முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக் கில்
உச்சநீதிமன்றம் நியாயமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பைப்
பற்றி அறியும்முன் அதன் பின்னணியைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
கேரள மாநிலம் இடுக்கியில் 1887 முதல் 1895
கால கட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. திருவாங்கூர்
சமஸ்தானத்துக்கும் சென்னை மாநில அரசுக்கும் இடையே 999 ஆண்டுகளுக்கு
ஒப்பந்தம் போடப்பட்டது.
அதன்படி இந்த அணையில் 152 அடி வரை தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம்.
ஆனால், கேரள மாநில அரசு அணை பலகீனமாக
உள்ளது அணை உடைந்தால் இடுக்கி மாவட்டம் வெள்ளத்தால் மூழ்கிப் போய் விடும்
என்று கூறி, 136 அடியாக நீர் மட்டத்தைக் குறைத்தது அணையைப் பராமரித்து
உறுதி செய்த பிறகு மீண்டும் நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று
உறுதி கூறியது கேரள மாநில அரசு. பராமரிப்புப் பணி முடிக்கப்பட்ட பிறகும்கூட
நீர் மட்டத்தை உயர்த்திட கேரள அரசு பிடிவாதமாக மறுத்தது.
கேரள அரசின் இந்த நிலைபாட்டை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது.
142 அடி அளவுக்குத் தண்ணீரை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை முடக்கும் வகையில்
கேரள அரசு குறுக்கு வழி முறை ஒன்றைக் கையாண்டது. முல்லை பெரியாறு
பாதுகாப்புச் சட்டம் என்ற புதிதாக ஒன்றை நிறைவேற்றியது (18.3.2006).
இதனையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
தமிழ்நாடு முதல்வரும் கேரள மாநில
முதல்வரும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சு வார்த்தை
ஒன்றை நடத்தினர் (19.12.2007).
பேச்சு பலன் அளிக்கவில்லை.
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்மீது
உச்சநீதிமன்றம் குழு ஒன்றை நியமித்தது.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் அதற்குத் தலைமை வகித்தார்.
அணை பாதுகாப்பாக இருக்கிறது. சமீபத்தில்
ஏற்பட்ட நில அதிர்வுகளால்கூட அணைக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை
என்று அந்தக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்தது (25.4.2012).
அந்த நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது (7.5.2014).
142 அடி வரை தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம்
என்று கூறியதுடன், கேரள அரசு நிறைவேற்றிய முல்லை பெரியாறு அணைப்
பாதுகாப்பு திருத்தச் சட்டம் செல்லாது என்றும் கறாராகத் தீர்ப்பு அளித்து
விட்டது.
இதற்கு மேல் என்ன இருக்கிறது? கேரள மாநில
அரசும் அங்குள்ள தேசியக் கட்சிகளும் கண் மூடித்தன மாக எதிர்ப்பைக் காட்டி
வருகின்றன. முழு வேலை நிறுத்தம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளன.
உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்ய விருப்பதாக கேரள மாநில முதல் அமைச்சர் கூறியுள்ளார்.
வாக்கு வங்கி அரசியலை நடத்துவதற்கு
இத்தகைய யுக்திகள் அம்மாநில அரசியல் கட்சிகளுக்கு தேவைப் படுகின்றன என்பதை
எளிதாகவே புரிந்து கொள்ள முடிகிறது.
முல்லைப் பெரியாறு அணையை நம்பித்தான்
மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் குடி
தண்ணீர், விவசாயம் முதலியவை இருக்கின்றன.
இலட்சக்கணக்கான விவசாயிகள் பெரும் பாதிப் புக்கு ஆளாகும் நிலை.
தேசிய ஒருமைப்பாடுபற்றி வாய் கிழிய பேசும்
அகில இந்தியத் தேசிய கட்சிகளே இப்படி நடந்து கொண்டால் - இதன் விளைவு என்ன
என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
-------------------------- ”விடுதலை” தலையங்கம் 9-5-2014
11 comments:
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் கடைப்பிடிக்கப்படும் வெயிட்டேஜ் முறையை அறவே அகற்றுக தஞ்சை வல்லம் தலைமைச் செயற்குழு முடிவு
தமிழ்ப் படிப்பதைத் தவிர்ப்பதற்காக சி.பி.எஸ்.இ.க்கு மாறுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்
ஜூன் இறுதிக்குள் விடுதலைக்கு 12 ஆயிரம் ஆண்டு சந்தாக்களைச் சேர்க்க முடிவு
தஞ்சை வல்லம் தலைமைச் செயற்குழு முடிவு
வல்லம், மே 9- தமிழ்ப் படிப்பதைத் தவிர்ப்பதற்காக சி.பி.எஸ்.இ.க்கு மாறுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று இன்று (9.5.2014) தஞ்சை வல்லத்தில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று (09.05.2014) சனி காலை 10.30 மணிக்கு தஞ்சாவூர் வல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமயில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு :-
1. இரங்கல் தீர்மானம்
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் ஆயக்காரன் புலம் க.சுந்தரம் (வயது 104), அரியலூர் மு.சிங்காரம் (வயது 92) ஆகியோரின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. அவர்களது தொண்டிற்கு இக்கூட்டம் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் -2
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு
முல்லை பெரியாறு அணையில் 142 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்கி கொள்ளலாம் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை இக்கூட்டம் வரவேற்கிறது. இப்பிரச்சினையை அரசியல் ஆக்காமல், கேரள மாநில அரசு உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கு கட்டுப்பட்டு, தமிழ்நாடு-கேரள மாநில மக்களின் நல்லுறவை பேணிக்காக்குமாறு இச்செயற்குழு கேரள மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் - 3
சி.பி.எஸ்.இ. கல்வி முறைக்கு மாறும் கல்வி நிறுவனங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்
மேல்நிலைப்பள்ளி வரை தமிழைக் கட்டாயம் படித்திட வேண்டும் என்ற இன்றைய கல்வி திட்ட முறையை தவிர்க் கும் வகையிலும் தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வி முறை யிலிருந்து தவிர்க்கவும் சி.பி.எஸ்.இ கல்வி முறைக்கு மாறும் போக்கு தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதை இக்கூட்டம் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு மத்திய அரசின் துணையோடு இதில் தலையிட்டு தடுத்து நிறுத்த ஆவன செய்யு மாறு இச் செயற்குழுக்கூட்டம் தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் - 4
வெயிட்டேஜ் முறையை அறவே அகற்றுக
ஆசிரியர் தகுதித் தேர்வில் கடைப்பிடிக்கப்படும் வெயிட்டேஜ் மார்க் முறையை அறவே அகற்றுமாறு இச் செயற்குழுக் கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் - 5
கழக பொறுப்பாளருக்கு களப்பணி பயிற்சி முகாம்
திராவிடர் கழக பொறுப்பாளர்களுக்கான களப்பணி பயிற்சி முகாமை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. மாநில மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர கழகப் பொறுப் பாளர்கள் கட்டாயமாக பங்கேற்குமாறு வலியுறுத்தப்படு கிறார்கள். முதற் கட்டமாக 24.05.2014 அன்று புதுச்சேரியிலும் 25.05.2014 கடலூர் மண்டலத்துக்கான களப்பணி பயிற்சி முகாமை குறிஞ்சிப்பாடியிலும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் - 6
விடுதலைக்குச் சந்தா சேர்க்கை
விடுதலை 80 ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி ஜுன்மாத இறுதிக்குள் கழக மாவட்டத்திற்கு 200 ஆண்டு சந்தாக்கள் வீதம் 12000 விடுதலை ஆண்டு சந்தாக்களைத் திரட்டுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
Read more: http://viduthalai.in/e-paper/79950.html#ixzz31Gsuo0AZ
தஞ்சையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
முல்லைப் பெரியாறு:
கேரளம் - தமிழக உறவுகள் பேணிக் காக்கப்பட கேரளா ஒத்துழைக்க வேண்டும்
தஞ்சையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
கேள்வி: முல்லைப் பெரியாறு பற்றி உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரளா எதிர்க்கிறதே?
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் பதில்: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒரு முக்கிய தீர்ப்பினை வழங்கி யுள்ளது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களுள் மூன்றாம் தூண் என்று கருதப்படுகிற நீதிமன்றம் அதுவும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப் புக்கு கேரள அரசு கட்டுப்பட வேண் டும். ஏற்கெனவே உச்சநீதிமன்றத் தால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட குழு தெளிவான அறிக் கையைக் கொடுத்துள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் தமிழ்நாட்டின் சார்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கேரளாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் ஆகியோர் அடங்கிய குழு முல்லைப் பெரியாறு அணைக் கட்டு மானம் உறுதியாக உள்ளது. 142 அடி தண் ணீரைத் தேக்கலாம் என்று கூறி விட்டதே.
கேரளா மாநில அரசின் அடாவடிப் போக்கால் நீதிபதி கே.டி. தாமஸ் இடையில் விலகிக் கொண்டார். இந்தத் தீர்ப்பினால் கேரள மாநிலத்திற்கு எந்தவிதப் பாதிப்பும் கிடையாது. தமிழ்நாடும் கேரளமும் அமர்ந்து பேசி உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி நடந்து கொள்ள முன் வர வேண்டும். இதில் உரசலுக்கு இடம் தரக் கூடாது. இரு மாநில மக்களின் நல்லுறவு பேணிக் காக்கப்பட வேண்டும்.
கேள்வி: கேரளாவில் உள்ள கம்யூனிஸ்டுக் கட்சியும்கூட நீதிமன்ற தீர்ப்பை எதிர்க் கின்றதே?
பதில்: தேசிய கட்சிகள் என்று சொல்லிக் கொண்டாலும் மாநில உணர்வுடன்தான் அத்துமீறி நடந்து கொள்கின்றன. கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல; பி.ஜே.பி. காங்கிரஸ் எல்லாமே இப்படித்தான் நடந்து கொள்கின்றன. வாக்கு வங்கி அரசி யலைத்தான் எல்லாக் கட்சிகளும் நடத்துகின்றன.
கேள்வி: தமிழ்நாட்டில் மின் வெட்டுப் பற்றி?
பதில்: மின்சாரம் இருந்தால் தானே மின் வெட்டு என்ற கேள்வி எழும்.
கேள்வி: நாட்டில் எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளைகள் நடந்து கொண்டுள்ளனவே?
பதில்: சட்டம் ஒழுங்கு பிரச்சினையே இல்லை; நாடு அமைதியாகவே இருக்கிறது என்று முதல் அமைச்சர் சொல்லுவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஒரு முதல் அமைச்சர் என்றால் எதிர்க் கட்சிகள் கூறுவதை நிதானத்துடன் கேட்க வேண்டும்; கோபப்படக் கூடாது.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மேற்கண்ட வாறு கூறினார். (8.5.2014).
Read more: http://viduthalai.in/e-paper/79955.html#ixzz31Gt9jMhN
மனிதன்
பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)
Read more: http://viduthalai.in/page-2/79958.html#ixzz31GtKHLwc
பார்வதி -பரமசிவன் முத்தக் காட்சி!
திருவாக்குஞ் செய்கருமங் கை கூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலாற் கூப்புவர்தங் கை
விநாயகக் கடவுளை வணங்கிக் காரியங்களைத் தொடங்கினால் நல்லது என்று கூறும் பண்டாரச் சன்னதிகளே! வேழ முகத்தானின் வாழ்க்கை வரலாற் றினைப் பாரீர்.
கசமுகாசுரன் என்பவன் தவம் செய்து, தான் மனிதராலும், விலங்குகளாலும், பிறவற்றாலும் காலமெல் லாம் இறவாதிருக்க வேண்டும் என்று வரம் பெற்றான். அந்த வரம் பெற்றமையால் அவன் தேவர்களைத் துன்புறுத்தினான்.
தேவர்கள் சிவபெருமானை வேண்ட சிவன் விநாயகனை உண்டாக்க வேண்டும் என்று எண்ணினான். அதனால் தன் துணைவி சக்தி யோடு தோட்டத்திலே வீற்றிருந்தார். அப்பொழுது அங்கே ஓர் ஆண் யானை, பெண் யானையைப் புணர்தல் கண்டு, சக்தி பெண் யானை வடிவங்கொள்ள, சிவன் ஆண் யானை வடிவங் கொண்டு புணர்ந்தார்.
அவர்கட்கு யானை முகமும் மனித உடலுமாக ஒரு குழந்தை தோன்றியது. இதுதான் இன்று ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கும் கரியின் முகவன் கதை, இதற்கு ஆதாரமாக, திருஞான சம்பந்தர் தனது தேவாரத்தில்-
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே
என்று பாடியுள்ளார். இப்படிக் காமத்தின் விளைச்சலால் மக்கள் பிறவியிலிருந்து, விலங்குப் பிறவியெடுத்து இணைந்த பிண்டங்களின் சதைக்கலப்பில் விளைந்த விநாயகன் வணங்க வேண்டிய கடவுளா? இதோடு மட்டுமல்ல, தன்னை ஈன்ற தாயும் தந்தையும் காமக் காய்ச்சல் மிகுதி யினால் உதட்டுச்சுவை பருகும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தாராம், நெற்றிக் கண்ணனார் பெற்ற மகன்.
மும்மைப் புவனம் முழுதீன்ற முதல்வி
யோடும் விடைப்பாகன் அம்மை தருக
முத்தமென அழைப்ப வாங்கே சிறிதகன்று
தம்மின் முத்தங்கொள நோக்கிச் சற்றே
நகைக்கும் வேழமுகன் செம்மை முளரி
மலர்த்தா ளெஞ்சென்னி மிசையிற் புனைவாமே
மூன்று உலகங்களையும் பெற்ற சக்தியிடத்து, எருதுவை ஊர்தியாக உடைய சிவபெருமான், அம்மையே முத்தம் தருக எனச் சொல்லி அழைக்க அவர்களுக்கு இடையே இருந்த விநாயகன் சிறிது நீங்கிட, சிவனும், பார்வதியும் ஒருவரை யொருவர் முத்தமிட்டு கொள்ள அதனைக் கண்டு புன்னகை செய்யும் யானை முகனது சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை எமது தலையின் மேல் அணிந்து கொள்வோம் என்று கூறுகிறது நந்திக் கலம்பகம் எனும் நூல்.
பெற்றவர்கள் முயங்கும் போது உற்றுப்பார்த்து மகிழ்ந் திடும் காமவல்லி பெற்ற திருக்குமரன் விநாயகக் கடவுளை வீரமரபில் வந்த தமிழினம் வணங்க வேண்டியது தானா? புராணப் புரட்டர்களின் மூளைச் சுரப்பிலிருந்து உதயமான ஆபாசக் கடவுளுக்கு ஆற்றங்கரையில் சிலை ஏன்? இந்த வெட்கங் கெட்ட உறவில் விளைந்த யானை முகத்தானுக்கு தேங்காய் உடைப்பும், நைவேத்தியமும் ஒரு கேடா? தமிழினமே! சிந்தித்துச் செயல்படு!
- பெரியகுளம் அருளாளன்
Read more: http://viduthalai.in/page-7/79978.html#ixzz31GuO1DIm
விதியைப் பற்றி...
மனித சக்தி விதி என்ற சங்கிலியால் கட்டுண்டு கிடப்பது, பெரும் பரிதாபமே.
மனிதன் சிந்திக்கச் சிந்திக்க, விதியினின்று விடுதலை அடைகிறான். மனித மூளை சிந்தனையால் விதியை எதிர்த்து, அதை அழித்து, வெறும் பிரமை என்று நிரூ பிக்கவும் ஆற்றல் பெற்றுவிடுகிறது.
பலமற்றவர்கள், பாதகர்கள் - இவர்களே உழைக்காமல் சோம்பலில் மடிந்து, விதியைக் குறை கூறுகிறார்கள்.
- எமர்சன்
Read more: http://viduthalai.in/page-7/79978.html#ixzz31Guc2YkR
பார்ப்பனம் மதம்- தர்மம்
பார்ப்பனர்கள் எந்த காரியத்தி லானாலும் எந்தத் துறையிலானாலும் தங்கள் சொந்த ஜாதி (உயர்வு) நலனை அடிப்படையாகக் கொண்டுதான் பார்ப்பார்களே தவிர, மக்களின் பொது நலனைப் பற்றிய கவலையே அவர் களுக்கு ஏற்படுவதில்லை.
பார்ப்பனர்களுக்கு மதம், தர்மம் என்பதே அவர்களது ஜாதி பாதுகாப்பாகத்தான் ஆகி விட்டது
- தந்தை பெரியார் 22.5.1967 விடுதலை தலையங்கத்தில் ஒரு பகுதி
Read more: http://viduthalai.in/page-7/79979.html#ixzz31Gui7vE0
அவசியம்
கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும் அவசியமுமாகும். - (விடுதலை, 17.6.1970)
Read more: http://viduthalai.in/page-2/80033.html#ixzz31MgHlWwK
திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழுவின் தீர்மானங்கள்
திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (9.5.2014) முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.
இரண்டாவது தீர்மானம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதாகும். இதுகுறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெளிவாக, கழகத்தின் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் ஒன்று மிகவும் முக்கியமானது.
உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியதற்குப் பிறகு - அதற்கு மாறாக கேரள மாநில அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியதை உச்சநீதிமன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது நீதி பரிபாலனத்தில் தலையிடும் செயல் என்றும் கேரளாவின் தலையில் மிக அழுத்தமாகவே குட்டியது உச்சநீதிமன்றம் இதற்குப் பிறகாவது கேரள அரசு அரசமைப்புச் சட்டத்தின் வரையறைக்குள் நடந்து கொள்ள முயல வேண்டாமா?
மறு சீராய்வு மனு என்றாலும் இதே உச்சநீதிமன்றத்துக்குத் தானே விண்ணப்பிக்க வேண்டும்? தொடக்கக் கட்டத்திலேயே இந்த மனு நிராகரிக்கப்படவே அதிக வாய்ப்பு உண்டு.
காவிரி நீர்ப் பிரச்சினையில் கருநாடக மாநில அரசும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை முடக்கிடும் வகையில், இதே போன்றதொரு சட்டத்தை நிறைவேற்றி மூக்கறுபட்டதுண்டு அதற்குப் பிறகாவது கேரளா புத்திக் கொள் முதல் பெற்றிட வேண்டாமா?
உண்மை என்ன என்றால் முல்லைப் பெரியாறில் 136 அடிக்குள் தண்ணீரைத் தேக்கியதால் காலியாகவிருந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் ஓட்டல்களையும் கட்டடங் களையும் கேரள மக்கள் கட்டி, அவற்றை ஒரு வியாபாரத்தலமாக, வணிகப் பகுதியாகப் பயன்படுத்திக் கொண்டு விட்டனர். 142 அடி நீரைத் தேக்கினால் இந்தச் சட்ட விரோத கட்டுமானங்களுக்கெல்லாம் ஆபத்து வந்து சேரும்.
இன்னொரு முக்கிய காரணம் உண்டு. 1979இல் இடுக்கி அணையைக் கட்டியது கேரள அரசுக்கு மின் உற்பத்தி செய்வதே இதன் நோக்கம் ஆனால் எதிர்பார்த்த அளவு தண்ணீரைப் பெற முடியாத ஒரு சூழலில், கேரள அரசின் கண்கள் முல்லைப் பெரியாறின் மீது பாய்ந்தன. அணை பழுதாகி விட்டது என்று புரளி கிளப்பப்பட்டது.
மத்திய அரசு என்ன செய்தது? மத்திய நீர்வள ஆணையம் நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்யக் கூறியது.
அப்போதைக்கு 136 அடி தண்ணீரைத் தேக்கலாம்; அணையின் பராமரிப்புப் பணிகளுக்குப்பின் 142 அடி தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்று அறிக்கையைக் கொடுத்தது நிபுணர் குழு.
அதன் அடிப்படையில் ரூ.17 கோடி செலவு செய்து தமிழக அரசு அணையைப் பலப் படுத்தியது. அதற்குப் பிறகும்கூட கேரள அரசு அடம் பிடித்தது என்றால் - அது ஓர் அரசு என்கிற தன்மைக்குப் பொருத்த மற்றதாகவே நடந்து கொள்கிறது என்று பொருள்.
இந்தப் போக்கு நீடிக்குமேயானால் இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் என்ற அமைப்பு முறையே சுத்தமாக நொறுங்கிப் போய்விடும். அதற்குப் பின் இந்தியாவும் இருக்காது. பிரிவினையை யாரும் கேட்காமலேயே பிரிவினை தானாகவே வந்துவிடும். அதைத்தான் ஒருக்கால் இந்தத் தேசியவாதிகள், கட்சிகள் விரும்புகிறார்களா என்று தெரியவில்லை.
மூன்றாவது தீர்மானம் வேக வேகமாக தமிழ்நாட்டில் மேல் நிலைப் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. முறைக்கு மாறிடும் போக்கைப் பற்றியதாகும்.
தமிழ்நாட்டில் நிலவும் சமச்சீர்க் கல்வி முறையில் அனைவரும் தமிழ்நாட்டின் தாய் மொழியான தமிழைக் கட்டாயம் படித்தே தீர வேண்டும். இதனைத் தவிர்க்கும் வகையில் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. கல்வி முறைக்கு மாற்றிக்கொள்ள முடிவு செய்து அந்தப் போக்கும் வேக வேகமாக நடந்து வருகிறது.
இப்படி மாறுவதற்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. இது உண்மையென்றால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்விக் கூடங்கள் மத்திய அரசின் கட்டுப் பாட்டில் செல்லக் கூடிய அபாயம் உள்ளது.
அதனால்தான் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு, தமிழ்நாடு அரசு மத்திய அரசின் துணையோடு இதில் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதுபோலவே ஆசிரியர் தகுதித் தேர்வில் கடைபிடிக்கப்பட்டு வரும் வெயிட்டேஜ் முறையை அறவே கைவிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
+2 தேர்வைப் பொறுத்தவரை வளர்ச்சி அடையாத கிராமப்புறப் பள்ளிகளில் படிக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் +2 தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் வெயிட் டேஜ் முறை என்பது அவர்களைப் பெரிதும் பாதிப்புக்கு ஆளாக்கும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு என்கிறபோது, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் தானே முக்கியம்? அதனையே முகாமைப் படுத்துமாறும் வலியுறுத்துகிறோம்.
Read more: http://viduthalai.in/page-2/80034.html#ixzz31MgQ5A7f
சந்தேகம்
பார்ப்பனரல்லாதார் இயக்கம்
1. தங்களைப் பார்ப்பனர்களில் சேர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கும் பார்ப்பனர் களுக்கும் ஆச்சார அனுஷ்டானங்களில் எவ்வித வித்தியாசமுமில்லை என்றும், தங்களுக்கும் பார்ப்பன உரிமை உண்டென்றும் கருதிக் கொண்டு இருப்பவர் களுக்கும், பார்ப்பன மதத்தையும், வேதத்தையும், புராணத்தையும், பார்ப்பன தெய்வங்களையும் காப்பாற்ற முயலுகின்றவர்களுக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் இடமோ, அல்லது தான் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையில் ஏதாவது உரிமைபெற அருகதையோ உண்டா?
2. யாராவது ஒருவர் தன்னை மற்றவர்களை விட உயர்ந்த ஜாதி என்றோ அல்லது சத்திரியன் என்றோ, வைசியனென்றோ, சூத்திரனென்றோ, பஞ்சமன் என்றோ, சொல்லிக் கொண்டு தன்னுடைய தனி ஜாதிக்கென்று தனி சின்னமோ, ஆச்சார அனுஷ்டானமோ உண்டு என்று சொல்லிக் கொள்பவனுக்குப் பார்ப்பனரல்லாதான் இயக்கத்தில் இடமோ பார்ப்பனர்களிடமிருந்து கைப்பற்றும் உரிமைகளில் பங்கு பெற பாத்தியமோ உண்டா?
3. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பது பார்ப்பனியத்தை நீக்கிய இயக்கமா? அல்லது பார்ப்பனர்களை நீக்கிய இயக்கமா?
4. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்றால், பார்ப்பனர்களிடம் உள்ள உத்தி யோகத்தையும் பதவியையும் மாத்திரம் கைப்பற்றுவது என்ற கருத்தை உடையதா? அல்லது பார்ப்பனியத்தை ஒழிக்க வேண்டுமென்ற கருத்தை உடையதா?
5. பார்ப்பனியத்தை வைத்துக் கொண்டு எவ்வளவுதான் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் குலைத்தாலும், பார்ப்பனியமானது, பார்ப்பனர்களை உண்டு பண்ணிக் கொண்டும், பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டும் இருக்காதா?
6. பணக்கார ஆதிக்கம் கூடாது என்பதாகக் கருதிக் கொண்டு நாம் எவ்வளவுதான் எல்லோருடைய சொத்துக்களையும் பிடுங்கி எல்லா மக்களுக்கும் சரிசமமாய் பங்கீட்டுக் கொடுத்தாலும் மறுபடியும் யாரையும் சொத்து சேர்க்காமல் பார்த்துக் கொள்ளத்தக்க ஏற்பாடு செய்யாவிட்டால் எப்படி மறுபடியும் பணக்கார ஆதிக்கம் உண்டாய் விடுமோ அதுபோலவே பார்ப்பனனிடமிருக்கும் உத்தியோகத்தையும் பதவியையும் அடியோடு கைப்பற்றி எல்லோருக்கும் சரிசமமாய் பங்கிட்டு கொடுத்துவிட்டு பார்ப்பனியத்தில் ஒரு கடுகளவு மீதி வைத்திருந்தாலும் மறுபடியும் பார்ப்பன ஆதிக்கம் வெகு சீக்கிரம் வளர்ந்து விடுமல்லவா?
7. பார்ப்பனரல்லாதார் இயக்கம் பார்ப்பனியத்தை ஒழிப்பதற்கு இடையூறாய் இருக்குமானால், அது உடனே அழிந்து போக வேண்டாமா? ஏனெனில், பார்ப்பனரல்லாதார் இயக்கம் இல்லாவிட்டால் பார்ப்பன ஆதிக்கம் ஒன்று மாத்திரம்தான் இருந்துவரும் என்றும், பார்ப்பனியத்தை ஒழிக்கும் கொள்கை யில்லாத பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் வேறுபல ஆதிக்கங்களும் ஏற்பட இடமுண்டாகும் என்றும், சொல்வது சரியா? தப்பா? உதாரணமாக, பார்ப்பனரல்லாத இயக்கத்தின் பலனாய் இயக்கத்தில் உள்ள பார்ப்பனாதிக்கத்தோடு இப்போது ஜமீன்தார் ஆதிக்கம், பணக்கார ஆதிக்கம், ஆங்கிலம் படித்தவர்கள் ஆதிக்கம், முதலியன பார்ப்பன ஆதிக்கத்தைப் போல் மக்களை வாட்டி வருகின்றது என்று சொல்லுவதற்கு ஆதாரம் இருக்கின்றதா இல்லையா?
- குடிஅரசு - துணைத் தலையங்கம் 06.01.1929
Read more: http://viduthalai.in/page-7/80019.html#ixzz31MiU6CKm
எது நாஸ்திகமில்லாதது?
ருஷ்யா தேசத்தில் கொஞ்ச நாளைக்கு முன்பிருந்தே கடவுளைப் பற்றி பிரசங்கங்களோ உபதேசங்களோ, வணக்கங்களோ அவசியமில்லை என்பதாக ஒரு சங்கம் ஏற்பட்டு அது தாராளமாய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த வருஷத்திய கிறிஸ்து பிறந்த நாளை உற்சவமாகக் கொண்டாடக் கூடாதென்று வெகுபலமான பிரச்சாரம் செய்யப்பட்டு வந்ததில் முழுதும் வெற்றியடையாமல் போனதால் அடுத்துவரும் ஈடர் உற்சவத்தை அதாவது கிறிஸ்து மறுபடியும் உயிர் பெற்றெழுந்தநாள் உற்சவத்தை யாரும் கொண்டாடாமல் இருக்கும்படி இப்பொழு திருந்தே வேண்டிய பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றதாம். இதற்கு அங்குள்ள சர்க்காரும் இந்த இயக்கக்காரர்களை அனுசரித்து உத்திரவு போட்டு சர்க்கார் மூலமாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றதாம். இதற்காக அநேக பிரபுக்கள் லட்சக்கணக்காக ரூபாய்கள் கொடுத்து உதவியிருக் கின்றார்களாம்.எனவே, கடவுள் பிறந்தநாளையும் மறுபடியும் உயிர்த்து எழுந்த நாளையும் கொண்டாடக் கூடாது என்று சொல்லுவதும் சர்க்கார் மூலமாகவே அவற்றைப் பிரச்சாரம் செய்வதும் அங்கு நாஸ்திகம் என்று கருதப் படுவதில்லை.
நமது நாட்டிலே, சாமி தாசி வீட்டுக்குப் போகும் உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! சமணரைக் கழுவேற்றும் உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! குடம் குடமாய் நெய்யையும் வெண்ணையையும் கொண்டுபோய் நெருப்பில் போட்டு வீணாக்கும் கார்த்திகை தீப உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! வெடி மருந்துக்கும் அடுப்புக்கரிக்கும் காசைப் பாழாக்கும் தீபாவளி உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! இளங்குழந்தைகளைப் பாலில்லாமல் கஷ்டப்பட வைத்துவிட்டு குடம் குடமாய் பால் கொண்டு போய் கல்லின் மீது கொட்டும் பாலாபிஷேக உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! அரசனிடம் குதிரை வாங்க என்று பணம் பெற்று தன்னிஷ்டப்படி செலவழித்து விட்டு அரசன் குதிரை எங்கே என்று கேட்டால் நரியைக் கொண்டு வந்து குதிரை என்று காட்டி அந்நரி அரசனுடைய பழைய குதிரைகளையும் கடித்து கொன்றுவிட்டதுடன் அரசனும் அடிபட்ட உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம் வேறு ஒரு மதக்காரர் (பவுத்தர்) கோவிலை இடித்து விக்கிரத்தைத் திருடிக் கொண்டு வந்து உடைத்த உற்சவத்தை நடத்த வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! எனவே, நமது நாட்டுக்கு எந்த காரியம்தான் நாதிகம் அல்லாததோ நமக்கு விளங்க வில்லை. - குடிஅரசு - துணைத்தலையங்கம் - 13-01-1929 காங்கிரசுக் கட்டுப்பாடு
சட்டசபை தேர்தல் காலாவதியை சர்க்கார் ஒத்திப் போட்டுவிட்டதினால் காங்கிரசுக் காரர்கள் தங்களது சுயமரியாதையையும் அதிருப்தியையும் காட்டுவதற்கு அறிகுறியாய் இனிமேல் கூட்டப்படப் போகும் சட்டசபை மீட்டிங்களுக்கு மறு தேர்தல் வரை யாரும் போகக் கூடாது என்று எல்லா இந்திய காங்கிரசுக் கமிட்டியார் திரு.காந்தியவர்கள் யோசனைப்படி தீர்மானம் செய்து எல்லா மாகாணங்களுக்கும் சார்பு செய்தாய்விட்டது.
அதை எல்லோரும் ஒப்புக் கொண்டதாகவும் பத்திரிகைகளிலும் வெளிவந்து விட்டது. ஆனால் சென்னை மாகாண தமிழ்நாட்டு காங்கிரசுக்காரர்களான பார்ப்பனர்கள் அக்கட்டுப்பாட்டுக்குக் கட்டுப்பட முடியாதென்றும் தாங்கள் எல்லா இந்திய காங்கிரஸ் கட்டளையை மீறி சட்டசபைக்குப் போகப் போவதாகவும் இரகசியமாய் தீர்மானித்து இருக்கிறார்கள். காங்கிரஸ் சட்டசபைக்குப் போகும்படி கட்டளை இட்டால் வெகு பக்தியாய் அக்கட்டளையை நிறைவேற்றுவார்கள். வேண்டாமென்றால் கட்டுப்பாட்டை மீறுவார்கள். நமது பார்ப்பனர்களின் காங்கிரஸ் பக்தி நமது ஆஞ்சநேய ஆழ்வாருக்குக் கூட கிடையாதென்றே சொல்லலாம்.
குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 16-06-1929
Read more: http://viduthalai.in/page-7/80019.html#ixzz31MifUAia
Post a Comment