Search This Blog
26.1.09
பங்குனி உத்திரம் என்றால் என்ன?
அது என்ன பங்குனித் திருவிழா?
பங்குனி உத்திரம், பங்குனித் திருவிழா என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன? அந்த நாளில் - பங்குனி உத்திர நாளில் - சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்ததாம்.
சிவனுக்கும், பார்வதிக்கும் பல திருமணங்கள் நடந்துள்ளன. பார்வதியை பல உருவங்களில் பிறக்கச் செய்வாராம் - பிறகு மணந்து கொள்வாராம். அதனால்தான் சிவன் திருமணம் என்று பக்தர்கள் சொல்லமாட்டார்கள். பார்வதி கல்யாணம் என்றுதான் கூறுவார்கள்.
கல்யாணம் என்றால் விளையாட்டு என்றும் பொருள். சீதா கல்யாணம், ருக்மணி கல்யாணம் என்று தான் சொல்வார்கள். வள்ளித் திருமணம் என்று ஏன் கூறுகிறார்கள்? வள்ளி - தமிழச்சியாம்! கடவுள் பக்தர்களுக்கு மொழி பக்தி கூட உண்டு போலும்!
சிவன் - பார்வதி கல்யாணத்துக்கு உலக மக்கள் எல்லாரும் இமய மலைக்குக் கூடி விட்டார்களாம். எனவே, பளு தாங்காமல் பூமி வடக்குத் திசையில் தாழ்ந்து போய் விட்டதாம். பூமி தட்டையாக - சீசா (SEESAW) பலகை போல இருக்கிறதா? என்ன முட்டாள் தனம் பாருங்கள்!
எனவே, பூமியைச் சமன் செய்ய சிவன் ஓர் ஆளை அனுப்பியதாம். அவன்தான் அகத்தியன். குறுமுனி. குள்ள உருவம். 20 கிலோ எடை இருப்பானோ? சந்தேகம்தான்.
அகத்தியன் தெற்கே வந்ததும் பூமித் தட்டை சமனாகி விட்டதாம். கல்யாணம் சங்கடமின்றி நடந்து முடிந்ததாம். அந்த நாள் தான் பங்குனித் திருவிழா. அகத்தியன் கோயில் அம்பா சமுத்திரத்தில் உள்ளது. எதற்கு இந்தப் பக்தர்கள் தரையில் அரை அம்மணமாகப் படுத்துப் புரளுகிறார்கள்?
ஏன் இவர்களுக்கு இரண்டு பக்கத்திலும் ஆள்கள் நின்று கொண்டு பனை ஓலை விசிறியால் விசுறுகிறார்கள்? பரமசிவன் புழுக்கத்தைப் போக்காதா? போக்காது என்றால், மின் விசிறி வைக்கக் கூடாதோ?
அகத்தியனுக்கு மட்டும் சிவனின் திருமணம் ``ஸ்பெஷல்’’ காட்சி இங்குதான் காட்டப்பட்டதாம். இதை பக்தர்கள் படுத்துக்கொண்டு பார்க்கிறார்களோ?
-----------------------நன்றி: "விடுதலை" 13-04-2007
Labels:
மூடநம்பிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
சராசரியாக சொன்னால் மூடநம்பிக்கைதான் அதிலும் சிலநல்ல விசயங்கள் இருக்கும் மூடநம்பிக்கைகளை ஆராய்ந்தால் அதன் மூலம் வேறுவாக இருக்கும்.
மதமும், மனிதமும் சொல்லும் நல்ல விசயங்கள் எவ்வளவோ இருக்கு அதை புரியும் படி எங்களைப் போன்ற பாமரர்களுக்கு எடுத்துச் சொன்னால்
மூடநம்பிக்கைகள் தானாக மறைந்து விடும் 'இது என் நம்பிக்கை'.
//சிவனுக்கும், பார்வதிக்கும் பல திருமணங்கள் நடந்துள்ளன. பார்வதியை பல உருவங்களில் பிறக்கச் செய்வாராம் - பிறகு மணந்து கொள்வாராம். அதனால்தான் சிவன் திருமணம் என்று பக்தர்கள் சொல்லமாட்டார்கள். பார்வதி கல்யாணம் என்றுதான் கூறுவார்கள்.//
ஓ. இதில் இவ்வளவு சூட்சமம் இருக்கிறதா?
இது தெரியாமல் போச்சே.
ஒவ்வொரு உருப்படாதத் திருநாளும்
அதற்கு அறிவில்லாத கதைகளும் யாருக்கு இழப்பு,யாருக்கு வருமானம் என்பதையாவது தெரிந்து கொள்ளக் கூடாதோ.
இதில் பெரிய மடத்தனம் என்ன வென்றால் பல முக்கிய அலுவல்கள் நிறைவேறாமல் அல்லது தள்ளப் பட்டு விடுவதும் தான்.
அண்மையில் ஒருவருக்கு நடக்க வேண்டிய முக்கிய அவசர அறுவைச் சிகிச்சை உடனே நடக்காமல் காலந்தாழ்த்தப்பட்டு அந்தக் குடும்பத் தலைவர் இறந்தார்.இது போல இன்னும் எத்தனை இழப்புக்களோ.
அறிவு வளரட்டும்.மடத்தனம் மடியட்டும்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ஆ.முத்துராமலிங்கம்
தமிழ்
தமிழன்.
பங்குனி உத்திரம் நட்சத்திரம் சாதாரணமாக சிவ-பார்வதி, ராமன்- சீதா, முருகன்-வள்ளி, தெய்வானை திருமண நாளாகவும், வள்ளி பிறந்த தினமாகவும், தேவேந்திர-இந்திராணி திருமண நாளாகவும், ப்ரம்மா-சரஸ்வதி திருமண தினமாகவும், வைணவர்களைப் பொறுத்தவரை ஆண்டாள் திருமணமாகவும் காஞ்சி போன்ற க்ஷேத்திரங்களில் தாயார் திருமண உத்சவங்களாகவும் – பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் திருமண நிகழ்ச்சியாகக் கொண்டாடப் படுகிறது.
பங்குனி உத்திரநாளன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர். இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.
பங்குனி உத்திரவிரதம் மேற்கொள்வோர் 48 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இவ்விரதத்தால் அடுத்தபிறவி தெய்வப்பிறவியாக அமையும். அதன் மூலம் ஜனன, மரணச் சக்கரத்தில் இருந்து உயிர் விடுபட்டு முக்தி பெறும் என்பது ஐதீகம்.
பங்குனி உத்திரம் அன்று நாம் நம் குலதெய்வங்களை வழிபட உகந்த நாளாக அமைகின்றது. இந்நாளில் நமது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நம் குலம் சிறக்க உதவுகின்றது. நாம் நம்குல தெய்வங்களை இந்த நாளில் சென்று வழிபாடு செய்தால் நமது மூதாதையரின் பரிபூரண ஆசிகள் நமக்கு கிடைக்கின்றது.இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்கு வதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள்.
பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை
* மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.
* பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.
* தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.
* சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.
இது என் நம்பிக்கை

Post a Comment