Search This Blog

20.4.09

ஜெயலலிதாவை வைகோ எதிரொலிப்பது ஏன்?


ஜெயலலிதாவை வைகோ எதிரொலிப்பது ஏன்?

சேது சமுத்திரத் திட்டம் என்னால்தான் வந்தது
என்று மார்தட்டிய வைகோ திசை மாறிப் பேசுவது ஏன்?

தமிழர் தலைவர் கண்டனம்!


சேது சமுத்திரத் திட்டம் பற்றி வைகோ தெரிவித்துள்ள முரண்பாடான கருத்துகள், ஜெயலலிதா கூறும் ராமன் பாலம் - மனதைப் புண்படுத்துகிறது என்பவற்றை வைகோ எதிரொலிக்கும் கருத்து குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

2001, 2005 ஆகிய இரு பொதுத்தேர்தல்களில் - தான் (அ.தி.மு.க.) வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில், சேது சமுத்திரத் திட்டத்தைக் காலதாமதம் செய்வதற்காகக் கண்டித்து, அது ஆடம்ஸ் பாலம் பகுதி என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுவிட்டு அதனை செய்து முடிக்க ஏன் காலதாமதம் என்று குற்றப் பத்திரிகை வாசித்தவர் ஜெயலலிதா அம்மை யார்!

தமிழ்நாட்டு மக்களை அசல் ஏமாளிகள் எனக் கருதி, சேது சமுத்திரத் திட்டத்தை (ரூபாய் 2450 கோடி செலவில் 85 விழுக்காடு வேலைகள் முடிக்கப்பட்டு விட்ட நிலையில் முடக்கி இலங்கையின் சிங்கள இராஜபக்சே அரசின் பொரு ளாதார வரவு தடைபடக் கூடாது இப்புதிய கால்வாய் வருவதன்மூலம் என்ற உள் நோக்கத்தோடு) 100 நாளில் ரத்து செய்வேன் என்கிறார் வெளிப்படையாக! அத்தேர்தல் அறிக்கையை 16.4.2009 அன்று அவர்களது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கையிலும் கொடுத்துவிட்டு, தாங்கிப் பிடிக்கும்படி தாழ்த்தி விட்டார் அவர்களையும்!

சேதுக்கால்வாய்த் திட்டமே தன்னால்தான் வந்தது என்று மார்தட்டிய மாஜி மாவீரர் வைகோ.

இப்போது பாவம் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசுவதுபோல், பெரிய கப்பல்கள் செல்லும் வகையில் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும் என்று வியாக்கியான வசனம் வாசிக்கிறார்!

அந்தோ பரிதாபம்! தத்து வார்த்த விளக்கமும் தருகிறார்.

விளக்கெண்ணெய் விளக்கம்

அனைத்துப் பிரச்சினைகளிலும் தோழமைக் கட்சிகளிடமும் ஒரே மாதிரியான அணுகுமுறை இருக்காது என்று விளக்கெண்ணெய் விளக்கத்தைத் தரும் விந்தையில் ஈடுபட்டுள்ளார்!

அப்போதுகூட இராமன் கோயில் கட்டும் திட்டம் தேசிய ஜனநாயக முன்னணியில் (N.D.A.) இடம் பெறவில்லையே - அதற்குக் கூட்டணியினர் இடம் தர வில்லையே வைகோவுக்கு மறந்துவிட்டதா?

ஹிட்லர் தர்பார் நடத்தவா?

அவ்வளவு தூரம் போவானேன்? இன்றும் தேசிய ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ள அய்க்கிய ஜனதா தளத்தின் பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணிச்சலுடன் மீண்டும் அயோத்தியில் இராமன் கோயில் திட்டம் எங்க ளுக்கு ஏற்காத திட்டம்; (N.D.A.) கூட்டணி ஏற்காது. அதன் தேர்தல் அறிக்கை யில் இடம்பெற்றால் எங்க ளுக்கு அதில் வேலை கிடை யாது; வெளியேறுவோம் என்று வீரம் கொப்பளிக்க பதில் கூறினாரே.

பெரிய கப்பல்கள் செல்ல முடியாதா?

பாவப்பட்ட வைகோ அவர்களே! அதுபோல் சொல்ல உங்களுக்கு ஏன் துணிவில்லை? அம்மாவை பிரதமராக்கி, பொடாவைவிட கடுமையான அடக்குமுறை ஹிட் லர் தர்பாரை மறுமுறையும் நடத்திடவா?

இந்த லட்சணத்தில் புது விளக்கம் சேது சமுத்திரத் திட்டத்தில் பெரியகப்பல் கள் செல்லும் வகையில் மாற்றி அமைக்கவேண்டும் என்று அறிக்கை விடுகி றாரே!

அதை மதுரையில் பிரதமர், சோனியா, கலைஞர் மற்றும் இன்றுள்ள பா.ம.க. இடதுசாரிகள் உள்பட கலந்துகொண்டு முழங்கி னார்களே (2005 தோழ மைக் கட்சிக் கூட்டத்தில்) அப்போது ஏன் சொல்ல வில்லை?

அன்று மார் தட்டினீர்கள்!

இன்று வியாக்கியானம் கூறி அம்மாவிடம் அடைக்கலம் - சரணாகதி அடைந்ததை அகிலத்திற்கு வெளிச் சம் போட்டுக் காட்டுகிறீர் களே, வெட்கமாக இல்லையா இப்படிப் பேசுவதற்கு?

உண்மைகள்தான் என்ன?

2007-08 இல் இந்தியாவின் 12 (பன்னிரண்டு) முக்கிய துறைமுகங்களில் சென்ற கப்பல்களின் எண் ணிக்கை 22,141 ஆகும்!

இதில் 40 ஆயிரம் டன் எடை கொண்ட கப்பல்கள் (கடந்து சென்றவை) 67.3 சதவிகிதம்!

50 ஆயிரம் டன்னுக்கு மேலே எடையுள்ள கப்பல் கள் அடுத்து 78.12 சத விகிதம் செல்லவும் வாய்ப்பு உண்டு.

உலகில் உள்ள மொத்த கப்பல் போக்குவரத்து சத விகிதமே 86.1 சதவிகிதம் தான்.

50 ஆயிரம் டன் எடை யுள்ள கப்பல்கள்கூட இப் போதுள்ள சேதுக்கால் வாய்த் திட்டம் மூலம் செல்ல முடியுமே!

முதலில் எந்தக் கால் வாய்க்கும் அகலம் அதிகம் வைத்து எழுப்புவதில்லை. 12 மீட்டர் நீளமுள்ள திட்டமாக அது மேலும் கப்பல்கள் போக்குவரத்துகள் அதிகமாக அதிகமாக விரிவுபடுத்தும் திட்டம் தானே வரும் என்பது விவரம் புரிந்தவர் களுக்குத் தெரியும்! தூங் குபவர்களை எழுப்பலாம்; தூங்குவதுபோல பாசாங்கு செய்யபவர்களை எழுப்ப முடியுமா?

இல்லாத ஊருக்குப் போகாத பாதையில் தெரியாத மனிதனிடம் புரியாத மொழியில் பேசிய கதை போல, இப்படி உளறிக் கொட்டி, சரணாகதிப் பட லத்தின் உச்சமாக அம் மாவை பிரதமர் நாற்காலிக் குப் பரிந்துரை செய்து, தான் பட்ட அவமானத்தை மறைக்க முயற்சிக்கலாமா?

சுயமரியாதை கொள் தோழா!

மத உணர்வும் - வைகோவும்!

இந்த லட்சணத்தில் பெரியார் - அண்ணா படம் போட்டுக்கொண்டே,

மத உணர்வைப் புண்படுத்தாது (வேறு தடத்தில்) மாற்று வழியை ஆலோசிக்கலாம் என்று விளக்கம் வேறு.

ஸ்ரீராமன் பாலத்தை இடிக்கவே கூடாது என்ற ஜெயலலிதாவின் குரலைத் தானே இவர் (வைகோ) எதிரொலிக்கிறார்?

இராமனை எதிர்த்து தீ பரவட்டும் என்ற அண்ணா கொள்கை கூடவா புரியவில்லை - பெரியார் கொள்கை என்னவென்றே தெரியாது என்றாலும்கூட!

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் கூட மத உணர்வைப் புண்படுத்துகிறது என்பது இந்து முன்னணியின் நிலைப்பாடு.

அதற்காக அதைக் கைவிடச் சொல்லலாமா?

அய்யா, அண்ணா கூறிய சுயமரியாதைத் திருமணம்கூட மத உணர்வுக்கு மாறானதுதானே! கைவிட்டுவிடச் சொல்வீர்களா?

குளிக்கப் போய் இப்படி சேற்றையா வாரிப் பூசிக் கொள்வது?

------------------ "விடுதலை" 20.4.2009

1 comments:

ttpian said...

அடிமை சுதந்திரமாக பேசமுடியாது!