Search This Blog

7.1.09

வெட்கங்கெட்டுக் கேட்டுத் திரியும் பாபநாசம் பார்ப்பனர் வாழும் கலை சிறீ சிறீ ரவிசங்கர்


வெட்கங்கெட்டதுகள்

பாபநாசம் பார்ப்பனர் ரவிசங்கரைத் தெரியுமோ? சிறீ சிறீ ரவிசங்கர் - வாழும் கலை வளர்ப்பவர் என்றால் தெரிகிறது அல்லவா? தோராயமான கணக்கின்படி சும்மா 120 கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரர். பெங்களூரில் கோட்டை கட்டிக் கொண்டு உலகின் பல நாடுகளுக்கும் பறந்து செல்பவர். வாழும் கலையைக் கற்றுக் கொடுக்கிறேன் என்று பித்தலாட்டம் செய்து இவர் அமர்க்களமாக வாழ்கிறார்!

பத்தாம் வகுப்பில் ஃபெயில் ஆகித் தன் தாயாரின் கையில் மொத்தடி வாங்கி வீட்டை விட்டு ஓடிப் பிழைக்கும் வழி கற்றுக் கொண்ட ஆள்.

புராணம் என்றால் நடந்த வரலாறு என்று புதுப் பொருள் கூறி வாங்கிக் கட்டிக் கொண்ட மண்டூகம்!

இது இருக்கும் பெங்களூரில் வசிக்கும் இராமச்சந்திர குஹா ஒரு வரலாற்றாளர். பல நாடுகளுக்கும் சென்று கற்றும், கற்பித்தும் வருபவர். அண்மையில் நார்வே போனார். அதன் தலைநகர் ஓஸ்லோ -வில் ஒரு மாதம் தங்கியிருந்தார். பல்கலைக் கழகத்தில் நார்வே அறிஞர் அர்னே நாயெஸ் என்பார் பற்றி உரை ஆற்றினார். நோபல் அமைதி நிறுவனத்தில் பேசுவதற்கும் அழைக்கப்பட்டிருந்தார். ஓர் அழகிய பூங்காவில் நார்வே மன்னரின் அரண்மனையும் இந்த நிறுவனமும் அமைந்துள்ளன. அமைதிக்கான நோபல் பரிசை காந்தியாருக்கு அளிக்க இயலாமல் போனதற்காக வருந்தி, அந்த நிறுவனத்தின் பொறுப்-பாளர்கள் பேசினர். (காந்தியாருக்கு நான்கு முறைகள் பரிந்துரைத்த போதும் ஆங்கிலேயரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் மறுக்கப்பட்டது தெரிந்ததே) ஆனாலும்கூட, காந்தியாரைப் பின்பற்றிய ஆல்பர்ட் லுதுலி, மார்டின் லூதர் சிங், டெஸ்மான்ட் டுடு, நெல்சன் மண்டேலா, தலாய்லாமா, அவுங்சான்சூகி ஆகியோர்க்கு வழங்கப்பட்டது குறித்துப் பெருமைப்படலாம் என்று ராமச்சந்திர குகா பேசினார்.

உரை முடிந்தும் ஒரு பெண்மணி வந்து தன்னை, நோபல் அமைதிப் பரிசுக்கான ஆலோசனையாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இவரின் பேச்சைப் பாராட்டிவிட்டு, இந்த முறை ஓர் இந்தியருக்கு நோபல் அமைதிப் பரிசு அளிப்பதற்கான காலம் கனிந்துள்ளது எனக் கூறினாராம். கூறிவிட்டுப் பெங்களூர்வாசி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, இவர் காஷ்மீரில் அமைதியைக் கொண்டு வந்தவர், இயற்கை வேளாண்மையை ஆயிரக்கணக்கான இந்தியக் கிராமங்களில் வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கச் செய்தவர் என்று அவரது புகழ் பாடினாராம். பாடிவிட்டு, அவரைப் பரிந்துரை செய்ய வேண்டும் என்கிற வேண்டுகோள் அவருக்கு விடப்பட்டிருப்பதாகவும், சம்பந்தப்பட்ட நபரே நேரடியாகக் கேட்டுக் கொண்டார் என்றும் தெரிவித்த விவரத்தையும் கூறினார்.

குகா சொன்னாராம்: காஷ்மீரில் இதுவரை அமைதி ஏற்படவேயில்லை; பாசன வாய்க்கால் வசதி இல்லாத இடங்களில் - மழை நீரைக் கொண்டு விவசாயம் (மானாவாரி) செய்வதைத் தான் இயற்கை வேளாண்மை என்ற மேலை நாட்டில் கூறுகிறார்கள், அம்மாதிரி வேளாண்மை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே, இந்தியாவில் நடந்து வருகிறது, கோடிக்கணக்கான விவசாயிகள் இந்த முறையில் உழைத்து வருகிறார்கள் என்கிற உண்மையை எல்லாம் விளக்கிச் சொன்னார். ரசாயன உரங்கள் இந்தச் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படுவது இல்லை என்றும் இது இயற்கை வேளாண்மை என்றும் கூறியிருக்கிறார்.

குகா இறுதியில் கூறினாராம்: காந்தியாருக்குப் பரிசு அளிக்காததால் குற்றச்சாட்டு உண்டு; இந்த ஆளுக்குக் கொடுத்தால், அது பெரும் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கிவிடும் எனக் கூறிவந்தாராம்.

இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக, அங்கிருந்து ஓர் அமைச்சரே வந்து இந்த ஆளை அழைத்துக் கொண்டு போனார். அதுபோலவே, காஷ்மீரில் ஆளுநராக இருந்த எஸ்.கே. சின்காவோ அல்லது வேறு யாரோ இவரைக் கூட்டிப் போய் விளம்பரம் தேடியதாகச் சேதி.

அதை வைத்துக் கொண்டு, நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு தானே நேரில் போய், நோபல் பரிசை எனக்குக் கொடுங்கள் என்று ஜென்மம், சிறீ சிறீ ரவிசங்கர்.

பார்ப்பனர்களுக்கு லஜ்ஜையே கிடையாது. பெருமைகள் தன்னைத் தேடி வர வேண்டும், அதை நாடி ஓடக் கூடாது என்று அறியாத வெட்கங் கெட்டதுகள். இதுகளின் ஜீவன ஆதாரமே பிச்சையெடுப்பது தானே, உஞ்ச விருத்தி தானே! வயிறு எப்படியோ, அப்படித்தானே அறிவும்!

----------------"உண்மை" டிசம்பர் 1-15 2008 இதழில் சார்வாகன் அவர்கள் எழுதிய கட்டுரை

2 comments:

Unknown said...

//பார்ப்பனர்களுக்கு லஜ்ஜையே கிடையாது. பெருமைகள் தன்னைத் தேடி வர வேண்டும், அதை நாடி ஓடக் கூடாது என்று அறியாத வெட்கங் கெட்டதுகள். இதுகளின் ஜீவன ஆதாரமே பிச்சையெடுப்பது தானே, உஞ்ச விருத்தி தானே! வயிறு எப்படியோ, அப்படித்தானே அறிவும்!//

பார்ப்பனர்களின் குணத்தை அப்பட்டமாக தெரிவித்திருக்கிறீர்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்