Search This Blog

28.4.09

முதல்வர் கலைஞரின் உண்ணாவிரதத்தைக் கொச்சைப்படுத்துவதேன்?
முதல்வர் கலைஞரின்
உண்ணாவிரதத்தைக் கொச்சைப்படுத்துவதேன்?

ஈழப் பிரச்சினையை ஆயுதமாகப் பயன்படுத்த
எண்ணியோர்க்கு ஏற்பட்ட ஏமாற்றமே காரணம்!


தமிழர் தலைவர் அறிக்கை

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துபவர்கள் யார் என்று படம் பிடித்துக் காட்டியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:-

தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் நேற்றைய தினம் (27.4.2009) யாரும் எதிர்பாராத நிலையில் சென்னை அண்ணா நினை விடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

கலைஞரின்
நோக்கம் என்ன?


ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை பேணப்படவும், அங்கு மூர்க்கத்தனமாக அவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தப்படும் போர் நிறுத்தப்படவேண்டும் என்பதற்காகவும் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அழுத்தம்தான் முதலமைச்சர் மேற்கொண்ட உண்ணாவிரதமாகும்.

அது எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவும் செய்தது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அளித்துள்ள செய்திக் குறிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய அரசின்
செய்திக் குறிப்பு


இலங்கையில் போர் நடவடிக்கைகள் முற்றுப் பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான் வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்ற குடி மக்களைப் பெருமளவிற்குக் கொல்லும் ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. குடிமக்களை மீட்பதற்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சி களையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இனி கவனம் செலுத்தும்.

போர் முனையில் சிக்கிக் கொண்டுள்ள தமிழ்க் குடி மக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரின் பாதுகாப்புப் பற்றிய பிரச்சினைகளே முதன்மையானவை ஆகும். அவற்றைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசு இன்று செய்துள்ள அறிவிப்பு முக்கியமான முதல் படியாகும்.

போர் முனையிலிருந்து வெளிவந்தோரின் துயரங்களைத் தணிப்பது மட்டு மன்றி, போர் நடைபெறாத பகுதியில் இன்னும் தங்கியிருக்கும் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகி யோரை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு தேவையான அவசர நடவடிக்கை மேற் கொள்வதுதான் தற்போதைய உடனடித் தேவை யாகும்.

உள்நாட்டில் குடி பெயர்ந்த மக்களும், பொது மக்களும்தான் இப்போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களைப் பாதுகாக்கவும, அவர்களது நலன்களுக்கு உறுதியளிக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.


போர்ப் பகுதியிலிருந்து வெளிக் கொணரப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் அவர்கள் 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிதியைப் பயன்படுத்துவதற்கான விவரங்கள் பரிசீலிக் கப்பட்டு வருகின்றன.

மனிதாபிமானம் கிடையாதா?

முதல்வர் கலைஞர் அவர்களின் உண்ணாவிரதம் - மேற்கண்ட விளைவுகளுக்குக் காரணம் என்பது மிக வெளிப்படையாகத் தெரிந்திருந்தும், அரசியல் - தேர்தல் நோக்கோடு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் முதல்வர் கலைஞர் அவர்களின் நேர்மையான ஒரு போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது என்பது அநாகரிகமாகும்.

85 வயதைக் கடந்த தமிழ்நாட்டின் மூத்த தலைவர் - முதலமைச்சரின் உண்ணாவிரதத்தைக் கேலி பேசுவது - பேசுபவர்களின் மனிதாபிமானமற்ற தன்மையையும், அநாகரிக உணர்வையும்தான் பறை சாற்றும்.

அன்றும் இதே வார்த்தை!


விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தபோதுகூட அ.இ. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அம்மையார் - கருணாநிதியும் திருமாவளவனும் பேசி வைத்துக்கொண்டு நடத்திட்ட நாடகம் என்றுதான் குறிப்பிட்டார்.

திருமாவளவன் அவர்களின் உண்ணாவிரதத்தை ஆதரித்து அவருக்குப் பக்க பலமாக இருந்ததாகக் கருதப்பட்டவர்கள் பெரும்பாலோரும் இப்பொழுது ஜெயலலிதாவின் தலைமையிலே அணிவகுத்து நிற்கிறார்கள். இப்படி அணிவகுத்து நிற்பவர்கள் ஈழத் தமிழர் களுக்கு உண்ணாவிரதம் இருக்கும் முதல்வரின் செயல்பாட்டை நாடகம் - நாடகத்தின் உச்சக்கட்டம் (க்ளைமாக்ஸ்) என்றெல்லாம் கேலி பேசுகிறார்கள். (திருமாவளவன் நாடகத் தில் இவர்கள் ஏற்ற பாத்திரம் எதுவோ!)

சேர்ந்த இடம் அப்படி

சேர்ந்த இடம் அப்படி! ஈழத் தமிழர்களுக்கு நல்லது எதுவும் நடந்துவிடக் கூடாது - இலங்கை இராணுவம் குண்டுவீச்சை நிறுத்தி விடக் கூடாது; தமிழர்களின் மரணப் பட்டியல் வந்துகொண்டே இருக்க வேண்டும்; இதைப் பயன் படுத்தி நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான அணியைத் தோற்கடித்துவிட வேண்டும் என்கிற கழுகு மனப்பான்மையில் - ஜெயலலிதா தலைமையிலான அரசியல் அணியினர் செயல் படத் துடிப்பது பரிதாபத்திற்குரிய ஒன்றே!

குறிப்பிடத்தக்க நிலைப்பாடு அல்லவா!

கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான் வழித்தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்றவை நிறுத்தப்படும் என்று அறிவித்திருப்பது போர் நிறுத்தத்தில் மிகவும் குறிப்பிடத் தக்க ஒரு நிலைப்பாடு என்பதைக்கூட அறியாதவர்களா நம் அரசியல்வாதிகள்?

ஊடகங்கள் விஷமம்

இவர்களோடு தமிழ் நாட்டு ஊடகங்களும் கைகோத்துக் கொண்டு, திசை திருப்பும் தலைப்பு களில் செய்திகளைப் பெருக்கி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. (ஆனால், வழக்கத்துக்கு மாறாக தினமலர் ஒழுங்காகத் தலைப்புப் போட்டுள்ளது).

கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசுக்கு எதிராகக் காயை நகர்த்த வேண்டும் என்பதிலேதான் ஊடகங்களின் குறிகள் இருந்துகொண்டே இருக்கின்றன.

முதல்வர் உண்ணாவிரதம் இருந்த காலகட்டம் எது?

எந்தச் சூழ்நிலையில் முதல்வர் கலைஞர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்?

பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஒரே நேரத்தில் கொன்று குவிக்கும் ரசாயனக் குண்டுகளைப் பயன் படுத்த அதிபர் ராஜபக்சே ஆணை பிறப்பித்துவிட்டார் என்கிற தகவல் வேகமாகப் பரவிக்கொண்டிருந்த ஒரு நேரத்தில் (குறுஞ்செய்தி எஸ்.எம்.எஸ். மூலமாகவும்) விடிந்தால் என்ன நடக்குமோ என்ற வேதனையும் பீதியும் நிலவிய ஒரு முக்கியமான காலகட்டத்தில் கலைஞர் அவர்கள், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தன் காரணமாக தமிழர் களுக்கு நடக்க இருந்த ஒரு பேரழிவு தடுக்கப்பட்டது என்பதை மனசாட்சி உள்ளவர்கள் நன்றிக் கண்ணீர் மல்க மனிதநேயத்தோடு போற்றுவார்கள்.

ஏற்பட்ட விளைவும் அரசியல்வாதிகளின் அதிர்ச்சியும்

பல்வேறு போராட்டங்களை நடத்தியும், சட்டப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், இந்திய அரசின் பிரதிநிதிகள் பலமுறை ராஜபக்சேயைச் சந்தித்தும், வெளிநாடுகள் பலவும் பல வகைகளில் அழுத்தங்களைக் கொடுத்தும், அய்.நா. செயலாளர் வேண்டுகோள் விடுத்தும் அசைந்து கொடுக்காத இலங்கை அதிபர் ராஜபக்சேவை, தமிழ்நாட்டின் முதல்வர், மூத்த தலைவர் மேற்கொண்ட ஒரு சில மணிகள் அளவிலான உண்ணாவிரதம் அசைத்திருக்கிறது; இறங்கி வரச் செய்திருக்கிறது - உயர்மட்டக் குழுவை அவசர அவசரமாகக் கூட்டி புதிய அறிவிப்பை வெளியிடச் செய்திருக்கிறது என்றவுடன்-

ஈழப் பிரச்சினையை வைத்தே தேர்தலில் கரை ஏறலாம் என்று துடி துடித்துக் கொண்டிருந்த அரசியல்வாதிகளுக்குப் பெரும் அதிர்ச்சியாகப் போய்விட்டது. நம்பியிருந்த ஒரு ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டு விட்டதே என்ற ஆத்திரத்தில் புலம்பும் சொற்களே அவர்களின் விமர்சனங்களாக வெளி வந்துள்ளன என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஈழத்தமிழர்களைக் காக்க ஜெயலலிதாதான் தலைவரா?

ஈழத்தமிழர் பிரச்சினையில் தொடர்ச்சியாக - இயல்பாக ஈடுபாடு காட்டி வருபவர்கள் யார்? என்பது தான் மிக முக்கியம். சந்தர்ப்பவாதிகளின் சதுராட்டங்களில் ஏமாந்துவிடக் கூடாது.

போர் நிறுத்தம் செய்யச் சொல்வது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றுவதற்கே என்றும், இலங்கையில் தற்போது நடப்பது உள் நாட்டுப் போர் என்றும், அதை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்துகொள்ளாதது விந்தையாக உள்ளது என்றும், உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால் பின்னர் நம் நாட்டு உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும் (நமது எம்.ஜி.ஆர். 16.10.2008) என்றும் பச் சையாக கொஞ்சம்கூட சந்தேகத்திற்கு இடமின்றி, ராஜபக்சேயின் சகோதரியாக அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதாதான் - ஈழத் தமிழர்களைக் காக்க வந்த - வாராது வந்த மாமணியாகக் காட்சியளிக்கிறார் சில அரசியல் கட்சித் தலை வர்களுக்கு. ஜெயலலிதா இப்படியெல்லாம் கொச்சைப்படுத்தி அறிக்கை வெளியிட்டபோது இந்த வீராதி வீரர்கள் எங்கே போனார்கள்? ஒரு கண்டனம் உண்டா?

இதே ஜெயலலிதா மே 13 ஆம் தேதிக்குப் பிறகு என்ன பேசுவார்? அது அவருக்கே கூடத் தெரியாத ஒன்றாயிற்றே!

ஜெயலலிதாவின் திடீர் ஞானோதய உரைகள் தேர்தலுக்குப் பிறகும் தொடரும் என்று அவரது கூட்டாளிகளால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா?

தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் இது.

உண்மை நண்பர்கள் யார்? நண்பர்கள் போல நடிப்பவர்கள் யார்? பகை வர்கள் யார்? பாம்புக்கும் பழுதைக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதை அறிவதில் தமிழர்களுக்குத் தடுமாற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது - எச்சரிக்கை எச்சரிக்கை!


----------- கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம். "விடுதலை" 28.4.2009

18 comments:

Unknown said...

கலைஞ்ர் உண்ணாவிரதம் என்பது ஒரு நாடகமே. அதை நியாயப்படுத்த யாராலும் முடியாது. இத்துனைகாலமும் தமிழுக்கு அவர் செய்த அத்தனையையும் அவரே குழி தோண்டி புதைத்துவிட்டார் என்பது மட்டுமே உண்மை. இந்த தமிழின துரோகத்தை தமிழினமும், வரலாறும் என்றும் மண்னிக்கப்போவதில்லை.

Selva said...

உண்ணாவிரத நாடகத்தை தான் கொச்சைப்படுத்தினார்கள்.
கலைஞர் ஏன் வீணாக பொய் சொன்னார். கலைஞரின் நாடகத்தால் ஈழத்தமிழரின் வேதனைகள் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை

இரா.சுகுமாரன் said...

//ஊடகங்கள் விஷமம்

இவர்களோடு தமிழ் நாட்டு ஊடகங்களும் கைகோத்துக் கொண்டு, திசை திருப்பும் தலைப்பு களில் செய்திகளைப் பெருக்கி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. (ஆனால், வழக்கத்துக்கு மாறாக தினமலர் ஒழுங்காகத் தலைப்புப் போட்டுள்ளது).//
\
எப்போதும் தினமலர் அந்த தவரை செய்யாது. இந்த முறையும் ஒரு மிகப்பெரிய பொய்யை சொல்லியுள்ளது.
அது தான் தலைப்பு செய்தி

bala said...

திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

வழக்கம் போல் சூரமணி அய்யா மஞ்ச துண்டின் உண்ணாவிரதம் என்ற அயோக்யத்தனத்துக்கு ஜல்லி அடித்திருக்கிறது.ஆஸ்தான பாசறை நாயான நீங்களும் சாப்பிட்ட பாசறை பிரியாணிக்காக விசுவாசத்தோடு குரைத்திருக்கிறீர்கள்.வாழ்க வாழ்க.

சொல்லப்போனால் மஞ்ச துண்டின் உண்ணாவிரதத்தை யார் எதற்காக கொச்சைப் படுத்த வேண்டும்?மஞ்ச துண்டு அய்யா தான் அவ்வப்போது உண்ணாவிரதம் என்ற சமாசாரத்தை கொச்சைப் படுத்துகிறார்.இது கூட புரியாமல் பாசறை நாய்கள் ஊளையிடுகின்றன.வெட்கம் வெட்கம்.

பாலா

அஹோரி said...

நம்பிட்டோம் ..... நீங்கள் புட்டு புட்டு வைத்த காரணங்களை படிச்சிட்டு நம்பிட்டோம் ....
தமிழர்களுக்காகவே வாழ்ந்து ... தன் பிள்ளைகள் நலனை விட , மக்கள் நலனே முக்கியம் என வாழும் உன்னத தலைவர் ...

உடன் பிறப்புக்களுக்கு கூசாதா இப்படிப்பட்ட பதிவுகளை எழுத ?

மு. மயூரன் said...

வீரமணியை விடுங்கள், இந்த அபாண்டப்புளுகை, அயோக்கியத்தனமான நியாயப்படுத்தலை பதிவுடும்போது உங்களுக்கே மன உறுத்தலாக இருப்பதில்லையா?

கருணாநிதியின் உண்ணாவிரதக்கூத்து கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம், அதையும் தாண்டிய அரசியல் கோமாளித்தனம் என்பது தமிழ் கூறும் நல்லுலகே உணர்ந்துகொண்ட ஒன்று.

கருணாநிதியை நேர்மைக்கு மாறாக நியயப்படுத்த நீங்கள் தொடங்கியதிலிருந்து வரும் எதிர்வினைகளை வைத்தே சிந்தித்துப்பாருங்கள்.

கருணாநிதியையும் காங்கிரசையும் நேர்மைக்கு விரோதமாக காப்பாற்ற முயல்வதன்மூலம் தி.க, சாகும் தமிழ் மக்களுக்கு மன்னிக்க முடியாத வரலாற்றுத்துரோகம் ஒன்றினைச் செய்துகொண்டிருக்கிறது.

ஈழத்தமிழர்கள் சிந்தும் ரத்தத்தினதும் கண்ணீரினதும் பெயரால் கேட்கிறேன் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். போரை நடத்துவது இந்திய அரசு. நடைமுறைப்படுத்துவது காங்கிரஸ் அரசாங்கம். அதற்கு ஒத்து ஊதி முட்டுக்கொடுப்பது கருணாநிதியின் கட்சி. ஈழத்தமிழரை இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் கொல்கிறார்கள்.

இவர்களை தனிமைப்படுத்தி தண்டிக்கும் சரியான முடிவை தி.க எடுக்க வேண்டும்.

இந்தி என்று பேசினாலே அந்தக்கட்சிக்கு வரலாறு இல்லாமலாக்கியது திராவிடர் இயக்கம். பார்ப்பனீயத்தை ஒட்ட நறுக்கித் தனிமைப்படுத்தியது திராவிடர் இயக்கம். மதவாதம் பேசிக்கொண்டு இன்றும் கூட தமிழ் நாட்டுக்குள் எவனும் வரமுடியாதளவு அதிரிவுகளை உருவாக்கியது திராவிடர் இயக்கம்.
அந்த இயக்கத்தின் முன்னால் பாரிய வரலாற்றுப்பணி இருக்கிறது.

ஈழத்தமிழர் அவலத்தில் குளிர்காய்பவர்களை தனிமைப்படுத்தி, தமிழீழத்தை அங்கிகரிக்காமல் ஓட்டுக்கேட்டு வரவே முடியாதென்ற ந்லையை உருவாக்க வேண்டிய பணி. ஈழத்தமிழரை கொன்றுகுவிக்கும் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியின் அரசியல் எதிர்காலத்தையே கருவறுக்கும் பணி.

nimmie said...

nobody can vulgarise kalignars fast better than himself.Than Rajabakshe had decided to stop heavy sheeling[there was no need for it any longer]was known to many probably on Monsday mornig itself.It would be childish to think that Kalaignar could not know[with his constant touch with PM and HM as he himself admits.But the real joke is the Super hero of Madurai sitting in fast!!!!

வெண்காட்டான் said...

eela tamilarai ketta villai. manitharaai kekkiran. ungal arasial vendam. kalaigaro jeyavo eelathamillarkal kollapaduvathai niruthinarrkala? antha vakaillil kalaigar saithatu nadakame. pls engal makkalai kapparamudiyavittal piraku etahrku tamillina thalaivar enda pattam.

அசுரன் திராவிடன் said...

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை(15.02.2009) தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் வன்னி மக்களுக்கும் கேணல் ரூபன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:
15.02.2009
தமிழீழம்.


அக்கடிதத்தின் சில பகுதிகள் இவை அனைத்தும் வன்னி மக்களுக்கு தமிழக மக்களுக்கு அல்ல இவரின் இந்த கருத்தை படித்து விட்டு அப்புறம் தமிழ் நாட்டுக்கு வந்து கலைஞரின் மற்றும் அவரது கூட்டணி கட்சிகளின் துரோகம் பற்றி பேசுங்கள் :


அன்புக்குரிய மக்களே!
எமக்காக தமிழகத்தில் இருக்கும் மக்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் உங்களின் விடிவிற்காக தீக்குளிப்புக்களிலும் பல வகையான அகிம்சைப் போராட்டங்களையும் நடத்தி வருவது உங்களிற்கு தெரிந்ததே. அவர்களால் வெளியே இருந்து செய்யக் கூடியதை செய்கின்றார்கள்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை போராட்டத்தில் இணைத்து உங்கள் விடிவிற்கான இறுதிப்போரில் போராட வேண்டும். தேசியத் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.

அன்புக்குரிய மக்களே!
நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மை போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 வருடங்களாக போராடி உங்களது இறுதி இலட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும் வேளை நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா?

உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும்.

நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? If we don't fight for our freedom who else will? வன்னியில் இருக்கும் 250,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமலா இருக்கிறீர்கள்? சிந்தித்து பாருங்கள் 50,000 இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்திடும்.
அன்புக்குரிய தம்பி, தங்கை அக்கா அண்ணா உறவுகளே!

போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது.

1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக வாழ எமக்கென்று ஒரு தேசம் வேண்டுமென்பதால் நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள்.


உங்களது வலியை நேரில் தினம் தினம் கண்டு மனம் வெதும்பி குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது. நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்கவில்லை அப்படியிருந்தும் என்னைப் போராட உந்தியது.
ஆனால் நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது.


சிங்கள இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா? இன்னும் வலியை ஏற்படுத்தினால் தான் நீங்கள் போராடுவீங்களா?
அன்புக்குரிய மக்களே!
எமது தேசியத் தலைவர் காலத்தில் நீங்கள் சுதந்திரம் அடையாவிட்டால் ஒரு காலமும் நீங்கள் சுதந்திரமாக வாழமாட்டீர்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழ தேசியத் தலைவர் கூறியது போல் 'ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டமாக- தேசியப் போராட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.'
'கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்' கேட்டோம் தந்தார்களா? இல்லை என்னத்தை தந்தார்கள் தாங்கொணா வலியை தந்தார்கள். அதன்பின்னர் என்னசெய்ய வேண்டும் தட்டுங்கள் நிச்சியமாக திறக்கப்படும்.
அன்புக்குரிய மக்களே!
எல்லோரும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி விசைவில்லை தட்டுங்கள் நிச்சியமாக சுதந்திரம் கிடைக்கும்.
அன்புக்குரிய மக்களே!
தமிழரிற்கு இருந்த போர்க்குணம் குன்றிவிட்டதா இல்லை. அதை நீங்கள் இன்னும் வெளிக்காட்டவில்லை. அந்தத் தருணம் வந்துவிட்டது. நான் யார்? நாங்கள் யார்? உங்களது பிள்ளைகள் நீங்கள் வளர்த்துவிட்டவர்கள் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து போராடவில்லை.
எனவே அன்புக்குரிய தாய்மாரே! தந்தைமாரே!
எனது குடும்பத்தில் ஒரு மாவீரர் எனது குடும்பத்தில் இரு மாவீரர் என பார்க்காதீர்கள். போராட வலுவுள்ள உங்களது பிள்ளைகளை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இளம் சந்ததிக்கு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். எமக்கென்று ஒரு தேசிய இராணுவத்தை கட்டி எழுப்புங்கள். இந்தப் பூமிப்பந்திலே இருப்பை, பலம் தான் தீர்மானிக்கின்றது.
வலிந்தவன் பிழைப்பான் என்ற தத்துவத்திற்கேற்ப எல்லோரும் சேர்ந்து தேசியத் தலைவரின் கையை பலப்படுத்துங்கள். எம்மிடம் தேவையான ஆயுதம் உள்ளது. மிகுதி எதிரியிடம் உள்ளது. எமக்கு தேவையானது எல்லாம் ஆளணி ஒன்றுதான்.
பல மடங்கு கொண்ட ஆளணியையும் உலக நாடுகள் வழங்கும் இராணுவ தளபாடங்களையும் கொண்டுள்ள சிங்கள இராணுவத்திற்கு எதிராக குறைந்த ஆளணியை வைத்து இரண்டு வருடத்திற்கு மேலாக நாம் போராடுகின்றோம் என்றால் யாரிற்கு வெற்றி நீங்கள் நினைத்துப்பார்த்தீர்களா?
நாங்கள் அழிவது போல் சிங்கள தேசமும் அழிந்துகொண்டுதான் இருக்கின்றது பொருளாதாரத்தில், இந்தத் தருணம் நீங்கள் திரண்டெழுந்து ஓங்கி ஒரு அடி அடித்தால் எழும்ப முடியாமல் சிங்களம் நொருங்கும்.
அன்புக்குரிய இளைஞர் யுவதிகளே!
உங்களிற்கு உங்களது பெற்றோரை பார்க்கும் பொறுப்பு இருக்கு என்பது தெரியும் தாய் தந்தைமாரை காப்பாற்ற வேண்டும் என்றால் தாய்நாட்டை காப்பாற்றினால் தான் முடியும். இது கற்பனையல்ல இதுதான் நிஜம். நாம் எவ்வளவு காலம் சாவிற்குள் வாழ்வது? தினம் தினம் செய்தியில் சிங்கள இராணுவத்தின் எறிகணை வீச்சில் வான் தாக்குதலில் இத்தனைபேர் படுகொலை செய்யப்பட்டு காயப்பட்டுள்ளனர் என்பதை தான் கேட்கின்றோம், பார்க்கின்றோம்.

இவர்களில் அரைவாசிப்பேர் போராட வலுவுள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள் அந்த வயதில் இவர்கள் ஏன் அநியாயமாக சாகவேண்டும். செத்தவர்கள் வீதியோரங்களிலும் காணிகளிலும் புதைக்கப்படுகின்றார்கள். ஏன் இந்த அவலம். இவர்கள் எல்லாம் எமது அமைப்பில் இணைந்து ஆயுதம் ஏந்தி இராணுவத்தை கொன்று வீரச்சாவு அடைந்தால் தமிழன் வீரத்தோடு வாழ்ந்தான் அல்லது வீரத்தோடு மடிந்தான் என்று வரலாறு சொல்லும்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள் திருந்திவிட்டார்கள் என்று கூப்பாடு போட்டுவருபவர்களுக்கு பார்ப்பன பாலாவின் பின்னூட்டத்தை சமர்பிக்கிறேன்.

ஆனாலும் பார்ப்பனர்கள் உழைக்காமல் பிச்சை எடுத்துத்தான் திங்கனும் என்ற மனுதர்மத்தை கடைப்பிடிப்பதில் வல்லவர்கள் என்பதை பார்ப்பன பாலாவின் ஓசி பிரியாணியிலேயிருந்து தெரிகிறது.

அசுரன் திராவிடன் said...

பாலா என்ற பார்ப்பன பரதேசிக்கு காணிக்கை:

செய்தி:
****************************************************************************************************************************************************************************************
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் சுரேஷ் என்ற சுப்பிரமணியன் (அய்யர்)
இவரது மனைவி பிருந்தா வயது -21. இரவில் கழி வறைக்கு போய்விட்டுவந்தவரை, திடீரெனக் கண் விழித்த சின்னமாமா வைத்தியநாத அய்யர் (வயது 61) அப்பாமுறை,
வெங்கட் ராம அய்யர் (வயது 65) ஆகிய இருவரும் பிருந்தாவைத் தூக்கி வந்து வன்புணர்ச்சி செய்த பின்னர் கழுத்தைத் துண்டால் இறுக்கிக் கொலை செய்து, உடலில் மன்ணெண்ணெய்யை ஊற்றித் தீ வைத்துக் கொளுத்தினர்.
இப்போது சிறையில் இருக்கிறார்கள்.
**************************************************************************************************************************************************************************************************

நம் கருத்து:

ஏண்டா பார்ப்பான பரதேசிகளா இதை விட காட்டுமிராண்டி தனத்திற்கு உதாரணம் வேண்டுமடா எச்சி பொறுக்கி நாயே ......
ஏன்டா பரதேசி பார்ப்பான் தெரியாமல் தான் கேட்கிறேன் உன்னோட அக்கா ,தங்கை,அம்மா,உன் மகள் ஆகியோருக்கும் உன் மனைவிக்கும் வித்யாசமே தெரியாதடா பிச்சைகார நாயே ....இந்த கலாச்சாரத்தல வளர்ந்த உனக்கும் இந்த புத்தி தானடா வேலை செய்யும்....
கைபர், போலன் கணவாய் வழியாக வந்த மாடு மேய்க்கற பரதேசி காட்டுமிராண்டி தனத்த பற்றி பேசுது .....

61,65 வயசுலயும் கைல புடிச்சுட்டு அலையற பார்ப்பன நாய்கள் காட்டுமிராண்டி தனத்த பத்தி பேசுது இதுல இருந்த நாய் மாதிரி யார் அலையரதுன்னு தெரியும் டா? .....இந்த பார்ப்பான் மட்டுமா இப்படி ....சாட்சாத் பெரிய சங்கராச்சாரி ஊத்தவாயன் சுப்பிரமணி திருமதி அனுராதா ரமணனையும் சின்னவன் சொர்ணமால்யவையும் ருசி பார்த்தவர்கள் ஆயிற்றே .....இவர்களுக்கு பெயர்தான் லோக குரு அந்த வழி வந்த இந்த பொறுக்கிகள் காடு மிராண்டி தனம் பற்றி பேசுகிறது .......

இந்த கருத்து பார்ப்பானுக்கு மட்டும் அல்ல அவனுக்கு கால் வாங்கும் எம்மவனுக்கும் தான் .....

மனசாட்சி said...

ELANCHERAN ஐயா, கருணாநிதியையும், வீரமணியையும் எதிர்க்கறவன் எல்லாம் பாப்பான் என்று நினைப்பது உங்கள் அறியாமையை, மடத்தனத்தை காட்டுகிறது. நீங்கள் செய்கிற செயல்கள் காட்டு மிராண்டி தனமாகவே எனக்கும் தெரிகிறது. அழியும் இனத்தை மேலும் எண்ணெய் ஊற்றி அழிக்க நினைக்கும் வீரமணியை என்ன சொன்னாலும் தகும்.

நம்பி said...

Blogger மு.மயூரன் said..

//கருணாநிதியின் உண்ணாவிரதக்கூத்து கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம், அதையும் தாண்டிய அரசியல் கோமாளித்தனம் என்பது தமிழ் கூறும் நல்லுலகே உணர்ந்துகொண்ட ஒன்று.//

ஏம்பா! இந்த உண்ணாவிரதம் இருக்கலையின்னா தமிழக மக்கள் ஓட்டு போட மாட்டாங்களா? இல்லை இலங்கையிலிருந்து இங்கே வந்து ஒட்டு போட்டுறப்போறாங்களா! தேவையில்லாம எதுக்கப்பா உங்களை திருப்தி படுத்தனும்?

ஓட்டுப்போடப்போவது தமிழக மக்கள் அவங்களுக்கும் இலங்கைக்கும் சம்பந்தமே இல்லை!...

அப்புறம் எதுக்கு இங்க இருக்கறவங்க ஸடண்ட் அடிக்கப்போறாங்க?.... லாஜிக்கே தவறா இருக்கே...?

அங்கே தான் "ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி" ஆட்சியிலேயே அமைச்சராக இருக்குது...ஆறுமுக தொண்டை மான் அமைச்சராக இருக்குது..டக்ளஸ் இருக்குது...கருணா இருக்குது...அவங்களை விடவா...?

இங்கே மக்கள் நலத்திட்டம் கொண்டுவந்தா அங்கேயிருக்கிற, சம்பந்தமேயில்லாதவங்களுக்கு, ஒட்டே போடாதவங்களுக்கு ஏன்? எரியுது?

உங்க ஈழப்பற்றுக்கு ஒரு அளவேயில்லையா? புள்ளாவே "புல்" அரிக்குது.

(அங்கே மாற்றி மாற்றி கும் கும் கும்முனு ராஷபக்சேவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் குத்து குத்துன்னு குத்தறாங்க...)

அவங்களுக்கு வாக்களிக்க 35 லட்சம் தமிழ் மக்கள் இருக்கிறாங்க..அதுல 2 லடசம் பேர் கனடாவில இருக்காங்க...

அவங்க பிள்ளைங்க அமெரிக்காவில இருக்காங்க...ஆங்கிலம், பிரஞ்ச் படிக்கிறாங்க...நல்ல வேலையில இருக்காங்க...குபேர சம்பந்தா வாழுறாங்க...எல்லாம் நல்லா தான் இருக்காங்க....பாதிக்கப்பட்ட இஸ்லாமிய தமிழ் மக்கள் இருக்கிறாங்க...


அங்கேயிருந்து கொண்டே உலகத்துக்கே தமிழ் சொல்லிக்கொடுக்கிறாங்களே!...அவங்க, அவங்க பிள்ளைங்க படிக்கலைன்னா கூட மத்தவங்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கிறாங்க! அதுக்காகவா..?

(ஓ அதுக்காகத்தான் உண்ணாவிரதம் இருந்தாங்களோ...?!)

இங்கே என்ன 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் இருக்காங்க...அவ்வளவு தானே...!

எதனாச்சும்? கேட்டாங்களா (தமிழக மக்கள்)?

இல்லை இங்கே வந்து ஒட்டு போட்டுட்டுப் போங்க இல்லைன்னா தோத்துடுவோம் என்று சொன்னாங்களா...? கெஞ்சினாங்களா?

நீங்க ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் இங்கேயிருக்கறவங்க விவசாயிங்க பிரச்சினை தீராது என்று சொன்னார்களா?

நீங்க வந்தா தான், இங்க நல்ல விவசாயம் பார்த்து, அறுத்து தள்ளி உணவுபஞ்சத்தை போக்கிடுவீங்க என்ற காரணத்திற்காக உண்ணாவிரதம் இருந்தார்களா...?


கடந்த பத்து வருடத்தில் நடந்த விவசாயிகள் தற்கொலைகளை எல்லாம் இனிமேல் நட்க்காமல் தடுப்பீங்க! என்று நினைத்து உண்ணாவிரதம் இருக்கணுமா?

என்ன காரணம்? ஒன்னுமே இல்லையே!

(நாங்க(தமிழக மக்கள்) ஒட்டை அதுக்காகப் போடலியே!)

உண்ணாவிரதம் இருக்கிறாதால அங்கேயிருக்கறவங்க என்ன? இங்கேயிருக்கறவங்க வாழ்க்கையை பற்றி கவலைப்படபோறாங்களா? ஒன்னும் கிடையாது...

மிஞ்சி மிஞ்சிப்போனா உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணமுடியும்.

இது தெரியாதா? தமிழக மக்களுக்கு...

அயோக்கியத்தனங்கள் பற்றி நல்லா புறிஞ்சிருக்குமே...! புறியலேனா இணையத்திலேயே பல ஆதாரத்தளங்கள் இருக்குது, புட்டு புட்டு வைச்சிருப்பாங்க... போய் புறிஞ்சிக்கலாம்.

நம்பி said...

Blogger மு.மயூரன் said..

//ஈழத்தமிழர்கள் சிந்தும் ரத்தத்தினதும் கண்ணீரினதும் பெயரால் கேட்கிறேன் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். போரை நடத்துவது இந்திய அரசு. நடைமுறைப்படுத்துவது காங்கிரஸ் அரசாங்கம். அதற்கு ஒத்து ஊதி முட்டுக்கொடுப்பது கருணாநிதியின் கட்சி. ஈழத்தமிழரை இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் கொல்கிறார்கள்.//போரை நடத்துவது இந்திய அரசு, அப்படியே கூற்றுப்படியே இருக்கட்டும்...இலங்கை ஆட்சியில தான் ஈழம் இருக்குதே! அங்கேயே இதை முற்றிலும் தடுத்து நிறுத்தியிருக்கலாமே!
****************************

அப்போ! டொலோ சிறீ சபாரத்தினம், 984 டெலோ போராளிகள், அப்பாவி மக்கள், சம்பந்தமே இல்லாத இந்திய உயிர்கள் 14 பேர், ஒரு இந்தியத் தலைவர், அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், இதர போராளித் தலைவர்கள்...தமிழகத்தில் துப்பாக்கிச் சத்தங்கள், இருக்க இடம் கொடுத்த இடத்தில் சம்பந்தமேயில்லாத ஒரு உயிர் பலி....இதற்கெல்லாம் யாரப்பா காரணம்...? வேற மொழிக்கராங்க காரணமா?

முதல்ல இலங்கையில இருக்கிற தமிழ் மக்களை ஒன்று சேர்க்க முயற்சி செய்யுமே பார்ப்போம்!...அப்பறம் இங்க குறை சொல்லலாம்.

நம்பி said...

Blogger மு.மயூரன் said...

//ஈழத்தமிழர் அவலத்தில் குளிர்காய்பவர்களை தனிமைப்படுத்தி, தமிழீழத்தை அங்கிகரிக்காமல் ஓட்டுக்கேட்டு வரவே முடியாதென்ற ந்லையை உருவாக்க வேண்டிய பணி. //


இதை இங்கே பண்ண வேண்டியது இல்லை...இங்கேயிருக்கும் மக்களுக்கு பிரச்சினைகள் மிக மிக அதிகம்...இதையெல்லாம் யோசிப்பதற்கு கூட நேரமில்லை...அவ்வளவு பிரச்சினைகள்...

இங்க இதற்கு ஒட்டு வங்கிகள் என்பது கிடையாது...எவரும் இதை முக்கியமான தேரதல் அஜந்தாவாக வைத்து தனித்து நின்று வெற்றிபெற்வும் முடியாது.

எங்கே? இதை மட்டும் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து தேர்தலில் தனித்து நிற்க சொல்லுமே பார்ப்போம். டெபாசிட் கூட வாங்க முடியாது.

முதலில் தேர்தலில் நிக்கறவரின் உறவினர்களே ஒட்டு போடமாட்டாங்க.

தொந்தியை ரொப்பிக்கொண்டு...பத்தாது என்று பல் இடுக்கில் இருப்பதையும் குத்தி எடுத்து அதையும் வேஷ்டாப் போகுது என்று வாயிலே போட்டு விழுங்குபவர்கள் செய்வது...

இங்குள்ள மக்களை பற்றி கவலைப்படாதவர்கள், மக்கள் செல்வாக்கு அற்றவர்கள். இதை மட்டுமே கையெலுடுத்துக்கொண்டு திரிவார்கள்.

(அவங்களுக்கு உற்சாக டானிக்கே! இது மாதிரி தெளிவற்ற நிலையில் அங்கேயிருந்தும் (இலங்கையிலிருந்தும்), பிற நாடுகளிலிருந்தும் (புலம் பெயர்ந்தவர்கள்) வருகின்ற கூக்குரல்களினால் தான்)

தன் கண் முன்னே தடுக்கி விழுந்தவனை தூக்கிவிடக் கூட மனமில்லாதவர்கள்..வாய்கிழிய கடல் தாண்டிய அரசியலை பேசுவார்கள். உணர்வுகளை கொப்புளிக்க விட்டு காட்டுவார்கள்.

இதை அரசியலா சில பேர் பண்ணிக்கிட்டு இருப்பாங்க...இதுல மூக்கை, நாக்கை, இதுல எதையுமே நுழைக்காம இலங்கை தமிழ் மக்கள் கிட்ட நுழைச்சு வெற்றிக்கண்டா அனைவருக்கும் நலம்.

எகிப்துல நடந்தது பார்! அது மாதிரி!.

நம்பி said...

Blogger மனசாட்சி said..
//அழியும் இனத்தை மேலும் எண்ணெய் ஊற்றி அழிக்க நினைக்கும் வீரமணியை என்ன சொன்னாலும் தகும்.

April 30, 2009 2:40 AM//

இதை யாரும் இங்கேயிருந்து அழிக்கலை..? அதுவே ஒன்னுக்கொன்னு அடிச்சிகிட்டு அழிச்சாட்டியம் பண்ணி அழிச்சிகிட்டது.

தன் தலையில மண்ணை வாரிக்கொட்டிக்கிச்சு...போதாக்குறைக்கு இங்குள்ளவர்களின் சோத்துலேயும் மண்ணைப்போட்டுது.

நம்பி said...

//நளன் said...

கலைஞ்ர் உண்ணாவிரதம் என்பது ஒரு நாடகமே. அதை நியாயப்படுத்த யாராலும் முடியாது. இத்துனைகாலமும் தமிழுக்கு அவர் செய்த அத்தனையையும் அவரே குழி தோண்டி புதைத்துவிட்டார் என்பது மட்டுமே உண்மை. இந்த தமிழின துரோகத்தை தமிழினமும், வரலாறும் என்றும் மண்னிக்கப்போவதில்லை.

April 28, 2009 7:50 PM//

இதை முடிவு பண்ண வேண்டியது பசியிலும் பட்டினிலியாலும், வீடற்ற நிலையிலும், நடைபாதையிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும், கூரை வீடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும், ஆதிக்க சக்திகளிடமும் , பார்ப்பன சமூகத்திடமும் அடைபட்டுக்கொண்டிருக்கும் மக்கள் தீர்மானிக்க வேண்டியது.

இன்னும் இழிவுகளில் சிக்கிக்கொண்டிருப்பவர்கள் தீர்மானிக்க வேண்டியது.


வசதி வாய்ப்புடன் வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பவர், தான் மட்டும் வாழ்ந்தால் போதும், என்று இங்குள்ள ஏழைமக்களின், வரிப்பணத்தில் படித்து பட்டம் பெற்று வெளிநாட்டில் வேலைவாய்ப்பையும் பெற்று, கைநிறைய சம்பாதித்துக்கொண்டு சுகபோக வாழ்க்கையில் திளைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் முடிவு செய்யப்படவேண்டிய சமாச்சாரம் இல்லை. இது சொற்ப எண்ணிக்கை.


இங்கு இந்த பாட்டாளி வர்க்கங்கள், உழைக்கும் வர்க்கங்கள் தான் இங்குஅதிகம். அவர்கள் கோரிக்கை தான் முக்கியம். நொட்டை, நொசக்கை சொல்லிக்கொண்டிறாமல் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிப்பவர்கள்.

அவர்கள் இன்னல்கள் தீர ஆட்சி நடத்துபவர்கள் தான் இங்கு தேவை. அவர்களுக்குத்தான் இந்த மக்களின் ஒட்டு.


Unknown said...

@நம்பி: எல்லா பின்னூட்டங்களையும் படிச்சு, ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா யாருன்னு பார்த்து அவங்கவங்களுக்கு ஏத்தமாதிரி பதில் எழுதிருக்கீங்க. பாராட்டுக்கள்! உங்க பதில உரியவங்க படிச்சாங்களா இல்லயான்னு உங்களுக்கு தெரியனுங்கறதுக்காக எழுதுறா பின்னூட்டம் இது! நன்றி!

ஒரு சின்ன யோசனை: நீங்க எழுதும்போது சாய்வெழுத்த தவிர்த்துகிட்டீங்கன்னா படிக்கும்போது இடையிடையே வரும் பெட்டிகளை தவிர்த்துக்கலாம்.