Search This Blog
29.8.08
ஜாதியை ஒழிக்கின்ற இயக்கம்
சமுதாயத்திலே பிரிந்திருக்கின்றவர்களை இணைக்கின்ற ஒரே பாலம் பகுத்தறிவு, மனித நேயம் தானே தவிர, கடவுள் - மனிதனை இணைக்காது, இணைத்ததில்லை வரலாற் றிலே.
மதங்கள் மனிதர்களை இணைத்ததில்லை
மதங்கள் மனிதர்களை இணைத்ததில்லை; பிரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இங்கே என்ன கூட்டம் நடக்கிறது என்று தொலை தூரத்தில் இருந்தவர்களை கேட்டால்கூட ஒரே வரியில் அதற்கு விளக்கம் சொல்லுவார் - அதுதானய்யா அந்த கருப்புச்சட்டைக்காரன் கூட்டம் நடக்கிறது.
என்னவென்று தெரியாதா? இவர்கள் கடவுள் இல்லை என்று சொல்லுகிறவர்கள் என்று சொல்வார்கள்.
இப்பொழுது அய்யப்பன் சீசனுக்காக சில பேர் கருப்புச் சட்டைப் போடுகிறார்கள் - அது வேறு. எங்களைப் பார்த்து இவர்கள் சாமி இல்லை என்று சொல்லக்கூடிய கட்சியைச் சார்ந்தவர்கள் என்று சொல்வார்கள்.
கொள்கையை வைத்துச் சொல்லக்கூடிய இயக்கங்கள்
நாங்கள் அதைக் கேட்டு சங்கடப்பட்டதே கிடையாது. அது எங்களுக்கு ஒரு பெரிய பாராட்டு. அதைவிட ஒரு நல்ல சான்றிதழ் - எங்களைப் பொறுத்தவரையிலே வேறு யாரும் வழங்க முடியாது.
மற்ற கட்சிகளை யாரும் கொள்கையை வைத்து சொன்னதில்லை. இந்த ஒரு இயக்கத்தைத்தான் கொள்கையை வைத்துச் சொல்லுகின்றார்கள். இது சாமி இல்லை என்கிற கட்சி. சாமி இல்லை என்பது எங்களுடைய கொள்கை (கைதட்டல்).
அந்தக் கொள்கையை வைத்து ஒரு வரியில் அறிமுகப்படுத்து கின்றார்கள் பாருங்கள். மற்றது தெரிந்திருக்கிறதோ, இல்லையோ. இந்த ஒரு வரியில் தெளிவாகத் தெரிந்திருக்கிறது.
நமக்கும், கடவுள் உண்டு என்று சொல்பவருக்கும் என்ன தகராறு? வாய்க்கால் வரப்புத் தகராறா? பெரியார் அவர்கள் சொன்னார் - உலகம் முழுவதும் நான் பார்க்கிறேன். உலக மனித சமுதாயத்தைப் பார்க்கிறேன். அங்கே எல்லாம் அண்ணன் - தம்பிகளாக வாழ்கிறார்கள்.
இந்தியாவில் ஒருவன் மேல் ஜாதி இன்னொருவன் கீழ் ஜாதி
இந்தியாவில் என்ன நிலை? பிறக்கும்பொழுதே ஒருவன் மேல் ஜாதி என்று சொல்லுகின்றான். நாங்கள் இங்கே இவ்வளவு பேர் இருக்கிறோம். நாங்கள் யார் என்ன ஜாதி என்று ஒருவருக் கொருவர் தெரியாது. கழகப் பொருளாளர் சாமிதுரை அவர்களும், நானும் மாணவப் பருவத்திலிருந்து பழகியவர்கள். அதே மாதிரி இங்கே இருக்கிறவர்கள் எல்லாம் 50 வருடம், 60 வருடம் , 30 வருடம், 40 வருடம் என்று பழகியவர்கள்.
ஜாதியை ஒழிக்கின்ற இயக்கம்
ஆனால், யாரும் ஜாதியைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாத ஒரு இயக்கம் இருக்கிறதென்றால் ஜாதியை ஒழிக்கின்ற ஒரு இயக்கம் - இருக்கிறதென்றால் அது திராவிடர் இயக்கம்தான் (கைதட்டல்)
------------------14-8-2008 அன்று சென்னை - தேனாம்பேட்டையில் நடை பெற்ற சென்னை மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து - "விடுதலை" 29-8-2008
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//ஜாதியை ஒழிக்கின்ற ஒரு இயக்கம் - இருக்கிறதென்றால் அது திராவிடர் இயக்கம்தான் (கைதட்டல்)//
திராவிட முண்டம் அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
அப்படியா?ஆனாக்க, இது ஏன் நம்ம ராஜேந்திரன்,கொளத்தூரான்,மதி மாறன்,ராமகிருஷ்ணன்,ஆழிக்கரை முத்து,அதி அசுரன்,பாரிஸ் யோனியம்மா,இயக்குனர் சீமான் போன்ற கருப்பு சட்டை முண்டங்களுக்கு தெரியவில்லை?
மானமிகு முண்டம் தன் திராவிட ஜாதி புத்தியை காண்பித்து விட்டதா அவங்க ரொம்ப கோவமா இருக்காங்களே.
என்னவோ போங்க,திராவிடத் தமிழன் என்றொரு ஜாதி,கீழ்த்தரம் அதன் புத்தி என்று சான்றோர்கள் சொன்னது சரிதான் போலிருக்கிறது.
பாலா
முட்டாள் பார்ப்பானின் உளறல்களில் இது ஒருவகையான விசித்திரமான உளறல்.
Post a Comment