Search This Blog

17.4.09

அய்யோ இது என்ன கொடுமை!சேதுசமுத்திரத் திட்டத்தை ஒழிப்பார்களாம்!
அ.இ.தி.மு.க. தேர்தல் அறிக்கை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈழத்தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதாவின் திடீர் பல்டி; சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு எதிரான போக்கு ஆகியவற்றை முக்கியமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அறிக்கை வருமாறு:


இலங்கை இனப்பிரச் சினை பேச்சுவார்த்தை மூலம் தீராவிட்டால் தனி ஈழ மாநிலம் அமைய அ.தி.மு.க. வலியுறுத்தும் என்று அக் கட்சி தேர்தல் அறிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கையில் உடன டியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுப்ப தோடு மட்டுமல்லாமல், அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான படுகொலையை நிறுத்திடவும் உடனடியாகக் கோரிக்கை வைக்கப்படும்.

பெரும்பான்மை சிங்கள இனத்தவருக்குச் சமமாக தமிழ் மக்கள் நடத்தப்பட வேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் அவர்க ளுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்கவேண்டும்.

இம்முயற்சி தோல்வி அடைந்தால், தமிழர்களை கண்ணியத்துடன் வாழ ஏதுவாக தனி ஈழ மாநிலம் அமைக்க வலியுறுத்தப்படும். அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ்ப் பகுதிகளைப் புதுப்பிக்க, தமிழர்களுக்கு மறுவாழ்வளிக்கவும் ரூ 10,000 கோடி மானியம் வழங்கப்படும்.

2009 அ.தி.மு.க. தேர் தல் அறிக்கையில் (பக்கம் 24, 25) காணப்படும் பகுதி இது. ஆகா, தேர்தல் அறிக் கையிலேயே இப்படி அம்மை யார் கூறிவிட்டாரே என்று ஈழத்தமிழர்களோ, இங் குள்ள தமிழர்களோ எண்ணினால் உங்களுக்கு பொதுத் தேர்தல் முடிந்து கிடைப்பது நிச்சயம் ஏமாற்ற மாகத்தான் முடியும்!

தேர்தல் நேரப் பேச்சு

நம்மை விட ஈழத் தமிழர் பால் துவக்கம் முதல் நாளது வரை அக்கறை, கவலை சொண்டவர்கள் யாருமில்லை என்பது மனச்சாட்சியுள்ள அனைவரும் அறிந்த ஒன்று.

இந்த அம்மையாரின் தேர்தல் அறிக்கை நீரின் மேல் எழுதப்பட்ட எழுத்து களாவதற்கு அதிக நாள் பிடிக்காது!

சேதுசமுத்திரத் திட்டம் ஒழிக்கப்படுமாம்!

இதே தேர்தல் அறிக்கையில் மற்றொரு புறத்தில் - மத்தியில் அ.தி.மு.க. ஆட் சிப்பொறுப்புக்கு வந்தால் சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதையும் கவனிக்கத் தவறாதீர்கள்! (அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை 2009, பக்கம் 41)

ஒரு தேர்தல் அறிக்கையில் அல்ல; மூன்று தேர்தல் அறிக்கைகளில் அ.தி.மு.க. வலியுறுத்திய சேது சமுத் திரத் திட்டத்தை அதற்கென கலைஞர் அரசின் முயற்சியில் 2450 கோடி ரூபாய் திட்டமிட்டு, இது வரை இவ்வளவு உதவி கிடைத்த மத்திய அரசின் திட்டம் தமிழ் நாட்டில் எளிதில் கிட்டவில்லை என்று பெருமை கொள்ளத்தக்க இந்தத் திட்டம் பெரிதும் முடிவடையும் (இன்னும் 25 கி.மீ. தூரம்தான் பாக்கி) நிலையில் ஜெயலலிதா போட்ட வழக்கினால்தான் உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி நிலுவையில் உள்ளது. இப்படி தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக - இராமர் பாலம் இடிக் கப்படக்கூடாதுஎன்று இல் லாத பாலத்தை - இந்துத்துவ வாதிகளான பா.ஜ.க. வினரையும் மிஞ்சும் அளவுக்குக் கூறிடும் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால், இலங்கைப் பிரச்சினை யையும் இந்த அம்மையார் கைகழுவமாட்டாரா? என் பது விளங்குமே! கைப் புண்ணுக்குக் கண்ணாடியா தேவை? மூன்று தேர்தல் அறிக்கையில் வற்புறுத்தி யதையே எளிதில் எடுத்தெ றிந்து, சேது சமுத்திரத் திட்டம் ரத்து செய்யப்படும் என்று கூறிடும் செல்வி ஜெயலலிதாவிற்கு, ஈழத் தமிழர் பிரச்சினையை, தேர்தல் முடிந்தவுடன் காற்றில் பறக்கவிட எவ்வளவு நேரம் பிடிக்கும்? ஏமாறத் தயார் என்றால் நம்பலாம் தமிழர் களே! அன்று பேசியது என்ன?

அவர் இது பற்றிசில மாதங்களுக்கு முன் பேசிய வார்த்தைகள் என் னென்ன? மறந்துவிட்டதா?

கேள்வி: இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தொல் திருமாவளவன் 3 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். உங்கள் கூட்ட ணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக் கின்றன. நீங்கள் ஆதரிக்கின்றீர்களா?

ஜெயலலிதா பதில்: எங் களைப் பொறுத்தவரை எங் களுக்கு என்று தனிக் கொள்கை உண்டு. . .ஆகவே உணணாவிரதத் தைப் பொறுத்த வரை அ.தி. மு.க. கருத்து என்னவென்றால் இது கருணாநிதியும் தொல். திருமாவளவனும் பேசிக் கொண்டு நடத்துகிற ஒரு நாடகம்.

இலங்கை வேறு நாடு. எனவே அந்த நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு ஒரு எல்லை உண்டு. இலங் கையில் ஈழம் என்ற ஒரு நாடு இன்னும் அமைய வில்லை. இலங்கைத் தமி ழர்களைக் கொல்ல வேண்டும் என்று சிங்கள ராணுவம் எண்ணவில்லை. ஒரு போர் நடைபெறும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்; இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல. ஆனால் இலங்கையில் என்ன நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடா மல் விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்து வைத் துக் கொண்டு இராணுவத் திற்கு முன்னால் கேடய மாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இலங் கைத் தமிழர்கள் பாதுகாப் பான இடங்களுக்குச் செல்ல அனுமதித்தால், இந்த அப்பாவித் தமிழர்கள் சாகவேண்டிய அவசியமே இல்லை! (தினத்தந்தி, 18.1.2009, பக்கம்).
இது நமது எம்.ஜி.ஆர். ஏட்டிலும் வந்துள்ளது!

இப்போது திடீர் பல்டி அடிப்பது - தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த இந்த ஆயுதம் பயன்படாதா என்ற நப்பாசையினால் தான் இப்படி ஒரு நிலை என்பதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களா தமிழ் நாட்டுத் தமிழர்கள்?

அதிலும் கூட இந்தத் தேர்தல் அறிக்கையில் முன்பு ஈழம் என்பதைப் பயன்படுத்தாத ஜெயலலிதா இப்போது ஈழ மாநிலம் என்று ஒரு சொல்லாட் சியைப் பயன்படுத்துவது கூட தந்திரம்தான்.

முன்பு இவரே என்ன சொன்னார்?

அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பது தான் அரசியல் ரீதியில், அலுவலக ரீதியாகச் சொல்லப்படுகிறது (நமது எம்.ஜி.ஆர்., 18.1.2009) என்று சொன்ன ஜெயலலிதா, இப்பொழுது ஈழம் என்பதைப் பயன்படுத்துவதைக் கவனிக்கவேண் டும்.

ஈழ நாடு அல்ல, சுய நிர்ணய உரிமையைக் கூட அங்கீகரிக்கும் வார்த்தை விளையாட்டு விளையாடி யுள்ளார்! புதிய கூட்டணி வீரர்கள் இதில் ஏமாறலாம்; ஆனால் மக்களை ஏமாற்றிட முடியாது. மக்கள் தெளிவாகவேப் புரிந்து கொள்வர்!


இரங்கல் தெரிவித்ததற்காக
ஆட்சியைக் கலைக்கச் சொன்னவர்

தமிழ்ச்செல்வன் மறைவுக்கு மனிதநேய அடிப் படையில் இன உணர்வு காரணமாக முதல்வர் கலைஞர் அவர்கள் இரங்கல் கவிதை எழுதியமைக்காக கலைஞரின் அரசையே கலைக்க வேண்டுமென்று அறிக்கை விடுத்தவர் இந்த அம்மையார் என்பதும் மறந்துவிட்டதா?

தேர்தல் நேரப் பேச்சு; பொழுதுவிடிந்தால் போச்சு என்பது புதுமொழியாகும் என்பதற்கு ஜெயலலிதா வின் சேதுக்கால்வாய் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பே ஆதாரம் அல்லவா?

புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே!

---------------- "விடுதலை" 17.4.2009

7 comments:

Temp said...
This comment has been removed by the author.
Selva said...

போன 5 வருடங்கள் என்ன செய்தார் கலைஞர். உண்மையான அக்கறை இருந்தால் எப்போதோ நிறைவேற்றியிருப்பார்கள். ஒரு மந்திரி பதவிக்காக அலையாய் அலைவார்கள். ஆட்சியை கவிழ்ப்போம் என்று மிரட்டல் வேறு. ஆட்சியிலிருக்கும் போது சொத்து சேர்ப்பதில் கவனம் ஆட்சி முடியும் போது குய்யோ முறையோ என்று ஒப்பாரி வேறு!!!

Selva said...
This comment has been removed by the author.
தமிழ் ஓவியா said...

சேது சமுத்திரத் திட்டத்தின் வரலாறை ஊன்றிப் படிக்க வெண்டுகிறேன் செல்வா

arul said...

THE BASIC justification advanced in favour of the Sethusamudram Ship Canal Project (SSCP) is that it will reduce the distance between Kolkata and Tuticorin by 340 nautical miles and between Chennai and Tuticorin by 434 nautical miles, thereby saving, for the ships plying between these places, both fuel cost and time involved in sailing the additional distance.

Not a free seaway


This justification will be readily valid if the SSC is a free seaway which ships can sail through without any payment to the project authority.

But the SSC cannot be a free seaway because the grounding of a wayward coal or oil ship that strays from the alignment or a collision of two ships in the channel will result in an ecological disaster of unimaginable proportions to the Gulf of Mannar and the Palk Bay.

So ships will be allowed to pass through the canal only under regulated pilotage, and pushed/pulled by tugs belonging to the SSCP.

The official project paper says that the estimated investment of Rs. 2,000 crores will "earn an operating profit from its very first year of operation and that the capital will be recovered with 9 per cent interest within the first 25 years after which there will be a mammoth profit generation in the next 25 years."

Obviously, even while saving on the cost of fuel, a ship passing through the canal will be expected to make a payment to the SSCP for using the facility.

The question arises: will the saving in fuel cost be substantially greater than the charge to be levied by the SSCP to enthuse the shipowners to use the canal?

If the SSCP is to make a profit, its levy must leave a margin after meeting the cost of amortisation of the capital and the annual revenue expenditure incurred on maintenance dredging and provision of the pilotage service.

The likely pilotage charge to be levied by the SSCP has not been made public, but an approximate figure can be guessed by extrapolating similar charges levied by the Chennai and Tuticorin Port Trusts at present.

The approach channel to Chennai port has a length of 7 km. A 36,000 tonne coal ship calling at Chennai has to pay approximately Rs. 21.75 a tonne, or a total of Rs. 7.83 lakhs, as pilotage charges, averaging Rs. 1.11 lakh per km.

Tuticorin's approach channel is only 2.4 km long and an identical coal ship calling at this port is levied Rs. 17 a tonne, or a total of Rs. 6.12 lakhs, towards pilotage, working out to Rs. 3 lakhs per km.

(The comparative lower rate per km in Chennai is because the capital cost of digging the much older channel had been amortised a long time back.)

The projected length of the Sethusamudram channel is 56 km. Both capital and recurring cost will be much higher for the SSCP than for the Chennai and Tuticorin ports, and its levy of pilotage per km is likely to be substantially higher than that of even the latter if it has to have a 9 per cent return on the capital.

Even if the Chennai rate is assumed, the same ship will have to pay over Rs. 60 lakhs to the SSCP for passing through the canal.

But the cost of fuel that will be saved by the same ship by taking the shorter route through the Sethusamudram canal instead of sailing round Sri Lanka will be less than Rs. 7 lakhs, which is even less than 1/8 of SSCP's likely levy.

The saving in sailing time for that ship will also be substantially less than the 36 hours projected by the SSCP because the ship cannot be towed at its normal speed through the canal, and time will also be lost in embarkation/disembarkation of pilots and other inspection procedures. The saving in sailing time of just about a day will not justify the incurring of over 8 times the cost of the saved fuel.

Mutually contradictory


Though the above example relates to only a 36,000 tonne coal ship, the argument is valid for other types of vessels also.

So, shipowners conscious of the bottomline in their balancesheets are likely to evince little enthusiasm in using the Sethusamudram canal.

The two statements that the ships using the Sethusamudram canal will save money and that the SSCP will be a financially viable undertaking are therefore mutually contradictory and cannot have simultaneous validity.

The comparison of Sethusamudram to Suez is not valid because the 160 km long Suez Canal, by obviating the need to sail around the African continent, saves a distance of more than 9,000 km between a European port and any eastern port such as Colombo, Chennai, Singapore or Tokyo. The consequent saving in fuel cost and time is substantial enough for ships to ungrudgingly pay the toll charges levied by the Suez Canal Authority.

Unknown said...

பல நேரங்களில் நாம் மிக மிக அறிவாளிகளாக நினைக்கிறோம்.நாம் விடும் மூச்சுக் காற்றுக் கூட, நமக்கு சொந்தம் இல்லை. நாம் உயிர் வாழ இறைவன் அழித்த அழியாத பொருள்.நன்றி உணர்வு இல்லாத மனிதர்களுக்கு இறைஉணர்வு என்றுமே உண்டாவுதில்லை. மதத்தில், வெறும் குறைகளே பார்க்கும் இவர்கள் பகுத்தறிவாளிகள் என்று தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொள்கிறார்கள்.

Unknown said...

பல நேரங்களில் நாம் மிக மிக அறிவாளிகளாக நினைக்கிறோம்.நாம் விடும் மூச்சுக் காற்றுக் கூட, நமக்கு சொந்தம் இல்லை. நாம் உயிர் வாழ இறைவன் அழித்த அழியாத பொருள்.நன்றி உணர்வு இல்லாத மனிதர்களுக்கு இறைஉணர்வு என்றுமே உண்டாவுதில்லை. மதத்தில், வெறும் குறைகளே பார்க்கும் இவர்கள் பகுத்தறிவாளிகள் என்று தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொள்கிறார்கள்.