Search This Blog

10.4.09

மதவாத சக்திகள் ஆளும் வாய்ப்பு முறியடிக்கப் பட


நல்ல செய்திகள், உண்மைகள் வெளியே தெரிந்து
விடக் கூடாது என்பதற்காக கலவரம் விளைவிக்கின்றார்கள்

சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு


நல்ல செய்திகள் உண்மைகள் மக்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்று கூட்டத்தில் கலவரம் விளைவித்திட சிலரை ஏற்பாடு செய்து அனுப்பியிருக்கிறார்கள் என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னை பெரியார் திடலில் 4.4.2009 அன்று இரவு 7.30 மணிக்கு எம். ஆர். ராதா மன்றத்தில் - நாடா ளுமன்றத் தேர் தலும், ஈழத்தமிழர் பிரச்சினையும் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு :-

அதையும் தெளிவு படுத்த வேண்டும். திராவிடர் கழகம் என்பது சேப்பர்ஸ் அண்டு மைனர்ஸ் என்பது போல பின்னாலே இராணுவம் வந்தால் முன்னாலே பாதைகள் அமைத்துக் கொண்டு - பாலங்கள் கட்டிக்கொண்டு போகக்கூடிய ஓர் இயக்கம். அந்த முறையிலே தான் எங்களுடைய திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவின் கூட்டிய தீர்மானத்திலே தெளி வாகச் சொல்லியிருக்கின் றோம்.

இந்த செயற்குழுவிலே மக்களவைத் தேர்தலும் தமிழர்களின் கடமையும் என்ற தீர்மானத்தை நான் முன்னாலே படித்து விட்டு அதற்குப் பிறகு ஒரு சில விளக்கங்களுக்கு செல்ல விழைகின்றேன்.

நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் குறைந்த பட்சம் மூன்று அணிகளாகப் பிரிந்து தேர்தலை சந்திக்க விருக் கின்றன.

இது 31-ஆம் தேதி நிலவரம் - மூன்று அணிகளுக்கு மேலாக நான்கு அணிகளா? அய்ந்து அணிகளா? ஆறுஅணி களா? என்பதை பிறகு நீங்கள் முடிவு செய்ய வேண்டியது. எந்த அணி களாக இருந்தாலும் நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. எது வெற்றி பெற வேண்டும் என்பது ஒரு பக்கத்திலே. இன்னொரு பக்கத்திலே எது வெற்றி பெறக் கூடாது என்பது அதைவிட முன்னுரிமை பெற்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணியாட்சி. 5 ஆண்டு காலம் நிலையான ஆட்சியைத் தந்துள்ளது. இடையில் இவ்வாட்சியைக் கலைக்க மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டு நிலைத்த தன்மையை (stability) நிரூபித்துக் காட்டியுள்ளது. அய்ந்தாண்டு காலம் இந்த ஆட்சியை நிலைக்க வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்த நண்பர்களே கூட, இடது சாரிகளே கூட - அதை எப்படியாவது தோற்கடிக்க முடியாதா? என்பதற்காக படுமுயற்சிகள் செய்தார்கள். மதவாதக் கட்சிகள் இது தான் சந்தர்ப்பம் என்று சொல்லி குதிரைப் பேரங்களை எல்லாம் நடத்தினார்கள்.

நாடாளுமன்ற வரலாற்றிலேயே இப்படிப் பட்ட சூழல்கள் இருந்த தில்லை என்று பேசப் பட்டது.

நல்ல வாய்ப்பாக இந்த ஆட்சிக்கு உத்தரபிரதேசத்திலே இருக்கக் கூடிய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த முலாயம் சிங் அவர்கள் சரியான நேரத்திலே காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுத்த காரணத்தாலே எதிர்த்தரப்பாரின் கனவு கள் காணாமல் போயின. அய்ந்தாண்டு காலம் ஆட்சி நடத்தி மீண்டும் தேர்தல் என்ற நிலைக்கு இப்பொழுது வந்துள்ளது.

அவர்களுடைய கனவுகள் அரசியலிலே எப்படி எல்லாம் இருந்தன என்பதைப் பார்க்க வேண்டும். நான் பிரதமர் நான் பிரதமர் என்று இப்பொழுதெல்லாம் கனவு காணுகிறார்களே அதிலே ஒருவரைப் பிடித்து இந்த ஆட்சி கவிழ்ந்தவுடனே நீங்கள் தான் இடைக்காலப் பிர தமர் என்று சொன்னார்கள். அடுத்து உடனே பலத்தை பரிசோதனை செய்து காட்டுங்கள் என்று சொல்வார்கள்.

அப்படி வாய்ப்பு வரு கின்ற நேரத்தில் நம்மால் பலத்தை நிரூபிக்க முடியுமோ இல்லையோ நீங்களே தேர்தலை அறிவித்துவிட்டால் அந்தத் தேர்தல் காலத்திலே நீங்கள்தான் Care taker Prime Minister என்று சொல்லக்கூடிய அளவுக்கு காபந்து அரசை அமைக்கலாம். தேர்தல் நேரத்திலும் நீங் கள் இருக்கலாம் என்று சொல்லி தோழர்களுடைய நாக்கிலே தேனைத் தடவி ஏமாறவிட்டார்கள். ஆனால் அது நடக்கவில்லை. அதை எல்லாம் தாண்டி அய்ந்தாண்டு காலம் மத்தியிலே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றது. மேலும் எங்களுடைய தீர்மானத்தில் உள்ளதைப் படிக்கின்றேன்.

இந்த ஆட்சி அமைந்ததன் மூலம் மத்தியிலே மதவாத சக்திகள் ஆளும் வாய்ப்பு முறியடிக்கப் பட்டது.

ஏற்கனவே இருந்த மதவாத சக்தியான பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட மதச்சார்பின்மை தகர்க்கப்பட்டது. கல்வித் திட்டங்களில் மதவாதக் கருத்துகள் திணிக்கப்பட்டன. பல்கலைக் கழகங்களில் ஜோதிட மூடநம்பிக்கைகள் பாடங்களாக வைக்கப்பட்டன. வேதக் கணிதம் என்ற பார்ப்பனியத் தன்மையுள்ள பாடமுறைகள் வகுத்துக் கொடுக்கப்பட்டன.

வரலாறுகள் திரித்து எழுதப்பட்டன. சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று கணிணி மூலம் எருதைக் குதிரையாக்கிக் காட்டி திரிபு வேலை செய்யப் பட்டது.

மத்தியில் இத்தகு ஆட்சி வீழ்த்தப்பட்டு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசு கடந்த 5 ஆண்டுகாலம் நடைபெற்றது. கீழ்க் கண்ட நலன்கள், வளங்கள், நாட்டுக்குக் கிடைத் துள்ளன.

(அ)மதச்சார்பின்மை உறுதி செய்யப்பட்டது.

(ஆ) சமூக நீதிக் கண்ணோட்டத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு உயர்கல்வியில் 27 விழுக் காடு இட ஒதுக்கீடு முதல் முதலாக அளிக்கப்பட் டது.

நேரு காலத்திலே இதே இட ஒதுக்கீட்டிற்காகத் தந்தை பெரியார் போராடி, 1951 ஆம் ஆண்டு முதல் முறையாக அரசியல் சட்டம் திருத் தப்பட்ட பிற்பாடு, மத்திய கல்வி நிலையங் களுக்கும் அது பொருந் தும் என்பது இதுவரை அப்படியே கிடப்பில் இருந்தது. ஆனால் முதல் முறையாக மத்திய கல்வி நிறுவனங்கள் அய். அய்.டி, அய்.ஏ.எம்.எஸ் என்று சொல்லக்கூடிய மத்திய கல்வி நிறுவனங்களில் எல்லா துறையிலும் கதவு திறக்கப்பட் டது. 27 சதவிகித இடஒதுக்கீடு இன்னும் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை. இருந் தாலும் முதல் முறையாக கதவு திறந்து உள்ளே போனார்கள்.

அதைத் தடுப்பதற்காக உச்சநீதிமன்றத்திலே எவ்வளவோ முயற்சிகள் செய்து,அதையும் தோற் கடித்து இது செல்லும் என்று சொல்லக் கூடிய அளவிற்கு கொண்டு வந்து அந்த வாய்ப்பைச் செய்தார்கள்.

அகில இந்திய அளவில் நடைபெறும் மருத்துவ மேற்படிப்புக்கான (Post Graduate) தேர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு முதன்முதலாக இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யப்பட்டது.

பயிற்சிக் காலத்திலும் (Apprenticeship) இட ஒதுக்கீடு உண்டு என்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு முன்னால் தாழ்த் தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்குக் கூட இட ஒதுக்கீடு கொடுக் கப்படவில்லை.

மெட்ரிக் கல்வியளவிலான அகில இந்தியத் தேர்வினை (Staff Selection Commission) இந்தியா வில் உள்ள அனைத்து மொழிகளிலும் எதில் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

வேலை வாய்ப்பில் காலியிடங்களை நிரப்பும் (Back Log) முறை மேற்கொள்ளப்பட்டது.

பொருளாதார அளவு கோலை (Creamy Layer) நாம் ஏற்காதவர்கள் என் றாலும் கூட, பெரும்பா லான பிற்படுத்தப்பட்ட வர்கள் ஓரளவு பயன் பெறும் வகையில் பொருளாதார அளவு என்பதில் ஆண்டு வருமானம் இரண்டரை லட்ச ரூபாய் என்பது நான்கரை லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது.

நாம், விடுதலையிலே முதல்வர் கலைஞர் அவர்களுக்கு சுட்டிக்காட்டினோம். அவர்கள் எழுதி னார்கள். பிறகு தான் அது மத்திய அரசினுடைய கவனத்திற்குச் சென்று அமைச்சரவையிலே நம்முடைய மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு போன்றவர்கள் மிக வேகமாக வலியுறுத்தியதி னுடைய விளைவாகத் தான் அது நான்கரை லட்சம் என்று உயர்த்தப்பட்டது.

--------------- தொடரும் "விடுதலை" 10-4-2009

2 comments:

Unknown said...

//ஏற்கனவே இருந்த மதவாத சக்தியான பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட மதச்சார்பின்மை தகர்க்கப்பட்டது. கல்வித் திட்டங்களில் மதவாதக் கருத்துகள் திணிக்கப்பட்டன. பல்கலைக் கழகங்களில் ஜோதிட மூடநம்பிக்கைகள் பாடங்களாக வைக்கப்பட்டன. வேதக் கணிதம் என்ற பார்ப்பனியத் தன்மையுள்ள பாடமுறைகள் வகுத்துக் கொடுக்கப்பட்டன.

வரலாறுகள் திரித்து எழுதப்பட்டன. சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று கணிணி மூலம் எருதைக் குதிரையாக்கிக் காட்டி திரிபு வேலை செய்யப் பட்டது.//

மக்கள் நலனுக்கான திட்டங்கள் எதுவும் நிரைவேற்றினார்களா இல்லையா?

மேற்கண்டவைகள் எல்லாம் மதத்தைப் பரப்புவதற்கான திட்டங்களாகவே இருக்கிரதே அதான் கேட்டேன்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்ம் கருத்துக்கும் மிக்க நன்றி