Search This Blog
1.1.09
"சாராயம்", "கஞ்சா" குடித்த ''பாரதியார்"
பாரதியாரைப் பற்றிப் புகழாத பார்ப்பனர்களே இல்லை என்று சொல்லலாம். அதுபோல பொதுவுடமைபேசும் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதவர்களும் சில பட்டிமன்றப் பேச்சாளர்களும் பாரதியின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளாமல் புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்கள். மது,கஞ்சா போதை போல் அவர்களுக்கு "பாரதி" போதை. அந்த போதைதெளியவும், பாரதியின் ஒழுக்கத்தின் யோக்கியதையை அறிந்து கொள்ளவும் இப் பதிவு வெளியிடப்படுகிறது. மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழ்காணும் இணைப்பை பயன்படுத்தவும்.
http://www.kalachuvadu.com/issue-108/page27.asp
---------------------------------------------------------------------------------------
பாரதியாரோட பழக்கவழக்கங்கள் பற்றி?
அவருக்குச் சில வீக்னஸும் உண்டு. கஞ்சா குடிக்கறது. வடநாட்டுக்கெல்லாம் போயிருந்திருக்காரு இல்லே. சிறு வயசிலே காசியிலதான் முக்கியமா இருந்திருக்காரு. அங்க கஞ்சா குடிக்கிற பழக்கத்தைப் பாத்திருக்காரு. எங்க ஊர் கடையம் சின்ன கிராமம். அங்கேயும் ஒரு கஞ்சா ஆசாமி. அவன் ஒருத்தன் கிட்டேதான் கிடைக்கும். எங்கேயிருந்தோ அவன் வாங்கிட்டு வந்திடுவான். அவன் பெயர் ஆறுமுகம். கோவில்ல பணி செய்யறான். ஓச்சன்னு சொல்லுவாங்க. அவனைத் தெரிஞ்சு வீட்டுக்கு வரவழைச்சாரு. அவனைக் ‘கஞ்சா கொண்டாறியா’ன்னு கேட்பாரு. அவன் கொண்ணாந்தான். சிலும்பியை (விரல்களை விரிக்கிறார்) அப்ப பார்த்ததுதான். அதுக்கு முன்னாலே அதெல்லாம் தெரியாது. அதை நல்லாக் கசக்கி உள்ளே வைப்பார். அதைப் பத்தவைக்க முக்கியமா தேங்காய் நார் வேணும். அதுக்கு என்ன செய்றது? அவர் வீட்டுக்குப் பின்னாலே ஒரு கிணறு. அந்தக் கிணத்திலே ஒரு ராட்டினம் போட்டிருந்தது. ராட்டினத்தில ஒரு கத்தைக் கயிறு. கிணத்துத் தண்ணீரை இறைக்கிற அளவுக்கு நீளக் கயிறு அது. வர வர அதோட நீளம் குறைஞ்சிருச்சு. அதைக் கட் பண்ணிடுவாரு. இவ்வளவு நீளம் கட் பண்ணினால்தான் கனியும். அப்ப இந்தக் கஞ்சாவை ஊன்னு உறிஞ்சுடுவாரு (சிலும்பியை உறிவதுபோல் பாவனை செய்கிறார்). அப்படி உறியும் போதே பரலோகத்திலே போற மாதிரி கண்ணை மூடிக்குவாரு. அது ஒரு வேடிக்கை. அவரும் இவனும் மாறிமாறிக் குடிப்பாங்க. ஒருநாள் ‘என்ன கிணத்திலே வாளிக் கயிறு எட்டமாட்டேங்குதே’ன்னு செல்லம்மா கேக்கறாங்க ‘அதுக்கு வேற வாங்கிக்கோ. இப்ப அதுக்காக என்ன? கொஞ்சம்தானே எடுத்தேன். இனிமே எடுக்கமாட்டேன்’ அப்படின்னு ஒரு சமாதானம் சொல்லிவிட்டுட்டாரு. இப்படி ஒரு வேடிக்கையான ஆளு அவரு. ...........
....................மது பானத்தை அந்தந்த கிளாஸ்லேதான் ஊத்திச் சாப்பிடணும்னு அவர்கிட்டே ஒரு கண்டிப்பு கிடையாது. சாயந்திரம் வயக்காட்டிலே வேலை செஞ்சிட்டு அரிஜனங்கள் போவாங்க. போற வழியிலே அங்கே சேரிப் பக்கம் கள்ளுக்கடை இருக்கும். அவங்க பட்டையைக் குடிச்சிட்டு அலுப்புத் தீர ஆட்டம் பாட்டம் எல்லாம் போடுவாங்க. ஒரு நிமிஷம் இதோ வந்திடறேன்னு எங்ககிட்டே சொல்லிட்டு உள்ளே போயிடுவாரு. அவரு பட்டையை நீட்டமாகப் புடிச்சிக்குவார். ‘ஏ சாமி வந்திருக்கார்’னு அதில ரெண்டு மூணு விடுவான். நல்லா நிறையச் சாப்பிடுவாரு. அவங்க எல்லாம் ஆடுவாங்க. பாடுவாங்க. இவரு நேராக் கிளம்பி வந்திடுவார். அந்த ஸ்மெல் மட்டும் கொஞ்சம் இருக்கும். மற்றபடி எந்தவித நடவடிக்கைகளிலும் வித்தியாசம் இருக்காது.
-------------------நன்றி: "காலச்சுவடு" இதழ் -108 டிசம்பர் 2008
Labels:
பாரதியார்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
இது போன்ற செய்திகளை வெளியிடுவதன் மூலம் வடக்கத்தவர்களின் வலையில் நீங்கள் வீழ்கிறீர்கள்.
தென்னாட்டைச் சேர்ந்தவர்களின் வரலாறுகளை சுத்தமாக மறைத்து விட்டார்கள். எஞ்சி இருக்கும் பாரதி போன்றோருக்கும் இது போன்ற சில பலவீனங்களை ஏற்படுத்தியோ அல்லது பெரிது படுத்தியோ தென்னாட்டுக் காரர்களின் உழைப்பை ஓரங்கட்ட நினைக்கிறார்கள்.
பார்ப்பனர்களைப் பொறுத்தவரை தென்னாடு வடநாடு என்று பார்ப்பதில்லை. காஸ்மீரில் இருக்கும் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரியில் இருக்கும் பார்ப்பான் மருந்து கொண்டு போவானாம்.
இது உண்மை என்பதை காஸ்மீர் பண்டிட் பார்ப்பானுக்கு ஆபத்து என்கிற போது இங்கிருக்கும் துக்ளக் சோ கோமாளியும், இல. கணேசன்களும் கொதித்து எழுவதை தாங்கள் கவனிக்க வில்லையா?
பார்பனரல்லாதவர்கள் பர்ப்பனர் சாப்பிடுவதைப் பார்த்தாலே தீட்டு என்று அத்தனை சோற்றையும் கீழே கொட்டி பார்ப்பனர்கள் அல்லாதாரை இழிவு படுத்தியதையும்,
தாழ்த்தப்பட்டவர்கள் என்பதை அடையாளப்படுத்த கருப்புக் கையிறு கட்ட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியதையும்
அம்பேத்கர் அம்பலப்படுத்தி விவரங்களை கொஞ்சம் ஊண்றிப் படிக்குமாறு வேண்டுகிறேன்.
பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை பார்ப்பனர்கள் நடந்து கொள்ளும் சம்பவங்கள் உணர்த்தி வருகின்றன்.
மேலும் விவாதிப்போம்.
சுரேஷ் சார் கீழ்கண்ட இடுகையைப் படிக்க வேண்டுகிறேன்.
1.http://aalamaram.blogspot.com/2008/12/blog-post_06.html
//தென்னாட்டைச் சேர்ந்தவர்களின் வரலாறுகளை சுத்தமாக மறைத்து விட்டார்கள். எஞ்சி இருக்கும் பாரதி போன்றோருக்கும் இது போன்ற சில பலவீனங்களை ஏற்படுத்தியோ அல்லது பெரிது படுத்தியோ தென்னாட்டுக் காரர்களின் உழைப்பை ஓரங்கட்ட நினைக்கிறார்கள்.//
உங்களின் பெருந்தன்மையை நினைத்து வியக்கிறேன். போற்றுகிறேன். தமிழன் யாதும் ஊரே! யாவரும் கேளீர்! என்று வாழ்ந்த ம்ரபினர்.
என்னைப்பொறுத்த அளவில் உலகம் முழுவதுதும் ஒன்றாக இருக்க வேண்டும் ,அனைவரும் மனிதன் என்ற ஒற்றை சொல்லில் மட்டுமே விழிக்கப்பட வேண்டும் என்ற ஆசையுள்ளவன். ஆனால் நடைமுறை அப்படி இல்லையே.
என்னை வடக்கத்தவர்களின் வலையில் விழுவதா சொல்லி தென்னாட்டுக் காரரான பாரதியை ஓரங்கட்டுவதகா சொல்லியுள்ளதைப் பார்க்கும் போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
வடக்கத்தவன் ஓரங்கட்டுவது இருக்கட்டும் பாரதி ஓரங்கட்டிய வர்கள் விவரங்களைப் பாருங்கள் படியுங்கள்:-
"பாரதியைப் பற்றி, நான் அறிந்தவரையில், இன்றுவரை ஏறக்குறைய 525 நூல்கள் வெளீவந்துள்ளன. இதில் 500க்கும் மேற்பட்ட நூல்கள் பாரதியை வானாளாவப் புகழ்ந்து கூறுபவையாக உள்ளன. இவை, பெரும்பாலும் பாரதி ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரர், பெண் விடுதலை வீரர், சாதிமறுப்பு வீரர், தமிழ் இனத்திற்காகப் பாடுபட்டவர் என்ற கோணத்திலேயே எழுதப்பட்டுள்ளன.
பாரதி 1906 முதல் 1910 வரையிலேதான் அவர் பெண் விடுதலையாளராக இருந்தார்.
அவர் ஆங்கிலத்தை மிகக் கடுமையாக வெறுத்தார்.அதற்குக் காரணம் பார்ப்பனக் கலாசாரத்தை ஆங்கிலம் அழித்து விட்டது என்பதால்தான்.இதனால் தான் அவர் தமிழில் எழுதினார் தமிழின் மீது அவருக்கு உண்மையான பற்று இல்லை என்பதை அவருடைய எழுத்துகளில் காணலாம.
பாரதியார் வள்ளலாரைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை. ஆனால் இராஜாராம் மோகன்ராயைப் பற்றி எழுதி உள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி எழுதவில்லை. ஆனால் ஜான்சிராணி லட்சுமிபாயைப் பற்றி எழுதியுள்ளார்; தமிழுக்கு ஆக்கம் சேர்த்த கால்டுவெல்லைப் பற்றியோ, ஜி.யூ.போப்பைப் பற்றியோ, மனொன்மணீயம் சுந்தரனாரைப் பற்றியோ பாரதியார் எழுதவில்லை, ஆனால் ஆரியமொழி உயர்ந்த மொழி என்று கூறிய மாக்ஸ்முல்லரைப் பற்றி எழுதியுள்ளார்; ஆனால் வேத ரிஷிகளின் பாடலுக்கு உரை எழுதி உள்ளார்.
ஜி.யூ.போப் திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கில மொழியாக்கம் செய்து உலகத்தின் பல மூலைகளில் தமிழின் பெருமையைச் சேர்த்தார். ஆனால் பாரதியாரின் ஆங்கில மொழி பெயர்ப்பு Agni and other poems . பாரதி ஆரிய வேதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகம் முழுவதும் பரவச் செய்தார். பாரதியார் தமிழ் இலக்கியங்களைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறீயுள்ளார். (பார்க்க ; சுத்தானந்த பாரதியின் கவிக்குயில் பாரதியார், பக். 73,74) எல்லாம் புதிது புதிதாகச் செய்வோம் எனக் கூறிய பாரதியார் 1914 முதல் அரவிந்தரின் ஆரியா பத்திரிக்கையில் ஆரியர்களின் வேதங்களின் பெருமைகளைப் பற்றியே தொடராக எழுதி வந்துள்ளார். ஆரியம் கலவாத தனித் தன்மையுடைய தமிழ் ஜாதி; அது ஆரிய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக் குழந்தை என்றெழுது” என்றுதான் எழுதியுள்ளார். ( இனம் என்பதைக் குறிக்க பாரதியார் ஜாதி என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். பார்க்க: பாரதியின் கடிதங்கள், ப.158, வானாதி பதிப்பகம்).
பாரதியார் ஆரியச் சார்பானவர் என்பதைப் பாவலரேறு பெருஞ்சித்தரனார் அவர்கள் ‘ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட்டங்கள்’ என்ற தமது நூலில் சுட்டிக் காட்டியுள்ளார். அன்றில் ஆசிரியர் சி.வெற்றிவேந்தன் அவர்கள் தமது ‘பாரதியின் மறுபக்கம்’ என்ற நூலில் பாரதியின் பாடல்களில் உள்ள ஆரியச் சார்பைச் சுட்டிக் காட்டியுள்ளார். தோழர் வெற்றிமணிஅவர்கள் ‘பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே’ என்ற நூலில் பாரதியின் ஆரியச் சார்பைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
இவர்கள் மூவருமே பாரதியின் கவிதையில் உள்ள ஆரியச் சார்புகளை மட்டுமே சுட்டிக் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான நூலாசிரியர்கள் பாரதியின் கவிதைகளை மட்டுமே படித்துவிட்டு பாரதியைப் பெரிய புரட்சியாளராகப் படம் பிடித்துக் காட்டுகின்றனர்.
கு.வெ.கி. ஆசான், ‘பாரதியார், பாரதிதாசன், பெரியார்’ என்ற நூலில் பாரதியின் ஆரியச் சார்பினைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரதியின் தமிழ் உணர்வு என்பது ஆங்கில - கிறித்துவ கலாசாரத்திற்கு எதிரான இந்து மதக்காப்பு என்ற தன்மையில் ஆனது . பாரதி கூறுவார் நல்ல தமிழில் படிப்பவன் நல்ல இந்துவாக இருப்பான்;
ஆங்கிலக் கல்வி படிப்பவன். இந்து மதப்பற்று இல்லாதவனாக ஆகிவிடுவான் என்பார். ஆனால் பாரதிதாசனுடைய தமிழ்ப்பற்று என்பது இன ரீதியிலானது. நல்ல தமிழ் படிப்பவன் நல்ல தமிழனாக இருப்பான் என்பார்.
பாரதியின் தமிழ் உணர்வு மதரீதியிலானது. பாரதிதாசனின் தமிழ் உணர்வு இனரீதியிலானது. பாரதி தொடக்கத்தில் முற்போக்காக இருந்து பிறகு மெல்ல மெல்ல இந்துத்துவ உணர்வில் மூழ்கி அதரித்துக் கொண்டே சென்றார். ஆனால் பாரதிதாசன் தொடக்கத்தில் ஆத்திகராக இருந்து சுயமரியாதைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு முழு நாத்திகராக மாறினார்.
ஆக பாரதியின் பரிணாம வளர்ச்சி என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை நோக்கியே தமிழரை அழைத்துச் செல்கிறது. பாரதிதாசனின் பரிணாம வளர்ச்சி என்பது தமிழனின் விடுதலையை நோக்கித் தமிழரை அழைத்துச் செல்கிறது.
பாரதியின் முழுப் படைப்புகளாகிய கவிதை,கட்டுரை,கதை முதலியவற்றை ஒருசேரப் படித்து அவரைப் படம் பிடித்துக் காட்ட வேண்டும்.இதுவே உண்மையான ஆய்வு."
-------------நூல்;-வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் ஒன்பதாம் அத்தியாயத்திலிருந்து.
சுரேசு சார் இப்போது சொல்லுங்கள் பாரதி யார் பக்கம்.
பாராதி வாழ்ந்த காலத்தில் எத்தனையோ தமிழ் கவிஞர்கள் சிறந்துவிளங்கிவந்துள்ளனர். அவர்கள் எல்லாம் பார்ப்பன ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு பாரதியை தூக்கி நிறுத்தியுள்ளனர்.
இன்றும் கூட பாரதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கு கொடுப்பதில்லை பார்ப்பன ஊடகங்கள் என்பதை ச்ற்றுக் கவனித்தால் தெள்ளென விளங்கும்.
விவாதிப்போம்.
மிக்க நன்றி
//இன்றும் கூட பாரதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கு கொடுப்பதில்லை பார்ப்பன ஊடகங்கள் என்பதை ச்ற்றுக் கவனித்தால் தெள்ளென விளங்கும்.//
மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
பள்ளியில் படிக்கும் போது பாரதி யானையால் தூக்கி அடிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டு இறந்ததாகத் தான் சொல்லுவார்கள். பிறகு தான் தெரிந்தது அவர் எதோ காரணங்களினால் போதை அடிமையாகி இறந்த செய்தி.
பாரதி சிறந்த கவிஞர் என்பதில் ஐயமில்லை. பார்பன ஊடகங்கள் பாரதி வாழ்ந்த காலத்தில் அவரை கண்டுகொள்ளவில்லை. அவருடைய கவிதைகள் போற்றப்பட்ட பிறகு, அதற்கு கிடைத்த புகழை, பார்பன புகழாக்கிக் கொள்ள, அவர் இறந்த பிறகு 'நம்மவா' என்பதால் ஓவர் வெளிச்சம் கொடுத்தனர், கொடுக்கின்றனர்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி. கண்னன்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்
Post a Comment