Search This Blog

8.5.14

ஆயுள்தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய மாநிலஅரசுக்கு உரிமையுண்டு! -கி.வீரமணி


ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமையுண்டு!
ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமையுண்டு!
மத்திய அரசு இதில் தலையிடுவது தேவையற்ற ஒன்றே!
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் சட்ட ஆய்வுரை

சென்னை, மே 7- ஆயுள் கைதிகளைப் பொறுத்தவரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமையுண்டு; பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிடுவது நியாயமல்ல. நிரபராதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் - மக்கள் மன்றத்திலும் இந்தக் குரல் ஒலிக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
30.4.2014 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலையும் - நீதிப்போக்கும் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையாற்றினார். அவரது உரையின் (2.5.2014) தொடர்ச்சி வருமாறு:-

கருணைமனுமீதான காலதாமதம் குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டையும், காரணங்களின்றி ஏற்பட்ட காலதாமதத்தையும் உச்ச நீதிமன்றத்தின் பெஞ்சு ஏற்காமல் மறுதலித்தது. பெஞ்சு தீர்ப்பில் கூறும்போது, மூவர் சார்பில் அளிக்கப்பட்ட கருணை மனு  ஏப்ரல் 25, 2000ஆம் ஆண்டில் தமிழக ஆளுநரிடமும், அவர் மூலம் இந்திய உள்துறை அலுவலகத்துக்கு மே 4, 2000ஆம் ஆண்டிலும் அனுப்பப்பட்டுள்ளது. காரணமே இல்லாமல் கால தாமதமாக 5 ஆண்டுகள், ஒரு மாதம் கழித்து ஜூலை 21, 2005ஆம் ஆண்டில் குடியரசுத்தலைவரின் பார்வைக்கு இந்திய உள்துறை அலுவலகம் கொண்டு சென்றுள்ளது.

அதற்குப்பிறகும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 2011இல் குடியரசுத்தலைவரிடமிருந்து எம்எச்ஏ கருணைமனுமீதான நடவடிக்கையை குடியரசுத்தலைவரிடமிருந்து கேட்டுள்ளது.

இங்கும் காலதாமதம் 5ஆண்டுகள், 8 மாதங்கள் ஆகி உள்ளன. செப்டம்பர் 12, 2011இல்தான்  குடியரசுத்தலைவர் 11ஆண்டுகளுக்கும் மேல் காலதாமதத்துக்குப்பிறகு கருணைமனுவை நிராகரித்துள்ளார் என்று உச்சநீதிமன்ற அமர்வு குறிப்பிடுகிறது.

மாற்றுக்கருத்துக்கே இடமில்லாத காலதாமதத்துக்கு மனுதாரர்கள் காரணமில்லை. கால வரையறைகளின்றி, தாமதத்துக்கு எவ்வித காரணங்களும் இல்லாமல் போனதால் மனுதாரர்களின் தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது என்று பெஞ்சு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்து, எந்த அடிப்படையில் குறைத்திருக்கிறார்கள்?  அவர்கள் மன்னிப்பு கேட்டு கருணை மனு போடுகிறார்கள்.

அந்த மனு எவ்வளவு காலத்திற்கு அங்கே கிடப்பில் இருந்தது என்றால், 10 ஆண்டுகளுக்கு மேலாக அங்கே கிடப்பில் இருந்திருக்கிறது. குடியரசுத் தலைவர் என்று சொன்னால், அவர் தனியே பார்ப்பதில்லை. உள்துறை அதுதான் மிக முக்கியம். அந்த உள்துறை செயலாளர்தான் இதையெல்லாம் பார்ப்பார். இது இங்கிலாந்து நாட்டிலிருந்து நாம் எடுத்துக்கொண்ட அரசியல் சட்ட முறையாகும்.  ஏனென்றால், நம்முடைய அரசியல் சட்டமே இங்கிலாந்து அரசியல் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதுதான்.

ஒரு தீர்ப்பில் ஒன்றை அழகாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். அது என்னவென்றால், இங்கிலாந்து நாட்டில் உள்துறை செயலாளர் இருக்கிறார் - அந்தப் பதவி என்பது மிகவும் சக்தி வாய்ந்த, அதிகாரமுள்ள - பொறுப்புவாய்ந்த பதவியாகும். அவருடைய அறையில் வாசகம் ஒன்றை எழுதி வைத்திருக்கிறார்களாம். அதைப்பற்றி நீதிபதி சொல்கிறார்:
உங்களுடைய பணி என்பது, பல உயிர்களைக் காப்பாற்றுகின்ற மிக முக்கியமான, தவறுகள் நடந்தால், திருத்தக்கூடிய மிக முக்கியமான பணி இந்த உள்துறை செயலாளருக்கு மட்டும்தான் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட கருத்துள்ள வாசகங்களை எழுதி வைத்துள்ளார்கள்.

ஆகவே, அப்படிப்பட்ட உள்துறை செயலாளரிடம் அந்தக் கருணை மனு சென்றது. அவர் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கிறார்.

இங்கே இருக்கிறவர்களுக்கு ஒன்றும் புரியாமல், ஏதோ சட்ட விரோதமாக இது நடந்தவிட்டதுபோல், ஆகா, எப்படி இதைக் குறைக்கலாம் என்று கேட்கிறார்கள்.

இதில் மிகவும் அடிப்படையான ஒரு செய்தியை சொல்லவேண்டும்.
ஒரு சட்டத்தைப் பார்க்கும்பொழுது, நீதிபதிகளாக இருக்கட்டும்; பத்திரிகையாளர்களாக இருக்கட்டும்; விமர்சகர்களாக இருக்கட்டும். அந்தச் சட்டம் என்கிற பார்வையோடு பார்க்கவேண்டுமே தவிர, கொலை நடந்தால்கூட, கொலைக்குற்றவாளியாகத்தான் பார்க்கவேண்டுமே தவிர, இன்னார் கொலை, சாதாரணமானவர் கொலை என்று வித்தியாசம் பார்ப்பதற்கு, அரசியல் சட்டத்திலோ அல்லது குற்றவியல் சட்டத்திலோ இடமே கிடையாது, அதுதான் மிக முக்கியம்.

விரைந்த முடிவு வேறு; அவசர முடிவு வேறு!
அரசாங்கங்கள் எடுக்கக்கூடிய முடிவாக இருந்தாலும், ஒரு அமைப்பு ரீதியாக தலைமை எடுக்கக்கூடிய முடிவாக இருந்தாலும், இந்த முடிவுகளை வித்தியாசப்படுத்தி, வேறுபடுத்தி பார்க்கவேண்டும். hasty decision is different from quick decision  விரைந்த முடிவு வேறு; அவசர முடிவு வேறு இதுதான் மிக முக்கியம்.
இந்த அம்மையார் செய்தது அவசர முடிவே தவிர; விரைந்த முடிவு அல்ல. அதனுடைய விளைவுதான் இவ்வளவு பெரிய பிரச்சினைகளுக்குக் காரணம்.
மூன்று நாளில் நீங்கள் சொல்லியாகவேண்டும்; இல்லையென்றால், நாங்கள் வெளியில் விட்டு விடுவோம். என்ன சொல்கிறீர்கள் என்று கேட்க வேண்டியதில்லை,நாமே தேவையில்லாமல் உண்டாக்கிக் கொண்ட சிக்கல் என்பதை இந்த நேரத்தில் நாம் சுட்டிக் காட்டவேண்டும்.

ஆனால், இப்பொழுது வந்திருக்கின்ற பிரச்சினைக்குக் காரணம் முழுவதும், சிந்தனையில், அணுகுமுறையில் அடிப்படைக் கோளாறு என்றால், கொலை செய்யப்பட்டவர் யார் என்று நினைத்துக்கொண்டு, சட்டத்தைப் பார்க்கிறார்கள். சட்டத்தை அப்படிப் பார்க்கக்கூடாது என்பதற்காகத்தான் நீதிதேவதையின் கண் கட்டப்பட்ட உருவம் வைக்கப்பட்டிருக்கிறது. நான் பேசுவது முழுவதும் உணர்ச்சிக்கு இடமில்லாத, அறிவுபூர்வமான வாதங்களாகும்.
நபர்களை மட்டுமே பார்த்துக்கொண்டு, வழக்கை நடத்தக்கூடாது!
எனவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், தேசப்பிதா என்று அழைக்கப்பட்ட காந்தியார் கொலை வழக்கு சரியாக நடத்தப்பட்டதா இந்த நாட்டில்? அந்த வழக்குக்குரிய ஆவணங்கள் காணாமல் போய்விட்டதே - ஒரு பெட்டியில் போட்டு ரயிலில் எடுத்துச் சென்றோம், திருடு போய்விட்டது என்று சொன்னார்களே, அந்தக் கொலையை திட்டமிட்டவர்களுக்கு - சாட்சியங்கள் இல்லை என்றுதானே சொன்னார்கள். அந்த வழக்கிலிருந்து சவார்க்கார் போன்றவர்கள் எப்படி வெளியே வந்தார்கள் என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், பல இளைஞர்களுக்கு அந்த வரலாறு தெரியாது. காந்தியார் கொலை வழக்கு என்ற தலைப்பில் ஒரு நூல் வெளிவந்திருக்கிறது அண்மையில். காந்தியாருடைய கொள்ளுப்பேரன் எழுதியதை வைத்து நாம் தமிழில் அந்த நூலை வெளியிட்டிருக்கிறோம். அதேபோல், மற்ற மற்ற வழக்குகள்.

எனவே, நபர்களை மட்டுமே பார்த்துக்கொண்டு, வழக்கை நடத்தக்கூடாது. குற்றவாளி யார் என்பதைப் பார்க்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. குற்றவாளி மிகவும் பெரிய மனிதன் என்றால், அவருக்குச் சலுகை காட்டவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. அதேபோல், பாதிக்கப்பட்டவர் யார் என்பதை வைத்துக்கொண்டு சட்டத்தை அணுகக்கூடிய நிலை இல்லை. அதைத்தான் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

இங்கேயுள்ள காங்கிரஸ் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? மேலும் பலர் இறந்துபோனார்களே, அவர்களுக்கு என்ன நியாயம்? இறந்து போனவர்களின் சொந்தக்காரர்கள் நியாயம் கேட்கிறார்களே என்று பேசுகிறார்கள்.

அதற்காகத்தானே 23 ஆண்டுகாலமாக சிறையில் இவர்கள் இருந்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் இந்த சட்ட முறைகளே தவறாக இருந்தாலும், இந்த வழக்கே தவறு என்று விசாரணை செய்த அதிகாரியும், விசாரணை செய்த நீதிபதியும் சொன்னாலும், இவர்கள் 23 ஆண்டுகளுக்குமேலாகியும் இன்னும் சிறைச்சாலையில் இருக்கிறார்களே, இதைவிட பெரிய கொடுமை வேறு என்ன இருக்க முடியும்? கருணையே அவர்களுக்குக் காட்டக்கூடாது என்று நீங்கள் யாராவது வாதம் செய்ய முடியுமா? அந்த நண்பர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசு என்ன காரணம் சொல்லிற்று, சிறைச்சாலைகளில் அந்தக் கைதிகள் எல்லாம் மிகவும் ஜாலியாக இருக்கிறார்கள் என்று.

பிறகு, தமிழ்நாட்டு வழக்கறிஞர் சொன்னார், அந்தக் கைதிகள் எல்லாம் எவ்வளவு மனவேதனையுடன் இருக்கிறார்கள் என்பதை சொன்னார்.
அந்த இடத்தில், நாம் நம்மை வைத்துப் பார்க்கவேண்டாமா?
ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தையை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்களே,

சிம்பதி என்பதைவிட எம்பதி என்று இருக்கவேண்டாமா!

நீதிபதிகள் எப்படி இருக்கவேண்டும், சிம்பதியைவிட எம்பதி உடையவர்களாக இருக்கவேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது.

மிசா  காலத்தில் நாங்களும் சிறைச்சாலைக்குச் சென்றோம்!

சிறையில் உள்ளவர்கள் முதலில் தண்டனை பெற்றதும், ஒரு நாள் அல்லது ஒரு பத்து நாள் அல்லது ஒரு மாதம்தான் கவலையோடு இருப்பார்கள். நாங்கள் எல்லாம் சிறைச்சாலைக்குச் சென்றோம், மிசா காலத்தில். அதையே நினைத்துக்கொண்டு, அடிபட்டதையே நினைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோம்? நாம் வாழ்நாளில் வெளியில் செல்கிறோமோ இல்லையோ, அதைப்பற்றி கவலைப்படாமல், இதுதான் நமது உலகம் என்றால், இந்த உலகத்தை நமக்குத் தகுந்தவாறு ஆக்கிக் கொள்ளவேண்டியதுதான்; வெளியில் எப்பொழுது செல்கிறோமோ அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று தெளிவாக இருந்தோமே - அதுதானே மனித சுபாவம் - மனித இயற்கை - அதனை எண்ணிப்பார்க்கவேண்டாமா?

நீதிமன்றங்கள்தான் கடைசி நம்பிக்கை!

ஆகவே, நண்பர்களே, இதிலே அவர்களுடைய உரிமையைக் காப்பாற்றவேண்டிய கடமை நீதிமன்றங்களுக்கு உண்டு. ஏனென்றால், நீதிமன்றங்கள்தான் கடைசி நம்பிக்கை.

நான் மேற்கொண்டு படித்த செய்தி இந்து நாளிதழில் வந்த செய்தி.
மாநில அரசுகளினுடைய உரிமை என்ன? அதிகாரம் என்ன? மத்திய அரசினுடைய உரிமை என்ன? அதிகாரம் என்ன? இவை அத்தனையும் அரசியல் சட்ட ரீதியாக வரையறுக்கப்பட்டிருப்பதனுடைய சூழ்நிலை என்ன? இதுவும் அந்த விவாதத்தில் தெளிவாக சுட்டிக்காட்டப்படக்கூடிய நிலையில் இது வந்திருக்கிறது.

நண்பர்களே, நீங்கள் எல்லோரும் கேள்விப்பட்டதும், அடிக்கடி நாம் எல்லோரும் கேள்விப்பட்டதுமான செய்தி என்னவென்றால், நீதிபதிகளே சொல்வார்கள், வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல, சட்டம் படித்தவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் தெரிந்த ஒன்று என்னவென்றால், Justice delayed is Justice denied தாமதிக்கப்பட்ட நீதி, உரியவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதியாகும்.
உச்சநீதிமன்றத்தினுடைய கடமை என்ன? மறுக்கப்பட்ட நீதியை அவர்களுக்குத் திருப்பித் தருவதுதானே அதன் கடமை? அதைத்தானே அவர்கள் இதன்மூலமாக செய்திருக்கிறார்கள்? அதைப் பொறுத்தவரையிலே, வரவேற்கத்தகுந்தது; சிறப்பானது; மிக முக்கியமானது.

ஆகவே, அந்த அடிப்படையில் வைத்துப் பார்க்கும்பொழுது அவர்கள் நியாயமாக நடந்துகொண்டிருக்கிறார்கள்.

நான் ஏற்கெனவே சொல்லியதுபோல, இந்திய அரசியல் சட்டத்தில் 21 ஆவது பிரிவின்படி, அடிப்படை உரிமைகள் என்று சொல்வது விலைமதிப்பற்றது. என்னுடைய சுதந்திரத்தைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. நான் சட்டப்படி குற்றவாளியாக ஆனாலொழிய அல்லது நான் குற்றம் புரிந்தவன் என்று சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டாலொழிய, என்னுடைய உரிமையைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

சில வழக்குகள் மத்திய அரசாங்கத்தோடு Delhi Police Establishment என்பதில், சிபிஅய் எல்லாம் அதன்கீழ்தான் வருகிறது.

435 ஆம் பிரிவு

(1) The powers conferred by sections 432 and 433 upon the State Government to remit or commute a sentence, in any case where the sentence is for an offence-
(a) which was investigated by the Delhi Special Police Establishment constituted under the Delhi Special Police Establishment Act, 1946, (25 of 1946) or by any other agency empowered to make investigation into an offence under any Central Act other than this Code, or
(b) which involved the misappropriation or destruction of, or damage to, any property belonging to the Central Government, or
(c) which was committed by a person in the service of the Central Government while acting or purporting to act in the discharge of his official duty, shall not be exercised by the State Government except after consultation with the Central Government.
(2) No order of suspension, remission or commutation of sentences passed by the State Government in relation to a person, who has been convicted of offences, some of which relate to matters to which the executive power of the Union extends, and who has been sentenced to separate terms of imprisonment which are to run concurrently, shall have effect unless an order for the suspension, remission or commutation, as the case may be, of such sentences has also been made by the Central Government in relation to the offences committed by such person with regard to matters to which the executive power of the Union extends.

432 ஆம் பிரிவு

(1) When any person has been sentenced to punishment for an offence, the appropriate Government may, at any time, without conditions or upon any conditions which the person sentenced accepts, suspend the execution of his sentence or remit the whole or any part of the punishment to which he has been sentenced.
(2) Whenever an application is made to the appropriate Government for the suspension or remission of a sentence, the appropriate Government may require the presiding Judge of the Court before or by which the conviction was had or confirmed, to state his opinion as to whether the application should be granted or refused, together with his reasons for such opinion and also to forward with the statement of such opinion a certified copy of the record of the trial or of such record thereof as exists.
(3) If any condition on which a sentence has been suspended or remitted is, in the opinion of the appropriate Government, not fulfilled, the appropriate Government may cancel the suspension or remission, and thereupon the person in whose favor the sentence has been suspended or remitted may, if at large, be arrested by any police officer, without warrant and remanded to undergo the unexpired portion of the sentence.
(4) The condition on which a sentence is suspended or remitted under this section may be one to be fulfilled by the person in whose favor the sentence is suspended or remitted, or one independent of his will.
(5) The appropriate Government may, by general rules or special orders, give directions as to the suspension of sentences and the conditions on which petitions should be presented and dealt with:
Provided that in the case of any sentence (other than a sentence of fine) passed on a male person above the age of eighteen years, no such petition by the person sentenced or by any other person on his behalf shall be entertained, unless the person sentenced is in jail, and-
(a) where such petition is made by the person sentenced, it is presented through the officer in charge of the jail; or
(b) where such petition is made by any other person, it contains a declaration that the person sentenced is in jail.
(6) The provisions of the above sub-sections shall also apply to any order passed by a Criminal Court under any section of this Code or of any other law which restricts the liberty of any person or impose any liability upon him or his property.
(7) In this section and in section 433, the expression "appropriate Government" means,-
(a) in cases where the sentence is for an offence against, or the order referred to in sub-section (6) is passed under, any law relating to a matter to which the executive power of the Union extends, the Central Government;
(b) in other cases, the Government of the State within which the offender is sentenced or the said order is passed.

433 ஆம் பிரிவு

The appropriate Government may, without the consent of the person sentenced, commute-
(a) a sentence of death, for any other punishment provided by the Indian Penal Code (45 of 1860);
(b) a sentence of imprisonment for life, for imprisonment for a term not exceeding fourteen years or for fine;
(c) a sentence of rigorous imprisonment, for simple imprisonment for any term to which that person might have been sentenced, or for fine;
(d) a sentence of simple imprisonment, for fine.

435-இன்கீழ் சில வழக்குகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கு 
ஆரம்பிக்கப்படும்பொழுதே, அந்த சம்பவம் எங்கே நடக்கிறது? இந்த மாநிலத்திற்குள் நடக்கிறது. இது யாருடைய அதிகார எல்லைக்குள் இருக்கிறது? தமிழ்நாடு அரசின் எல்லைக்குள் இருக்கிறது.
இந்த நேரத்தில் உங்களுக்கு இன்னொன்றையும் நினைவூட்டவேண்டும். செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதுபோல், தி.மு.க.வின்மீது பழிபோடுவதற் காக, தொடர்ந்து பத்திரிகைகள் எழுதிக் கொண்டுவருவது வாடிக்கையாக இருக்கிறது. அப்பொழுது தி.மு.க. ஆட்சி கிடையாது. அப்பொழுது இருந்தது குடியரசுத் தலைவர் ஆட்சிதான் இருந்தது என்பது பல பேர் மறந்துவிட்டபடியால், நினைவூட்டப்படக்கூடிய ஒரு செய்தியாகும்.
அந்த சம்பவம் நடந்ததே குடியரசுத் தலைவர் ஆட்சியில்தான் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? அப்பொழுது டில்லியினுடைய கட்டுப்பாட்டில். என்றாலும், அடுத்தபடியாக மாநில அரசு என்று வரும்பொழுது, அந்த வழக்கினை போடும்பொழுது, தடா சட்டத்தின்கீழ் கொண்டுவருவது சரியானதல்ல என்று பின்னாளில் உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது.

இன்னொரு பக்கத்தில், எந்த ஒரு வழக்கையும் சி.பி.அய். விசாரிக்கவேண்டும் என்றால், மாநில அரசின் அனுமதி பெற்றிருக்கவேண்டும். அனுமதியும் பெற்றிருந்தார்கள்.

கடந்த 25 ஆம் தேதி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் அவர்கள், ஓய்வு பெறுவதற்கு முன்பு, அவர் தலைமையில் அமைந்த மூன்று மாண்பமை நீதிபதிகள் 41 பக்கம் தீர்ப்பளித்தனர். இந்தத் தீர்ப்புதான் அரசியல் அமர்வுக்குப் போகவேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள்.

மாநில அரசிடம், மத்திய அரசு அனுமதி கேட்டால் என்ன அர்த்தம்? அடிப்படையில் அந்த உரிமை என்னுடைய உரிமை; நான் செய்யவேண்டிய வேலையை - நாங்கள் செய்கிறோம்; நாங்கள் இரண்டு பேரும் பொதுப் பட்டியலில் இருப்பதால், நாங்கள்  பகிர்ந்துகொள் கிறோம்; அதனால் எங்களுக்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்ப திலேயே, கொஞ்சம் ஆழமாகவும், கொஞ்சம் கூர்ந்து கவனித் துப் பார்த்தால், அந்த உரிமைக்கு உண்மையில் சொந்தக்காரர் யார்? மாநில அரசுதானே! ஏனென்றால், நாட்டில், மாநில அரசுகள்தான் உண்மையாக மக்களை ஆளக்கூடிய அரசுகள். மக்களுடைய ஆளக்கூடிய அரசுகளே மாநிலங்கள்தான்.

எதைச் செய்யவேண்டுமானாலும், மாநில அரசு மூலமாகத்தான் செய்யவேண்டும். தேசிய நெடுஞ்சாலையாக இருக்கலாம்; அல்லது தேசியத் திட்டங்களாக இருக்கலாம்; எதுவாக இருந்தாலும் நேரடியாக மக்களுடன் தொடர்பு டையவர்கள் மாநில அரசுகள்தான்.

மாநில அரசினுடைய உரிமையை, தமிழ்நாடு அரசு - அம்மையாரின் தலைமையில் இருக்கக்கூடிய அரசு என்ன செய்தது என்றால், இதை மிகத் தெளிவாக, கொஞ்சம் நிதானமாக எடுத்துக்கொண்டு, இன்னும் சில சட்ட நிபுணர் களைக் கொண்டு ஆய்வு செய்திருக்கலாம்; அல்லது என்ன காரணம் என்று தெரியவில்லை. மூன்றே நாள்களில் நீங்கள் பதில் சொல்லவேண்டும் என்று சட்டசபையில் கூறினார்கள்.

இது வேகமான நடவடிக்கை இல்லை; வேகமான முடிவல்ல; நம் உரிமையைப் பயன்படுத்திய முடிவு - எல்லோராலும் வரவேற்கப்பட்ட முடிவு. எந்தத் தலைவரும் அந்த முடிவை எதிர்க்கவில்லை. ஆனால், முடிவு எடுக்கப் பட்ட முறையும், அந்த முடிவுக்கு நிபந்தனை போட்டார்கள் பாருங்கள், அந்த நிபந்தனைகள்தான் காரியத்தை கெடுத்தது - அதுதான் மிக முக்கியம் - அதுதான் உண்மை.

பல்வேறு குழப்பங்களுக்கும் ஆளாகக் கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கினார்கள்!

அவர்கள் எடுத்த நிலைப்பாட்டை நாம் ஆதரித்தோம்; அன்றைக்கும் ஆதரித்தோம்; இன்றைக்கும் ஆதரிக்கிறோம். மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது. மாநில அரசின் உரிமையில் தலையிடக்கூடாது; அதைப் பறிப்பதற்கு மத்திய அரசிற்கு உரிமை கிடையாது. அதில் நாம் மாறுபடவில்லை. ஆனால், அதை செய்த முறை இருக்கிறது பாருங்கள், அது பெரிய சிக்கலை உண்டாக்கி, அதுதான் இவ்வளவு பெரிய விவாதங்களுக்கும், தேவையில்லாத பல்வேறு குழப்பங் களுக்கும் ஆளாகக் கூடிய அந்த சூழ்நிலையை உருவாக் கினார்கள்.

மாநில அரசு இப்படி சொல்லியதும், மத்திய அரசு நீதிமன்றத்திற்குச் சென்று தடை வாங்கி விட்டார்கள்.

மத்திய அரசு என்ன சொன்னார்கள்? ஒரு அரசியல் சாசன அமர்வு தான் விசாரிக்கவேண்டுமே தவிர, நீங்கள் மூன்று பேர் விசாரிக்கக்கூடாது என்கிற நிலையை எடுத்து, அதற்குச் சில சட்ட திட்டங்களை மத்திய அரசு வைத்தார்கள்- மத்திய அரசு என்பது - காங்கிரஸ் அரசாகும்.

மத்தியிலுள்ள மற்ற கட்சிகள் இந்தப் பிரச்சினையில் வேறுபடுகிறார்கள் என்று சொல்ல முடியாது. வேறொரு கட்சியாக இருந்தாலும், அவர்களை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார்கள் என்றாலும், இந்தப் பிரச்சினையைப் பொறுத்த வரையில், வடக்கே இருக்கக்கூடிய பல அகில இந்திய கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள்.

இன்றைக்கு அதனை மாற்றி, கடைசி நேரத்தில், கடந்த 25 ஆம் தேதி அன்றைக்கு சொல்கின்ற அந்த மூன்று நீதிபதிகளின் அமர்வு, அவர்கள் ஆட்சேபணை செய்த போது, இது அரசியல் சட்டப் பிரச்சினைக்கு அனுப்பப்பட வேண்டிய பிரச்சினையல்ல என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி சொன்னவர்கள், விசாரணை எல்லாம் முடிந்த பிறகு, அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புகிறோம் என்று சொன்னார்கள் என்றால், அதற்கு என்ன காரணம்? இது தான் நாட்டோருடைய மிக முக்கியமான கேள்வி. நாங்கள் அதற்கொன்றும் உள்நோக்கம் கற்பிக்க விரும்பவில்லை.
நீதிபதிகள் அடிக்கடி தங்களுடைய தீர்ப்புகளில் ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்துவார்கள்; சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்று சொல்வார்கள்.

இதே சந்தேகம் மக்களுக்கும்; அவர்களே சொன்னதற்கு மாறாக, இப்பொழுது அய்ந்து நீதிபதியின் அமர்வுக்கு அனுப்புகிறோம் என்று சொல்கிறார்கள்.
தமிழக அரசின் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள், தெளிவான சட்ட நிலைகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் 41ஆம் பக்கத்தில் இரண்டு பக்க வாதங்களையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
இரண்டு, மூன்று முறை தண்டனை குறைப்புக்காக மனு கொடுக்கலாமா என்றால்,ஜாமீன் மனு ஒருமுறை மறுக்கப்பட்டால், மறுமுறை மனு போட முடியுமே அதுபோல் கொடுக்கலாம்.

தண்டனையை மாற்றலாமா என்றால், அவரவர் களுக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தலாம்.

ஒரு தண்டனைக் குறைப்பு வந்தாயிற்று; அதனால் இன்னொரு தண்டனைக் குறைப்பதற்கு இடமில்லை என்கிற வாதம் இருக்கிறது பாருங்கள், அது பசையற்ற வாதம்; ஏற்கப்படக்கூடாத, ஏற்கப்பட முடியாத வாதமாகும்.
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு வழக்கினை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்;ஆயுள் தண்டனை என்றால் என்னவென்றால், ஆயுள் முழுவதும் இருக்கவேண்டும்; 14ஆம் ஆண்டுகள் என்பது அல்ல.
ஆனால், அதற்கு நேர் விரோதமாக 1985 ஆம் ஆண்டில் தமிழக அரசின் சார்பாக வாதாடியவர், டில்லியில் நடைபெற்ற பகீரத் வழக்கில், ஆயுள் தண்டனைக் கைதியை விடுதலை செய்யலாம்; எப்படி என்றால், குறைந்தபட்சம் 14 ஆண்டுகளோ அதற்கு மேலோ இருந்தாலோ அவர்களை விடுதலை செய்யலாம் என்று சொன்னார்.

இவை அத்தனையும் அந்த 40 பக்கத்தில் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
கடைசியாக மத்திய அரசின் சார்பாக வாதாடியதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

Having given our most anxious consideration, we are of the opinion that it will not be appropriate for a three Judges’ Bench to examine and decide the correctness of the verdict of another three- Judges’ Bench in Swamy Shraddananda (supra). Besides, inevitability the decision of the Constitution Bench in Bhagirath (supra) would also be required to be examined. Thus, we deem it fit to refer this matter to a five Judges Bench to reconcile the dispute emerged.
The second stage is when the executive exercises its remission power under Article 72 by the President or under Article 161 by the Governor or under Article 32 by this Court in its judicial review jurisdiction and the commutation of death penalty into life imprisonment is permitted. It is the stand of the petitioner, i.e., Union of India that one death penalty is commuted into life imprisonment by exercise of executive power under Article 72/161 of the Constitution or by the judicial power vested by the Constitution in Article 32, the categories are beyond the power of remission and parallel exercise of the similar power by the excutive under the Code is impermissible. Therefore, on this ground, the learned Attorny General for the Union of India contended that  granting of remission to Respondent Nos., 1 to 3 & 7 is untenable in law. Although, the Attorney General heavily relied on this proposition to put forth his case but did not place any substantial material for examination by this Court.

கருநாடக சட்ட அமைச்சராக இருந்த எல்.ஜி.ஹவனூர்

கருநாடகாவில் எல்.ஜி.ஹவனூர் என்பவர் சட்ட அமைச்சராக இருந்தவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தின் அறிக்கையை கொடுத்தவர். மிகப்பெரிய அறிஞர் ஆவார் அவர்.

எல்.ஜி.ஹவனூரையும், ரவிவர்ம குமார் அவர்களையும் அழைத்துதான் தென்னாப்பிரிக்காவின் கான்ஸ்டியூசனை எழுதச் சொன்னார்கள் - மண்டேலா அவர்கள் அதிபராக இருந்தபொழுது.

அவர் ஒரே வார்த்தையில் சொல்லியிருந்தார். அந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணைய அறிக்கை யின் முன்னுரையில் மிக அழகாக ஒரு பகுதியை எழுதியிருப்பார்.

அரசியல் சட்டத்தை வியாக்கியானம் செய்யும்பொழுது, சாதாரண வார்த்தையை, சாதாரண வார்த்தையாகவே நீதிபதிகள் புரிந்துகொண்டு எழுதினால், எந்த சிக்கலும் வராது; சாதாரண வார்த்தைக்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று நினைத்து, டிக்ஷனரியைப் பார்க்காமல், இவர்களே வியாக்கியானம் செய்வதால்தான் சிக்கல்கள் வருகிறது என்று எழுதியிருப்பார்.

அதேபோல், கன்சல்டேசன் என்றால் உங்களுக்குத் தெரியுமே, கலந்து ஆலோசிப்பது என்று.

எங்கள் இயக்கத்தில் நாங்கள் ஒரு பிரச்சினையை முடிவு செய்வதற்காக கலந்து ஆலோசிக்கவேண்டுமானால், கவிஞர், நான் ஒரு மூன்று பேர் சேர்ந்து தலைமைக் கழகத்தில் உட்கார்ந்து ஆலோசிக்கிறோம். அவர்கள் ஒரு பிரச் சினையை சொல்கிறார்கள்; நான் ஒரு பிரச்சினையை சொல்கிறேன். கலந்து ஆலோசிக்கிறோம். முடிவு எடுக்கும் பொழுது, நான் சொல்கிறேன், இதுதான் முடிவு என்று.
உடனே அவர்கள் சொல்வதை நான் ஏற்கவேண்டும் என்பது அவசியமில்லையே.

Consultation is not concurrence. Concurrence is different from consultation
Consultation  என்கிற வார்த்தையே நாங்கள் ஒப்புதல் கொடுத்தால்தான், நீங்கள் அந்த முடிவுக்கு வர முடியும் என்றால் என்ன அர்த்தம்?

உங்களைக் கேட்காமல் நாங்கள் செய்திருந்தால் அது வித்தியாசம்; உங்களைக் கேட்டாயிற்று, சொல்லியாயிற்று; வேண்டுமானால், காலஅவகாசம் கொடுத்தது - அவசரத் தன்மை. அதைவிட்டுவிடலாம்.
நாம் செல்வது, சட்ட ரீதியான உரிமைக்குச் செல்கிறோம்.
கொலிஜியம் முறை ஏற்புடையதல்ல!

நீதியரசருடைய நியமனம் இருக்கிறது பாருங்கள், அது குடியரசுத் தலைவர்தான் செய்யவேண்டும்.

அது முதல் நீதிபதி வழக்கு, இரண்டு நீதிபதிகள் வழக்கு, மூன்று நீதிபதிகள் வழக்கு என்று ஆரம்பித்து,

மாநில அரசு ஒப்புக்கொண்ட பிறகுதான் அந்தப் பட்டியல் வரும்.
Concurrence இருந்ததை  Consultation  என்று மாற்றி, Consultation என்றாலே Concurrence என்று அர்த்தம் எழுதிவிட்டு, கொலிஜியம் என்று சொல்லி கொலிஜியம் முறை வந்தது.

கொலிஜியம் முறையில் நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது அரசியல் சட்டத்தினுடைய உரிமைகள் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதி என்பது அடிப்படையான, மறுக்கப்பட முடியாத உண்மை.

அதுபோல், Consultation என்றால், , Concurrence  என்பது அல்ல. Consultation, Consultation தான். அதுபோல், கலந்தாலோசிப்பது என்றாலே, தகவல் சொல்வது என்று அர்த்தம்.

அடிப்படையில் யாருடைய உரிமை இது? இந்த வழக்கை எடுத்துக்கொண்டால், இதை நடத்துவதற்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்கிறீர்கள். இந்த வழக்கை நடத்துவதற்கு அடிப்படை உரிமை யாருக்கு இருக்கிறது? மாநில அரசிற்கு இருக்கிறது. அவர்கள் அதை செய்கிறார்கள், உங்களுக்குத் தகவல் கொடுக்கிறார்கள்.

so, it need not be concurrent

நீங்கள் ஒப்புக்கொண்டால்தான் நாங்கள் செய்ய வேண்டும் என்கிற அவசியம் கிடையாது.

எனவே நண்பர்களே, இது வெறும் விடுதலை பிரச்சினையல்ல; இது மாநில அரசிற்கும், மத்திய அரசிற்கும் இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினை.
ஆகவேதான், இந்த வழக்கைப் பொறுத்தவரையில், இந்த நீதிபதிகள் ஒரு ஏழு டெர்ம்ஸ் ஆப் ரெபரன்ஸ் போட்டு முடித்திருக்கிறார்கள்.

அதில்கூட ஒரு வேடிக்கை என்னவென்றால், சட்ட நிபுணர்களுடனும், வழக்கறிஞர்களுடனும் கலந்து விவாதித்த நேரத்தில் இதுபற்றி ஒரு கருத்து வந்தது; அது என்ன வென்றால், இவர்கள் முதலில் அரசியல் சாசன அமர்வு தேவையில்லை; நாங்களே விசாரிக்கிறோம் என்று சொன்னார்கள். கடைசியில், அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று சொன்னார்கள்.  என்னென்ன விஷயங் களை விசாரிக்கவேண்டும் என்று முடிவு செய்கின்ற உரிமை இருக்கிறதே, இறுதியாக தீர்ப்பின்போது சொல்லுகிறார்கள். வருகிறவர்கள்தான் என்னென்ன Terms of Reference என்ன? பிரச்சினைகளில் என்னென்ன என்று, யார் எத்தனை நீதிபதிகள் வருகிறார்களோ, அந்த அரசியல் சாசன அமர்வுதான் முடிவு செய்துகொள்ளவேண்டும் என்று கேட்க மாட்டார்களா?

அந்த உரிமை எங்களுக்கு உண்டா?

இன்னும் உங்களுக்கு விளங்குவதுபோல் சொல்ல வேண்டுமானால், மூன்று பேரை கூப்பிட்டு சமைக்கச் சொல்கிறீர்கள்; நாங்களும் எல்லாவற்றிற்கும் தயாராகி விட்டோம்; திடீரென்று நீங்கள் வந்து, உங்களால் அது முடியும் என்று நாங்கள் நினைக்கவில்லை. உங்களைவிட கெட்டிக்கார சமையற்காரர்கள் அய்ந்து பேரை அழைத்து வந்து சமைத்துக்கொள்கிறோம் என்று சொல்கிறீர்கள். நாங்கள் உடனே, சரிங்க, அவர்களே சமைக்கட்டும் என்று நாங்கள் போய்விடவேண்டுமே தவிர, இல்லீங்க, வர்றவங்க எவ்வளவு உப்பு போட வேண்டும் தெரியுமா? எவ்வளவு பருப்பு போடவேண்டும் தெரியுமா? எவ்வளவு உளுந்து போடவேண்டும் என்று சொல்லக்கூடிய உரிமை உண்டா? இதுபோல்தான், அவர்கள் டெர்ம்ஸ் ஆப் ரெபரன்சிஸ் சொல்லியிருப்பது.

இது நாடு முழுவதும் எதிரொலிக்கும்!

ஆகவே நண்பர்களே, இந்தப் பிரச்சினையைப் பொறுத்த வரையில், முழுக்க முழுக்க மனிதநேயம் என்பது மட்டுமல்ல, எல்லாவற்றையும்விட, சட்ட ரீதியாகவே சிறையில் வாடிக் கொண்டிருக்கின்ற அவர்கள், எல்லா வகையிலும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள்; முழுக்க முழுக்க அவர்கள் உள்ளே இருப்பது சட்ட விரோதமான ஒரு போக்கு. தேவையில்லாத அளவிற்கு, தனிப்பட்ட முறையில் இன்னார் என்று நினைத்துக்கொண்டு, அதற்காக அவர்களை நபர்களை நினைத்துக்கொண்டு சட்டத்தினுடைய அடிப்படைத் தன்மைக்கே விரோதமாக நடந்துகொள்ளக்கூடிய தன்மை; ஆகவே, மக்கள் மன்றம் இதில் ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டும்; ஏனென்றால், இந்தப் பிரச்சினை வெறும் சட்டப் பிரச்சினை மட்டும் என்று இல்லாமல், மக்கள் பிரச்சினையாக இதனை வைக்கிறோம் என்று சொல்லி, இன்றைக்குத் இதனைத் தொடங்கியிருக்கிறோம்; இது நாடு முழுவதும் எதி ரொலிக்கும் என்று நிச்சயமாகத் தெரிவித்து, வந்திருக்கின்ற உங்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.

நன்றி! வணக்கம்!!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தொடக்கத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார். ஏராளமான வழக்குரைஞர்களும், பல்துறைப் பெருமக்களும், கழகத் தோழர்களும் திரளாக வந்திருந்தனர்.

முக்கியத் திருத்தம்
முந்தைய நாள் சென்னை (தேதி 2.5.2014) வெளியூர் (3.5.2014) பக்கம் 4, பத்தி 2-இல் உள்ள இதே உரையில் எச்.எம். சீர்வை என்பதற்கு பதிலாக எச்.எம். சால்வே என்று தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது. திருத்திப் படிக்க வேண்டுகிறோம். தவறுக்கு வருந்துகிறோம்.  - ஆசிரியர்
------------------------------------------------------------------------------------------------------------------------------
        ------------------” 8-5-2014விடுதலை”
Read more: http://viduthalai.in/page-8/79841.html#ixzz314gYG7x5

19 comments:

தமிழ் ஓவியா said...


மனித நேயத்தைப் பரப்பி எல்லோருக்கும் கல்வியைத் தந்த பெருமையைப் படைத்தவர் தமிழறிஞர் கால்டுவெல் - தமிழர் தலைவர் புகழாரம் -


சென்னை, மே 7-தமிழறிஞர் கால்டுவெல் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கூறியதா வது:-

தமிழுக்குத் தொண்டு செய்த தமிழறிஞர்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ்ப் படைப்பாளிகள், தமிழ் இலக் கியக் கர்த்தாக்கள், தமிழ்க் கவிஞர்கள் இப்படிப்பட்ட வர்கள் போலவே வெளி நாட்டு அறிஞர்கள் அதிலும் குறிப்பாக கிறித்துவ மதத் தொண்டு செய்வதற்காக வந்த பலரும் தமிழை ஆய்வு செய்து தமிழுக்கு உரிய இடத்தை உலகளாவிய நிலையிலே அவர்களுடைய மொழிகளிலே கொண்டு சென்ற பெருமை உடையவர் களாக என்றென்றைக்கும் வரலாற்றில் வாழ்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களிலே முன்னோடியாகத் திகழக்கூடியவர் பாதிரியார் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் ஆவார்கள். திராவிடமொழிக்குடும்பம் என்கிற மிகப்பெரிய அள விற்கு ஒப்பியல் மொழி இலக் கணத்தை அவர்கள் சிறப்பாக அமைத்து அதன்மூலம் திரா விடர் மொழிகள் என்பது ஒரு குடும்பம். அதிலே தமிழ் அதற்குத் தலைமை தாங்கக் கூடிய தகுதி உள்ள மூத்த முதன்மையான மொழி என்ற உணர்வினை அவர்கள் அடித்தளம் இட்டவர்கள்.

திராவிட நாகரிகம், திராவிட பண்பாடு என்பது மொழி அடிப்படையில் உருவான ஒரு சிறப்பான தனித்தன்மை யானது என் பதை அவர்கள் காட்டி இருக் கிறார்கள். அப் படிப்பட்ட பாதிரியார் இராபர்ட் கால்டு வெல் அவர்களை ஒரு மத வாதியாக பார்க்காமல் மனித நேயத்தைப் பரப்பி இங்கே எல்லோருக்கும் கல்வியைத் தந்த பெருமையைப் படைத்த பண்பும், தொண்டும் அவர் களுடைய நிலைக்கு உண்டு.

அந்த வகையிலே இரு நூற்றாண்டுவிழா என்பது சிறப்பாக திராவிடர் இயக்கங் களாலே கொண்டாடப்படு வது மகிழ்ச்சிக்கும் பெரு மைக்கும் உரியது.

திராவிடர் கழகத்தின் சார்பிலே வருகிற 12ஆம் தேதி அன்று பெரியார் திடலில் புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் சார்பில் கார்டு வெல்லின் இருநூறாவது நூற்றாண்டும், நம்முடைய காலத்திலே வாழ்ந்த பெரிய இலக்கிய மேதை, தமிழ் இலக்கியத்துக்கு ஒரு புத் தாக்கம் தந்து பலரை உரு வாக்குவதற்கு காரணமான பிரசன்ட விகடன் ஆசிரியர் நாரண. துரைக்கண்ணன் அவர்களின் நூற்றாண்டு விழா வும் நடைபெற இருக்கின் றது, அவர்கள் என்றைக்கும் மறைவ தில்லை, அவர்கள் சிறப்பாக வாழுகின்றவர் கள்.

புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல தமிழ்த் தொண்டன் சாவதில்லை. தமி ழுக்குத் தொண்டு செய்பவர் கள் என்றைக்கும் வாழுகி றார்கள். கால்டுவெல் போன்ற அறிஞர்கள் என்றைக்கும், இன்றைக்கும் நம்மிடையே வாழுகிறார்கள்.

- இவ்வாறு தமிழர் தலைவர் அவர்கள் செய்தி யாளர்களிடையே கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/79857.html#ixzz314jY6b00

தமிழ் ஓவியா said...


முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்து

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை
142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம்:

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்து

முல்லைப் பெரியாறு அணை விவகார வழக்கில், இன்று (7.5.2014) உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தந்துள்ள தீர்ப்பு - 142 அடி நீர் தேக்கிக் கொள்ளும் அளவுக்கு அணை பலமாக உள்ளது;

தனி அணை தேவையில்லை. கேரள அரசு கொண்டு வந்த புதிய அணை கட்டுவது குறித்த சட்டம் செல்லாது என்றும் கூறியுள்ளது தமிழக விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்த்த தீர்ப்பாகும். அய்ந்து மாவட்ட விவசாயிகள் இதனால் பலனடைவர், வரவேற்கிறோம்!

இந்தத் தீர்ப்பினை கேரள அரசு மதித்து செயல்பட்டு, தமிழ்நாட்டுடன் நல்லுறவை வளர்க்கவேண்டும். இரு மாநில உறவுகள் வலுப்பட, உச்சநீதிமன்றத் தீர்ப்பு உதவட்டும்!

- கி.வீரமணி,
சென்னை, தலைவர்,

7.5.2014 திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/e-paper/79861.html#ixzz314jtSg6I

தமிழ் ஓவியா said...


மதம் பயன்படாது


மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும், அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. - (குடிஅரசு, 7.5.1949)

Read more: http://viduthalai.in/page-2/79866.html#ixzz314l7lShV

தமிழ் ஓவியா said...


மூடத் தனத்தில் கிராம மக்கள்

மூடத் தனத்தில் கிராம மக்கள்
மணப்பாறையில் மழை வேண்டி
கழுதைக்கும் கழுதைக்கும் திருமணமாம்!

திருச்சி, மே 7- திருச்சி மாவட்டம் மணப்பாறை யை அடுத்துள்ள வையம் பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வத்தமணியாரம்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத் தில் கடந்த 4 ஆண்டுகளாக சரியாக மழை பெய்யவில் லையாம். இதனால் அக் கிராமத்தில் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள் ளதாம். இதனால் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற் காக கழுதைக்கும், கழுதைக் கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் இப்படி ஒரு நம்பிக்கையை மூடத்தனமாக நம்பி, அக்கிராம மக்கள் வெகு சிறப்பாக பத்திரிகை அடித்து, விருந்து வைத்து தடபுலாக இத்திருமணத்தை நேற்று முன்தினம் நடத்தியுள்ளனர்.

மனிதர்களுக்கு நடத்தப் படும் திருமணத்தை போன்று கழுதைக்கும், கழுதைக்கும் இத் திருமணத்தை நடத்தியுள் ளனர். சாதாரணமாகவே பருவ மழை பொய்த்து போய் விட்டது என்பது அனை வரும் அறிந்ததே. உலக மயமாக்கலுக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட சமூகம் முன் னேற வாய்ப்பாக வெளி நாட்டு மூலதனங்களை முன்னிறுத்தி ஆண்டாண்டு காலமாக விவசாயத்தையே நம்பி வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்கள் எல்லாம் வானு யர்ந்த கட்டடங்களாக மாறி விட்டன. இந்த சூழ்நிலை யில் விவசாயத்தைப் பாது காக்க அறிவியலை நம்பி, ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடாமல் மக்கள் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க இது போன்ற மூடநம்பிக்கை காரி யங்களில் ஈடுபட்டு வருவது, வெட்கப்பட வேண்டிய விசயம்.

சாதாரண மக்களே அறியாமையின் காரணமாக இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அரசே மூடத்தனத்தின் சாக்க டையில் மூழ்கியுள்ளது என் பதுதான் உண்மை. அண் மையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அறநிலையத்துறை கோவில் களில் வருணஜபம் நடத்தும் படி உத்தரவே பிறக்கப் பட்டு, அதன்படி அனைத்துக் கோவில்களிலும் யாகம் நடத்தினார்கள். மழை வந்ததா? என்றால் இல்லை!

தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக இதுபோன்ற மூட நம்பிக்கை காரியங்களில் ஈடுபடும் மக்களை தடுக்கவேண்டும்.

Read more: http://viduthalai.in/page-3/79848.html#ixzz314lYimYV

தமிழ் ஓவியா said...


பக்தி வந்தால் புத்தி போகும்



சிவபெருமானுக்கு நாக்கை அறுத்து காணிக்கையாம்!

ராஞ்சி, மே 8- நாக்கை பிளேடால் அறுத்து சிவ பெருமானுக்கு காணிக்கை செலுத்திய அதிர்ச்சியான நிகழ்வு ஜார்கண்ட் மாநிலத் தில் நடந்துள்ளது. ஜார் கண்ட் மாநிலம், தூகடா வில் உள்ள மகாதேவ் கர்ஹா என்ற சிவபெரு மான் கோவிலிலுக்கு லால் மோகன் சோரன் (வயது 17) வந்தார். பின்னர் திடீர் என அந்த கோவிலில் உள்ள சிவபெருமான் சந்நிதியில் முன்னால் பிளேடு ஒன்றை எடுத்து திடீரென தனது நாக்கை அறுத்து ஒரு பாத்திரத்தில் பிடித்து காணிக்கை செலுத்தினார்.

அவர் எழுதி வைத்து இருந்த ஒரு குறிப்பில் நான் எனது நாக்கை அறுத்து சிவ பெருமானுக்கு காணிக்கை செலுத்துகிறேன்.தயவு செய்து என்னை கோவிலை விட்டு வெளியே அனுப்பி விடாதீர்கள். நான் சிவபெரு மானின் காலடியில் இருக்க வேண்டும் என கூறி இருந் தார்.

உடனடியாக கோவில் நிர்வாகி லால்மோகன் சோரனை மருத்துவம னைக்கு அழைத்து சென் றார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், மருத் துவர்கள் எவ்வளவோ முயன்றும் மீண்டும் அந்த இளைஞனுக்கு நாக்கை ஒட்ட வைக்க முடியவில்லை.

தற்போது வெறும் திரவ உணவு மட்டும் சாப் பிட்டு வரும் லால்மோகன் சோரன் வாய்பேச முடியாத நிலைக்கு ஆளானார். லால் மோகன் சோரன் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்தாலும், தன்னு டைய மகன் கடவுளுக்கு கொடுத்த காணிக்கையை எண்ணி பெருமைப்படுவ தாக கூறினர்.

Read more: http://viduthalai.in/e-paper/79891.html#ixzz31B132qxV

தமிழ் ஓவியா said...


பிரிவு 370அய் விலக்குவது: காஷ்மீருக்கும் - இந்தியாவுக்கும் இடையே உள்ள பாலத்தை எரிப்பதாகும்


பிரிவு 370அய் விலக்குவது:
காஷ்மீருக்கும் - இந்தியாவுக்கும் இடையே உள்ள பாலத்தை எரிப்பதாகும்

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் கொந்தளிப்பு

சிறீநகர்.மே8- ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட் டியில் 370ஆவது பிரிவுக் குரிய முக்கியத்துவம் குறித்து விரிவாக குறிப் பிட்டுள்ளார். இது குறித்து விவாதிப்பதற்கு சட்ட நிபுணர்களாக ஈடுபட்டு ஜனநாயகத்தைப் புறக்க ணிப்பதன்மூலம் மாநில மக்களை புண்படுத்திவிட் டார்கள் என்று கூறினார்.

செய்தியாளரின் பேட் டியில் காஷ்மீர் முதல்வர் பிரிவு 370அய் விலக்குவது என்பது காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள பாலத்தை எரிப்பது என்று பொருளாகும் என்று கூறியுள்ளார்.

கேள்வி: பாஜக மோடி யின் அண்மைக்காலப் பேச்சால், இது உங்கள் தொகுதியில் அரசியல் விளம்பரத்துக்காகப் பேசியதால், நீங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப் பட்டுள்ளீர்கள். இந்த மாநில மக்களுக்கு அறிமுக மில்லாதவருடன் நீங்கள் போராடவேண்டி உள்ளதே?

உமர் பதில்: ஆம். மோடியின் போக்கு, தேர் தல் வாக்குறுதிகள் ஆகிய வைமூலம் நாட்டில் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் அமைதியைக்குலைக்கும் முடிவில் உள்ளார். ஆனால், அதில் மோடியால் என்ன செய்ய முடியும்? அரசிய லமைப்பிலிருந்து 370ஆவது பிரிவை நீக்குவதாகக் கூறி உள்ளார். இதன்மூலம், ஜம்மு காஷ்மீருக்கும், இந்திய யூனியனுக்கும் இடையே உள்ள அரசியலமைப்பு பாலம் அழிக்கப்பட்டு விடும். இந்திய யூனியனிலி ருந்து அடிப்படையி லேயே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கட்ட மைப்பை புதைகுழிக்குள் தள்ளுவதுதான் இதன் பொருளாக உள்ளது.

இரண் டாவதாக, அவர் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக ஆக்கிவிடும் என்று உறுதி அளித்துள் ளது. இச்செயல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மிகுந்த மோசமான நிலைக்கு உள்ளாக்குவதாகும். ஜம்மு, காஷ்மீரைப் பிரிப்பது என்பது ஏற்கெனவே உள்ள மோசமான பிரிவினை வாதங்களுக்குத் துணை யாகிவிடும். இந்தியாவு டனான மாநிலத்தின் பரந்த உறவும், வகுப்புவாதத்தி லிருந்து அமைதியும் ஆகிய

இவ்விரண்டுமே பாதிக்கப்படும். இந்தியர்களில் எத்தனை பேர் இந்த பயங்கர மான சூழ்நிலையைப் புரிந்து கொள்கின்றனர் என்று எனக்குத் தெரிய வில்லை. கேள்வி: இந்தியாவில் உள்ள பலருடைய கருத் தாக இருப்பதை குறிப் பிட்டாக வேண்டும். 370ஆவது பிரிவின் மூலம் வெளி மாநிலத்தவர் ஜம்மு காஷ்மீர் பகுதியில் சொத் துக்களை வாங்குவதற்கான உரிமை மறுக்கப்படு வதாக தவறாக எண்ணுகிறார்கள்.

குடிமக்களிடையே சம உரி மைக்கான பிரச்சினையாக இது உள்ளதுகுறித்து?

உமர் பதில்: ஆம். இப் படியான புறக்கணிப்புக்கு அரசியல் கட்சிகள்தான் முழுப்பொறுப்பு. இது எனக்கு வருத் தத்தையே அளிக்கிறது. உண்மை என்னவென்றால், 370ஆவது பிரிவுமூலம் எதுவும் செய்ய முடியாது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டங்கள்தான் வெளியிலிருந்து எவரும் சொத்துக்களை வாங்குவதிலிருந்து அனுமதி மறுக் கிறது. இதுவும் சுதந்திரத்துக்கு முன் உள்ள சட்டங்களாகும். இதுபோன்ற சட்டங்கள் மற்ற பல மாநிலங்களிலும் உள்ளது. எண்ணிக்கையில் சிறிய அளவில் மக்கள்தொகை இருக்கும் மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் உள்ளன. 370ஆவது பிரிவு முற்றிலும் மாறுபட்டது. மாநிலத்தின் சட்டம் இயற்றுதலில் உள்ள நாடாளுமன்றத் தின் அதி காரம்குறித்தது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவில் தொடர்ச்சியாக இருப்பது குறித்து விவரிப்பது. நாகாலாந்து போன்ற பிற மாநிலங்களிலும் இதே போன்று அதிகாரம் வழங்கப்பட் டுள்ளது. நீங்கள் 370ஆவது பிரிவை நீக்குவதன்மூலம் அடிப்படையில் இந்தி யாவிலிருந்து ஜம்மு காஷ்மீரை வெளி யேற்றுகிறீர்கள் என்றார் அவர்.

நன்றி : தி இந்து ஆங்கில நாளிதழ் 8.5.2014

Read more: http://viduthalai.in/e-paper/79893.html#ixzz31B1BNrQi

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டின் ஒரு நாள் நிலவரம்


ஏடுகளைப் படித்தால் எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு மோசடி முதலிய செய்திகள்தான் முக்கிய இடம் பெறுகின்றன.

எடுத்துக்காட்டாக மே 7ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் ஏடுகளில் வெளிவந்த செய்திகள் வருமாறு:

1) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மீனம்பாக்கம் விமான நிலையம், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்கள்.

2) பெல் தொழிற்சாலையில் செல்போன் குண்டு வெடிப்பு.

3) சென்னையில் வாக்கு எண்ணும் மய்யத்தில் போதையில் இருந்த 3 காவல்துறையினர் இடை நீக்கம்!

4) காகித ஆலையில் பணி பெற்றுத் தருவதாக ரூ.37.88 லட்சம் மோசடி.

5) தாய், மகள், கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது (புதுக்கோட்டை - திருமயம் - வி. லட்சுமிபுரம்)

6) அறந்தாங்கி எல்.என். புரத்தில் இரு வீடுகளில் திருட்டு.

7) மயிலாடுதுறை லாகடம் காசி விசுவநாதர் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கைகள் திருட்டு.

8) தஞ்சாவூர் அருகே நல்லிச்சேரி கிராமத்தில் 4 வயது சிறுமி பாலியல் வன்முறை.

9) சேலம் மத்திய சிறையில் வார்டன்களுக்குக் கைதி மது விருந்து.

10) திருச்சிராப்பள்ளியில் நடைப்பயிற்சி சென்ற வழக்குரைஞர் மதியழகன் வெட்டிக் கொலை.

11) பழனி அருகே ஏழு பேர் கொண்ட முகமூடிக் கும்பல் நிதி நிறுவன அதிபர், அவரது மனைவியைக் கத்தியைக் காட்டி, மிரட்டி, இரு நூறு பவுன் நகைகள் ரூ.35,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டன.

12) செம்பனார் கோயில் அருகே பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டிய இருவர்மீது வழக்கு.

13) சிறீரங்கம் தேரோட்டத்தின்போது நகை திருடிய பெண் கைது.

14) பெண்ணைக் காதலிக்க வற்புறுத்தி மிரட்டிய கால்நடை உதவி மருத்துவர் கைது (குடவாசல்).

இவை எல்லாம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகள்.

ஒரு நாளில் இந்தளவு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் ஆண்டு ஒன்றுக்கு எத்தனை? அஇஅதிமுக ஆட்சிக்கு வந்த கடந்தமூன்று ஆண்டுகளில் எத்தனை இலட்சம் சம்பவங்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

ஆனால், முதல் அமைச்சர் துணிந்து தவறான தகவல்களை வீதிகளில் நடைபெறும் பொதுக் கூட்ட மேடைகளில் மட்டுமல்ல; சட்டப் பேரவையில் கூட சொல்லுகிறார் என்றால் என்ன சொல்ல?

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள பிக்பாக்கெட்காரர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடி விட்டனர் என்று சொன்னவர்தான் தமிழ்நாடு முதல் அமைச்சர். இப்படியெல்லாம் ஒரு முதல் அமைச்சரால் மனதறிந்து உண்மைக்கு மாறாக எப்படி சொல்ல முடிகிறதுஎன்பதுதான் ஆச்சரியமானது.

தமிழ்நாட்டில் உள்ள ஏடுகளும், ஊடகங்களும்கூட பெரும் அளவு மறைத்து விடுவதுண்டு. அவற்றையும் மீறி வெளிவந்த தகவல்கள்தான் மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ளவை.

திமுக பொருளாளர் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்கூட சுட்டிக் காட்டியுள்ளார் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முதல் அமைச்சர் போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

வெறும் அரசியல் உணர்வோடு இவற்றையெல்லாம் மறுக்காமல், ஆரோக்கியமான முறையில் சிந்தித்து சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த ஒல்லும் வகையில் உரிய முறையில் தக்க நடவடிக்கைகளை மேற் கொள்வதுதான் மக்கள் நல அரசு என்பதற்கான அடையாளமாக இருக்க முடியும்.

கடந்த ஆட்சியில் நடக்கவில்லையா என்றெல்லாம் பதில் சொல்ல ஆரம்பிப்பது சமாதானமாக ஆகி விட முடியாது.

காவிரியில் தண்ணீர் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டது என்பது போன்ற காரணங்களை இந்தப் பிரச்சினையில் கூறிட முடியாது.

அது வேறு பிரச்சினை; இது வேறு பிரச்சினை. காவல் துறையை, தன் பொறுப்பில் வைத்திருக்கிற முதல் அமைச்சருக்கு இதில் கூடுதல் பொறுப்பும், கடமையும் உள்ளது.

பெண்கள் சாலைகளில் நடமாட முடியவில்லை; வீட்டு வாசலில் கோலம் போடும் பெண்களின் சங்கிலிகள் அறுத்து எடுக்கப்படுகின்றன. பட்டப் பகலிலேயே கொலைகள்; மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில்கூட வீடு புகுந்து கழுத்தை அறுத்துக் கொலை என்பதெல்லாம் எந்தவகையில் நியாயப்படுத்தப்படக் கூடியவை?

மக்கள் உயிர் வாழப் பாதுகாப்பு இல்லையென்றால் அதைவிட அவலம் வேறு எதுவாக இருக்க முடியும்?

மற்றவர்கள்மீது குற்றச்சாற்றுகளைப் படித்துக் கொண்டே காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்தால், அதில் ஏமாற்றம்தான் மிஞ்சும்!

Read more: http://viduthalai.in/page-2/79897.html#ixzz31B1c7Jmc

தமிழ் ஓவியா said...


நிரந்தர விரோதி


நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூடநம்பிக்கை யும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாய் இருக்கின்றன.
(குடிஅரசு, 13.4.1930)

Read more: http://viduthalai.in/page-2/79895.html#ixzz31B1kDrvJ

தமிழ் ஓவியா said...


நல்ல நினைவுகள் விரைவாக மங்குவதில்லை


நாம் வாழ்க்கையில் சில விஷயங்களை நீண்ட நாட்களுக்கு நினைவு கொள்கிறோம். அதே நேரம் சிலவற்றை குறுகிய காலத்தில் மறந்து விடுகிறோம்.

இது எப்படி நடைபெறுகிறது என்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டறிந்துள்ளார்கள்.

மனித குலத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், எதையும் தாங்கும் வல்லமை கொண்டவர்களாக மனிதர் கள் வாழ்வதற்காகவும் நல்ல நினைவுகள் நீண்டகாலம் நீடித்திருக்கின்றன என்று உளவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தீய நினைவுகளை விட்டொழித்து நல்ல நினைவுகளை தக்க வைத்துக் கொள்வது, வாழ்க்கையில் கசப்பான உணர்வுகள் மற்றும் நிலைமைகளை சமாளித்து சாதகமான அம்சங்களை முன்னெடுக்க உதவுகிறது என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

தீய நினைவுகள் விரைவாக மங்குகின்றன எனும் ஒரு கோட்பாடு 80 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக முன்வைக்கப்பட்டது.

பின்னர் 1970 ஆம் ஆண்டுகள் தொடக்கம் இதுகுறித்து பல்லின மக்களிடம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுற்றுலாப் பயணம் தொடர்பான நினைவுகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் தாங்கள் அதில் கழித்த உல்லாசமான நாள்கள், சந்தித்த மக்கள் ஆகியவை குறித்து உடனடியாக நினைவு கூர்ந்தனர்.

அதே நேரம் தாமதமான விமானப் பயணம் போன்றவற்றை அவர்கள் நினைவு கூரவில்லை.

இதையடுத்து இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ள உளவியல் விஞ்ஞானிகள், மனிதர்களிடையே விரும்பத் தகாத நினைவுகள் மற்றும் கசப்புணர்வுகள் வேகமாக மங்கி வருகின்றன என்று தெரிவித்துள்ளனர்.

ஆகவே இயற்கையாகவே தீய நினைவுகள் விரைவாக மங்கத் தொடங்குகின்றன என்பது நாடுகளையும் கலாச்சாரங்களையும் கடந்த ஒன்றாக உள்ளது என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் தமது கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-7/79907.html#ixzz31B3CkGXu

தமிழ் ஓவியா said...

நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பை தடுக்கும் - ஆய்வு

மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதார பிரிவு ஆய்வு நடத்தியது.

அதில் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்கு பிறகும் ஆரோக்கிய மாக உயிர் வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/79907.html#ixzz31B3Qz9Mp

தமிழ் ஓவியா said...


பெரிய விலங்குகள் குறைவதால் மனிதர்களிடையே நோய்கள்


விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று நோய்கள் வருவதென்பது உலகெங்கிலுமே அதிகரித்து வருகிறது.

யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள் போன்ற பெரிய விலங்கினங்களின் எண்ணிக்கை குறைவதால் உயிரினக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் இந்த போக்குக்கு காரணமாக இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று குறிப்புணர்த்துகிறது.

கென்யாவில் வேலி போட்டு பெரிய விலங்குகள் வருவது தடுக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளுக்கு சென்று ஸ்மித்ஸோனியன் மய்யத்தின் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று ஆராய்ந்தபோது, அங்கே பெரிய விலங்குகள் இல்லாத இடங்களில், எலிகள், ஈக்கள் போன்ற நோய்ப் பரப்பும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண்டறிந்துள்ளனர்.

பெரிய வனவிலங்குகள் இல்லாதிருப்பதற்கும், பார்டொ னெல்லா போன்ற தொற்று நோய்க்கிருமிகள் பரவுவதற்கு காரணமான காட்டு எலிகளின் எண்ணிக்கை பெருக்கத் துக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வு காட்டுகிறது.

பார்டொனெல்லா ஈக்களின் மூலமாக மனிதர்களிடத்தே பரவும்போது, உடலுறுப்பு செயலிழப்பு, ஞாபக சக்தி இழப்பு ஏன் உயிரிழப்பே கூட ஏற்படுகிறது.

பெரிய விலங்குகளால் சுற்றாடலில் பெரிய தாக்கம் இருக்கும் என்பதால்தான் அவை இல்லாதபோது எலி களும் ஈக்களும் பெருகிவிடுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அவ்விலங்குகள் பெருமளவான செடிகொடிகளை உண்கின்றன, பூமியில் தமது பெரும் பாதங்களை பதித்து நடக்கின்றன. இவற்றால் நிறைய பூச்சிகள் அழிவதுண்டு.

ஆனால் பெரிய விலங்குகள் இல்லாமல்போனால், அது நோய்ப்பரப்பும் எலிகள் மற்றும் பூச்சிகளின் பெருக் கத்துக்கு வசதியாகப் போய்விடுகிறது.

வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதாக இந்த ஆய்வின் முடிவு அமைந்துள்ளது என ஸ்மித் ஸோனியன் ஆய்வறிக்கையை உருவாக்கிய குழுவின் தலைவரான டாக்டர் ஹில்லரி யங் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-7/79908.html#ixzz31B3YnoG4

தமிழ் ஓவியா said...

சென்னை, கொழும்பு புதையுறும் நகரங்களா?

நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக நிலவியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்கள் இதனால் கூடுதலாக பாதிக்கப் படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கெனவே, சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் கடுமை யான பாதிப்புக்கள் காரணமாக புவியானது வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதன் விளைவாக கடலின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துவருவதால் சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்களின் கடற்கரையோர பகுதிகள் படிப்படியாக கடலில் மூழ்கும் ஆபத்து அதி கரிக்கும் என்று விஞ்ஞானிகள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறாரகள்.

இத்தகைய எச்சரிக்கைகளுக்கு மத்தியில், இது போன்ற பெரு நகரங்களில் நிலத்தடி நீரை வேக வேகமாக உறிஞ்சி எடுப்பதால் இந்த நகரங்களின் நிலமே கூட படிப்படியாக உள்ளிறங்கி வருவதாக விஞ் ஞானிகள் தற்போது கண்டறிந்து எச்சரித்திருக்கிறார்கள்.

அதாவது, உலகின் சில பகுதிகளில் கடல்நீர் மட்டம் அதிகரிப்பதைவிட, நிலம் உள்ளிறங்குவது என்பது மோசமான பிரச்சினையாக மாறிவருவதாக, அய்ரோப்பிய ஒன்றியத்தின் நிலவியல் விஞ்ஞான ஒன்றிய அவையின் கூட்டத்தில் பேசிய விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

சில கடலோர நகரங்களில் கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் வேகத் தைவிட, நிலப்பகுதியானது பத்து மடங்கு அதிக வேகமாக உள்ளிறங்கிக்கொண்டிருப்பதாக இந்த விஞ் ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page-7/79908.html#ixzz31B3gTMEx

தமிழ் ஓவியா said...


மே 8: உலக தாலசீமியா நோய் தினம் சொந்த உறவுகளில் திருமணம் செய்வதால் தாலசீமியா நோய் பாதிப்புடன் குழந்தை பிறக்கும்


சொந்த உறவுகளில் திரு மணம் செய்தால், பிறக்கும் குழந்தை தாலசீமியா நோய் பாதிப்புடன் பிறக்கும் என ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ரத்த நோய் நிபுணர் டி.உஷா தெரிவித் தார்.

உலக தாலசீமியா நோய் தினம் மே 8ஆம் தேதி அனு சரிக்கப்படுகிறது. இந்த நோய் குழந்தைகளுக்கு பிறவியி லேயே வருகிறது. தாலசீமியா பாதித்த குழந்தைகளின் ரத் தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்.

இது தொடர்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனை ரத்த நோய் நிபுணர் மருத்துவர் டி.உஷா கூறிய தாவது:

தாலசீமியா நோய் என் பது குழந்தைகளுக்கு பிற வியிலேயே ஏற்படும் ஒரு விதமான ரத்த சோகையா கும். தாலசீமியா பாதித்த குழந்தைக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். இத னால், சுவாசிக்கும் ஆக்சிஜன் நுரையீரலில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்வதில் தடை ஏற்படுகிறது.

அதற் காக, குழந்தைக்கு ஹீமோ குளோபின் அளவை அதிக ரிக்க 6ஆவது மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து ரத்தம் ஏற்றிக் கொண்டே இருக்க வேண் டும்.

குழந்தைக்கு மாதம் மாதம் ரத்தம் ஏற்றுவதால், உடலில் பல விதமான பிரச் சினைகள் வருகின்றன. மேலும் இரும்பு சத்து அதிகரிப்பதால் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல தீவிர நோய்களும் வருவ தற்கு வாய்ப்புள்ளது.

அம்மா, அப்பா வம்சா வழியில் யாருக்காவது தால சீமியா நோய் இருந்தால் குழந்தைக்கும் இந்நோய் வருகிறது. முக்கியமாக சொந்த உறவுகளில் திருமணம் செய் வதால் குழந்தைகள் தாலசீ மியா நோயினால் பாதிக்கப் படுகின்றனர்.

அதனால், பெண்கள் கர்ப்பக் காலத்தில் பரிசோதனை செய்து கருவில் இருக்கும் குழந்தை தால சீமியா நோயினால் பாதிக்கப் பட்டுள்ளதா என்பதை கண்டு பிடிக்கலாம். தாலசீமியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், குழந்தை வேண்டாம் என நினைப்ப வர்கள் கருக்கலைப்பு செய்து விடலாம்.

குறைபாட்டுடன் குழந்தையை பெற்றுக் கொண்டு வாழ்நாள் முழுவ தும் கஷ்டப்படுவதைவிட, கருக்கலைப்பு செய்துவிடு வது நல்லது. தாலசீமியா நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சையே சிறந்த தீர்வாகும். - இவ்வாறு அவர் தெரி வித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/79911.html#ixzz31B43Uee9

தமிழ் ஓவியா said...


தஞ்சையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி


முல்லைப் பெரியாறு:

கேரளம் - தமிழக உறவுகள் பேணிக் காக்கப்பட கேரளா ஒத்துழைக்க வேண்டும்

தஞ்சையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி


கேள்வி: முல்லைப் பெரியாறு பற்றி உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரளா எதிர்க்கிறதே?

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் பதில்: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒரு முக்கிய தீர்ப்பினை வழங்கி யுள்ளது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களுள் மூன்றாம் தூண் என்று கருதப்படுகிற நீதிமன்றம் அதுவும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப் புக்கு கேரள அரசு கட்டுப்பட வேண் டும். ஏற்கெனவே உச்சநீதிமன்றத் தால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட குழு தெளிவான அறிக் கையைக் கொடுத்துள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் தமிழ்நாட்டின் சார்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கேரளாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் ஆகியோர் அடங்கிய குழு முல்லைப் பெரியாறு அணைக் கட்டு மானம் உறுதியாக உள்ளது. 142 அடி தண் ணீரைத் தேக்கலாம் என்று கூறி விட்டதே.

கேரளா மாநில அரசின் அடாவடிப் போக்கால் நீதிபதி கே.டி. தாமஸ் இடையில் விலகிக் கொண்டார். இந்தத் தீர்ப்பினால் கேரள மாநிலத்திற்கு எந்தவிதப் பாதிப்பும் கிடையாது. தமிழ்நாடும் கேரளமும் அமர்ந்து பேசி உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி நடந்து கொள்ள முன் வர வேண்டும். இதில் உரசலுக்கு இடம் தரக் கூடாது. இரு மாநில மக்களின் நல்லுறவு பேணிக் காக்கப்பட வேண்டும்.

கேள்வி: கேரளாவில் உள்ள கம்யூனிஸ்டுக் கட்சியும்கூட நீதிமன்ற தீர்ப்பை எதிர்க் கின்றதே?

பதில்: தேசிய கட்சிகள் என்று சொல்லிக் கொண்டாலும் மாநில உணர்வுடன்தான் அத்துமீறி நடந்து கொள்கின்றன. கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல; பி.ஜே.பி. காங்கிரஸ் எல்லாமே இப்படித்தான் நடந்து கொள்கின்றன. வாக்கு வங்கி அரசி யலைத்தான் எல்லாக் கட்சிகளும் நடத்துகின்றன.

கேள்வி: தமிழ்நாட்டில் மின் வெட்டுப் பற்றி?

பதில்: மின்சாரம் இருந்தால் தானே மின் வெட்டு என்ற கேள்வி எழும்.

கேள்வி: நாட்டில் எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளைகள் நடந்து கொண்டுள்ளனவே?

பதில்: சட்டம் ஒழுங்கு பிரச்சினையே இல்லை; நாடு அமைதியாகவே இருக்கிறது என்று முதல் அமைச்சர் சொல்லுவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு முதல் அமைச்சர் என்றால் எதிர்க் கட்சிகள் கூறுவதை நிதானத்துடன் கேட்க வேண்டும்; கோபப்படக் கூடாது.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மேற்கண்ட வாறு கூறினார். (8.5.2014).

Read more: http://viduthalai.in/e-paper/79955.html#ixzz31Gt9jMhN

தமிழ் ஓவியா said...


மனிதன்



பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

Read more: http://viduthalai.in/page-2/79958.html#ixzz31GtKHLwc

தமிழ் ஓவியா said...


பார்வதி -பரமசிவன் முத்தக் காட்சி!


திருவாக்குஞ் செய்கருமங் கை கூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலாற் கூப்புவர்தங் கை

விநாயகக் கடவுளை வணங்கிக் காரியங்களைத் தொடங்கினால் நல்லது என்று கூறும் பண்டாரச் சன்னதிகளே! வேழ முகத்தானின் வாழ்க்கை வரலாற் றினைப் பாரீர்.

கசமுகாசுரன் என்பவன் தவம் செய்து, தான் மனிதராலும், விலங்குகளாலும், பிறவற்றாலும் காலமெல் லாம் இறவாதிருக்க வேண்டும் என்று வரம் பெற்றான். அந்த வரம் பெற்றமையால் அவன் தேவர்களைத் துன்புறுத்தினான்.

தேவர்கள் சிவபெருமானை வேண்ட சிவன் விநாயகனை உண்டாக்க வேண்டும் என்று எண்ணினான். அதனால் தன் துணைவி சக்தி யோடு தோட்டத்திலே வீற்றிருந்தார். அப்பொழுது அங்கே ஓர் ஆண் யானை, பெண் யானையைப் புணர்தல் கண்டு, சக்தி பெண் யானை வடிவங்கொள்ள, சிவன் ஆண் யானை வடிவங் கொண்டு புணர்ந்தார்.

அவர்கட்கு யானை முகமும் மனித உடலுமாக ஒரு குழந்தை தோன்றியது. இதுதான் இன்று ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கும் கரியின் முகவன் கதை, இதற்கு ஆதாரமாக, திருஞான சம்பந்தர் தனது தேவாரத்தில்-

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே

என்று பாடியுள்ளார். இப்படிக் காமத்தின் விளைச்சலால் மக்கள் பிறவியிலிருந்து, விலங்குப் பிறவியெடுத்து இணைந்த பிண்டங்களின் சதைக்கலப்பில் விளைந்த விநாயகன் வணங்க வேண்டிய கடவுளா? இதோடு மட்டுமல்ல, தன்னை ஈன்ற தாயும் தந்தையும் காமக் காய்ச்சல் மிகுதி யினால் உதட்டுச்சுவை பருகும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தாராம், நெற்றிக் கண்ணனார் பெற்ற மகன்.

மும்மைப் புவனம் முழுதீன்ற முதல்வி
யோடும் விடைப்பாகன் அம்மை தருக
முத்தமென அழைப்ப வாங்கே சிறிதகன்று
தம்மின் முத்தங்கொள நோக்கிச் சற்றே
நகைக்கும் வேழமுகன் செம்மை முளரி
மலர்த்தா ளெஞ்சென்னி மிசையிற் புனைவாமே

மூன்று உலகங்களையும் பெற்ற சக்தியிடத்து, எருதுவை ஊர்தியாக உடைய சிவபெருமான், அம்மையே முத்தம் தருக எனச் சொல்லி அழைக்க அவர்களுக்கு இடையே இருந்த விநாயகன் சிறிது நீங்கிட, சிவனும், பார்வதியும் ஒருவரை யொருவர் முத்தமிட்டு கொள்ள அதனைக் கண்டு புன்னகை செய்யும் யானை முகனது சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை எமது தலையின் மேல் அணிந்து கொள்வோம் என்று கூறுகிறது நந்திக் கலம்பகம் எனும் நூல்.

பெற்றவர்கள் முயங்கும் போது உற்றுப்பார்த்து மகிழ்ந் திடும் காமவல்லி பெற்ற திருக்குமரன் விநாயகக் கடவுளை வீரமரபில் வந்த தமிழினம் வணங்க வேண்டியது தானா? புராணப் புரட்டர்களின் மூளைச் சுரப்பிலிருந்து உதயமான ஆபாசக் கடவுளுக்கு ஆற்றங்கரையில் சிலை ஏன்? இந்த வெட்கங் கெட்ட உறவில் விளைந்த யானை முகத்தானுக்கு தேங்காய் உடைப்பும், நைவேத்தியமும் ஒரு கேடா? தமிழினமே! சிந்தித்துச் செயல்படு!

- பெரியகுளம் அருளாளன்

Read more: http://viduthalai.in/page-7/79978.html#ixzz31GuO1DIm

தமிழ் ஓவியா said...

விதியைப் பற்றி...

மனித சக்தி விதி என்ற சங்கிலியால் கட்டுண்டு கிடப்பது, பெரும் பரிதாபமே.

மனிதன் சிந்திக்கச் சிந்திக்க, விதியினின்று விடுதலை அடைகிறான். மனித மூளை சிந்தனையால் விதியை எதிர்த்து, அதை அழித்து, வெறும் பிரமை என்று நிரூ பிக்கவும் ஆற்றல் பெற்றுவிடுகிறது.

பலமற்றவர்கள், பாதகர்கள் - இவர்களே உழைக்காமல் சோம்பலில் மடிந்து, விதியைக் குறை கூறுகிறார்கள்.

- எமர்சன்

Read more: http://viduthalai.in/page-7/79978.html#ixzz31Guc2YkR

தமிழ் ஓவியா said...


பார்ப்பனம் மதம்- தர்மம்


பார்ப்பனர்கள் எந்த காரியத்தி லானாலும் எந்தத் துறையிலானாலும் தங்கள் சொந்த ஜாதி (உயர்வு) நலனை அடிப்படையாகக் கொண்டுதான் பார்ப்பார்களே தவிர, மக்களின் பொது நலனைப் பற்றிய கவலையே அவர் களுக்கு ஏற்படுவதில்லை.

பார்ப்பனர்களுக்கு மதம், தர்மம் என்பதே அவர்களது ஜாதி பாதுகாப்பாகத்தான் ஆகி விட்டது

- தந்தை பெரியார் 22.5.1967 விடுதலை தலையங்கத்தில் ஒரு பகுதி

Read more: http://viduthalai.in/page-7/79979.html#ixzz31Gui7vE0

தமிழ் ஓவியா said...

விஞ்ஞானியும் - பார்ப்பானும்

ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சி சாலையில் கண்டறிந்த உண்மையானது, மறுநாளே, விளையாட்டு சாமான் செய்யும் தொழிலாளியையும் கூட 8 அணா சம்பாதிக்க வைக்கும்படி மேல்நாட்டில் வசதி ஏற்பட்டிருக்கிறது.

நமது நாட்டிலோ கோவில் பார்ப்பனன் ஏற்பாடு செய்த புஷ்பப்பல்லக்குக்கு மறுநாளே ஆயிரக்கணக்கான மைல் தூரமுள்ள ஏழைகளின் பணத்தையும் இழக்க வசதி உண்டு.

அரிது! அரிது!!

ஒன்றை ஆக்குதல் அரிது; அழித்தல் எளிது என்பது பழமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு எளிதாகப் புளுகி வைத்துள்ளார்கள். அவைகளை அழிப்பது மிக அரிதாகவே முடிகிறது தல்லவா?

- புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page-7/79979.html#ixzz31Gupy5B5