Search This Blog

22.8.08

ஜோதிடப் புரட்டு




மாட்டுச் சாதகத்தையும், மனிதச் சாகத்தையும் அவனிடம் காட்டினால்
எது மாட்டுச் சாதகம்? எது மனிதச் சாதகம் என்று அவனுக்குச் சொல்லத் தெரியாது. அண்ணன் சாதகத்தையும், தங்கையின் சாதகத்தையும் புரிந்து கொள்ள அவனால் முடியாது. இருவருக்கும் அவன் கலியாணப் பொருத்தம் சொல்லுவான்.கடவுளாலேயே சொல்ல முடியாதே! கடவுள் சிலை முன்னால் சிவப்பு – விபூதிப் பொட்டலம் கட்டிப் போட்டு எடுத்தால் மாறுதலாகத் தீர்ப்புக் கிடைக்கிறதே!

நமக்குத் தன்மான உணர்ச்சி வேண்டும். எனவே நாம் சொந்தப் புத்தியோடு சிந்திக்க வேண்டும். இந்த 1958-லும் காட்டுமிராண்டித்தனமாய் நடக்கக் கூடாது. தன்மான உணர்ச்சி வேண்டும். அந்த உணர்ச்சி உள்ளவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் வேகமாக முன்னேற வேண்டும். கொஞ்சம் சறுக்கி விழுந்தோமானால் படு பாதளத்துக்குப் போய்விடும்.வெள்ளையனைப் பாருங்கள். காட்டுமிராண்டியாய் இருந்தவன் திருந்தி முன்னேறியுள்ளான்.

ஆரியனோ அக்கா- தங்கையைக் கட்டிக் கொண்டவன். ராமனும்- சீதையும் அண்ணன் தங்கை முறை. அது அவர்கள் பழக்கம். அப்படிப்பட்ட ஆரியர்களும் திருந்தியிருக்கிறார்கள். ஆனால் நாமோ இன்னும் திருந்தவில்லை.
சாஸ்திரம் பார்ப்பது, சகுணம் பார்ப்பது, பூ வைத்துக் கேட்பது எவ்வளவு இழிவான தன்மை?பொருத்தம் என்றால் ஆண் பெண்னைப் பார்க்க வேண்டும். பெண் தன்னைக் கட்டிக் கொள்ளப் போகும் ஆணைப் பார்க்க வேண்டும். ஒருவருடைய குணத்தை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும்.நாம் வண்டிக்கு ஒரு மாடு வாங்க வேண்டுமானால் இருக்கின்ற மாட்டுக்குப் பொருந்துமாறு எவ்வளவு கஷ்டப்பட்டு ஜோடி சேர்க்கிறோம்?

சாதாரணமாக நாய் குட்டி போட வேண்டுமானால் நல்ல ரக நாயாகப் பார்த்துத் தானே சேர்க்கிறோம். அதுபோல் தானே குதிரையும்? ஆனால் மனிதனுக்கு ஜோடி சேர்ப்பதற்கு மாத்திரம் ஏன் அழுக்குப் பிடித்த பார்ப்பனிடம் போய் கேட்க வேண்டும்?மருமகளின் குணம் மாமியாருக்குத் தெரியாது. கணவனின் குணங்கள் மனைவிக்குத் தெரியாது. ஜாதகத்தில் கொண்டு போய் கொடுத்து விட்டு வீட்டைப் பார்த்துப் பரவாயில்லை என்று கூறி வந்து விட்டால் திருமணம் திருமணம் தீர்ந்து போயிற்றா?

திருமணம் செய்து கொள்பவனுக்கு ஜாதகமே இருக்காது. சோதிடம் பார்ப்பவன் ஜாதகம் இல்லையென்றால் பரவாயில்லை என்று கையைநீட்டு என்பான். இப்படி கையை நீட்டிப் விரலைப் பார்த்துப் பொருத்தம் கண்டுப்பிடித்தால் அந்த அர்த்தம்? தாய் பெயரைச் சொல்லிப் பூ போட்டால் சாமி "ஏண்டா தாய் பெயரைச் சொல்கிறாய்?" என்று கூறிப் பூவை எடுத்து எறிந்து விடுமா? இல்லை அக்கா, தங்கை பெயரைச் சொன்னால் ''என்னை என்ன சோதித்துப் பார்க்கிறாயா?" என்று அடித்து விரட்டுமா? அந்தச் சாமி- கழுதை, நாய்குட்டிப் பெயரைச் சொன்னால் இது மிருகத்தின் பெயர் என்று கூறுமா? இப்படி இந்த 1958- ஆம் ஆண்டிலுமா நாம் இத்தகைய பைத்தியகாரர்கள் என்றுக் காட்டிக் கொள்வது?

------------- தந்தைபெரியார் - நூல்: "வாழ்க்கைத் துணைநலம்" பக்கம்

3 comments:

priyamudanprabu said...

தொடரட்டும்

priyamudanprabu said...

http://priyamudan-prabu.blogspot.com/

priyamudanprabu said...

http://priyamudan-prabu.blogspot.com/