Search This Blog

30.4.09

அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு =" சோ" புளுகு

பச்சைப் "பொய்யர்கள்!"

"தேர்தல் பார்வை" என்னும் தலைப்பில் "துக்ளக்" இதழில் அதன் ஆசிரியர் "சோ" ராமசாமி அய்யர் தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகிறார். அதில் 6 ஆவது பகுதியில் ("துக்ளக்", 6.5.2009) பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்கான காரணங்களைக் கூற முயற்சித்துள்ளார்.

(1) பா.ஜ.க.வை மதவாதக் கட்சி என்று காங்கிரசும், இடதுசாரிகளும், வேறு சில கட்சிகளும் கூறுவது பொய்ப் பிரச்சாரமாம். பா.ஜ.க. ஆட்சியில் மதக்கலவரங்கள் இல்லை; கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிறகு நடந்த அராஜக நிகழ்ச்சிகள் கண்டனத்துக்குரியவை; அதற்குப் பா.ஜ.க.வைப் பொறுப்பாக்க முடியாது என்று கூறுகிறார்.

பொய் பேசுவதுபற்றி பார்ப்பனர்கள் கொஞ்சமும் வெட்கப்படக் கூடியவர்கள் அல்லர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. பா.ஜ.க. ஆட்சியில் மதக்கலவரங்கள் இல்லை என்று சொல்ல வந்த நிலையில் உடனே குஜராத் மதக்கலவரம் அவர் மனக்கண்முன் படம் எடுத்திருக்கும். அதற்கு ஏதாவது சமாதானம் சொல்லவேண்டுமே - அதற்குத்தான் இந்தச் சப்பைக் கட்டு!

குஜராத் மதக்கலவரம் கண்டனத்துக்குரியதுதானாம்; ஆனால், அதற்குப் பா.ஜ.க.வைப் பொறுப்பாக்க முடியாதாம் - அப்படியானால் அங்கு ஆட்சி செலுத்திக் கொண் டிருந்த முதலமைச்சர் நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி யார்? அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரா!

ஒரு மாநிலத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 2000 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர்; அந்தச் சமுதாயத்தினரின் வீடுகளும், வணிக நிறுவனங் களும் அடித்து நொறுக்கப்படுகின்றன; எரியூட்டப்படுகின்றன என்றால், அவை தடுக்கப்படாமல் போனதற்கு யார்தான் பொறுப்பு? எல்லாம் கடவுள் செயல்; எது நடக்கவேண்டுமோ அது நடந்தே தீரும் என்கிற இந்துமதப் பித்தலாட்டத்தைக் காரணமாகக் கூறப் போகிறார்களா?

அன்றைக்குக் குஜராத்தில் மட்டுமல்ல; மத்தியிலும் பா.ஜ.க.தான் ஆட்சியில் அமர்ந்திருந்தது. அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்கள் பிரதமரிடம் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டும் குஜராத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது எவ்வளவுப் பெரிய கேவலம்!

பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் அகதிகளின் முகாம்களில் தங்கியிருந்ததைக்கூட பா.ஜ.க. முதலமைச் சரான மோடி கொச்சைப்படுத்தினார் (மக்கள் பெருக்கத் துக்கு அது பயன்படுகிறதாம்!) என்றால், அந்த மனிதர் தான் அங்கு சிறுபான்மை மக்கள் திட்டமிடப்பட்ட வகையில் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணம் என்பதில் சந்தேகம் ஏது?

குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து வெளிநாடு செல்ல வேண்டியிருந்த பிரதமர் வாஜ்பேயி, நான் எந்த முகத்துடன் செல்லுவேன்? என்று சொன்னாரே - அந்த வெட்கத்தில் புதைந்து கிடக்கும் அருவருப்புகள் என்ன?

அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்துவது ஒருபுறம் இருக்கட்டும்; உச்சநீதிமன்றமே நரேந்திர மோடியை நீரோ மன்னன் என்று படம் பிடித்ததே - அதன் பொருள் என்ன? குஜராத்தில் டெகல்கா ஊடகம் வெளிப்படுத்திய வீடியோ சாட்சியங்கள் சாதாரணமானவை தானா?

குஜராத் மதக்கலவரத்தில் மோடியின் பங்கு என்ன? நிலைப்பாடு என்ன? என்பது விசாரிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றமே சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டதே - குஜராத் மோடி அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறி விட்டதே - இவையெல்லாம் குஜராத்தில் நடந்த மதக் கல வரங்களுக்கும், பா.ஜ.க. ஆட்சிக்கும் சம்பந்தா சம்பந்தமே இல்லை என்பதற்கான ஆதாரப் பட்டியல்களா?

குஜராத் மதக் கலவரத்தில் பொடா சட்டத்தின்கீழ் சிறையில் தள்ளப்பட்டவர்கள் 287 பேர்கள் என்றால், அதில் முசுலிம்கள் மட்டும் 286; மற்றொருவர் சீக்கியர்.

பாதிப்புக்கு ஆளான மக்களே குற்றவாளிகள் என்கிற ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மத்தின் புதிய பதிப்பான பா.ஜ.க. ஆட்சி மோடி தலைமையில் நடக்கிறது என்பதுதானே இதன் பொருள்?

போகிற போக்கைப் பார்த்தால் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயை ஹிந்து என்று எப்படி கூற முடியும்? என்று கூட சோ கூட்டம் சொன்னாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை.

ஒரு புதுமொழியை உற்பத்தி செய்துவிடலாம். அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்று இனிமேல் கூறவேண்டாம்; சோ புளுகு என்ற பதத்தைப் பயன்படுத்தலாம்.


----------------"விடுதலை"தலையங்கம் 30-4-2009

6 comments:

அன்பு said...

வெரிகுட் வெரிகுட்

இளம்வழுதி said...

moodiyaikkuuda nambi vidalaam. eenenRaal avar thannudaiya inthu mathaveRiyai maRaikka pirayaththanam eduththukkoLvathillai. Anaal intha soo irukkiRaaree, avar naduwilai paththirikkaiyaLar enRa poorvaiyil oLinthu koNdirukkum oru biraamaNa piththu pidiththa inthu mathath thiiviravaathi.

baabar masuuthi idippu, gujaraath kalavarangakaL maRRum jeyalalithaavin uuzhalkaL ellaam avaraip poRuththavarai aRpakaariyangkaL. Anaal thi.mu.ka, kaangkiraS, kamyuuniSt maRRum vi.pi.sing ponRoorin thavaRukaL mikachchiRiyathaayirunththaalum athai puuthaakaarap paduththi vaasakarkaLai namba vaiththuvidum nayavanjchakar.

iSlaamiya thiiviravaathikaLukkum ivarukkum irukkum oree veeRRumai, avargaL veLippadaiyaaka visham kakkubavarkaL. ivar samugaththil irunthu koNdee maRaivaaga visham kalakkum kabaddu nadikar.

sureesh

இளம்வழுதி said...

மோடியைக்கூட நம்பி விடலாம். ஏனென்றால் அவர் தன்னுடைய இந்து மதவெறியை மறைக்க பிரயத்தனம் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் இந்த சோ இருக்கிறாரே, அவர் நடுநிலை பத்திரிக்கையளர் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு பிராமண பித்து பிடித்த இந்து மதத் தீவிரவாதி.

பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரஙகள் மற்றும் ஜெயலலிதாவின் ஊழல்கள் எல்லாம் அவரைப் பொறுத்தவரை அற்பகாரியங்கள். ஆனால் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் வி.பி.சிங் பொன்றோரின் தவறுகள் மிகச்சிறியதாயிருந்தாலும் அதை பூதாகாரப் படுத்தி வாசகர்களை நம்ப வைத்துவிடும் நயவஞ்சகர்.

இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் இவருக்கும் இருக்கும் ஒரே வேற்றுமை, அவர்கள் வெளிப்படையாக விஷம் கக்குபவர்கள். இவர் சமுகத்தில் இருந்து கொண்டே மறைவாக விஷம் கலக்கும் கபட்டு நடிகர்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புலிகேசி

ttpian said...

மஞ்சல் துண்டுக்கு இதுவும் வேண்டும்...தமிழனாக இல்லாமல்,இந்தியனாக மாரினால்,இப்படிதான்,அவமானப்படவேண்டும்...கண் கெட்ட பிரகு (ஊதய) சூரிய நமச்காரம்!

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி jeba