை கோயிலுக்கு தரி சனம் செய்ய வந்ததாகவும், அப்போது நெரிசலில் தடுமாறி விழுந்தபோது அய்யப்பன் விக்ரகத்தை தொட்டதாகவும் கூறியிருந் தார். இதுகுறித்து குற்றப் பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உண்ணிகிருஷ்ண பணிக் கரும், நடிகை ஜெயமாலா வும் நாடகமாடியது தெரிய வந்தது.

இந்த சம்பவத்திற்கு பின்னர் கடந்த 8 ஆண்டு களாக சபரிமலையில் தேவ பிரசன்னம் நடத்தப்பட வில்லை. இந்நிலையில், சபரிமலையில் மாளிகை புரம் கோயில், பஸ்மக் குளம் உட்பட சில பகுதி களில் சீரமைப்பு பணிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக தேவபிரசன் னம் நடத்த முடிவு செய் யப்பட்டது. இதன்படி, கோழிக்கோடு செறுவள் ளியை சேர்ந்த ஜோதிடர் நாராயணன் நம்பூதிரி தலைமையில் நேற்று தேவ பிரசன்னம் தொடங்கியது. இதில் 3 முக்கிய ஜோதிடர் கள் உட்பட 15 பேர் கலந்து கொண்டனர். மாலை 5 மணியளவில் தேவபிர சன் னம் நிறைவடைந்தது.

பின்னர் ஜோதிடர் நாராயணன் நம்பூதிரி கூறியதாவது:

சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் ஆட்சியாளர் கள் மற்றும் சில அதிகா ரிகள் கடந்த பல ஆண்டு களாக சில தீய நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்கள் மீது தெய்வ கோபம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக சபரிமலையில் தெய்வ அருள் குறைந்து வருகிறது. எனவே தெய்வ அருளை அதிகரிக்கும் வகையில் உட னடியாக பரிகார பூஜை களை தொடங்க வேண்டு மாம். பரிகார பூஜைகள் நடத்தினால் மட்டுமே பழைய தெய்வ அருளை திரும்ப கொண்டுவர முடி யுமாம்.

அய்யப்பனுக்கும் மாளி கைபுரத்து அம்மனுக்கும் சபரிமலையில் நடத்தப் பட்டு வரும் பல செயல் களில் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. இதற்கு பரிகார மாக சபரிமலையில் உள்ள அதிகாரிகளும் ஊழியர் களும், விளிச்சுசொல்லி (கடவுளிடம் மன்றாடுதல்) பிராயசித்த சடங்குகளை நடத்த வேண்டுமாம்.

(அதிலும் பார்ப்பனச் சுரண்டல் தானோ!)
_ இவ்வாறு நாராயணன் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/82482.html#ixzz358JMYNCg

தமிழ் ஓவியா said...


காரவன் கேள்வி


காரவன் 1.4.1978 ஆங்கில ஏட்டில் வெளிவந்துள்ள தலையங்கத்தின் சுருக்கம் வருமாறு:-

கடவுளைப்போல், கடவுள் அவதாரங்களும் அதிகாரம் இருக்கும் இடத்தைத்தான் வட்டமிட்டுக் கொண்டிருப் பார்கள். அன்பையும், கருணையையும் உபதேசிக்கும் சர்ச்சுகள், ஜெர்மனியில் ஹிட்லர் பல லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்த போது, சுட்டு விரலை உயர்த்தியதுண்டா?

இத்தாலியில் சர்வாதிகாரத்தை கட்ட விழ்த்துவிட்ட முசோலினிக்கு போப் ஆசிர்வாதம் தந்தார். காஞ்சி சங்கராச்சாரியிலிருந்து வீதி ஓரத்து சாதுக்கள் வரை இந்திராகாந்தி அதிகாரத்தில் இருந்த போது அவருக்குத் துதிபாடி வந்தனர்.

இந்திராகாந்தி உறுதியான ஒரு மூடநம்பிக்கைவாதி என்பதில் சந்தேகமே இல்லை. இருந்தாலும் கொஞ்சம் பொது அறிவு அவருக்கு இருந்தது. இப்போது ஜனதா அமைச்சர்கள் இந்த மூடநம்பிக்கை விவகாரத்தில் இந்திராகாந்தியையும் தோற்கடித்து விடுவார்கள் போலிருக்கிறது.

பல லட்சம் ரூபாய் பாழடித்து நடத்தப்பட்ட ஆமதாபாத் யாகத்துக்கு வாஜ்பாயும், ராஜ் நாராயணனும் நேரில் போய் கலந்து கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகளிடம் இந்தியா உதவியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, இப்படி யாகத்தில் போய் அமைச்சர்கள் கலந்து கொள்வது கேலிக் கூத்தானதாகும்.

தன்னைக் கடவுள் என்று பறைசாற்றிக் கொள்ளும் சாயிபாபா அண்மையில் டில்லியில் கலந்து கொண்ட ஒரு பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வாஜ்பாய் தலைமை வகிக்கிறார்.

அப்போது வாஜ்பாய் பேசுகையில், அவசர நிலையின் போது பாபாவை வாஜ்பாய் சந்தித்ததாகவும் அப்போது பாபா, வாஜ்பாய் கவலைப்படாதீர்கள் தர்மம் ஜெயிக்கும் என்று கூறியதாகவும் கூறியிருக்கிறார்.

அவசர நிலையின் போதே இந்த பாபா அந்தக் கொடுமைகளை எதிர்த்து இந்த தர்ம உபதேசத்தை செய்திருக்கக் கூடாதா? என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் அதர்மம் ஆட்சி செய்யும் போது இந்த அவதாரங்கள் மக்களிடம் கருணை காட்டியிருக்க வேண்டாமா? இவ்வாறு அந்த தலை யங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/82551.html#ixzz35EXnc49o

தமிழ் ஓவியா said...


திருப்பதியில் தகிடுதத்தம்!


25.5.1978 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் பக்தர்கள் எழுதியுள்ள வாசகருக்கு கடிதங்கள் வருமாறு:-

ருப்பதி திருமலையை பூகோள வைகுண்டம் என்று கூறுகிறார்கள். ஆனால் அங்கு சென்று பார்ப்பவர்களுக்குத்தான் அது நரகம் என்பது தெரியவரும்.

எங்கும் லஞ்சம், ஊழல்!

திருப்பதி திருமலையில் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை எங்கும் லஞ்சம் ஊழல் நெளிகிறது. பேருந்துக்கு பயணச்சீட்டு வாங்குவதிலிருந்து ஏழுமலை யானைத் தரிசனம் செய்வது வரை எங்கும் லஞ்சமும், ஊழலும்தான் நடமாடுகிறது.

தங்குவதற்கும் சரியான வசதி கிடையாது. தங்குவதற்கு காட்டேஜ் வாடகை பிடிப்பதற்கு நீண்டதூரம் வரிசையில் கால்கடுக்க அவதிப்பட வேண்டியுள்ளது.

கடைநிலை ஊழியரிலிருந்து நடுநிலை ஊழியர்கள், உயர் அதி காரிகள் வரை மிகவும் மோசமாக வும், அராஜகமாகவும், பக்தர்களிடம் நடந்து கொள்ளுகின்றனர்.

சுகாதாரம் இல்லை

தங்கும் விடுதிகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. படுக்கை விரிப்புகள் தினசரி மாற்றப்படுவ தில்லை; குடி தண்ணீர் கிடைப்ப தில்லை. மேஜை, நாற்காலிகள், கட்டில்கள் உபயோகப்படுத்தும் நிலையில் இல்லை. மருத்துவமனை வசதி போதுமானதாக இல்லை. சுகாதார நிலையோ மிகவும் அருவருக்கதக்கதாக உள்ளது.

ரேட் இருந்தும்

ஏழுமலையானை தனியாக தரிசனம் செய்ய 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அவர்களும் தரும தரிசனம் செய்யும் பக்தர்களுடனேயே ஏழுமலை யானை தரிசனம் செய்ய வேண்டியுள்ளது.

புரோக்கர்கள் கமிஷன்

பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் நேரங்களில் அதிகார பூர்வமற்ற புரோக்கர்கள் பலர் பக்தர்களிடம் தலைக்கு ரூ.5 லிருந்து ரூ.20 வரை வசூலித்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

கூட்டத்தை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரால் கர்ப்பக்கிரக வாசலில் நிற்கும் ஆண் காவலாளிகள் வேண்டுமென்றே பெண்களின் மீது கைகளை வைத்து தள்ளுகின்றனர்.

நாளுக்குநாள் திருப்பதி கோயில் வியாபார நிலைய மாகிக் கொண்டு வருகிறது. அது காய்கறி கடைகளைத் திறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - மேற்கண்டவாறு சுலோசனா என்ற பக்தை எழுதியிருக்கிறார்.

இன்னொரு பக்தர்

ஜெகந்நாதன் என்ற மற்றொரு பக்தர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

மலைமீது நாங்கள் காரில் சென்றால் பாதி வழியில் ரேடியேட் டருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. வழியில் ரேடியேட்டருக்கான தண்ணீர் கிடைக்கும் என்ற போர்டு கள் மட்டும் இருக்கின்றன. ஆனால் தொட்டிகளில் தண்ணீர் கிடையாது.

ஆனால், சிலர் பானை தண்ணீர் 25 பைசா என்று கூறி விற்கிறார்கள். அதிகாரிகள் அதன்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா?

பக்தைகளை கட்டுப்படுத்த ஆண்களா?

பெண் பக்தைகளைக் கட்டுப் படுத்த பெண் ஊழியர்கள் இல்லை. ஆண் ஊழியர்கள் தான் கூட்டத்தில் புகுந்து கட்டுப்படுத்துகிறார்கள். கூட்டத்தில் ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி எல்லோரையும் பிடித்துத் தள்ளுகின்றார்கள்.

சேவா தரிசனத்திற்கு சிறப்பு சீட்டு வாங்கினால் கூட அவர்களுக்கும் இதே நிலைதான். இவ்வாறு அந்த பக்தர் எழுதியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-7/82550.html#ixzz35EYCP4zA

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

மனிதனிடம்தான் உயர்ந்த ஜீவன் என்று சொல்லிக் கொள்ள எந்த ஒரு தனிப்பட்ட குறிப்பும் அடையாளமும் இல்லை என்றே சொல்லுவேன்.

மனிதனால் - எண்ணப் படும், பேசப்படும், செய்யப்படும் காரியங் களில் - எதிலாவது மற்ற ஜீவன்களைவிட உயர்ந்த தன்மை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், அவற்றில் மற்ற ஜீவன்களை விடத் தாழ்ந்த தன்மைகள் பல இருப்பதாகச் சொல்லலாமே தவிர, உயர்ந்த தன்மையைக் குறிக்க ஒன்றினாலும் காண முடியவில்லை.

Read more: http://viduthalai.in/page-7/82550.html#ixzz35EYKWb6E

தமிழ் ஓவியா said...

யார் காரணம்?

ஆழ்வார்கள், அவதார புருசர்கள், நாயன்மார்கள், நபிகள், தேவகுமாரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய்யர்கள்,

திருடர்கள், கொலை காரர்கள், நம்பிக் கைத் துரோகம் செய்கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப்பட்டவர்கள்?

ஈ.வெ.ரா. பகுத்தறிவு 1.9.1935

Read more: http://viduthalai.in/page-7/82550.html#ixzz35EYQkm5J

தமிழ் ஓவியா said...


பாம்புபற்றிய மூடநம்பிக்கைகள்: வானொலியின் நற்பணி

நேற்று முன்னாள் இரவு 8.45 மணி முதல் 9 மணி வரை எனது காரில் வடசென்னைக் கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், வானொலியில் பாம்புகள்பற்றி ஒரு சுவாரஸ்யமான உரையாடல் - கேள்வி பதில் பேட்டியைக் கேட் டேன்!

தமிழில் கேள்வி கேட்ட வானொலி நண்பரும், பதில் கூறிய சென்னை பாம்புப் பண்ணை இயக் குநர் இராஜரத்தினம் அவர்களும் இருவரும் மிகச் சிறப்பாக அந்த நிகழ்ச்சியை அமைத்தனர்.

பொதுவாக பாம்புகளைப்பற்றி நாம் பாம்பென்றால் படையும் நடுங்கும் என்றும் பாம்புப் புற்றையே கடவுள் நாகராஜன் வசிக்கும் இடம் என்றும் கருதி அதற்குப் பாலூற்றி பக்தியாக வழிபடுவதும் காலங் காலமாக நாடு முழுவதும் நாம் பார்க்கும் நடப்புகள்.

பாம்புகள் இந்தியாவில் மட்டு மின்றி உலக முழுவதும் சுமார் 2500 வகைகளுக்கு மேல் உள்ளன என்ற அரிய தகவலுடன் பேட்டி துவங்கியது!

அவற்றில் விஷம் உள்ள பாம்புகளும் விஷமற்ற பாம்புகளும் என இருவகை உண்டு என்பதும், பாம்பைக் கண்டால் நமக்கு எப்படி பயமோ, அதுபோலவே பாம்புகளுக்கு மனிதர்களின் அரவம் கேட்டாலே பயம்!

எந்த காட்டு பிராணிக்கும்கூட இதே விதிதான். பாம்பைப்பற்றி பழங்குடி மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளபடியால் அவற்றைக் கண்டு அவர்கள் பயப்படுவதில்லை.

அவைகளிடத்தில் எப்படி பக்குவமாக நடந்து கொண்டு அதன் போக்கில் அதனை விட்டு விட வேண்டுமோ அப்படி விட்டு விடுவார்கள்.

பாம்பினைப் பற்றிய மூடநம்பிக்கைக் கருத்துக்கள் பற்றி திரு. இராஜரத்தினம் அவர்கள் பல அரிய தகவல்களை அடுக்கடுக்காகக் கூறி அசத்தினார்கள். கேள்வி கேட்ட நண்பர் எடுப்பும் சிறப் பானதாக அதற்குக் காரணமாகவும் அமைந்தது!

1. பாம்பு பால் குடிக்கிறது என்பதும் பொய்; கற்பனை, உண்மை அப்படி அல்ல.

2. பாம்பு வகையில் கொம்பேறி மூக்கன் என்று ஒரு வகைப் பாம்பு, கடித்து சாகடிக்கப்பட்ட வரைச் சுடுகாட்டில் எரித்து அந்த பிணத்தின் புகை நுகரும் வரையில் மரத்தில் ஏறிப் பார்த்துதான் அமையும் என்பது சரியான புருடா - பொய்ச் செய்தி.

3. பாம்பு தங்களுக்குத் தொல்லைக் கொடுப் போரை நினைவில் வைத்துக் கொண்டு பழி வாங்கும் வகையில் சாகடிக்கும் என்பது உண்மையே அல்ல. வெறும் கற்பனை.

4. பாம்பு பால் குடித்து, புற்று கட்டிய தன் மூலம் பலருக்குப் பலன் தருகிறது என்பது மூடநம்பிக்கை.

5. பாம்பு மாணிக்கத்தைக் கக்கும் என்பதெல்லாம் கட்டுக் கதை.

6. நாகரெத்தினம் கிடைக்கும் என்பது புதினத்திற்குரியதே தவிர (கற்பனையானது) வேறில்லை.

இப்படி பாம்புகளைப் பற்றிய அரிய தகவல்களைக் கேட்க மிகுந்த சுவையுடனும் சுவாரஸ்யத்தோடும் சொன்ன நண்பர்களுக்கு நமது வாழ்த்துக்கள்!

வானொலியின் இத்தகைய சேவைகள் வளரட்டும்!

அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கைகளை அகற்றிட இது போன்ற பல செய்திகள் வெகு மக்களைச் சென்றடைதல் அவசியம் ஆகும்.



- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/82516.html#ixzz35EYadijw

தமிழ் ஓவியா said...




இந்தியாவில் பாலியல் குற்றங்கள்:

கடமை தவறும் அதிகாரிகள், நீதித்துறையினர், அரசியல்வாதிகள்

அய்.நா. குற்றச்சாற்று

இந்தியாவில் அதி கரித்து வரும் பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுமியர்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகளும், நீதித் துறையினரும் தங்களது கடமையில் இருந்து தவறி வருவதாக அய்க்கிய நாடுகள் குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. சமீபத்தில், உத்தரப் பிரதேசத்தில் சகோ தரிகளான இரு இளம் பெண்கள் பாலியல் வன் முறைக்கு உள்ளாக் கப்பட்டு கொலை செய்து தூக்கில் தொங்கவிடப் பட்ட சம்பவம் உள் நாட்டில் மட்டுமின்றி, வெளி நாடுகளில் வாழும் மனித உரிமை ஆர்வலர் களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர் பாக இந்திய அதிகாரி களுடன் சர்வதேச குழந் தைகள் உரிமை கண் காணிப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன் அடிப்படையில், இந்தியாவில் பாலியல் வன்முறை மற்றும் பெரிய அளவிலான புறக் கணிப்புக்கு குழந்தைகள் இலக்காக்கப்படுவதாக அய்,.நா குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. 22 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன் முறைக்குள்ளாவதாக கூறப்படும் இந்தியாவில் பாலியல் வன்முறை செய் யப்படும் மூன்றில் ஒருவர் சிறுமிகளாக உள்ளனர். இவர்களை நாசப் படுத் தியவர்களில் சரிபாதிப் பேர் நன்கு அறிமுக மானவர்களாகவோ, நம்பிக்கைக்குரியவர் களாகவோ இருப்பது தெரிய வந்துள்ளது.

சர்வதேச ஊடகங் களில் வெளியாகி உலகின் கவனத்தை ஈர்த்த சம்பவங்களைப் பற்றி மட்டும் நாங்கள் கவலை கொள்ளவில்லை. மாறாக, இது போன்ற பல சம்பவங்கள் உள்ளூர் வீதிகளில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தாமல், அதிகாரி களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படா மல், இதன் மூலமாக ஊடகங்களின் பார்வை யில் படாமல் பலரது கவனத்தை ஈர்க்க தவறி விடுகிறது. அவற்றைப் பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என இந்த கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. குற்ற சம்பவங்கள் தொடர்பான போதிய தொகுப்புகள் இல்லாமை, மத்திய, -மாநில அரசு களிடையே நிலவும் சீரற்ற சட்டங்களும் அவற்றை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகளும் நீதித் துறையும் தங்களது கட மையை நிறைவேற்ற தவறி விடுவது ஆகிய வற்றை சுட்டுக்காட்டி இந்த கண்காணிப்பகத் தின் துணை தலைவர் பென்யாம் மெஸ்மர் வேதனையை வெளிப் படுத்தியுள்ளார். அரசியல்வாதிகளின் போக்கு பாலியல் வன்முறை சம்பவங்களை விபத்து என்றும் சில வேளை களில் சரி - சில வேளை களில் தவறு என்றும் கேலியாக கருத்து கூறிய சில இந்திய அரசியல் வாதிகளுக்கு கண்டனம் தெரிவித்தும், பெண் சிசுக் கொலை, பெண்களை புறக்கணித்து கைவிடுதல், பெண் கருக்கலைப்பு ஆகி யவற்றை தடுக்க இந்தியா கடுமையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அய்க் கிய நாடுகள் குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்த பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/82500.html#ixzz35EYmlB6u

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மீகம்?


இனிமை தானோ! இறைத் தரிசனம் கிடைத்து விட்டால் அனைத்தும் இனிமை தான் என்பதை உணர்த் துவதே திருப்பதி தலத் தில் லட்டுப் பிரசாதத்தின் தாத்ப்ரியமாம் அப்படியா னால் திருப்பதி செல்லும் பக்தரின் கழுத்தை அறுத்து நகைகளைக் கொள்ளை அடித்துள்ளார்களே - இதுவும் இனிமையின் பட்டியலில் இடம் பெறுமோ?

Read more: http://viduthalai.in/e-paper/82505.html#ixzz35EYyVxkD

தமிழ் ஓவியா said...


இலங்கையில் குழந்தை பெற்றால் சிங்கள பெண்களுக்கு பரிசு தமிழ் பெண்களுக்கு கரு கலைப்பாம்!


சென்னை, ஜூன் 20: இலங்கையில் குழந்தை பெறும் சிங்கள பெண்க ளுக்கு பரிசு கொடுத்து அந்நாட்டு அரசு கவுரவப் படுத்துகிறது. அதே சமயம் தமிழ் பெண்களுக்கு கரு கலைப்பு செய்கிறது. இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று புலம் பெயர் தமிழர்கள், காணொ லிக்காட்சி மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.

இலங்கையில் நடை பெறும் சிங்கள குடியேற் றம், தமிழ் பெண்கள் கரு கலைப்பு உள்பட பல்வேறு மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

எனவே, புதிதாக மத்தி யில் அமைந்துள்ள பாஜக அரசுக்கு, இலங்கை பிரச் சினையை தெரிவிக்கும் வகையிலும், கோரிக்கை வைக்கும் வகையிலும் காணொலிக் காட்சி மூலம் பத்திரிகையாளர்களி டம் கலந்துரையாடலுக்கு திரைப்பட இயக்குநர் கவுத மன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில், கனடா, டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கிருந்தபடியே, காணொலிக் காட்சி மூலம் சென்னை பத்திரி கையாளர் மன்றத்தில் இருந்த செய்தியாளர் களுக்கு பேட்டி அளித் தனர்.

இதில் கனடா நாட்டில் வாழும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை இணைத் தலைவர் பேராசிரியர் சிறீரஞ்சன், டென்மார்க்கை சேர்ந்த தமிழ் இளையோர் அமைப்பின் நிர்வாகி சுகுநேந்திரன், டென் மார்கை சேர்ந்த சர்வதேச மனித உரிமை அமைப்பு பிரேமேன் வீராஜ் மென் டிஸ், டென்மார்க்கை சேர்ந்த நிர்மானுசன் பால சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது நிர்மானுசன் பாலசுப்ரமணியன் செய் தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இலங்கையில் ஈழ தமிழர் பகுதிகளில் ராஜ பக்சே அரசு கட்டாய சிங்களர் குடியேற்றத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழர் பகுதிகளில் 10 ஆயிரத்திற் கும் மேற்பட்ட சதுர கிலோ மீட்டர் பரப்பள வில் சிங்களர்களை குடி யேற்றியுள்ளனர்.

மேலும், தமிழர்கள் பகுதிகளில் உள்ள பெண் களை பாலியல் வன் கொடுமையை சிங்கள ராணுவம் செய்து வருகிறது. ராஜபக்சே அரசு, சிங்கள பெண்கள் குழந்தை பெற் றால் பரிசுகள் வழங்கு கிறது. ஆனால் தமிழ் பெண்களின் கருக்களை மட்டும் திட்டமிட்டு கலைத்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக தடுக்க வேண் டும். தமிழக முதல்வர் மற்றும் இந்திய அரசு தமிழ் ஈழம் அமைவது, தமிழர் பகுதிகளில் மேற் கொள்ளப்படும் சிங்கள குடியேற்றத்தை தடுப்பது உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/82507.html#ixzz35EZB01wU

தமிழ் ஓவியா said...


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூதுக் குழு இலங்கை செல்கிறது பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவிப்பு


சென்னை, ஜூன் 20_ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், முன்னாள் எம்.பி., எம். அப்துல் ரஹ் மான், மாநில செயலாளர் கள் காயல் மகபூப், மில்லத் இஸ்மாயில், கே.எம். நிஜா முதீன் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத் தில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு சென்று, துணை தூதர் ஏ. ஜபருல்லாஹ்கானை சந் தித்து அந்நாட்டு அதிபர் மஹிந்த ராஜபக்சேவிற்கு மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், சிறீலங்கா இறுதிப் போருக்கு பின்ன ரும் அந்நாட்டில் வாழும் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் பெரும் பான்மை சிங்கள மக்களின் தாக்குதலுக்கு ஆளாவது குறித்து கவலை தெரிவிக் கப்பட்டிருந்தது.

சில மாதங்களுக்கு முன் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதும், அதற்கு பவுத்த துறவிகளே தலைமை தாங்கியதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்த அம்மனுவில், தற்போது களுத்துரை மாவட்டம் அளுத்தகமா பேருவளை பகுதிகளில் பவுத்த பல சேனா வன்முறையாளர் களால் முஸ்லிம்கள் தாக் கப்பட்டு உயிர் உடைமை களை இழந்து தவிப்பது குறித்து பெரும் வேதனை தெரிவிக்கப்பட்டிருந்து.

இலங்கையில் பெரும் பான்மை சமூகத்தின் தீவிர வாத எண்ணம் கொண்ட வர்கள் அடக்கப்படுவ தோடு தமிழ் பேசும் சிறு பான்மையினர் பாதுகாக் கப்பட வேண்டும் என்றும், பள்ளிவாசல்கள், கோவில் கள், கிறிஸ்துவ தேவாலயங் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும், கலவரத் தால் பாதிக்கப்பட்ட முஸ் லிம்களுக்கு நீதியும், நிவா ரணமும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக் கப்பட்டிருந்தது.

இச்சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர் வாகிகள் இலங்கை துணைத் தூதரை சந்தித்து அந்நாட்டில் நடைபெறும் சிறுபான்மையினருக்கெதிரான கலவரங்கள் குறித்து எங் களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினோம்.

பாதிக்கப்பட்டவர் களுக்கு உடனடியாக நீதி யும், நிவாரணமும் வழங் கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிபருக்கு வேண்டுகோள் விடுக்கும் மனுவை வழங்கினோம். அதை உடனடியாக அதி பரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகத் துணைத் தூதர் உறுதிய ளித்தார்.

இந்திய யூனியன் முஸ் லிம் லீக் சார்பில் தூதுக் குழு இலங்கைக்குச் சென்று பாதிக்கப்பட்ட பகுதி களைப் பார்வையிடவும், அதிபரை சந்திப்பதற்கும், முஸ்லிம் தலைவர்கள், புத்த பிட்சுகளின் தலைவர்கள், பவுத்த பொதுபல சேனா வின் தலைவர்களை சந் திப்பதற்கும் அனுமதி தரு வதோடு, ஆவன செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தோம், எங்கள் கோரிக்கையை வரவேற்ற இலங்கைத் தூதர் உடனடியாக ஆவன செய்வதாக உறுதி கூறினார்.

எங்கள் இலங்கை பயணத்தின்போது முஸ் லிம் பிரச்சினை மட்டு மின்றி, அங்குள்ள இலங் கைத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச் சினை குறித்தும் எடுத்து ரைப்போம். ஆர்ப்பாட்ட அரசியலில் நாட்டமில் லாத இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அணுகு முறை எப்போதுமே ஆக் கப்பூர்வமாகவே இருக்கும்.

- இவ்வாறு பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-8/82532.html#ixzz35Ea6f5wk