Search This Blog

8.1.09

பொங்கல் திருநாள்இந்து மதம் சார்ந்த ‘பண்டிகை’ யா?


சங்கராச்சாரியார் கையில் வீச்சரிவாள் ...!




அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்க பத்திரிகைகளுக்கு உரிமையுண்டு. ஆனால் அது

விமர்சனமாக

இருக்கவேண்டுமே தவிர

விஷமமாக

இருத்தல்கூடாது.

தினமணி ஆசிரியர் வைத்தியநாத அய்யர் - விஷயத்துக்கு முதலிடம் தருவதை விட விஷமத்துக்கே முதலிடம் தரும் அக்மார்க் ஆர்.எஸ்.எஸ்.காரர்.

இவர் ஆசிரியப் பொறுப்பேற்ற பின்னர் - தினமணியை நூற்றுக்கு நூறு தி.மு.க. எதிர்ப்பு ஏடாகவே மாற்றிவிட்டார். ஜெயலலிதாவை நேரடியாக ஆதரிக்கமாட்டார்; நேரடியாக ஆதரித்தால் தினமணியின் நடுநிலை முகமூடி கிழிந்து பார்ப்பன முகம் வெளியே தெரிந்துவிடும்; வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பது அய்யர்வாளுக்குத் தெரியும். அதனால் தி.மு.க.வையும் முதல்வர் கலைஞரையும் யார் யார் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்கிற வகையில் வசைபாடுவார்களோ அவர்களிடம் பேட்டி - அவர்களது பேச்சு - அவர்களது அறிக்கை என்று தேடித்தேடிச் சென்று வாங்கி பிரசுரித்துவிடுவார்.

தினமணியின் முதல் பக்கத்தில் அடடே! என்று ஒரு நையாண்டிச் சித்திரம். நடுப்பக்கத்தில் மதி என்பவரின் கேலிச்சித்திரங்கள்.

அத்தனையும் கலைஞர் எதிர்ப்பு, கேலி, கிண்டல்; பாப்பாத்தியம்மாளைப் பற்றி மறந்தும் ஒரு கேலிச் சித்திரமோ, எதிர்ப்பு விமர்சனமோ வெளியிட்டுவிடமாட்டார். அந்த அளவுக்கு (‘பிளட் ஈஸ் திக்கர் தென் வாட்டர்’) என்பார்களே - அதுபோன்ற பயங்கர ஜாதி அபிமானம்!

நாளுக்கு நாள் தினமணி வைத்தியநாத அய்யரின் (சாதித்) திமிர்வாதங்கள் அதிகரித்த படியே இருக்கின்றன.

இன்றைய தினமணியில் (24.12.2008) முதல் பக்கத்தில் ஒரு நையாண்டிச் சித்திரம். அதிலே - தி.மு.க. அமைச்சரிடம் ஒரு கடைநிலை ஊழியர் - பேசுவதாக ஒரு நையாண்டி!

"வாக்காளராம் தலைவரே! போன தேர்தல்ல நமக்குத்தான் ஓட்டுப் போட்டாராம். மைனாரிட்டி சமூகத்துக்கு ஒரு ‘மைனாரிட்டி’ அரசே துரோகம் பண்ணலாமா? இலவசப் பொங்கல் சாமான் தர்ற மாதிரி கிறிஸ்துமஸ்சுக்கு இலவச கேக் தர்ற திட்டம் ஏதும் கிடையாதான்னு கேட்கிறார்"

- என்பது தினமணியின் குதர்க்கவாதம்.

பார்ப்பனர்கள் தங்களை அதிபுத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள்; ஆனால் அவர்களது எழுத்துகளிலோ புத்திசாலித் தனத்துக்கு பதிலாக அபத்தங்களே மிகுந்திருக்கும்.

பொங்கலுக்கு இலவசப் பொருள்கள் வழங்குவதை - ஏதோ ஒரு மதம் சார்ந்த பண்டிகைக்கு வழங்கப்படும் இலவசப் பொருள்கள் என்று அபத்தமாக அர்த்தம் செய்துகொண்டு

கிறிஸ்துமஸ்சுக்கு

இலவச கேக்

தருவார்களா?

என்று கேட்டு நையாண்டி செய்திருக்கிறது தினமணி!

பொங்கல் திருவிழா என்பது எந்த மதத்தினரும் சார்ந்த ‘பண்டிகை’ அல்ல. அது எல்லாச் சமயத்தவருக்கும் பொதுவான உழைப்பாளர் திருநாள்.

உழவர் பெருங்குடி மக்களின்

உழைப்பின் பெருமையை

உவகையோடு - சாதி - மத

பேதமின்றி எல்லா மக்களும்

கொண்டாடக்கூடிய திருநாள்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் - மற்றெல்லாம்

தொழுதுண்டுபின் செல்பவர் -

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - அதனால்

உழன்றும்உழவே தலை

என்றெல்லாம் அய்யன் திருவள்ளுவனின் அடியொற்றி உழைப்பைப் போற்றும் நாள், உழைப்பாளர்களைப் பெருமைப்படுத்தும் நாள்.

இந்த உழைப்பாளர் திருநாள் ஆண்டுதோறும் தை முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது பொங்கல் திருநாள் என்று.

இந்தப் பொங்கலை

வைத்தினாதய்யர்

வகையறாக்கள்

பொங்கல் என்று

அழைத்துக்

கொண்டாடுவதுண்டா?

ஒரு போதுமில்லை.

சங்கராந்தி - என்று தங்களது ஆரியக் கலாச்சாரத்தையொட்டி - வடமொழியில் பெயரிட்டு சங்கராந்திதான் கொண்டாடு வார்களே தவிர - ஒருபோதும் பொங்கல் என்று வாய் தவறியும் சொல்லிவிடமாட்டார்கள்!

பொங்கல் எல்லோருக்கும்

பொதுவானது என்றால்

சங்கராந்தி

பார்ப்பனர்கள் மட்டுமே

கொண்டாடும் நாள்.


100க்கு 97 சதவீதத்தினரான ‘சூத்திர’ மக்கள் யாரிடம் வேண்டுமானால் வைத்தியநாத அய்யர் கேட்டுப் பார்க்கட்டும், ‘சங்கராந்தி’ தெரியுமா என்று? எல்லோரும் - ஏழை எளிய உழைப்பாளி மக்கள் எல்லோரும் - ‘தெரியாது’ என்றே பதிலளிப்பார்கள்.

பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு பெரிய அளவில் வியாக்கியான கர்த்தாக்கள் எவரிடமும் போய் சந்தேகம் கேட்பதில்லை. காரணம் உழைப்பாளர் தினம். விவசாயிகள் தினம் - உழைப்பின் மேன்மை போற்றும் நாள் என்பது பாமரர்களுக்கும் பளிச்சென்று தெரியும்.

பார்ப்பனர்களின்

சங்கராந்தி என்பது

என்ன?

மகரசங்கராந்தி புருஷர் என்று ஒருவராம். அவர் ஸ்திரீ (பெண்) ரூபம் எடுத்து வருவாராம். அப்போது அவர் மகரசங்கராந்தி புருஷர் அல்ல, சங்கராந்தி தேவியாம்! அவளுக்கு

3 முகங்கள்

4 கால்கள்

கறுப்பு முடி

3 வாய்கள்

8 கைகள்

இவ்வளவு அழகுகளும் பொருந்திய அவள் மந்தாகினி என்ற பெயரோடு சங்கராந்தி தினத்தன்று பார்ப்பனர்களின் வீடுகளுக்கு ‘விஜயம்’ செய்வாளாம்.

ஆலங்குச்சியில் பல் விளக்கி

அசுத்த ஜலத்தில்

குளிப்பாளாம் அவள்.

அந்த மந்தாகினி ஓர் கையில் வில், ஆயுதம் மறு கையில் சூலம் ஏந்தி

காளை மாட்டின்

முதுகிலமர்ந்து

வருவாளாம்.

- இது ‘விரோதி’ வருடத்திய, ஆற்காடு வெ.சீத்தாராமையர் கணித்த சுத்தவாக்கிய சர்வ முகூர்த்தப் பஞ்சாங்கத்தில் வர்ணிக்கப் பட்டுள்ள சங்காரந்தி தேவியின் லெட்சணம்.

இப்படிப்பட்ட மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசும் சங்கராந்திதான் இந்து மதப் பண்டிகை! இந்துமதம் என்ற பேரால் பார்ப்பனர்கள் மட்டுமே கொண்டாடும் பண்டிகை.

பொங்கல் திருநாள் இந்து மதம் சார்ந்த ‘பண்டிகை’யும் அல்ல, எந்த மதம் சார்ந்ததுவுமல்ல.


பொங்கல் எல்லோரும் கொண்டாடும் திருநாள் என்பதால்தான்

குடும்ப அட்டைதாரர்கள்

அனைவருக்கும் - இந்துவா

முஸ்லீமா - கிறிஸ்தவரா

என்ற பாகுபாடுகளுக்கு

அப்பாற்பட்டு

குடும்ப அட்டைகள் பேரில்

பொங்கல் சாமான்கள்

வழங்கப்படுகிறது.

பொங்கலை - சங்கராந்தி என்று

புத்திகெட்டதனமாகப் புரிந்துகொண்டு

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதுபோல "கிறிஸ்துமஸ்சுக்கு இலவச கேக் தர்ற திட்டம் உண்டா?" - என்று விஷம புத்தியோடு வினா எழுப்பியிருக்கிறது தினமணி ஏடு! அதனை எழுதியவர் பெயர் ‘மதி’யாம்! அதைப் படிக்கும் எவருக்கும் மதியா? மதியிலியா? -என்ற சந்தேகமே மேலோங்கும்!

வைத்திப் பார்ப்பனரின் அத்து மீறல் எந்த அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்றால் - தமிழக முதல்வர் கையில் மதுபாட்டிலை வைத்து - கார்ட்டூன் போடும் அளவுக்கு திமிர் ஏறி வருகிறது.

டாக்டர் ராமதாஸ் அவர்கள் - சர்வசமயத் தலைவர்களுடன் முதல்வர் கலைஞரை சந்தித்து பரிபூரண மதுவிலக்கை அமல் செய்யவேண்டும் - என்று வேண்டுகோள் விடுத்தார்.

அந்த வேண்டுகோளுக்கிணங்க தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார் கலைஞர்.

உடனடியாக

- இரவு 10 மணிக்கு மேல் மதுக்கடைகள் திறந்திருக்காது.

- இனி எந்த ஊரிலும் எந்த இடத்திலும் புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படமாட்டாது

- என்று அறிவித்தார் முதல்வர் கலைஞர். இதைத்தான் கலைஞர் கையில் மதுபாட்டிலை வைத்து படிப்படியாக மது விலக்கு அமல் என்ற தலைப்பில் கேலிச்சித்திரம் வரைந்திருக்கிறது தினமணி.

இதைத்தான் கிராமத்து ஜனங்கள்

பாப்பாரக் குறும்பு

என்பார்கள்!

சங்கராச்சாரியார் மீது கொலை வழக்கே நடந்து வருகிறது. அது தொடர்பாக அவர் கையில் வெட்டரிவாள் - வீச்சரிவாள் ஏந்தி அருளாசி வழங்குவதுபோல் வைத்தியநாத அய்யர்கள் கேலிச் சித்திரம் வரைந்து விடுவார்கள்!

அப்படி யாராவது வரைந்து விட்டால்தான் சும்மா இருந்து விடுவார்களா? குய்யோ முறையோ என்று கூச்சல்போட்டு - உண்டு - இல்லை என்று பார்த்துவிட மாட்டார்களா?

-------------------------- 25-12-2008 -முரசொலியில் சின்னகுத்தூசி அவர்கள் எழுதிய கட்டுரை

8 comments:

VijayanSpeaking said...

இசுலாமியர் . ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே பொங்கல் கொண்டாட படுகிறது. பிறகு அது எப்படி பொதுவான பண்டிகை ? நீங்கள் எல்லாவற்றையும் தங்களுக்கு சாதகமாகி கொள்ள பார்காதிர்கள் . தமிழனுக்கு கடவுள் இல்லையா? தனி மதம் இல்லையா? அவ்வையார் எந்த மதத்தை சார்த்தவர் ? பதில் சொல்ல வேண்டுகிறேன். பின் குறிப்பு : நான் ஒரு வன்னியர் குல சத்ரியன் . அய்யர் அல்ல.

தமிழ் ஓவியா said...

//இசுலாமியர் . ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே பொங்கல் கொண்டாட படுகிறது.//

ஆங்கிலேயர் வெளிநாட்டில் இருந்து வந்தவகள். அதில் ஒன்றும் எனக்கு கருத்து மாறுபாடு இல்லை.

ஆனால் இஸ்லாமியர்கள் ஆப்கானிஸ்தானிலிருதோ வேறு எங்கிருந்தோ வந்து இங்கு குதித்தவர்கள் அல்ல. இங்குள்ள தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள்தான் இந்து மத இழிவை பொறுத்தக் கொள்ளமுடியாமல் மதம் மாறியவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் அம்மாவாசையாக இருந்தவர்தான் அப்துல்காதராக மாறிப்போனார் . சில ஆண்டுகளுக்கு முன்னால் சுப்பன் ஆகா இருந்தவர்தான் சூசை யாக மாறிப்போனார்.

அவர்கள் தமிழர்களாக எப்போதும் மதம் மாறினாலும் இருக்கக்கூடியவர்கள்.

அவர்களும் பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகிறார்கள். அனைத்து மதத்தினரும் கொண்டாடும் பண்டிகை எப்படி மதம் சார்ந்த பண்டிகையாகும்?
அது ஒட்டு மொத்த தமிழனின் பண்டிகை.

இப்போது புரிகிறதா? நண்பரே.

நாங்கள் எதையும் சாதகமாக்கி கொள்ளுவதில்லை. உண்மையை சொல்லுகிறோம். அவ்வளவே.

உங்களின் மற்ற கேள்விக்கு பிறகு பதில் சொல்கிறேன்.

இன்னும் விவாதிப்போம்.

அர்த்தமுள்ள கேள்வியை எழுப்பிய உங்களுக்கு நன்றி.

தமிழ். சரவணன் said...

அருமையான கட்டுரை

தாமிரபரணி said...

//***பொங்கல் திருவிழா என்பது எந்த மதத்தினரும் சார்ந்த ‘பண்டிகை’ அல்ல. அது எல்லாச் சமயத்தவருக்கும் பொதுவான உழைப்பாளர் திருநாள். **//
பார்பனன் என்னைக்கு வயக்காட்டுல இறங்கி வேலை பார்திருக்கான், அடுத்தவனை எமாற்றி அவர்களின் உழைப்பை உறிஞ்சுவதுதான் பார்பனனின் பார்பத்தனம்,
நான் நயவஞ்சக கொண்ட பார்பனனை மட்டுமே சாடுகிறேன்
சாதி, சமயம், புசை,சடங்கு,சாதகம் என மக்களை கடவுளின் பெயரால் எமாற்றி தன் இனத்தை உயர்ந்த்தாகவும் மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்று எண்ணும் இன்னமும் அப்படியே எண்ணிகொண்டிருக்கும் பார்பனனை சாடுகிறேன்
ஒருவன் தன் இனத்தால் உயர்ந்தவனாக முடியாது, தன் நற்பண்புகளாலும், முற்போக்கு சிந்தனையாலும், நல்ல மனதாலுதான் ஒருவன் மேன்மக்கள் ஆகிறான், உலகில் பிறந்த அனைவரும் சமமே அப்படி இல்லை கடவுளே சொன்னாலும் அந்த கடவுளையே தூக்கி எறிவோம்
//** தமிழனுக்கு கடவுள் இல்லையா? தனி மதம் இல்லையா? அவ்வையார் எந்த மதத்தை சார்த்தவர் ? பதில் சொல்ல வேண்டுகிறேன். பின் குறிப்பு : நான் ஒரு வன்னியர் குல சத்ரியன் . அய்யர் அல்ல**//
தமிழ் என்பவனுக்கு தமிழ்தான் மதம் தமிழன் மதத்துக்கு அப்பாற்பட்டவன் அவன் இந்துவும் அல்ல இசுலாமியர், . கிருத்தவனும் அல்ல, அவன் ஆதியில் இருந்து இயற்கையை மட்டுமே கடவுளாக கொண்டுள்ளான், தாங்கள் குறிபிட்ட சாதிகூட ஆரியர்களால்தான் வந்தது

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

தமிழ். சரவணன்

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தாமிரபரணி.

எனது வேலையை எளிமையாக்கி உதவியதற்கு மீண்டும் நன்றி.

ALIF AHAMED said...

அப்ப தீபாவளிக்கு அரசு கொடுக்க்கும் சக்கரை மற்றும் அடிகபடியான அரிசி மற்றும் இலவசங்களுக்கு.. உங்கள் பதில்??

குறிப்பிட்ட மத நிகழ்ச்சிக்கு மட்டும் தான் இது வழங்க படுகிறது மறுக்க முடியுமா? உங்களால்...... (பொங்கல் தவிர உங்கள் கருத்து படி)

ஜனநாயக மதசார்பில்லா அரசுனு சொல்லிக்கலாம் ஆனால் நடமுரறையில் ஓவ்வொரு பள்ளி,மருத்துவமனை,போலிஸ் ஸ்டேசன்,அரசு அலுவங்கள் அனைத்திலும் ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே..!!!

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி மின்னுது மின்னல்.

மதச்சார்பற்ற அரசாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எனது ஆசை.