Search This Blog

21.4.09

சோம்பேறிக் கூட்டத்தாரின் கற்பனை ஆயுதம்


இந்து மதத்தில பல கடவுள்கள் இருக்கின்றனவே, அவை வேறு எந்த மதத்திலும் இல்லையே. ஆதலால், பல கடவுள்கள் இருக்கவேண்டும் என்பதற்காகவாவது இந்து மதம் என்பதாக ஒன்று இருக்குமே என்று சிலர் சொல்லலாம். பல கடவுள்களும், தீண்டாமை, ஜாதிபேதம் என்கின்ற அடிப்படையின் மீது கற்பிக்கப்பட்டவைகளே ஒழிய, இந்து மதத்திற்கென ஜாதி பேதமற்ற ஒரு கடவுள் இல்லவே இல்லை.

ஜாதி பேதம், தீண்டாமை ஆகியவை ஒழிந்தவுடன், அதில் பட்ட பல கடவுள்களும் அவற்றின் தன்மை, ஆதாரம் யாவும் அடிபட்டுப் போய்விடுமாதலால், பல கடவுள் கொள்கைக்கு இடமில்லை என்பதோடு, அதற்காக ஒரு மதமும் தேவை இருக்காது என்றே சொல்லுவோம்.

ஆகவே, இந்து மதம் என்பது ஜாதிபேதத்தால் பயனடைந்து, அந்நியர்களை அடக்கி அடிமைப்படுத்தி வைத்து நோகாமல் ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்கும் சுகபோகம் அனுபவிக்கும் ஒரு வஞ்சக, சோம்பேறிக் கூட்டத்தாரின் கற்பனை ஆயுதமேயாகும்.

------------------24-8-1946 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: