Search This Blog
7.1.09
தமிழ்ப் புத்தாண்டும் - பார்ப்பனர்களின் பதைப்பும்!
தைமுதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழறிஞர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். தந்தை பெரியார் அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதை தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அவர்கள் மிக முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ஆண்டு என்று கூறி ஒரு வருடத்தின் பெயர்கூட தமிழில் இல்லாமல் சமஸ்கிருதமயமான 60 ஆண்டுகளின் பெயர்களை ஏற்றுக்கொள்ள தமிழர்கள் என்ன மொழியற்ற நாடோடிக் கூட்டமா? அல்லது சமஸ்கிருதம்போல செத்து ஒழிந்து சுண்ணாம்பாகிப் போன மொழியா தமிழ் மொழி?
இந்த நிலையில், தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் தமிழில் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவது இயல்பான ஒன்றுதானே!
அதுவும் சமஸ்கிருத பெயர்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் அந்த 60 ஆண்டுகளின் பிறப்புப்பற்றி எழுதி வைக்கப்பட்டவை ஆபாசத்தின் மூல ஊற்று அல்லவா! நாரதன் என்கிற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்கிற ஆண் கடவுளுக்கும் பிறந்த பிள்ளைகள்தான் 60 தமிழ் வருடங்கள் என்றால், எவ்வளவு காட்டுமிராண்டித்தனம்!
ஆரியப் பண்பாட்டின்படி அவர்கள் கூறும் இந்து மதக் கடவுள்களின் பிறப்புகள் எல்லாம் அருவருக்கத்தக்கவைதானே!
கந்தன் எப்படி பிறந்தான் என்றால், பார்வதியும், சிவனும் காலவரையறையின்றி புணர்ந்து கொண்டிருந்தனர் என்றும், இவ்வளவு காலம் புணர்ந்ததால் பிறக்கும் குழந்தையை நாடு தாங்காது என்றும் மன்றாட, இடையில் நிறுத்தியதால் இந்திரியம் வெள்ளமெனப் பீறிட்டுக் கிளம்பியது என்றும், அதில் இருந்து பிறந்தவன்தான் கந்தன் (ஸ்கந்தன் என்றால் இந்திரியத்திலிருந்து பிறந்தவன்) என்றும் எழுதி வைத்து, அந்தக் கடவுளை விழுந்து விழுந்து கும்பிடும் காட்டுவிலங்காண்டிகள்தான் ஆரியப் பார்ப்பனர்கள்.
அதே மாதிரியான ஓர் ஆபாசத்தை தமிழர்கள் வாழ்விலும் திணித்துள்ள அநாகரிகம்தான் இந்த அறுபது தமிழ் வருடங்கள்.
இந்த நிலையில், தமிழர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்றும், திராவிடர் கழகம் தொடர்ந்து வற்புறுத்திய நிலையிலும், தன்மான இயக்கம் வழிவந்த முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என சட்டமியற்றி அறிவித்தார் (Act 2 of 2008).
சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் என்ற சட்டத்தை முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் இயற்றினாரே - அதற்கு இணையான சட்டம் இது! உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தலைமீது வைத்துப் போற்றி வரவேற்கும் ஏற்பாடாகும்.
ஆனால், பார்ப்பனர்களின் நிலைப்பாடு என்ன? திருவாளர் சோ ராமசாமி எழுதினாரே - அரசு சட்டம் இயற்றலாம்; ஆனால், யார் கடைப்பிடிக்கப் போகிறார்கள் என்று ஆத்திரத்தை நெஞ்சில் தேக்கி வெளியில் அலட்சியம் காட்டுவது போன்ற பாவனையில் எழுதினார்.
தினமலர் பார்ப்பன ஏடோ (3.1.2009 நாளிட்ட புதுவைப் பதிப்பு) எப்படி செய்தி வெளியிடுகிறது?
தமிழ்ப் புத்தாண்டு காலண்டரில் குழப்பமோ குழப்பம்! என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடுகிறது. 2009 ஆம் ஆண்டு காலண்டரில் தமிழ்ப் புத்தாண்டு இரண்டு மாதங்களில் (சனவரி 14, ஏப்ரல் 14) உள்ளது தைமுதல் நாள் தமிழக அரசு தமிழ்ப் புத்தாண்டு என்றும், சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றும் கூறி இந்து அமைப்புகள் சித்திரை முதல் தேதியைத்தான் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள் என்று தினமலர் எழுதுகிறது.
இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. இந்து அமைப்புகள் என்பவை தமிழர்களுக்கு தமிழுக்கு எதிரிகள் என்பது தெளிவாகிறது.
இந்து என்று சொல்லாதே! இழிவைத் தேடிக் கொள்ளாதே! என்று திராவிடர் கழகம் முழக்கமிடுவதன் பொருள் இப்பொழுது தெரிந்திருக்கவேண்டுமே!
தைமுதல் நாளை தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்திற்கு இந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் சென்றார்.
அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டும் விட்டது. அப்படியிருக்கும்போது தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது கட்டாயமாகிவிட்டது - கடைப்பிடித்தே தீரவேண்டும் என்பதில் இரு கருத்துகளுக்கு இடமிருக்க முடியாது!
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்திட அரசு ஆணையிட்டபோது, இப்படித்தான் குறுக்குச்சால் ஓட்டினார்கள். கடைசியில் துக்ளக்கில் சோ ராமசாமிகூட அதனைப் பின்பற்றியே தீரவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டதே!
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் கடமையை கலைஞர் அரசு செய்து வருவதால்தான் பார்ப்பனர் களுக்கு அவர்மீது கட்டுக்கடங்காத கோபம்! இதனைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டாமா? முதல்வர் கலைஞர் கரத்தை வலுப்படுத்த வேண்டாமா? பார்ப்பனர்களைப் பார்த்த பிறகாவது தமிழர்கள் தெளிவு பெறட்டும்!
-------------------------நன்றி:- "விடுதலை" தலையங்கம் -7-1-2009
Labels:
பார்ப்பனியம்
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
நேர்மையான பதிவு. தமிழ் புத்தாண்டை கூட ஒத்து கொள்ள மறுக்கும் கூட்டம் இது. இவர்களை பற்றி பேசி வருத்தப்படுவதை விட உதாசீனம் செய்வதே சிறந்தது.
நாம் உதாசீனப் படுத்தினால் அவர்கள் திரவுபதியை அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி (அது எப்படி அய்ந்து பேருடன் வாழ்க்கைவாழ்ந்தவள் பத்தினியானாள்)யாக்கி நம்மை சிந்திக்க விடாமல் செய்துவிட்டார்களோ அது போல் ஒவ்வொரு விசயத்திலும் செய்துவிடுவார்கள்.
பார்ப்பானிடம் எப்போதும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாம் அவர்களை விமர்சிக்கிறோமே தவிர தனிப்பட்ட பகை உணர்வு எதுவும் இல்லை.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கார்த்திப் பாண்டியன்
நெல்லைத்தமிழ் டாட் காம் சார்பில் புதிய திரட்டி...
சோதனை ஓட்டத்திற்கு பின்வரும் முகவரியை சொடுக்குங்கள்.
http://india.nellaitamil.com/
நாம் உதாசீனப் படுத்தினால் அவர்கள் திரவுபதியை அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி (அது எப்படி அய்ந்து பேருடன் வாழ்க்கைவாழ்ந்தவள் பத்தினியானாள்)யாக்கி நம்மை சிந்திக்க விடாமல் செய்துவிட்டார்களோ அது போல் ஒவ்வொரு விசயத்திலும் செய்துவிடுவார்கள்.
பார்ப்பானிடம் எப்போதும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்
ரிபீட்டு தோழரெ ரிபீட்டு
அன்புடன்
மகாராஜா
ஐயா,
எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் மதிக்கும் பெரியார் கூட அப்படி வந்த ஸ்கந்தந்தானே? அவரை ஏன் அப்படி விழுந்து விழுந்து ஜால்ரா அடிக்கிறீர்கள் என்று தெரியவில்லை.
பெரியார் கொள்கைகள் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் இழிவை ஒழித்து அனைவரும் சமம் என்ற மனிதநேயத்தை போதிப்பதால் நாங்களும் மற்றவர்களுக்கு அவரின் கொள்கைகளை கொண்டு சேர்க்கிறோம்.
நீங்கள் சொல்வது போல் ஜால்ரா அல்ல.
ஜால்ரா என்பது மற்றவர்களிடம் எதையாவது எதிர்பார்த்து சிங்சா அடிப்பது அதாவது புகழ்ந்து பேசுவது.
எனக்கு அந்த நிலை வந்ததில்லை.எப்போதும் உண்மையை எங்கும் தைரியமாக பேசக்கூடிய தெம்பு எனக்கு உண்டு நண்பரே. உங்களின் விமர்சனம் தவறான இடத்துக்கு வந்து விட்டது.
பெரியார் அவரின் அப்பா அம்மாவுக்கு பிறக்க வேண்டிய இடத்தில் ,பிறக்க வேண்டிய முறையில் பிறந்தவர்.
ஆனால் 60 ஆண்டுகள் பெயர்கள் என்பது எப்படிப்பட்டது.அது இதோ.
அந்த 60 ஆண்டுகளின் பிறப்புப்பற்றி எழுதி வைக்கப்பட்டவை ஆபாசத்தின் மூல ஊற்று அல்லவா! நாரதன் என்கிற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்கிற ஆண் கடவுளுக்கும் பிறந்த பிள்ளைகள்தான் 60 தமிழ் வருடங்கள் என்றால், எவ்வளவு காட்டுமிராண்டித்தனம்!
இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனத்திற்கு ஜால்ரா அடிக்க வேண்டாம் ராஜா.
விவதிப்போம்.
நன்றி
உங்களுக்கு இதை எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.ஆணுக்கும், பெண்னுக்கும்தானே அவைகள் பிறந்தன. இதில் என்ன அவமானம்? உனக்கு தெரியுமா? சில பூச்சி, மற்றும் தவளைகள் கூட அப்படி ஆண் பெண் பால் மாற்றம் செய்ய முடியும் என்றால் அது ஏன் கடவுளால் முடியாது.
//உங்களுக்கு இதை எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.ஆணுக்கும், பெண்னுக்கும்தானே அவைகள் பிறந்தன. இதில் என்ன அவமானம்? உனக்கு தெரியுமா? சில பூச்சி, மற்றும் தவளைகள் கூட அப்படி ஆண் பெண் பால் மாற்றம் செய்ய முடியும் என்றால் அது ஏன் கடவுளால் முடியாது.//
ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்ததா?
ஆணுக்கும் ஆணாக இருந்து பெண்ணுருக் கொண்டவருக்கும் பிறந்ததாகக் கதை. அவமானமட்டுமல்ல அசிங்கமும் கூட. இதில் எனக்கு வேறு புரிய வைப்பாராம்.
அத்தனை அவதாரம் எடுத்த கடவுள்கள் இன்று ஒரு அவதாரம் எடுக்கச் சொல்லுங்கள். எனக்குப் புரிந்துவிடும்.
என்னைப் புரிய வைக்காத கடவுளும் ஒரு கடவுளா?
ஐயா,
தமிழனில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் மற்றும் பலர் உள்ளனர். இந்து இல்லை தமிழன் என்று சொல்லும் நீங்கள் முஸ்லீம், கிறிஸ்துவர்களை தமிழன் என்று மட்டும் சொல்ல முடியுமா. உங்களக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் தமிழகத்தில் கோடி கணக்கானோர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். 98% திராவிட கொள்கையயை பின் பற்றுபவர்கள் கடவுளை வழிபடுகிறார்கள்
முருகன் - தமிழ் கடவுள். நீங்க ஆரியர்களோட கடவுள்ங்கறீங்க.. தமிழ்நாட்டை தவிர வேற எங்கயும் முருகனை இங்க வழிபடற மாதிரி வலிபடறது இல்லை. நான் தமிழன் தான், பார்ப்பான் இல்லை அதுக்காக பொங்கல் தான் தமிழ் வருட பிறப்புன்னு ஏற்றுக்கொள்ள முடியாது.
///அதுக்காக பொங்கல் தான் தமிழ் வருட பிறப்புன்னு ஏற்றுக்கொள்ள முடியாது.
//
பாவம் இவருக்கு ஒரு நாள் லீவு போச்சேன்னு கவலை...
எப்படி வலிபடறதுன்னு நான் சொல்லித்தரவா ?
முட்டாள்கள் உணரவேண்டும் என்றால் உட்கார்ந்து மணிக்கணக்காக விளக்கினால் மட்டும் போதாது தமிழ் ஓவியா அவர்களே....
நறுக்கென்று தலையில் குட்டவேண்டும்...
//முருகன் - தமிழ் கடவுள். நீங்க ஆரியர்களோட கடவுள்ங்கறீங்க.. தமிழ்நாட்டை தவிர வேற எங்கயும் முருகனை இங்க வழிபடற மாதிரி வலிபடறது இல்லை.//
என்று நான் என்பவர் கூறியுள்ளார்.
தமிழன் இயற்கையை வணங்கினான்.இயற்கை செய்த உதவிக்கு நன்றி பாராட்டினான். அதனால்தான் நன்றி மறவாதவன் தமிழன் என்ற பெயர்கூட தமிழனுக்கு உண்டு.
நீங்கள் சொல்லும் முருகக்கடவுளின் பிறப்பு யோக்கியதையை அறிந்து கொள்ள கீழ் கண்ட கதையைப் படியுங்கள்.
"கந்தசஷ்டி
இந்த சுப்ரமணியன் பிறப்பு அல்லது கந்தசஷ்டி என்பது புராண ஆபாசங்களில் மோசமான ஒன்றாகும். ஒரு சமயம் தேவர்கள் எல்லாம் போய் சிவனிடம் கேட்டார்களாம்.
" உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாய்விட்டது; அதை எங்களால் தாங்கமுடியவில்லை. ஆகவே அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு அவர்களை அழிக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற்றுத் தரவேண்டும்" என்று வேண்டினார்கள் . அதற்குச் சிவனும் இணங்கி பார்வதியைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளைபெறும் முயற்சியில் அவளோடு கலவிசெய்ய இறங்கினானாம்.
தொடர்ந்து 1,000 வருடங்கள் கலவிசெய்துகொண்டே சிவனும் பார்வதியும் இருந்தார்களாம். ஆனால் குழந்தை பிறக்காததைக் கண்டு தேவர்கள், இனி பிள்ளை பிறந்தால் இந்தஉலகே தாங்காது அவ்வளவு வலிமை உள்ளதாக இருக்கும். அது இந்த உலகத்தையே அழித்தாலும் அழித்துவிடும் என்று தேவர்கள் கருதி சிவனிடம்சென்று வேண்டிக் கலவி செய்வதை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சிவன், "நீங்கள் சொல்லுவது போல் நிறுத்திக் கொள்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. நிறுத்தினால் அதிலிருந்து வரும் வீரியத்தை என்ன செய்வது" என்றதும், உடனே தேவர்கள் தங்கள் கைகளை ஏந்தி அதில் விடும்படிக் கேட்டார்களாம். அதன்படி தேவர்கள் அனைவரின் கையிலும் வீரியத்தைவிட்டு, சிவன் குடிக்கும்படி கூற அவர்களும் குடித்தனராம். மீதி வீரியத்தை சிவன் கங்கையில் விட்டானாம்.
கங்கை அதைத் தாங்காமல் கொதிக்க ஆரம்பித்துவிட்டதாம். வீரியத்தைக் குடித்த தேவர்களுக்குக் கர்ப்பநோய் வந்துவிட்டதாம். அவர்கள் சிவபிரானிடம் சென்று வணங்கி, தங்கள் கர்ப்பநோய்க்கு மருந்து கேட்க, அவர் அதற்கு 'காஞ்சிபுரத்திலுள்ள சுரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கினால் கர்ப்பம் கலையும்' என்று கூறினாராம். அதன் படி தேவர்கள் அக்குளத்தில் மூழ்கிக் கர்ப்பத்தைக் கலைத்துக் கொண்டார்களாம்.
கங்கையில் ஓடிய சிவ வீரியமானது, ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடியதால், ஆறு குழந்தைகள் ஆயிற்றாம். அதனை ஆறு பெண்கள் எடுத்து பால் கொடுத்து வளர்த்தனராம். ஆறுபேர்கள் பால் கொடுப்பது என்பது சிரமமாக இருப்பதாக எண்ணி அவர்கள் ஆறுபேரையும் ஒன்றாக அணைத்துப் பால் கொடுக்கையில் , முகம் 6 ஆகவும்(தலைகள்) கைகள் 12 ஆகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதையாம். ஸ்கலிதத்திலிருந்து உதித்ததால் ஸ்கந்தன் என்று பெயர் உண்டாயிற்றாம்.
ஸ்கந்தம் என்றால் , விந்து என்று பொருள். கந்தன் என்ற சுப்பிரமணியக் கடவுளின் பிறப்பு யோக்கியதையைக் கண்டீர்களா? "
-------------தந்தைபெரியார்-நூல் இந்துமதப்பண்டிகைகள் -பக்கம் 40-41.
இப்படிப்பட்ட கதைகளை நம்பி மோசம் போக வேண்டாம். அறிவு கொண்டு சிந்தியுங்கள். முடிந்தால் இந்த வலைப்பூ வில் உள்ள கருத்துக்களை ஒரு முறை படியுங்கள். உண்மை புரியும்.
Post a Comment