Search This Blog

4.1.09

உயர்ஜாதி என்று அடையாளப் படுத்தும் பூணூலை அறுக்காத பொறுமையை சோ கூட்டம் பலகீனமாகக் கருது கிறதா?


"வீரமணி பல்லக்கில் சவாரி!"


------------------------------------------------------------------------------------
"ஒரு சுய விமர்சனம்!"
"நான் ஒரு குழப்பவாதி - அது என் பிறப்புரிமை" ("துக்ளக்" 1.2.1987) "வயிற்றுப் பிழைப்புக்காகவே எழுதுகிறேன்!" ("துக்ளக்" 24.10.2008) "என் பேச்சைக் கேட்டு உருப்பட்டவர்கள் யார்?" ("தீக்கதிர்" 8.3.2008) இப்படி தன்னிலை விளக்கமாக சொல்லிக் கொள்ளும் "சோ" ராமசாமி அய்யர்தான் - தமிழர்கள் பற்றியும் திராவிடப் பாரம்பரியம் பற்றியும், மானமிகு மாண்புமிகு கலைஞர் பற்றியும் விதண்டாவாதமாக பேசுகிறார் - எழுதுகிறார். "துக்ளக்"கை - காசு கொடுத்து வாங்கும் தமிழர்கள் சிந்திக்கட்டும்!
-------------------------------------------------------------------------------------------
மானமிகு கலைஞர் அவர்களின்மீது பார்ப்பனர்களுக்கு ஏன் இந்த எரிமலைக் காய்ச்சல்? இவ்வார துக்ளக் இதழில் (7.1.2009) அட்டைப் படத்தைப் பார்த்தால் அமைதியின் சொரூபங்களுக்கும் ஆத்திரம் வெடிக்கும்.

86-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் தமிழ் நாட்டின் மூத்த தலைவரை, அய்ந்தாவது முறையாக முதல் அமைச்சராகி சாதனை படைத்த ஒரு சான்றோரை கடைகோடியிலிருந்து கடும் உழைப்பால் சிகரத்தை எட்டியுள்ள ஒரு சீர்திருத்தக்காரரை -நாகரிகம் சிறிதுமின்றி எச்சில்தனமாக ஏளனம் செய்வது கண்டு இனவுணர்வுள்ள எந்தத் தமிழனும் ஆத்திரப் படவே செய்வான். கேலிக்கும், கண்டனத்துக்கும் வசைபாடுவதற்கும் ஒரு எல்லை உண்டு.

சோனியா காந்தியை கலைஞர் ஆதரித்தால் அது பாத பூஜை சோவின் கணக்குப்படி. அதே சோ அத்வானியை ஆதரித்தால் அது என்ன பூஜையாம்?

கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேற்றுமைகள் கருத்து மாறுபாடுகள் வரவே கூடாதா? கருத்து மாறுபாடுகளுக்கிடையேயும் கூட்டணி தொடர்ந்தால் அதற்குப் பார்ப்பான் பார்வையில் பா.ம.க. வக்கிர பரிகார சாந்தியாம்.

பா.ஜ.க.வுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மிடையே மோதல்கள் வந்தது கிடையாதா? பீகாரில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது?

அத்வானி - வெள்ளச் சேதங்களைப் பார்வையிட அந்தப் பகுதிக்குச் சென்றபோது எந்த மாநில அமைச்சரும் அவரைக் கண்டு கொள்ளவில்லையே அதற்காக அங்கே கூட்டணி முறிந்து போய்விடவில்லையே! சோவின் கணிப்புப்படி அந்த நிலைக்கு எந்த வக்கிர மாலையைச் சூட்டப் போகிறார்? இதுவரை ஏன் அது குறித்த தகவல்கள் இல்லை! கலைஞர் ஹிந்து மதத்தை விமர்சித்தால் அது மதத்துவேஷ சாமியாட்டமாம்.

லாலாலஜபதி ஒருமுறை தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களைப் பற்றி முகம் வீங்க மொத்தினார்.

தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே வகுப்புத் துவேஷிகளாக இருந்து கொண்டு, மற்றவர்களைப் பார்த்து வகுப்புத்துவேஷிகள் வகுப்புத்துவேஷிகள் என்று கூறுவார்கள் என்றார். சோ ராமசாமி அய்யர்களைப் பார்க்கும் பொழுது லாலாலஜபதியின் வாய்க்குச் சர்க்கரையைத்தான் கொட்ட வேண்டும்.

உண்மையிலேயே - துவேஷம் செய்பவர் யார்? சோ ராமசாமி - சவாலை ஏற்கத் தயாரா?

பிர்மாவின் காலில் பிறந்தவர்கள் என்றும் அவர்கள் சூத்திரர்கள் என்றும், அவர்கள் விபச்சாரி மக்கள் என்றும் இந்து மதம் கூறவில்லை என்று விவாதிக்கத் தயாரா? ஆண்டுக்கொரு முறை சோ பார்ப்பான் உட்பட ஆவணி அவிட்டம் என்ற பெயரில் பூணூலைப் புதுப்பிப்பதன் பொருள் என்ன? பூணூல் அணிந்தபின் பார்ப்பான் இருபிறப்பாளன் என்று மார்தட்டுவதன் தாத்பரியம் என்ன?

தமிழர்களுக்கு நியாயமான தன்மான உணர்வு பீறிட்டுக் கிளம்பி, உயர்ஜாதி என்று அடையாளப் படுத்தும் பூணூலை அறுக்காத பொறுமையை சோ கூட்டம் பலகீனமாகக் கருது கிறதா? அச்சப்படாதீர்கள் - அப்படி அறுப்பதாகயிருந்தாலும் முன் கூட்டியே அறிவித்து விட்டுதான் அதனைச் செய்வோம்!

தமிழர்களை விபச்சாரி மக்கள் என்று கூறுவது துவேஷம் இல்லையாம்! இப்படிக் கூறும் ஒரு மதத்தை விமர்சித்தால் கலைஞர் துவேஷ சாமியாட்டம் ஆடுகிறாராம். 2009-லும் பார்ப்பனக் கொழுப்பின் உஷ்ணம் எத்தனை டிகிரியில் இருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.

தமிழக அரசின் சாதனை களை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் பாராட்டினால் வீரமணி வாகன வீதி உலாவாம்.

தமிழர்களுக்காகப் பாடு படுபவர்களைத் தோளில் தூக்கி வைத்து அடையாளம் காட்டத்தானே திராவிடர் கழகம் இருக்கிறது! சோ அய்யர்வாள் எந்த அர்த்தத்தில் எழுதியிருந்தாலும் வீர மணி பல்லக்கில் கலைஞர் அவர்கள் உலா வருகிறார் என்று துக்ளக்கில் எழுதியிருப்பது தமிழர்களுக்கு அடையாளம் காட்டப் பயன்படக் கூடியதுதான்.

அக்கிரகாரக் கும்பலுக்கு கலைஞர் அவர்கள்மீது ஏன் அலைபுரளும் ஆத்திரம் -கட்டுக்கடங்காக் கோபம்?

பார்ப்பனர்களின் கூடாரமாக இருந்த, சுரண்டல் வளையாக இருந்த கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் தாழ்த்தப்பட்டவர் உள்பட அனைத்துப் பிரிவினரும் அர்ச்சராகலாம் என்ற சட்டத்தை அவர்தானே நிறைவேற்றினார்!

தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று இருந்த "லும்" என்பதை அவர்தானே தூக்கி எறியச் செய்திருக்கிறார்?

பார்ப்பனப் பண்பாட்டு ஆதிக்கத்தின் சின்னமாக இருந்த சமஸ்கிருதப் பெயர்களைக் கொண்ட ஆண்டுக் கணக்கைக் தூக்கி எறிந்து - தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த மனிதர் இந்தக் கலைஞர் தானே! ஆரியத்தின் அடி மடியில் கை வைத்து விட்டால் ஆத்திரம் கொப்பளித்துக் கிளம்பாதா! நாசமாகப் போறவன் என்று நாடு மாறிக் கூட்டம் மண்ணை அள்ளித் தூற்றாதா? அதன் அடையாளம்தான் துக்ளக் அட்டைப்படம்.

சிதம்பரம் நடராசன் கோயிலிலே தேவாரம், திருவாசகம் பாடிட அட்டியில்லை என்று கூறப்பட்டு விட்டதால் அய்யர் எழுதுகிறார் பாருங்கள்:

ஒரு கோயிலின் வழி பாட்டு முறைகளில் தலையிட அறநிலையத்துறைக்கோ அதன் மூலம் அரசுக்கோ அதிகாரம் இருக்கிறதா? தலையிடலாம் என்றால் எதில், எந்த அளவில்? இந்தக் கேள்விகள் - இந்த விவகாரத்தில் அடங்கியுள்ள விஷயம்

(துக்ளக் தலையங்கம் 19.3.2008)

புரிகிறதா பூணூல் கோத்திரத்தின் பூகம்ப எரிச்சலுக்கான காரணம்?

கோயில் விவகாரத்தில் இதுவரை அரசோ, இந்து அறநிலையத்துறையோ தலையிட்டது கிடையாதா? கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்தார்களே! அது எப்படி வந்தது? அரசோ, அறநிலையத்துறையோ தலையிட்டதால்தானே! கோயிலில் குறிப்பிட்ட ஜாதிப் பெண்களைப் பொட்டுக் கட்டிவிடும் வழக்கம் இருந்ததே - அது ஒழிந்தது அரசு தலையிடாமலா?

சிதம்பரம் நடராசன் கோயில் சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் பாடுவது குறித்து அறநிலையத் துறை தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்று ஆணை பிறப்பித்ததும் நீதி மன்றம் தானே! இது கூடத் தெரியாமல் பேனா பிடிக்கிறாரே இந்த அதிமேதாவி!

தமிழர்கள்மீது இந்தப் பார்ப்பனர்களுக்கு வாழையடி வாழையாக இருந்து வரும் ஆத்திரத்தின் வெளிப்பாடு தான் இப்படி சேற்றை வாரியிரைப்பது?

அதே நேரத்தில் கொலைக் குற்றவாளியாக ஜெயிலுக்கும் பெயிலுக்குமாகத் திரிந்து கொண்டு அலைகிறாரே, காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி என்பவர் - கேடு கெட்ட நிலைக்கு அவர் ஆளான நிலையிலும்கூட அவர்மீது ஒரு துரும்பைத் தூக்கிப் போடுகிறதா இந்த சோ கூட்டம்?

இந்தக் கேவலமான நிலைக்கு அந்தப் பேர் வழி ஆளான பிறகும்கூட பெரியவாள் என்ற சொல்லுக்கு மாற்றுச் சொல்லை அவர்கள் உச்சரிப்பதில்லையே!

கொலைக் குற்றம் மட்டுமா? இன்னும் எவ்வளவு எவ்வளவு அசிங்கமான, அருவருக்கத்தக்க குற்றச்சாற்றுகள் அந்த ஆசாமிமீது!

ஏதோ அபாண்டமாக எதையும் நாம் கற்பித்துக் கூறவில்லையே! தினகரன் ஏட்டில் (6.12.2004) வெளிவந்த தகவல்கள்தான் அவை!

"சோ"வின் பார்வையில்
பார்ப்பனர்களும் தமிழர்களும்


இலங்கையில் அந்த நாட்டுக்குரிய தமிழர்கள் சொந்த நாட்டிலேயே இலட்சக்கணக்கில் அகதிகளாக ஆகிவிட்ட கொடுமை கண்டு மனிதநேயம் உள்ளவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். அதெல்லாம் 'சோ' பார்ப்பனர் கூட்டத்திற்கு ஒரு பொருட்டல்ல; தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்துக்கு இங்கே உட்கார்ந்து கொண்டு "சபாஷ்! சபாஷ்!" என்று உசுப்பேற்றுகின்றனர்.

அதே நேரத்தில் - காஷ்மீரில் உள்ள பண்டிட்டுகள் அகதிகளாகி விட்டார்களே என்று கண்ணீர் வடிக்கிறார் சோ.

"லட்சக்கணக்கான ஹிந்துக்கள் காஷ்மீரிலிருந்து வெளியேறி அகதிகளாக டெல்லியிலும், நாட்டின் வேறு பகுதிகளிலும் வசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சொந்த நாட்டிலேயே - ஒரு பகுதி மக்களுக்கு இப்படிப்பட்ட கதி நேர்ந்ததும் அவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய சூழ்நிலைகளை மாற்றுகிற முயற்சி எதுவும் நடக்கவில்லை" என்று சோ ஒப்பாரி வைக்கிறார் ("துக்ளக்" 20.8.2008)

தமிழர்கள் இலங்கையில் இலட்சக்கணக்கில் அகதிகளாக ஆக்கப்பட்டால் அது ஒரு பொருட்டல்ல; அவர்களைப் பற்றி அக்கறையுடன் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் பேசினால் ஈழத் தமிழர் தோஷம் என்று நையாண்டி செய்கிறார். அதே நேரத்தில் இந்தியாவில் பண்டிட்டுகள் அகதிகளாக ஆனதுபற்றி புலம்புகிறார். காரணம் என்ன? ஈழத்தில் அகதிகளாக ஆனோர் தமிழர்கள் - இந்தியாவில் அகதிகள் என்று சோ கூறும் பண்டிட்டு என்பவர்கள் பார்ப்பனர்கள். இந்த வேறுபாடுதான் சோவின் முரண்பட்ட முகாரிக்கான காரணம், பார்ப்பனர்களை அடையாளம் காண இன்னும் என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

கொலை வழக்கை விசாரித்த போலீசார், சங்கரமடத்தில் நள்ளிரவு நேரங்களில் என்ன சமாச்சாரங்கள் நடந்தன என்று அலச ஆரம்பித்தவுடன், புற்றீசல்போல பல அந்தரங்க விஷயங்கள் கிளம்பி வரத் தொடங்கி உள்ளன. தமிழ் எழுத்தாளர் அனுராதா ரமணன் பாலியல் புகாரை ஜெயேந்திரர் மீது தூக்கிப் போட்டார். ஜெயேந்திரர் தனது அறையில் என்னை பலாத்காரம் செய்ய முயன்று கட்டிப் பிடித்தார். நான் தப்பி வந்து விட்டேன் என்று அனுராதா ரமணன் கூறினார்.

அதன் பிறகு நடிகைகள் ஸ்ரீவித்யா, சுகன்யா, சொர்ண மால்யா ஆகியோரின் அடிக்கடி சங்கரமடத்துக்கு போய் வந்த விஷயங்கள் பெரிதாகப் பேசப்பட்டன. அவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு சின்ன சங்கராச்சாரியார் விஜயேந்திரன், அவருடைய தம்பி ரகு ஆகியோர் பற்றியும் கசமுசா பேச்சுக்கள் அடி பட்டுக் கொண்டு இருக் கின்றன. கொலை செய்யப் பட்ட சங்கரராமன் தான் எழுதிய மொட்டை பெட்டி ஷன்களில் சங்கரமடம் சல்லாபக் கூடம் ஆகிவிட்டது. அந்தப்புரம் போல அதைப் பீடாதிபதிகள் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று பச்சையாகவே குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது விசாரணை மேற்கொண்டு இருக்கும் போலீஸ் அதிகாரி கள் அந்தக் கோணத்திலும் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஜெயேந்திரர் ஒரு நடிகையுடன் தொடர்பு வைத்திருந்ததாக புதிய புகார் ஒன்று அதிர்ச்சி தரும் வகையில் கிளம்பியிருக் கிறது. இந்தப் புகாரை நடிகையின் சினேகதி ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:

என்னுடைய தோழி அபூர்வ ராகங்கள் படத்தில் துணை நடிகையாக நடித்தவள். அவருடைய மகனுக்கு காஞ்சி மடம் நடத்துகிற கல்லூரியில் சீட் கேட்டு ஜெயேந்திரரிடம் என் தோழி சென்றாள். 35 வயதிலும் அவள் ரொம்ப அழகாக இருப்பாள். இரண்டு முறை அப்புறம் பார்க்கலாம் என்று ஜெயேந்திரர் சொல்லி அனுப்பி விட்டார். அடுத்த முறை சென்றபோது ஜெயேந்திரர், நீ என்கூட இருந்தா உன் பையனுக்குச் சீட் தருவேன் என்று கூறியிருக்கிறார்.

ஒரு முறைதானே தொலைகிறது என்று அவள் சம்மதித்து இருக்கிறாள். இதை யடுத்து அவளுடைய மகனுக்கு கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் அதன் பிறகு அடிக்கடி ஜெயேந்திரரிடமிருந்து டெலிபோனில் தொல்லை வந்திருக்கிறது. உன்னை மறக்க முடிய வில்லை. வந்துட்டு சீக்கிரம் போய்விடலாம். உன் பையன் படிப்பை மனத்தில் வைத்து என்னிடம் வா என்று அவ்வப்போது அழைத்து இருக்கிறார். அவர் கூப்பிட்ட போதெல்லாம் போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறாள் அந்தப் பெண். அதனால் மனநிலை பாதிக்கப் பட்டாள்; 4 வருடங்களுக்கு முன்பு இந்த உலகத்தை விட்டே போய் விட்டாள் - இவ்வாறு அந்த நடிகையின் தோழி தெரிவித்து இருக்கிறார்


("தினகரன்" 6.12.2004)

இந்த ஒழுக்கம் கெட்ட மனிதரைப்பற்றி விமர்சிக்க மனம் வரவில்லை இந்த அக் கிரகாரவாசிக்கு விமர்சிக்கா விட்டாலும் பரவாயில்லை. இந்த மனிதர் பேட்டி கொடுக்கிறார். சங்கர மடத்துக்கு அநீதி நடந்துள்ளது என்று

("இந்தியா டுடே" - 9.2.2005).

கொலைக் குற்றவாளியாக இருந்தாலும் காமக் குரோதக் கொடிய பேர் வழியாக இருந்தாலும் ஒரு பார்ப்பான் இன்னொரு பார்ப்பானை விட்டுக் கொடுப்பதில்லை என்பதை இதன் மூலம் தமிழர்கள் உணர வேண்டும் என்பதே திராவிடர் கழகத்தின் எதிர்பார்ப்பு.

திமுக ஆட்சிபற்றி எந்த அளவுக்குக் கண் மூடித் தனமான எதிர்ப்புத் தெரியுமா? இதோ துக்ளக்கில் வெளிவந்த ஒரு கேள்வி பதில்.

கேள்வி: மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வைப் போலவே மாநில அரசு ஊழியர்களின் சம்பள மும் உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித் திருப்பதுபற்றி?

பதில்: அவர்கள் கேட்காமலேயே முதல்வர் இதைச் செய்திருக்கிறார். பொருளாதாரப் பொறுப்பின்மை என்பதன் உச்சக் கட்டம் இது.

("துக்ளக்" 3.9.2008 பக்கம் 25)

மத்திய அரசுக்கு நிகராக மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு முதல் அமைச்சர் ஊதியம் கொடுக்கிறார் என்றால், அது வும் ஊழியர்கள் கேட்காமலேயே கொடுக்கிறார் என்றால் பாராட்டுதலுக்குரிய அந்தப் பெரு நிலையை சோ பார்ப்பனர் தலைகீழாக புரட்டிச் சொல்லுகிறார் என்றால் அதற்குப் பெயர்தான் துவேஷம் என்பது. தமிழர்கள் நலன் செய்தாலும் அதனைக் கெடு தலையாகத் திரிப்பது என்பது திரிநூலார்களோடு உடன் பிறந்த ஜீவ சுபாவமாகும்.

அப்பன் தொழிலை பிள்ளை செய்ய வேண்டும் என்ற நவீன குலக் கல்வித் திட்டத்தை ஆச்சாரியார் (ராஜாஜி) 1953-இல் ஆட்சிக்கு வந்தபோது கொண்டு வந்தார்.

தந்தை பெரியார் கிளர்ந்து எழுந்தநிலையில், தமிழகமே ஆர்ப்பரித்து எழுந்தது - ஆச்சாரியாரே வெளியேறு என்ற அரிய குரல் எங்கும் எழுந்தது. அதன் விளைவாக ஆச்சாரியார் - ஆட்சிப் பீடம் விட்டு விலகி ஓட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

34 ஆண்டுகளுக்குப் பிறகு 1988-இல் சோ ராமசாமி எழுதுகிறார்: ஆச்சாரியார் கொண்டு வந்தது அருமையான திட்டமாம் அதனைத் திரித்துக் கூறி ஆச்சாரியாரை விரட்டி விட்டார்கள் என்று எழுதுகிறார் என்றால் ("துக்ளக்" 15.7.1988) அக்கிர காரத்து நஞ்சு அப்படியே நீர்த்துப் போகாமல் காலம் காலமாக வழிந்து ஓடிக் கொண்டு இருக்கிறது என்று தானே பொருள்!

தமிழர்கள் ஆட்சி என்றால் அந்த ஆட்சியின்மீது அவ தூறுகளை அள்ளி வீசுவது என்பது அவாளின் பரம்பரைக் குணம். சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது என்று புரளியைக் கிளப்புவது அவாளின் புத்தி.

அதே நேரத்தில் குஜராத்தில் என்ன நடந்தது? நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் பூர்ண ஒத்துழைப்போடு முசுலிம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அரசு புள்ளி விவரப்படியே 2000 பேர்கள் கொல்லப்பட்டனர். இதனை மனதிற் கொண்டு எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடு செல் லுவேன் என்று பிரதமராக விருந்த வாஜ்பேயியே மனம் குமுறினார்.

இந்த யோக்கியதையில் நரேந்திர மோடிதான் இந்தியாவிலேயே சிறந்த முதல் அமைச்சர் என்றும், இந்தியாவில் பிரதமராக ஆக வேண்டியவர் என்றும் கை கூசாமல் சோ வால் எழுத முடிகிறது என்றால், இதை விட அறிவு நாணயமற்றதனம் வேறு ஒன்று இருக்க முடியுமா? 2000 பேர்கள் கொல்லப்படுகிறார்கள் ஒரு ஆட்சியில் என்றால், அந்த ஆட்சியின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு எந்த ரகத்தைச் சேர்ந்தது? சோ கூட்டத்துக்கே வெளிச்சம்!

சிறுபான்மையினர்மீது சங்பரிவார் கும்பல் தாக்குதல் தொடுத்தால் சோ பார்வையில் அதுவன்முறையல்ல! மாறாக தங்கள் மக்களைக் காப்பாற்ற விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தினால். அய்யயோ, பயங்கரவாதம், தீவிரவாதம் என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் பாசாங் குத்தனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.


குஜராத் பா.ஜ.க. ஆட்சியில் அரசப் பயங்கரவாதமாக நடை பெற்ற வன்முறைகள், பாலியல் வன்முறைகள் பற்றி கலவ ரங்கள் முடிந்தபின் டெஹல்கா ஊடகம் வீடியோ எடுத்து விளக்கமாக உண்மை நிலைமையை அம்பலப் படுத்தியுள்ளது.

அதுபற்றி சோ ராமசாமி என்ன சொல்லுகிறார்?

டெஹல்கா வெளியிட்ட டேப்பின் காட்சிகளில் வருகிறவர்கள் எல்லாம் நான் கற்பழித்தேன் நான் இத்தனைப் பேரைக்கொலை செய்தேன் என்கிறார்கள். இதையெல்லாம் எவனாவது கேமிராமுன் சொல்வானா? என்று புத்திசாலித்தனமான கேள்வி என்பதுபோல பேசுகிறாரே!

கேமிரா முன் சொல்லப் பட்டவைகள்தானே டேப்பாக வெளியிடப்பட்டுள்ளது. டேப் போலியானது பொய்யானது என்று இது வரை நிரூபிக்கப்பட்டுள்ளதா? அப்படி பொய்யாகத் தயாரிக் கப்பட்டு இருந்தால் நரேந்திரமோடி சும்மாவிருந்திருப்பாரா?

நான்தான் கற்பழித்தேன் கொலை செய்தேன் என்று சொல்லுகிறார்கள் என்றால் நீரோ மன்னன் நரேந்திர மோடி ஆட்சியில் (இப் பட்டம் உச்சநீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டதாகும்!) நம்மை என்ன செய்ய முடியும் என்ற திமிரில் தினாவெட்டில் அவர்களால் கூற முடிந்திருக்கிறது என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்.

மானமிகு கலைஞர் அவர்கள் யார்மீது சவாரி செய்கிறார் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இவர் யார்மீது சவாரி செய்கிறார் அல்லது இவர்மீது யார் சவாரி செய்கிறார்கள் என்பது தெரியாதா?

அரசியல் புரோக்கர் வேலை என்பதுதானே இவர் தொழில்! இவரே ஒப்புக் கொண்டு இருக்கிறாரே

1996-ல் திமுக - த.மா.க. உறவு ஏற்படவும் 1999-ல் திமுகவும், பா.ஜ.க.வும் இணையவும் நான் முக்கிய காரணமாக இருந்தேன் என்று குறிப்பிட்டுள்ளாரே (இந்தியா டுடே 9.2.2005). அப்போதெல்லாம் யார்யார்மீது சவாரி செய்தார்களாம். விளக்குவாரா வெங்கண்ணா பரம்பரை?

சோவின் பேனாவுக்குச் சுளுக்கா?

கலைஞர் குடும்பப் பிரச்சினை மற்றும் ஒற்றுமைபற்றியும் கொச்சைப்படுத்தத் தவறவில்லை திருவாளர் சோ. கலைஞருக்குக் குடும்பம் இருக்கிறது. பிரச்சினைகள் ஏற்பட்டன; ஒற்றுமை வந்தது. இது அவரின் குடும்பத்துக்கு மட்டுமல்ல - நாட்டுக்கே நல்லது என்று தமிழினத்தார் மகிழ்கின்றனர். ஒற்றுமை ஏற்பட்டு விடக் கூடாது என்று குதியாட்டம் போட்டவர்கள் இன்று கால் ஒடிந்து கவலைப்படுகின்றனர் என்பது சோவின் எழுத்துக்கள் மூலம் தெரிகிறது.

குடும்பத்தை விட்டு சந்நியாசம் ஏற்று, சங்கராச்சாரியார் என்ற நிலைக்கு வந்த பிறகும், காஞ்சி மடத்திலே சங்கராச்சாரியாரின் உறவினர்கள் கூடாரம் அடித்து கும்மாளம் போடு கிறார்களே! அது எப்படி? யார் அந்த ரகு? அந்த ஆளின் லீலைகள் மடத்துக்குள்ளேயே பேசப்படுகிறது என்று ஏடுகள் விலா வாரியாக வெளியிட்டனவே! அது எப்படி? அந்தக் குடும்பம் பற்றி எல்லாம் எழுதிட முடியாமல் சோவின் பேனாவுக்கு சுளுக்கு ஏற்பட்டது - ஏன்? பார்ப்பான் - சூத்திரப் பேதம் தானே?

ஜெயேந்திரர்மீது அதிக மதிப்பு வைத்துள்ள நிலையில் அவரைக் கைது செய்து சிறையில் தள்ளிய செல்வி ஜெயலலிதாமீது பார்ப்பனர்களுக்குக் கோபம் வர வில்லை. இந்த இடத்தில் தான் தமிழர்கள் கொஞ்சம் கூர்மை யாகப் புத்தியைச் செலுத்த வேண்டும்.

அது எப்படியோ நடந்து விட்டது. அதற்காக ஜெயலலிதாவை வெறுத்து ஒதுக்கி விட்டால் அதன் வாய்ப்புக் கேடு யாருக்கு? நம்மவாள் முதல் அமைச்சராகும் வாய்ப்பைப் புறத்தள்ளி விடலாமா? திராவிடஇயக்கத்தில் நம்ம பெண் ஒருவர் இருப்பதால்தான் சி.எம் ஆக முடி கிறது - அந்தக் கண்ணோட் டத்தில் புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டும் - என்று அவர்கள் நினைக்கிறார்கள். பார்ப்பனர்களுக்கு இன ரீதியாக இருக்கும் இந்தச் சுயநலம்தான் அவர்களை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது என்பதை நம்மவாள் புரிந்து கொள்ள இன்னும் எவ்வளவு காலம் பிடிக்குமோ?

நினைத்தேன் எழுதுகிறேன்

முதல்வர் ஜெயலலிதா ஒரு பார்வை என்ற தலைப்பில் திருவாளர் சோ எழுதியிருப்பதை ஊன்றிப் படிக்க வேண்டும் திராவிடப் பாரம்பரியம் என்றால் என்ன பொருள் என்பது, அந்தப் பாரம்பரியத் தினர் வெளிப்படையாக நம்பாத தெய்வத்திற்குத்தான் வெளிச்சம்; அப்படி ஒரு விளக்க முடியாத பாரம்பரிய முள்ள இரண்டு அரசியல் கட்சிகளில் ஒன்றிற்கு தலைமை ஏற்ற ஜெயலலிதா யார்? அந்தப் பொருளற்ற பாரம்பரியத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாதவர். அந்தப் பாரம்பரியத்தினால் எந்த ஒரு சமூகம் மிகக் கடுமையாகவும், கேவலமாகவும் எதிர்க்கப் பட்டதோ, அந்தச் சமூ கத்தைச் சேர்ந்தவர்.

சரி, இப்படிப்பட்ட பாரம் பரியத்துக்கு தலைமை ஏற்பதற்காக அவர் தனது நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டாரா? என்று கேட்டால் கிடையாது. கோவில், அர்ச்சனை, பிரசாதம் ஒரு புறம்; தீவிரவாதம் தமிழைப் பற்றியதாகயிருந்தாலும், தெலுங்கைப் பற்றியதாக யிருந்தாலும் அதை நசுக்கவே முயற்சிப்பேன் என்ற முனைப்பு வேறு ஒருபுறம்; தொழிலாளிகளுக்கும் கட மைகளும் பொறுப்புகளும் உண்டு என்பதை நிலை நாட்டத் தயங்க மாட்டேன் என்ற தீர்மானம் மற்றொரு புறம்; மைனாரிட்டி மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றாலும், அதற்காக மெஜாரிட்டி மக்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்ற நிலைப்பாடு இன்னமும் ஒருபுறம். இப்படி எந்தப் பக்கம் நோக்கினாலும் சரி, பொருளற்ற திராவிடப் பாரம்பரியத்தின் கோஷங் களை ஜெயலலிதா ஏற்க வில்லை. தன்னுடைய நம்பிக் கைகளை அந்தப் பாரம் பரியம் ஏற்கும்படிச் செய்தார். இது சமீப கால தமிழக அரசியல் அற்புதம் ("துக்ளக்" 21.9.2005) என்று செல்வி ஜெயலலிதா குறித்து ஒரு கணிப்பை அவர் பார்வையில் தந்துள்ளார் திருவாளர் சோ ராமசாமி.

1) திராவிடப் பாரம்பரியம் என்றால் என்ன என்று கேள்வி கேட்கிறார். ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை விலக்கிய வரலாற்று ரீதியான திராவிட இனத்தின் பண்பு நலன்கள் தான் திராவிடப் பாரம்பரியம்.

2) திராவிடப் பாரம் பரியத்துக்குச் சம்பந்தம் இல்லாதவர் திராவிடர் பாரம்பரியத்தின் கொள்கைகளை ஏற்காதவர் என்று சொல்லுவ தன்மூலம் ஒரு உண்மை வெளியாகி விட்டது. ஜெயலலிதாவை திராவிடப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்று நம்பி அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கும் அண்ணா திமுக தோழர்களை சீண்டியிருக்கிறார் என்பதை விட, ஏதோ ஒரு வகையில் அவரை அறியாமலேயே யோசிக்க வைத்துள்ளார். இதன் மூலம் திராவிட இயக்கப் பாரம்பரியம் இல்லாதவர், ஒரு திராவிட கட்சிக்குத் தலைமை தாங்கி வருகிறார் என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளார். ஜெயலலிதாவை இதன்மூலம் பெருமைப்படுத்துகிறாரா - சிறுமைப்படுத்து கிறாரா என்பது தெய்வ பக்தரான அவர் புத்திக்கே வெளிச்சம்.

3) செல்வி ஜெயலலிதா வைப் பார்ப்பனர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு சோ ஒரு போக்கினை காட்டியுள்ளார்.

திராவிடப் பாரம்பரியம் பேசும் ஒரு கட்சியில் நம்மவாளான ஒரு பெண் இருக்கிறார். சட்டமன்றத்திலேயே தன்னை பாப்பாத்தி என்றும் பறைசாற்றி அடையாளம் காட்டியுள்ளார். பார்ப்பனர்களான நம்மிடமிருந்து வேறு ஒருவர் முதல் அமைச்சராக வரவே முடியாது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை திராவிடப் பாரம்பரியம்தான் ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலை யிருந்து வரும் சூழ்நிலையில் நம்மினத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அந்தத் திராவிட ஆட்சி ஒன்றுக்குத் தலைமை யேற்றுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா என்று சோ கோடிட்டுக் காட்டியுள்ளார்.

திராவிடப் பாரம்பரி யத்தை எதிர்ப்பது என்ற பெயரால் கலைஞர் அவர்களைச் சிறுமைப்படுத்துவதும் அதே திராவிடப் பாரம்பரியத்தைப் பயன்படுத்தி தம்மினப் பெண்ணை ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நயவஞ்சக கவுடில்ய திட்டத்தின் அடிப்படையில்தான் என்பதை பார்ப்பனர் அல்லாத மக்களான நம் மக்கள் அறுதியிட்டு உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்குப் பார்ப்பன இனத்துக்குக் கிடைத்த பெரிய தலைவரே சோ ராமசாமி தான். அந்த அளவுக்கு அந்த இனம் தாழ்நிலைக்கு போய் விட்டது.

இந்த ஆசாமியின் யோக்கிதை என்ன? நாம் எடை போட வேண்டிய அவசியம் இல்லை. அவரே தன்னைப் பற்றி சுயமதிப்பீடு செய்துள்ளார்.

தி நேம் ஈஸ் ரஜினிகாந்த் என்ற ஆங்கில நூல் வெளி யீட்டு விழாவில் (2008 மார்ச் சில்) திரு சோ பேசியதாவது:

என் ஆலோசனையைக் கேட்டு யாரும் உருப்பட்ட தில்லை. ஆலோசனையைக் கேட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்

சோ கூறும் ஆலோசனை யின் யோக்கியதை இவ்வளவுதான்!


இன்னொன்று இருக்கிறது.

கேள்வி: துக்ளக்கை 35 ஆண்டுகளுக்கு மேலாக நடத் தியும் எந்த ஒரு பலனும் ஏற் பட்டதாகத் தெரியவில்லையே என்று என்றாவது நீங்கள் விரக்தி அடைந்த துண்டா?

பதில்: எந்தப் பலனும் இல்லையென்று எப்படி சொல்வது? எனக்குப் பிழைப்பு நடந்திருக்கிறதே!

("துக்ளக்" 24.10.2005 பக்கம் 26)

அவசரம் வேண்டாம்! இன்னொன்றும் அவரைப்பற்றி அவரே அறிவித்துள்ள ஒன்று மிக முக்கியமாக தெரிவிக்கிறது.

கேள்வி: துக்ளக் விலையேற்றத்தைப் பற்றிய அறிவிப்பிலும் தாங்கள் குழம்பியிருப்பதாக எனது நண்பர்கள் சிலர் கூறுகிறார்களே?

பதில்: குழப்புவது எனது பிறப்புரிமை.

("துக்ளக்" 1.12.1987 பக்கம் 9)

போதுமா?


இந்தக் குழப்பவாதிதான் வயிற்றுப் பிழைப்புக்காக பத்திரிகை நடத்துபவர்தான் என் பேச்சை யார் கேட்டாலும் உருப்பட மாட்டார்கள் என்று தனக்குத்தானே சான்று அளித்துக் கொள் பவர்தான் திராவிடப் பாரம்பரியத்தைக் கொச்சைப் படுத்துகிறார். தமிழகத்தின் மூத்த திராவிட இயக்கத் தலைவரான மானமிகு கலைஞர் மீது அழி - பழிச் சகதிகளை கைநிறைய அள்ளி வீசுகிறார்.

தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக! துக்ளக்கை வாங்கிப் படித்த பார்ப்பனர் அல்லாத மக்கள் குறிப்பாகத் தெரிந்து கொள்வார்களாக.

பார்ப்பனர்களில் மிகப் பெரிய மேதாவியாக அவாள் தூக்கிச் சுமக்கும் பேர் வழியே இந்தக் கதியில்தான் உள்ளார் என்பதையும் கவனத்தில் வைப்பார்களாக!


------------------- மின்சாரம் அவர்கள் 3-9-2008 "விடுதலை" ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை.

5 comments:

Anonymous said...

திராவிட இயக்கம், பிராமணர் இயக்கம், பெரியார் இயக்கம், காங்க்கிரஸ், மற்றும் பா.ஜ. கட்சி இவைகள் பற்றி பேசும்பொழுது, எழுதும் பொழுது, தனிமனித ஒழுக்கங்க்களை பற்றியெல்லாம் பேசாமல்/எழுதாமல் இருப்பது நல்லது. இந்த தனி மனித ஒழுக்க விஷயங்கள் அவரவர் தனது வாழ்க்கை பற்றியுள்ள நெறிகள் ஒற்றியது. இந்த விஷயங்க்களை பொருத்தவரை மேற்குரிப்பிட்ட இயக்கங்களின் தலைவர்கள் யாரும் விதிவிலக்கல்ல. எல்லோருமே ஏமாற்று பேர்வழிகள்தான். மக்களுடைய உரிமைகளை பாதிக்காதவரை இவர்களின் தனிமனித ஒழுக்கம் பற்றி யாரும் கவலை கொள்ள தேவையில்லை. இந்த மாதிரி குற்றசாற்றுகளின் மூலமே, இந்த இயக்கங்க்களும், இதன் தலைவர்களும் மக்களை முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்புகிறார்கள். சரி விஷயத்துக்கு வருவோம்;

ஈழப்பிரச்சனையில், திமுகவும், கலைஞரும்தான், திராவிடர் கழகமும்தான் என்ன சாதித்திவிட்டார்கள்; எதை தியாகம் செய்திருக்கிறார்கள்? இத்தனைக்கும் மத்தியில் ஆட்சியை வைத்திருக்கும்தான் திமுகதான் என்ன சாதித்துவிட்டது; இன அழிப்பிற்கு ஆதரவு தரும் காங்கிரசை ஆதரிப்பது தவிர?

குமார்

தமிழ் ஓவியா said...

//ஈழப்பிரச்சனையில், திமுகவும், கலைஞரும்தான், திராவிடர் கழகமும்தான் என்ன சாதித்திவிட்டார்கள்; எதை தியாகம் செய்திருக்கிறார்கள்?//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

தி.மு.க. ஈழப்பிரச்சனைக்காக ஆட்சியையே இழந்த நிகழ்வும் உண்டு.

திராவிடர்கழகம் ஈழப்பிரச்சைனையில் என்ன சாதித்து எனபது பற்றி ஒரு தொகுப்பு இது. படியுங்கள். உண்மையை உணருங்கள்.


"பற்றி எரியும் ஈழமும் திராவிடர் கழகத்தின் பணிகளும்!
- தொகுப்பு: கவிஞர் கலி.பூங்குன்றன்,
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்

ஈழத் தமிழர்கள் நெடுங்காலமாக சிங்கள வெறியர்களின் குரூரத் தாக்குதல்களுக்கு ஆளாகி வந்துள்ளார்கள் என்றாலும் 1983-ல் புதிய சக்தியுடன் அந்தத் தாக்குதல்கள் தீவிரமாகத் தொடங்கின. சிங்கள வெறியர்கள் மட்டுமல்ல - அரசு பயங்கரவாதமும் சேர்ந்து தமிழின மக்கள்மீது கொடிய தாக்குதல் போர் தொடங்கியது.

அந்தக் கால கட்டத்தில் திராவிடர் கழகம் இப்பிரச்சினையின்மீது கண்களை வைத்து தொடர்ந்து விடாமுயற்சியுடன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதனுடைய ஒரு தொகுப்பை இங்குக் காணலாம்.

1. 18.6.1983 சனி மாலை 5 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டி தமிழின மக்களின் உணர்வை வெளிப்படுத்தியது. 2.7.1983 அன்று சென்னை அண்ணா நகரில் புல்லா ரெட்டி அவின்யுவில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட பிரமாண்ட எழுச்சிப் பொதுக் கூட்டத்தை நடத்தியது. அநேகமாக அக்கால கட்டத்தில் இப்பிரச்சினைக்காகத் துவக்கப்பட்ட ஒரு முக்கிய நிகழ்ச்சி இது என்றே குறிப்பிட வேண்டும்.

2. 23.7.83 அன்று பிரதமர் இந்திரா காந்திக்கு மடல் எழுதப்பட்டது. தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமரைச் சந்தித்து ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண வற்புறுத்துமாறு கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி கடிதம் எழுதினார்.

3. 1983 ஆகஸ்டு 15-ஆம் நாளைத் துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்றும் அன்று கறுப்புச் சின்னம் அணிந்தும் வீடுகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிட்டும், பொது இடங்களில் கறுப்புக் கொடி ஏற்றியும் நமது துக்கத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்றும் 8.8.1983-இல் சென்னையில் கூடிய திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு கூட்டம் முடிவு செய்தது.

தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆகஸ்டு 15-இல் நடைபெறும் விழாக்களில் பங்கு கொள்ள வேண்டாம் என்று அவர்களுக்குத் தனித்தனியே கழகத்தின் சார்பில் மடல் எழுதப்பட்டது. முதலமைச்சருக்கும் அன்று கோட்டையில் கொடி ஏற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

4. 16.8.1983 அன்று ஈழ அகதிகளாகத் தமிழகம் வந்து சேரும் குழந்தைகளுக்குப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் கல்வி உதவிகள் வழங்கப்படும் என்று பொதுச் செயலாளர் அறிவித்தார்.

5. இலங்கைத் தமிழர்க்காகத் துப்பாக்கி ஏந்துவோம் என்று சொன்ன இனமான மதுரை ஆதீன கர்த்தர்மீது தமிழக அரசு ஏவிய வழக்கைக் கழகம் சந்தித்தது.

6. தமிழன் இறைச்சிக் கடைகளைத் திறந்திருக்கும் ஜெயவர்த்தனே டில்லிவந்த பொழுது, எதிர்த்துக் கறுப்புக் கொடி! கழகப் பொதுச் செயலாளரும், கழகத் தோழர்களும் பங்கு கொண்டு கைது செய்யப்பட்டனர் (23.11.1983).

7. ஈழத் தமிழர் பிரச்சினையில் உலகத் தமிழர்கள் உணர்ச்சி எரிமலையாக விண்ணில் ஒரு காலும் - மண்ணில் ஒரு காலும் வைத்து கிளர்ந்து நிற்கின்றனர். என்பதை உலகுக்குக் காட்டும் மாநாடுகள் மதுரை மாநகரில் (17,18-12-1983) நடத்தப்பட்டன.

ஈழ விடுதலை மாநாடு என்றே நடத்தப்பட்டது. எழுச்சி மிக்க பேரணி - மதுரை வரலாற்றில் நெருப்புக் கொப்பளமாக வெடித்தது. ஈழ விடுதலைக் கொடியை தோழர் குமரிநாடன் ஏற்றினார்.

ஈழத் தமிழினத் தலைவர்களும், தமிழ்நாட்டுத் தலைவர்களும் பங்கேற்றனர்.

உலகத் தமிழர்கள் மத்தியில் என் இளவல் வீரமணி உயர்ந்து நிற்கிறார் என்பது அறிந்து பெருமிதபடுவதாக அம்மாநாட்டில் கலைஞர் அவர்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த அளவு எழுச்சி மிக்க மக்கள் கடல் திரண்ட மாபெரும் இன எழுச்சி மாநாடு அது.

8. அமெரிக்காவில் நியூயார்க்கில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் பொதுச் செயலாளர் கி. வீரமணி கலந்துகொண்டார்.

(ஜூன் 3 முதல் ஜூலை 2 வரை) லண்டனில் நடைபெற்ற ஈழப் போராளிகள் வீர வணக்க நாளிலும் பங்கேற்றார் (24.7.1984).

9. இங்கிலாந்தில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினையில் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று, அவர்கள் கையொப்பமிட்டு கூட்டு அறிக்கை வெளியிடச் செய்யப்பட்டது. பொதுச் செயலாளர் கி. வீரமணி, ப. நெடுமாறன், எல். கணேசன் எம்.பி., ஆகியோர் இப்பணியில் முன் நின்றனர் (29.7.84).

10. ஈழத் தமிழர் பிரச்சினை-யில் இந்திய நடுவணரசு காட்டி வரும் மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கண்டித்து ஆகஸ்டு 15 சுதந்திர நாளை துக்க நாளாக அறிவித்து நாடெங்கும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது. திருச்சியில் பொதுச் செயலாளர் அதற்காகக் கைது செய்யப்பட்டார். நாடெங்கும் அய்யாயிரம் தோழர்கள் கைதாயினர்.

11. இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பச் சொல்வது முட்டாள்தனம் என்று சொல்லி தமிழினத் தலைவர்களை இழித்தும், ஈழத் தமிழர்களுக்குத் துரோகமும் செய்த இராணுவ அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் துணைக் குடியரசுத் தலைவராகப் பதவி-யேற்று முதன் முதலாகத் தமிழகத்தில் சென்னைக்கு வந்தபொழுது, அவருக்குக் கறுப்புக்கொடி காட்டிட முனைந்து கழகப் பொதுச் செயலாளர் உள்பட திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

12. ஈழத் தமிழர் பிரச்னையைக் கொச்சைப்படுத்தி, இந்தியா டு டே இதழுக்குப் பேட்டி கொடுத்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் கொடும்பாவி கழகத்தின் சார்பில் எரியூட்டப்பட்டது. (6.10.1984)

13. இராமேசுவரம் தீவைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது அவர்களை சிங்களக் கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். அதற்கு எந்தவித எதிர்ப்பு நடவடிக்கையையும் எடுக்காத இந்திய அரசே செயல்படு! தமிழக அரசே தூங்காதே! என்று கழகப் பொதுச் செயலாளரும் மதுரை ஆதீனமும் மதுரையில் முகவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக முன் மறியல் செய்து கைது. (3.12.1984)

பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்துக்குக் கழக சார்பில் நிதியும் வழங்கப்பட்டது.

14. ஈழப் பிரச்சினை என்ற முறையில் டெசோ உருவாக்கப்பட்டது. (TESO - TAMIL EALEM SUPPORTERS ORGANISATION) உருவாக்கப்பட்டது. (13.5.1985)

டாக்டர் கலைஞர் தலைவராகவும், பேராசிரியர் க. அன்பழகன், கி. வீரமணி, மதுரை நெடுமாறன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் கொண்டு தனி ஈழம் உருவாக உருப்படியான பணிகளில் ஈடுபட உறுதி எடுத்துக் கொண்டு பிறந்த அமைப்பு இது!

தமிழ்நாட்டில் இருந்து தமிழீழத் தலைவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள் என்ற செய்தி வந்ததும் - வராததுமாக இது கொடுத்த 24 மணி நேரம் அழைப்பினைச் செவிமடுத்து இலட்சோப லட்சம் தமிழினத்தார் தலைநகரிலே அணி வகுத்து அரிமாக் குரல் கொடுத்தனர் (25.8.1985)

15. டெசோ சார்பில் இரயில் நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து தமிழ்நாட்டையே வெறிச்சோடச் செய்யப்பட்டது. (30.8.1985).

16. விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கிட திராவிடர் கழகத்தின் சார்பில் நிதி வசூலும் உணவுப் பொருள்களும் வசூல் செய்து கொடுக்கப்பட்டது.

17. தமிழ் ஈழப் பகுதிகளில் உயிரைப் பணயம் வைத்து வீரப்பயணம் நடத்தி, கண்ட கொடுமைகளை வீடியோவாக்கித் தமிழகம் திரும்பிய மாவீரன், ப. நெடுமாறனை பிரதமர் ராஜீவ்காந்தி சந்திக்க மறுப்பது ஏன்? அசாம், பஞ்சாப் தலைவர்களுடன் பேச்சு நடத்தும் ராஜீவ் - தமிழர்களை மதிக்கும் லட்சணம் இதுதானா? என்று மயிலைப் பொதுக் கூட்டத்தில் (3.3.1986) பொதுச் செயலாளர் கி. வீரமணி வினா எழுப்பினார்.

18. 7.3.1986: திருச்சி மேற்கு மாவட்டக் கழகத் துணைத் தலைவர் கரூர் பழ. இராமசாமி விடுதலைப்புலிகளுக்கு ஜீப் ஒன்றினை அன்பளிப்பாக வழங்கினார்: ஜீப் சாவி, தமிழர் தளபதி மூலம் விடுதலைப்புலித் தோழர் ஒருவரிடம் தரப்பட்டது.

இடையாற்றுமங்கலத்தில் (8.3.1986) நடந்த இ.ச. தேவசகாயம் மணவிழாவில், திருச்சி கிழக்கு மாவட்ட திராவிடர் தொழிலாளரணி அமைப்பாளர் முத்துச்செழியன் புலிகளுக்காக தமிழர் தளபதி மூலம் சுவேகா மோட்டார் சைக்கிள் ஒன்றினை அன்பளிப்பாக அளித்தார்.

19. 20.5.1986: சிங்கள ராணுவம் விமானத்திலிருந்து குண்டு வீசும் போக்கை தடுத்து நிறுத்தவலியுறுத்தி பிரதமருக்கு கழகப் பொதுச் செயலாளர் இன்று தந்தி தந்தார்.

20. இல்லினாய்ஸ் கருத்தரங்கில் 15.7.1986: அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நகரின் இல்லியனாய்ஸ் பல்கலைக் கழக மண்டபத்தில் ஈழத் தமிழர் குறித்த கருத்தரங்கம் - டாக்டர் இளங்கோ ஏற்பாட்டில் நடந்தது. இதில் 25 நிமிடங்கள் ஆங்கில உரையாற்றிய தமிழர் தளபதி - இலங்கைப் பிரச்சினைக்கு தமிழ் ஈழமே தீர்வு என வலியுறுத்தினார்.

18.7.86: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வாஷிங்டன் ஏரியா உயர்நிலைப் பள்ளியில் தமிழர் தளபதிக்கு நிகழ்த்திய வரவேற்புக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து உரை நிகழ்த்தினார்.

தமிழர் பிரச்சினை பற்றி தமிழர் தளபதியை அமெரிக்க வானொலி (வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா) பேட்டி கண்டது.

21. பெங்களூர் சார்க் மாநாட்டிற்கு இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனே வந்தபோது நமது எதிர்ப்புணர்வைக் காட்டும் வகையில் தமிழ்நாடெங்கும் ஜெயவர்த்தனே கொடும்பாவி கழகத் தோழர்களால் எரியூட்டப்பட்டது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர் (17.11.1986).

22. ஈழப் போராளிகளின் தொலைத் தொடர்பு கருவிகளைத் தமிழக அரசு பறிமுதல் செய்தபோது கழகம் கடுமையாக கண்டித்தது. அரசின் நடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகளின் தளபதி தம்பி பிரபாகரன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். உண்ணாவிரதத்தை பொதுச் செயலாளர் கண்டித்து எழுதினார். மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட அன்றே பொதுச் செயலாளர் நேரில் வீட்டுக்குக்கூட செல்லாமல் உண்ணா விரதத்தை முடித்து வைத்தார் (23.11.1986).

23. யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு உணவை அனுப்பாமல் முற்றுகையிட்டுக் கொன்ற கொலைகார சிங்களவெறி அரசுக்குத் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இந்திய அரசு கப்பல் மூலம் உணவு ஏற்றுமதி செய்த கொடுமையைக் கண்டித்து திராவிடர் கழகமும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரசும் இணைந்து கப்பல் மறியல் போராட்டம் நடத்தியது. தோழர்கள் கைது செய்யப்பட்டனர். (20.2.1987).

24. யாழ் மருத்துவமனையை மூடி தமிழீழ மக்களை அவதிக்குள்ளாகக் திட்டமிட்டிருந்த ஜெயவர்த்தனே அரசை எதிர்த்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன் திராவிடர் கழகமும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரசும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின (8.5.1987). இதன் காரணமாக யாழ் மருத்துவமனை மூடாமல் தடுக்கப்பட்டது.

25. சிங்கள கடற்படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இரண்டு தமிழர்களின் குடும்பத்தினரை சேது பாவா சத்திரத்திற்கு உடனடியாக கழகப் பொதுச் செயலாளர் சென்று அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி கழகத்தின் சார்பில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக அளிக்கப்பட்டது. (26.5.1987)

26. சென்னை சைதாப்பேட்டையில் தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் தனது எடைக்கு ஈடாக அளிக்கப்பட்ட ரூபாய் நாணயங்களையும் (10 ஆயிரம் ரூபாய்) அதோடு கழகத்தால் வசூல் செய்யப்-பட்ட நிதியையும் சேர்த்து ரூ.25,684-57 தொகையையும், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகளையும் விடுதலைப்புலிகளுக்குப் பொதுச் செயலாளர் அவர்கள் கடற்கரை விழாவில் (1.5.1987) வழங்கினார்கள்.

27. ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு காட்டிவரும் அலட்சியத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இரயில் மறியல் போராட்டம் நடத்தியது. திராவிடர் கழகத்துடன், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தோழர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள நாடெங்கும் தோழர்கள் கைது செய்யப்பட்டனர் (1.6.1987)

28. சென்னையில் உள்ள இலங்கைத் தூதர் திசா ஜெயக்கொடி என்பவரின் நடவடிக்கைகள் இந்தியப் பாதுகாப்புக்கு ஆபத்தானவை - அவரை வெளியேற்ற வேண்டும் என்று வீரமணி அவர்களும் நெடுமாறன் அவர்களும் விட்ட அறிக்கையைத் (5.6.1987) தொடர்ந்து 2.7.1987 அன்று மத்திய அரசால் அவர் வெளியேற்றப்பட்டார்.

29. ஈழத் தமிழர்கள்மீது சரித்திரம் காணாத துரோக ஒப்பந்தத்தைத் திணித்த இந்திய அரசைக் கண்டித்தும், ஒப்பந்தத்தை எதிர்த்தும், ராஜீவ்காந்தி -ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை எரித்து அதன் சாம்பல் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது (2.8.1987) திராவிடர் கழகமும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரசும் இணைந்து இப்போராட்டத்தை நடத்தின. நாடெங்கும் பல்லாயிரக்கணக்கில் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

30. நாடாளுமன்றத்தில் கொழும்பு ஒப்பந்தம்பற்றி உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்கும் நோக்கத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்களும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நெடுமாறன் அவர்களும், டெல்லி சென்று முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் சந்தித்து, கொழும்பு ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள துரோகத் தனங்களைத் தோலுரித்துக் காட்டினர் (13.8.1987). அதன் எதிரொலியை நாடாளுமன்றத்தில் கேட்க முடிந்தது.

31. கொழும்பு ஒப்பந்தத்தின் நயவஞ்சகத்தை தமிழ்நாட்டு மக்களிடத்திலே எடுத்துரைக்கும் கட்டுப்பாட்டுடன் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்களும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நெடுமாறன் அவர்களும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு கட்டமாகச் சூறாவளிச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்கள் (16-6-1987 முதல் 21.6.1987 முடிய 7.9.87 முதல் 11.9.1987 முடிய)

32. 1.10.1987-இல் மறைந்த மாவீரன் திலீபனுக்காக இரங்கல் ஊர்வலம்.

33. 9.10.1987 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டத்தில் பார்ப்பன உணர்வோடு செயல்படும் இலங்கைத் தூதர் தீட்சத்துக்குப் பதில் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டுகோள் விடப்பட்டது.

34. 14.10.1987, 19.10.1987 ஆகிய இரு நாள்களிலும் சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு.

17.10.1987 அன்று தமிழ்நாடெங்கும் அரைநாள் கடையடைப்புப் போராட்டம்.

26.10.1987 அன்று தமிழ் நாடெங்கும் உள்ள வானொலி நிலையங்கள் சென்னைத் தொலைக்காட்சி நிலைய முன் மறியல் - பொதுச் செயலாளரும் தலைவர்களும் தொண்டர்களும் கைது - சிறை.

நாடெங்கும் நடைபெற்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டத்தில் பங்கேற்பு (6.11.1987).

21,22.12.1987

தமிழ்நாடு வந்த பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுக்கு கழகத்தின் சார்பில் ஆங்காங்கே கறுப்புக் கொடி காட்டப்பட்டது.

25.1.1988

இந்தியக் குடியரசு நாள் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் அழைக்கப்பட்டார். அதனைக் கண்டிக்கும் வகையில் சனவரி 26 அன்று கருப்புக் கொடி ஏற்றவும் - ஜெயவர்த்தனேயின் கொடும்--பாவியைக் கொளுத்தவும் திராவிடர் கழகம் அறிவித்தது. எங்கெங்கும் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கொடும்பாவியைக் கொளுத்த முயன்றபோது காவல்துறையினர் தடியடி நடத்தினர். கழகப் பொதுச் செயலாளர் உட்பட கழகத் தோழர்கள் பலரும் காயம் அடைந்தனர். கழகப் பொதுச் செயலாளர் உள்பட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

(22-ஆம் முறையாகக் கழகப் பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டார்)

21.3.1988

ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் உள்பட தோழர்கள் கைது.

7.6.1988

பிரபாகரன் உயிருக்குக் குறி வைக்காதே! என்று குரல் கொடுத்து சென்னையில் உள்ள தென் மண்டல இராணுவம் தலைமையகம்முன் ஆர்ப்பாட்டம்

29.7.1988

ராஜீவ் - ஜெயவர்த்தனே துரோக ஒப்பந்தத்திற்கு ஒரு வயது ஆனதை முன்னிட்டு அந்நாளில் நாடெங்கும் கண்டன ஊர்வலங்கள்.

28.7.1988 - 22.8.1988

உலக அரங்கில் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் சக்திகளின் முகத்திரைகளைக் கிழித்தெறிந்திட கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கனடா, அமெரிக்கா சுற்றுப் பயணம்.

31.7.1988

அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் குடியரசுத் தலைவரின் வெள்ளை மாளிகைமுன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மானமிகு கி. வீரமணி கலந்து கொண்டார்.

18.8.1988

தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த விடுதலைப்புலிகளை சிறையில் அடைத்தமையைக் கண்டித்து கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு.

மாநாடுகள்

விடுதலைப்புலிகளின் கைதைக் கண்டித்து நாட்டின் பல முக்கிய பகுதிகளில் கண்டன மாநாடுகள் மதுரை -2.9.1988, தஞ்சாவூர் - 8.9.1988 சேலம் - 14.9.1988

10.9.1988

கால் ஊனமுற்று வீட்டில் இருந்த விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டுவைச் சந்திக்கச் சென்ற திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள் கைது.

19.9.1988

தமிழகத்தில் இருந்த ஈழப் போராளிகளைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தபோது அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் விடுதலைப்புலிகளை அழைத்துப் பேச வேண்டியும் பிரதமர் ராஜீவ்காந்திக்குக் கழகப் பொதுச் செயலாளர் தந்தி கொடுத்தார். 26.9.1988

பாதுகாப்புச் சட்டத்தின் பேரால் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை விடுதலை செய்யக் கோரி திலீபன் நினைவு நாளில் சென்னை, மதுரை மத்தியச் சிறைச்சாலைகள் முன் ஆர்ப்பாட்டம். பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட போராளிகள் பிரச்சினைமீது நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழுமுன் கழகத்தின் சார்பில் போராளிகளுக்காக வாதாடப்பட்டது.

14.5.1989

இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழர் மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் கலந்து கொள்ளல் (29,30.4.1989) வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் ஒருங்கிணைப்புப் பொதுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பங்கேற்பு (14.5.1989).

24.7.1989

மாவீரன் பிரபாகரன் சுட்டுக்கொலை என்று கோழைத்தனமாகக் கிளப்பப்பட்ட புரளியை எதிர்த்து உலகிற்கு உண்மையை எடுத்துரைத்த முதல் தலைவர் வீரமணி. முதல் ஏடு விடுதலை (24.7.89).

29.7.1989

ஈழத்தைவிட்டு இந்திய இராணுவம் வெளியேறக் கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன் தமிழ் நாடெங்கும் ஆர்ப்பாட்டம் தமிழர் தேசியக் கட்சியுடன் இணைந்து நடத்தப்பட்டது.

12.7.1990

ஈழத்தில் தமிழினப் படுகொலை புரியும் இலங்கை அரசை எதிர்த்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் அலுவலக முன் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.

26.9.1990

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் எல்லாம் கண்டனப் பேரணிகள் - திராவிடர் கழகத்தின் சார்பில்.

13.7.1992

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் ஈழ அகதிகள் கல்விப் பாதுகாப்பு மாநாடு

6.6.1995

ஈழத்தில் இந்திய ராணுவத் தலையீடு கூடவே கூடாது என்ற பொருளில் தியாகராயர் நகர் சங்கர்தாஸ் கலையரங்கில் பழ. நெடுமாறன் தலைமையேற்க திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி பங்கேற்று கருத்துரையாற்றினார்.

17.7.1995

ஈழத்தில் முப்படைகளைக் கொண்டு தமிழர்களை அழிக்கும் சிங்கள அரசின் போக்கைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் இலங்கைத் துணைத் தூதர் அலுவலகத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தூதரக அதிகாரியிடம் - போரை நிறுத்தக் கோரி மனுவும் அளிக்கப்பட்டது. முன்னதாக சென்னை பெரியார் திடலிலிருந்து கண்டன ஊர்வலம் புறப்பட்டு, கல்லூரி சாலையில் உள்ள தூதர் அலுவலகத்திற்கு முழக்கமிட்டு ஊர்வலமாகச் சென்றனர் கழகத் தோழர்கள்.

29.7.1995

ஈழத்தில் இனப் படுகொலை என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் எழுச்சியுரை ஆற்றினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி.

1.8.1995

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்த அய்.நா.விடம் கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை திராவிடர் கழகம் இன்று தொடங்கியது. 31.9.1995 அன்றுவரை இப்பணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

10.8.1995

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும், கையெழுத்து இயக்கம் நடத்திடவும் தென் சென்னை மாவட்டத்தில் இன்று துவங்கி நூறு இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

6.11.1995

ஈழத் தமிழர் இனப்படுகொலையைக் கண்டித்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் ஆகிய இடங்களில் கண்டனப் பேரணி திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. தஞ்சாவூரில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி பங்கேற்றார்.

கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு அனைத்துத் தரப்பினரும் எரியும் தீயை அணைப்போம் வாரீர்! என்று வேண்டுகோள் விடுத்தார் கழகப் பொதுச் செயலாளர்.

9.11.1995

ஈழத்தில் நடைபெறும் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்திட திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் கூட்டப்பட்டது. 23.2.1996

சென்னை பெரியார் திடலில் ஈழத் தமிழர்களுக்-கெதிரான இந்தியத் தலையீடு பற்றி கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, பழ. நெடுமாறன், பழ. கருப்பையா, சேவியர் அருள்ராஜ் ஆகியோர் பேசினர்.

30.4.1996

ஈழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்-களில் மனிதச் சங்கிலி அறப்போர் நடைபெற்றது.

20.8.1996

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னை மே தினப் பூங்கா அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து பேரணி புறப்பட்டு, ஆதித்தனார் சாலை பாந்தியன் சாலை, கல்லூரி சாலை வழியாக இலங்கைத் துணைத் தூதரகத்தின்முன் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் ஆயிரக்கணக்கான கழகத் தோழர்கள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்-பட்டது.

28.5.1997

சென்னைப் பெரியார் திடலில் ஈழத் தமிழர்ப் பிரச்சினைபற்றி முடிவு எடுக்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை திராவிடர் கழகம் கூட்டியது.

6.6.1997

ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்காக தமிழகம் தழுவிய அளவில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. ஆயிரக்-கணக்கில் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

17.6.1997

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில், தமிழர் தலைவர் கி. வீரமணி, பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு, பழ. நெடுமாறன் ஆகியோர் உரையாற்றினர்.

26.7.1997

தமிழக மீனவர் பாதுகாப்பு, கச்சத் தீவு மீட்புரிமை மாநாடு இராமேசுவரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. தமிழர் தலைவர் கி. வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசு, மருத்துவர் ச. இராமதாசு, பழ. நெடுமாறன், கா. ஜெகவீரபாண்டியன், டாக்டர் இரா.ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து-கொண்டனர்.

29.7.1997

கச்சத்தீவு உரிமை தமிழக மீனவர் பாதுகாப்பு கோரி திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி தாக்கல் செய்த ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. (வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

14.12.1997

ஈழத் தமிழர் ஆதரவு பன்னாட்டு மாநாடு டில்லி-யில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசு அவர்களை அமைப்பாளராகக் கொண்ட அம்மாநாட்டில் தமிழர் தலைவர் கி. வீரமணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள் பங்கு கொண்டனர். அரங்கில் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஜார்ஜ் பெர்னாண்டசு இல்லத்தில் நடத்தப்பட்டது. நடுநிலையாளர்கள் முன்னிலையில் விடுதலைப்புலிகள் - இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும், போரை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

25.2.1998

ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தீர்ப்பு குறித்து சிறப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, பழ. நெடுமாறன் ஆகியோர் உரையாற்றினர். ராஜீவ் கொலை வழக்கில் மறு விசாரணை தேவை என்றார் திராவிடர் கழக பொதுச் செயலாளர்.

7.1.2006

இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மா.வை. சேனாதி ராஜா, மலைவாழ் மக்கள் முன்னணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பொ. சந்திரசேகரன் ஆகியோர் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களைச் சந்தித்து உரையாடினர்.

1.6.2006

சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஈழத் தமிழர் பாதுகாப்புப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார். பாவலர் அறிவுமதி, பா.ம.க., தலைவர் கோ.க. மணி (எம்.எல்.ஏ.,) ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார்.

12.11.2006

நாள்தோறும் ஈழத் தமிழர்கள் சிங்கள இராணுவத்-தால் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டித்தும், பட்டினியால் சாகடிக்கப்படும் கொடுமையைக் கண்டித்தும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பி திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலை-நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி தலைமை தாங்கி நடத்தினார். சென்னையில் திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை தலைமை தாங்கினார்.

19.12.2006

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுத்திட இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்று கோரி தந்தி அல்லது தொலைப்பதிவி மூலம் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரசு தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு அனுப்பி வைக்குமாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர்களுக்கு வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டார்.

22.12.2006

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்குப் பாதுகாப்புக் கோரி தமிழ்நாடெங்கும் மனிதச் சங்கிலி அறப் போராட்டம் திராவிடர் கழகத்தால் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. திமுக., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்திய யூனியன் முசுலிம் லீக் கட்சியினர் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன், மதிமுக சார்பில் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு அணி வகுக்கப்பட்டது.

5.2.2007

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜி லிங்கம், பத்மநாபன் அரியநேத்திரன் ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களை சென்னைப் பெரியார் திடலில் இன்று சந்தித்து உரையாடினர். உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளர் டாக்டர் இரா. ஜனார்த்தனமும் உடன் வந்தார்.

6.3.2007

ஈழத்தில் நடைபெறுவது என்ன? என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டத்தில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களும் உரையாற்றினர்.

20.7.2007

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை கோரி தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் மெமோரியல் ஹால் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையேற்றார்.

31.12.2007

இலங்கை சுதந்திர தினவிழாவில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் கலந்து கொள்வதை எதிர்த்து சென்னை மெமோரியல் ஹால் முன் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. அதன் காரணமாக பிரதமர் பயணம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

4.8.2008

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை கோரியும், தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கோரியும் திராவிடர் கழகத்தின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை மெமோரியல் ஹால்முன் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

22.9.2008 ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் சென்னை சென்ட்ரலில் இரயில் மறியல் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தியது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் - திருமாவளவன் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளரும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்-கில் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

20.10.2008 பற்றி எரிகிறதே ஈழம் என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பொதுக் கூட்டத்-தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.

24.10.2008 தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி இன்று சென்னையில் நடைபெற்ற மனித சங்கிலிப் பேரணியில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் கொட்டும் மழையில் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

6.11.2008 பற்றி எரியும் ஈழமும் பார்ப்பனப் பத்திரிகைகளும் என்ற தலைப்பில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உரை நிகழ்த்-தினார். திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை தலைமை தாங்கினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் வரவேற்-புரையாற்றினார்.

1983 முதல் இந்நாள் வரை ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் தொய்வின்றித் தொடர்ச்சியாக ஒரே நிலையில் (Consistency) நின்று குரல் கொடுத்தும், போராடியும் வரும் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு வரலாற்றில் என்றும் நின்று பேசக் கூடியதாகும்.

பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் எழுச்சியூட்டும் தொடர் பயணங்கள் மாநாடுகள், பேரணிகள், போராட்டங்கள் மட்டுமல்ல தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விளக்கும் கண்காட்சிகளையும் கழகம் நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

படித்து விட்டீர்களா? இயலுமானால் இது குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

விவாதிப்போம்
நன்றி

தமிழ் ஓவியா said...

3-1-2009 "விடுத்லை" இதழில் வீரமணி அவர்கள் எழுதியுள்ள அறிக்கையை தருகிரேன். அதில் ஈழப்பிரச்சினையில் தி.க.வுக்கு எவ்வளவு ஈடுபாடு இருக்கிறது என்பதை அந்த அறிக்கை தெளிவுபடுத்தும்.

"

மக்கள் அரவம் அற்ற கிளிநொச்சியைப்
பிடித்துவிட்டதாம் சிங்களப் போர்ப்படை

இது தோல்விக்குச் சமமான வெற்றி

விடியாத இரவுகளும் இல்லை! முடியாத போர்களும்
இல்லை! 1996 இல் இழந்த கிளிநொச்சியை 1998
இல் மீண்டும் பிடித்த வரலாறு உண்டு!

ஓ! தமிழ்ச்சாதியே! உன் நிலைக்கு என்றுதான் விடுதலை?

நாளும் சாகும் எம் தமிழ் இனம் காத்திட -
நியாயம் பேசும் உலகமே! நீ ஏன் ஊமையானாய்?

தமிழர் தலைவரின் உருக்கமான கேள்வி!

ஏற்கெனவே போர்ப்படைத் தாக்குதலால், அழிந்துபட்ட கிளி நொச்சியை விட்டு மக்கள் வெளியேறி விட்ட நிலையில், மக்கள் நட மாட்டம் இல்லாத வெறும் கிளிநொச்சியைப் பிடித்த இலங்கை ராணுவ வெற்றி, தோல்விக்குச் சமமான வெற்றி என விவரித்துத் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள உருக்கமிகு அறிக்கை வருமாறு:-

நேற்று மதியம் ஒரு நாளேட்டின் செய்தியாளர் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டு கிளிநொச்சியை சிங்கள இராணுவம் பிடித்துவிட்டது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன வென்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்தபோது நான் குறிப்பிட்டேன். அதிகாரப்பூர்வ மான செய்தி வரட்டும்; அதற்குப் பிறகு அதுபற்றி கருத்து கூறுகிறேன் என்று மிகச் சுருக்கமாகப் பதிலளித்தேன்.

காலி செய்துவிட்ட நகரம்

ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காகப் போராடுகிறார்கள்; வாழ்வா, சாவா என்ற அந்த ஜீவ மரணப் போராட்டத்தில், விடுதலைப்புலி களை ஒழிக்கிறோம் என்ற போர்வையில், தமிழ் இனத்தையே கூண்டோடு, பூண்டோடு அழித்துவிடத் திட்டமிட்டுள்ளது இலங்கையின் சிங்கள இராஜபக்சே அரசு!

விடுதலைப்புலிகளின் தலைமையிடமாக இருந்த கிளிநொச் சியைக் கைப்பற்றி விட்டோம் என்று அறிவித்ததை அதிகாரப் பூர்வமாக புலிகளும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

இதுபற்றிய அவர்தம் இணைய தளத்தில்,

மக்கள் நடமாட்டம் அறவே இல்லாதது கிளிநொச்சி. ஆள் நடமாட்டம் இல்லாமல் கிட்டத்தட்ட ஆவி நகரம்போல் மாறிவிட்ட நகரைத்தான் (சிங்கள) இராணுவம் கைப்பற்றியுள்ளது.

இந்நகரைவிட்டு பொதுமக்கள் எப்போதோ காலி செய்து வடகிழக்குப் பகுதிக்குச் சென்றுவிட்டனர்.

இங்குள்ள கட்டடங்கள் இராணுவத்தின் தொடர் தாக்குதலில் அழிந்துவிட்டன. கடுமையான தாக்குதலுக்குப் பிறகும் புலிகள் தரப்பில் உயிரிழப்பு குறைவே என்றும் அச்செய்தி மேலும் தெரி வித்துள்ளது.

இழந்ததைப் பிடித்தனர் புலிகள்

முன்னதாக 1996 இல் கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது. அதை 1998 பிப்ரவரியில் மீண்டும் புலிகள் கைப்பற்றினர் என்பது பழைய வரலாறு.

சுமார் 7 நாடுகளின் - வல்லரசு நாடுகள் உள்பட வியூகம் வகுத் துதான் ஆள் நடமாட்டமில்லாத சூன்யப் பிரதேசமான கிளி நொச்சியை சிங்கள இராணுவம் கைப்பற்றியதாகக் கூறிடும் நிலையில், இது ஒரு தற்காலிகப் பின்னடைவு ஏற்கெனவே புலிகள் தரப்பில் பின் வாங்குதல் என்பது, எந்த ஒரு யுத்தத்திலும் வெற்றி கரமான வாபஸ் (Successful Retreat) என்பது பலரும் பயன் படுத்தும் போர்த் தந்திரங்களில் ஒரு பகுதிதான் என்பது உலகறிந்த ரகசியம்.

தோல்விக்கு ஈடான வெற்றி

யாரும் வசிக்காமல், மக்களும், அவர்களைப் பாதுகாக்கப் போராடும் புலிகளும் கைவிட்ட, ஆள் அரவம் அற்ற பகுதிகளைக் கைப்பற்றிவிட்டது ஒரு தோல்விக்குச் சமமான வெற்றி (Phyrhic
Victory - இப்படி ஒரு ஆங்கிலச் சொல் உண்டு)யாகும்.

அதுபோலவே, ‘Battles may be lost; but war will be won’ சண்டைகளில் தோற்பது உண்டு; ஆனால், அவர்கள், போரில் வெல்லுவோம் என்று உறுதி படைத்த போராளிகளாவார்கள்.

வாழ்வுரிமைக்குப் போராடும் நிலையில், இலங்கையில் கிளி நொச்சியைப் பிடித்துவிட்டதால் போர் முடிந்துவிட்டது என்று அவர்களே கூட ஒப்புக்கொள்ள முடியாத நிலையில்தான் சிங்கள அதிபரும், அதன் தளபதியும் உள்ளனர்!

அங்கே நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போரில் இப்படிப் பல சோதனைகளும், வேதனைகளும் ஏற்பட்டாலும் அதை எதிர் கொள்ளும் துணிவும், நெஞ்சுரமும் உள்ளவர்களாக புலிகள் இன்னமும் உள்ளார்கள்.

பதுங்கும் புலி - பாயும்

புலி பதுங்கினால் மேலும் தீவிரமாகப் பாயும் என்பது தமிழ்ப் பழமொழி.

எப்படியாயினும் இடையில் எமது ஈழத் தமிழர்கள் இப்படிக் குண்டு மழையால் கொல்லப்பட்டு மடிகின்றனரே, எவ்வளவு காலம் இந்த ரத்த ஆறு ஓடவேண்டுமோ?

ஓ... தமிழ்ச் சாதியே! உன் நிலைக்கு என்றுதான் விடுதலை? விடியல்? என்றே இதயத்தில் வடியும் இரத்தத் துளிகளையும் துடைத்துக் கொண்டு கேட்கிறோம்!

விடியாத இரவுகள் இல்லை; முடியாத போர்களும் இல்லை! ஈழத் தமிழரின் சுதந்திர உணர்வுக்குக் கொடுக்கும் விலைகளும், தலைகளும் இப்படி நாளும் பெருகவேண்டுமோ?

அய்யகோ!

இன உணர்வுமட்டுமா - மனிதநேயம்கூட செத்து சுண்ணாம் பாகிவிட்டதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது!

பத்துத் தடவை பாடை வராது என செத்து மடிய செருகளம் கண்ட போராளிகளுக்காக நாம் வருந்தவில்லை.

சாகத் தேவையில்லாத அப்பாவி மக்கள், பிஞ்சுகள்- என்னருந் தமிழ் இனம் இப்படி நாளும் அழியவேண்டுமா?

நியாயம் பேசும் உலகமே! நீ ஏன் ஊமையானாய்?"

------------- "விடுதலை" -3.1.2009

Anonymous said...

தங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. நீங்கள் எடுத்து காட்டியிருக்கும் நிகழ்வுகள் பல குறித்து பத்திரிக்கைகளை தொடர்ந்து கொண்டிருப்பதன் மூலம் நான் அறிவேன்; ஈழப்பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பேசுவது என்ற அளவில் தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல்வாதிகளும் செய்திருக்கிறார்கள். இதற்காக, திமுக ஒரு முறை ஆட்சியை இழந்தது என்பது உண்மை. ஆனால் அதுவரை மத்தியில் முழு செல்வாக்கை கொண்டிருந்த காங்கிரசோ, மற்ற பிற தமிழுணர்வுக்கு எதிரான கட்சிகளோ இப்பொழுது முழு பலத்துடன் இல்லை; ஆனால் திமுக போன்ற கட்சிகளுடன் துணையுடந்தான் மத்தியில் ஆட்சியே நடந்து கொண்டிருகிறது. இந்த பலத்தை கொண்டு தமிழருக்கு எதிரான இந்தியாவின் வெளியுறவு திட்டங்களை மாற்றி அமைக்க முடியவில்லை என்பது நம்பும்படியில்லை. கேட்ட திட்டங்களையும், துறைகளையும் வாங்கி கொள்ளும் திமுக, ஈழ தமிழர்ப்பிரச்சனைகளில் மற்ற கட்சிகளின் தலைவர்களின் குரல்களை மழுங்கடிக்கும் நோக்குடந்தான் அன்மை காலங்களில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இப்போதைய திமுகவிற்கு, அன்னிய நாடுகளும் அவர்தம் முதலீடும் வேண்டும்; நிதி பெருக வேண்டும்; நீதி முக்கியமில்லை;

செந்தில்

Mr.Raja has clarified the issue very clearly. For a party in power, rhetoric is not enough, DMK is diluting and diverting the other parties position. For 300 civilians, if India can move to UN, for more than 800 tamil fishermen, what did India and DMK govt do? I would even suggest some politicians in DMK to quit on this issue and join other parties (the problem is, I cannot think of anyone other than the new MP Kanimozhi, hope this woman is sincere in her utterances on this issue; that is the sad state of affairs in DMK for all their rehetorics on tamil language and culture; Do you get it what I mean?)

UPA betrayed Sri Lankan Tamils cause: CPI

New Delhi (PTI): Accusing the Congress-led UPA of "betraying" Sri Lankan Tamils cause, the CPI on Sunday asked the government to tell President Mahinda Rajapaksa to end the war and resolve the ethnic conflict through negotiations. "It is high time that the Central Government headed by Congress recast its policy towards Sri Lanka and send External Affairs Minister Pranab Mukherjee as promised to a multi-party delegation from Tamil Nadu," CPI National Secretary D Raja said.

"If the UPA does not fulfil the assurances it has given on the Sri Lankan issue it would amount to betrayal of the Tamil cause. The government has already betrayed Tamils by providing arms to Sri Lanka," he said. Raja wondered whether the government of India has any policy towards Sri Lanka and asked whether the UPA is waiting for the war to end in Sri Lanka.

He said India should tell the Rajapaksa government to immediately stop the war and to come forward to ending the three-decade-old ethnic conflict through dialogue. "Rajapaksa government should not think that continuing the war is the only solution. It is not the solution... dialogue is the only means to end the conflict in the island," Raja said.

"India should help Tamils live peacefully in their country and also make sure that their legitimate aspirations are met," he said. The DMK, which is part of the UPA government, is responsible for all the steps taken by the government on the issue, he said and added that the Dravidian party cannot "absolve" of its responsibility in the issue.

"The DMK cannot hoodwink the people of Tamil Nadu by its rhetoric on the issue. It is also responsible for the government's actions," he said.

Raja also said that India should not indulge in providing "clandestine military aid to the Sri Lankan government."

"If the government continues to do that, the Congress will be condemned for betraying the cause of Tamils," Raja said.

He asked the government to clarify reports that Air Force personnel have visited Sri Lanka to provide assistance to the island's Air Force.

Raja also asked the international community to ensure that the affected people in the north of Sri Lanka have enough food and medicine.

He said thousands of people, including women and children, have been affected due to the ongoing offensive between the LTTE and the Sri Lankan Army.

Mahadev said...

Sir,If you really want to eliminate caste in Tamilnadu.

1)Dont blame only "brahmins"
2)Please improve people who are NOT learning properly, give them jobs in your private institution
3) Give them money to improve
Everything will be alright.

Like in current +2 Entrance exam result,its NOT brahmin community which is getting all first rank,only BC/MBC people are coming,so education is the only thing will eliminate all.No point in just scolding the brahmin people.