Search This Blog

8.4.09

பெரியாரின் ஒப்பற்ற சுயசிந்தனைதான் அண்ணாவின் மூலதனம்.
தந்தை பெரியாரின் ஒப்பற்ற சிந்தனை தான்
அண்ணா அவர்களின் 'முதல்' 'மூலதனம்'

"ஈரோடு முதல் காஞ்சி வரை" தலைப்பில் தமிழர் தலைவர் பேச்சு


தந்தை பெரியாரின் ஒப்பற்ற சுயசிந்தனை தான் அண்ணா அவர்களின் முதல் மூலதனம் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னைப்பல்கலைக் கழகத்தில் - ஈரோடு முதல் காஞ்சி வரை என்ற தலைப்பில் அண்ணா நினைவுநாளில் 3.2.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேர் பார்க்கிறார்கள். ஆபிரஹாம்லிங்கம் மூக்கைத்தட வினால் நல்லது நடக்கும் என்ற மூடநம்பிக்கை அவர்களுக்கு. ஆபிரஹாம் லிங்கன் காட்டிய வழியை அவர்கள் பின்பற்ற வில்லை. இதைப்பற்றிச் சொல்லும்பொழுது அண்ணா அவர்களுடைய ஆற்றலைப் பாருங்கள். தொலைநோக்கு என்பது தான் மிக முக்கியம். இன் றைக்கு அவருடைய சிந்தனை வெறும் கற்பனையோடு போகவில்லை.

எழுத்தாளர் என்றால் தொலைநோக்கு - எதிர் காலத்தையும் உருவாக்கக் கூடியவர்கள்.

எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்கக் கூடியவர்கள். அண்ணா எழுதுகிறார். சவுக்கடி பட்ட இனம், கட்டி வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட இனம் வேட்டை நாய்கள் இவர்களைத் துரத்திக் துரத்திக் கடித்திட, கடி பட்டவன் கதறி கதறித் துடித்திட, வெள்ளை சீமாட்டிகள் கண்டு, கண்டு கைகோர்த்து சிரித்தனர் முன்பு.

அந்த இனத்தைச் சேர்ந்த ஒருவன் நீக்ரோ ஆட்சித் தலைவனா? நமக்கா? இப்பொழுது நீக்ரோ அடிமை அல்ல. சந்தைச் சதுக்கத்தில் அவனைக் கட்டி வைத்து அடிக்க அவனுக்கு இடம் கொடுத் ததில்லை.

இப்பொழுது அவர் அங்காடிப் பொருள் அல்ல. ஆபிரகாம் லிங்கன் அடிமைத்தனத்தை ஒழித்தான். ஆனால் இப்பொழுதும் அவன் நீக்ரோ தானே - அடிமை தானே.

இன்றைக்கும் நம்முடைய நாட்டிலே ஜாதிப் பிரச்சினையில் இந்த நிலைதானே இருக்கிறது. இடத்தை மாற்றி வைத்து பாருங்கள்.

இப்பொழுதும் நீக்ரோதானே - அடிமை அல்ல; ஆனால் கருநிறம். அந்த இனத்தவனல்லவா டக்ளஸ் டிக்மன்.

இப்பொழுதும் வெள்ளை நிறத்தில் தனித்த நம்பிக்கை கொண்டவர்கள், கறுப்பர்களை பள்ளிகளில், விடுதிகளில் படக்காட்சிக் கொட்டகைகளில் சேர்க்கமாட்டார்களே. ஒதுக்கித் தானே வைத்திருக்கிறார் கள்.

ஓரத்தில் தானே தள்ளப்பட்டுக் கிடக்கின்றான்.

உழைக்கிறான் என்பதால் வேலை தருகின்றோம். வேலை செய்வதால் நாம் நடமாடிய இடத்தில் அவர் நடமாடுகின்றான். ஆனால் நாமும் அவனும் ஒன்றா? ஒப்புக் கொண்டுவிட்டோமா? இல்லையே!

வேட்டையாடிப் பிடிப்பது. சங்கிலிகளால் பிணைப்பது, சந்தையிலே நிறுத்தி வைத்து விற்பது, சவுக்கால் அடிப்பது இவை கூடாது என்கிறது சட்டம்.

ஆனால் வெள்ளை வெள்ளை தான், கருப்பு கருப்புதானே. வெள்ளை ஆளும் இனம், கருப்பு அடிமை இனம் தானே!

உயர, உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகிவிடுமா? நீக்ரோ படிப்பால், பணத்தால், பட்டத்தால் வெள்ளையாகிவிடுவானா? அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தான் என்பதாலேயே அவன் அமெரிக்கனாகி விடுவானா?

அமெரிக்கன் என்ற மக்கள் தொகைக் கணக்காகக் கூறினாலும் நீக்ரோ வெள்ளையனாகி விடுவானா? அமெரிக்கா எவருடைய நாடு? வெள்ளையர் நாடு. வெள்ளையர் நாட்டிற்கு வேறு ஒரு கருப்பர் தலைவர் ஆவதா?

இந்தக் கருத்தை இவ்வளவு அழகாக இர்விங் வேலஸ் அவர்கள் கூட எடுத்துச் சொல்லவில்லை.

நமக்கு முன்னுரையிலே ஒரு சரித்திரத்தைச் சொல்லி ஒரு சமுதாயப் போராட்டத்தைச் சொன்னார்.

இன்றைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளே போய் உட்கார்ந்து விட்டார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னாலே அறுபதாண்டு காலக்கனவு இருக்கிறதே அது எவ்வளவு பெரிய அளவுக்கு சமுதாய மாறுதலை உருவாகியிருக்கிறது. என்பதைப் பார்க்கிற பொழுது அதிலும் ஈரோடு முதல் காஞ்சி வரை என்பது சரியாக இருக்கிறது.

எப்படியென்றால், இனி வரும் உலகம் என்ற ஒரு நூலிலே தந்தை பெரியார் அவர்கள் இனி வரக் கூடிய உலகம் எப்படியிருக்கும்? என்று அவர்கள் கற்பனை செய்து பேசியதை அண்ணா அவர்கள் ஒரு திருமணத்திலே எழுதித்தான் அதை உரையாக ஆக்கினார்.

அந்த நூல்தான் இனி வரும் உலகம் என்பதாகும்.

அதிலே தந்தை பெரியார் சொல்கின்றார்: வருங்காலத்திலே ஆண் பெண் சேர்க்கை இருக் காது. பரிசோதனைக் குழாய் மூலமாகக் குழந்தைகள் பெறக்கூடிய, பரிசோதனைக் குழாய் குழந்தை வரும்.

இன்றைக்கு அப்படிக் குழந்தைகள் வந்து விட்டன. 60 ஆண்டுகளுக்கு முன்னால் தந்தை பெரி யார் தொலைநோக்கோடு பார்த்தார்கள். அந்த தொலைநோக்கு வந்து விட்டது.

ஒவ்வொருவருடைய கையிலும், பையிலும், சட்டைப் பையிலும், தொலைபேசி இருக்கும் என்று சொன்னார்.

அதற்கு எல்லோரி டமும் ஆதாரம் இருக் கிறது. செல்ஃபோன் கையிலேயே இருக்கிறது. இவ்வளவு நேரம் இந்த அரங்கத்தில் செல்ஃபோன் ஒலிக்காமல் இருப்பதே பெரிய வியப்பு!

ஆகவே அப்படிப் பட்ட ஒரு சூழலிலே பள்ளிக் கூடத்திற்கும் போகாத தந்தை பெரியார் வழக்கமாக அந்தப் படிப்பு என்பதைப் படிக்காத பெரியார் அப்படிப்பட்ட பெரியார் உலகத்தைக் காட்டினார்.

வருங்கால உலகத்தைக் காட்டினார். அதே போல இன்னொரு எழுத்தாளர் காட்டுகிறார் என் கிற பொழுது அதை நாமும் செய்வோம் என்று சொல்லி, அதையும் பெரியாரைப் பின்பற்றித் தான் வெள்ளை மாளிகையில் என்று வேறு ஒரு கருத்தை எடுத்துத் தெளிவாகச் சொன்னார்.

பெரியார் சுதந்திரமாகச் சிந்தித்தார். காரணம் நல்ல வாய்ப்பாக அவர் பல்கலைக்கழகத்திற்குள்ளே வரவில்லை. அது தான் மிகச் சிறப்பானது. பல்கலைக் கழ கத்திற்கு வராதோர் எல்லாம் பெரியாராகி விடுவார்கள் என்று தவறாக அனுமானத்தைக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

தந்தை பெரியார் ஒப்பற்ற ஒரு சுய சிந்தனை யாளர். தந்தை பெரியாரின் ஒப்பற்ற சுயசிந் தனைதான் அண்ணாவின் மூலதனம்.

அதுதான் அவரது முதல். எனவே ஈரோடு முதல் காஞ்சி வரை உங்களை அழைத்திருக் கிறோம். இது ஒரு அறி முகம், இது ஒரு முகவுரை, இது ஒரு முன்னுரை. இதற்கு மேலே முழு உரையை நீங்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி காலம் கடந்து விட்டது. காலம் கடந்தாலும், காலத்தை வென்ற ஒரு தலைவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஞாலம் அவர்களுடைய வழியில் நிற்கும் என்பது தான் பெருமை என்று கூறி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடை பெறு கிறேன். வணக்கம், நன்றி!

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

------------------"விடுதலை" 8-4-2009

2 comments:

Unknown said...

Hi Tamil oaviyaa!
Can u please write an article about amma bhagavan?
or can yuo give some useful links to prove that he is cheating?
Thanx...
You are doing a good job...
Is there any active members from sri lanka in your groups?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி