Search This Blog

7.4.09

ஜின்னா ஆரியரா? திராவிடரா?- பேரறிஞர்அண்ணாவின் பதில் என்ன?




ஜின்னா ஆரியரா? திராவிடரா? பொதுக்கூட்டத்தில் கேள்வி
அண்ணா அவசரமாக புறப்படும் நிலையில் அளித்த பதில் என்ன?

விளக்குகிறார் தமிழர் தலைவர்


பொதுக் கூட்டத்தில் அண்ணா அவர்களை மடக்க ஜின்னா ஆரியரா? திராவிடரா? என்று ஒரு துண்டு சீட்டு எழுதி கேள்வி கேட்டனர். அவசரமாக ரயிலுக்குப் புறப்படும் நிலையில் இருந்த அண்ணா மேடையை விட்டு இறங்கி வந்தவர் மீண்டும் மேடைக்கு வந்து சரியான பதிலை அளித்து கைதட்டலைப் பெற்றார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரை யாற்றினார். சென்னைப்பல்கலைக் கழகத்தில் - ஈரோடு முதல் காஞ்சி வரை என்ற தலைப்பில் அண்ணா நினைவுநாளில் 3.2.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-


கேள்வி : நீங்கள் ஜின்னாவை ஆதரிக்கின்றீர்களே?

ஜின்னா யார்? ஆரியரா? திராவிடரா? என்று கேள்வி கேட்டிருக்கின்றார்கள்.

அண்ணா அவர்கள் படித்துவிட்டு பதில் சொன்னார்; திரு.ஜின்னா திராவிடர்; ஸ்ரீமான் சின்னா ஆரியர்: ஜனாப் சின்னா முஸ்லிம் என்று பதில் சொன்னவுடன் பலத்த கைத்தட்டலுக் கிடையே இறங்கி ரயிலுக்குப் போனார் (சிரிப்பு - கைதட்டல்)

அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வு ஆழமான கருத்தோட்டம் எல்லா வற்றிலுமே சிறப்பாக இருக்கும்.

அது மட்டுமல்ல; அண்ணா அவர்களுடைய எழுத்து இந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் படம்பிடித்தவரல்ல.

எத்தனையோ செய்திகளை சொல்லலாம். காலத்தின் நெருக்கடி வேறு பல செய்திகளை சொல்வதற்காக ஆதாரங்களோடு பல குறிப்புகளை கொண்டு வந்தேன்.

அவைகளை எல்லாம் நிறுத்திவிட்டு ஒரு செய்தியை மட்டும் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

அமெரிக்க அதிபராக இப்பொழுது பாரக் ஒபாமா உள்ளே நுழைந் திருக்கின்றார். வெள்ளை மாளிகை என்பது ஏதோ வெள்ளைக்காரர்களுடைய ஆதிக்கத்திலேயே இருக்கக் கூடிய வெள் ளைத் தோலாக இருப்பவர்கள் - ஆதிக்கத்தில் இருப்பவர்கள் - அவர்கள் தான் வர முடியும் என்று சொல்லக்கூடிய நிலை அமெரிக்காவிலே உண்டு.

என்னதான் அவர்கள் நிறபேதம் இல்லை என்று சொன்னாலும், நடைமுறையிலே, அந்த சிந்தனை அவ்வளவு சுலபமாக மாறிவிடுவதில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலையிலே இன் றைக்கு பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றிருக்கின்றார்.

இன்றைக்குப் பெரிய அளவிலே அரசியலிலே மாற்றம் ஏற்பட்டிருக் கிறது. அந்த நாட்டு எதிர்கட்சித் தலைவரும் ஒரு கருப்பராக வரக் கூடிய அளவுக்கு தேர்ந் தெடுக்கக் கூடிய அள விற்கு ஒரு பெரிய மாற் றத்தை அமெரிக்காவிலே உருவாகியிருக்கிறது.

வருங்கால சமுதாயம் இலக்கியத்தில் வெறும் பழைய பாடல்களுக்கே பதவுரை, கருத்துரை, பொழிப்புரை அதற்கே நயவுரை, இவைகளையே எழுதிக்கொண்டு, எழுதிக்கொண்டு நம் முடைய காலத்தை பேராசிரியர்கள் கழிக்கக் கூடாது. எழுத்தாளர்கள் நல்ல கருத்தாளர்களாக ஆகி, மாறி, அவர்கள் வருங்காலத்திற்கு நல்ல சிந்தனையை உருவாக்கிக் கொண்டு போக வேண்டும் என்பதற்கு அடையாள மாகத்தான் உங்களிலே பலர் ஆங்கிலத் துறையிலே அறிந்திருக்கக் கூடிய ஒரு நூல் இர்விங் வேலஸ் என்பதாகும்.

இவர் பிரபலமான ஓர் அமெரிக்க எழுத்தாளர். அவர் மறைந்து விட்டார். இவை போன்றே காண்டேகர் அவர்களுடைய நூல்களை நான் விரும்பிப் படிக்கக் கூடியவன்.

அதே போல வ.ரா அவர்களுடைய நூல்கள் அத்தனையையும் மிக ஆழமாகப் படித்திருக் கின்றேன்.

இர்விங் வேலஸ் அவர்களுடைய ஒரு சிறப்பு என்னவென்று சொன்னால், ஒரு நூலை எழுதுவதற்கு அவர் ஓராண்டுக்கு மேலே, ஒன்றரை ஆண்டுக்கு மேலே எடுத்துக்கொள்வார்.

ஒரு நாடு, ஒரு கதை அல்லது ஒரு மய்யப் புள்ளி என்பதை அவர்கள் மய்யமாக வைத்துக் கொண்டு அந்தக் கருத்தை அவர்கள் இலக்கியத் துறையிலே கொண்டு வருவார்கள்.

பல கட்டுரைகளை இலக்கியத்துறையிலே அவர்கள் எழுதியிருக்கின்றார்கள். அவருடைய புதினங்கள் ஒரு குறிக்கோள் அற்றபுதினங்களாக இருக்கக்கூடாது.

அமெரிக்கர்களுடைய குற்றங்களை ரொம்ப நாசூக்காக சுட்டிக்காட்டக்கூடிய அளவிற்கு எழுதக்கூடியவர்.

அவருடைய கற்பனையிலே வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதன் என்பது தான் இர்விங் வேலஸ் எழுதிய நூல். எதிர்பாராமல் அமெரிக்க அரசியல் சட்டப்படி அந்த அதிபர் இறந்து விட்டால் நாட் டின் நிலைமை எப்படி யிருக்கும். எவ்வளவு தொல்லைகளை அவர் சந்திக்க வேண்டியிருக்கும். அதை எளிதில் அமெரிக்கர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அமெ ரிக்காவிலே இருக்கிற ஆதிக்க சக்திகள் அதை ஏற்றுக்கொள்ளுமா? என்பதை மய்யப்படுத்தி கூந ஆய என்ற ஒரு நூலை எழுதினார். அற்புதமாக 1963, 1964 லே அந்தக் காலகட்டத்திலே எழுதி னார். இந்த நூலை அப் பொழுது கூட படிக்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அமெரிக்க அரசின் சட்டப்படி துணை குடி யரசு தலைவராக இருப்பவர் குடியரசு தலைவ ராவார் - தற்காலிகமாக. பிறகு துணைக்குடியரசு தலைவரும் இறந்து விட்டால் செனட் கமிட் டியிலே இருக்கிற ஒருவர் அந்தப்பொறுப்பை தற்காலிகமாக ஏற்கலாம்.

இப்படி எல்லாம் இரண்டு, மூன்று நிலைகள் எல்லாம் இருக்கின்றன. இதைப் போன்று ஒரு கற்பனை செய்து எழுதுகிறார்.

ஒரு விபத்து நடக்கிறது. குடியரசு தலைவர், குடியரசு துணைத்தலைவர் இரண்டு பேரும் இறந்து போய்விடுகின்றனர்.

மூன்றாவதாக ஒரு பொறுப்பு ஏற்கக்கூடிய வரும் விபத்து காரணமாக இறந்து போய்விடு கின்றார்.

நான்காவதாக பொறுப்புக்கு வரக்கூடியவர் ஒரு கருப்பர். அவர்தான் எஞ்சி இருக்கிறார். அவர் தான் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டு பொறுப் புக்கு வருகிறார்.

எனவே, அவருக்கு எவ்வளவு தொல்லைகளை, எவ்வளவு சங்கடங்களை ஏற்படுத்தி ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, அது மட்டுமல்ல ஒரு பெண்ணோடு சம்பந்தப்படுத்தி, அப்படி எல்லாம் தவறான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.

இவ்வளவு இழிதகு பிரச்சாரங்களை எல்லாம் தாண்டி கடைசியில் அவர் வெற்றி பெற்று அவர் உண்மை யானவர், ஒழுக்கமானவர் என்ற பெயரோடு வெளியே வந்தார்.

எனவே, அந்த அமெரிக்கர் அதிபர் பதவியிலே அமர்பவர் வெள்ளைக்காரரா? கருப்பரா? என் பது முக்கியமல்ல அவர் மனிதராக இருக்கிறாரா? என்ற கருத்தை மய்யப்படுத்தித்தான் The man என்ற புதினத்தை இர்விங் வேலஸ் எழுதியிருக்கின்றார்.

அண்ணா அவர்கள் எதையும் ஆழமாகப் படிப்பவர். இதை அண்ணா அவர்கள் உடனடியாகப் படித்து ஆங்கிலத்தில் தான் படித்ததை தமிழில் எழுதினார்.

ஆங்கிலம் படித்த பல பேருக்குத் தெரியாது. அப்படிப்பட்ட கருத்தை வெள்ளை மாளிகையில் என்பதை திராவிட நாடு ஏட்டிலே தொடர் கட்டுரையாக எழுதினார். இர்விங் வேலஸ் எழுதிய The man நாவல் 1963 லே எழுதப்பட்டது.

வெள்ளை மாளிகை எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்க இந்த எழுத்தாளர் விரும்புகிறார்.

அவருடைய எழுத்துக்கும், நம்முடைய இலக்கியவாதிகளுக்கும் இதுதான் வேடிக்கை. அந்த ஊரையே பார்க்காமல் அந்த ஊரைப் பற்றி எழுதுவது நம்முடைய வாடிக்கை (சிரிப்பு - கைதட்டல்)

ஆனால் அவர்கள் அந்த ஊரைப் பார்க்காமல் அந்த இடத்திற்கே போய் தங்கி எழுதுகிறார். ஜான் கென்னடி அவர்கள் அதிபராக இருக்கும் பொழுது 1963 லே அவருடைய அனுமதியைப் பெறுகிறார்.

அவர் எங்களுடைய விருந்தினர், நீங்கள் ஒன்பது வாரம் இங்கு தங்கி ஒவ்வொரு பகுதியையும் பாருங்கள் என்று மகிழ்ச்சியுடன் அனுமதி தருகின்றார்.

அதற்குப் பிறகு அவர்கள் ஒன்பது வாரம் அவர்களைப் பார்த்து விட்டு வருகிறார்.

பிறகு தான் இந்த நூலை அவர் எழுதுகிறார். இந்த நூலை 1972 - லே ஒரு சினிமா படமாக எடுத்தார்கள். இவர் தங்கிய பிற்பாடு - ஜான் எஃப் கென்னடி சுட்டுக் கொல்லப்படுகின்றார்.

இந்த சம்பவம் அவருடைய மனதை உலுக்கி யிருக்கிறது.

இதைப் பற்றி வெள்ளை மாளிகை என்ற தலைப்பிலே தொடர்ந்து அண்ணா அவர்கள் எழுதினார்கள்.

இது அந்த ஏட்டிலே வந்த பொழுதே ரொம்ப அற்புதமாக தமிழ் படித்தவர்கள் அத்துணை பேரும் தெரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு வாய்ப்பை அண்ணா அவர்கள் உரு வாக்கினார்கள்.

தலைவர் இறந்து விட்டார். துணைத் தலைவரும் இறந்து விட்டார். அடுத்து பாராளுமன்றத் தலைவர் அவரும் இறந்து விட்டார். இப்படி ஒரு மரபு பற்றி ஆசிரியர் குறிப்பிட்டுக் கொண்டு தமது கற்பனையை காட்டியிருக்கின்றார்.

ஆனால் இந்த நூலை விட - தழுவிய நூலை விட மிக சுவையாக அண்ணா அவர்களு டைய கைத்திறன் அமைந்த காரணத்தினாலே, அண்ணா அவர்களுடைய ஆற்றல் பதிந்த காரணத்தினாலே மிகச் சிறப்பாக எழுதுகின்றார்.

இன்றைக்கு ஒபாமா அதிபராக பொறுப் பேற்றிருக்கின்றார்.

சற்றுப் பின்னோக்கிப் பாருங்கள். வரலாற்றினுடைய பழைய பக்கங்களைப் புரட்டிப் பாருங் கள்.

ஆபிரகாம் லிங்கன் காலத்திலே, அடிமை தனத்தை ஒழிப்பதற்காக எவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்தது என்பது தெரியும்.

ஆபிரகாம் லிங்கனே ஒரு நாடகம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது ஜார் மிலிட்டிஷ் பூத் என்பவராலே சுட்டுக் கொல்லப்பட்டு, சட்டை எல்லாம் இரத்தம் வழிந்த நிலையிலே அந்த ஆடைகளைக் கூட இப்பொழுது அமெரிக்காவிலே ஃபிரிங்ளின் என்று சொல்லக்கூடிய இடத்திலே. ஒரு பெரிய நினைவகத்தையே அமைத்து வைத்திருக்கின்றார்கள்.

அங்கே ஆபிரகாம் லிங்கன் அமர்ந்திருக்கின்ற சிலை. வெள்ளை மாளிகையிலே இருக்கும். அவர் அமர்ந்திருப்பதைப் போலவே அங்கு வைத்திருக்கின்றார்கள்.

அதிலே இன்னொன்று வேடிக்கையாக நகைச்சுவையாகச் சொல்ல வேண்டும் என்றால் - அந்த சிலையினுடைய மூக்கு பாதிக்கு மேல் அங்கு இல்லை. இத்தனைக்கும் பளிங்குக் கல்லில் செய்யப் பட்டிருக்கின்ற சிலை.

அங்கேயிருக்கின்ற கைடு அவர்களிடம் என்னவென்று கேட்டோம். அமெரிக்கர்களிடமும் ஒரு மூடநம்பிக்கை என்னவென்றால் அங்கு வருகிறவர்கள்,போகிறவர்கள் ஆபிரகாம் லிங்கனுடைய மூக்கைத் தடவிக் கொண்டு போனால் நல்லது நடக்கும் என்று நினைக்கின் றார்கள்.

இந்த மூடநம்பிக்கை யினுடைய விளைவாக அங்கு வருகிறவர்கள் போகிறவர்களுடைய மூக்கைத்தடவித்தடவி கடைசியில் ஆபிரஹாம் லிங்கன் சிலையின் பாதி மூக்கே இல்லை தேய்ந்து, தேய்ந்து காணாமல் போய் விட்டது.

---------------------தொடரும் ....."விடுதலை" 7-4-2009

1 comments:

Anonymous said...

een thiraawida munneeRRak kazakam? thamizar munneeRRak kazakam illaiyaa? thamiz naaddil een thelungku warudap piRappukku liiwu?