Search This Blog

15.4.09

ஈழப்பிரச்சினை "சோனியா என்ன சொன்னார்?"

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை வெற்றிபெறச் செய்வீர்

"மதசார்பற்ற, சமூகநீதி, ஜனநாயகம் இந்த நாட்டை ஆளவேண்டும்"

தமிழர் தலைவர் முக்கிய வேண்டுகோள்

மதச்சார் பற்ற நிலை - சமூக நீதி ஜனநாயகம் இந்த நாட்டை ஆள தி.மு.க - காங்கிரஸ் கூட் டணியை வெற்றிபெறச் செய்வீர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னை பெரியார் திடலில் 4.4.2009 அன்று இரவு 7.30 மணிக்கு எம். ஆர். ராதா மன்றத்தில் - நாடாளுமன்றத் தேர் தலும் ஈழத்தமிழர் பிரச சினையும் என்ற தலைப பில் நடைபெற்ற சிறப புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-

தமிழ் ஈழம் என்பதை உச்சரிக்கக் கூடிய ஒரு முதல்வர் கலைஞரைத் தவிர வேறு யாராவது உண்டா? இதற்குப் பதில் சொல்லட்டும் (பலத்த கைதட்டல்).

அதுமட்டுமல்ல ஒரு தமிழ்ச் செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதிய அந்த உணர்வு என்றைக் காவது மறைந்து விடுமா?

அவர் அப்படி எழுத யதற்காக எத்தனை பேர் பாய்ந்தார்கள். அவர் அதைப் பற்றிக் கவலைப் பட்டாரா?

என்னுடைய ரத்தம் - இனம் இனத்தோடு தான் சேரும் என்று சொனனார். எனவே நண்பர் களே நமக்கு இங்கே ஆய ரம் பிரச்சினைகள் இங்கே மதவாத அரசியல் வந்து விடக்கூடாது. ஒரு பிற் போக்குத் தனமான ஆட்சி அமைந்து விடக் கூடாது. நம்முடைய எதிர்காலததைப் பாதுக்காக்கக் கூடிய ஓர் ஆட்சியாக சிறப் பான ஒரு ஆட்சி அமைய வேண்டும். வருகின்ற அய்ந்தாண்டுக்கு இநதியாவை ஆளப் போகின்ற ஆட்சி எது என்பதை வருகின்ற மே மாதம் 13 - ஆம் தேதியன்று வாக்கா ளப் பெருமக்கள் குத்தப் போகின்ற அந்த முத்திரை நிர்ணயிக்கப் போகின் றது.

அது விளையாட்டல்ல சென்ற முறை சரியாக ஓட்டுப் போட்டதினுடைய விளைவு இந்த நாடு சிறுபான்மைச் சமு தாய மக்களுக்குப் பாது காப்பாக இருக்கிறது.

ஒரு மாநிலத்தில் நல்ல ஆட்சி அமைந்ததனுடைய விளைவு நல்ல பாதுகாப்பு. பக்கத்திலே இருக்கின்ற கர்நாடகத் திலே பா.ஜ.க ஆட்சி வந்திருக்கிறது. அங்கே சிறுபான்மையோர் பாதுகாப்பாக இருக்கின்றார் களா?

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நலக்குழு துணை அமைப்பை கட்சி வேறுபாடு இல்லாமல் முதல்வர் கலைஞர் அமைத்தார்.

அமைச்சர் துரை.முருகன் அவர்களை அமைப்பாளராகக் கொண்டு அமைத்தார். நான், மத்திய அமைச்சர் ஆ.இராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி ஆகிய செயலாளர்கள் மற்றும் நீதியரசர்கள் ஆகியோர்களுடன் சென்றிருந்த பொழுது காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி அம் மையார் அவர்கள் எங்களுக்கு நேரம் கொடுத்தார்.

அப்பொழுது பாரா ளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. எங்களைப் பேச வரச் சொல்லப்பட்டு அழைக் கப்பட்டோம் பிற்பகல் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்க ஏற்பாடாகிவிட் டது.

முதல்நாள் குடியரசுத் தலைவரைப் பார்த்து வலியுறுத்திவிட்டு வந்தோம். அவர்கள் நாடாளுமன்றத்திலே பேசினார்.

போர் நிறுத்தம் வர வேண்டும் என்று சொல்லக் கூடிய கருத்தை முதல் முறையாக குடியரசுத் தலைவர் பிரதிபா பாட் டீல் அவர்கள் அரசின் சார்பிலே பிரதிபலித்தார்.

குடியரசுத் தலைவருடைய உரை கொள்கை உரையாக பிரதிபலித்தார். நாங்கள் குடியரசுத் தலைவரைப் பார்த்துச் சொன்னோம். நீங்கள் பேசியதற்காக நன்றி. ஆனால் போர் நிறுத்தம் என்பது நடைமுறைப் படுத்த வேண்டும் என்று நாங்கள் சொல்லிவிட்டு அடுத்த நாள் காலையிலே டெல்லியிலே சோனியா காந்தி அவர்களை சந்திப்பதாக இருந்தது.

அப்பொழுது சோனியா காந்தி அவர்களது ஒரு உண்மையான தன்மை என்ன என்பதை எங்களால் பார்க்க முடிந்தது.

ஏனென்றால் மனித நேயத்தோடு அரசியல் விருப்பு, வெறுப்பு இல்லாமல் பேச வேண்டும்.

நாங்கள் சோனியா காந்தி அவர்களை சந்திக்க அமர்ந்தோம். அவர் அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்களைப் பார்த்து சொன்னார். இந்தப் பிரச்சினையிலே பொதுவாக நான் பார்க்கிறேன் என்று சொல்ல விரும்பவில்லை. என்ன நடக்கிறது? என்ன நடக்க வேண்டும் என் பதை உறுதியாக நினைக்க வேண்டும். ஆகவே பிரணாப் முகர்ஜி அவர்கள் எங்கே யிருக்கிறார்கள்? அலுவலகத்திற்குப் பக்கத்திலே இருந்தால் உடனே வரச் சொல்லுங்கள்.

அரசியல் செயலாளர் அகமது பட்டேல் இருந்தால் வரச்சொல்லுங்கள் என்று சொல்லி, இருவரையும் பக்கத்திலே அமர்த்தி விட்டு, நீங்கள் உங்களுடைய கருத்துக்களைச் சொல்லுங்கள் என்று கேட்டார்.

நம்முடைய கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்தோம். எங்களுடன் வந்தவர் அப்பொழுது ஒரு கருத்தைச் சொன்னார்.

இது, தேர்தலிலே கூட இந்த உணர்வுகள் பிரதிபலிக்க வாய்ப்புண்டு; தேர்தல் வர இருக்கிறது. எனவே உங்களுக்கு நினைவூட்டுகிறோம் என்று சென்றவர்களிலே ஒருவர் சொன்னார்.

உடனே சோனியா காந்தி அவர்கள் சொன்னார். It is not a question of election. இது தேர்தல் சம்பந்தமான பிரச்சினை அல்ல. இது மனித நேயம் சார்ந்த பிரச்சினை. தேர்தலைக் கொண்டு வந்து இதோடு இணைக்க வேண்டாம். அதைவிட இதுமனித நேயப் பிரச்சினை. என்னென்ன செய்ய முடியும் என்று சொல்கின்றார்களோ அதைச் செய்யுங்கள் என்று அவர்கள் சொன்னது மட்டுமல்ல - அதிலே உண்மை இருக்கிறது என்று சொன்னவுடனே மிகத்தெளிவான பதிலைச் சொன்னார்கள்.

வழமை போல் நடக் கக் கூடிய நிலை இல்லை அங்கு. அதிலே கொஞ்சம் அக்கறை இருக்கிறது. எல்லா நேரத்திலும் சரி இன்னொரு நாட்டை வலியுறுத்தும் பொழுது அரசியலிலே எவ்வளவோ சங்கடங்கள் நெருக்குதல்கள் இருக்கின்றன. கடந்த மார்ச் 31 ஆம் தேதி - பல நாட்களுக்கு முன்னாலே - ஒரு கடிதத்தை சோனியா காந்தி அவர்கள் நம்முடைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு எழுதி யிருக்கின்றார்கள்.

எல்லா பத்திரிகை களிலும் செய்தி வந்திருக்கிறது. போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த அம்மையார் அவர்கள் எழுதினார் என்பது மட்டு மல்ல. மிகத் தீவிரமாக என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள் என்று சொன்னார்.

The congress Party has for nearly three decades espoused the cause of the Tamils in Sri Lanka and has uged successive Sri Lankan governments to ensure that all communities, including the Tamil Speaking people. are guaranteed and enjoy equal rights within the frame work of a united Sri Lanka.

This position is also reflected in the Congress Party’s Manifesto released a few days ago.

The ongoing conflict and the extreme suffering of thousands of innocent Tamil Citizens of that country especially of women and children who are its victims have caused us all deep unguish.

We believe strongly that it is necessary for the Sri Lankan authorities to take whatever steps are needed to safeguard and protect them and their interests.

The first step would, obviously, be a cessation of hostilities.

போர் நிறுத்தம் தான் முதல் கட்டமாக இருக்க வேண்டும் என்று தெளிவாகவே இதில் எழுதி யிருக்கின்றார். பத்திரிகைகளில் இந்த செய்தி வந்திருக்கிறது.

எதற்காக இதைச் சொல்கிறோம் என்று சொன்னால் - இதை அரசியல் பிரச்சினையாக ஆக்க வேண்டிய அவசியமில்லை.

இது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு பொதுப் பிரச்சினை. நாம் இரண்டு அணிகளாக இருந்தாலும் கூட ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையிலே நம்முடைய கவலை என்பது எல்லா காலத்திலும் ஒரே மாதிரி இருக்கிறது. தேர்தலினாலே மேலே போகும். கீழே போகும் என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அதைத் தேர்தலுக்குப் பயன்படுத்தக் கூடிய செய்தியாகவும் ஆக்கக் கூடாது என்று மற்றவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைக்கு அவர் களே கூட வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொன்னால் இதைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கக் கூடாது என்ப தற்காகத் தான் இந்த விளக்கம் - வேறொன்று மில்லை.

எங்களுடைய பணிகள் தேர்தலிலே மதவா தச் சக்திகள் வெற்றி பெறக்கூடாது. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் 90 நாளில் முடிப்போம். 10 நாளில் முடிப்போம் என்று சொன்னார்கள். இவர்கள் தான் ஆட்சி யில் 10 வருடமாக இருந்தார்கள். அவர்கள் இருந்த காலத்தில் ஏன் முடிக்க வில்லை? பி.ஜே.பி ஆட்சி யில் இருந்த பொழுது தான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசினார் என்று பொடா சட்டத்திலே ஜெயலலிதா கைது செய்தார். அந்த பொடா சட்டத்தை போட்டது சரி என்று வாஜ்பேயி அரசாங்கத்திலே ஒரு வழக்கறிஞரை அனுப்பி நியாயப்படுத்தச் சொன்னார்கள்.

கலைஞர் அவர்கள் அதைக் கடுமையாக எதிர்த்த நேரத்திலே தான் வேறு இன்னொரு திருத்தம் கொண்டு வந்து நீதிமன்றத்தில் சொன்னார்கள். தவறாக அஃபி டவிட் போட்டு விட்டார்கள். அதற்காக மாற்றிச் சொல்லுகிறோம் என்று இன்னொரு முறை சொன்னார்கள்.

எனவேதான் நண்பர்களே! மக்களுக்கு மறதி அதிகம். ஆகவே அதை வைத்துக் கொண்டு அரசியல் நடத்தலாம் என்று நினைக்கக் கூடாது. நம்முடைய கவலை எல்லாம் இப்பொழுது ஒரு நல்லாட்சி உருவாக வேண்டும்.

மத்தியிலே ஒரு தெளிவான ஆட்சி இருக்க வேண்டும். மீண்டும் மதவாதம் வந்தால் ஆரம்பத்திலே சொன்னதைப் போல இந்தியா காணாமல் போய்விடும். இந்து ராஷ்ட்ரம் என்று சொல் லக் கூடிய நிலை வரும். அல்லது மூன்றாவது அணி, நான்காவதுஅணி, பிரதமர் வேட்பாளர் என்று இப்பொழுது நிறைய பேர் இருக்கிறார்கள். இதிலே ஒரு தெளிவான சூழ்நிலை என்னவென் றால் நீங்கள் கூட கேட் கலாம். காங்கிரஸ், லாலு பிரசாத், முலாயம் சிங், ராம்விலாஸ் பஸ்வான் இப்படி தனித்தனியாக இருக்கிறார்களே என்று.

நேற்று தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். நாங்கள் இன்னமும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் தான் இருக்கிறோம். அதை விட்டுப் போகவில்லை. அதைவிட பிரதமர் யார் என்று சொன்னால் மன்மோகன் சிங்தான் பிரதமர் என்று ரொம்பத் தெளி வாகச் சொல்லிவிட்டார்.

எனவே அவர்கள் அங்கே போனார்கள், இங்கே போனார்கள் என்று சொன்னால் அவர்கள் எல்லோரும் ஒரே குரலில் தான் ஒலிக் கிறார்கள்.

பிரதமர் யார் என்றால் மன்மோகன் சிங் என்று ஒரே பதில்.

ஆனால் எதிர் அணியில் யார் பிரதமர் என்று கேட்டால் மாயாவதி பிரதமரா? அல்லது இங்கே அம்மையார் ஜெயலலிதா அவர்கள் பிரதமரா? அல்லது அத்வானிதான் பிரதமரா? எந்த நிலை யும் தெரியாமல் பாவம் செகாவத் வேறு இருக்கிறார். ஆகவே பிரதமர் கனவுகளை பலபேர் கண்டு கொண்டிருக்கக் கூடிய கால கட்டத்திலே நாம் நல்லாட்சி பெற வேண்டுமென்று விரும்பு கின்றோம்.

எனவே யார் பிரதமர் என்பது முக்கியமல்ல. யார் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று சொல் லும் பொழுது மதச்சார் பின்மை இந்த நாட்டை ஆளவேண்டும். ஜனநாய கம் இந்த நாட்டில் தழைக்க வேண்டும்.

அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய சமூகநீதிக்கொடி தாழ்த்தப்படாமல் - அந்தக் கொடி இறக்கப் படாமல் பாதுகாக்கப் பட வேண்டும். மண்டல் கமிசனை அமல்படுத்திய வி.பி.சிங் அவர்களாலே ஏற்றப்பட்ட அந்தக் கொடி இருக்கிறதே- அது அர்ஜீன் சிங் அவர்களாலே இன்னும் கொஞ்சம் தூக்கிப்பிடிக்கக் கூடிய அளவிற்கு வந்தது. அந்தக் கொடி ஒரு போதும் இறக் கப்படக் கூடாது என்று சொன்னால் - நிச்சயமாக அதற்குரியவர்களைத் தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தத் தகுதி முழுக்க, முழுக்க காங் கிரஸ் திமுக இந்த அணியைப் பொறுத்து தான் இருக்கிறது என்பதை தெளிவாக வைத்துக் கொண்டு - இதிலே வேறு பிரச்சினைகளை கொண்டு வந்து ஈழத்தமிழர் வாழ்வுரிமை பிரச்சினையிலே வைத்துக் கொண்டு இவர்களை வீழ்த்திவிடலாம் என்பதற்காக ஒரு நாள் நாடகம், ஒரு நாள் கூத்து, இவைகளை எல்லாம் செய்தால் மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள்.

மக்கள் ஏமாற நாங்கள் விடமாட்டோம் என்ப தற்காகத்தான் இந்தக் கூட்டம் என்று சொல்லி அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

--------------------"விடுதலை"15-4-2009

5 comments:

ஸ்ரீ சரவணகுமார் said...

அன்னை சோனியா காந்தியின் விசுவாசிகளே

என்னுடைய ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்களேன்

//இலங்கையில் காங்கிரஸ் அரசு தான் தமிழர்களை கொன்று கொண்டிருக்கிறது

தமிழ்ஓவியா இதை நீங்கள் மறுக்கிறீர்களா?

ஆம் இல்லை என்று மட்டும் சொல்லவும்//

சென்ற பதிவிலும் இரு முறை கேட்டேன்
பதில் இல்லை

தமிழ் ஓவியா said...

////இலங்கையில் காங்கிரஸ் அரசு தான் தமிழர்களை கொன்று கொண்டிருக்கிறது

தமிழ்ஓவியா இதை நீங்கள் மறுக்கிறீர்களா?

ஆம் இல்லை என்று மட்டும் சொல்லவும்////

மறுக்கிறேன். ஏன் மறுக்கிறேன் என்பதை கீழ் வரும் கி.வீரமணி அவர்களின் விளக்கம் தெளிவு படுத்தும்..

நாங்கள் சோனியா காந்தி அவர்களை சந்திக்க அமர்ந்தோம். அவர் அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்களைப் பார்த்து சொன்னார். இந்தப் பிரச்சினையிலே பொதுவாக நான் பார்க்கிறேன் என்று சொல்ல விரும்பவில்லை. என்ன நடக்கிறது? என்ன நடக்க வேண்டும் என் பதை உறுதியாக நினைக்க வேண்டும். ஆகவே பிரணாப் முகர்ஜி அவர்கள் எங்கே யிருக்கிறார்கள்? அலுவலகத்திற்குப் பக்கத்திலே இருந்தால் உடனே வரச் சொல்லுங்கள்.

அரசியல் செயலாளர் அகமது பட்டேல் இருந்தால் வரச்சொல்லுங்கள் என்று சொல்லி, இருவரையும் பக்கத்திலே அமர்த்தி விட்டு, நீங்கள் உங்களுடைய கருத்துக்களைச் சொல்லுங்கள் என்று கேட்டார்.

நம்முடைய கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்தோம். எங்களுடன் வந்தவர் அப்பொழுது ஒரு கருத்தைச் சொன்னார்.

இது, தேர்தலிலே கூட இந்த உணர்வுகள் பிரதிபலிக்க வாய்ப்புண்டு; தேர்தல் வர இருக்கிறது. எனவே உங்களுக்கு நினைவூட்டுகிறோம் என்று சென்றவர்களிலே ஒருவர் சொன்னார்.

உடனே சோனியா காந்தி அவர்கள் சொன்னார். It is not a question of election. இது தேர்தல் சம்பந்தமான பிரச்சினை அல்ல. இது மனித நேயம் சார்ந்த பிரச்சினை. தேர்தலைக் கொண்டு வந்து இதோடு இணைக்க வேண்டாம். அதைவிட இதுமனித நேயப் பிரச்சினை. என்னென்ன செய்ய முடியும் என்று சொல்கின்றார்களோ அதைச் செய்யுங்கள் என்று அவர்கள் சொன்னது மட்டுமல்ல - அதிலே உண்மை இருக்கிறது என்று சொன்னவுடனே மிகத்தெளிவான பதிலைச் சொன்னார்கள்.

வழமை போல் நடக் கக் கூடிய நிலை இல்லை அங்கு. அதிலே கொஞ்சம் அக்கறை இருக்கிறது. எல்லா நேரத்திலும் சரி இன்னொரு நாட்டை வலியுறுத்தும் பொழுது அரசியலிலே எவ்வளவோ சங்கடங்கள் நெருக்குதல்கள் இருக்கின்றன. கடந்த மார்ச் 31 ஆம் தேதி - பல நாட்களுக்கு முன்னாலே - ஒரு கடிதத்தை சோனியா காந்தி அவர்கள் நம்முடைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு எழுதி யிருக்கின்றார்கள்.

எல்லா பத்திரிகை களிலும் செய்தி வந்திருக்கிறது. போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த அம்மையார் அவர்கள் எழுதினார் என்பது மட்டு மல்ல. மிகத் தீவிரமாக என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள் என்று சொன்னார்.

The congress Party has for nearly three decades espoused the cause of the Tamils in Sri Lanka and has uged successive Sri Lankan governments to ensure that all communities, including the Tamil Speaking people. are guaranteed and enjoy equal rights within the frame work of a united Sri Lanka.

This position is also reflected in the Congress Party’s Manifesto released a few days ago.

The ongoing conflict and the extreme suffering of thousands of innocent Tamil Citizens of that country especially of women and children who are its victims have caused us all deep unguish.

We believe strongly that it is necessary for the Sri Lankan authorities to take whatever steps are needed to safeguard and protect them and their interests.

The first step would, obviously, be a cessation of hostilities.

போர் நிறுத்தம் தான் முதல் கட்டமாக இருக்க வேண்டும் என்று தெளிவாகவே இதில் எழுதி யிருக்கின்றார். பத்திரிகைகளில் இந்த செய்தி வந்திருக்கிறது.

எதற்காக இதைச் சொல்கிறோம் என்று சொன்னால் - இதை அரசியல் பிரச்சினையாக ஆக்க வேண்டிய அவசியமில்லை.

--- கி.வீரமணி -'விடுதலை" 15-4-2009

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீசரண்

ஸ்ரீ சரவணகுமார் said...

மிக்க நன்றி

இந்திய அரசு தான் ஆயுதம் முதற் கொண்டு அனைத்து உதவிகளையும் வழங்குகிறது என்கிற செய்தி பொய் என்கிறீர்கள்

சவுக்கடி said...

///என்னென்ன செய்ய முடியும் என்று சொல்கின்றார்களோ அதைச் செய்யுங்கள் என்று அவர்கள் சொன்னது மட்டுமல்ல - அதிலே உண்மை இருக்கிறது என்று சொன்னவுடனே மிகத்தெளிவான பதிலைச் சொன்னார்கள்.///

சோனியா இவ்வாறு சொன்னது உண்மையானால்,
இன்று,
வன்னியில் இந்தியாவின் தோன்றாத் துணையுடன் இன அழிப்பு நடக்க நீங்கள் தாம் காரணமா? இதைத்தான் வேண்டுமென கேட்டீர்களா?

மூடு மறைவின்றி கொடுமையான இனக் கொலையை, - தமிழின அழிவைச் சிங்களனுடன் சேர்ந்து கொண்டு செய்துவரும் சோனியாவை மாய்ந்து மாய்ந்து வெற்றுரை எழுதிக் காப்பாற்ற வீண்முயற்சி செய்ய வெடகமற்றுப் போனீர்களே!

பகுத்தறிவு, தன்மமான உணர்வெங்கே?

வெட்கக் கேடு!

நாளுக்கு நூறு பேராகக் கொன்று கொண்டு இருந்தவர்கள் கடந்த நான்கைந்து நாட்களாக முந்நூறுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்து வருகிறார்கள!

இன்றைய செய்தியின்படி, இந்தியாவிலிருந்து சென்ற படையினர் அடிபட்டு கொழும்பு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள்!

இப்படிப்பட்ட நிலையிருக்க.
ஈழத்தமிழின அழிப்புக்கு சிங்களனைவிட முனைந்திருக்கும் சோனியாவை முனைந்து முனைந்து
காப்பாற்றும் வெற்று முயற்சியில் ஈடுபட நாணமில்லை?

தந்தை பெரியாரின் பெயரைச் சொல்லி இயங்கி அந்தப் பெருமகனார்க்குக் களங்கம் சேர்க்க முயற்சி செய்யாதீர்கள்!

வரலாறு உங்களை மன்னிக்காது!

தமிழ் ஓவியா said...

ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் அக்கரை எடுத்துக் கொள்வதில் தி.க.வையோ வீரமணி அவர்களையோ குறைத்து மதிப்பிடுவது சரியல்ல தோழர்களே.