ராஜபக்சேவுக்கு நன்றி கூறியுள்ளார் "இந்து"
ராம்; (ஆரிய) இனம் இனத்தோடு சேர்கிறது!
அரசியல் தீர்வு அரசியல் தீர்வு என்று இந்திய தரப்பில்
இன்னும் எத்தனை நாளைக்கு அதே பல்லவி?
தேர்தலை காங்கிரஸ் சந்திக்கவேண்டாமா? அய்க்கிய
முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா புரிந்து செயல்படட்டும்
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
கிளிநொச்சியை சிங்கள இராணுவம் பிடித்துவிட்டதாகக் கூறி "இந்து" ராம், "துக்ளக்" சோ, "தினமலர்" கூட்டம் மகிழ்ச்சிக் கூத்தாடுவது குறித்தும், இந்திய அரசு அரசியல் தீர்வு, அரசியல் தீர்வு என்று பழைய பல்லவியையே திருப்பித் திருப்பிப் பாடுவதுபற்றியும் எச்சரித்து, மக்களவைத் தேர்தலில் தமிழ் மக்களை காங்கிரஸ் எந்த முகத்தோடு சந்திக்கப் போகிறது? அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி சிந்திக்க வேண்டாமா? என்ற அர்த்தமிக்க வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:-
கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது; சிங்கள இராணுவம் அங்கே - நாயும், மாடுகளும் மட்டுமே உள்ள ஆள் நடமாட்டமில்லாத - புலிகள் காலி செய்துவிட்ட பகுதியில், சிங்கள இராணுவக் கொடி ஏற்றப் பட்டுவிட்டது என்பதில்தான் இங்குள்ள பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன ஏடுகளுக்கும் எவ்வளவு மகிழ்ச்சி! எவ்வளவு பூரிப்பு!
இதிலிருந்தே அந்நாளில் திராவிடர்களை சூழ்ச்சியால் வென்று மாண்டவனே எனது இறப்பை விழாவாக, தீபாவளியாகக் கொண்டாடுங்கள் என்று கூறியதாகவும் - தீமை அழிந்து நன்மை வென்றதற்காக விழா என்றும் கதைகட்டிவிட்டு, திராவிடர் பலரும் தங்கள் மூளைகளில் பூட்டிக்கொண்ட விலங்கினால் தீபாவளி கொண்டாடுவதுபோலவும், ஆரிய மாயையிலும், தேசிய மாயையிலும் சிக்கியுள்ள சில தமிழர்கள் உள்பட ஏதோ ஈழத் தமிழர் இனத்தையே அழித்து, அவர்தம் உரிமைக் குரல் வளையையே நெரித்துவிட்டதாக அற்ப மகிழ்ச்சி கொள்வது அபத்தங்களில் தலையாயது! அவசரத்தில் போட்டுள்ள தப்புக் கணக்கு!!
இந்து ஏட்டின் ஆரியப் புத்தி
மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவான இந்து ஏட்டின் ராம் களுடன், கிளிநொச்சியை சிங்கள இராணுவம் பிடித்தவுடன், சிங்கள இனப் படுகொலையை நடத்தும் ராஜபக்சே தொலைப் பேசியில் பேசியுள்ளாராம்! எங்கே தமிழ்நாட்டில் உள்ளவர்களது ஆதரவு குறைந்து, தன் ஏட்டின் செல்வாக்கும் சரியுமோ என்ற அச்சத்தோடு அண்ணா சொன்ன ஆரியத்தின் இலக்கணமான பேசுநா இரண்டுடையாய் போற்றி போற்றி! என்பதற்கொப்ப, அங்கே இருக்கிற சிவிலியன்களான தமிழர்கள்பற்றி, ராஜபக்சே என்ற கருணை வள்ளல், கடைசி புத்தர் கவலை தெரிவித்தாராம் இந்த நண்பரிடம்! நேற்று (5.1.2009) வெளிவந்துள்ள (முதல் பக்கத் தலைப்புச் செய்தி) ரட்சகர் ராஜபக்சே பெருங்கவலை தெரிவித்தாராம் இவரிடம் - அதுமட்டுமா?
இந்து ராம்களுடன் ராஜபக்சேக்கள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசுகிறார்கள் என்றால், அதன் பொருள் என்ன? அவ்வளவு நெருக்கம் - பந்த பாசம்!
அதிபர் ஜெயவர்த்தனே அழைத்து இந்து ராமுக்கு சிங்கள அரசின் உயரிய விருதான சிங்கள ரத்னா விருது கொடுத்தார் என்றால், இதன் காரணத்தைப் புரிந்துகொள்ளலாமே!
சிவிலியன்களை - மக்களைக் காப்பாற்றப் போவதாக ராஜபக்சே கூறியுள்ளாரே - அப்படியானால் மக்கள்மீது குண்டுமாரி பொழி வதை அவர் நிறுத்துவாரா? இலங்கை இராணுவம் யார்மீது குண்டுமழை பொழிந்தது? தமிழ்மக்கள்மீதுதானே!
கிளிநொச்சியில் கட்டடங்கள், வீடுகள் இடிக்கப்பட்டதாகக் குற்றஞ் சாட்டுகிறார்களே - அவை எப்படி இடிந்தன? சிங்கள இராணு வத்தின் தாக்குதல்களால்தானே? விடுதலைப்புலிகள் இடித்தார்கள் என்று கதை கட்டுகிறார்களே! போர் முனையில் இராணுவத்தைச் சந்திக்கும் போராளிகள் கடப்பாறை, மண் வெட்டிகளை எடுத்துக் கொண்டு போய் கட்டடங்களை இடித்துக் கொண்டிருப்பார்களா? கடுகளாவாவது புத்தியைப் பயன்படுத்திப் பேசவேண்டாமா?
இன்னமும் பல்லாயிரக்கணக்கான, (லட்சக்கணக்கான) தமிழர்களை விடுதலைப்புலிகள் சிறைப்பிடித்து வைத்துள்ளார்களாம்! அவர்களை விடுதலை செய்ய இன்னமும் மறுக்கிறார் களாம். இந்து ஆசிரியர் நண்பர் ராம் கூறுகிறார்!
அம்மேதைகளைப் பார்த்து, சாதாரண பகுத்தறிவுள்ள எவரும் ஒரு கேள்வி கேட்கமாட்டார்களா?
தமிழ் மக்களின் ஆதரவு புலிகளுக்குக் கிடையாதா?
ஒழிக்கப்பட்டுவிட்ட விடுதலைப்புலிகள், அதிலும் சில நூறுகளே உள்ள விடுதலைப்புலிகள் பல்லாயிரக்கணக்கான - லட்சக்கணக் கான (Tens of Thousands) தமிழ் குடிமக்களை எப்படி சிறைப்பிடித்து வைத்திருப்பது சாத்தியமாகும் - அவர்தம் ஒத்துழைப்பு, ஆதரவு புலிகளுக்கு இல்லாமல் இருக்குமானால்?
கிளிநொச்சி போன்ற பகுதிகள் வெறிச்சோடிக் கிடக்கும் என்றால், சிங்கள இராணுவம்தான் தங்களைக் காப்பாற்ற வந்த கஜேந்திர மோட்ச ஆபத்பாந்தவர்கள் என்று அவர்கள் கருதி யிருப்பார்களேயானால், அவர்கள் இவர்களை தாரை தப்படையோடு வரவேற்று வாழ்த்தியிருக்க மாட்டார்களா?
மற்றொரு கேள்வி. இங்குள்ள பல 24 கேரட் திடீர் தேசபக்தர்களுக்கே தெரியாத செய்தியும் இந்து நாளேட்டில் நேற்று வெளி வந்துள்ளது (நாம் பல பொதுக்கூட்டங்களில் பேசிய உண்மைதான்).
சோக்கள், இராம்களின் மிகுந்த கவலைக்கும், ஆதங்கத்திற்கும், கேள்வி;
உலகில் இந்தியா உள்பட 30 நாடுகளில் பயங்கரவாத அமைப் பாக பிரகடனப்படுத்தப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தினை இன்னமும் இலங்கையில் ராஜபக்சேயின் இலங்கை அரசு தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிப்பதில் என்ன தாமதம்? ஏன் தயக்கம்?
இப்போதுதான் சிங்கள இனப் படுகொலையாளன் ராஜபக்சே, தடையைச் சந்திக்க வேண்டியிருக்கும் விடுதலைப்புலிகள் இயக்கம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்!
மீண்டும் கொரில்லாப் போர்!
இங்கே, ராஜ(பக்சே)வை மிஞ்சும் ராஜ விசுவாசிகளாக இராம்களும், சோ க்களும், இன மலர்களும் உள்ளனரே ஏன்? ஆரிய இனம் இனத்தோடு சேருகிறது! மூதாதையர்களுக்குள் முகிழ்த்துக் கிளம்பும் பாசம் - ஹிட்லர் தற்பெருமை அடித்துக் கொள்ளவில்லையா - தான் ஆரிய இனம் என்று! புரிந்துகொள்ளுங்கள்!
முறையாக நடந்த உரிமைப் போர் முறையை மீண்டும் கொரில்லா யுத்தமாக மாற்றிவிட்டது சிங்கள அரசு. ஆப்பை அசைத்துவிட்டது!
இதனை இந்திய அரசின் வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவ சங்கரமேனன், “The Military ups and downs did not change the situation in that country.” இராணுவத்தில் சில ஏற்றங்களும், இறக்கங்களும் நிலைமையை அந்நாட்டில் மாற்றிவிடாது என்று குறிப் பிட்டுள்ளார்.
மீண்டும் பழைய பல்லவியா?
அரசியல் தீர்வுதான்; இராணுவத் தீர்வால் முடியாது என்ற பழைய பல்லவியையே இந்திய அரசு எவ்வளவு நாள்தான் பாடிக்கொண்டு அடுத்து அனுபல்லவி, சரணத்திற்கு (அடுத்தக்கட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கை)ப் போகவேண்டாமா? போர் நிறுத்தம் தேவை. இங்குள்ள (தமிழக) சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சியும் ஒருமித்து தீர்மானித்து, மத்திய அரசுக்கு வைத்த வேண்டுகோள் அலட்சியப் படுத்தப்படலாமா?
தேர்தலைச் சந்திக்க வேண்டாமா காங்கிரஸ்?
அலட்சியப்படுத்தப்பட்டால், வரும் ஏப்ரலில் பொதுத்தேர்தலை காங்கிரஸ் கட்சி சந்திக்க வேண்டாமா?
வரும் பொதுத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் அவர்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக அமையும் என்பதையும், கடும் விலை தர வேண்டிய அரசியல் கட்டாயத்திற்கு ஆளாகிவிடும் என்பதையும் தொலைநோக்கோடு தெரிவிக்க விரும்புகிறோம்.
ஏற்கெனவே சேதுக்கால்வாய் திட்டத்தில் காலதாமதமும் கசப்பை, கடுப்பை தமிழக மக்களிடம் உருவாக்கியுள்ளது என்பதை ஏனோ மத்தியில் உள்ளோர் பொறுப்பானோர் உணரவில்லை. மற்றவர்கள் எப்படியோ! மதிப்பிற்குரிய U.P.A.வின் தலைவர் திருமதி சோனியா அம்மையார் இதனை தெளிவுடன் புரிந்து செயல்பட ஆணையிட வேண்டாமா?
இன்னமும் நம்புகிறோம்!
-------------------- "விடுதலை" - 6.1.2009
Search This Blog
6.1.09
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சங்கராச்சாரி கைது செய்யப்பட்டபோது அவர்களுக்கு உதவி செய்ததும் இதே இந்து ராம் என்னும் பார்ப்பனர்தான்.
இவரை முற்போக்குவாதி என்று சொல்லும் சில முண்டங்களும் உண்டு.
தமிழனிடம் காசு வாங்கி வயிறு வளர்க்கும் இந்தக் கூட்டம் துரோகம் செய்வதையே பொழப்பாக வைத்திருக்கிறார்கள்.
தமிழா ஏமாந்தது போதும்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்
hai,
dont write like this... ayyappanai vanagipar unnaku puriyum.
Unaku thaeriyadha, puriyadha onna elanu solluviya. ayappan unaku nalla puthiya tharanum...
swamiyae saranam ayyappa...
Post a Comment