Search This Blog
18.1.09
ஆணுக்கும் ஆணுக்கும் பிள்ளை பிறக்குமா?
தமிழர் தலைவர் எழுப்பிய அறிவார்ந்த வினாக்கள்!
உண்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் வெளியில் செல்லும்போது வீட்டினைப் பூட்டிவிட்டுச் செல்லலாமா?
படித்தவனுக்கு தனக்கு தெரியாது என்பது தெரியாது என்பதும், படிக்காதவனுக்கு தனக்கு எதுவும் தெரியாது என்பது தெரியும் என்பதையும் நீங்கள் அறிவீர்களா?
கடவுளுக்கும் எங்களுக்கும் எந்தத் தகராறும் கிடையாது. இருந்தால்தானே தகராறு?
லஞ்சம் தொடங்கிய இடமே கோவில்தான். தன்னுடைய கோரிக்கை நிறைவேறினால் கடவுளுக்கு தேங்காய் உடைப்பதாக வேண்டுகிறான். உலகத்தையே படைத்தது கடவுள் எனில் தேங்காயைப் படைத்தது யார்? கடவுள் படைத்ததை அவனுக்கே லஞ்சமாக திருப்பிக் கொடுக்கலாமா?
45 நாட்களுக்கு ஒழுக்கமாக இருக்கும் பக்தர்கள் மீதியுள்ள 320 நாட்கள் எப்படி இருப்பார்கள்?
ஹரிஹரபுத்திரா, ஹரிஹரபுத்திரா என்று கூப்பாடு போடும் பக்தனே, ஹரி என்றால் மகாவிஷ்ணுவையும், ஹரன் என்றால் சிவனையும் குறிப்பதால், ஆணுக்கும் ஆணுக்கும் பிள்ளை பிறக்குமா?
ஆணும் ஆணும் சேர்ந்தால் எய்ட்ஸ் வராதா? காட்டு மிராண்டித்தனமாகாதா?
12 ஆண்டுகளாக சபரிமலைக்குப் போகிறேன் என்று பெருமைப்படுபவர்கள், 12 ஆண்டுகளாக முட்டாளாக இருக்கிறேன் என்று பெயர்ப் பலகை (போர்டு) மாட்டிக் கொண்டு இருக்கலாமா?
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்; கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போகவேண்டும் என்று வள்ளலார் கொள்கையினைப் பிரச்சாரம் செய்பவர்கள் எங்கள் இயக்கத்தைத் தவிர யார் இருக்கிறார்கள்?
எதற்கெடுத்தாலும் என் தலையெழுத்து என நம்பிக்கை இழக்கிறானே. சைனாக்காரன், அமெரிக்காக்காரன் தங்கள் தலைகளை பிரம்மனிடம் காட்டவில்லையே ஏன்?
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர் அடுத்த பிரதமர் என பிரச்சாரம் செய்வதா?
நாடெங்கும் சிறுபான்மை மக்கள் தாக்கப்பட்டபோது திருச்சியிலும், திண்டுக்கல்லிலும் கண்டித்து பேரணி, கூட்டங்கள் நடத்தியோர் எங்களைத் தவிர வேறு யார்?
ஒரு சம்பவத்தை முன்னிறுத்திக்கொண்டு, தினம் தினம் அழிந்து வரும் எம் தொப்புள்கொடி உறவுகளை, ஈழத்தமிழர் களை அழிவின் எல்லையில் இருந்து காப்பாற்ற வேண்டாமா?
------------------நன்றி: "விடுதலை" 18-1-2009
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நெத்தியடிக் கேள்விகள். சிந்திக்க வைக்கிறது.
நன்றி தமிழ்
அமெரிகாவில் மற்றும் ஐரோப்பாவில் எவ்வளவு தமிழர்கள் இருகிறர்கள்,ஈழ தமிழர் போராட்டங்களின் கலந்து எம்மக்கு பலம் சேர்க்கலாமே!
Post a Comment