Search This Blog

24.4.09

ஈழத்தில் முழுப் போர் நிறுத்தம் கோரி கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை


கலைஞர் - ஆட்சியை இழந்துவிடக் கூடாது
என்று குறுக்கே நின்று தடுத்தவர்கள் நாங்கள்

சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் உரைமுதல்வர் கலைஞர் அவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆட்சியை இழக்கக் கூடாது என்று குறுக்கே நின்று அணை போட்டு தடுத்திருக்கின்றவர்கள் நாங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

ஈழத்தில் முழுப் போர் நிறுத்தம் கோரி சென்னை பெரியார் திடலில் 21.4.2009 அன்று நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

சரியான நேரத்தில் சரியானவர்களைக் கொண்டு, சரியான கருத் துகளைச் சரியான மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக சரித்திரத்தில் இடம் பெறக்கூடிய அளவிற்கு இன்றைக்குக் கூட்டப்பட்டுள்ள இந்தக் கூட்டத்திலே ஆயுதம் ஏந்தாத புலி என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட எனது அன்புச் சகோதரர் (கைதட்டல்) பாராட்டுதலுக்கும், பெருமிதத்திற்குமுரியவர் - என்றென் றும் எங்களிலே ஒருவர், எங்கள் ரத்தத்தின் ரத்தம் - குருதியின் குருதி உணர்வின் உணர்வு என்ற நிலையிலே இருக்கக் கூடிய தொல்.திருமா அவர்களே! (கைதட்டல்) அவர்களை நாங்கள் பார்க்கிற பொழுது, திராவிடர் கழகம் வேறு, விடுதலைச் சிறுத்தைகள் வேறு என்று பிரித்துப் பார்ப்பதே கிடையாது (கைதட்டல்).

கழகத்தின் கொள்கையைச் சொல்லுவதற்கு பல அரசியல் அணிகள் உருவாகியிருக்கின்றன. அந்த அரசியல் அணியிலே திராவிட முன்னேற்றக் கழகம் முதல் என்று சொன்னால் அதற்கு இணைப்பாக இருக்கக் கூடிய அந்த நீண்ட ரயில் பயணத்திலே ஒரு பெட்டியாக இருக்கக்கூடிய, கவிழாத, பெட்டியாக இருக்கக் கூடியவர் தொல்.திருமாவளவன் அவர்கள். ரயில் துறையிலே சில நேரங்களில் தமிழ்நாட்டில் உட்பட விபத்துக்கள் ஏற்பட்டு விடுகின்றன (கைதட் டல்).

அப்படிப்பட்ட சூழழிலே என்றைக்கும் இருக் கக்கூடிய எங்களுடைய சகோதரர் தொல்.திருமா அவர்கள் ஓர் அற்புத மான உரையாற்றியிருக் கின்றார்கள்.

இந்த உரையால் அவர்கள் தீட்டிய ஓவியத்தை நான் கலைக்க விரும்பவில்லை (கைதட்டல்). எனவே நான் நீண்ட நேரம் பேசுவேன் என்று நீங்கள் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

அவருக்கு முன்னாலே என்னுடைய அருமைச் சகோதரர் எங்கள் குடும்பத்துத் தங்கம், சுயமரியாதை சொக்கத் தங்கம் அன்பிற்குரிய சுப.வீரபாண்டியன் அவர்கள் திராவிட இயக்க தமிழர் பேரவையை உருவாக்கியது மட்டுமல்ல, மனசாட்சியை எந்தக் காலத்திலும் மாற்றாருக்கு அடகு வைக்கத் தெரியாத ஒரு மகத்தான இலட்சிய வீரர் அருமைப் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்!

இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கின்ற கழகத்தினுடைய ஆற்றல் மிகு பொருளாளர் வழக்குரைஞர் சாமிதுரை அவர்களே!

எங்களை வரவேற்று அறிமுக உரையாற்றிய கழகத்தின் பொதுச் செயலாளர் மானமிகு கலி. பூங்குன்றன் அவர்களே!

எண்ணத்தால் நாம் அனைவரும் ஒருவரே என்று இணைந்திருக்கக் கூடிய தாய்மார்களே! பெரியோர்களே! நண்பர்களே!

இந்த நேரத்திலே நமக்கு உள்ளத்தில் இரத் தக் கண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் நமக்குள் வடிகின்ற இரத்தக் கண்ணீரை உள்ளுக்குள்ளே நாம் புதைத்துக் கொள்ளலாமே தவிர, தமிழன் கண்களிலே இருந்து இனிமேல் எப்படிப் பட்ட செய்தி வந்தாலும் கண்ணீர் வர வேண்டிய அவசியமில்லை. நெருப்புப் பொரிகள் தான் பறக்க வேண்டும் (பலத்த கைதட்டல்) என்பதை அறிவிக்கின்ற கூட்டம் இந்தக் கூட்டம்.

எம் தமிழ் இனத்தைப் பற்றி இன்றைக்கு மாலையிலே செய்தி வந்திருக்கிறது. இன்று காலையிலே இருந்து எங்களுடைய உள்ளம் பதறிப் போயிருக்கிறது. எங்கள் குருதியின் ஓட்டம் இங்கேயிருக்கின்ற வெப்பத்தைவிட கடும் வெப்பத்தோடு இருக்கக்கூடியதாக இருக்கின்றது. எரியும் நெருப்பிலே பெட்ரோலை ஊற்று வதைப் போல துன்பச் செய்திகள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன. எம் தமிழ் இனம் அப்பாவி மக்கள் தமிழர்களாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக அவர்களுக்கு வாழ உரிமை இல்லையா?
பக்குவப்படுத்தப்பட்ட சொந்த மண்ணில் அவர்கள் வாழ உரிமை இல்லையா? தமிழ் இனம் நாதியற்றுப் போன ஓர் இனமாக ஆகிவிட்டதா? என்பதை எல்லாம் நினைத்துக் குமுறிக் குமுறி, குலுங்கிக் குலுங்கி அழுவதைத் தடுத்து நிறுத்திக் கொண்டு, நாம் அழக் கூடாது. நாம் அழுபவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய இடத்திலே இருக்கின்றோம். அழுகையைத் துடைக்க வேண்டிய இடத்திலே இருக்கின் றோம். அழுகை வராமல் தடுக்க வேண்டிய இடத்திலே இருக்கின்றோம் என்ற அந்த உணர்வோடு பார்க்கின்ற நேரத்திலே வந்திருக்கின்ற செய்திகளைப் பாருங்கள்.

அருமைத் தோழர்களே! தோழியர்களே! பெண்களும், குழந்தைகளும், மூச்சுத் திணறிப் பலியாகிக் கொண்டிருக் கின்றார்கள். பலர் பதுங்கு குழியிலேயே சமாதி ஆனார்கள்.

ஆங்காங்கே பிணங்கள் சிதறிக் கிடக்கும் அவலம். கொழும்பு, ஏப். 21. வெளிவந்த பத்திரிகையின் செய்தி - சிங்கள இராணுவத் தாக்குதலால் பலியான தமிழர்களின் எண்ணிக்கை 1500-அய் எட்டியது. 3000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலின் போது தடை செய்யப்பட்ட விஷ வாயு குண்டுகளையும் இராணுவம் பயன்படுத்தியுள்ளது.

நாப்பாம், பாஸ்பரஸ் விஷ வாயுக் குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. ஹிரோஷிமா, நாகசாகி பகுதியிலே வீசப்பட்ட அணுகுண்டுகளை விட ஆயிரமாயிரம் சக்தி வாய்ந்த நெருப்புக் குண் டுகள் - விஷ வாயுக் குண் டுகள்.

அப்படிப்பட்ட அந்த விஷ வாயுக் குண்டுகளை சிங்கள இராணுவம் தமிழர்கள் மீது வீசியிருக்கிறது. சீனத்திலிருந்து பெற்று இந்தியாவிலே இருந்து பெற்று, பாகிஸ்தானிலே இருந்து பெற்று ஏன், இங்கே யிருந்தும் பெற்று தமிழர்கள் மீது அந்த குண்டுகளை வீசியிருக்கிறது.

சிங்கள ராஜபக்சே கெடு வைக்கிறான். கெடு வைத்து உங்களை அழிக்கிறோம் என்று சொல்லுகின்றான்.
அது மட்டுமல்ல; இங்கேயிருந்து அழுத்தம் செலுத்துகிறபொழுது, நம்முடைய முதலமைச்சர் நம்முடைய மத்திய அரசு இவைகள் எல்லாம் சொன்னால் அதை அவர்கள் ஏற்கிறார்களா? என்ன செய்கிறார்கள்?
போர்ப் பகுதியிலி ருந்து தமிழர்களை வெளியேற்றுகிறோம். தமிழர்களைப் பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டு போகிறோம் என்று சொல்லி அங்கே யிருக்கின்ற விடுதலை புலிகள் ஏதோ தமிழர்களைத் தடுத்து நிறுத்துவதைப் போல ஒரு பாசாங்கு தனத்தை உலக மக்கள் மத்தியிலே உலக நாடுகள் மத்தியிலே கண் ணில் மிளகாய்ப் பொடி யைத் தூவிவிட்டு அவர் களை தனியே அழைத்துப் போகிறோம் என்று ஒரு சாக்கு சொல்லி யூதர்களை நடத்தியதை விட, நாஜிக்கள் நடத்தியதைவிட கொடுமையாகத் தமிழர்களை நடத்துகின்ற அவலம் அங்கே இருக்கிறது.

மனிதாபிமானமிக்க உலக நாடுகளில் இருக்கின்ற மனிதர்களே! அவர்களைப் பார்த்து நாம் கேட்கிறோம், எங்காவது வேடந்தாங்கலுக்கு வந்த பறவைகளை வேட்டையாடிய வரலாறு உண்டா?
வேட்டையாடக் கூடியவர்கள் கூட காட்டுக்குப் போவார்கள். வேடந்தாங்கலுக்கு வர மாட்டார்கள்.
ஆனால், இங்கே நடக்கின்ற கொடுமை எவ்வளவு பெரிய அநீதியானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இதற்காக ஆரம்பத்திலிருந்து என்றைக்கும் கருமத்திற்குரியவர்கள், கடைசி வரையிலே இருப்பார்கள் என்பதற் கொப்ப இந்த இயக்கங்கள் இருக்கின்றன.

தேர்தல் வரலாம். போகலாம். அது இடை யிலே நடக்கக்கூடிய ஒரு சம்பவம். ஆனால் இனப் போராட்டம் என்பதிருக்கிறதே, இது இராமாயண காலந்தொட்டு விபீஷணர்கள் வளர்ந்த காலத்திலேயிருந்து கலைஞர் காலம் வரையிலே, இன்று வரையிலே தொடரக் கூடியது.
நாளைக்கும் தொடர லாம். சரித்திரத்தைப் புரட்டிப் பார்க்க வேண்டும். நமது முதல்வர் கலைஞர் ஒரு தொலைக் காட்சிக்குப் பேட்டி கொடுக்கின்றார். சகோதரர் சுப.வீ. அவர்கள் சொன்னதைப்போல, பிரபாகரன் என்னுடைய நண்பர் என்று முதல்வர் அவர்கள் சொன்னால் அது என்ன தேசிய குற்றமா?
தமிழனை - தன்னுடைய சகோதரனை பின் எப்படிச் சொல்வார் (கைதட்டல்). வேண்டுமானால் ஜெயலலிதா வாயிலே அது வராது. நாம் அதைப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள்.
ஆனால் கலைஞர் அவர்களுடைய வாயிலே அதைத் தவிர வேறு என்ன வரும்? அதற்காக கலைஞர் அவர்கள் ஆட்சியை இரண்டு முறை இழந்ததுண்டு. நாளைக்கும் இழக்கத் தயாராக இருப்பவர்தான் நம்முடைய கலைஞர்.

ஆனால் கலைஞர் அவர்கள் ஆட்சியை இழப்பதால் நமக்குப் பயன் இல்லை. இந்த சமுதாயத்திற்குப் பயனில்லை என்று சொல்லி எங்களைப் போன்றவர்கள் திட்டவட்டமாக குறுக்கே அணை போட்டு நிறுத் தியிருக்கின்றோம் என்பதை பகிரங்கமாக இந்த நேரத்திலே நான் சொல்லிக் கொள்கின்றேன் (கைதட்டல்).

ஏனென்றால், பெரியார் தொண்டர்களுக்கு அந்தக் கடமை உண்டு. ஓர் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும். சில பல நிலைமைகளுக்காகவே.

நம்முடைய சகோதரர் திருமாவளவன் அவர்கள் தெளிவாகச் சொல்லி விட்டார். என்ன நடக்கும்? யாருக்கு என்ன திட்டம், உள்நோக்கமென்ன?

நாங்கள் இங்கே பேசுகிறோமே, எங்களுடைய மனதில் ஏதாவது சிறு தடங்கல்கள் இருக்கிறதா? காரணம் நாங்கள் மனசாட்சியை விற்று விட்டு இந்த மேடைக்கு வந்தவர்கள் அல்லர். (கைதட்டல்).
அல்லது சில இடம் தேடிகள் அல்ல. அதற்காக காத்திருக்கக் கூடியவர்கள் அல்லர். மூன்று எழுத்துக்காக நீங்கள் இப்படி மாறலாமா? என்று சகோதரர் தொல். திருமாவளவன் அவர்கள் சொன்னபொழுது உங்களிலே சிலர் சிரித்தீர்கள்.

நான் கொஞ்சநேரம் யோசித்தேன். அவர் எதைச் சொல்லுகிறார் என்று. உடனே மானம் என்று சிலர் குரல் கொடுத்தார்கள் (கைதட்டல்) அதுவும் சரிதான் (கை தட்டல்).

அதுமட்டுமா மூன்று எழுத்து. பணம் என்பதும் மூன்றெழுத்து தான். (பலத்த கைதட் டல்) பதவி என்பதும் மூன்றெழுத்துதான். கூட்டு என்பதும் மூன்றெழுத்துதான்.


எனவே மக்கள் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். ஆனால் ஒன்றை நீங்கள் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிரபாகரன் தீவிரவாதியா? வேண்டுமென்றே சிக்கலான கேள்வியைக் கேட்டு, அவருக்கு ஒரு சங்கடத்தை தேர்தல் நேரத்திலே உருவாக்கி, தேர்தல் உறவுகளை சிதைக்க வேண்டும் என்பது கேள்வி கேட்ட வருடைய நோக்கம்.

அதற்கு கலைஞர் அவர்கள் மிகத் தெளிவாகச் சொன்னார். இன்றைக்கு பிரபாகரனை மற்றவர்கள் தீவிரவாதி என்று அழைக்கலாம். ஆனால் அவர்பிறக்கும்பொழுதே தீவிரவாதியாகப் பிறக்கவில்லை.
அவர் தீவிரவாதி என்று மற்றவர்கள் சொல்லும் அளவுக்கு தள்ளப்பட்டார். அவருடைய இயக்கம் எப்படிப் பட்டது? என்ற வரலாற்றை எடுத்துச் சொன்னார்கள்.

நீண்ட விளக்கமாக அவர்கள் சொல்ல வில்லை. சுருக்கமாகச் சொன்னார்கள். நாங்கள் சொல்லுகிறோம், கலைஞர் அவர்கள் பொறுப்பிலே இருக்கக் கூடிய வர்கள்.

ஆகவே எதையும் அளந்து பேச வேண்டிய நிர்ப்பந்தத்திலே இருக்கக் கூடியவர்கள். ஒரு எல்லையை வைத்துக் கொண்டிருக்கின்றவர்கள்.

எங்களைப் போன்று எதுவும் இல்லாமல் கழற்றுகின்றோமே; நாங்கள் சொல்லுகின்றோம் சாதாரண எளிய சாமானி யர்கள் சொல்லுகிறோம்.

பிரபாகரன் தீவிரவாதியாக இருந்தால் உனக்கென்ன நட்டம்? (பலத்த கைதட்டல்). தீவிரவாதிதான். அவனுடைய இனத்தை விடுதலை செய்வதற்காக அவன் ஏற்பது தீவிரவாதம் என் றால், அவன் இருக்கும் திசை நோக்கி நாங்கள் தண்டனிட்டு வணங்கத் தயார் தயார்! என்பதை அறிவிக்கின்றோம் (பலத்த கைதட்டல்).


-------------தொடரும் .........."விடுதலை"24-4-2009

13 comments:

-/பெயரிலி. said...

தமிழ் ஓவியா,
ஈழத்தமிழரைப் பார்த்தால், அத்துணை முட்டாள்கள் என்றா உங்களுக்கும் உங்கள் தலைவர் வீரமணிக்கும் அவரின் இன்றையத்தலைவர் கருணாநிதிக்கும் அவரின் அம்மா சோனியாவுக்கும் தோன்றுகிறது?

வீரமணி ஆற்றிய உரையோ ஆறிய உறையோ ஒரு மண்ணுக்கும் பயனில்லை. சோனியாவைக் கேள்வி கேட்கமுடியாமல், அவரின் முந்தானைக்குள் கருணாநிதியும் அவரின் கருணாநிதியின் கச்சைக்குள்ளே வீரமணியும் பதுங்கிக்கொண்டு, போர்நிறுத்தம் பற்றிப் பேசும் பயந்தாங்கொள்ளித்தனத்துக்கு, நாலு வயதுக்குழந்தை நடுக்கடலிலே ஓட்டைப்படகிலே நின்று ஸ்ரீலங்காகடற்படையிடம் சாப்பாட்டுக்குக் காட்டும் சைகை பெரிதாகத் தெரிகிறது.

பெரியார் இன்றைக்கு வந்தால், முதலிலே துப்பாக்கி எடுத்துச் சுடக்கற்றுக்கொண்டு, வீரமணி என்ற வாய்வீச்சு வெண்ணெய்வெட்டிச்சிப்பாயைத்தான் சுடுவார்.

இப்படி கிளிப்பிள்ளையாகப் பேசுவதெல்லாம் சுயமரியாதை, பகுத்தறிவு என்று எண்ணிக்கொண்டால், அஃது உங்களின் சுயமரியாதையும் பகுத்தறிவினையும் காட்டுவதாகவே தெரிகிறது.

ஈழத்தமிழர்கள் அழிவினை இந்து ராம், சோ ராமசாமி, சுப்பிரமணியசுவாமி, வீரமணியின் முன்னாள் பாஸ் ஜெஜெ இணையத்திலே உலாவும் டிவிற்றர் பார்ப்பனிய ஐடி இளைஞர்கள் இரசிப்பதற்கும் வீரமணி+கருணாநிதியின் அளாப்பித்தன பல்லாங்குழி ஆட்டத்துக்கும் வித்தியாசமே தெரியவில்லை.

தூ! இதெல்ல்லாம் சுயமரியாதை! இப்படியாகப் பகுத்தறிவற்ற அவமரியாதைக்கு ஒரு சின்ன உப்புச்சிரட்டையிலே மூத்திரம் பெய்துவிட்டு, மூக்கை நுழைத்து நீரேறி மூச்சுவிடாமற் சாகலாம். வெட்கக்கேடு!

மு. மயூரன் said...

தமிழ் ஓவியா,

தமிழ்மணி என்றொரு பதிவர் இருக்கிறார். தனியே மனித விரோதக்கருத்துக்களை மட்டும் காவித்திரியும் காவடியான அவரை எதிர்த்தோ விமர்சித்தோ ஒரு கருத்தும் சொல்ல தோன்றியதில்லை. தேவையுமில்லை. எம் கருத்துக்களைப்பெற அவருக்கு அருகதையுமில்லை.

இங்கே இரண்டாம் முறையாக ஒரே விஷயம் குறித்து நான் கருத்துச்சொல்ல வந்ததற்கு பெரியார் என்கிற மனசுக்குள் நிறைந்த மரியாதையான பிம்பம்தான் காரணம்.

பல பதிவுகளில் நீங்கள் அரசியல் ரீதியான முற்போக்கான நிலைகளை எடுக்கிறீர்கள். பாராட்டுகிறோம்.

ஈழப்பிரச்சினையில் கூட ஈழ மக்கள் சார்ந்து நிற்க எத்தனிக்கிறீர்கள். வரவேற்கிறோம்.

ஆனால் தி. க வின் தூரநோக்கற்ற சந்தர்ப்பவாத, சரணாகதி அரசியலின், வங்குறோத்து அரசியலின் விளைவுகளைப் பெரியாரின் பெயரால் தூக்க்த்திரியவேண்டிய நிலை உங்களுக்கு ஏற்பட்டிருப்பதுகண்டு வருந்துகிறேன்.

தி. க அல்ல பெரியாரியம். பெரியாரியத்துக்காக நீங்கள் தி. க வை காப்பாற்ற வேண்டியதில்லை. உண்மையில் பெரியார் விதைத்த சுயமரியாதையின், பகுத்தறிவின் சிந்தனைக்கூர்மையை, அரசியல் கொதிப்பை நாம் கொண்டிருப்போமானால், பெரியாரின் பெயரால் நாம் தி.க வை நிராகரிக்க வேண்டித்தான் ஏற்படும்.

இந்தப்பெரிய வீரமணியின் உரை ஏதோ ஈழத்தமிழர்களுக்குச் சார்பானது போன்று மேலோட்டமாகப் பார்க்கும்போது தோன்றுகிறது.

ஆனால் அதன் உள்ளர்த்தத்தில் இது ஈழத்தமிழருக்குத் துரோகமிழைக்கும், ஈழத்தமிழரின் எதிரிகளுக்கு காவடி தூக்கும் உரை என்பது உங்களுக்குப் புரியவில்லையா?

//இங்கேயிருந்து அழுத்தம் செலுத்துகிறபொழுது, நம்முடைய முதலமைச்சர் நம்முடைய மத்திய அரசு இவைகள் எல்லாம் சொன்னால் அதை அவர்கள் ஏற்கிறார்களா? என்ன செய்கிறார்கள்?//

உங்கள் முதலமைச்சரும் அவர் நக்கிப்பிழைக்கும் மத்திய அரசும் சேர்ந்துதானே போரையே நடத்துகிறார்கள்? வெட்ட வெளிச்சமாக இந்திய அரசுதான் ஆயுதம் தொடக்கம் சிப்பாய்கள் வரை வழங்கி, திட்டங்கள் போட்டுக்கொடுத்து போரை நடத்துவது தெரியவந்த பிறகும் பாறாங்கல்லைப் பீய்க்குள் மறைக்கப்பார்க்கிறீர்களா?

உங்கள் முதலமைச்சரும் இந்திய அரசும் யாரிடம் கேட்கிறது போரை நிறுத்தச்சொல்லி? கேக்கிறவனெல்லாம் கேனையனா தெரியுதா உங்களுக்கு? ராஜபக்ச மிக வெளிப்படையாக கருணாநிதி எங்கள் நண்பர் என்று அறிவிக்கிறார். இங்கு எல்லா ஊடகங்களிலும் செய்தி வருகிறது..

பாராளுமன்றத்தில் அமைச்சரொருவர், இந்தியாதான் போரை நடத்துகிறதென்று இங்கே ஒப்புக்கொள்கிறார். எதை எம்மிடம் மறைக்கப்பார்க்கிறீர்கள்?

//பிரபாகரன் என்னுடைய நண்பர் என்று முதல்வர் அவர்கள் சொன்னால் அது என்ன தேசிய குற்றமா?
தமிழனை - தன்னுடைய சகோதரனை பின் எப்படிச் சொல்வார் (கைதட்டல்//

அப்ப எதுக்கு சீமானைத்தூக்கி உள்ளே போட்டார்?

தேர்தல் காலத்தில் எதற்கு எச்சில் விடுவான், உண்மையான அக்கறை இருந்தால் மொத்த தி மு க வே ஆளும் அரசாங்கத்திலிருந்து அப்போதே பதவி விலகி அழுத்தம் கொடுத்து இந்திய அரசுக்கு போரை நிறுத்துவதற்கான அழுத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டாமா? எத்தனை உயிர்கள் தப்பியிருக்கும்?

தமிழகத்தில் மக்கள் எழுச்சி இந்திய ஆளும் வர்க்கத்தின் குட்டை உடைத்துவிடக்கூடாதென்பதற்காகவும், ஆளும் வர்க்கத்தின் கைகளை மீறிப்போய்விடக்கூடாதென்பதற்காகவும் தான் போட்ட எலும்புக்கு வாலாட்டிக்கொண்டு பணிபுரிந்துகிடக்கிறார்கள் கலைஞரும் ஜெயலலிதாவும், வைகோவும் இன்னும் பலரும்.

மக்களை ஒடுக்கும் தேசமாக இந்தியா உருவெடுப்பதுகண்டு, திராவிடச் சுயமரியாதை என்ற வலுவான கோசத்தைக்கட்டமைத்து அதனூடாக இந்திய விடுதலையை எதிர்த்தவர் பெரியார், இந்திய ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியவர் பெரியார். அந்தப்பெரியவரின் பெயரைச்சொல்லிக்கொண்டு இப்படி சுயமரியாதை கெட்டு நக்கிப்பிழைப்பதும் ஒரு பிழைப்பா?

இந்தப் போரை நடத்துவது இந்திய ஆளும் வர்க்கம். இந்தப்போரைத் தொடங்கியது இந்திய ஆளும் வர்க்கம். ஈழத்தமிழர்களை தன் அரசியல் பகடைக்காய்களாக்கி இன்று கொன்றுகுவிப்பதும் இந்திய ஆளும் வர்க்கம். ஈழத்தமிழரின் முதல் எதிரியே இந்திய ஆளும் வர்க்கம் தான். இந்த ஆளும் வர்க்கம் தான் ஓட்டுப்போறுக்கிக்கொண்டு தேர்தல்களின் போது நாக்கில் நீர்வடிய கால்களை நக்குகிறது. அ. தி. மு. க தொண்டன் தொடக்கம் வைக்கோ முதல் கருணாநிதி ஊடாக சோனியா வரை இந்த ஆளும் வர்க்கத்தின் பகுதிகள் தான். இவர்களை எல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தமிழக மக்கள் சரியான அரசியல் பாடத்தினை இந்திய ஆளும் வர்க்கத்துக்கு படிப்பிக்க வேண்டும். ஒன்றில் மருதையன் சொன்னதுபோல ஒட்டுமொத்தமாக இந்தத்தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். அல்லது புதிய மூன்றாம் அணியொன்றை வெற்றி பெறச்செய்யவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சோனியாவையும் கலைஞரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். செத்துப்போன லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைக்காமல் இருக்க வேண்டுமென்றால் இதைத்தான் செய்ய வேண்டும்

அசுரன் திராவிடன் said...

பெயரில்லாத இந்த அநாதை நாய் எங்கேயோ சரியாக அடி வாங்கிகொண்டு ...இங்கே வந்து குரைத்து விட்டு சென்றிருக்கிறது ...நீ முதலில் ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் கோதபாய ராஜபக்ச மற்றும் சந்திரிக்கா மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரின் மூத்திரத்தை குடித்து விட்டு தமிழ்நாட்டுக்கு வாருங்கள் .....

-/பெயரிலி. said...

இளஞ்சேரன்
கொஞ்சம் தமிழை வாசித்துப்பழகுமையா

Web-Hosting said...

காங்கிரசை ஒழிக்க வேண்டும் சரி ஒழித்து விட்டு மதவாத BJP யிடம் ஆட்சியை ஒப்படைக்கவேண்டும் என்கிற தோரணையில் பெரும்பாலானவர்களின் கருத்துகள் உள்ளன.BJP ஆட்சியில் இலங்கைக்கு ரூபாய் 300 கோடி மற்றும் பிற ஆயுத தளவாடங்களும் வழங்கப்பட்டதே ...இந்திய ஆயுதம் அழிக்க விட்டால் ராஜபக்ச போரை நிறுத்தி விடுவாரா .....மாறாக சீனாவும் மற்றும் பாகிஸ்தானும் ராஜபக்சேவுக்கு ஆயுதம் வழங்கி வருகின்றனர் ....இந்தியா அனைத்து உதவிகளையும் நிறுத்தினாலும் அங்கு எந்த மாற்றமும் வரப்போவது இல்லை ...ராஜபக்சேவை ஒழித்தால் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கு நிம்மதி ஏற்படுத்த முடியும் ... அதை விடுத்தது இந்தியாவையும் கருணாநிதியையும் மற்றும் கூட்டணி தலைவர்களயும் இழிவு படுதுவதுவதால் தமிழ் ஈழமும் தமிழர்கள் கொல்லபடுவதும் நின்று விடாது .....வேண்டுமென்றால் அவ்வாறு குறை கூறுவது திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கொஞ்ச நஞ்ச விடுதலை புலிகளின் ஆதரவாளர்களையும் விடுதலை புலிகளின் எதிர்ப்பாளர்களாக மாற்றும் ...

ஈழபிரச்சனை இந்தியா தேர்தலோடு முடிந்து விடாது ....

ஆட்சியாளர்களை முடிந்த வரையில் நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் ....அதை விடுத்து அவர்களை எதிர்பதால் தனி ஈழம் அமைந்து விடாது ...வேண்டுமால் அவ்வாறு எதிர்ப்பவர்கள் தங்களை ஈழ தமிழர்களின் பிரதிநிதிகள் போல காட்டி கொள்ளலாம் மற்றும் ஈழத்தமிழர்களை ஏமாற்றலாம் ஆனால் தமிழ்நாட்டு வாக்களர்களை ஏமாற்ற முடியாது ......

மு. மயூரன் said...

//.BJP ஆட்சியில் இலங்கைக்கு ரூபாய் 300 கோடி மற்றும் பிற ஆயுத தளவாடங்களும் வழங்கப்பட்டதே ...//

ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன, இந்திய அதிகார வர்க்கத்தின் நலன்களுக்காகத்தான் இந்திய அரசும் அதன் அரசாங்கங்களும் ஆடும். ஈழத்தமிழர் நிலை நின்று பார்த்தால் இரண்டு அரசாங்கங்களுமே இந்தியக்கொலைகாரர்களின் சேவகர்கள்தான்.

இந்தியாவுக்குள்ளே என்று பார்த்தால், பாரதீய ஜனதா குஜராத்தில் கொல்லும் இந்திரா கங்கிரஸ் சீக்கியர்களைக் கொல்லும். இருவரும் காஷ்மீரிகளைக் கொல்வார்கள்.

//இந்திய ஆயுதம் அழிக்க விட்டால் ராஜபக்ச போரை நிறுத்தி விடுவாரா .....மாறாக சீனாவும் மற்றும் பாகிஸ்தானும் ராஜபக்சேவுக்கு ஆயுதம் வழங்கி வருகின்றனர்//

சீனாவும் பாக்கிஸ்தானும் ஒரு நாட்டில் ஓர் இனத்தைக் கொல்கின்றன. அட நான் என்ன பார்த்துக்கொண்டிருப்பது என்று இந்தியா மொத்தக் குத்தகை எடுத்துக் கொல்கிறதா?

//இந்தியா அனைத்து உதவிகளையும் நிறுத்தினாலும் அங்கு எந்த மாற்றமும் வரப்போவது இல்லை//

ஆனால் இந்தியா உறுதியாக ஒடுக்கப்படும் மக்கள் சார்பாக நிற்குமானால் மாற்றம் வரும். இந்தியா அழுத்தம் கொடுத்தால் மாற்றம் வரும். (ஆயுதமும் கொடுத்து செல்லமாய் அழுத்தமும் கொடுப்பது இங்கே சேர்த்தியில்லை)

//ராஜபக்சேவை ஒழித்தால் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கு நிம்மதி ஏற்படுத்த முடியும் //

யார் அவன் ராஜபக்சே?

பல்லாண்டுகால பிராந்திய, உலக அரசியல் காய்நகர்த்தல்களில் வந்த விளைபொருள். இந்திய அதிகார வர்க்கத்தின் துணை மட்டும் இல்லாமற்போனால் இவன் இலங்கையில் தங்க முடியுமா?
இலங்கையில் ஆட்சிக்கு வந்த எல்லா கட்சிகளும், எல்லா தலைவர்களும் தான் கொன்றார்கள். இந்தியா ஒவ்வொரு காலப்பகுதியிலும் வீட்டை எரித்து பின் கொள்ளி புடுங்கியது.

//அதை விடுத்தது இந்தியாவையும் கருணாநிதியையும் மற்றும் கூட்டணி தலைவர்களயும் இழிவு படுதுவதுவதால் //

இந்திய அதிகார வர்க்கம் என்று தெளிவாகவே நாம் காண்கிறோம். இந்திய மக்கள் எல்லா மக்களையும் போன்று எப்போதும் எம் நேசத்துக்குரியவர்களே.

கருணாநிதி காலமறிந்து, தன் கடைமையறிந்து முறையான அழுத்தங்களைப் பயன்படுத்தாமல் தன் இருப்புக்காக ஏதோ ஒரு வகையில் இனவழிப்புக்கு துணைபோன குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்க வேண்டியவர். பதவியை நக்குவதே அவர் உயிர் நிலை. அதற்கு ஆப்பு வைத்தால் அவருக்கு அதுவே மரண தண்டனை.

//ஆட்சியாளர்களை முடிந்த வரையில் நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் ....//

கொலைகாரனுக்கு நோகாமல் பேசிக்கொண்டு கொலையை தடுக்கச்சொகிறீர்களா? பாக்யராஜ் பேசியே வில்லன்களை ஓடவைப்பாரே அப்படியா?

இந்திய அதிகார வர்க்கத்தின், அதற்கு அடிவருடும் ஆட்சிகளின் முகத்திரையை மக்கள் முன் கிழிக்க வேண்டாமா?

ஈழமக்களுக்கு மட்டுமா இந்த வர்க்கம் எதிரி? மொத்த இந்திய மக்களுக்குமல்லவா? நேபாளத்து மக்களுக்கும் சேர்த்தல்லவா?

இந்த அடிவருடிக்கும்பலை அடியோடு ஒழிக்கும்படி மக்களை வழிநடத்த வேண்டாமா?

எவ்வளவு காலத்துக்கு அதிகாரத்துக்கு கால்பிடித்து, பிச்சைகளைப்பெற்று வாழப்போகிறோம்?

அதிகாரத்துக்கு கால்பிடிக்க வேண்டும் என்ற கருத்தை நான் மறுத்துச்சொல்லும் போது இங்கே பெரியார் பெரிய படம் ஒன்றில் பரிதாபமாய் அழுகிறார்.

மக்களுக்காக தேய்ந்து, செத்துப்போன அந்த பெரியாருக்காகவாவது அதிகாரத்தை எதிர்த்து நில்லுங்கள் ஐயா...

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி இளஞ்சேரன்.

நம்பி said...

மு.மயூரன் said

//ஈழப்பிரச்சினையில் கூட ஈழ மக்கள் சார்ந்து நிற்க எத்தனிக்கிறீர்கள். வரவேற்கிறோம்.//

ஈழப்பிரச்சினையைப் பற்றி கையிலெடுக்கும் பொழுது குழம்புகிறோம். (தமிழக மக்கள்)

யார் ஈழமக்கள்...?

இலங்கையில் ஒரு கட்சி சார்ந்தவர்களா?

ஒரு இயக்கம் சார்ந்தவர்களா?

அனைத்து இயக்கம் சார்ந்தவர்களா? இல்லை இலங்கை அரசில் பணிபுரியும் தமிழர்களா?

இலங்கை அரசு மற்றும் இலங்கை இராணுவத்தில் பணி புரியும் தமிழர்கள் அனைவருமா?


அல்லது இரண்டு இனமக்களும் ஒருவரையொருவர் சகோதரத்துடன் கல்வி, திருமணம், காதல் திருமணம் என்று ஒன்றாக ஒற்றுமையுடன் இருப்பவர்களா?

சிங்களவர், தமிழர் காதல் திருமணம் எல்லாம் நடைபெறுகிறதா? இல்லை அதற்கும் தடை உள்ளதா...? அந்த தடை எந்த பக்கத்திலிருந்து வருகிறது.

சிங்களவர் தமிழர் இருவரும் ஒன்றாக பழகுவதில்லையா..? நட்பு பாராட்டுவதில்லையா...? அந்த மக்களில் ஒருவர் கூட ஈழத்துக்காக ஆதரவு தெரிவிக்கவில்லையா...?

அப்படியிருந்தும் எப்படி? இலங்கை தமிழ் மக்கள் அதிபர் தேர்தலுக்கு வாக்களிக்கிறார்கள்?

இனவேற்றுமை பாராமல் ஒரே ஒத்தக்கருத்துடன் இருவருக்கும் சமவுரிமை வேண்டும் என்ற கருத்துடையவர்களா? அதை கோரிக்கையாக வைத்து அரசிடம் போராடுபவர்களா?

சமயங்கடந்து சாதி கடந்து இருப்பவர்கள் அனைவருமா? அல்லது குறிப்பிட்ட சமயத்தவர் மட்டுமா? குறிப்பிட்ட சாதி மக்கள் மட்டுமா? யார் ஈழ மக்கள்?

இந்த குரலுக்கு சொந்தமான இலங்கை கட்சி எது? அதன் மக்கள் செல்வாக்கு என்ன? ஒரு கட்சியா அல்லது பல கட்சிகள் கொண்டதா?

இல்லை இது பொதுவான குரல் என்றால், ஒட்டுமொத்த இலங்கை தமிழ் மக்களின் குரலா?

அப்படியென்றால் அங்கேயே இதற்கான அதிகாரங்கள் இருக்கிறதே? அந்த ஈழம ஆட்சியில் பங்கேற்றுக்கொண்டு இருக்கிறதே...?

இல்லை இது தனிப்பட்ட குரல்...அப்படியென்றால்

மற்றக்குரல்களுடன் இந்தக் குரல் எப்படி வேறுபடுகிறது?...இங்கிருப்பவர்கள் எப்படி வேறுபடுத்திக்கொள்ளவேண்டும்? இதற்கான ஆதரவு சதவீதம் எவ்வளவு?

ஈழம் 1 ஈழம் 2 ஈழம் 3 ஈழம் 4..... என்று பிரிக்கப்பட்டுள்ளதா...?

????????????????????????????????

நம்பி said...

மு.மயூரன் said...

//ஆனால் தி. க வின் தூரநோக்கற்ற சந்தர்ப்பவாத, சரணாகதி அரசியலின், வங்குறோத்து அரசியலின் விளைவுகளைப் பெரியாரின் பெயரால் தூக்க்த்திரியவேண்டிய நிலை உங்களுக்கு ஏற்பட்டிருப்பதுகண்டு வருந்துகிறேன்.//

எது? சந்தர்ப்ப வாதம்? எல்லாவற்றையும் மறந்துவிட்டது போல் அல்லது மறைத்து விட்டது போல் எழுதுவது சந்தர்ப்பவாதாமா? இது சந்தர்ப்பவாதமா..?

இலங்கையில் நடப்பது என்ன விதமான அரசியல்...? இலங்கை தமிழ் மக்கள் விரும்புவது எந்த விதமான அரசியல்...?

எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போய், எதிரிக்கு எதிரியானவனும் நமக்கு எதிரி தான் (கொலைக்களம் கண்டவர்..சரத் பொன் சேகா) என்பதும் மறந்து போய், அந்த எதிரியையே ஆட்சியமர்த்த துடித்த செயலை, இலங்கை மக்களுக்கும் இலங்கை தமிழ் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் சந்தர்ப்பவாதமாக தெரியாத பொழுது...இங்கிருக்கும் (தமிழக திராவிட)மக்களின் நலனை நினைப்பது மட்டும் எப்படி? சந்தர்ப்பவாதமாகும்.

இங்கிருப்பவர்களை (திராவிடர்களை) காக்கப் புறப்பட்ட இயக்கங்கள் தானப்பா இந்த இயக்கங்கள்..? இவர்கள் படும் துயரங்களுக்காக உருவாக்கப்பட்டது தானே இந்த இயக்கங்கள்...? இது எப்படி ச்ந்தர்ப்பவாதமாகும்.

மக்கள் தீர்ப்பே பிரதானம். மக்களே இங்கு எஜமானர்கள். இதுவே இந்திய ஆட்சியின் தத்துவம். (மக்களாட்சி தத்துவம்.). குடிமக்களின் ஆட்சி. மேதகு குடியரசுத்தலைவரின் (இந்தியாவின் முதல் குடிமகன்) பெயரால் நடைபெறும் ஆட்சிகள்.

நம்பி said...

Blogger மு.மயூரன் said.

//மக்களை ஒடுக்கும் தேசமாக இந்தியா உருவெடுப்பதுகண்டு, திராவிடச் சுயமரியாதை என்ற வலுவான கோசத்தைக்கட்டமைத்து அதனூடாக இந்திய விடுதலையை எதிர்த்தவர் பெரியார், இந்திய ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியவர் பெரியார். அந்தப்பெரியவரின் பெயரைச்சொல்லிக்கொண்டு இப்படி சுயமரியாதை கெட்டு நக்கிப்பிழைப்பதும் ஒரு பிழைப்பா?//

பலே! பலே! இந்திய ஒருமைப்பாட்டை கேள்விக் குறியாக்கினார், என்பதை கருத்தில் கொண்டு தான் தமிழர்களையே தமிழர்களே கொன்று குவித்தார்களா...?

ஒருவரையொருவர் தாக்கி கொண்டார்களா...? அன்னமிட்ட வீட்டிலேயே கன்னமிட்டார்களா? இதற்குப் பெயர் என்ன ஈழப் பொழைப்பா...? தன் வீட்டில் நக்காமல் அடுத்த வீட்டு அடுக்கு சட்டியில் நக்கும் பொழைப்பா..?

அப்பறம் எப்படி? அவரைக் கொடி! பீர்க்கங் கொடி, தொப்புள் கொடி என்று இங்கு வளர முடியும்? அதுவும் இந்த மண்ணில்?

அதுவும், அங்கேயே கொடி பட்டு போய்விட்ட பொழுது. இது என்ன? பித்தலாட்டம்.

அந்த படுகொலைகளில், இறந்தவராக, ஒரு வேளை இதை வலியுறுத்துபவரின் குடும்பம் இருந்திருந்தாலும் இதே போல வலியுறுத்துவாரா?

எமது ஈழத்துக்காக எமது ஈழப் போராட்டக்குழு தானே கொன்றது. வாழ்க ஈழம்! என்று குரல் கொடுப்பாரோ...? வாழ்த்துப் பா பாடுவாரோ...?

அப்படி வாழ்த்துப் பா பாடுபவராயிருந்தால் அங்கேயே ஆட்சியிலிருக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி....ஈபிஆர்எல்எப் இடமே முறையிட்டு இருப்பாரே...!

இங்கே வந்து துரோகத்துக்கு ஒப்பாரி வைத்திருக்க வேண்டிய அவசியமில்லையே! எல்லாத்துரோகமும் அங்கேயே இருக்கிறது. வேண்டிய அளவு இருக்கிறது. அதை அங்கேயே தேடிக்கொள்ளலாம்.

அது தான் இலங்கை தமிழ் மக்களிடம் எதிரொலித்தது. இன்னும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.

நம்பி said...

Blogger மு.மயூரன் said..
//இந்தப் போரை நடத்துவது இந்திய ஆளும் வர்க்கம். இந்தப்போரைத் தொடங்கியது இந்திய ஆளும் வர்க்கம். ஈழத்தமிழர்களை தன் அரசியல் பகடைக்காய்களாக்கி இன்று கொன்றுகுவிப்பதும் இந்திய ஆளும் வர்க்கம். ஈழத்தமிழரின் முதல் எதிரியே இந்திய ஆளும் வர்க்கம் தான்.//


சரி தெரிந்து ஏன்? கூட்டு சேர்ந்துகிட்டு அமைச்சர் பதவி வகிச்சுகிட்டு இருக்கே! விலக வேண்டியது தானே!

என்ன? "ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி" சொல்வது சரிதானே!

பின்னூட்டம் "ஈழமக்கள்...." தானே! இல்லை இதிலேயும் பித்தலாட்டமா?

ஈழமக்கள் புரட்சிகர முன்னணி இதை கூறாதே...அப்ப இதை கூறுவது யாராக இருக்கும்....எல்.டி.டி.ஈ அப்பா டக்கர்...சரி தானே...

இங்கேயே சண்டை கத்துப்ப...இங்கேயே குருவிக்கூட்டுக்குள்ள குண்டு வைப்ப...இங்கேய இந்த கட்சி நிதி வேண்டாம் அந்த கட்சிதுதான் வேண்டும்னு 3 கோடி ரூபா வாங்கிப்ப...திருப்பி அந்த மனுசனை எதிர்ப்ப யார்ரு எம்.ஜி.ஆர் தான்.

அப்புறம் ஆயுதம் வாங்காத என்றால் இங்கேயே சட்டம் விரோதமாக ஆயுதம் வாங்கி குவிப்பே...தடுத்தா இங்கேயே கலவரத்தை உண்டு பண்ணுவே. (முதல் முதல்ல துப்பாக்கி சத்தம் வெடிச்சதே பாண்டி பஜார்ல...ஞாபகம் இருக்குதா?) இது என்ன? பட்டா லேண்டா? பொறம்போக்கா?

சரி அது தான் போகட்டும்...இங்கே சண்டை கத்துகொடுத்த அதிகாரிகளை நீங்களே காலி பண்ண தீட்டம் தீட்டுவ...எல்லாம் எழவையும் பண்ணுவ...அமைதிப்படை என்று சொல்லுவே!...

அதை மனிதாபிமானமா, வாபஸ் வாங்கின உடனே தேடி வந்து பொறம்போக்கு லேண்டுல குண்டு வைப்ப..ஆட்சியை கவிழ்ப்ப எவன் எக்கேடு கெட்டா உனக்கு என்ன? நம்மள்து வெந்துதா?...கிளம்பு....அந்த கோஷடி தானே நீ! இதுக்கு பெயர் என்ன? போராட்டமா? இல்லை பொறம்போக்குத்தனமா...?

ஆறரை கோடி மக்கள் நாசமா போனா கவலை இல்லை...உம்முடைய தம்மாத்துண்டு இடத்தோட மக்கள் மட்டும் ஷேமமா இருக்கணும்...அப்படி என்ன? இந்த மக்களுக்கு நல்லது பண்ணிட்டே? தூ...வெக்கம் மானம் கெட்டு துரோகத்தை பேச எப்படி மனது வருகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இன்னும் கருவிக்கொண்டு இருக்கிறார்கள்.

உன்னால இந்த தமிழக மக்கள் அனுபவிச்ச துன்பங்கள் தான் அதிகம். எத்தனை அவமானங்கள்?, எத்தனை வழக்குகள்?, எத்தனை ஏச்சுக்கள்?, பேச்சுக்கள் துயரங்கள்...அதனால் நடந்த கலவரத்தில் எத்தனை பேர் சொத்துக்கள் அழிந்தன.

எத்தனை? பேரை உயிரோட கொலுத்த முயற்சிகள் நடந்தன...இது தான் உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைச்ச துரோகம்.

ஓடிப்போயிறு...? பழசை கிளறாதே!


எந்த மனித நேயமிக்கவன் இது மாதிரி செய்வான். இதற்கு ஆதரவு தேடுகிறாயே! இதெல்லாம் ஒரு பொழைப்பா?

இதுக்குத்தான் வாயைக்கொடுத்து பட்டக்சை புண்ணாக்கிக்கிறது.

உன் அக்கிரம அட்டாகசங்களை இங்கு போய்
http://www.tamilarangam.net/index.php?view=category&id=328%3A2011-01-25-14-17-01&option=com_content&Itemid=85&limitstart=180

http://www.tamilarangam.net/index.php?view=category&id=328%3A2011-01-25-14-17-01&option=com_content&Itemid=85&limitstart=180


நன்றாக படித்து விட்டு உன்னையே காரித்துப்பிக்கொள்....

இதெல்லாம் எங்கே? இந்த பக்கம் தெரிந்திருக்கப்போகுது மறந்திட்டு இருப்பாங்க! என்று நினைச்சிருப்பே!...அந்த பாவ்லா எல்லாம் இங்கு நடக்காது.

மவனே ஒதுக்கினாங்க என்றால் அவ்வளவு தான் சுத்தமா ஒதுக்கிடுவாங்க!.

நம்பி said...

//உங்கள் முதலமைச்சரும் அவர் நக்கிப்பிழைக்கும் மத்திய அரசும் சேர்ந்துதானே போரையே நடத்துகிறார்கள்? வெட்ட வெளிச்சமாக இந்திய அரசுதான் ஆயுதம் தொடக்கம் சிப்பாய்கள் வரை வழங்கி, திட்டங்கள் போட்டுக்கொடுத்து போரை நடத்துவது தெரியவந்த பிறகும் பாறாங்கல்லைப் பீய்க்குள் மறைக்கப்பார்க்கிறீர்களா?//


இங்கே நக்கிப்பிழைத்து வாங்கிய 3 கோடியை வாங்கி கொண்டு, இங்கேயே நக்கிப்பிழைத்ததினால், இந்திய ராணுவத்திடம் ஆயுதப் பயிற்சி பெற்று, ஆயுதங்கள் வாங்கி இங்கேயே வந்து 15 பேரை காவு வாங்கி விட்டு உன் மைராச்சினு போயிட்டீயே...

இதை எதுல மறைக்க சொல்ற. பாறாங்கல்லுல பீயை மறைக்க சொல்றீயா! பீயிலேயே பீயை மறைப்பியா! ஒரே பெருமைப் பீத்தக்களையா இருக்கு!

நம்பி said...

Blogger மு.மயூரன் said...

//கருணாநிதி காலமறிந்து, தன் கடைமையறிந்து முறையான அழுத்தங்களைப் பயன்படுத்தாமல் தன் இருப்புக்காக ஏதோ ஒரு வகையில் இனவழிப்புக்கு துணைபோன குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்க வேண்டியவர். பதவியை நக்குவதே அவர் உயிர் நிலை. அதற்கு ஆப்பு வைத்தால் அவருக்கு அதுவே மரண தண்டனை.//

இப்ப யாருக்கு மரண தண்டனை கிடைச்சது...யாரு வந்து அடையாளம் காட்டியது...எல்லாம் ஈழப் போராளிகள் தானப்பா..!

உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணா இது தான் நடக்கும்.

நீ பாய்ஞ்சு பாய்ஞ்சு கொல்லும் பொழுது இனவழிப்பு தெரியலையா...? சொந்த மக்களை கொல்லும்பொழுது தெரியலையா...?

அந்த கொல்லப்பட்ட போராளிகளின் குடும்பங்களுக்கு நீ ஆறுதல் சொல்லுவியா! பரவாயில்லையம்மா நம்மாளு தான் கொன்னது பரவாயில்லை...இன்னொரு பிள்ளை இருந்தால் கொடுங்கள் வந்து கொல்லச்சொல்றேன் என்று கொல்ல சொல்லுவியா!

ஏய்யா! பொதுமக்கள் துப்பாக்கியை மீறி தடுத்தும், தமிழர்களை நிராயுதபாணிகளாக வைத்து கொன்றிருக்கிறீர்களே!

இது இனப்படுகொலையாக தெரியவில்லையா? உன் சகோதரனை கொன்றிருப்பது மிகப்பெரிய படுகொலையாக தெரியவில்லையா...?

போரில் இறந்தால் கூட பரவாயில்லை? வேண்டுமென்றே கூட்டிச்சென்று சரமாரியாக சுட்டுத்தள்ளியிருக்கிறீர்களே! இது பாவமாக தெரியவில்லையா...?

அவர்களை அவசர அவசரமாக டயர்களை போட்டு எரித்துள்ளீர்களே! இது கொடூரமாகத் தெரியவில்லையா..?

யாராயிருந்தால் என்னய்யா..? உன்னைப்போன்ற தமிழன் தானே! உன் நாட்டுக்கரான் தானே! அப்புறம் வந்து இங்கு வந்து துரோகத்தை பற்றி கதை அளக்கிற!

அதுக்கு என்ன தண்டனை கொடுப்பாங்க....பாராட்டு விழா நடத்துவாங்களா...? வளர்த்து விட்ட தலைவரையும் போட்டுத் தள்ளியாச்சு! எவனுக்குத்தான் நன்றியுடையவனா இருப்பே!

இதனால் தான் அங்குள்ள மக்களின் செல்வாக்கு போனது. இங்குள்ளவர்கள் வைத்திருந்த மதிப்பீடும் போனது. இல்லையென்றால் இந்நேரம் அங்கேயே ஒரு பிரளயம் வெடித்திருக்கும்.

இங்கு எவருடைய தயவும் தேவையிருந்திருக்காது.