Search This Blog

27.4.09

பார்ப்பன ரவிசங்கர் இலங்கைக்கு வழங்கும் நற்சான்றிதழ்
சிறீசிறீ ரவிசங்கர் என அழைத்துக் கொள்ளும் பாபநாசம் பார்ப்பனர் ரவிச்சந்திரன் அண்மையில் இலங்கைக்குப் போய் வந்து அறிக்கை விடுத்திருக்கிறார்.

காஷ்மீரில் பார்ப்பனப் பண்டிதர்களுக்கு இந்திய அரசுதந்துள்ள வசதிகளைவிட, தமிழ்நாட்டில் இலங்கை அகதிகளுக்குத் தந்துள்ள உதவிகளைவிட சிறீலங்காஅரசு, இலங்கைத் தமிழர்களுக்கு வசதி செய்து தந்துள்ளது என ராஜபக்சே அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இலங்கை ராணுவத் தளபதி கர்னல் இந்து நீல் டிசில்வா என்பவரைப் புகழ்ந்து கூறியுள்ளார். தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போகத் தமிழர்களை விரைவில் அனுமதிப்பதாக இலங்கை அதிபர் இவரிடம் உறுதி அளித்துள்ளாராம்.

இப்பேர்ப்பட்டவரை வரவேற்கத் தான் திரைஉலகத்தைச் சார்ந்த சிலர் கூடியிருந்தனர். என்னே அவலம்!

----------------நன்றி;- "விடுதலை" 27-4-2009

8 comments:

மணிகண்டன் said...

ஒருநாள் லேட் சார். நேற்றே இந்த தலையங்கம் வந்து இருக்கவேண்டும்.

என்.இனியவன் said...

//சிறீலங்காஅரசு, இலங்கைத் தமிழர்களுக்கு வசதி செய்து தந்துள்ளது என ராஜபக்சே அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.//
பிழையான செய்திகளை பதியாதீர்கள்.
"பாராண்ட இனம் இன்று பிச்சை எடுக்கிறது" என கூறினார்.
அதற்கும் நீங்கள் கூறுவதற்கும் என்ன தொடர்பு என விளங்கவில்லை.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின் அவர் கொழும்பில் தமிழர்களை சந்தித்தார்.
அவர் சொன்ன கருத்துக்கும் நீங்கள் சொன்னதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
ராஜபக்சவிடம் "வசதி செய்து கொடுக்க வேண்டும்" என தான் கேட்டதாகவெ கூறினார்.

உண்ணாவிரதம், தனி ஈழம் என ஏமாற்றுபவர்களை விட‌
நேரில் சென்று ஆறுதல் கூறிய அவர் எவ்வளவோ மேலானவர்.

பதி said...

//சிறீலங்காஅரசு, இலங்கைத் தமிழர்களுக்கு வசதி செய்து தந்துள்ளது என ராஜபக்சே அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.//

உங்களுக்கு வந்த தனிமடலில் அவ்வாறு தெரிவித்துள்ளதா?

எதற்கு இந்த கோயபல்ஸ் பிரச்சாரம்??

'இலங்கை': இந்தியா தவறு செய்து விட்டது: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
http://thatstamil.oneindia.in/news/2009/04/23/tn-india-has-committed-a-big-blunder-in-sl-issue.html

பரணீதரன் said...

//உண்ணாவிரதம், தனி ஈழம் என ஏமாற்றுபவர்களை விட‌
நேரில் சென்று ஆறுதல் கூறிய அவர் எவ்வளவோ மேலானவர்.
//

நேரில் சென்று யாருக்கு ஆறுதல் கூறினார் ரவிசங்கர். ராஜபக்செவுக்க. அவரிடம் உரையாடிவிட்டு அவர் சொன்னதை நம்பி இங்கு வந்து தமிழ் மக்களுக்கு நல்லது செய்துள்ளார் என்று பார்பன தொனியிலேயே பதில் கூறியுள்ளார். இதற்க்கு வக்களது. நேரில் சென்று ஆறுதல் கூறுகிறார் என்று. நேரில் சென்று வந்து இவ்வாறு சொல்லுவதற்கு இங்கே இருந்து உண்மையாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவது எவளவோ மேல்.

Unknown said...

// என்.இனியவன் கூறியது...
//சிறீலங்காஅரசு, இலங்கைத் தமிழர்களுக்கு வசதி செய்து தந்துள்ளது என ராஜபக்சே அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.//
பிழையான செய்திகளை பதியாதீர்கள்.
"பாராண்ட இனம் இன்று பிச்சை எடுக்கிறது" என கூறினார்.
அதற்கும் நீங்கள் கூறுவதற்கும் என்ன தொடர்பு என விளங்கவில்லை.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின் அவர் கொழும்பில் தமிழர்களை சந்தித்தார்.
அவர் சொன்ன கருத்துக்கும் நீங்கள் சொன்னதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
ராஜபக்சவிடம் "வசதி செய்து கொடுக்க வேண்டும்" என தான் கேட்டதாகவெ கூறினார்.

உண்ணாவிரதம், தனி ஈழம் என ஏமாற்றுபவர்களை விட‌
நேரில் சென்று ஆறுதல் கூறிய அவர் எவ்வளவோ மேலானவர்.

//

ரவிசங்கர் காட்டிய வீடியோவைப் பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், இடம் பெயர்ந்த மக்களுக்கான முகாம்கள் ஹிட்லர் காலத்து சித்திரவதைக் கூடங்கள் போல இருப்பதாகவும் கூறியுள்ளார் ஜெயலலிதா.

இதை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். உண்மையில், ரவிசங்கர் இந்த முகாம்களைப் பார்த்து விட்டு அதிபரை சந்தித்தபோது, உலகிலேயே நான் பார்த்த முகாம்களிலேயே சிறந்த முகாம்கள் இவைதான் என்று கூறினார்.

இப்படி இருக்க முடிந்து போன தீவிரவாதிகள் கதைக்கு உயிர் கொடுக்க சிலர் முயல்வது ஏன் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் கோதபாய.

Machi said...

அவரது வீடியோ பேட்டியை You Tube ல பார்த்தேன்... நீங்க சொல்லுவது(எழுதியது) மாதிரி அவர் சொல்லவில்லை. தவறான பரப்புரை தவறு தோழரே..... நம்பகத்தன்மை போய்விடும்...

unearth.com said...

Ravi Shankar played double game. He changes colours according to places where he will. He had told something in Sri Lanka and have some other things in Thamil Naadu.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

மணிகண்டன்
என்.இனியவன்
பதி
மானமுள்ள சுயமரியாதைக்க்காரன்
மற்றும்
அனைவருக்கும்
மீண்டும் நன்றி