Search This Blog
9.4.09
தேர்தலிலே நிற்காத தி.க.வினருக்கு தேர்தல் பற்றிய அக்கறை எதற்கு?
சென்றமுறை மதவாத ஆட்சியை வராமல் தடுத்திட்டதைப் போல இந்த முறையும் லைஞருக்கு 40 தொகுதிகளை வெற்றியாக வழங்குவீர்!
தமிழர் தலைவர் வேண்டுகோள்
மதவாத பி.ஜே.பி ஆட்சி அரியணை ஏறவிடாமல் சென்றமுறை கலைஞர் அவர்கள் தடுத்திட்டார்கள். அதே போல இந்த முறையும் தி.மு.க கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்து நாட்டை, மக்களை காத்திடுவீர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்து விளக்கவுரையாற்றினார்.
சென்னை பெரியார் திடலில் 4.4.2009 அன்று இரவு 7.30 மணிக்கு எம்.ஆர்.ராதா மன்றத்தில், நாடாளுமன்றத் தேர் தலும், ஈழத்தமிழர் பிரச் சினையும், என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு :-
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலே இன்னமும் இறுதியாக யார் எந்த அணியிலே இருக் கிறார்கள் என்பது அனைத்திந்திய அளவிலே கூட குழப்பமாக இருந்தாலும், நம்மைப் பொறுத்த வரையிலே நாம் ஆதரிக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்து தெளிவாகத் தங்களுடைய தேர்தல் பணிகளை துவக்கக் கூடிய இந்த நிலையிலே, திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையிலே பொது மக்களுக்குத் தெளிவுறுத்த வேண்டியது நம்முடைய கடமை என்கின்ற முறையிலே அரசியல் கட்சிகளுக்கு இருக்கின்ற அக்கறையை விட,ஒரு படி மேலாகவே திராவிடர் கழகம் இனத்தினுடைய நலனைக் கருதி, சமுதாயக் கண் ணோட்டத்தோடு இந்தப் பணியை நாங்கள் பார்க்கின்றோம்.
வெறும் அரசியல் பார்வை மட்டும் எங்களுக்கு இல்லை. அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையிலே அவர்களுடைய வெற்றி தோல்விகள் என்பதைப் பொறுத்து அந்த கட்சிகளின் எதிர் காலம் அமையக் கூடிய வாய்ப்பு எந்தக் தேர்தலிலும் உண்டு.
ஆனால் நம்மைப் பொறுத்தவரையிலே நம் இனத்தின் எதிர்காலம் எப்படி அமைவது? நம் மக்களின் வாழ்வுரிமை சிறப்பாக அமைய வேண்டும் என்ற கவலையால் தந்தை பெரியார் அவர்களுடைய காலத்திலிருந்தே இன்று வரையிலே தேர்தலிலே நிற்காத ஓர் இயக்கமாக திரா விடர் கழகம் இருந்தாலும் தேர்தலில் அக்கறை எடுத்துக் கொள்ளக் கூடிய ஓர் இயக்கமாக என்றைக்கும் அன்று முதல் இன்று வரை இருந்து கொண்டிருக்கிறது.
மேலெழுந்த வாரியாக பார்ப்பவர்களுக்கு தேர்தலிலே நிற்காத இவர்களுக்கு என்ன இந்த அக்கறை என்று நினைக்கத் தோன்றும். இந்த நாட்டைப் பொறுத்த வரையிலே அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் மிக அழகாகச் சொல்வார்கள்.
வெறும் அரசியல் போராட்டமாக இந்த நாட்டிலே, தேர்தலோ மற்றவையோ நடை பெறுவதில்லை. மாறாக தேவாசுர யுத்தம் என்று ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரையிலே மிகப் பெரிய ஒரு இனப்போராட்டமாக நடந்து கொண்டு வருகின்றது என்பது தான் வரலாற்றின் அடி நீரோட்டமாகும்.
எனவே அதை நாம் பின்னணியாக வைத்துக் கொண்டு பார்க்கின்ற நேரத்திலே சென்ற அய்ந் தாண்டுகளுக்கு முன்னாலே நடந்த தேர்தலிலே திராவிடர் கழகம் தெளிவாகவே ஒரு கருத்தை முன்னாலே நிறுத்தியது. அதைத் தான் வரவேற்புரையிலே நம்முடைய பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் குறிப்பிட்டார்கள். நம்மைப் பொறுத்த வரையிலே யார் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பதைவிட யார் வெற்றி பெறக் கூடாது - யார் ஆளக்கூடாது என்பதிலே மிகுந்த அக்கறை கொண்டவர்கள். ஏனென்றால் நோய் வரக்கூடாது என்பது தான் மருத்துவருடைய மிக முக்கியமான கடமை. நலவாழ்வு என்பது பிறகு. ஆனால் முதலிலே நோய் தாக்கிவிட்டால் நலவாழ்வு என்பதற்கு இடமே இருக்காது.
அது போல மதவாத கட்சிகள் சென்ற முறை ஆட்சியிலே இருந்து விட்ட காரணத்தால் தங் களிடம் இருந்த அத்தனை ஊடகச் செல்வாக்கையும் பயன்படுத்திக் கொண்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலே நாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு மார்தட்டிக் கொண்டிருக்கின்ற பொழுது, நல்ல வாய்ப்பாக கலைஞர் அவர்கள் வகுத்த வியூகம் இருக்கிறதே அந்த வியூகம் 40 இடங்களிலும், தமிழ்நாட்டிலும், பாண்டிச்சேரியிலும், அத்துணை தொகுதிகளிலும் வெற்றி என்று வந்ததனுடைய விளை வாகத்தான் மிகப்பெரிய மதவாத ஆபத்து -இந்தியாவிற்கு ஏற்பட்ட ஆபத்து, இந்தியா ஒளிர் வதற்குப் பதிலாக, இந்தியா அடியோடு ஒழிக் கூடிய ஒரு சூழலை கலைஞர் வகுத்த வியூகம் தடுத்து நிறுத்தியது.
பா.ஜ.க தலைமை யிலான தேசிய ஜனநாயக முன்னணி அன்றைக்கு ஆட்சிக்கு வந்திருந்தால் அவர்கள் நினைத்திருந்தால் இந்தியா காணாமல் போயிருக்கும்.
இந்தியா இருக்காது. இதை நான் சொல்ல வில்லை. இது நம்முடைய கருத்து மட்டுமல்ல; நம்முடைய கருத்துதான் ஆனாலும் அதை விட குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், நான் ஏற்கனவே சில கூட்டங்களில் சொல்லியிருக்கின்றேன்.
இதைப்பற்றி ஒரு நூலே வெளிவந்திருக்கிறது. மிக பிரபலமான எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்களைப் பற்றி பத்திரிகை உலகத்தினர் அறிவார்கள்.
பெரும்பாலான எழுத்தாளர்கள் அறிவார்கள். ஆங்கிலத்திலே சிறப்பாக எழுதக்கூடியவர். பஞ் சாப்பைச் சேர்ந்த ஒரு சிறந்த அக்னாஸ்டிக் என்று சொல்லக்கூடிய கடவுளைப்பற்றிக் கவ லைப்படாத மதத்தைப் பற்றி கவலைப்படாத ஈடுபாடு காட்டாதவர் 84 வயதைத் தாண்டிய வர்..அவர் பி.ஜே.பி ஆட்சி எப்படி காவிமயமாக எல்லாத் துறையிலும் நடந்ததைப் பற்றி எழுதியிருக்கின்றார். குஜராத்திலே நடந்த கொடுமைகளை எல்லாம் வைத்து பொடா சட்டத்தை பி.ஜே.பி ஆட்சி பயன்படுத்திய முறைகளை எல்லாம் சொல்லி ஒரு நூலை எழுதியிருக்கின்றார்.
The end of india என்பது அந்த நூலுக்குப் பெயர். அதாவது இந்தியா இனிமேல் கிடை யாது. முடிந்து விட்டது. இனிமேல் அவ்வளவு சுலபமாக இந்தியா திரும்பாது. ஒரு முறை அவர்கள் உள்ளே புகுந்து விட்டார்கள்; வரலாற்றைப் புரட்டிப் போட்டார்கள்.
பல மொழிகள், பல கலாச்சாரங்கள் இருக்கின்ற இந்தியாவிலே எம்மதமான இந்துமதம் மட்டும் தான் ஆள வேண்டும், எம்மொழி மட்டும் தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும், என்கலாச்சாரத் தான் இந்த நாட்டை ஆளவேண்டும். சிறுபான்மைச் சமுதாயமாக இருந்தாலும், மற்ற எவராக இருந்தாலும் அதை ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத் தினார்கள்.
அப்படி வலியுறுத்திய நிலையிலே நம்பிக்கை இழந்தார்கள். மிகப் பெரிய பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள் எல்லோருமே நம்பிக்கை இழந்தார்கள்.
அந்த நிலையிலே தான் குஷ்வந்த் சிங் அவர்கள் சிறு நூலாக இருந்தாலும், மிக ஆழமாக எழுதினார்கள்.
அப்படிப்பட்ட மதவெறி சக்தியான பி.ஜே.பியை மீண்டும் பதவிக்கு வரவிடாமல் தடுத்து அந்த சரித்திரத்தை முடிக்க முடியும் என்று இந்த நாட்டிற்குக் காட்டிய மண் பெரியார் மண் என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கின்றோம் (கை தட்டல்)
அதைச் செய்த பெருமை பெரியாரின் குருகுலத்திலே தயாராகி அசுரகுலமாக இருந்தாலும் - என்னை அசுரன் என்று சொன்னாலும் நான் அதைப்பற்றிக் கவலைப்பட வில்லை.
ஆம்! நான் இராவணனின் பெயரன் தான் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கின்ற கலைஞர் அவர்கள் வகுத்த வியூகத்தினாலே சிறப்பாக அன்றைக்கு நல்ல அளவுக்கு 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று மதவாதத்தைத் தடுத்து நிறுத்தினார்கள்.
அத்வானி அவர்கள் திரும்பத் திரும்ப, பல நேரங்களிலே சொன்னார்.
நாங்கள் பதவிக்கு எப்படியாவது வந்திருப்போம். ஆனால் தமிழ் நாட்டினுடைய 40 எங் களுக்கு விரோதமாகப் போன காரணத்தால் தான் நாங்கள் ஆட்சி அமைக்க முடியவில்லை என்று சொன்னார்கள்.
அதே உணர்வைத் தமிழர்கள் மீண்டும் இந்த தேர்தலிலே காட்டியாக வேண்டியது அவசியம்.
யாருக்காக? கலைஞ ருக்காக அல்ல; திரா விடர் கழகத்திற்காக அல்ல, திராவிட முன் னேற்றக் கழகத்திற்காக அல்ல, தமிழ்ச் சமுதாயத் தினுடைய எதிர்காலத்தைக் கருதி, வருங் காலத்தைக் கருதி அவர்களுடைய பாதுகாப்பைக் கருதி நல்வாழ்வைக் கருதி இதை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
சோனியா காந்தி அம்மையார் அவர்களுடைய தலைமையிலே யு.பி.ஏ என்ற மதச்சார்பற்ற அணியை உருவாக்கினார்கள்.
இடதுசாரி நண்பர்கள் நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் என்று சொல்லி ஆதரவு கொடுத்தார்கள். அதை எல்லாம் பயன்படுத்தி வந்த நேரத்திலே சிறப்பான ஒரு சாதனையை சோனியா காந்தி அவர்கள் நிகழ்த்தி விட்டுத்தான் மீண்டும் வாக்காளர் பெருமக்களை சந்திக்கிறார்கள். என்ன அந்த அடிப்படையான சாதனை?
நம்முடைய நாட்டிலே தெரிந்து கொள்ள வேண்டும். இத்தனை கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஒரு நிலையான ஆட்சியைத் தரமுடியுமா? அதுவும் மத்தியிலே தர முடியுமா? பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள் இருக்கக் கூடிய நிலையிலே ஒற் றுமையாக நிலையான ஆட்சித் தரமுடியுமா என்று சந்தேகத்தோடு பார்த்தார்கள். நிலையான ஆட்சியைத் தர முடியும் என்று காட்டினார்கள். பிரதமர் மன் மோகன் சிங் தலைமையிலே, கலைஞர் அவர் களுடைய அறிவு ஆலோசனையின்படி மிகச் சிறப்பான திட்டங்களை வகுத்துக் கொடுத்தார் கள்.
மிப்பெரிய பிரதமர் பதவியை சோனியா காந்தி அம்மையார் அவர்கள் தனக்கு வேண் டாம் என்று துறந்த திருக்கிறதே அது சாதாரணமான செய்தி அல்ல. மிகப்பெரிய அளவுக்குப் பாராட்டப்பட வேண்டிய இந்திய வரலாற்றிலே கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய இடம் பெற வேண்டிய மிக முக்கியமான செய்தி யாகும்.
தியாகத்தினுடைய சிகரத்திற்கு நீங்கள் சென்றீர்கள் என்று முறையாக அவர் பாராட் டப்பெற்றார். ஆனாலும் அவருக்கு கவலை இருந்தது. அவரை அந்நிய நாட்டுக்காரர் என்று சொன்னார்கள். வேறு மதத்தவர்கள் என்று சொன்னார்கள். எதை எதையோ சொன்னார்கள். இவர்களால் நிலை யான ஆட்சியைத் தர முடியாது என்று சொன் னார்கள்.
இங்கே இருக்கக் கூடிய அம்மையார் அவர்களோ, அடுத்து இதோ தேர்தல் வரப்போ கிறது. அடுத்து வரப் போகிறது. தயாராக இருங்கள், தயாராக இருங்கள் என்று தோற்றுப் போன தன்னுடைய தோழர்களை எல்லாம் தன்னுடைய கட்சிக் காரர்களை எல்லாம் ஆயத்தப்படுத்தினார்கள். அவர்களும் தயாராக இருந்தார்கள்.
அவர்களுக்கு இரு கனவுகள். வேறு ஒரு ஆட்சி மத்தியிலே வரும். அந்த ஆட்சியை வைத்து கலைஞர் ஆட்சியை இல்லாமல் செய்து விடலாம் என்றெல்லாம் கணக்குப் போட்டார்கள்.
ஆனால் அவை எல்லாம் கலைந்த கனவுகள். சிதைந்த எண்ணங்கள். அந்த அளவிற்கு இன் றைக்குத் தெளிவான சூழல் உருவாகியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி மத்தியிலே அய்ந்தாண்டுகள் ஆண்டிருக்கிறது. ஆண்டது மட்டுமல்ல; தெளி வான பல செய்திகளையும் தந்திருக்கிறார்கள். திராவிடர் கழகத்தினுடைய செயற்குழு தீர் மானம் மிக முக்கியமானது. தன்னிலை விளக்கம் தருவது போல மற்ற செய்திகளை எல்லாம் உள்ளடக்கி தீர்மானமாக கடந்த 31.03.2009 அன்று தந்தது. அந்தத் தீர்மானத்தை விளக்க வேண்டியது தான் இந்தக் கூட்டத் தினுடைய நோக்கம்.
தமிழ் மக்கள் உணர்ச்சி பூர்வமாக நினைக்கக் கூடிய ஒரு செய்தியை தங்களுக்கு ஓர் ஆதாய மாக இதைப் பயன் படுத்திக் கொள்ளலாம். அரசியல் மூலதனமாக அதை எடுத்துக்கொண் டாவது நாம் ஒரு படிக் கட்டாகப் பயன்படுத்தி மேலே வரலாமா? வேறு படிக்கட்டுகள் நமக்குத் தென்படவில்லையே, வேறு காரணங்கள் நமக்குக் கிடைக்கவில்லையே, குற்றங்கள் குறைபாடுகள் சிக்கவில்லையே, மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே! அவர்கள் மத்தியிலே எப்படி நாம் வெற்றி பெறுவது என்று நினைக்கக் கூடியவர்களுக்கு ஏதோ ஒரு பிரச்சினை - ஈழத்தமிழர் பிரச்சினை கிடைத்தது என்று நினைத்தார்கள்.
------------------தொடரும்..."விடுதலை" 9-4-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையிலே பொது மக்களுக்குத் தெளிவுறுத்த வேண்டியது நம்முடைய கடமை என்கின்ற முறையிலே அரசியல் கட்சிகளுக்கு இருக்கின்ற அக்கறையை விட,ஒரு படி மேலாகவே திராவிடர் கழகம் இனத்தினுடைய நலனைக் கருதி, சமுதாயக் கண் ணோட்டத்தோடு இந்தப் பணியை நாங்கள் பார்க்கின்றோம்.
வெறும் அரசியல் பார்வை மட்டும் எங்களுக்கு இல்லை. அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையிலே அவர்களுடைய வெற்றி தோல்விகள் என்பதைப் பொறுத்து அந்த கட்சிகளின் எதிர் காலம் அமையக் கூடிய வாய்ப்பு எந்தக் தேர்தலிலும் உண்டு.
ஆனால் நம்மைப் பொறுத்தவரையிலே நம் இனத்தின் எதிர்காலம் எப்படி அமைவது? நம் மக்களின் வாழ்வுரிமை சிறப்பாக அமைய வேண்டும் என்ற கவலையால் தந்தை பெரியார் அவர்களுடைய காலத்திலிருந்தே இன்று வரையிலே தேர்தலிலே நிற்காத ஓர் இயக்கமாக திரா விடர் கழகம் இருந்தாலும் தேர்தலில் அக்கறை எடுத்துக் கொள்ளக் கூடிய ஓர் இயக்கமாக என்றைக்கும் அன்று முதல் இன்று வரை இருந்து கொண்டிருக்கிறது.
மேலெழுந்த வாரியாக பார்ப்பவர்களுக்கு தேர்தலிலே நிற்காத இவர்களுக்கு என்ன இந்த அக்கறை என்று நினைக்கத் தோன்றும். இந்த நாட்டைப் பொறுத்த வரையிலே அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் மிக அழகாகச் சொல்வார்கள்.
வெறும் அரசியல் போராட்டமாக இந்த நாட்டிலே, தேர்தலோ மற்றவையோ நடை பெறுவதில்லை. மாறாக தேவாசுர யுத்தம் என்று ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரையிலே மிகப் பெரிய ஒரு இனப்போராட்டமாக நடந்து கொண்டு வருகின்றது என்பது தான் வரலாற்றின் அடி நீரோட்டமாகும்.//
தி.க. தேர்தலில் நிற்பது இல்லை என்று தெரிந்திருந்தாலும் அதன் காரணம் தெரியாமல் இருந்தது. இப்போது விளங்கி விட்டது.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment