Search This Blog

25.4.09

ஏமாற்றிப் பிழைக்கும் பார்ப்பனர்களை போற்றுவது சரியா?


கோயில் பார்ப்பனர்களின் குற்றங்களும் தண்டனைகளும்

சோழப் பெருவேந்தர் காலச் சமுதாய அமைப்பில் பிராமணர் எனப்பட்ட பார்ப்பனர்களுக்குச் சிறப்பான ஓர் இடம் அளிக்கப்பட்டது என்பதற்கு அரசவையிலும் ஊராட்சி மன்றங்களிலும் அவர்கள் உயர்நிலைகளில் வைக்கப்பட்டிருந்தனர்.

பல்லவர் காலத்திலும் சோழ, பாண்டியர் காலத்திலும் மன்னரின் அழைப்பின் மூலமாகவும், தாமாகவும் வந்து குடியேறிய பார்ப்பனர்கள் புதுப்புதுப் பெயர்களைப் பூண்டு புதிய குல தருமத்தைக் கடைப்பிடித்தவர்கள். அன்னார் வடமொழியுடன் சமஸ்கிருத மொழியைத் தவிர வேறு மொழியை ஏற்காதவர்கள்.

வடமொழி ஏற்றத்திற்காக மன்னர்களிடம் பல சலுகைகளையும், செல்வாக்கையும் பெற்று விளங்கினார்கள். இவ்வாறாக பெற்றுத் திகழ்ந்த இவர்களுக்கு அரசர்கள், நான்கு வேதம் வல்ல பார்ப்பனர்களுக்கு நிலம் அல்லது ஊரைத் தானமாக அளித்தனர். அவ்வாறு பெறப்பட்டவர்கள் சதுர்வேதி மங்கலமென அழைக்கப்பட்டனர். மற்ற பார்ப்பனர்களுக்கு அளிக்கப்பட்ட ஊர்கள் பிரமதேயம் என அழைக்கப்பெற்றது.

இக்குடியிருப்புகள் அனைத்தும் பார்ப்பனர்களின் நிருவாகத்துக்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் அவற்றினுள் செயல்பட மாட்டா. அக்கிரமங்களுக்கு எல்லாவிதமான வரிகள், கட்டளைகள், கடமைகள், ஆயங்கள் முதலியவற்றினின்றும் முழு விலக்கு அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு கிராமத்தின் உள்ளாட்சிக்கும் மகாசபை ஒன்றை அமைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் தத்தம் நிருவாகத்துக்கும்தாமே பொறுப் பேற்றுக் கொண்டார்கள். இதனால் பார்ப்பனர்கள் தமிழகம் முழுவதும் பரவிக் குடியமர்ந்தார்கள்.

உளநிறைவுடன் நல்வாழ்க்கையில் நின்று வேதம் ஓதி இறைப்பணி புரிந்து அறம் ஓம்பி மக்களிடையே கல்வி அறிவையும், ஆன்மீக விழிப்பையும் தோற்றுவிப்பதற்காகவே மன்னரும் மக்களும் பார்ப்பனர்களுக்கு துணை நின்றார்கள். ஆனால் விளைவோ வேறுவிதமாயிற்று.

தமிழ் மன்னரும் மக்களும் வரையாது வழங்கியதைக் கொண்டு வாழ்க்கை நலன்களைப் பெற்ற பார்ப்பனர்கள் தனித்து வாழ்ந்து மக்களிடையே குல வேறுபாடுகளைப் பெருக்கித் தமிழர் அனைவரையும் சூத்திரர் என்று கூறி இழி குலத்தினராகக் கருதியதன் பேரில் கோயில், குளங்கள், மடங்கள், ஏனைய பொது அறச்சாலைகள் ஆகியவற்றில் ஒதுக்கிவைத்து அவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்ற வழக்கத்தையும் உண்டாக்கிவிட்டார்கள்.

கோயில் கருவறையில் வட மொழியில் ஆரவார ஓசை ஓங்கவும், தமிழ்ஒலி மறையவும் வழக்காறுகள் உருவாக்கப்பட்டன. தேவார ஆசிரியர்கள் காதததில் தமிழர் கருவறைக்குள் செல்லும் உரிமை பெற்றிருந்-தனர். இது சோழர் பாண்டியர் காலத்திலும் இவ்வுரிமை மறுக்கப்பட்டது.

கோயிலைக் கட்டி குடமுழுக்குச் செய்யும் தமிழன் ஒருவன் தான் கட்டிய கோயிலுக்கு வெளியே தொலைவில் ஒதுங்கி நிற்கவும், பார்ப்பனர்களுக்கு அப்பால் எட்டிநின்று கோயில் பிரசாதங்களைப் பெறவுமான நிலைமையைத் தமிழன் பெற்றுவிட்டான். கோயிலின் பாதுகாப்புப் பணியில் அறக்கட்ட-ளைகளும் பார்ப்பனர்களிடம் ஒப்பவிக்கப்பட்ர் என்ற சபையாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அச்சபையின் உறுப்பினர் அனைவரும் பார்ப்பனர்களாகவே இருந்தனர்.

திருக்கோயில் காரியங்களைக் கண்காணித்து வந்த அமைப்புகளில் பார்ப்பனர்களின் செல்வாக்கே ஓங்கியிருந்தது. அர்ச்சகர்கள், தம்பிகள், சிவப்பிராமணர் அபூர்விகள், சிறீ வைணவர், சிவயோகிகள், திருப்பதிகம் ஓதுவோர், பன்மா கேசுவரர் எனப் பல பார்ப்பனப் பிரிவுகள் கோயில்களில் பணிபுரிந்து வந்தனர்.

சமுதாய அமைப்பின் உயரிய நிலையல் வைத்து மன்னராலும் மக்களாலும் மதிக்கப்பட்ட பார்ப்பனர்கள் சிலர் திருக்கோயில்களுக்கென அளிக்கப்பட்ட நிலங்களை அபகரித்துக் கொண்டதையும், நாள் வழி-பாட்டிற்கென திருவமுது படைப்பதற்காக ஒதுக்கப்பட்ட தானியத்தைக் களவாடியும் ஆண்டவனுக்கு அளிக்கப்பட்ட ஆபரணங்-களைத் திருடியமையும் செலுத்த வேண்டிய கடமைகளைச் செலுத்தாமல் ஏமாற்றி வந்தமையையும் அரசு தணிக்கை அதிகாரிகள் கண்டுபிடித்து அப்பார்ப்பனர்களுக்குத் தண்டனை வழங்கிய செய்திகளைப் பல கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

திருவல்லத்திலுள்ள முதலாம் இராசராசனின் ஏழாம் ஆண்டுக் கல்வெட்டு (ஏ.ஆர்.இ. 1919-176) கோயில் நிலங்களை அபகரித்துக் கொண்ட சிவப் பிராமணர்களுக்கு அதிகாரி மதுராந்தகன் கண்டாரதித்தன் எழுபத்தி நான்கு சுழற்சி பொற்காசுகளைத் தண்டமாக விதித்து செய்தியைக் கூறுகிறது.
அகரத்திலுள்ள முதலாம் இராசராசனின் இருபத்தி ஒன்பதாம் ஆண்டுக் கல்வெட்டு (ஆ.ஆர்.இ. 1915-182) தவறு செய்து தண்டம் விதிக்கப்பட்ட பார்ப்பனர்களில் சிலர் அத்தண்டத் தொகையைச் செலுத்தாமல் ஓடிவிட்டதையும் அதற்கு ஈடாக அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் அவர்களில் ஒருவரான கிளாக்கிய அவனிப்பட்டன் என்பவனுடை பட்ட கலம் நிலங்கள் கைப்பற்றப்பட்டதையும் விளக்குகிறது.

திருப்பனந்தாளில் உள்ள முதலாம் குலோத்துங்கனின் கல்வெட்டு (ஏ.ஆர்.இ. 1925-159) கோயிலுக்குச் சொந்தமான தங்கம், வெள்ளி ஆபரணங்களையும் வெண்கலம் கலன்களையும் அர்ச்சகர் ஒருவர் திருடிய-தையும் இதேபோன்ற திருட்டை அவர் இதற்கு முன் மூன்று முறை செய்திருப்ப கண்டறியப்பட்டதையும் அதற்குத் தண்டனையாக கோயிலில் அர்ச்சனை செய்யும் உரிமையும் அவர் மாதத்தில் நான்கரை நாள்களை இழக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதையும் எடுத்துரைக்கிறது.

இதேபோன்ற ஊழல்கள் திருமால்புரத்திலுள்ள கோயிலின் இராசராசன் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அக்னீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைத் தாங்களே அனுபவித்து வந்ததுடன் வழிபாட்டு நிலங்களையும் செய்யாமலும் விட்டுவிட்டனர். இறைவனுக்குப் படைக்-கின்ற அமுதை வெறும் அரிசியாக அவித்து படைத்தனர். பல சிறிய பெரிய அதிகாரிகளின் துணையுடன் சென்று இதைக் கண்டறிந்து அர்ச்சகர்களைத் தண்டித்துப் பழையபடி நிருவாகத்தைச் சீர்பெற செய்தவன் உத்தம சோழனின் மகனான மதுராந்தகன். கண்டராதித்தன் என்பவன்.

சிவபுரத்தில் 1239 இல் எழுதப்பட்ட கல்வெட்டொன்று இக்கோயில் சிவப்பிராமணர்கள் இருவர் சிவபுர இறைவனின் நகைகளைத் திருடிச் சென்று தம் காதற் பரத்தைக்குக் கொடுத்தும் நிவந்தங்களை தீய வழிகளில் செலவிட்டும் அரசுக்கு வரி கொடுக்க மறுத்தும் வரி கோட்க வந்த வரித் தண்டர்களை அடித்தும் கன்னட வீரர்களுடன் சேர்ந்துகொண்டு மக்களைத் துன்புறுத்தி 50,000 காசுகள் வசூலித்தும் இவ்வாறான அட்டூழியங்-களை வரிசைப்படுத்திக் கூறுகிறது. இது மூன்றாம் இராசராசசோழன் காலத்தில் நடை-பெற்றது. இதற்கெல்லம் காரணம் மூன்றாம் இராசராசன் வலிமையற்று இருந்ததால் அவன் காலத்தில் பாண்டியர்களும் ஹொய்சனர்களும் கோப்பெருஞ்சிங்கன் போன்ற சிற்றரசர்களும் சோழனைத் தாக்கிப் போர் புரிந்தனர். பார்ப்பனரைத் தட்டிக் கேட்க ஆள் இல்லாததால் பார்ப்பனர்கள் கொட்டம் அளவிககு மீறிப் போனதே என்பதாலேயாம்.

மேலும் இவ்வாறான அட்டூழியங்களைக் கல்வெட்டுகள் பல சான்றுகள் மூலம் எடுத்துக் கூறுகின்றன. என்றாலும், அவற்றைவிடச் சிறப்பானது இரட்டைப் புலவர்கள் பாடிய பாடலேயாகும்.
இப்புலவர்கள் சோழ, பாண்டியராட்சி வீழ்ந்த பின்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள். அவர்கள் ஊர்தோறும் சென்று சிற்றரசர்களையும், வள்ளல்களையும் பாடிப் பிழைத்து வந்தார்கள். இப்படிப்பட்ட அவர்கள் ஒரு சமயம் திருஆங்கூர் என்னும் ஊரில் உள்ள கோவிலுக்குச் சென்றனர். வழிநடந்த களைப்பும் பசியும் அவர்களை வாட்டியதால் பகல் பூசை நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் பூசையின்போது இறைவனுக்குப் படைக்கும் தயிர்ச்சோறு, சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் போன்றவற்றைப் படைத்த பின் கோயிலுக்கு வரும் அடியார்களுக்கு வழங்குவது வழக்கம். இது எல்லாக் கோயில்களிலும் நடைபெறுவதுண்டு.

பகல் நேரம் வந்தது. பூசை மணி ஒலிக்க சங்கு ஊத, பூசை நடைபெற்றது. அப்பூசையில் வைக்கப்படும் தட்டில் அமுது இல்லை. அதற்குப் பதில் சுட்ட செங்கல்லிக மேல் ஈரத் துணியை போர்த்தி வைத்துப் படைக்கப்பட்டதை கண்டார். முடவரான புலவர் அங்கு இல்லை. பூசை முடிந்ததும் பசியைத் தாளாத குருடர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட படையலைப் பூசாரி கொடுக்காமலிருக்கவே அவரைக் கேட்பதற்கு மாறாக அவ்விறைவனைப் பார்த்து,

தேங்கு புகழ் ஆங்கூர் சிவனே அல்லாளி அப்பா
நாங்கள் பசிதிருக்க நியாயமோ

என்று வெண்பாப் பாடல் வாயிலாகக் கேட்டார். இதைக் கேட்ட முடவரான புலவர்
போங்காணும்
கூறுசங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல்
சோறுகண்ட மூளீயார்சொல்
என்று விடையாகப் பாடி முடித்தார்.

இப்படிப்பட்ட செயல்கள் கோயில்களில் பார்ப்பனர்கள் செய்துள்ளனர். பார்ப்பனர்களின் அட்டூழியங்களைத் தவிர பொதுமக்களாகிய தமிழ் மக்களின் அட்டூழியங்கள் எதுவும் நடைபெற்றதாகக் கல்வெட்டுகளில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இறைவனையே ஏமாற்றிப் பிழைக்கும் இப்படிப்பட்ட பார்ப்பனர்களைத் தமிழ் மக்கள் பலபேர் இன்றும் அவர்களைப் போற்றுவது வேடிக்கையானது மட்டுமல்ல, வேதனையானதாகும் எனக் கூறி முடிக்
-கின்றேன்.
-நன்றி: "யாதும்ஊரே" இதழில் முத்து எத்திராசன் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: