Search This Blog

27.4.09

"தினமணி" நாளேட்டின் செய்திக்கு மறுப்பு


"தினமணி" நாளேட்டில் இன்று காலை (27.4.2009) வந்துள்ள செய்தி வருமாறு:

"இந்திய அரசு தலையிட முடியாது" என்ற தலைப்பிட்டு இன்று காலை (27.4.2009) வெளிவந்துள்ள "தினமணி" நாளேட்டில் - ஒரு செய்தி வெளிவந்துள்ளது. புதுவையில் நான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியை முழுமையாகத் திரித்து, தலைகீழாக்கி, விஷமத்தனமாக செய்தியை கொட்டை எழுத்துக்களில் முதல் பக்கத்தில் "தினமணி" வெளியிட்டுள்ளது.

கெட்டபெயர் உண்டாக்கவே இந்த வேலை

நமக்கும், நம் இயக்கத்திற்கும் கெட்ட பெயர் உண் டாக்கவே இந்த ஏற்பாட்டினை - "தினமணி" நாளேடு தவறான செய்தியை - வெளியிட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை; இதில் இந்திய அரசு தலையிட முடியாது என்று நான் கூறு வேனா? முழுப் போர் நிறுத்தம் தேவை, இலங்கையில் நடை பெறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்திட மத்திய அரசு முன்வரவேண்டும் என்பதை கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி 2008-லிருந்து வற்புறுத்தி, நாளும் எழுதியும், பேசிவரும் நிலையில் இப்படிக் கூறிட முடியுமா?

கூறியது என்ன?

அது உள்நாட்டுப் பிரச்சினை; அதில் தலையிட முடியாது. அங்கே சண்டை நடந்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது சகஜம்தான் (18.1.2009) என்று பேட்டி கொடுத்த ஜெயலலிதாவுக்கு இன்று ஈழத் தமிழர்கள்மீது வந்துள்ள திடீர் அக்கறை தேர்தலில் அதைக் காட்டி ஓட்டு வாங்குவதற்காகவே என்பதை விளக்கியும், தமிழ்நாடு முதல்வர் ஒரு மாநில அரசின் முதல்வர்; அவரைப் பொறுத்தவரை எவ்வளவு அழுத்தங்களை உச்சத்திற்குச் சென்று தர முடியுமோ அதனைத் தந்து கொண்டிருப்ப தால்தான் இந்த அளவுக்குச் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்ற கருத்துகளைத்தான் குறிப்பிட்டேன்.

மறுப்புக் கடிதம் "தினமணி"க்கு!

உடனிருந்த கழகப் பொறுப்பாளர்கள் உள்பட மற்ற ஏட்டாளர்களும் சாட்சி! பேட்டியின் ஒலிநாடாப் பதிவும் எம்மிடத்தில் உள்ளது.

அதற்குரிய மறுப்பினை வெளியிட வேண்டும். "தினமணி"க்கே இப்படி ஒரு மறுப்பினையும் வெளியிட்ட கடிதம் ஒன்றை அதன் ஆசிரியருக்கு அனுப்பியுள்ளேன்.
- கி. வீரமணி, தலைவர்,திராவிடர் கழகம் -"விடுதலை" 27.4.2009

3 comments:

ttpian said...

அவசரம்.....அவசியம்.....
மலயாளிகள் நாராயனன்,சிவசன்கர மேனொன்.. விஜய் நம்பியார்(?)..அலொக் ப்ரசாத்.....இந்த 4 பேரையும்,கைது செய்து "விசாரிக்க" வேண்டும்!
இவர்கள் தமிழர்கலின் வாழ்வை அழித்தவர்கள்...
பூனைக்கு யார் மணி கட்டுவது?
ஒரு முறை "சரியாக" விசாரித்தால்,எதிர்காலத்தில்,எந்த கொம்பனும் தமிழனுக்கு எதிராக போகமாட்டான்!

Thamizhan said...

குள்ள நரிகள் தமிழினத்தைப் பிரித்து வேடிக்கை பார்க்கத் துடிக்கின்றனர்.
அம்மையாரின் வெற்றிக்கு அனைத்து நூல் கும்பலும் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறது என்று பார்க்கப் போகிறோம்.

Anonymous said...

சேரன் , சோழன், பாண்டியன் , திருவள்ளுவர் , ஓவ்வையார் கண்ணகி பற்றி எழுதிய இராமலிங்க அடிகளார் எல்லோரும் கடவுள் பக்தி நெறைண்டவர்கள் . அக முட்டாள் தமிழர்கள் தான் தமில் நாட்டை ஆண்டார்கள்