Search This Blog

13.2.11

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு சொல்லுக்கு பொருள் என்ன?


பெண்களைப் பற்றி இலக்கணம் சொல்லும்போது அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும் இன்றிமையாதவை என்று சொல்கிறார்கள் - எழுதுகிறார்கள். இதில் பயிர்ப்பு எனும் சொல்லுக்கு உண்மையிலேயே பொருள் தெரிந்து பேசுகிறார்களா என்பது கேள்விக்குறியே.

தந்தை பெரியார் அவர்கள் இதுபற்றி திருமண நிகழ்ச்சிகளில் கடுமையாகச் சாடியதுண்டு!


நேற்று சென்னை பாவாணர் நூலகக் கட்டட அரங்கில் பேராசிரியர் முனைவர் மு.பி. பாலசுப்பிர மணியன் அவர்களின் மணிவேந்தன் கவிதைகள், தமிழாலயத்தின் தலை யங்கங்கள் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா வெகு நேர்த்தியாக நடை பெற்றது.


நூல்களை வெளியிட்ட தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மணி வேந்தன் கவிதைகள் நூலில் பெண்கள் பற்றிக் குறிப்பிட் டிருந்த அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு - பற்றி முக்கியமாக எடுத்துக் கொண்டு விமர்சனம் செய்தார்.

அச்சம் - என்றால் அச்சப்பட வேண்டியதற்கு அச்சப்பட வேண்டியதுதான். அது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுதானே? பெண்ணை மட்டும் ஏன் பிரித்துப் பேச வேண்டும்? என்ற கேள்வியைத் தொடுத்தார். அறிஞர் பெருமக்கள் நிரம்பிய அந்த அவையை அமைதி ஆட் கொண்டது. முக்கியமாக பயிர்ப்பு எனும் சொல்லை எடுத்துக் கொண்டால், கழகத் தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி, தமிழ் அகராதி, மதுரைத் தமிழ்ப் பேரகராதி என்று அத்தனை அகராதிகளிலும் இந்தச் சொல்லுக்கு என்ன பொருள் கொடுக்கப்பட்டு இருக்கிறது?

அசுத்தம் - குற்சிதம் - அருவருப்பு

சரி, குற்சிதம் என்ற சொல்லுக்கு தமிழ் அகராதி என்ன பொருள் கூறு கிறது? அசுத்தம், அருவருப்பு என்ற பொருளைத்தான் குறிப்பிடுகிறது. இந்தச் சொல்லுக்குப் பொருள் சொல்ல வந்த கழகத் தமிழ்ப் பேரகராதி மகடூஉக் குண நான்கிலொன்று அருவருப்பு, பிசின் என்ற விரிவாக்கத்தையும் தருகிறது. பெண்களின் நான்கு குணங்களில் இந்த அசுத்தம் என்பதும் ஒன்று என்று அடித்துச் சொல்லுகிறது. தமிழர் தலைவர் இந்தச் சொல்லை எடுத்துக் கொண்டு பல அகராதிகளி லும் கூறப்பட்ட அந்த அசுத்தம் என்ற சொல்லைப் பற்றி கடுமையாக பொருள் படைத்த பயிர்ப்பைச் சாடினார். பெண் அருவருப்பாக, அசுத்தமாக இருந்தால் அந்தக் குடும்பம் நாகரிகம் உள்ளதாக விளங்குமா? பொருள் புரியாமல் நமது புலவர்களும் ஒவ்வொரு மேடையிலும் நெட்டுருப் போட்டு சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே. இது நியாயமா? மானமிகு மணிவேந்தன் நூலில் இடம் பெறலாமா என்ற வினாவை அவர் தொடுத்த போது, திராவிடர் கழகம் என்றால் திராவிடர் கழகம்தான்! - பெரியாரின் சீடர் என்றால் சீடர்தான்! என்று சொல்லும் ஒரு நிலை ஏற்பட்டது. கூட்டம் முடிந்து கலைந்து சென்ற ஒவ்வொருவரும் தமிழர் தலைவரின் பயிர்ப்பு பற்றிக் கூறியதைத்தான் அசை போட்டுச் சென்றனர். ஈரோட்டுக் கண்ணாடி அணிந்தால்தானே இந்த உண்மை புரியும்.


"பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது". - தந்தை பெரியார்

------------------- மயிலாடன் அவர்கள் 13-2-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

8 comments:

Gokul said...

அய்யா,

இந்த பதிவு முற்றிலும் தவறான புரிதலில் உண்டானது . பயிர்ப்பு என்பதற்கான அர்த்தம் "அருவருப்பு ". ஆனால் என்னவிதமான அருவருப்பு தெரியுமா , கணவன் இல்லாத மற்றொரு ஆடவன் தொட்டால் வரும் அருவருப்பு. அதாவது கணவன் அல்லாது மற்ற எந்த ஆடவனும் (தவறான நோக்கோடு) தொட்டாலும் அருவருப்பு அடைய வேண்டும் - என்பதையே இது குறிக்கிறது.

பெண்கள் வீட்டு விலக்கானால் தனியே இருக்க வேண்டும் (ஏனெனில் அவர்கள் அப்போது சுத்தம் இல்லை), என்று வைத்து இருக்கும் நாகரீகமா பெண்களை அசுத்தமாக இருக்க வேண்டும் என்று உத்தரவு போடும்? இது நேரடி பொருள் கொள்ளலில் (transliteration) வரும் சிக்கல்.

Gokul said...

அய்யா,

இந்த பதிவு முற்றிலும் தவறான புரிதலில் உண்டானது . பயிர்ப்பு என்பதற்கான அர்த்தம் "அருவருப்பு ". ஆனால் என்னவிதமான அருவருப்பு தெரியுமா , கணவன் இல்லாத மற்றொரு ஆடவன் தொட்டால் வரும் அருவருப்பு. அதாவது கணவன் அல்லாது மற்ற எந்த ஆடவனும் (தவறான நோக்கோடு) தொட்டாலும் அருவருப்பு அடைய வேண்டும் - என்பதையே இது குறிக்கிறது.

பெண்கள் வீட்டு விலக்கானால் தனியே இருக்க வேண்டும் (ஏனெனில் அவர்கள் அப்போது சுத்தம் இல்லை), என்று வைத்து இருக்கும் நாகரீகமா பெண்களை அசுத்தமாக இருக்க வேண்டும் என்று உத்தரவு போடும்? இது நேரடி பொருள் கொள்ளலில் (transliteration) வரும் சிக்கல்.

நம்பி said...

//பயிர்ப்பு என்பதற்கான அர்த்தம் "அருவருப்பு ". ஆனால் என்னவிதமான அருவருப்பு தெரியுமா , கணவன் இல்லாத மற்றொரு ஆடவன் தொட்டால் வரும் அருவருப்பு. அதாவது கணவன் அல்லாது மற்ற எந்த ஆடவனும் (தவறான நோக்கோடு) தொட்டாலும் அருவருப்பு அடைய வேண்டும் - என்பதையே இது குறிக்கிறது.//

இது தான் மிகப்பெரிய தவறு ஆணாதிக்கமனப்பான்மை...

அருவருப்பு...கணவனைத்தவிர...இந்த ''தொட்டால்'' எதைக்குறிக்கிறது...? புறத்தோலின் மேல் தொடுவதையா...? அப்படியென்றால் ''அப்பா'' ''அண்ணன், தம்பி''தொட்டால் கூடவா....இல்லை இந்த தொடுதல் என்பது ''கலப்பு, கலவி'' பற்றியது...அப்படியென்றால் ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் கலவித் தொட்டால் ''அருவருப்பு'' வரவேண்டுமே அதை மட்டும் பெண்களுக்கு மட்டும் தாரை வார்த்து கொடுத்து விட்டு ''உயிர் கொல்லி'' ''எய்ட்ஸ்'' நோயையும் இந்த சமூகத்துக்கு தருவானேன்...இதை செய்வது ஆண் தானே...தனக்கு சாதகமான எதையும், தமிழ் வார்த்தைகள் உள்பட ஆண் ஏற்றுக்கொள்வான்...பாதகமான வார்த்தைகளை பெண்ணிற்கு தள்ளிவிடுவான்...இது தான் ஆண்...இதைத்தான் ''ஆணாதிக்கம்'' என்ற ஆரிய வர்க்கத்தினரிடமிருந்து இருந்து இது அப்படியே திராவிடரிடையேயும் புகுந்தவைகள்...

நம்பி said...

//பெண்கள் வீட்டு விலக்கானால் தனியே இருக்க வேண்டும் (ஏனெனில் அவர்கள் அப்போது சுத்தம் இல்லை), என்று வைத்து இருக்கும் நாகரீகமா பெண்களை அசுத்தமாக இருக்க வேண்டும் என்று உத்தரவு போடும்? இது நேரடி பொருள் கொள்ளலில் (transliteration) வரும் சிக்கல்.//

இரண்டாவது...இது மிகப் பெரிய தவறு....இதில் தான் முற்றிலும் புரிதல் இல்லை...நம்மை பற்றி நமக்கே புரிதல் இல்லை.....

''அசுத்தம்''...ஒரு மனிதம் அசுத்தம் எனபது தினந்தோறும் நடைபெறுவது....நமது உடலில் தினம் நற்றமெடுக்கும் கழிவு உள்ளது...அதை தினந்தோறும் கழுவுகிறோம்...நம் உடலின் உறுப்புகளை கொண்டுதான் அந்த அசுத்தங்களை அகற்றுகிறோம்...கழுவுகிறோம்...ஆக தினம் தினம் அசுத்தமானவன் மனிதன்...இந்த கழிவுகளுடன் தான் கடவுளின் கருவறைக்குள் செல்கிறோம்...அப்படியென்றால் அசுத்தத்துடன் தான் கடவுளின் முன் தினம் தினம் நிற்கிறோம்...பூஜை செய்கிறோம்...அப்புறம் எப்படி அதை விட நாற்றம், அசுத்தம் குறைவான மாதவிலக்கு இரத்தத்தை மட்டும் அசுத்தம் எனக் கொள்ளவேண்டும்.

ஆக இதுவும் ஆணாதிக்க திமிரினால் பெண்ணை இப்படி எல்லாம் சமூகத்தில் இருந்து விலக்கி அடிமைத்தனமாக வைக்கவேண்டும் என்ற ஆரிய எண்ணத்தினால் உருவானவைகள். தன்னை சுற்றி இருப்பவைகள்...தின்ந்தோறும் கழிவுடன்...அசுத்தத்துடனே தான் மனிதர்கள் அனைவரும் வாழ்கின்றனர. இதில் பெண்ணின் அச்த்தம் புனிதமானது.

தாவரங்களை மட்டுமே உண்டு வாழும் மான், ஆடுகள் எல்லாம் காட்டில் தன் குட்டியை ஈனும்பொழுது...அதிக ஆப்த்து அதாவது..இறைச்சி உண்ணும் விலங்குகளினால் தான் ஏற்படும்...காரணம் குட்டி எந்த எதிர்ப்பையும் காட்டாது ஒன்று...இன்னொன்று...குட்டியின் இறைச்சி மிக மிருதுவாக இருக்கும்...ஆனால் இந்த விலங்குகளிடமிருந்து குட்டிகளை தற்காத்து கொள்ள அந்த தாய் மான்கள் இயற்கையிலேயே தன்பகுத்தறிவை பயன்படுத்துகின்றன...எப்படி அந்த குட்டியுடன் சேர்ந்து பிறப்பின் போது வரும் தோல், ரத்தம்..எல்லாம் வெளிவருவதால் அவைதான் இறைச்சி உண்ணும் விலங்குகளை பலமைல்களுக்கு அப்பால் இருந்தால் கூட கவர்ந்து இழுக்கும்...அதன் இறைச்சி வாடை வீச்சத்தினால் அந்த விலங்குகள் நுகர்ந்து கொண்டே இந்த விலங்குள் இருக்கும் இருப்பிடத்தை வெகு சுலபமாக அடைந்து அதன் குட்டிகளை ஈணும்பொழுதே கொன்று தூக்கி சென்றுவிடும்...அதை தவிர்க்கும் பொருட்டு அந்த தாய் மான்கள், தாவரம் உண்ணும் விலங்குகள்...அதன் குட்டியின் மேல் இருக்கும் தேவையற்ற தோல்கள் மற்றும் ரத்தங்களை தானே உண்டுவிடும்...இவைகள் தாவர உண்ணிகள்...இவைகள் எப்படி இறைச்சியை உண்கிறது?...எப்படி புனிதத்தன்மை கெட்டது?...தன் இனத்தை காக்கவேண்டுமானால் நாம் இறைச்சியை உண்பது கூட புனிதம் தான் என்ற எண்ணம் விலங்குகளுக்கே வந்து விடுகிறது.. (ஆதாரம் டிஸ்கவரி சேனல்).இது அசுத்தம் என்று அதற்கு தெரியாததா...? இல்லை மலத்தை விட மோசமானதா இது? என்று பகுத்தறியத் தெரியாததா? விலங்குகள் (மனிதன் தான் மூடனாக இருப்பான்)...நம் உடலின் அங்கம்...இதில் என்ன அசுத்தம் வந்தது...தினம், தினம் திடக்கழிவை சுமந்து கொண்டு தான் இருக்கிறோம், திரவக்கழிவையும் சுமந்து கொண்டு தான் இருக்கிறோம்...அதை உடலின் உறுப்புகள் கொண்டே கழுவிக்கொண்டிருக்கிறோம்...அந்த கழிவுகளுடனேயே கடவுளின் கருவறைக்குள்ளேயே செல்கிறோம்..அலுவலகங்களுக்கு செல்கிறோம்...நாத்த போக்கு மருந்து அடித்து கொள்கிறோம் (சென்ட்).....அப்புறம் என்ன இதில் இல்லாத அசுத்தம் பெண்ணின் திரவத் திசு (இரத்தத்தின் மறு பெயர் திரவத் திசு) இயற்கையாக வெளி வருவதினால் வந்து விட்டது.

அசுத்தம் நாகரிகம், அநாகரிகம் என்று ஒன்று இல்லை...நாம் எப்போதுமே அசுத்தம் தான் எல்லா கலத்திலேயும்..தாய்க்குலத்தை அசுத்தமாக்கினால்...அவனே உலகில் மிக மிக அசுத்தமானாவன்...மனதளவில்.....இதை திடமாக நம்ப வேண்டும். ஏனென்றால் பெண்ணின் திரவத் திசு அசுத்த்ம் என்றால் தினம் தினம் கழுவுகிறோமே அதை உடலில் சும்ந்து கொண்டிருக்கிறோமே நாம் எப்போதுமே அசுத்தம் இல்லையா...? அதை ''கை'' கொண்டு கழுவுகிறோமே அது அசுத்தம் இல்லையா....மருத்துவர் அந்த இடங்களில் எல்லாம் அறுவை சிகிச்சை செய்கிறார் அது அசுத்தம் இல்லையா...?

ஆணாதிக்க தமிழ் சொற்களை...உடனடியாக ஒழிக்க வேண்டும்

Gokul said...

நம்பி,
உங்கள் பதில் எனக்கு புரிகிறது! நான் வீட்டு விலக்கு எனும் விஷயத்தை அசுத்தம் என்று சொல்பவர்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை, அது எனது பின்னூட்டத்தின் நோக்கமும் அல்ல.
மேலும், பிற ஆண்கள் தொட்டால் அருவருப்பு ஏற்பட வேண்டும் என்று 'பயிர்ப்பு' வார்த்தைக்கான அர்த்தம் சொன்னேனே தவிர அது சரி என்று சொல்லவில்லை.
எனது பின்னூட்டத்தின் நோக்கம் "பயிர்ப்பு" என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் எதிர்க்க கூடாது என்பதே.
இப்படி சொல்லலாம் தமிழோவியாவின் மேற்கண்ட பதிவில் "பெண்கள் கொள்ளவேண்டிய உணர்ச்சி" என்ற விஷயத்திற்கு பதில் பெண்களையே அருவருப்பு என்ற பொருளில் கொண்டுள்ளார் வீரமணி அவர்கள் .
இது தமிழ் என்ற அளவில் பெரிய தவறு என்று எனக்கு பட்டதால் பின்னூட்டம் இட்டேன்.

//இதைத்தான் ''ஆணாதிக்கம்'' என்ற ஆரிய வர்க்கத்தினரிடமிருந்து இருந்து இது அப்படியே திராவிடரிடையேயும் புகுந்தவைகள்//

இந்த ஆணாதிக்கம் ஆரியரிடம் இருந்து திராவிடரிடம் வந்தது என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? (எந்த எதிர்போடும் கேட்கவில்லை, உண்மையிலேயே தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேட்கிறேன்). மேலும் இது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் , எந்த காலகட்டத்தில்/ நூற்றாண்டில் இது நடந்தது என்பதையும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். ஏனெனில் சங்ககாலத்திலேயே 'பரத்தையர்' வீடு செல்லும் தலைவன் இருக்கிறான், தலைவி இல்லை.

நம்பி said...

திரு. கோகுல் அவர்களுக்கு நன்றி! இந்த கருத்து பெரும்பன்மையானவர்களுக்கு இன்று இருப்பது தான்...அதற்கு துணை புரிந்தது உங்கள் கருத்து தான்...ஆகையால் கருத்தை வெளியிடுவதற்கு சாதகமாகப் பய்னபடுத்தி கொண்டேன் எனக் கொள்ளலாம்....பல இடங்களில் கோயில்களாக இருக்கட்டும் அலுவலகங்களாக இருக்கட்டும்...பூசை காண்பித்து தீபாரதனை தட்டை நீட்டும் பொழுது பெண்களே அதை தொடாமல் விலகி நின்று உடம்பு சரியில்லை என்று கூறுவதை இன்றும் காணலாம்....அவர்கள் சங்கடத்துடன் நெளிவதையும் பெருவாரியாக காணலாம்....அதன் காரணமாகத்தான் வெளியிட்டது...பெண்களுக்கே தங்களை பற்றிய தாழ்வு மனப்பான்மை வளர இது தான் காரணம்....

திராவிட நாகரிக்ங்களில் பண்டைய காலத்தில் பெண்களை தெய்வங்களாக மதித்து வணங்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது இது குறித்து எழுத்தாளர் பிரபசஞ்சன் கூட இதுபற்றிய நூல் வெளியிட்டில் அணிந்துரை எழுதியும், பேசியும் உள்ளார். (ஆதாரம் மக்கள் தொலைக்காட்சி) அந்த நூலின் பெயர் தமிழக கோயில் வழிபாடுகள்.....அதில் உள்ள பெண் தெய்வங்கள் என்ற தலைப்பு என நினைக்கிறேன்....அதிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.....இன்னும் நிறைய நூல்கள் இருக்கின்றன...நூலகத்தில் வாசித்திருக்கிறேன்....பெயர்கள் நினைவில்லை.

வாழ்ந்த பெண்களையே தியாகம் புரிந்த பெண்களையே தெய்வங்களாக வணங்கும் முறை இருந்து வந்தது...இன்றும் இருந்து வருகிறது...கிராமக்கோயில்களில் முண்டக்கன்னியம்மன், குழந்தை மாரியம்மன்....ஏரி காத்த பரமேஸ்வரி என்பதெல்லாம்...பல தியாகங்களை செய்த பெண்களை வைத்து வழிபடுவது...வயிற்றை கிழித்து கிராமமே கொடுமை புரிந்து கொன்ற பெண்ணைக் கூட பின்னாளில் தெய்வங்களாக அந்த கிராம மக்களே வணங்கியிருக்கிறார்கள்...இன்னும் வணங்கி கொண்டு வருகிறார்கள்....அதாவது அந்த பெண் தெய்வங்களின் பின்னணியில் நடைமுறை வாழ்க்கை வரலாறு பிணைந்து இருக்கும். (கதையல்ல) அப்படி தான் கண்ணகியை தெய்வமாக வணங்குவதும்..கற்புக்கரசி என்று உருவகப்படுத்தி வணங்குவது எல்லாம்...இந்த தியாகங்களின் அடிப்படையில் தான் பெண்கள் வணங்கப்பட்டார்கள்......இது திராவிடர்கள் எப்படி பெண்களை வணங்கினார்கள்...முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதற்கு சிறு உதாரணம்...

மேலும் விளக்கங்களுக்கு...இங்கு சென்று காணலாம்..
http://webeelam.blogspot.com/2008/02/7.html

http://webeelam.blogspot.com/2008/03/8.html
தமிழ் ஒவியாவின் பதிப்புகளிலும் இதுபற்றி நிறைய இருக்கிறது..அனைத்தையும் இங்கே பதிக்க இடமளிக்கவில்லை...ஆகையால் அங்கே பகுத்தறிவாளர் திரு சபேசன் கொடுத்துள்ளவைகள் இப்போதைக்கு போதுமானது.

tharsi said...

திரு நம்பி அவர்களே! உங்கள் கருத்துக்களை மனமார ஏற்கிறேன். பரந்த தமிழறிவுள்ள தங்களை வாழ்த்துகிறேன்.!த தமிழறிவுள்ள தங்களை வாழ்த்துகிறேன்.!

tharsi said...

திரு நம்பி அவர்களே! உங்கள் கருத்துக்களை மனமார ஏற்கிறேன். பரந்த தமிழறிவுள்ள தங்களை வாழ்த்துகிறேன்.!த தமிழறிவுள்ள தங்களை வாழ்த்துகிறேன்.!