Search This Blog

12.4.09

செந்தழல் ரவி அவர்களின் கருத்துக்கு பதிலடி


//பெரியார் திராவிட கழகத்தில் சேர்ந்து மணியண்ணன் சொன்னது ஏதாவது கட் பேஸ்டு செய்யுங்கள், உணர்வாளர்களாவது உம்மை மதிப்பார்கள்...//

செந்தழல் ரவி அவர்களைப் பற்றி மூத்த வலைவதிவரும் இயக்க முன்னோடியுமான தோழர் ஒருவர் சொன்னார். முதலில் ஆதரவாக பின்னூட்டம் இடுவார் அப்புறம் கொச்சைப்படுத்தி பின்னூட்டம் இடுவார். அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னார்.


அதற்கு நான் ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணூல் எதுக்கு என்ற சொலவடை உண்டு. அது போல் பெரியார் கொள்கையை என்று ஏற்றுக் கொண்டேனோ அப்போதே இழிவைப்பற்றி கவலைப்படப் போவதில்லை. பெரியாரிடம் கற்ற பாடமே இதுதான். அவர் படாதா இழிவா? என்று கேட்டேன்.

அது போல் இப்போது ரவி அரம்பித்திருக்கிரார்.

நான் எந்த அமைப்பில் சேர்வது என்பதை ரவி முடிவு செய்யக்கூடாது? முடிவு செய்ய வேண்டியது நான். அது மட்டுமல்லாது மரியாதையை எதிர் பார்த்து நான் எதையும் செய்வது கிடையாது. எனக்கு என் புத்திக்கு சரியென்று பட்டதை செய்து வருகிறேன்.

மக்கள் பின் செல்பவர்கள் அல்ல பெரியாரும் பெரியார் தொண்டர்களும்
மக்களைத் தன் பின்னே அழைத்து வருபவர்கள் நாங்கள். எதிர் நீச்சல் போடக்கூடியவர்கள். உண்மையை யாருக்காகவும் மறைக்காது வெளியிடுபவர்கள். எனவே உங்களின் ஆலோசனை நிராகரிக்கப்படுகிறது.

முதலில் "திராவிட கழகம்" என்று எழுதுவதை விடுத்து "திராவிடர் கழகம்" என்று எழுத வேண்டுகிறேன்.

நான் தான் இந்த வலைப்பதிவை நிர்வகிக்கிறேன் என்ற விபரம் வீரமணி அவர்களுக்கு கண்டிப்பாக தெரியாது என்றே நினைக்கிறேன். உங்களின் பதிவுக்குப் பின் அவருக்கு விபரம் தெரிவிக்க இருக்கிறேன். ஏன்?எதற்கு எனில் வீரமணி அவர்கள் எடுத்த முடிவு சரியானது என்பதை சொல்லுவதற்காக.

//எந்த அடிப்படையில் இவர் கன்வின்ஸ் ஆகி தி.க + தி.மு.க + காங்கிரஸை ஆதரிக்கிறார் என்று சொன்னால் தேவலை.//

அரசியல் பிரச்ச்சனைக்காக ஆதரிப்பதை அப்புறம் பார்ப்போம். ஈழப்பிரச்சினையில் யார் சரியாகச் செயல்படுகிரார்கள் என்பதைப் பொருத்தே ஆதரிக்கிறேன். இங்கு கலைஞரும் ஜெயலலிதாவும் நடந்து கொண்ட முறைகள் பற்றி விருப்பு வெறுப்பின்றி யோசித்துப் பார்க்கையில் கலைஞர் முழுவதும் இல்லையென்றால் கூட ஓரளவு ஜெயலலிதாவை விட சரியாகவே கலைஞர் செயல்படுகிறார் என்பது எனது கருத்து.

அதற்கு உதாரணம் வேண்டுமானால் சுப.தமிழ்செல்வன் இறப்பின் போது கலைஞர் நடந்து கொண்டதையும், ஜெயலலிதா நடந்து கொண்டதையும் ஒப்பிட்டுப் பாருங்கள் உண்மை புரியும். இன்னும் உதாரணம் வேண்டுமானால் விடுதலையில் இருந்து நான் எடுத்துப் போட்ட கட், பேஸ்டுகளில் நிறையா ஆதாரம் உண்டு.

கொள்கையின் அடிப்படையிலேயே எங்களது ஆதரவும் எதிர்ப்பும். ரவி நீங்கள் நினைப்பது போல் எதையும் எதிர்பார்த்து அல்ல.

ஈழப்பிரச்சினை பற்றி உங்களை விட அதன் தன்மையைப் பற்றி நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே வீரமணி பேசி வருகிறார்.எனவே வீரமணி அவர்களைப் பற்றி விமர்சிக்கும் போது நிதானமாக சான்றுகளுடன் விமர்சிக்கவேண்டுகிறேன்.

அதுபோல ஈழப்பிரச்சனை தொடர்பாக நாங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம் என கொளத்தூர் மணிஅண்னன் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

ஈழப்பிரச்சனையில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள்.

----தொடர்வோம்...

60 comments:

உடன்பிறப்பு said...

//நான் எந்த அமைப்பில் சேர்வது என்பதை ரவி முடிவு செய்யக்கூடாது? முடிவு செய்ய வேண்டியது நான்//

//கலைஞர் முழுவதும் இல்லையென்றால் கூட ஓரளவு ஜெயலலிதாவை விட சரியாகவே கலைஞர் செயல்படுகிறார் என்பது எனது கருத்து//

//அதற்கு உதாரணம் வேண்டுமானால் சுப.தமிழ்செல்வன் இறப்பின் போது கலைஞர் நடந்து கொண்டதையும், ஜெயலலிதா நடந்து கொண்டதையும் ஒப்பிட்டுப் பாருங்கள் உண்மை புரியும்//


சூப்பர் பதில் தல. வெறும் உணர்ச்சி வசப்படுவதாலேயே ஈழம் கிட்டிவிடும் என பலர் கனவு காண்கிறார்கள்

//ஈழப்பிரச்சனையில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள்//

இதற்காக யாரிடமும் போய் அங்கீகாரம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை தோழர்

இரா.சுகுமாரன் said...

//சுப.தமிழ்செல்வன் இறப்பின் போது கலைஞர் நடந்து கொண்டதையும், ஜெயலலிதா நடந்து கொண்டதையும் ஒப்பிட்டுப் பாருங்கள் உண்மை புரியும். இன்னும் உதாரணம் வேண்டுமானால் விடுதலையில் இருந்து நான் எடுத்துப் போட்ட கட், பேஸ்டுகளில் நிறையா ஆதாரம் உண்டு.//

செயலலிதா நல்லவர் என்றும், ஈழத்தின்மீதும் தமிழர்கள் மீது அக்கரை கொண்டவர் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், தமிழின விரோத காங்கிரசுக்கு ஆதரவளிக்கும் தி.மு.க. விற்கும் ஆதரவளிக்கக்கூடாது என்பது தான் நிலைப்பாடு.

அதாவது விளக்கமாக சொன்னால்...........

ஒருவன் கொலைசெய்துவிடுவேன் என்று சொல்கிறான் அவன் ஆகவே கொடியவன்.

ஆனால் உண்மையிலேயே கொலை செய்பவன் நல்லவன் என்பது போல் நீங்கள் செல்கிறீர்கள்.

செயா இப்போது இருந்தால் இன்னும் மோசமாக இருக்கும் என்பது போல் பலர் சொல்கிறார்கள்.

ஈழத்தில் இதைவிட மோசமான சூழலை உருவாக்கமுடியுமா? முடியாது.. இது வாழ்வா சாவா போராட்டம் இறுதி யுத்தம் இப்போது கூட புரிந்து கொள்ளாமல் கொலைகார கூட்டணிக்கு ஆதரவளிப்பது சரியல்ல.

செயலலிதாவை அல்லது அவரின் கூட்டணியை ஆதரிக்க சொல்லவில்லை. ஆனால் காங்கிரசு அயோக்கியர்களை துரத்தியடிக்க அதன் கூட்டணிக்கு ஆதரவளிக்கக்கூடாது என்பது தான் நாம் சொலவது.

உடன்பிறப்பு said...

//செயலலிதாவை அல்லது அவரின் கூட்டணியை ஆதரிக்க சொல்லவில்லை. ஆனால் காங்கிரசு அயோக்கியர்களை துரத்தியடிக்க அதன் கூட்டணிக்கு ஆதரவளிக்கக்கூடாது என்பது தான் நாம் சொலவது//

காங்கிரஸ் கூட்டணியை துரத்தி அடித்துவிட்டு அடுத்து வருபவர்களிடம் என்ன உதவி கேட்க முடியும் என்று நினைக்கிறீர்கள்

இரா.சுகுமாரன் said...

//காங்கிரஸ் கூட்டணியை துரத்தி அடித்துவிட்டு அடுத்து வருபவர்களிடம் என்ன உதவி கேட்க முடியும் என்று நினைக்கிறீர்கள்.//

இப்போதுள்ள கூட்டணியில் என்ன பெறமுடிந்தது என்று சொன்னால் புரிந்து கொள்ளலாம்.

அய்யா செயலலிதாவும் கருணாநிதியும் ஒன்று என்பது போல தான் எனக்கு தோன்றுகிறது.

அவர் கொள்ளைக்காரி என்பது உண்மை. கொள்ளை அடித்து ஆடம்பரமாக ஒருகோடியில் திருமணம் செய்தார்.

கருணாநிதி அறுபது ஆயிரம் கோடியை கனிமொழி கணக்கில் சேர்த்துள்ளதாக சொல்கிறார்கள்.

என்ன வித்தியாசம்,

கருணாநிதியின் மேல் எல்லோருக்கும் என்ன கோபம் என்றால் ஈழப்பிரச்சனையில் அவரது நிலைப்படும் நாடகமும் தான். அதனால் தான் அவரை இந்த அளவுக்கு எதிர்க்க வேண்டியுள்ளது.

கருணாநிதியை எதிர்த்தால் செயாவிற்கு ஆதரவு என எடுத்துக் கொள்ளாக்கூடாது.

தமிழ் ஓவியா said...

//செயலலிதாவை அல்லது அவரின் கூட்டணியை ஆதரிக்க சொல்லவில்லை. ஆனால் காங்கிரசு அயோக்கியர்களை துரத்தியடிக்க அதன் கூட்டணிக்கு ஆதரவளிக்கக்கூடாது என்பது தான் நாம் சொலவது.//

காங்க்ரசை எதிர்ப்பது என்பது ஜெயலலிதா கூட்டனியை ஆதரிப்பதாகத் தானே பொருள் (மறைமுகமாக)தோழர்.

படுத்துக்கிட்டுப் போர்த்திக்க்ட்டாலும் போர்த்திக்கிட்டு படுத்துக்கிட்டாலும் ஒன்னுதானே தோழர்.

(இந்த பதத்தை பயன்படுத்துவது உங்களை குறைத்து மதிப்படுவதற்கு அல்ல தோழர். வேறு பதம் எனக்கு உடனே தோன வில்லை)

இரா.சுகுமாரன் said...

//காங்ரசை எதிர்ப்பது என்பது ஜெயலலிதா கூட்டனியை ஆதரிப்பதாகத் தானே பொருள் (மறைமுகமாக) தோழர்.//

நீங்கள் சொல்வது உண்மைதான்.

இருவரும் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இராமதாசு, திருமா, வைகோ, தா.பாண்டியன், போன்று சில சீட்டுகளுக்காக, ஆதரிப்பது, எதிர்ப்பது என்ற நிலையில் உள்ளது. அதற்காக அது சரி என்று சொல்லவில்லை.

ஆனால் தேர்தலில் பங்கேற்காத தி.க. ஏன் இவர்களில் யேரெனும் ஒருவரை ஆதரிக்க வேண்டும் என்று கருதுகிறது.

இருவரும் சரியில்லை என்றால் ஏன் இருவரையும் புறக்கணியுங்கள் என்று ஏன் கூறக்கூடாது.

Anonymous said...

கி.வீரமணியால் பெரியாரியத்திற்கு ஆபத்து!


05.04.2009 அன்று விடுதலையில், "வீரமணி ஒழிக! உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன்! - தி.க.தலைவர் கி.வீரமணி கூட்டத்தில் கலாட்டா" என்ற தலைப்பில் ஒரு செய்தி வருகிறது :

04.04.2009-அன்று மாலை 7.30-மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் "நாடாளுமன்றத் தேர்தலும், ஈழப் பிரச்சினையும்" என்ற தலைப்பில் கி.வீரமணி பேசிக் கொண்டிருந்த போது வீரமணி உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என இரு இளைஞர்கள் கத்திக் கொண்டு ஓடிவந்ததாகவும், கூட்டத்தினர் அவர்களைப் பிடித்துக் கொண்டதாகவும் மானமுள்ள கி.வீரமணி போலீசில் ஒப்படைக்கும்படி சொன்னதாகவும், இருதோழர்களையும் 15-நாட்கள் புழல் சிறையில் அடைக்கும்படி மாஜிஸ்டிரேட் உத்தரவிட்டதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

தி.மு.கவுக்கும், இ.காங்கிரசுக்கும் ஆதரவாக கி.வீரமணியின் சமீபகால பிரசாரங்களும், பெரியாரியத்திற்கு எதிரான உளறல்களும் எம்மை தொடர்ந்து அதிர்ச்சிக்குட்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் ஓர் அரசியல்வாதியைப் போல் செயல்படும் கி.வீரமணியின் நடவடிக்கையில் சந்தேகங் கொண்டு பெரியார் திடலில் நடந்தது என்ன? என்று தமிழகத்தில் தோழர்களிடம் தொடர்பு கொண்ட போது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களிடம் இருந்து நாம் தெரிந்து கொண்டது, கி.வீரமணி "இ.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு போடுங்கள்" என்று பேசிக் கொண்டிருந்த போதிலே இரு தோழர்களும் ஆவேசப்பட்டு எதிர் கேள்விகள் கேட்டதாகவும், அதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி போலிசில் இரு தோழர்களும் ஒப்படைக்கப்பட்டதாகவும், அங்கு போலிசாரால் பலமாக தாக்கப்பட்டதாகவும் அறிகிறோம். ஆனால் தன்னை கொலை செய்ய முயன்றதாக கதை சொல்கிறார் கி.வீரமணி.

கேவலம் மகா கேவலம்..!

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1165

Payam Ariyan said...

தமிழச்சி: தயவு செய்து இந்த தளத்தில் வெளியிடும் சால்ராக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டம். இது உங்களின் மதிப்பை குறைக்கிறது.

இவர்கள் முடிந்தவரை கருணாநிதி நல்லவர் என்று சொல்லத்தான் முயற்சிக்கிறார்கள், ஆனால் பாவம் பாருங்கோ, கருணாநிதி அதை தினமும் எதாவது ஒரு செயலால் மீரிவிடுகிறார்.

அய்யா தமிழ் ஓவியா: நீங்கள் பெரியார் கொள்கைகளை மட்டும் எழுதுங்கள்.

Anonymous said...

வணக்கம் தோழர் தமிழ் ஓவியா

முதலில் செந்தழல் ரவி அவர்களைக் குறித்து உங்களுடைய "யாரோ சொன்னாங்க".... கதையாடல்களுக்கு இங்கே முக்கியத்துவம் கிடையாது. செந்தழல் ரவி எப்படிப்பட்டவர் என்பது அவர்களுடன் பழகும் எங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். செந்தழல் ரவி குறித்த குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதாக இருந்தால் யார்? என்ன? எப்போது? சொன்னார்கள் என்பதையும் முன்வையுங்கள். தலீத்தியம், பெண்ணீயம், பெரியாரியம் குறித்த முன்போக்கு சிந்தனை உடைய செந்தழல் ரவி நம்மை விட எந்தவிதத்திலும் குறைந்தவர் இல்லை என்பது 5 வருடங்களாக இணையம் மூலமாக செந்தழல் ரவியின் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு புரியும்.


இங்கே நம் செயல்பாடுகளை ஆய்வுக்குட்படுத்தவது மிக அவசியமானது. இப்போது நாம் எந்த சூழலில் இருக்கிறோம் என்பதை நீங்கள் இனம் காண மறுக்கிறீர்கள் என்பதை முதலில் உணருங்கள் தோழரே! கண்மூடித்தனமாக செயல்பாடுகள் நாம் முன்னெடுத்துச் செல்லும் பெரியாரியத்தையே கேள்விக்குட்படுத்திவிடும்.

தொடர்ந்து உங்களுடன் விவாதிப்பதில் பயனில்லை என்பதால் இத்துடன் நிறைவு செய்து கொள்கிறேன்.


அறிந்ததையும்.... அறியப்போவதையும்.... பகுத்தறிவோம்.


தோழமையுடன்
தமிழச்சி

http://tamizachiyin-periyar.com/

http://tamizachi.com/

உடன்பிறப்பு said...

//இவர்கள் முடிந்தவரை கருணாநிதி நல்லவர் என்று சொல்லத்தான் முயற்சிக்கிறார்கள்//

எல்லோரும் தங்கள் தலைவரை நல்லவர் என்று தான் சொல்கிறார்கள் ஆனால் அவர்கள் தலைவர் அடுத்தவருக்கு எப்படி தெரிகிறார் என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இதில் திடீர் தமிழின ஆர்வலர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை

அபி அப்பா said...

\\//நான் எந்த அமைப்பில் சேர்வது என்பதை ரவி முடிவு செய்யக்கூடாது? முடிவு செய்ய வேண்டியது நான்//

\\

தோழர் கூறிய கருத்துக்கு என் வணக்கம்!

அடுத்து சுகுமாறன் அவர்களே! எனக்கு ஒரு ஆசை எனக்கு மட்டுமல்ல எல்லா திமுகவினருக்கும்! இப்போது நீங்கள் நினைப்பது போல் நாங்கள் சோனியா எல்லாரும் தோற்க வேண்டும். பின்பு அம்மையார் பாமக ஆதரவுடன் சேர்ந்து அதன் பின் பாசகாவோ எந்த எழவு கூடவோ சேர்ந்து ஆட்சியை பிடிக்க வேண்டும். பின்பு நீங்க இதே போல இதே தமிழோவியா பதிவிலே பின்னூட்டம் இட வேண்டும் தெளிவான முகவரி கூட வேண்டாம் ஒன்லி ஐபி போதும் அந்த அம்மையாருக்கு!!! செய்வீர்களா அப்படி ஒரு நிலை ஏற்பட்டால்??? நான் ஏன் அப்படி கேட்கிறேன் என்றால் எங்கள் அடுத்த குறி 2.5 வருடம் பின்னே வரும் சட்ட மன்ற தேர்தல் தான்! காரணம் அப்போது தான் நாங்களும் இந்த 2.5 வருஷத்திலே கருப்பு கொடி பிடித்து உங்களை எல்லாம் இன்று புதுவை சுகுமாறன் 423 வது நாள் அப்படின்னு தேதி மாத்தி தேதிமாத்தி அதே டிஜிடல் போர்டுலே வைக்கோ நெடூமாறனுக்கு செஞ்சதை எல்லாம் செஞ்சு திரும்பவும் செயலலிதாக்கு ஆப்பு அடிச்சு தமிழக மக்கள் நலம் காக்க முடியும்!!!!அதுக்காகவேணும் இப்ப தோற்கனும் நாங்க!!!!

அபி அப்பா said...

\\//நான் எந்த அமைப்பில் சேர்வது என்பதை ரவி முடிவு செய்யக்கூடாது? முடிவு செய்ய வேண்டியது நான்//

\\

தோழர் கூறிய கருத்துக்கு என் வணக்கம்!

அடுத்து சுகுமாறன் அவர்களே! எனக்கு ஒரு ஆசை எனக்கு மட்டுமல்ல எல்லா திமுகவினருக்கும்! இப்போது நீங்கள் நினைப்பது போல் நாங்கள் சோனியா எல்லாரும் தோற்க வேண்டும். பின்பு அம்மையார் பாமக ஆதரவுடன் சேர்ந்து அதன் பின் பாசகாவோ எந்த எழவு கூடவோ சேர்ந்து ஆட்சியை பிடிக்க வேண்டும். பின்பு நீங்க இதே போல இதே தமிழோவியா பதிவிலே பின்னூட்டம் இட வேண்டும் தெளிவான முகவரி கூட வேண்டாம் ஒன்லி ஐபி போதும் அந்த அம்மையாருக்கு!!! செய்வீர்களா அப்படி ஒரு நிலை ஏற்பட்டால்??? நான் ஏன் அப்படி கேட்கிறேன் என்றால் எங்கள் அடுத்த குறி 2.5 வருடம் பின்னே வரும் சட்ட மன்ற தேர்தல் தான்! காரணம் அப்போது தான் நாங்களும் இந்த 2.5 வருஷத்திலே கருப்பு கொடி பிடித்து உங்களை எல்லாம் இன்று புதுவை சுகுமாறன் 423 வது நாள் அப்படின்னு தேதி மாத்தி தேதிமாத்தி அதே டிஜிடல் போர்டுலே வைக்கோ நெடூமாறனுக்கு செஞ்சதை எல்லாம் செஞ்சு திரும்பவும் செயலலிதாக்கு ஆப்பு அடிச்சு தமிழக மக்கள் நலம் காக்க முடியும்!!!!அதுக்காகவேணும் இப்ப தோற்கனும் நாங்க!!!!

அபி அப்பா said...

முதல்ல தமிழின தலைவர் பட்டம் பத்தி ஒரு முடிவுக்கு வந்துடுவோம்! நடிகவேள், கலைஞர் , சிவாஜி, புரட்சிநடிகர், இசைஞானி, அப்படி எல்லாம் யார் யார் எப்ப எப்ப யார் யாருக்கு கொடுத்தாங்கன்னு தெரியும் ஆனா இந்த தமிழின தலைவர் மாத்திரம் யார் கொடுத்ததுன்னு சொல்லுங்க பார்ப்போம்????

முடியுமா? அது போல புரட்சி நடிகர் என்கிற பட்டம் எம்சியாருக்கு கொடுக்கப்பட்டது அதை யார் புரட்சி தலைவர் என மாத்தியது??? தெரியுமா??(எனக்கு இதிலே உடன்பாடு இல்லை அவரை புரட்சி தலைவர் என்பதிலே)

ஆதியும் தெரியாது அந்தமும் தெரியாத அந்த பட்டத்தை நீங்க யார் மாத்துவது???????????

என்ன அப்படி தகுதி இருக்கு உங்களுக்கு மாத்த??? இன்றைக்கு "ஆசிரியர்" செய்த கல்வி புரட்சிக்கு அவருக்கு தான் முதலில் புரட்சி தலைவர் பட்டம் கொடுத்து இருக்க வேண்டும்.ஆனா அந்த ஆளுக்கு அரிதாரம் பூசுனா அலர்ஜியாம் என்ன செய்வது??

அபி அப்பா said...

நல்லது நம்ம தமிழச்சியும் வந்தாச்சு! இங்கயே பிரச்ச்னையை பேசி தீர்த்துப்போம்!

ரவி பிரச்சனை அடுத்து! இப்ப நாம அடிச்சுகிட்டா யாருக்கு லாபம்ன்னு ஒரு சின்ன கணக்கு சொல்ல முடியுமா தமிழச்சி?? இப்ப தேவை ஒத்துமை அதை இப்ப பார்ப்போம்! பின்ன நாம பேசி தீர்த்துக்கலாம்! கழுகு ரெடியா இருக்கு! அதனால சொல்கிறேன்!

அபி அப்பா said...

\\கருணாநிதி அறுபது ஆயிரம் கோடியை கனிமொழி கணக்கில் சேர்த்துள்ளதாக சொல்கிறார்கள்.

என்ன வித்தியாசம்,
என்னய்யா இது அநியாயம் போபர்ஸ் ஊழல் என்பதன் மதிப்பீடே 60 கோடி ரூவாய். அதுக்கே வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்து வி பி சிங் ஆட்சியில் உட்கார வச்சோம். 60000 கோடி என்பது சும்மாவா? பின்ன ஏன் கம்யூனிஸ்ட், செயலலிதா, முலாயம் ,இன்ன்ன பிற கந்தாயங்கள் சும்மா இருக்கனும் அதை பிரதான பிரச்சாரமா பயன் படுத்தவாவது செய்யலாமே! இன்ன்னும் 4 நாட்களில் முதல் கட்ட தேர்தல், சரி எந்த யோக்கியனாவது ஸ்பெக்டம் ஊழல் பத்தி பேசினான்னு சொல்லுங்க பிரதானமா? ஏன் ஏன் ஏன்?? என்ன தான் உங்க பிரச்சனை! செயலலிதா ஆட்சிக்கு வரனும் அத்தனை தானே! சந்தோஷமா வாங்க!

ரவி said...

//மூத்த வலைவதிவரும் இயக்க முன்னோடியுமான தோழர் ஒருவர் சொன்னார். முதலில் ஆதரவாக பின்னூட்டம் இடுவார் அப்புறம் கொச்சைப்படுத்தி பின்னூட்டம் இடுவார். அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னார்.///

முதலில் தமிழ் ஓவியா அவர்களின் அல்லது So Called மூத்த வலைப்பதிவரின் அவதூறான செய்தியை என்னை இத்தனை காலம் அறிந்த அபி அப்பா, உடன்பிறப்பு போன்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்று தெரியவேண்டும்.

//ஓரளவு ஜெயலலிதாவை விட சரியாகவே கலைஞர் செயல்படுகிறார் //

இன்னாபா இது ஓரளவு ? அந்தம்மா அஞ்சு மார்க்கு இவர் பதினைஞ்சு மார்க்கா ? என்ன காமெடி இது ?

ஓரளவு சரியா செயல்பட்டு கொஞ்சமா பிரேக்கில் கால் வைத்தால் வண்டி ஆக்ஸிடெண்ட் ஆகாம ஓரளவு மோதுமா ? ஓரளவு உயிர் போகுமா ?

காங்கிரஸ் கட்சி தமிழினத்துக்கு துரோகம் இழைத்துள்ளதா இல்லையா ? ஆம் அல்லது இல்லை என்று அபி அப்பாவும் உடன்பிறப்புவும் சொல்வார்களா ??

ஜெயலலிதாவுக்கு இல்லையப்பா. நான் விஜயகாந்துக்கு ஆதரவு தரேன். அதை பற்றியா பேச்சு இங்கே ?? ஜெயலலிதா பற்றி எந்த பேச்சும் என்னுடைய பதிவில் இல்லாதபோது சுப தமிழ்ச்செல்வன் கதையை இழுத்து வந்து திசைத்திருப்பல் எதையும் செய்யவேண்டாம். வெறும் கவிதை வெற்று காகிதம்.

கண்மூடித்தனமான வீரமணி கலைஞர் பக்தியைத்தானே இங்கே கேள்வி கேட்கிறோம் ??

கலைஞரின் முரட்டு வலையுலக பக்தர் மடிப்பாக்கம் மாபியாவே கம்முனு கீது...

இலங்கைக்கு அனுப்பிய டாங்கியை தமிழ்நாட்டை நைட்லேயே க்ராஸ் பண்ணி கேரளா போயிரு அப்படீன்னாராம் ஒரு மேனன் டெல்லியில. ஆனா பாருங்க கூட்ஸ் வண்டி ட்ரைவர் குடிச்சுட்டு ஓட்டினதால வண்டி காலையில பெரியாரு பொறந்த ஈரோட்டுல நிக்கிது. அதுல குண்டை போட்டு ரொப்பி அடிச்சுத்தானேய்யா இன்னைக்கு இத்தனை உசுரு போச்சு ?

காங்கிரசு ராணுவ மந்திரி ஏக்கே ஆந்தோனிக்கு தெரியாம இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பினாங்களா ?

சிவசங்கர மேனனுக்கு தெரியாம தாம்பரத்துக்கு விமானப்படை வீரர்கள் பயிற்சிக்கு வந்தாங்களா ?

நாராயணனுக்கு தெரியாம பஞ்சாப் ரெஜிமெண்ட் இலங்கையில சண்டைக்கு நிக்குதா ?

இதை எதையும் தட்டிக்கேட்காமல் "தாயே, பிச்சை போடு" என்று வயதை கூட கருதாமல் தன்மானத்தமிழர் கலைஞர் 'கொடுத்த காசுக்கு மேல' கூவுவதை எந்த உணர்வாளரால் சகித்துக்கொள்ளமுடியும் ?

வேட்பாளர் பட்டியலை தூக்கிக்கொண்டு டெல்லிக்கு காவடி எடுக்கும் காங்கிரசின் பதிமூனே சொச்சம் கோஷ்டிகளை விட இத்தாலி அண்ணைக்கு விசுவாசமாக இருப்பது தி.மு.கவும் தி.கவும் தான் என்பதுபோல அல்லவா இருக்கிறது வீரமணியாரின் பேச்சு ?

அங்கே தினமும் கொத்து குண்டுகளை வீசி கொத்துக்கொத்தாக மக்கள் மடியும் வேளையில் மன்மோகன்சிங் கண்மணி, அன்போட, கலைஞர், நான், எழுதும், கடிதம், இல்ல கடுதாசின்னு வெச்சுக்கோ, இல்ல எது வேனா வெச்சுக்கோ என்று கடிதம் எழுதிக்கொண்டிருப்பதன் மூலம் கலைஞர் என்ன சாதித்துவிட்டார் ?

காங்கிரசை வீழ்த்துவதன் மூலம் மட்டுமே இந்த பிரச்சினையில் காங்கிரசுக்கு பாடம் புகட்டமுடியும் என்று மொத்த உணர்வாளர்கள் கூட்டமும் நம்புகிறது...

நீங்கள் ஒரு அமைப்பில் அசோசியேட் ஆகியிருக்கிறீர்கள் என்பதாலேயே அந்த அமைப்பின் அத்தனை கொளுகைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டியதல்ல...

ஒரு நிமிடம் யோசித்து பார்த்து முடிவுசெய்யுங்கள்.

தமிழ் ஓவியா said...

//பெரியார் திடலில் நடந்தது என்ன? என்று தமிழகத்தில் தோழர்களிடம் தொடர்பு கொண்ட போது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களிடம் இருந்து நாம் தெரிந்து கொண்டது, கி.வீரமணி "இ.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு போடுங்கள்" என்று பேசிக் கொண்டிருந்த போதிலே இரு தோழர்களும் ஆவேசப்பட்டு எதிர் கேள்விகள் கேட்டதாகவும், அதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி போலிசில் இரு தோழர்களும் ஒப்படைக்கப்பட்டதாகவும், அங்கு போலிசாரால் பலமாக தாக்கப்பட்டதாகவும் அறிகிறோம். ஆனால் தன்னை கொலை செய்ய முயன்றதாக கதை சொல்கிறார் கி.வீரமணி.//

விடுதலை ஏடு வெளியிட்ட செய்தி;

'பெரியார் திடலில் நடந்தது என்ன?
இருவருக்கு 15 நாள் சிறை

நாடாளுமன்றத் தேர்தலும் ஈழப் பிரச்சினையும் என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நேற்று (4.4.2009) மாலை 7.30 மணிக்கு உரையாற்றினார். ஏராளமானவர்கள் உரை கேட்கத் திரண்டு இருந்தனர்.

இரவு 8 மணி அளவில் வீரமணி ஒழிக! உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன்! என்று கத்திக் கொண்டு ஒருவர் மேடையை நோக்கி ஓடி வந்தார். அவர் பின்னால் இன்னொரு வரும் ஓடி வந்தார். அந்த இருவரையும் கூட்டத்தில் இருந்தவர்கள் மடக்கிப் பிடித்தனர். அவரைத் தொந்திரவு செய்யாதீர்கள், முறைப்படி காவல்துறையிடம் ஒப்படையுங்கள் என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர். அதன்படி காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டு, காவல்துறையினர் வந்தபின் இருவரும் காவல்துறையிடம் ஒப்படைக் கப்பட்டனர்.

முறைப்படி புகாரினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கொடுத்தார்.
உண்மை இவ்வாறு இருக்க இரு பார்ப்பன ஏடுகள் வீரமணியிடம் கேள்வி கேட்டதாகவும், அவர் பேச்சை விமர்சித்ததாகவும் அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தொண்டர்கள் அவர்களைத் தாக்கியதாகவும் செய்திகளை வெளி யிட்டுள்ளன. அவர்கள் சொல்லுகிற படியே பார்த்தாலும், சங்கராச்சாரியார் பிரசங்கம் செய்யும் கூட்டங்களில், அவாள் ஏடுகளில் நாள்தோறும் வெளிவரும் (இன்றைய நிகழ்ச்சிகள் - engagements) பகுதிகளில் ஆன்மிகப் பிரச்சாரக் கூட்டங்களிலும் கேள்விகளை மற்றவர்கள் கேட்கலாமா? அதனை வரவேற்பார்களா? என்று தெரிந்து கொள்ள தமிழர்கள் விரும்புகின்றனர்.

கடைசிச் செய்தி

குற்றவாளிகள் இருவரும் மாஜிஸ்டிரேட் உத்தரவுப்படி புழல் சிறையில் 15 நாள்கள் அடைக்கப்பட்டனர்.

------------------"விடுதலை" 5-4-2009

அதர்கடுத்து வீரமணி அவர்கள் பேசிய செய்தி இதோ;

யாரோ சிலர் கலவரம் விளைவிக்க வந் திருக்கிறார்கள். நம்முடைய தோழர்கள் அவர்களைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

சேது சமுத்திரக் கால் வாய்த் திட்டம், கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டம், கடல்சார் பல்கலைக் கழகம், மத்திய பல்கலைக் கழகம், நெடுஞ் சாலைகள் வளர்ச்சி பிருமாண்டமான மேம்பாலங்கள், மகத்தான தகவல் தொடர்பு வசதி சாதனைகள் என்று அடுக் கடுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படு கின்றன.

2004-இல் நடை பெற்ற மக்களவைத் தேர் தலில் தமிழ்நாட்டில் மான மிகு. கலைஞர் அவர்கள் மதி நுட்பத்தால் உரு வாக்கப்பட்ட கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளடக்கிய 40 இடங் களிலும் பெற்ற வெற்றி தான் மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 5 ஆண்டுகாலம் உறுதியாக நிலைபெற்ற தற்கு முக்கிய அடிப்படையான காரண மாகும். 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி தமிழ் நாட்டு வளத்திட்டத் திற்கு மத்திய அரசிட மிருந்து நிதியாகப் பெற்றுள்ளது.

இதுவரை தமிழ் நாட்டு வரலாற்றிலேயே இப்படிப்பட்ட ஒரு சூழல் கிடையாது தோழர்களே! நல்ல செய்திகள் வெளியே போய் சேர்ந்து விடக் கூடாது என்பதற்கு சிலருக்கு அக்கறையிருக்கிறது.
ஆகவே இந்தப் பிரச் சாரத்தைத் தடுக்க சிலரை அனுப்பியிருப்பார்கள் அவர்களுடைய அந்த எண்ணத்திற்கு நாம் பலியாகிவிடக் கூடாது. யாராக இருந்தாலும் இந்தக் கருத்திலே மாறுபட்டால் அவர்கள் நாளைக்கு இந்த கருத்துகள் தவறு என்று சொல்லி கூட்டம் போட்டு பேசலாம். நாளைய மறுநாள் நாங்கள் வந்து பேசுவதற்குத் தயாராக இருப்போம். (கைதட்டல்). எனவே எங்களிடத்திலே இந்த சலசலப்பெல்லாம் காட்டி, இந்தக் கருத்துகளை நிறுத்தி விடமுடி யாது. அவர்களுக்கு என்ன ஆத்திரம்? எடுத்த எடுப்பிலே இவர்கள் எச்ச ரிக்கை செய்து விடுகின் றார்கள். நல்ல வெளிச் சத்தைக் காட்டிவிடுகின்றார்களே என்பது இன எதிரிகளுக்கு ஆத்திரம் நம்முடைய திட்டம் நடக்காமல்போய்விடுமே என்பதற்காக சிலருக்கு ஆத்திரம் இருக்கும். ஆத்திரம் அறிவுக்குக் கேடு ஆத்திரம் தான் அறிவுக்கு எதிரி. நான் பேசுவது இந்த அரங்கத்திற்காக மட்டுமல்ல. இந்த குறுந்தகடு உலகம் முழுவதும் செல்வதற்காக இருக் கிறது. தமிழ்நாடு முழுக்க என்னுடைய உரை ஒலிக்கும். உலக நாடுகள் முழுக்கச் செல்ல இருக்கிறது. புள்ளி விவரத்தோடு, ஆதாரத்தோடு நான் சொல்லிக் கொண்டு வருகின்றேன். நடந்தவைகளை வரலாற்றைச் சொல்லுகின்ற நேரத்திலே சொல்லாதே என்றால் இவ்வளவு உண்மையும் அவர் களுக்கு வெளியே போய் விடக்கூடாது என்பதில் கவலை.

வெளிச்சம் தெரியக் கூடாது என்று சொன்னால் இருட்டை விரும்பக் கூடியவர்கள் யார்? அதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

--விடுதலை" 12-4-2009'


வீரமணி அவர்கல் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த உரையயக் கேட்க பல தோழர்கள் வந்திருப்பார்கள். அது கேள்வி பதில் நிகழ்ச்சி அல்ல. அந்த நிகழ்ச்சியில் சென்று குறுக்கீடு செய்வது எந்த வகை நியாயம்?

கொலை செய்ய வந்தவரா? கேள்வி கேட்க வந்தவரா? என்பது விசாரனைக்குப் பின் தான் தெரியும்.


விமர்சனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். வீரமனி பேச்சில் தெளிவாகவே விளக்கியுள்ளார்.

இதில் தமிழச்சியின் பார்வை மீண்டும் வீரமணியை கொச்சைப் படுத்துவதாக அமைந்திருக்கிரது.

தமிழ் ஓவியா said...

//தலீத்தியம், பெண்ணீயம், பெரியாரியம் குறித்த முன்போக்கு சிந்தனை உடைய செந்தழல் ரவி நம்மை விட எந்தவிதத்திலும் குறைந்தவர் இல்லை என்பது 5 வருடங்களாக இணையம் மூலமாக செந்தழல் ரவியின் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு புரியும். //

நான் எப்போதும் யாரையும் குறைத்து மதிப்பிட்டதே கிடையாது. 5 அண்டுகலாகச் செயல்பாடு வரும் ரவியைப் பற்ரி எழுதியவுடன் அதரவுகுரல் கொடுக்க ஒடி வரும் தமிழச்சியின் உணர்வுக்கு தலை வனங்குகிரேன்.

10 வயது முதல் 76 வயது வரை பெரியார் இயக்கமே வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து வரும் வீரமணி அவர்களைப் பற்றி எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எழுதுவது எந்த வகை நியாயம் தமிழச்சி.

//தொடர்ந்து உங்களுடன் விவாதிப்பதில் பயனில்லை என்பதால் இத்துடன் நிறைவு செய்து கொள்கிறேன்.//

நானும் இதையே விரும்புகிரேன்.

//கண்மூடித்தனமாக செயல்பாடுகள் நாம் முன்னெடுத்துச் செல்லும் பெரியாரியத்தையே கேள்விக்குட்படுத்திவிடும்.//பெரியாரின் கருத்துக்களை தட்டச்சு செய்வதினாலே பெரியார் இயக்கம் பற்றி எல்லாம் தெரிந்து விட்டது என்று நினைப்பது சரியல்ல.

உங்களின் நாட்டான்மை மனப்பான்மையை மாற்ரிக் கொள்ள வேண்டுகிறேன்.

பொற்கோ said...

தமிழ் ஓவியா : முதலில் செந்தழல் ரவி என்ன நோக்கத்திற்காக ஆசிரியர் மீதும் , தி மு க தலைவர் மீதும் விமர்சனம் வைத்தார் என்பதை புரிந்தும் தாங்கள் நியாயப்படுத்த்துவது சரியாக படவில்லை. அவர் தன் பதிவில் சொல்லியிருக்கும் செய்தி தமிழினத்தை கொத்துக்கொத்தாய் கொந்ரொழிக்கும் சிங்களனுக்கு ஆயுதம் உள்ளிட்ட அத்தனை வசதிகளையும் செய்து கொடுக்கும் இந்திய அரசும்,காங்கிரஸ் கட்சியும் பின்னிருந்து மாத்திரமல்ல அவர்களே இன அழிப்பு போரை நடத்துகின்றார்கள் . அவர்களை ஆதரித்து வெற்றி பெறச்செய்து மேலும் அழிக்க உதவுவது எந்த வகையில் சரி.என் குடும்பத்தை அழிக்கும் எதிர் வீட்டுக்காரனோடு பக்கத்துவீட்டுக்காரன் உறவு கொண்டு ஏவிவிடுகிராநேன்றால் அவனோடு அந்த பக்கத்து வீட்டுக்காரனும் என்பகைவனல்லவா. அதுவும் சாதாரண பகைவன் அல்ல கொடிய பகைவன் அப்படிப்பட்ட பகைவனோடு தானே கலைஞரும்,ஆசிரியரும் கூட்டனி வைத்திருக்கின்றனர்.அது எந்த வகை தந்திரமாக இருந்தாலும் அது எதிர்க்கப்படவேண்டியதே.இதனை பெரியார் தொண்டர்கள் எப்படி தாங்கிகொள்கின்றனர். இன்று பெரியார் இருந்தால் பிரம்பு முறிய சிலருக்கு அடிவிழுந்திருக்கும்.அதில் முதல் ஆள் ஆசிரியராகவே இருப்பார்.இந்த செயலின் மூலம் ஆசிரியரும் நம்பிக்கைக்குரியவர் என்பதற்கில்லை.

தமிழ் ஓவியா said...

//சாதாரண பகைவன் அல்ல கொடிய பகைவன் அப்படிப்பட்ட பகைவனோடு தானே கலைஞரும்,ஆசிரியரும் கூட்டனி வைத்திருக்கின்றனர்.அது எந்த வகை தந்திரமாக இருந்தாலும் அது எதிர்க்கப்படவேண்டியதே.//

ஈழப்பிரச்சினையில் உண்மையில் ஈடுபாடு கொண்டவர்கள் யார் என்பதை வைத்துத்தான் அசிரியர் வீரமனி செயல்படுகிறார்.

இதில் தந்திரம் எதுவுமில்லை பொற்கோ.
ஈழப்பிரச்சினையில் ஆசிரியர் வீரமணி அவர்கள் அன்றிலிருந்து இன்று வரை சரியாகவே செயல்பட்டு வருகிறார்.

கோவி.கண்ணன் said...

தமிழ் ஓவியா,

தலைமை சொல்வது சரி என்று வாதிடும் முன், தலைமை பொதுக்குழுவைக் கூட்டி அனைவரின் கருத்தை அறிந்ததா என்பதை முதலில் அறிய வேண்டும்.

தலைமைச் சொல்வதை பிரளாமல் ஏற்றுக் கொள் என்று பெரியார் கூட வழியுறுத்தியது கிடையாது.

வீரமணி ஐயாவுக்கு பாஜக கூட்டணி இல்லாத கட்சியை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவில் செல்வி ஜெ வைக் கூட ஆதரித்தவர். அதற்கு பதிலாக யாருக்கும் ஆதரவில்லை என்று தெரிவித்திருக்கலாம், ஏன் செய்ய வில்லை.

திமுகவிற்கும் காங்கிரசும் கூட்டணி யாக நீடிக்க பல்வேறு விலகாமை (நிர்பந்தம்) உண்டு, அந்த கூட்டணியை ஆதரிக்க வீரமணி ஐயவுக்கு என்ன விலகாமை இருக்கிறது ?

தமிழினம் தமிழனம் என்றுக் கூவிக் கொண்டு மறுபக்கம் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவதை எவரும் சரியான செயலாக கருதமாட்டார்கள்.

தலமையையும் தட்டிக் கேட்கும் துணிவு இருக்க வேண்டும், அது தான் பெரியார் தொண்டர்களுக்கு அழகு.

அன்பரசு said...

அங்கே தமிழினம் அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கையில் இங்கே தமிழர்களின் ஒற்றுமையின்மை மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த நேரத்தில் தேர்தல் வந்தது, அரசியல் கட்சிகளின் முகமூடி உரிந்து விட்டது. ஆனால் யாரும் வெக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அரசியல் சார்பு இல்லாமல் கீழ்கண்ட சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள்
தேர்தலில் இந்திய அளவில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று, தமிழகத்தில் அதிமுகவும் அதிக இடத்தில் வென்றிருந்தால், நிச்சயம் காங்கிறஸும் அதிமுக கூட்டணி அமைக்கக் கூடும். அப்படி ஒரு கூட்டணி அமைந்த அடுத்த நிமிடமே திமுக ஆட்சி கலைக்கப் படும். இப்போது மேடை போட்டு ஈழம், தமிழர்கள் என்றூ வாய்கிழிய கத்திக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் அப்போது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே போய் விடுவார்கள் (அவர்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் சரி).
இப்படி ஒரு சூழ்நிலை வரத்தான் போகிறது. இது சாபமல்ல. நடக்கப்போகும் உண்மை. அய்யாவாவது, காங்கிரஸ் அரசின் கயமைத்தனமான நடவடிகைகளை வேடிக்கை பார்த்து நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் அம்மா வந்தால்? தானே முன்வந்து அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பாரே? அப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? வெறும் காங்கிரஸ் எதிர்ப்பு என்ற பெயரில் அதிமுகவுக்கு அப்படி ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தருவது தமிழின துரோகம். இது வெரும் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல. தமிழக அரசியலிலும் மாற்றங்கள் வரத்தான் போகின்றன். அவை தமிழர்களுக்கும் தமிழினத்துக்கும் நிச்சயம் நன்மை பயப்பதாக இருக்காது.

எவனோ ஒருவன் said...

////மூத்த வலைவதிவரும் இயக்க முன்னோடியுமான தோழர் ஒருவர் சொன்னார். முதலில் ஆதரவாக பின்னூட்டம் இடுவார் அப்புறம் கொச்சைப்படுத்தி பின்னூட்டம் இடுவார். அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னார்.//

அப்படியே ஆமோதிக்கிறேன். செந்தழலால் அநாகரிகமாக ஆபாசமாக பாதிக்கப்பட்டதற்கு உதாரணம் கோவி கண்ணன். கண்ணுக்கு தெரியாத உதாரணங்கள் ஏராளம்.

ரவி said...

///ஈழப்பிரச்சினையில் உண்மையில் ஈடுபாடு கொண்டவர்கள் யார் என்பதை வைத்துத்தான் அசிரியர் வீரமனி செயல்படுகிறார்.///

ஓ அப்படியா > சரி அப்படியே செயல்படட்டும். உங்களுடைய் இந்த விடாக்கண்டன் மனோபாவத்துடன் யார் விவாதம் செய்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டீர். பெரியாரே வந்தாலும்.

நல்ல கூட்டணி. நல்ல கொளுகை. நன்றி.

எவனோ ஒருவன் said...

பாவம்யா நீர், இருதலைக் கொள்ளி எறும்புன்னு கேள்வி பட்டு இருக்கிறேன். அதைவிட கஷ்டப்பட்டு பெயர் வாங்கத் துடிக்கிறீர். நல்ல மனுசங்களிடம் பெயர் வாங்க நினைத்தாலும் பரவாயில்லை. "அந்த மேட்டரில் மிரட்டுதலால் தான் அப்ரூவர் ஆனான் ரவி, நீங்க அவதூறு ஆறுமுகங்கிறத்துக்கு பதிலாக அப்ரூவர் ஆறுமுகம்னு சொல்லி இருக்கலாம், ரவி ரொம்ப நல்லவன், அவனாக உங்களை திட்டலை, அவனுக்கு அப்படி செய்யச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறார்கள், அவன் திட்றத பெரிசா எடுத்துக்காதிங்கன்னு" ஒரு நண்பர் காதைக் கடிச்சார்.

"ச்சே ரவியும் நானும் எவ்வளவு நாள் பழகி இருக்கோம், நீங்கச் சொல்லித்தான் எனக்குத் தெரியனுமா ? மத்தவங்களுக்கு பதில் போட்ட நான் ரவியோட அவதூறுகளை கண்டுக்கவில்லை என்பதால் நீங்களே புரிஞ்சிக்கக் கூடாதா ? " என்றேன்.

மேலும் சொன்னார் "ரவிக்கு இந்த ஆபாசமெல்லாம் பெரிய விசயமே இல்லிங்க...ங்கோ**தான்னு திட்டினால் பதிலுக்கு ...ங்கோ**தான்னு திருப்பி திட்டிவிட்டு அதோடு மறந்துடுவான்...இந்த பிரச்சனையில தலையைக் கொடுத்துட்டு ரவி ரொம்பவே அவமானமாக நினைத்து கொஞ்ச நாள் பதிவுல தலையைக் காட்டவே பயந்தான்" என்றார்.

"அட நீங்க ஒண்ணு...ரவி ஒரு ரவுசுன்னு எல்லோருக்கும் தெரியும்...அவரை வழக்கம் போல எழுதச் சொல்லுங்க...நான் ஒண்ணும் அவரை தப்பா நினைக்கல...வழக்கம் போல் அந்த நடிப்பை மெயின் டென் பண்ணச் சொல்லுங்க...என்னைய திட்டுறததையோ..பெயர்வைப்பதையோ நான் பெருசா எடுத்துக்கல...ஏனென்றால் அவரு ஏற்கனவே பின்னூட்ட நாயகர் என்று பெயர் வைத்தவர் தானே" என்றேன்

"யாரோட தூண்டிலுக்கு ரவி இரையாகி இருக்கிறான்...விட்டுத்தள்ளுங்க" என்றார்.

"புரிகிறது..." என்றேன்

ரவி, பாவம் இந்த மறுமொழியை பார்த்துட்டு உனக்கு வெளியில் இருந்து மறுப்புப் போடச் சொல்லி ப்ரசர் வரும். போடுங்க. வழக்கம் போல் நான் எதுவும் கண்டுமாட்டேன். சக்திகளின் பிடியில் இருந்து வெளியே வந்து நீர் சுதந்திரமாக எழுதனும் என்பதே உங்களை நன்கு தெரிந்த பலருடைய விருப்பம்

Courtesy http://govikannan.blogspot.com/2008/12/blog-post_9193.html

எவனோ ஒருவன் said...

வேலைவாய்பு மோசடி ஆசாமி செந்தழல்ரவி http://govikannan.blogspot.com/2008/12/blog-post_12.html

எவனோ ஒருவன் said...

பெங்களுரில் என்றோ ஒருநாள் இந்த மோசடிமன்னன் கைது செய்யபடுவார். அன்று தெரிந்துகொள்வோம் இவரது யோக்கியதை.

எவனோ ஒருவன் said...

தமிழோவியா. ரவி உங்கள் கையில் காலில் விழுந்து அவர் சம்பந்தபட்ட பின்னூட்டங்களை நீக்க முயற்சிப்பார். காரியம் ஆக காலில் விழுவதும் பின்னர் விழுந்த காலையே வாரி விடுவதும் அவருக்கு கைவந்த கலை.

மனசாட்சி said...

/* பெங்களுரில் என்றோ ஒருநாள் இந்த மோசடிமன்னன் கைது செய்யபடுவார். அன்று தெரிந்துகொள்வோம் இவரது யோக்கியதை. */

இப்படியெல்லாம் அவதூறு பேசினால் அது திகவின் அறியாமையினையே காட்டுகிறது. கேள்வி கேட்பவனை கொலை செய்பவன் என்று பிடித்து உள்ளே போட்ட திக விட யாரும் மோசம் கிடையாது. இது உங்களின் கீழ்த்தர புத்தியை காட்டுகிறது. அதே போல் இப்போது ரவி மேல்.

ரவி said...

தமிழ் ஓவியா..

இந்த பின்னூட்டங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் விடுங்கள்.

அதுவே இதுபோன்ற போலி ஆசாமிகளை நடத்தும் முறை...

கோவி.கண்ணன் said...

இங்கு எனது பதிவில் இருந்து சில இணைப்புகள் பின்னூட்டத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இது தேவையற்ற சீண்டல். நடந்தவை நடந்தையாக இருக்கட்டம் என்றே என்பதிவில் நான் அதை அப்படியே விட்டு வைத்திருக்கிறேன். அதையெல்லாம் 'எவனோ ஒருவன்' என்பவர் இங்கே கொண்டு வந்து இணைப்பதற்கான தேவை என்ன வென்றே தெரியவில்லை.

//செந்தழல் ரவி அவர்களைப் பற்றி மூத்த வலைவதிவரும் இயக்க முன்னோடியுமான தோழர் ஒருவர் சொன்னார். முதலில் ஆதரவாக பின்னூட்டம் இடுவார் அப்புறம் கொச்சைப்படுத்தி பின்னூட்டம் இடுவார். அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னார்.//

தமிழ் ஓவியா, மேற்கண்ட வரிகளை நீங்கள் தவிர்த்திருக்கலாம். அவருடைய கருத்துக்கு மறுப்பு தெரிவிக்க உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் தனிமனித தாக்குதல் போல் தொடங்கி இருப்பதால் பதவில் நீங்கள் மறுக்கும் கருத்துக்களை இவை மறைக்கின்றன. இதுவே இங்கே தேவை இல்லாமல் என் பதிவின் இணைப்பையும் 'எவனோ ஒருவன்' என்பவர் பயன்படுத்த காரணமாக அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்

வலைப்பதிவில் சுமூக நிலை வளர்வது அனைவரின் கைகளிலும் தான் இருக்கிறது.

ரவி said...

///அதையெல்லாம் 'எவனோ ஒருவன்' என்பவர் இங்கே கொண்டு வந்து இணைப்பதற்கான தேவை என்ன வென்றே தெரியவில்லை.///

சிண்டு முடிதல் என்ற சொல்லாடல் எப்படி வந்தது ? யாருக்கு கொண்டை இருக்கும் ? புண் ஆறுவது பிடிக்காத சொறி நாய் ஒன்று எந்த ஏரியாவில் உள்ளது என்று தெரியும் அல்லவா ?

தமிழ் ஓவியா said...

//தலைமை சொல்வது சரி என்று வாதிடும் முன், தலைமை பொதுக்குழுவைக் கூட்டி அனைவரின் கருத்தை அறிந்ததா என்பதை முதலில் அறிய வேண்டும்.//

முதலில் செயற்குழு, அப்புறம் பொதுகுழு கூடி முடிவெடுத்துத் தான் அறிவித்துள்லார்கள். அதில் நிறைவேற்றிய தீர்மானங்கள் இங்கு பதிவு செய்துள்ளேன். இயலுமானல் படித்துப் பாருங்கள்.

மனசாட்சி said...

/* //தலைமை சொல்வது சரி என்று வாதிடும் முன், தலைமை பொதுக்குழுவைக் கூட்டி அனைவரின் கருத்தை அறிந்ததா என்பதை முதலில் அறிய வேண்டும்.//

முதலில் செயற்குழு, அப்புறம் பொதுகுழு கூடி முடிவெடுத்துத் தான் அறிவித்துள்லார்கள். அதில் நிறைவேற்றிய தீர்மானங்கள் இங்கு பதிவு செய்துள்ளேன். இயலுமானல் படித்துப் பாருங்கள் */

வீரமணி மட்டும்தான் விலைபோனதாக நினைத்த நாம் இன்று மொத்த திகவும் விலை போனதாக பெரிய குண்டை தூக்கி போடாதிர்கள். தவறை உணர்ந்து திருந்துங்கள் கடைசி தமிழனுக்கு தமிழின தலைவன் கடைசி தந்தி அடிப்பதற்கு முன் திருந்துங்கள்.

தமிழ் ஓவியா said...

//தமிழ் ஓவியா..

இந்த பின்னூட்டங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் விடுங்கள்.

அதுவே இதுபோன்ற போலி ஆசாமிகளை நடத்தும் முறை...//


தோழர் ரவி எவனோ ஒருவனைப் பற்ரி எனக்கு கவலை இல்லை பொது வாழ்வில் இதை எல்லாம் பொருட் படுத்தாதீர்கள்.

நமக்குள் ஏற்படும் மோதல்கல் பற்றி விடுதலை தலையங்கள் ஏற்கனவே எச்சரிரித்திருந்தது. அது இதோ;

'கடும் விமர்சனங்களில் ஈடுபடும்போது நமக்குள் பிளவுகளும், சச்சரவுகளும் வெடித்துக் கிளம்பும் நிலை ஏற்படுகிறது. இது இலங்கை ஆளவந்தார்களுக்கு சிங்கள இனவெறி மக்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கக் கூடியதாக மாறிவிடுகிறது. இந்தியாவில் மத்தியில் உள்ள ஆட்சியும் இப்பிரச்சினையில் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதற்குக்கூட தமிழ்நாட்டு மக்களின் ஒன்றுபட்ட ஒற்றுமை தேவைப்படுகிறது."

விமர்சிக்கும் போது கவனத்துடன் விமர்சிக்க வேண்டும் என்பது நான் உட்பட அனைவருக்கும் பொருந்தும்.


கலைஞர் சொன்னது போல் கத்திரிக்கோலாக செயல் படுவோம்.

மனசாட்சி said...

/* நமக்குள் ஏற்படும் மோதல்கல் பற்றி விடுதலை தலையங்கள் ஏற்கனவே எச்சரிரித்திருந்தது. அது இதோ;

'கடும் விமர்சனங்களில் ஈடுபடும்போது நமக்குள் பிளவுகளும், சச்சரவுகளும் வெடித்துக் கிளம்பும் நிலை ஏற்படுகிறது. இது இலங்கை ஆளவந்தார்களுக்கு சிங்கள இனவெறி மக்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கக் கூடியதாக மாறிவிடுகிறது. இந்தியாவில் மத்தியில் உள்ள ஆட்சியும் இப்பிரச்சினையில் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதற்குக்கூட தமிழ்நாட்டு மக்களின் ஒன்றுபட்ட ஒற்றுமை தேவைப்படுகிறது."
*/

பிளவு வேண்டாம், தவறை உணர்ந்து திருந்தி வாருங்கள்.

லக்கிலுக் said...

//இங்கு எனது பதிவில் இருந்து சில இணைப்புகள் பின்னூட்டத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இது தேவையற்ற சீண்டல். நடந்தவை நடந்தையாக இருக்கட்டம் என்றே என்பதிவில் நான் அதை அப்படியே விட்டு வைத்திருக்கிறேன். அதையெல்லாம் 'எவனோ ஒருவன்' என்பவர் இங்கே கொண்டு வந்து இணைப்பதற்கான தேவை என்ன வென்றே தெரியவில்லை.//

இது நாம் காலம் காலமாக கண்டுவரும் பிரித்தாளும் சூழ்ச்சி தான். இருதரப்பிடையும் இப்போது சுமூகமான சூழல் எதுவும் நிலவவில்லை என்றாலும் மோசமான மோதல் சூழல் இல்லாதிருக்கும் பட்சத்தில் பழைய கசப்புப் பதிவுகளை அழித்துவிடுவது தான் நல்லது. இல்லையேல் எவனோ ஒருவன் மாதிரி அனாதைப் பயல்கள் புண் ரணம் ஆறாமலே இருக்கும்படி செய்துகொள்வார்கள்.

இருதரப்பும் பழைய மோதல் பதிவுகளை நீக்குமாறு இருதரப்போடும் நட்போடு இருந்துத் தொலைத்து ஏராளமான சங்கடங்களை சந்தித்தவன் என்ற உரிமையில் கோருகிறேன்.

கோவி, செந்தழல் இருவரும் என் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவும்.

மனசாட்சி said...

/* நமக்குள் ஏற்படும் மோதல்கல் பற்றி விடுதலை தலையங்கள் ஏற்கனவே எச்சரிரித்திருந்தது. அது இதோ;

'கடும் விமர்சனங்களில் ஈடுபடும்போது நமக்குள் பிளவுகளும், சச்சரவுகளும் வெடித்துக் கிளம்பும் நிலை ஏற்படுகிறது. இது இலங்கை ஆளவந்தார்களுக்கு சிங்கள இனவெறி மக்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கக் கூடியதாக மாறிவிடுகிறது. இந்தியாவில் மத்தியில் உள்ள ஆட்சியும் இப்பிரச்சினையில் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதற்குக்கூட தமிழ்நாட்டு மக்களின் ஒன்றுபட்ட ஒற்றுமை தேவைப்படுகிறது."
*/

மன்னிக்க வேண்டும், நீங்கள் என்ன சொல்ல வர்றிர்கள் தமிழின கொலைகார காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க சொல்கிறிர்களா. வேண்டமய்யா அந்த பாவம் நமக்கு.

லக்கிலுக் said...

//சிண்டு முடிதல் என்ற சொல்லாடல் எப்படி வந்தது ? யாருக்கு கொண்டை இருக்கும் ? புண் ஆறுவது பிடிக்காத சொறி நாய் ஒன்று எந்த ஏரியாவில் உள்ளது என்று தெரியும் அல்லவா ?//

ரவி!

நீங்களோ நானோ எங்காவது முற்போக்கு அது இதுவென்று பேசினாலேயே ஒரு நாதாரிப்பயல் வந்து வித்யாவோடு நாம் ஆரம்பத்தில் போட்ட சண்டை ஒன்றின் லிங்கை எடுத்து வந்துப் போடுவான். நினைவிருக்கிறதா?

இந்த கொண்டை தமிழ் வலைப்பதிவில் நன்கு ஊறிய புளியங்கொட்டை...

தமிழ் ஓவியா said...

//வலைப்பதிவில் சுமூக நிலை வளர்வது அனைவரின் கைகளிலும் தான் இருக்கிறது.//

இதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தனி மனித சீண்டல்களளென்பது என்னைபொருத்தவரையில் உடன்பாடான ஒன்று அல்ல. அவரவர் இயல்புக்கேற்ப செயல்பட்டு வரும்போது நாகரிகமாகவும் ஆரோக்கியமாகவும் விமர்சிக்க வேண்டும் என்றஅடிப்படையிலேயே சில பதிவுகள் பதிவு செய்துள்லேன். தாங்களும் பின்னூட்டம் அளித்துள்ளீர்கள். இனியும் கவனமாக செயல்படுவோம் கோவி கண்னன்.//அவருடைய கருத்துக்கு மறுப்பு தெரிவிக்க உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் தனிமனித தாக்குதல் போல் தொடங்கி இருப்பதால் பதவில் நீங்கள் மறுக்கும் கருத்துக்களை இவை மறைக்கின்றன.//

முதலில் தனிமனித தாக்குதலில் ஈடுபட்டது யார் என்பதை பாருங்கள்.

ரவி பதிவு ஆரம்பிக்கும் போதே
இப்படி ஆரம்பிக்கிறார்.

"தமிழ் ஓவியா அவர்கள், விடுதலையில் இருந்து கட் அண்டு பேஸ்டு செய்கிறார். வாசகர் பரிந்துரையில் எப்படியோ இமெயில் பார்வெர்டு செய்து இடம் பிடிக்கிறார். அதை எல்லாம் நாம் கண்டுகொள்ளப்போவதில்லை என்றாலும் இவர் கிழிந்த டவுசருடன் கிடக்கும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு வக்காலத்து வாங்க முயல்வதை தான் தாங்கமுடியவில்லை.'

நான் கனனி நிபுனர் அல்ல. இ மெயில் பயன்படுத்துவது எப்படி என்பதையே கடந்த சில மாதங்களாகத்தான் கற்றுக் கொண்டேன். இன்னும் முழுமையாக கற்றுக் கொள்ள வில்லை. அப்படியிருக்க இ மெயில் பார்வேர்டு என்பது என்ன வென்றே தெரியவில்லை. அப்படியிருக்க என்மீது குறை கூறுவது எந்த வகை நியாயம்?

சொல்லுங்கள் கோவி. காண்ணன்.

இதைக்கூட நான் சுட்டிக்காட்டுவது அவரை குறைகூற அல்ல விமர்சனத்தில் நாகரிகம் கடை பிடிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே.

என்னிடம் சொன்னவர் தவறாகச் சொல்லியிருக்கலாம் எவனோ ஒருவனைப் போல்.

அதன் பின் தோழர் குழலியிடம் கேட்டு ரவியைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.


ஆரோக்கியமன விமர்சனங்கள் நல்ல மனிதனை உருவாக்கும் அதுவே நல்ல சமுதாயமாக மாறும்.

நன்றி கோவி கண்ணன்.

தமிழ் ஓவியா said...

லக்கிலுக் வனக்கம்.

உங்கள் பின்னூட்டம் படித்தேன். எனக்குப் புரியவில்லை. பதில் அளிக்க முடியாததற்கு மன்னிக்கவும்.

தங்களின் வருகைக்கு நன்றி

தமிழ் ஓவியா said...

//தலைமைச் சொல்வதை பிரளாமல் ஏற்றுக் கொள் என்று பெரியார் கூட வழியுறுத்தியது கிடையாது.//

இயக்கத்திற்கு வருவதர்கு முன் என்ன கேள்விகள் வேண்டுமமனாலும் கேளுங்கள் பதில் அளிக்கிரேன். உங்களுக்கு தெளிவு ஏற்பட்டு இயக்கத்திற்குள் வந்து விட்டால் நான் சொல்லுவதை கேள்வி கேட்காமல் கேள் என்கிறார் பெரியார்.

இது குரித்து பெரியாரின் கட்டுரையை விரைவில் பதிவு செய்கிறேன்.

நன்றி கோவி கண்னன்.

லக்கிலுக் said...

//உங்கள் பின்னூட்டம் படித்தேன். எனக்குப் புரியவில்லை. பதில் அளிக்க முடியாததற்கு மன்னிக்கவும்.

தங்களின் வருகைக்கு நன்றி//

தமிழ் ஓவியா வணக்கம்.

என் பின்னூட்டத்தில் இருப்பது பழைய பிரச்சினை. உங்கள் பதிவை ஆலமரமாக எடுத்துக்கொண்டு சொம்பு வைத்து பஞ்சாயத்து செய்து கொண்டிருப்பதற்கு மன்னிக்கவும்.

அந்த எவனோ ஒருவன் என்ற பேடிப்பயலின் பின்னூட்டங்களை நீங்கள் தவிர்த்திருந்தால் நலம்.

தமிழ் ஓவியா said...

மனசாட்சி பொய் பேசுகிரது நோக்கத்தை திசை திருப்புகிரது.

கோவி.கண்ணன் said...

//நான் கனனி நிபுனர் அல்ல. இ மெயில் பயன்படுத்துவது எப்படி என்பதையே கடந்த சில மாதங்களாகத்தான் கற்றுக் கொண்டேன். இன்னும் முழுமையாக கற்றுக் கொள்ள வில்லை. அப்படியிருக்க இ மெயில் பார்வேர்டு என்பது என்ன வென்றே தெரியவில்லை. அப்படியிருக்க என்மீது குறை கூறுவது எந்த வகை நியாயம்?

சொல்லுங்கள் கோவி. காண்ணன்.//

தமிழ் ஓவியா, ஒப்பீடு அளவில் என்னால் கருத்துரைக்க முடியாது, நீங்கள் செய்தது தவறு என்ற அளவில் புரிந்ததைத்தான் நான் சுட்டினேன். நான் அவருக்கு வக்காலத்து வாங்குவதற்காகவோ, அது சரி என்ற எண்ணத்திலோ அதைக் குறிப்பிடவும் இல்லை. உங்களுக்கான தனித்தன்மையை பிறருக்காக மாற்றிக் கொள்ளாதீர்கள் என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளுங்கள், நான் சொன்னது அறிவுரையும் அல்ல. வெறும் பரிந்துரை மட்டுமே.

மிக்க நன்றி !

தமிழ் ஓவியா said...

பனங்காட்டான் சொல்லுவதையும் பரிசீலிக்க வேண்டுகிரேன்.

தமிழ் ஓவியா said...

பின்னூடங்கள் அனுமதிக்கப்படுகின்றன. என்னை கெட்ட வார்த்தையில் திட்டிய பின்னூட்டம் கூட அனுமதித்துள்ளேன்.

அவர்களின் தராதரத்தை அறிந்து கொள்வதற்காக லக்கி லுக்.

பின்னூட்டம் உங்கலைச் சங்கடப்படுத்தியிருந்தால் வருந்துகிரேன்.

Osai Chella said...

அன்பு நண்பருக்கு, எனது மாற்றுக்கருத்து இங்கே!

Sanjai Gandhi said...

//ஈழப்பிரச்சனையில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள்.//

நிச்சயமாக..

Sanjai Gandhi said...

//காங்கிரசு அயோக்கியர்களை //

இது போன்ற வார்த்தை பிரயோகங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் சுகுமாரன் அவர்களே. நான் காங்கிரஸ் இயக்கத்தில் உறுப்பினர். நீங்க பொதுவாக சொல்வது என்னையும் தான் குறிக்கிறது. உங்கள் கருத்துக்களை நாகரிகமாக சொல்ல பழகுகுங்கள். என்னைப் போன்ற சிறுபிள்ளைகளைப் போல் பேச வேண்டாம். பிறகு நீங்களும் சிறுபிள்ளையாகவே மதிக்கப் படுவீர்கள்.

ஸ்ரீ சரவணகுமார் said...

ரவி
//காங்கிரசை வீழ்த்துவதன் மூலம் மட்டுமே இந்த பிரச்சினையில் காங்கிரசுக்கு பாடம் புகட்டமுடியும் என்று மொத்த உணர்வாளர்கள் கூட்டமும் நம்புகிறது...//

என் கருத்தும் இது தான்

இலங்கையில் காங்கிரஸ் அரசு தான் தமிழர்களை கொன்று கொண்டிருக்கிறது

தமிழ்ஓவியா இதை நீங்கள் மறுக்கிறீர்களா?

ஆம் இல்லை என்று மட்டும் சொல்லவும்

கோவி.கண்ணன் said...

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ சொன்னது…
//காங்கிரசு அயோக்கியர்களை //

இது போன்ற வார்த்தை பிரயோகங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் சுகுமாரன் அவர்களே. நான் காங்கிரஸ் இயக்கத்தில் உறுப்பினர். நீங்க பொதுவாக சொல்வது என்னையும் தான் குறிக்கிறது. உங்கள் கருத்துக்களை நாகரிகமாக சொல்ல பழகுகுங்கள். என்னைப் போன்ற சிறுபிள்ளைகளைப் போல் பேச வேண்டாம். பிறகு நீங்களும் சிறுபிள்ளையாகவே மதிக்கப் படுவீர்கள்.
//

சுகுமாறன் அவர்களே, இனிமேல் காங்கிரசு அயோக்கியர்கள் என்று போடுமிடத்தில் (சஞ்செய் தவிர்த்து) என்று அடைப்புக்குறிக்குள் போட்டுவிடுங்கள். :)

பரணீதரன் said...

ஈழ பிரச்சனையில் இந்த அளவுக்கு விவாதிக்க அடிபடையாக இருந்தவர்களே பெரியார், கலைஞர் ,ஆசிரியர் போன்றவர்கள் தான். அவர்களை போன்றவர்கள் யாருமே இந்த ஈழ பிரச்சனையை பேசாத பொழுது தமிழகத்தில் பேசியவர்கள் மற்றும் போராட்டம் பல நடத்தியவர்கள். அவர்களை விட இதில் இன்றளவும் உணர்வு பூர்வமாக இருப்பவர்கள் வேறு எவரும் இல்லை என்பதே ஏன் கருத்து.

இந்த பிரச்சனையில் இன்றளவும் எந்த அளவுக்கு தன்னை ஈடுபடுத்தி எதாவது இதற்க்கு தீர்வு ஏற்படுத்த முடியுமா என நினைப்பவர் தான் ஆசிரியர் அவர்கள்.

2008 இந்த போரட்டம் இந்த அளவுக்கு எல்லாம் ஆரம்பிப்பதற்கு முன்பே ஆசிரியர் அவர்கள்தான் இந்த பிரிச்சனையில் முன்னோடியாக இருந்து , ரயில் மறியல் போராட்டத்தை திரு . திருமாவளவன் அவர்களுடன் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆரம்பித்து வைத்து தமிழனை காப்பாற்று, போரை நிறுத்து என்று சொன்னார்கள். அதன் பிறகு இந்த அளவு முற்றி போன பிறகுதான் எல்லோரும் வந்து சேர்ந்து கூக்குரல் இடுகிறார்கள். அன்று நடந்த ரயில் மறியல் போராட்டத்தை எதனை பத்திரிக்கைகள் போட்டன. இல்லை எதனை பேர் தன் கலந்து கொண்டு இப்பொழுது பேசும் அளவுக்கு பேசினார்கள்.

இது போன்று அவர்கள் எவளவோ தன்னால் முடிந்தவரை செயிகிரர்கள். அனால் எல்லோருக்கும் அவர்தான் பகைவர். ஏதோ நீங்கள் போட்ட வாக்கில் பாராளுமன்றம் சென்று பல சொத்து சேர்த்து உங்களை (மக்களை) ஏமாற்றி ஒன்றுமே செய்தவர் போல. இன்றளவும் அவர் கொள்கையில் அவர் உறிதியாக தான் இருக்கிறார்.

பரணீதரன் said...

ஈழ பிரச்சனையில் இந்த அளவுக்கு விவாதிக்க அடிபடையாக இருந்தவர்களே பெரியார், கலைஞர் ,ஆசிரியர் போன்றவர்கள் தான். அவர்களை போன்றவர்கள் யாருமே இந்த ஈழ பிரச்சனையை பேசாத பொழுது தமிழகத்தில் பேசியவர்கள் மற்றும் போராட்டம் பல நடத்தியவர்கள். அவர்களை விட இதில் இன்றளவும் உணர்வு பூர்வமாக இருப்பவர்கள் வேறு எவரும் இல்லை என்பதே ஏன் கருத்து.

இந்த பிரச்சனையில் இன்றளவும் எந்த அளவுக்கு தன்னை ஈடுபடுத்தி எதாவது இதற்க்கு தீர்வு ஏற்படுத்த முடியுமா என நினைப்பவர் தான் ஆசிரியர் அவர்கள்.

2008 இந்த போரட்டம் இந்த அளவுக்கு எல்லாம் ஆரம்பிப்பதற்கு முன்பே ஆசிரியர் அவர்கள்தான் இந்த பிரிச்சனையில் முன்னோடியாக இருந்து , ரயில் மறியல் போராட்டத்தை திரு . திருமாவளவன் அவர்களுடன் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆரம்பித்து வைத்து தமிழனை காப்பாற்று, போரை நிறுத்து என்று சொன்னார்கள். அதன் பிறகு இந்த அளவு முற்றி போன பிறகுதான் எல்லோரும் வந்து சேர்ந்து கூக்குரல் இடுகிறார்கள். அன்று நடந்த ரயில் மறியல் போராட்டத்தை எதனை பத்திரிக்கைகள் போட்டன. இல்லை எதனை பேர் தன் கலந்து கொண்டு இப்பொழுது பேசும் அளவுக்கு பேசினார்கள்.

இது போன்று அவர்கள் எவளவோ தன்னால் முடிந்தவரை செயிகிரர்கள். அனால் எல்லோருக்கும் அவர்தான் பகைவர். ஏதோ நீங்கள் போட்ட வாக்கில் பாராளுமன்றம் சென்று பல சொத்து சேர்த்து உங்களை (மக்களை) ஏமாற்றி ஒன்றுமே செய்தவர் போல. இன்றளவும் அவர் கொள்கையில் அவர் உறிதியாக தான் இருக்கிறார்.

மனசாட்சி said...

ஈழம் என்றால் அது கண்டிப்பாக திக விற்கு ஒரு இடம் உண்டு. ஆனால் நாங்கள் இங்கு கூறுவது எல்லாம் உங்கள் இந்த கூட்டணி ஆதரவுதான்.

எந்த நம்பிக்கையில் காங்கிரஸ் மீண்டும் வருவதனை ஆதரிக்கிரிர்கள்.

தமிழ் ஓவியா said...

//2008 இந்த போரட்டம் இந்த அளவுக்கு எல்லாம் ஆரம்பிப்பதற்கு முன்பே ஆசிரியர் அவர்கள்தான் இந்த பிரிச்சனையில் முன்னோடியாக இருந்து , ரயில் மறியல் போராட்டத்தை திரு . திருமாவளவன் அவர்களுடன் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆரம்பித்து வைத்து தமிழனை காப்பாற்று, போரை நிறுத்து என்று சொன்னார்கள். அதன் பிறகு இந்த அளவு முற்றி போன பிறகுதான் எல்லோரும் வந்து சேர்ந்து கூக்குரல் இடுகிறார்கள். அன்று நடந்த ரயில் மறியல் போராட்டத்தை எதனை பத்திரிக்கைகள் போட்டன. இல்லை எதனை பேர் தன் கலந்து கொண்டு இப்பொழுது பேசும் அளவுக்கு பேசினார்கள்.//

பிரச்ச்சனையை மக்கல் மத்தில் கொண்டு செல்வதே தி.க.தான். அதன் பின் மற்ரவர்கள் புரிந்து கொண்டு கையிடுக்கிறார்கள். வரவேர்க தக்கதுதான். ஆனால் அவர்கள் கையிலெடுத்த பின் முதலில் குறை கூறுவது தி.க.வையும், வீரமணி அவர்களையும் தான். அதற்கு பார்ப்பனப் பத்திரிக்கைகளும் முக்கியத்தும் தந்து செய்தி வெளியிடுவார்கள். ஆனால் வீரமனி நடத்தும் போராட்டத்தைப் பற்ரி ஒரு வரி செய்தி வராது. இது என்ன பத்திரிக்கை தர்மமோ?


தங்கலின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மானமிகு சுயமரியாதைக்காரன்.

Sanjai Gandhi said...

//சுகுமாறன் அவர்களே, இனிமேல் காங்கிரசு அயோக்கியர்கள் என்று போடுமிடத்தில் (சஞ்செய் தவிர்த்து) என்று அடைப்புக்குறிக்குள் போட்டுவிடுங்கள். :) //

இப்டி அடிக்கடி புல்லரிக்க வைக்கிறிங்களே கோவியாரே.. :))

இன்று வரை ஒருவரும் இந்தியா இலங்கைக்கு ஆயுதம் தருவதை நிரூபிக்கவில்லை. ரேடார் இயக்கியவர்கள் காயமடைந்தார்களே என மட்டுமே திரும்ப திரும்ப சொல்கிறார்கள். ரேடார் என்பது யாரையும் தாக்கும் ஆயுதமல்ல். அது ஒரு கண்காணிப்பு கருவி மட்டுமே. புலிகளின் விமானத் தாக்குதலை முறியடிக்கத் தான் பயன்படும். மற்றும் புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம். துப்பாக்கிகள் கொடுப்பது சீனா தான். தி சண்டே இந்தியன் பத்திரிக்கையில் வந்த செய்தி ஆதாரத்துடன் எழுதி இருக்கேன். இந்தியா ஆயுதம் விற்காததையும் அவர்கள் குறையாக சுட்டி காட்டி இருக்கிறார்கள். ஆகவே காங்கிரசை குறை சொல்வது வெறும் அரசியல் காழ்ப்ப்புணர்ச்சி தான்.

இந்தியா என்ன வகை ஆயுதம் வழங்கியது. எப்போது எவ்வளவு வழங்கியது என்று யாராவது சொன்னால் தெரிந்துக் கொள்கிறேன்.

தமிழர்களை அழிக்க பயன்படுத்தாமல் புலிகளை அழிக்க மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் இந்தியா ஆயுதம் கொடுப்பதையும் ஆதரிக்கிறேன். ஆனால் இதுவரை எந்த காரணத்திற்காகவும் அயுதங்கள் வழங்க வில்லை என சமீபத்தில் கப்பல் படை தளபதி அறிவித்திறுக்கிறார்.

இரா.சுகுமாரன் said...

///இன்று வரை ஒருவரும் இந்தியா இலங்கைக்கு ஆயுதம் தருவதை நிரூபிக்கவில்லை. ரேடார் இயக்கியவர்கள் காயமடைந்தார்களே என மட்டுமே திரும்ப திரும்ப சொல்கிறார்கள். ரேடார் என்பது யாரையும் தாக்கும் ஆயுதமல்ல். அது ஒரு கண்காணிப்பு கருவி மட்டுமே. புலிகளின் விமானத் தாக்குதலை முறியடிக்கத் தான் பயன்படும். மற்றும் புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம். துப்பாக்கிகள் கொடுப்பது சீனா தான். தி சண்டே இந்தியன் பத்திரிக்கையில் வந்த செய்தி ஆதாரத்துடன் எழுதி இருக்கேன். இந்தியா ஆயுதம் விற்காததையும் அவர்கள் குறையாக சுட்டி காட்டி இருக்கிறார்கள். ஆகவே காங்கிரசை குறை சொல்வது வெறும் அரசியல் காழ்ப்ப்புணர்ச்சி தான்.

இந்தியா என்ன வகை ஆயுதம் வழங்கியது. எப்போது எவ்வளவு வழங்கியது என்று யாராவது சொன்னால் தெரிந்துக் கொள்கிறேன்.

தமிழர்களை அழிக்க பயன்படுத்தாமல் புலிகளை அழிக்க மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் இந்தியா ஆயுதம் கொடுப்பதையும் ஆதரிக்கிறேன். ஆனால் இதுவரை எந்த காரணத்திற்காகவும் அயுதங்கள் வழங்க வில்லை என சமீபத்தில் கப்பல் படை தளபதி அறிவித்திறுக்கிறார். ///

நீங்கள் காங்கிரசு காரரோ ஏனெனில் காங்கிரசு காரர் போலவே பேசுகிறீர்கள்.

63 டாங்கிகள் போனதே அது எங்கே போனது என்று சொல்ல முடியுமா? பத்திரிகைகளில் வெளிவந்தது அது இலங்கைக்குத்தான் போனது என்று ஆனால் இதுவரை இந்திய அரசு மறுக்கவில்லையே பார்க்க கீழ்க்கண்ட இணைப்புகளை

http://www.alaikal.com/news/?p=11482

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1640&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

http://www.puthinam.com/full.php?2b4cORd4b3bF4AR34d23PvI2a03X9FNe4d21VtDce0dg3QvDce0dc1es2cc0zkYZ3e

ஸ்ரீ சரவணகுமார் said...

//இலங்கையில் காங்கிரஸ் அரசு தான் தமிழர்களை கொன்று கொண்டிருக்கிறது

தமிழ்ஓவியா இதை நீங்கள் மறுக்கிறீர்களா?

ஆம் இல்லை என்று மட்டும் சொல்லவும்//

மதிப்பிற்குரிய தமிழ்ஓவியா என் கேள்விக்கு தயவு செய்து பதில் சொல்லுங்களேன்

Sanjai Gandhi said...

//63 டாங்கிகள் போனதே அது எங்கே போனது என்று சொல்ல முடியுமா? பத்திரிகைகளில் வெளிவந்தது அது இலங்கைக்குத்தான் போனது என்று ஆனால் இதுவரை இந்திய அரசு மறுக்கவில்லையே//

நூற்றுக் கணக்கான டாங்கிகள் எப்போதாவது போய்க் கொண்டு தான் இருக்கிறது. இந்தியாவில் பல இடங்களில் ராணுவம் நிலை கொண்டுள்ளது. இதில் எந்த 63 டாங்கிகளை சொல்கிறீர்கள்.
ரானுவ அமைச்சர் அந்தோணி, வெளியுறவு அமைச்சர் ப்ரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், கப்பல்படைத் தளபதி என தேவையான அனைவருமே எந்த ஆயுதமும் தரவில்லை என மறுத்திருக்கிறார்கள். இந்திய அரசாங்கம் மறுக்கவில்லை என்பது பொய்.