Search This Blog
30.1.09
பெரியார் சிந்தனைத் துளிகள்
தகுதியுடையவன்
"காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது. மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடைய வனாவான்."
("குடிஅரசு", 26.1.1936)
கிடைக்காது!
"உலகில் எந்தத் தொண்டு செய்கிறவர்களுக்கும் மரியாதை கிடைக்கும். ஆனால், சமுதாயத் தொண்டுக்காரர் களுக்கு மட்டும் மரியாதை கிடைக்காது."
("விடுதலை", 26.12.1964)
மனிதன்
"மனிதன் என்பதற்கே பொருள், விசயங்களை ஆராய்ந்து பார்த்து, நன்மை - தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதே யாகும்."
("விடுதலை", 26.3.1951)
இலட்சியம்
தமது வாழ்க்கையால் பிறர் நடந்துகொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும்.
(விடுதலை, 20.3.1950)
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பெரியாரின் சிந்தனைத் துளிகள் ஒவ்வொன்றும் வாழ்வியலாக உள்ளது.
அதுவும் உண்மையை அப்பட்டமாக உரைக்கிறது. சான்றாக பெரியார் சொன்ன கருத்து இதோ:
"உலகில் எந்தத் தொண்டு செய்கிறவர்களுக்கும் மரியாதை கிடைக்கும். ஆனால், சமுதாயத் தொண்டுக்காரர்களுக்கு மட்டும் மரியாதை கிடைக்காது."
("விடுதலை", 26.12.1964)
இது போல் பல உண்மைகளை சொல்லி மக்களைப் பக்குவப்படுத்தி, மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் பெரியார்.
வாழ்க பெரியார், வளர்க அவரது கொள்கை.

ஈழப்பிரச்சினையில், முத்துக்குமார் செய்தது
தேவையில்லை.என்றாலும் இன்றய நிலையை
காணாது இருப்பது நல்லதா? தேர்தல் உத்தி
பிரிவதில் மட்டும் கவனமாக இருப்பது அரசியல்வாதிகளின் பிழைப்பு. பெரியார் நிரைய வேலைத்திட்டம் கொடுத்துள்ளார். எனவே எதையாவது எடுத்துக்கொண்டு உங்கள்
தலைவர் காலம் தள்ளுவதைக் கண்டு ரசியுங்கள்.
இரசீத்நாத்திகன்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment