Search This Blog

25.4.09

வை.கோ. பகுத்தறிவுவாதியா?


த(ட)டுமாறுகிறார் வைகோ!



அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும், குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தினேன். சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுவதில் மதிமுகவின் பங்கு நூற்றுக்கு நூறு இருக்கிறது.

(கல்கி 28.9.2004 பக்கம் 13-14)

- இப்படியெல்லாம் மார்தட்டிய மதிமுக பொதுச் செயலாளர் தோழர் வைகோ அவர்கள், அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மனங்கோணாதபடி ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.

இத்திட்டமே கூடாது - உருப்படாதது - பயன் இல்லாதது - நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக அத்திட்டத்தை ரத்து செய்வோம் (அஇஅதிமுக தேர்தல் அறிக்கை பக்கம் 41) என்றெல்லாம் சூளுரைத் திருக்கிறார்.

இந்தத் திட்டத்துக்கு நூற்றுக்கு நூறு உரிமை கொண்டாடும் மதிமுக பொதுச் செயலாளர் அதிமுக தேர்தல் அறிக்கைமீது குற்றப் பத்திரிகை படிக்கவில்லை. அதே நேரத்தில் அதற்கு ஆமாம் சாமி! போட முடியாதே - நூற்றுக்கு நூறு உரிமை கொண்டாடாடுபவர் அப்படியெல்லாம் கூற முடியுமா?
என்றாலும், அம்மையாரையும் சமா தானப்படுத்தும் வகையில் ராமன் பாலத்தைத் தகர்க்காமல் இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்தாமல் - வேறு பாதையில் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று பாம்பும் நோகாமல் பாம்பை அடித்த கொம்பும் நோகாமல் மத்திபமாக - சர்வ ஜாக்கிரதையாக கருத்துக் கூறியிருக்கிறார்.

இதன் மூலம் இந்தப் பிரச்சினையில் அவர் காட்டி வந்திருக்கின்ற வீரியத்தின் விதை காயடிக்கப்பட்டு விட்டது.

தன்னை திராவிட இயக்கத்தின் பாரம்பரிய மனிதன் என்று கம்பீரமாகக் காட்டிக் கொள்வதிலும், அதில் ஒரு மறுமலர்ச்சி சேர்க்கப்பட்டிருப்பதாகவும் நெஞ்சு நிமிர்த்தி வெண்கலக் குரலில் கர்ச்சனை செய்பவர்தான் அவர்.

ஆனாலும் அவருக்கு எப்பொழுதுமே தொண்டையில் சிக்கிய முள்போல முக்கியமான அடிப்படைச் சித்தாந்த்தம் அவருக்குத் தொல்லையைக் கொடுத்துக் கொண்டு வருகிறது.

சுயமரியாதை இயக்கம் அதன் தன்னிகரற்ற தத்துவ ஆசான் தந்தை பெரியார், அதனை யொட்டி அய்யாவின் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்புரை செய்து வந்த அறிஞர் அண்ணா போன்ற சுயமரியாதைச் சீலர் களின் பகுத்தறிவு கருத்துகளை முனை மழுங்காமல் ஏற்றுக்கொண்டிருப்பதிலும், அதனை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் சென்று எடுப்பாகக் கூறி, இளைஞர் சமூகத் தைத் தட்டி எழுப்புவதிலும் எப்பொழுதுமே அவர் சொதப்பல் பேர் வழியாகவே இருந்து வந்திருக்கிறார்.

பகுத்தறிவுக் கருத்துகளைத் திணிக்கக் கூடாது - திணிக்கக் கூடாது என்ற ஒரு சொல்லாடலை அவர் பயன்படுத்தி வருகிறார்.

பகுத்தறிவுக் கருத்துகளைத் திணிக்க முடியாது -சிந்திக்கச் சொல்லுவதுதான் பகுத்தறிவு. அப்படி இருக்கும்போது திணிப்பது என்பது எங்கிருந்து குதித்தது?

அந்தக் கருத்தில் அந்தரங்கச் சுத்தியோடு ஈடுபாடு இல்லாதபோது, அதைப் பரப்புவதில் தயக்கம் இருக்கும் போது இப்படி ஒரு சொல்லைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்ளலாம் என்ற ராஜதந்திரம் அவரை இப்படி பேச வைத்திருக்கிறது என்றே கருத வேண்டும்.


மனம் புண்படுவது பற்றியும் அதிகம் பேசி வருகிறார். அது என்ன புண்படுகிறது?

உலகில் எந்த சீர்திருத்தவாதி பகுத்தறிவு வாதியின் கருத்துகளை மதவாதிகள் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றனர்?

அம்மைப்பால் கண்டு பிடித்த விஞ்ஞானிகூட மதவாதிகள் பார்வையில் மனம் புண்படுத்துபவன்தான். அவர் களின் மனம் புண்படுகிறது என்பதற்காக அந்தத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தவன் அதை வெளியிடாமல் வீட்டு மூலையின் ஒரு பக்கத்தில் குப்புறப்படுத்துக் கிடக்க வேண்டுமா?

குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் அறுவை சிகிச்சையைக் கூட எதிர்த்தவர்கள் உண்டே! அதற்காக அத்திட்டத்தைக் கைவிட்டு விடலாமா?

உலகம் உருண்டை என்று சொன்னதுகூட பைபிளுக்கு விரோதம் என்றார்கள். பைபிளை நம்பும் எங்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூக்குரல் போட்டார்கள். மவுடீகத்தில் கிடக்கும் மக்களின் உணர்வுகள் புண் படுகிறது என்பதற்காக விஞ்ஞானிதன் அறிவுத் தடத்தை விரிவாக்கிக் கொள்ளாமல் இருக்க முடியுமா?

கலிலியோவைத் தண்டித்தது - கத்தோலிக்கம் செய்த மாபெரும் தவறு என்று பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு போப் மன்னிப்புக் கேட்கும் நிலையல்லவா இன்று உருவாகியிருக்கிறது.

மதவாதிகள் மனம் புண்படுகிறது என்பதற்காக தந்தை பெரியார் இராமாயணப் பாத்திரங்களை மக்கள் மத்தியில் கொண்டுவந்து போட்டு தோல் உரிக்காமல் இருந்திருந்தால் தமிழர்கள் மத்தியிலே விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்குமா?

கம்ப இராமாயணத்தை தீயிட வேண்டும் (தீ பரவட்டும் நூல்) என்று அறிஞர் அண்ணாவின் உரை வீச்சுக்கூட வைகோ அவர்களின் கணிப்புப்படி பக்தர்களின் மனதைப் புண்படுத்தக் கூடியதுதான் அந்த வகையில் அய்யாவும் அண்ணாவும் குற்றவாளிகள் என்று கூறும் துணிவு வைகோவுக்கு உண்டா?

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்றபோது தாம் வழக்கமாக அணியும் கறுப்புச் சால்வை அணியாமல் சென்றதைப் பெருமையாகக் குறிப்பிடுகிறார் (தினத்தந்தி 3.3.2006).

இதில் பெருமைப்பட என்னவிருக்கிறது? எந்த இடத்திலும் தன் அடையாளத்தைக் காட்டும் திராணி யில்லாமையைத் தான் இது வெளிப்படுத்தும்.

நான் ஒரு பகுத்தறிவுவாதி; எல்லா மதத்தையும் நான் ஏற்றுக் கொள்ளக் கூடியவன் (தினத்தந்தி 26.3.2006) என் கிறார். பீம்சிங் இது என்ன புதுக் குழப்பம் என்பது அண்ணாவின் ஒரு வசனம்.
பகுத்தறிவுவாதியாக இருப்பவன் மதவாதியாக இருக்க முடியாது. மதவாதியாக இருப்பவன் பகுத்தறிவு வாதியாகவும் இருக்க முடி யாது. ஆனால் இது இரண்டாகவும் தானிருப்பதாக வைகோ அவர்கள் கூறுவது மதவாதிகளையும் பகுத்தறிவு வாதிகளையும் ஒரே நேரத்தில் ஏமாற்ற நினைக்கும் சாமர்த்தியமாகத் தானிருக்கும்.


இது ஒன்றும் அரசியல் அல்ல. அப்படி இரட்டைக் குதிரையில் சவாரி செய்ய ஆசைப்படுவதற்கு.

பகுத்தறிவுவாதிகள் - தந்தை பெரியாரியல் சிந்தனைக்காரர்கள் மிகவும் கூர்மையானவர்கள் - மூலத்தையை அசைத்து மூக்கணாங்கயிறு போடுகிறவர்கள் ஆயிற்றே!

சரி.. இந்த இரட்டை வேடத்தோடுதான் கடைசி வரை பயணம் செய்ய முடிகிறதா? உண்மையைச் சொல் லுவதில் ஒன்றும் சிரமம் அல்ல- என்ன சில கஷ்டங்களைச் சந்திக்க நேரும் அவ்வளவுதான்.

ஆனால் பொய் சொல்லுவதற்கு மகா மகா சாமர்த்தியம் வேண்டும். நேற்று என்ன சொன்னோம் - கடந்த வாரம் என்ன சொன்னோம் - கால் நூற்றுண்டுக்கு முன் என்ன சொன்னோம் என்பதைச் சேதாரமின்றி நினைவில் வைத்துக் கொண்டே - உருப் போட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பது அதுதான். பேராசிரி யர் சுப. வீரபாண்டியன் அவர்களால் எழுதப்பட்ட அரிய நூல் பெரியாரின் இடதுசாரி தமிழ்த் தேசியம் என்பதாகும். அதன் வெளி யீட்டு விழாவில் (19.4.2005) தோழர் வைகோ என்ன பேசினார்?

தான் நாடாளுமன்றத்தில் பேசியதாகச் சொன்னாரே - அது என்ன தெரியுமா?

மனுதர்மம் ஸ்மிருதிகளைக் கொளுத்தினால்தான், இந்த நாட்டிலே வேத புராணங்களை அடியோடு ஒழித்துக் காட்டினால்தான் ஜாதிக் கொடுமையைத் தகர்க்க முடியும் என்று நாடாளுமன்றத்திலேயே பேசியதாக மார்தட்டினாரே வைகோ - இந்தப் பேச்சு இந்து மதவாதிகளின் மனதைப் புண்படுத்தாதா? இராமப் பக்தர்களின் உணர்வுகளைக் குத்திக் குடையாதா?

பேராசிரியர் சுப.வீ. அழைத்தால், பெரியார் பற்றிய நூல் வெளியீட்டு விழா என்றால், அங்கு வரும் கூட் டம், சுற்றுச்சார்புக்கு ஏற்ப ஏற்றப் பாட்டு பாட வேண்டும் என்பதால் மனுதர்மத்தைக் கொளுத்த வேண்டும் என்று பேச வேண்டும். வேறு இடம் என்றால் அதற்கு ஒத்த இசை பாட வேண்டும் என்கிற வியாபார முறை இதில் இருக்கிறதே தவிர சித்தாந்த சுத்தமும், கொள்கைத் திட்பமும் மருந்துக்கும் இல்லாமல் போய் விடுகிறதே!


தமிழர்களின் நீண்ட நாள் கனவுத் திட்டம் 2400 கோடி ரூபாயில் உருவாகும் உன்னதத் திட்டம். அறிவியல் ஆய்வுப் படி உரிய விற்பன்னர்களால் உருவாக்கப்படும் ஒரு திட்டம் - அந்தத் திட்டத்தை முடக்க மூடத்தனத்தைக் கொண்டு வந்து குறுக்கே போடுகிறார்கள் ஒரு சிலர் என்கிறபோது உண்மைப் பகுத்தறிவுவாதிகளின் கடப்பாடு என்ன?

பதினேழரை லட்சம் வருடங்களுக்குமுன் குரங்குகள் துணை கொண்டு ராமன் என்கிற இதிகாசக் கதாநாய கன் கட்டினான் ஒரு பாலம் என்று கொஞ்சம்கூட புத்திக்கு இடமின்றி பக்தி என்னும் போதையில் தள்ளாடிக் கூறுகிறது ஒரு கூட்டம் என்றால் - ஆமாம், ஆமாம் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் - இல்லாவிட்டால் அவர்களின் மனம் புண்படும் என்று ஒப்பாரி வைக்கிற கூட்டத்தோடு ஜெய லலிதா பின்பாட்டுப் பாடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அங்கு புரட்சிப் புயல் வைகோவுக்கு என்ன வேலை?

வைகோ பகுத்தறிவுவாதி என்றால் அய்யாவின் சீடர் என்றால், அண்ணாவின் தம்பி என்றால் இந்த இடத்தில் குதித்துதானே பகுத்தறிவுச் சங்க நாதம் செய்ய வேண்டும்?

பகுத்தறிவுக்கு வேலை கொடுக்க வேண்டிய இடத்தில் மவுடிக ராகம் வாசிக்கலாமா?

பகுத்தறிவுவாதி என்றால் எல்லா இடத்திலும்தான் அதற்கு இடம், பொருள், ஏவல் எல்லாம் கிடையாது - கிடையவே கிடையாது.


-------------25-4-2009 "விடுதலை"ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

8 comments:

Suresh Kumar said...

பகுத்தறிவுவாதி என்றால் எல்லா இடத்திலும்தான் அதற்கு இடம், பொருள், ஏவல் எல்லாம் கிடையாது - கிடையவே கிடையாது. //////////////


அய்யா வீரமணிய போலவா சுயமரியாதையை சோனியாவின் காலில் அடகு வைத்து கொண்டிருக்கிறார் . இப்போதைய பிரச்னை சேது சமுத்திர திட்டமில்லை ஈழத்திலே செத்து கொண்டிருக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் .

வைகோ உரிமை கொண்டாடுகிறார் இன்னும் உரிமை கொண்டாடுவார் கருணாநிதி குடும்ப வருமானம் போய் விடும் என்று தானே கவலை படுகிறீர்கள் .

மதிமுக தேர்தல் அறிக்கையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது அண்ணா கண்ட கனவுகளின் அடிப்படையில் பெரிய கப்பல்கள் செல்லும் விதமாக மாற்றி அமைக்கப்படும் மத உணர்வுகளின் புண்படாத படி .

திராட முன்னேற்ற கழகம் அண்ணாவால் துவக்கப்பட்ட போது ஒரு நிருபர் அண்ணாவிடம் கேட்டார் பெரியார் பிள்ளையார் சிலைகளை எல்லாம் உடைக்கிறார் நீங்கள் உடைப்பீர்களா ? அதற்கு அண்ணாவின் பதில் நான் பிள்ளையார் சிலையையும் உடைக்க மாட்டேன் பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன் .

அந்த அண்ணாவின் வழியில் வந்தவர் தான் வைகோ . அண்ணாவின் காலத்திற்கு பின் தனி மனித ஒழுக்கத்தில் இருக்கும் ஒரே திராவிட தலைவர் வைகோ மட்டும் தான் . கடைசியா ஒரு கேள்வி அய்யா வீரமணி அவர்கள் ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் கொடுத்தாரே அது எப்படி ?

அ.ப.சிவா said...

கேள்வி: ஈழத்தமிழர்ப் பிரச்சினையில் காங்கிரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?

- நல். காளிமுத்து, தென்காசி

பதில்: சோளக்கொல்லைப் பொம்மையாக - முன்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை, பின்னே பார்த்தால் நாயக்கர் குதிரை மாதிரி!

17.01.09 விடுதலையில் ஆசிரியர் பதில்

நான் என்ன கூற தோழர் ஓவியா....
எப்படி இருந்த நீங்க இப்படி.....

அசுரன் திராவிடன் said...

நேற்றைய வைகோ

ஜெயாலலிதாவின் பாசிச வெறிபிடித்த ஆட்சியை தூக்கி எறிவோம் (ஜூலை 2002 )

களம் காத்திருக்கிறது என்று கலைஞர் அழைத்ததால் வந்தேன் ,4 நாட்களாக 25 ஆயிரம் கிலோமீட்டர் பிரசாரம் செய்து வந்துள்ளேன் .(ஏப்ரல் 2004 )

ஜெயலலிதா கொடுங்கோல் ஆட்சி நடத்தி வருகிறார் .நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் மக்கள் மரண அடி,சவுக்கு அடி கொடுத்தும்
ஜெயலலிதா தன்னை திருத்தி கொள்ளவில்லை .(ஜுலை 2004 )


ஹிட்லர் திருந்தியதுண்டா ?இடி அமீன் மனம் மாறியதுண்டா? முசோலினிக்கு மனப்பக்குவம் வந்ததுண்டா?அதை போலதான் இந்த போயஸ் தோட்டத்து பெருமாட்டிக்கு ஒரு போதும் மன மாற்றம் வராது .(பிப் 2005 )

ரோம் நகரம் தீ பிடித்து எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்தான் . ஆனால் தாய் தமிழகத்தை அவலம் சூழ்ந்திருந்த போதும் முதலமைச்சர் தமிழகத்திலே இல்லை .அயிதரபாத் தோட்டத்திலே ஓய்வு எடுத்தாரா ?யாகம் நடத்தினாரா?.(ஜனவரி 2006 )


மக்கள் உயிர் அரசுக்கு (ஜெயலலிதா) மலிவாக போய்விட்டது .கருணை இல்லாத அரசு கடிது ஒழிக.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்த அரசு மக்களால் தூக்கி எறியப்பட வேண்டும்..(ஜனவரி 2006 )


இன்றைய வைகோ

சுனாமி என்றாலும் மழை வெள்ளம் என்றாலும் மக்களின் கண்ணீரை துடைத்தவர் ஜெயலலிதா .மக்கள் அதிமுக ஆட்சி அமைய தீர்ப்பு எழுதுவது என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.(தினத்தந்தி மே1).


நாளைய வைகோ

இப்படியே போனால் "சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய் "என்ற பாடல் வரியை வைகோ அரங்கேற்றினாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை.

(நன்றி :தீக்கதிர்.2.5.2006)

வடிவேலுவை மிஞ்சும் சிரிப்பு நடிகர்கள்

ராமதாஸ்
வைகோ

viduthalaikuyil said...

who cares if he is a PAKUTHARIVUVAATHI...?or not?samooka neethi kaatha veeranganai....u remember that.....hw abt the 23 days CM JANAKI RAMACHANDRAN signed a file in favor of K VEERAMANI?
LOOK UR BACK FIRST THEN COME TO BLAME OTHERS...!STOP WRITING NON SENSE PLEASE!

தமிழ் ஓவியா said...

//அய்யா வீரமணி அவர்கள் ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் கொடுத்தாரே அது எப்படி ?//

இது குறித்து விரிவான பதில் அளிக்கப்படுள்ளன இதே வலைப்பக்கத்தில். நேரம் கிடைக்கும் போது தேடிப் படிக்க வேண்டுகிறேன்.

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

தமிழ் ஓவியா said...

//கேள்வி: ஈழத்தமிழர்ப் பிரச்சினையில் காங்கிரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?

- நல். காளிமுத்து, தென்காசி

பதில்: சோளக்கொல்லைப் பொம்மையாக - முன்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை, பின்னே பார்த்தால் நாயக்கர் குதிரை மாதிரி!

17.01.09 விடுதலையில் ஆசிரியர் பதில்//

சரியாத்தானே சொல்லியிருக்கிறார்.

கீழ்காணும் ஆசிரியர் வீரமணி அவர்களின் அறிக்கை உங்களுக்கு தெளிவுபடுத்தும் .

"திருமதி சோனியா காந்தி அறிவுறுத்தலுக்கேற்ப, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூடி, இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட்டு, அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படுவதோடு, அரசியல் ரீதியான தீர்வுகளை அங்குள்ள தமிழர்களின் நல் வாழ்வு, பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை அறிவிக்க வேண்டும்; அரசியல் பிரச்சினைக்கு இராணுவ நட வடிக்கைகள் ஒருபோதும் தீர்வாகாது என்று தீர்மானம் நிறைவேற்றி, அதை அனைத்து ஏடுகளுக்கும் கூட அனுப்பியுள்ளார்கள்!
திருமதி சோனியா காந்தி தலைமையிலான அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியே இப்படி ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது இதுதான் முதல் தடவையாகும்."

----------"விடுதலை" 23.4.2009



23-4-09 இல் தான்

"திருமதி சோனியா காந்தி தலைமையிலான அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியே இப்படி ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது இதுதான் முதல் தடவையாகும்." என்று கூறியுள்ளார் வீரமணி.

ஆக

17.01.09 விடுதலையில் ஆசிரியர் பதிலில் சொல்லியுளது சரிதானே.

இன்னொன்றையும் வீரமணி சொலியுள்ளார் அதையும் தருகிறேன்.

"கேள்வி: ஈழப்பிரச்சினையை தமிழக அரசியலோடு இணைத்துப்பேசுவது சரியான அணுகுமுறைதானா?

------- சுந்தர் கண்ணன், கபிஸ்தலம்


பதில்: தவறு, தவறு! பொதுத்தேர்தல் நம்முடைய நாட்டில் எப்படிப்பட்ட அரசு - மதவாதம் அல்லாத முற்போக்கு அரசு அமையவேண்டும் என்பதையும், சமூக நீதியைக் காப்பாற்றவும், பொடா போன்ற கொடுமையான மனித உரிமைப் பறிப்பினையும் கொணராத அரசு அமைவதற்கான தேர்தல்.

முன்னுரிமை இவைகளுக்கே தரவேண்டும்.

ஈழப்பிரச்சினையை அரசியலாக்கினால் அது ஈழத்தமிழர்களுக்கேகூட கேடு செய்வதாகிவிடக் கூடும் என்பது தொலைநோக்குடன் சிந்திப் பவர்களுக்குப் புரியும்!

அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒரே களத்தில் நின்று அவர்களுக்கு ஆதரவு தரவேண்டிய பொதுப் பிரச்சினை இது!

---------------"உண்மை" ஏப்ரல் 16-30_2009 இதழில் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அளித்த பதில்

bala said...

//வைகோ பகுத்தற்றிவாதியா//

திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

வைகோ கண்டிப்பாக பகுத்தறிவு வாதி தான்.ஆனால் தமிழ் ஓவியா போன்ற பிரியாணி பாசறை நாய்கள் வணங்கும் சூரமணி போன்ற சூப்பர் பகுத்தறிவு வாதி கிடையாது.இவ்வளவு ஏன் சூரமணி ஜால்ரா அடிக்கும் மஞ்ச துண்டு அய்யாவைவிட வைகோ பகுத்தறிவு வாதி என்பதில் சந்தேகம் வேண்டாம்.

பாலா

பரணீதரன் said...

//திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
//

பாலா அவர்களே நீங்கள் எங்களை திட்டும் பொழுது கூட எங்கள் திராவிட , கருப்பு சட்டை அடையாளத்தை பயன்படுத்தி உள்ளீர்களே அதுவே நாங்கள் வை கோ அய்யாவை விட அப்பழுக்கற்ற சுயமரியாதை பகுத்தறிவாதி என்பதை நிருபிக்கிறது. இது போதும் எங்களை போன்ற திராவிடர் மற்றும் பெரியார் சிந்தனையாளருக்கு. எப்பொழுதும் நாங்கள் திராவிடர்கள் தான். கருஞ்சட்டைக்காரர்கள் தான் அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. இல்லவே இல்லை. நாங்கள் என்ன பார்பன முண்டம் என்ற எங்களை கூறி கொண்டோம். என்றைக்கு இந்த பூணுல் போடாமல் ஒரு பார்ப்பான் வெளியில் வருகிறானோ அன்னைக்கு நாங்கள் கருப்பு சட்டை போடாமல் நிறுத்தி கொள்கிறோம். அதுவரை கருஞ்சட்டை துரத்தி கொண்டே இருக்கும். யார் திராவிட இயக்கத்தில் இருந்து கொண்டு பகுத்தறிவு பாதை நழுவினாலும். அது உங்கள் வை கோ வாக இருந்தாலும்.