Search This Blog

19.1.09

பார்ப்பன ஆதாரவாளர்களின் சிந்தனைக்கு....


நம்மில் பிணக்கமுற்று விலகிய
திராவிட நண்பர்களுக்கோர் அறிவிப்பு


இக்காலத்தில் திராவிடர்களில் சிலர் இத்தேசத்துப் பழங்குடிகளாகிய நம் கவுரவம் இன்னதென்று தெரியாமற் போனார்கள். இதில் குடியேறி நிலைத்த பார்ப்பனர்கள் மாய வலையில் சிக்கி விட்டார்கள். நாம் நம் மக்களின் ஈடேற்றத்தின் பொருட்டு இடையறாது செய்து வருவனவெல்லாம் பயனற்றன என்கிறார்கள். பார்ப்பனர்களுக்கு எக்காரணத்திலாவது விரோதமாய் எழுப்புவது பேதைமையாமென்று நம்மீது குற்றங்கள் கற்பித்து நம்மைக் குறை கூறுகின்றார்கள். திராவிடர்களாகிய நாம் நம்மில் ஒற்றுமைப்பட வேண்டும். நாம் செய்து வரும் முயற்சிகளெல்லாம் நம் மக்களின் நலங்களை விரும்பியே என்றுணர வேண்டும். இங்ஙனமின்றி, நம்மை வீணே குறை கூறுவார்களானால் நாம் எக்காலத்தில் ஈடேறுவது?


பிராமணர்கள் பண்டைக் காலங்களில் நம் ஏழை திராவிட மக்களை அடிமைப்படுத்தினார்கள். நாம் முன்னேறவிடாது நம்மையடக்கி வைத்து இழிவுபடுத்தினார்கள். ஆங்கில அரசாட்சியால் நாகரிகமும் கல்வியும் விழ்ச்சியடைந்து வரும் இக்காலத்தும் தலைமை பாராட்டுகிறார்கள். நம்மை இழிந்தவர்களாகக் கருதி அருவருப்போடு நடத்தி வருகிறார்கள்.

இங்ஙனமாகவும், சில திராவிட நண்பர்கள் ஒரு சிலர் நம்மிற் பிணக்கமுற்று நம்மைவிட்டு விலகி விட்டதாகக் கருதிக் கொள்ளுவதாலன்று இனி அறிவுள்ளவர்களும் அறிவில்லாதவர்களும் எல்லா வகுப்பினரிடத்துமிருக்கிறார்கள். இங்ஙனமாக அறிவுள்ளவர்களென்று ஒரு வகுப்பினரையே கூறுதல் அறிவில்லார் கூற்றாம்.

இனி, சுயநலத்தையும் தற்பெருமையையும் கருதிய பிராமணர்கள் தாங்கள் உயர்ந்தப்பட வேண்டுமென்று சாதிகள் வகுத்தார்கள். மற்றது துன்புருவினராகிய கடவுளுக்கும், அறிவுள்ளவர்களுக்கும் சம்மதமானதன்று. திருநாவுக்கரசு சுவாமிகள் சாத்திரம் பல பேசுஞ்சழக்கர்காள் கோத்திரமுங்குலமுங் கொண்டென் செய்வீர் என்று கூறியிருக்கிறார். திருவள்ளுவரும் அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகலான் என்றும், ஒழுக்கங் குடிமை யிழுக்கம் இழிந்த சிறப்பாய்விடும் என்றும் ஓதியருளினார். இதனால் ஒழுக்கமுள்ளவர்களே அந்தணர் என்றும், ஒழுக்கமுண்மையே குடிமை என்றும் நாமெல்லோரும் செவ்வையாக அறிந்து கொள்ளுகிறோம். இங்ஙனமாக, ஒரு வகுப்பினரையே (பிராமணர்களையே) உயர் சாதியாரென்று கொண்டு பாராட்டல் பேதைமையே யாகும்.

ஆ! பிராமணர்கள் இட்ட வித்து எவ்வளவு வலுவுள்ளது. அன்பர்களே! நாம் அனுசரித்து வருவனவெல்லாம் பிராமண ஆசாரங்கள். ஆகையால் அவைகளை எல்லாம் ஒழித்துவிட வேண்டும். உம்மிற் பிணக்கமின்றி ஒற்றுமைப்பட்டு உயர வேண்டும். உயர்ந்து பிராமணர்கள் நிலையை அல்லது அவர்களுக்கு மேலான நிலையையடைய இடையறாது முயற்சி செய்ய வேண்டும் - என்றிங்ஙனமெல்லாம் திராவிடர்களின் முன்னேற்றத்தைக் கருதிய ஒரு திராவிட நண்பர் நம்மீதுற்ற அன்பினாலும் இரக்கத்தினாலும் கூறுகிறார். அவர் தங்கள் ஆசாரங்களை இகழ்ந்து விட்டவராகப் பிழைபட எண்ணிக் கொள்ளுகிறார்கள். அவ்வெண்ணத்தால் அவரையும் அவரைச் சார்ந்தரெல்லாரையும் நிந்தித்து நம்மை விரோதமாகக் கொள்ளுகிறார்கள். ஆதாரங்களை இழந்து நம் திராவிட நண்பர்களுக்கு மனத்துயர் விளைவித்து அவர்கள் பகைமையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதா எங்கள் கருத்து?

இல்லை, இல்லை தனக்கென வாழ பிறர்க்குரியராய் அன்பினால் ஒற்றுமைப்பட்டு தரத்தைக் காப்பாற்றிக் கொண்டு கவுரவமாய் பிராமணர் பக்கஞ் சார்ந்தார்கள் ஏனெனில், பிராமணர்களிற் சிலர் ஹைகோட்டு ஜட்ஜிகளாகவும், கவுன்சில் மெம்பர்களாகவுமிருக்கிறார்கள்.
பெரும்பாலோர் உயர்ந்த உத்தியோகங்களிலிருந்து கொண்டு கவுரவமாய் மாத்திரம் வாழ்ந்துகொண்டு வருகிறார்கள். ஆகையால் பிராமணர்களைச் சேர்ந்தொழுகினால் பெருமை உண்டாகும் என்றிங்ஙனமெல்லாம் மனப்பால் குடித்துக் கொண்டதால் வேறு சிலர் பிராமணர்களே அறிவுள்ளவர்கள். அவர்கள் வழி நடத்தலே நலமுடையது என்று கருதிக் கொண்டு நம்மைவிட்டு விலகினார்கள்.

பிராமணர்களே உயர்ந்த சாதியர் பூதேவர்கள் ஆதலால் சூத்திரர்கள் அவர்களுக்கு அடங்கிநடக்காமல் விரோதமாய் வருதல் பாவமும் பழியுமாகும் என்று அஞ்சி அவர்களைப் பின்பற்றுகிறார்கள் இன்னுஞ்சிலர்.

இனி, ஒருவர் எப்போதும் நிலைப்பதாகிய புகழைத் தேட வேண்டும். வருவதுபோல் வந்து ஒழிந்து போவதாகிய பொய்ப்புகழ், பெருமைதேட முயலல் வெறும் பேதைமையேயாகும். நாம் இன்னாரென்பதும், பிராமணர்கள் நம்மிற் பகைமை பாராட்டி நம்மை அடிமைகள் போலெண்ணி நமக்குத் தீங்குகள் செய்துவருதலும் நாம் உணர வேண்டும். பின் அவர்கள் கேண்மையை யஞ்சி கழித்து விட்டு நம் மக்களை உயர்த்த முன் வருதல் வேண்டும். இதுவே நம்மில் படித்தவர்களுடைய இன்றியமையாத கடமையாகும்.
இங்ஙனஞ் செய்து வருதலொன்றாலே தான் நாம் அழியாப் புகழ் நாட்டலாகும். மற்று, பிராமணர்களைச் சேர்ந்து என்னமோ உயர்ந்த காரியங்களைச் செய்து வாழ்ந்து வந்தார்கள். பண்டைக் காலத்து நம் திராவிட மக்கள் அவர்கள் இரத்தக் கலப்பிற் றிரண்டெழுந்து போதருகின்ற நாம் பிராமணர்களால் அடிமைப்படுத்தப்பட்டோம். அதனால் நம் கவுரவம் இன்னதென்றும், வழக்க ஒழுக்கங்கள் இன்னவென்றும் உணராமல் ஆசாரங்களையும் தழுவி ஒழுகுகின்றோம். பிராமணர்களினின்றும் பிரித்துக் கொண்ட நம் முன்னேற்றத்திற்கு அது எள்ளளவும் நன்மை செய்ய மாட்டாது என்று அவர்கள் நன்மை பொருட்டு நாம் கூறுஞ் சொற்களையும், வன்சொற்களாகவும் கொள்கிறார்கள்.

நன்னூலியற்றிய பவணந்தியார் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினானே என்று கூறுகிறார். இவ்விதி இலக்கணத்துக்கு மாத்திரமன்று எவர் யாது கூறினும் மெய்ப் பொருள் காண்பதறிவாதலால் காய்தலுவத்தல கற்றி அவரவர் கூறும் பொருள்களை தமது நுண்ணிய அறிவினால் ஆராய்ந்து பார்க்க வேண்டும். நம் நாகரிகத்திற்கும், முன்னேற்றத்திற்கும் நன்மை செய்யும் வழிகளையே தழுவி நடக்க வேண்டும். நம்மில் வித்தியாசமில்லாது ஒன்றுபட்டு நம் முன்னேற்றத்திற்காக உழைத்துவருதல் வேண்டும். இங்ஙனஞ் செய்து வருதலே திராவிடர்களாகிய நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

----------------------- திரு. ச. நடேசன் "திராவிடன்" 13.10.1917

3 comments:

Unknown said...

1917 ஆம் ஆண்டு இருந்த நிலை இன்றும் நீடிக்கத்தான் செய்கிறது. பார்ப்பானை பார்த்து பல்லிளிப்பது தொடர் கதையாக நீடிப்பது தமிழனுக்கு அவமானம்.

Thamizhan said...

படித்து,பதவிகள் வகித்து இன்னும் பணக்காரர்களாகவும் ஆகியும்
பார்ப்பன,பார்ப்பனீய அடிமைகளாகவே வாழும் தமிழர்களுக்கு இன்றும் தேவை.

காலில் விழுந்து கிடக்கும் கழிசடைத் தமிழர்களின் சிந்தனைக்கு நண்பர்கள் அனைவரும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழன் அய்யா