Search This Blog

8.1.09

நாத்திகப் பேருந்துகள் - லண்டனில்!







உலகமெலாம் பெரியார் கொள்கை மயம் என்ற இசைப்பாடல் கழக நிகழ்ச்சிகளில் பாடப்படுவதுண்டு. அதை மெய்ப்பிக்கும் நிகழ்வு அண்மையில் தொடங்கப்பெற்று நடந்து கொண்டிருக்கிறது - லண்டனில், வாஷிங்டனில், பார்சலோனாவில், இத்தாலியில் என்று பல நாடுகளிலும் பல மொழிகளிலும் கடவுள் மறுப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

கடவுள் இல்லை - அதைப்பற்றிக் கவலைப்படுவதை நிறுத்துங்கள் - வாழ்க்கையை அனுபவியுங்கள் என்கிற வாசகம் லண்டனில் 800 பேருந்துகளில் எழுதப்பட்டு அந்த வாசகங்கள் பார்ப்போர், படிப்போர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. லண்டன் நகரில் 200 பேருந்துகளில் நாடெங்கும் 600 பேருந்துகளில் என 800 பேருந்துகள் கடவுள் மறுப்பு வாசகங்களும் சென்று வந்துகொண்டிருக்கின்றன.


இந்த விளம்பரச் செலவுகளுக்காக 5500 பவுண்ட் நன்கொடை யாகத் திரட்ட முடிவு செய்தனர். வசூல் ஆன தொகையோ, ஒரு லட்சத்து 40 ஆயிரம் பவுண்ட்கள்! எவ்வளவு ஆதரவு கடவுள் மறுப்பு இயக்கத்திற்கு என்பதை இதை வைத்தே மதிப்பிடலாம்!

பெருமளவில் நன்கொடை குவிந்திருப்பதால் 1000 டியூப் ரயில்களில் (தரைக்கு அடியில் ஓடுபவவை) விளம்பரம் செய்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தைத் திட்டமிட்டு நடத்துபவர் - தொலைக்காட்சி நகைச்சுவை எழுத்தாளர் அரியேன் ஷெரீன் எனும் பெண். நாத்திகப் பேருந்து ஒன்றுக்காக காலங்காலமாக காத்துக் கிடந்தோம். - இப்போது 800 பேருந்துகள் வருகின்றன எனக் கூறியுள்ளார். இந்த இயக்கத்தில் இவருடன் இணைந்தவர்கள் ரிச்சர்டு டாகின்ஸ் (கடவுள் மயக்கம் நூலாசிரியர்) ஹேன் ஸ்டின்கன் (பிரிட்டிஷ் மனிதநேயச் சங்கம்) ஏ.சி. கிரேலிங் எனும் தத்துவ அறிஞர் மற்றும் கிரகாம் லைன்ஹன் (பல நூல்களின் ஆசிரியர்) ஆகியோர்.

பிரிட்டனின் 30 முதல் 40 விழுக்காட்டி னர் கடவுள், மத நம்பிக்கையற்றவர்கள் - 60 முதல் 65 விழுக்காட் டினர் இளைஞர்களில் கடவுள், மத நம்பிக்கை அற்றவர்கள். இவர்களின் முழக்கம் - மதம் இல்லாமலே மக்கள் மகிழ்ச்சியான, ஆற்றலுள்ள வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பதுதான்!

பிரிட்டிஷ் மக்களின் இந்தச் செயல், பல நாட்டினரையும் கவர்ந்துள்ளது. மனித நேய அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் முதல் பேருந்துகளில் விளம்பரம் செய்து வருகின்றனர் - ஏன் கடவுள் என்பதை நம்புகிறீர்கள்? நன்மைக்காக நல்லவர்களாக இருப்போம் எனும் வாசகங்கள் வாஷிங்டன் டி.சி. இல் ஓடும் 230 பேருந்துகளின் உள்ளும் புறமும் விளம்பரப் படுத்தப்பட்டுள்ளன.

பார்சலோனாவில் பிரிட்டனில் எழுதப்பட்டுள்ள இங்கிலீசு வாசகங்கள், ஸ்பானிஷ் மொழியில் தெருக்களில் எழுதப்பட்டுள்ளன - கத்தோலிக நம்பிக்கையாளர்களிடையே பெரும் பீதியை கிளப்பிவிட்டுள்ளது. இத்தாலி நாட்டிலும் பேருந்துகள் இந்த வாசகங்களை தாங்கியவண்ணம் ஓடப் போகின்றன. ஆஸ்திரேலியாவில் இந்த வாசகங்களை எழுதுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பாராட்டிப் போற்றி வரும் பழமை லோகம் ஈரோட்டுக் கடவுள் மறுப்புப் பூகம்பத்தால் உலகம் முழுவதும் செல்வாக்கு இழந்து வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

--------------------நன்றி:"விடுதலை" 8-1-2008

6 comments:

அக்னி பார்வை said...

நம்ம ஊரிள் பேருந்து ஒழங்காக ஓடினாலே சந்தோஷபடுவோம்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர் அக்னி

Thamizhan said...

சாமிகள் பெய்ரால் கொள்ளையடிக்கும் இந்தியாவிற்கும் இது வேண்டும்.
குய்யோ முறையோ என்று கத்தும் கூட்டத்திற்கு இதுதான் பதிலாகும்.

மணி said...

CPI (M) ல் உள்ள நேர்மையான தோழர்கள் இதற்கு பதில் சொல்லலாம் (சந்திப்பு என்ற போலிப்பெயரில் (ie, இயற்பெயர் அல்லாத) இயங்குபவரும் பதில் சொல்லலாம்.) அனைத்து

சிஐடியு வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடலாமா ?
CPI (M) ல் உறுப்பினராக வேண்டுமென்றால் அய்யர் சாதியில் பிறந்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாமா ?
கட்சியில் இணைந்த பிறகு குலசாமி கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாமா?

-யாராவது சமூக அக்கறை உள்ளவங்களாவது கேட்டு சொல்லுங்கப்பா !

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழன் அய்யா

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தளபதி.