Search This Blog
28.1.09
சங்கராச்சாரியார் படத்தை தேசியக் கொடிமீது ஒட்டி வைக்கலாமா?
தேசியக் கொடியை அவமதிக்கலாமா?
முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்கள் மறைவிற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்.
அதேநேரத்தில், ஒரு முக்கியப் பிரச்சினையை முன் வைக்கவேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் என்பதால் அரசு மரியாதை தரும் வகையில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள அவரின் உடல்மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டு இருப்பது மரபுதான்.
ஆனால், இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய செய்தி என்னவென்றால், அந்தத் தேசியக் கொடியில் முதலாவதாக உள்ள ஆரஞ்சு வண்ணத்தின்மேல் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியாரின் படத்தை ஒட்டி வைத்துள்ளனரே - அது எப்படி? சங்கராச்சாரியார் என்றல்ல - எந்த ஒருவரின் படத்தையும் தேசியக் கொடிமீது ஒட்டி வைக்கலாமா?
அதுவும், தேசியக் கவுரவமாகக் கருதப்படும் கொடியில், மதச் சார்பற்ற அரசின் தேசியக் கொடியில், தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்ன - அரசமைப்புச் சட்டத்தின் பகைவரது படத்தை ஒட்டலாமா?
தேசியக் கொடியை அவமானப்படுத்தும் செயல் அல்லவா இது?
தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம் போன்ற தேசிய சின்னங்களை அவமதித்தால் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை என்று சட்டம் உள்ள நிலையில் இதனைச் செய்தவர்கள்மீது என்ன நடவடிக்கை?
குடியரசுத் தலைவராக இருந்து மறைந்தாலும், அவாளின் வட்டாரம் எதை முன்னிறுத்துகிறது என்பதைப் பார்த்த பிறகாவது தமிழர்களின் கண்கள் திறந்து கொள்ளுமா?
------------------------நன்றி:- "விடுதலை" 28-1-2009
Labels:
பார்ப்பனியம்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ஒருவர் மறந்ததற்க்கு வருத்தம் தெரிவிப்பது நம் பண்பு தான் என்றாலும், இன்று சங்கராச்சாரியர் இந்தளவக்கு இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்த முக்கிய காராணமே வெங்கட்ராமன் தான். ஜனாதிபதியாக இர்ந்த பொழுது, சங்கராச்சியார் முன் அவர் கை கட்டி நின்ற காட்சி வருந்ததக்க ஒரு நிகழ்வாகும் (பின்பு அப்துல் களாமும் செய்தார் ).
சரி நிங்கள் ‘இந்து மதம் எங்கே போகிறது’ என்ற புத்தக்த்தை வாசித்திருக்கிறீர்களா?
//‘இந்து மதம் எங்கே போகிறது’ என்ற புத்தக்த்தை வாசித்திருக்கிறீர்களா?//
நக்கீரனில் தொடராக வரும்போதே வாசித்துவிட்டேன்.
வலைப்பூ ஆரம்பித்த பிறகு 12 அத்தியாயங்கள் பதிப்பித்துள்ளேன். தொடர்ந்து பதிப்பிக்க திட்டமிட்டுள்ளேன்.
ஏற்கனவே "சிந்திக்க உண்மைகள்" வலைப் பூவில் இக்கட்டுரைகள் வெளிவந்துள்ளது.
இருப்பினும் அதன் அவசியம் கருதி மீண்டும் "தமிழ் ஓவியா" வலைப்பக்கத்திலும் பதிவு செய்யப்படும்.
நன்றி அக்னி
anne sila years munnala
jeyendran nepalku odi ponaname??
unmaiya?? why??
oru pathivu podunga anne please..
உங்களது பதிவுகளில் உள்ள ஒரு சில நல்ல பதிவு இது. Thanks for being decent.
ஜெயேந்திரன் பலமுறை ஓடிப் போயி, திரும்ப அழைத்துவரப்பட்டுள்ளார். ஒரு நேபாளப் பெண்ணோடு ஓடிப் போய் தலைக்காவிரியில் இருந்த போது கண்டுபிடிக்கப் பட்டு அழைத்து வரப்பட்டவர்தான் இந்த ஜெயேந்திரன். கண்டு பிடித்தவர் ஒரு இஸ்லாமிய காவல்துறை அதிகாரி.
இதுகுறித்து மேலும் விபரங்களை அறிய "சங்கராச்சாரியார் யார்?" என்ற நூலைப்படிக்கவும். 2 பாகங்களும் விற்பனைக்கு கிடைக்கிறது.
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ஷேக் .
Post a Comment