Search This Blog

8.1.09

இந்துமதக் கடவுள் சிலைகளின் மார்பில் பூணூல் தொங்குவது எதனால்?ஏன்?


மண்டைச்சுரப்பை உலகு தொழுகிறது!

நாத்திகம், பகுத்தறிவு என்பவை அறிவை அடிப்படையாகக் கொண்டது மட்டுமல்ல; மனிதநேயத்தை ஊற்றாகக் கொண்டதாகும். அது ஒரு வாழ்க்கை நெறிமுறை (The way of life) யாகும்.

இந்த உண்மை தெரிந்திருந்தும் இது ஏதோ ஆபத்தானது, மக்களைத் தவறான வழிக்குக் கொண்டு செல்வது என்பது போன்ற பிரச்சாரத்தை மதவாதிகள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர்.

உண்மையைச் சொல்லப் போனால் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் கண்டுபிடித்துக் கொடுத்த சாதனங்களின் மூலம் வாழ்வைச் சுவைத்துக் கொண்டே பகுத்தறிவுச் சிந்தனைகளை எதிர்த்துக் கொண்டுள்ளனர். எதிர்த்துக் கொண்டுள்ளனர் என்று சொல்லலாமே தவிர மறுப்பதாகக் கொள்ள முடியாது; மறுப்பது என்றால் காரண காரியத்தோடு கூற வேண்டுமே. நம்பிக்கை என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்திக் தப்பித்து ஓடுகின்றனர். நம்பிக்கை என்று சொல்லிவிட்டால், அதற்குப் பிறகு ஆய்வுக்கோ, விவாதத்திற்கோ இடம் ஏது?

மேலும் மதம், கடவுள் என்பவையெல்லாம் மக்களைச் சுரண்டும் கருவிகள்; அண்ணாவின் மொழியில் சொல்ல வேண்டுமானால், முதலில்லா வியாபாரம், விதைக்காது விளையும் கழினியாகும்.

கோயில் அமைப்பு முறை என்பதே இந்த அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டதுதான். எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்தவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு கடவுளுக்குப் படையல்கள், வைரக் கிரீடங்கள், கண்ணடக்கங்கள், தானங்கள் அளிப்பது என்பது கடைந்தெடுத்த முரண்பாடுதானே!

மூன்றரை கிலோ எடையுள்ள தங்கத்தினாலான பூணூலை காஞ்சி சங்கராச்சாரியார் திருப்பதி ஏழுமலையானுக்குச் சாத்துகிறார் என்றால், இதில் புதைந்துள்ள ஜாதிய ஆதிக்க உணர்வையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்; விளம்பரப்படுத்தப்பட்ட இந்து மதக் கடவுள் சிலைகளின் மார்பில் பூணூல் தொங்குவதையும் சிந்தித்தால், இதன் பின்னணியை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

கிறித்துவம் பரவியுள்ள நாடுகளில் எல்லாம் கடவுள் மறுப்புப் பிரச்சாரம் இப்பொழுது உச்சக் கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சில நாள்களாக வந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான தகவல் இலண்டனில் பேருந்துகளில் இடம் பெற்றுள்ள வாசகமாகும்.
கடவுள் இல்லை; அதைப்பற்றி கவலைப்படுவதை விடுத்து வாழ்க்கையை அனுபவியுங்கள் என்ற வசாகங்கள். இலண்டனில் 800 பேருந்துகளில் எழுதப்பட்டுள்ளன. அமெரிக்காவிலும் இது நடைமுறையில் வந்துவிட்டது. இத்தாலி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இத்தகு வாசகங்கள் அடங்கிய பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இத்தகு பயன் உள்ள விளம்பரத்திற்காக 5,500 பவுண்ட் நன்கொடையாக திரட்ட முடிவு செய்யப்பட்டதாம்; ஆனால் வந்து குவிந்த நன்கொடையோ ஒரு லட்சத்து 40 ஆயிரம் பவுண்டுகளாம். கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எந்த அளவு மக்கள் மத்தியில் ஆதரவு செல்வாக்கு உள்ளன என்பதற்கு இது ஒரு கண் கண்ட அளவுகோலாகும்.

பல ஆண்டுகளுக்கு முன்பே, லண்டனில் சர்ச்சுகள் விற்பனைக்குத் தயார் என்ற விளம்பரங்கள் வந்ததுண்டு. அதனுடைய பரிணாம வளர்ச்சியாக இப்பொழுது ஏற்பட்டுள்ள நிலையைக் காணலாம்.

விஞ்ஞானி டார்வின் ஆய்வில் கண்டுபிடித்துச் சொன்ன பரிணாம வளர்ச்சியை ஏற்றுக் கொள்ளாது கடுமையாக எதிர்த்த கத்தோலிக்கர்கள் அதனுடைய தலைவர் போப், காலங் கடந்து டார்வின் கொள்கையை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார். இதன் மூலம் கடவுள்தான் மனிதனைப் படைத்தார் என்ற படைப்பு தத்துவம் அடிபட்டு வீழ்ந்துவிட்டது. அதே போல கலிலியோ உலகம் உருண்டை என்று கண்டுபிடித்துச் சொன்னதற்காக கத்தோலிக்கப் பீடம் கடுமையாக எதிர்த்தது. தொல்லை கொடுத்தது. 360 ஆண்டுகளுக்குப் பிறகு கலிலியோவின் கொள்கையை எதிர்த்ததற்காக போப் ஜான்பால் தம் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நோபல் பரிசு பெற்ற அன்னை என்று அனைத்துத் தரப்பினராலும் மதத்திற்கு அப்பாற்பட்டு போற்றப் பெற்ற தெரசா தமக்குக் கடவுள் நம்பிக்கையில்லை என்று தமது நாள்குறிப்பில் பதிவு செய்துள்ள தகவலும் வெளிவந்தது (தி இந்து 30.11.2002)

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நேச்சர் (சூயவரசந) என்ற விஞ்ஞான இதழ் ஒரு தகவலை வெளியிட்டது. கடவுள் நம்பிக்கையற்ற விஞ்ஞானிகள் பற்றிய தகவல் அது. 1914-இல் 72 விழுக்காடு. 1993-இல் 85 விழுக்காடு. 1999-இல் 90 விழுக்காடு என்று ஆண்டுக்கு ஆண்டு கடவுள் நம்பிக்கையற்ற விஞ்ஞானிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது.

சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைந்துள்ளதாக இலண்டன் அல்ஸ்டெர் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். (தினமணி 13.6.2008)

தந்தை பெரியார் அவர்களின் நாத்திக, மனிதநேயச் சிந்தனைகளை உலக மயமாக்குவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள். பெரியார் பன்னாட்டு மய்யம் அதனை ஒரு பக்கத்தில் செய்து கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் பற்றி மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அது இதோ நம் கண்முன் நடந்து கொண்டிருக்கிறதே!

வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு!


-----------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 8-1-2009

5 comments:

Unknown said...

பார்ப்பன ஆதிக்கத்தின் சின்னம் பூணூல் என்பதை உணர்த்தியது இக்கட்டுரை.பார்ப்பனர்கள் எப்போதும் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் தெளிவடைவது எப்போது?

Thamizhan said...

புத்தருக்கும் பூணூல் போடப் பார்த்தார்கள்.
அசந்திருந்தால் ஏசுநாதருக்குமே பூணூல் போட்டு ஒரு குட்டிக் கடவுளாக்கி மூலையில் நிறுத்தியிருக்கும் பார்ப்பனீயம்.கிருத்துவத்தில் சேர்ந்த பார்ப்பனர்கள் பாதிரிகளாகியும் பார்ப்பனீயத்தை விடவில்லை என்பது கிருத்துவக் கல்வி நிலையங்களில் படித்தவர்களுக்கு நன்கு தெரியும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழன் அய்யா

Mahadev said...

Hehe.. good Q. This need to be answered.. is all GOD have ? I workship lord Ayyappa.. does he have ?
These people made GOD much like human in all books that the problem.

hmm.. but sir,you know in Kamal movie one dialague will come
" Q kekikaratho easy, pathil sollaratho Kastam" :)) hehe