Search This Blog

2.5.14

பார்ப்பனர் அல்லாதார் நலம் காக்க...பெரியார்


வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் என்பது நம்மில் நீண்ட நாளாக நடைபெற்று வந்தாலும், அதன் முறைகளும், கருத்துக்களும் நம்மை இழிவுபடுத்தி, காட்டுமிராண்டி மக்களாக ஆக்கி இருக்கின்றன. உலகிலேயே நம்மைப்போல மான உணர்ச்சியற்ற இழி மக்கள் எவருமே இருக்க மாட்டார்கள். அப்படி எதாவது கூற வேண்டுமேயானால் - இருந்தார்கள் என்ற மட்டும் கூற முடியுமே தவிர இருக்கிறார்கள் என்று இப்போது கூற முடியாது.

உலகமே திருந்தியுங்கூட இழிநிலைக்கு ஆளாக நாம் மட்டும் ஏன் திருந்தவில்லை என்று பார்க்க வேண்டும். உலகிலேயே விலங்குகளைப்போல இழி மக்களாக இருந்த மக்கள் எல்லாரும் கல்வியிலே, பழக்க வழக்கங்களிலே, கருத்திலே திருத்திவிட்டார்கள்!

நம் நாட்டில் அறிவாளிகள், பக்திமான்கள், அறிஞர்கள் தோன்றினார்கள். ஒருவரும் இந்த இழிநிலையைப் போக்க முன்வரவில்லை. மற்றத் துறைகளில் பக்தித் துறையில் இப்படித்தான் தோன்றினார்கள்.

சிலர் இதுபற்றிச் சிந்தித்து இருக்கலாம். ஏதோ இதுபற்றிச் சில பாடல்கள் பாடி இருக்கலாம். அத்தோடு சரி. அதுவும காற்றோடு காற்றாகத்தான் போய் இருக்கும்.

இந்த 2000, 3000- ஆண்டில் எவராது தோன்றினார் என்றால் அவர் சித்தார்த்தர் என்ற புத்தர் ஒருவர்தான்! அவருக்குப் பிறகு வேறு எவரும் வரவில்லை. நாங்கள் (திராவிடர் கழகத்தினர்) தான் எடுத்துக் கூறி வருகிறோம். புத்தர் போதனைகளை எதிரிகள் அழித்து சின்னாபின்னப்படுத்தி விட்டார்கள். இதன் காரணமாக எவரும் வெளிவரவில்லை.

உலக மக்கள் எல்லாரும் அறிவில் முன்னேறி - அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து முன்னேறினாலும் நாம் மட்டும் 3000- ஆண்டுகளாகக் காட்டுமிராண்டிகளாகவே இருந்து வருகின்றோம்

மனித சமுதாயத்தில் மூச்சு விடுவதில் இருந்து எல்லா காரியங்களிலும் மதத்தையும், மூடக் கருத்துகளையும் புகுத்தி விட்டார்கள்.

நாம் ஏன் கீழ்ச்சாதி - சூத்திரர்கள் என்றால், அது நம் மதக் கொள்கை. நாம் ஏன் இழி சாதி, நம் பெண்கள் ஏன் பார்ப்பானுக்கு வைப்பாட்டிகள்? ஏன் என்றால் அதுதான் நம் சாத்திரம். ஒருவனுக்கு ஒருவர் சடங்குகளில் வித்தியாசம் ஏன் என்றால் அது அவர் அவர்கள் சாதி வழக்கம் என்று - இப்படியாகப் பல வழிகளைக் கூறிக் கொண்டு சிறிதுகூட மாறுதலுக்கு இடமில்லாமல் செய்துவிட்டார்கள்.

நமது சமுதாயத்தில் சட்டத்தை சாத்திரத்தை, மதத்தைப் பழக்க வழக்கங்களை எதை எடுத்துக் கொண்டாலும் நாம் இழி மக்கள்தானே - சூத்திரர்கள் தானே!

எனவே, நாம் இதனில் இருந்து மாறுதல் அடைய வேண்டுமானால், இன்றைய அமைப்புகளான மதம், கடவுள், சாதி, சாத்திரம், அரசாங்கம் அனைத்தையும் உடைத்தெறிய வேண்டும்.

இந்தக் கருத்துகளை எடுத்துச் சொல்ல எங்களைத் தவிர வேறு ஆளே இல்லை. இந்த ஒரு காரணத்திற்கே நாங்கள் முழு மூச்சுடன் பாடுபட்டு வருகிறோம்.


இது மாதிரி சீர்திருத்தத் திருமணம் இதுவரையில் நடக்காத முறை ஆகும். இதுவரை நடந்து வந்த முறையில் பார்ப்பான் உயர்ந்தவன், நாம் இழிந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்வது என்பதுதானே?

பார்ப்பான் வந்து திருமணம் செய்கின்றான் என்றால் நம் முட்டாள்தனத்தை நிலை நிறுத்தி வைக்கவே வருகின்றான். நாம் எத்தனை டிகிரி முட்டாள் என்பதனைப் பரிசோதிக்கவே பகலில் விளக்கு வைக்கச் சொல்லுவான். செத்தை, குப்பைகளைப் போட்டுக் கொளுத்தி அதில் பதறப் பதற நெய்யை ஊற்றச் சொல்லுவான். நாமும் முட்டாள்தனமாக அவற்றை எல்லாம் செய்கின்றோம். இப்படி வேண்டத் தகாத செய்கைகளை எல்லாம் நிறையப் புகுத்தி விடுகின்றார்கள். இவற்றை மாற்ற வேண்டியதே எங்களது கொள்கையாகும்.


தோழர்களே! நம்மிடையே இந்தத் திருமண முறை எப்படி நடந்து வந்தது என்று ஒருவரும் கூறமுடியாது. பார்ப்பான் வந்த பிறகுதான் புரோகித முறை வந்தது என்று கூறப்பட்டாலும், பார்ப்பான் வருவதற்கு முன் ஏதாவது முறை உண்டா என்றும் கூறுவதற்கே இல்லை. இதற்கு ஏற்ற பெயரும் நம் மொழியில் இல்லையே!

மனிதன் கடவுளை ஏன் திருமணத்தில் புகுத்த வேண்டும்? மனிதன் வட்டி வாங்கவோ, பூமி வாங்கவோ, சாப்பிடவோ கடவுளைக் கூப்பிடுகின்றானா? ஏன் திருமணத்திற்கு மட்டும் இருக்க வேண்டும்?

தோழர்களே! புரோகித முறைப்படி நடக்கும். திருமணம் ஒரு பெண்ணை ஓர் ஆண் அடிமை கொள்ளல் என்பது தானே? இம்மாதிரி சீர்திருத்தத் திருமணத்தினால் பெண் ஆணுக்கு அடிமையல்ல, நண்பர்கள் மாதிரியே என்றாகின்றது.

சுயமரியாதை இயக்கத்தின் காரணமாக நாம் பிரச்சாரம் செய்து வந்த கொள்கை எல்லாம் இன்று சட்டமாகி இருப்பதைக் காண்கின்றோம். பெண்களுக்குச் சொத்துரிமை, மணவிலக்கு, பலதார மணத்தடை, உத்தியோகம் ஆகியவற்றிலும் நல்ல பலன் ஏற்பட்டுள்ளது.


நான் காங்கிரசில் தலைவனாக இருந்தவன். செயலாளனாக, தலைவனாக, வழிகாட்டியாகக் கூட இருந்தவன். அந்த ஸ்தாபனத்தின் பித்தலாட்டங்களை எல்லாம் நன்கு உணர்ந்து வெளியேறியவன்.

மற்றவர்கள் மாதிரி நான் சாதாரண ஆளாக இருந்து காங்கிரசில் சேர்ந்தவன் அல்ல. திரு.வி. கலியாணசுந்தர முதலியாராவது வாத்தியாராக இருந்து அரசியலுக்கு வந்தவர். வரதராஜூலு மட்டும் என்ன? அவரும் சாதாரண ஆளாக இருந்து காங்கிரசிற்கு வந்தவர் தான். நான் காங்கிரசுக்கு வரும்போது ஒரு பெரிய வியாபாரியாக இருந்து, ஏராளமான வருவாய் வரும் அந்தத் தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவன். காந்தியாருக்கும், இந்த இராஜகோபாலாச்சாரியாருக்கும் உண்மை சீடனாக இருந்தவன் நான்.

நான் காங்கிரசில் சேர்ந்தது பார்ப்பனர் அல்லாதார் நலனுக்காகப் பாடுபட்டு வந்த ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்று எண்ணிச் சேர்ந்தேன். ஆனால், இரண்டாண்டுகளுக்கு உள்ளாகவே பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் உணர்ச்சியைக் காங்கிரசிலேயே உண்டாக்க வேண்டியவனாகி விட்டேன். காங்கிரசில் உள்ளூர நுழைந்து பார்த்தபோது அது பார்ப்பனர் ஆதிக்கத்திற்கும், பார்ப்பனர்கள் நலனுக்குமாகவே பாடுட்டு வருவதைக் கண்டேன். பெரிய தேசப்பக்தன் எனப் பேர் வாங்கிய பச்சை வருணாசிரமப் பார்ப்பான் வ.வே.சு. அய்யர் நடத்திய சேரன்மா தேவி பரத்து வாஜர் ஆசிரமத்தில் பார்ப்பனப் பிள்ளைக்கு ஒரு மாதிரி பார்ப்பனர் அல்லாத பிள்ளைகளுக்கு வேறு மாதிரி என்று உணவு விசயத்திலும், மற்ற நடவடிக்கையிலும் நடத்தி வந்தார். பார்ப்பனப் பிள்ளைகளுக்கு இட்லி,  உப்புமா, நமது பையன்களுக்குப் பழைய சோறு! அவன்களுக்கு உள்ளேயும், நம் பையன்களுக்கு வெளியிலேயும் வைத்துப் போடும் அக்கிரமம் நடைபெற்றது. இவ்வளவுக்கும் இந்த ஆசிரமம் காங்கிரசு உதவி நிதியில் நடைபெற்று வந்தது. இந்த அக்கிரமத்தை வெளிப்படையாகவே எதிர்த்துப் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பிரச்சனை பற்றியும் அக்கிரமங்கள் பற்றியும் வெளுத்து வாங்கினேன்.

அடுத்து ரோடுகளிலும், வீடுகளிலும் மற்றப் பொது இடங்களிலும்கூடத் தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள் நடக்கக் கூடாது என்று மலையாளத்தில் இருந்த முறையையும் எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் வந்தது. இந்தப் போராட்டத்தில் சிறைப்பட்ட திரு. ஜார்ஜ் ஜோசஃப் எனக்குக் கடிதம் எழுதினார்.

"நாயக்கரே இந்தப் பகுதியில் மக்கள் வீதியில் கூட நடக்கக் கூடாதவர்களாக கஷ்டப் (தொல்லைப்)படுகின்றனர். நீங்கள் இந்தக் கொடுமையை எதிர்த்துப் போராட வேண்டும்."

என்று எழுதினார். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கேசவமேனன், அய்யப்பன், மாதவன் போன்றவர்கள் எல்லாம் சிறையில் அடைக்கப்பட்டு விட்டனர். நானும் போனேன். பொது மக்கள் ஆதரவு நல்ல வண்ணம் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்திலும் - பார்ப்பனர்கள், அவர்கள் வருணாசிரம தர்மம், கடவுள், மதம், சாஸ்திரங்களை எல்லாம் கண்டிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. சாதிக் கொடுமையைக் கண்டிக்க வேண்டுமானால் அதற்கு ஆதாரமான கடவுள், மதம், சாஸ்திரங்களையும் எதிர்த்துத்தானே ஆகவேண்டும்?

சத்தியாக்கிரகத்தின் காரணமாகக் கடின காவல் தண்டனை அடைந்தேன். இந்தக் காலம் போல அந்தக் காலத்துச் சிறைச்சாலை இருக்காது. அது, சட்டியில் சோறு வாங்கி சாப்பிட்ட காலம்; மூத்திரம், மலம் முதலியவைகளைச் சட்டியில் போய்க்கொண்டு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்! படுக்க சாக்குதான் தருவார்கள்.

இப்படிச் சிறையில் இருக்கும்போது இராஜா இறந்துவிட்டார். பிறகு எல்லோரையும் விடுவித்தார்கள்.

மீண்டும் போராட்டம் தொடங்கினேன். இராணி வழிக்கு வந்தார். எல்லா ரோடிலும் (சாலையிலும்), எல்லா வீதிகளிலும், எல்லாப் பொது இடங்களிலும் எல்லா பிரசைகளுக்கும் (மக்களுக்கும்) செல்ல உரிமை உண்டு என்று உத்தரவு போட்டார்கள்.

அப்போது எனது பிரச்சாரங்கண்டு பார்ப்பானுக்கு ஆத்திரமும், அச்சமும் ஏற்பட்டது. அவர்களால் என்னைத் தட்டிக் கேட்கவும் முடியவில்லை. அந்தக் காலத்திலேயே "சத்தியாக்கிரகம், சண்டித்தனம் என்பதெல்லாம் வாயில்தான் அகிம்சையே தவிர, நடைமுறையில் மக்களுக்குத் தொல்லை இம்சை கொடுப்பதே ஆகும்" என்று கூறினேன். ஸ்ட்ரைக்கு - வேலை நிறுத்தம் என்பதெல்லாம் காலித்தனம்" என்று அன்றே சொன்னேன். அதையே இன்றைய வரைக்கும் கூறிக்கொண்டுதான் வருகின்றேன்.


-------------------------------- 05.07.1960- அன்று சின்னாளப்பட்டியில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை", 22.07.1960

31 comments:

தமிழ் ஓவியா said...


மோடிக்கு எதிராக வரிந்து கட்டுகிறார்கள் இரு சங்கராச்சாரிகள்


புதுடெல்லி, மே 2-மோடிக்கு எதிராக 2 சங்க ராச்சாரியார்கள் பிரசாரம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது, பாஜகவினர் ஹர ஹர மோடி என முழக்க மிட்டது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. இதற்கு, துவாரகை பீடம் சங்கராச்சாரி ஸ்வரூபானந்தா சரஸ்வதி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், இவரும், பூரி சங்கராச்சாரி அதோக்ஸ்ஜனானந்த் தேவிராத்தும் மோடிக்கு எதிராக வாரணாசியில் பிர சாரம் மேற்கொள்ளப் போவ தாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து பூரி சங்க ராச்சாரி நேற்று அளித்த நேர்காணலில் குஜராத் கலவரத்துக்கு மோடிதான் காரணம். மதவாதத்தால் நாட்டையே பிரிக்கக் கூடி யவர் அவர். அதனால், வாரணாசியில் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளேன். நான் எந்த கட் சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை. மதச்சார் பற்ற கட்சி தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே நோக்கம் என்றார்.

துவாரகை சங்கராச்சாரி கூறுகையில், என்னால் முடியா விட்டாலும், மோடியின் வெற்றியை கடவுள் தடுப் பார் என கூறியிருக்கிறார். தற்போது துவாரகை சங் கராச்சாரி உடல் நலக்குறை வால் பாதிக்கப்பட்டுள்ள தால் அவரது சீடர் முக்தீஸ் வரானந்த் பிரசாரம் செய் வார் என கூறப்பட்டுள்ளது.

மோடிக்கு எதிராக 2 ஆன்மிகத் தலைவர்கள் பிரசாரம் செய்ய இருப்ப தாக கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/79593.html#ixzz30bqjgvRI

தமிழ் ஓவியா said...


மோடி ஒரு காகிதப் புலி: மம்தா கூற்று!

புரூலிய, மே 2- பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை "காகி தப் புலி' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வர்ணித்துள்ளார்.

அந்த மாநிலத்தின் புரூலியா மாவட்டத்தில் வியாழக்கிழமை நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் பேசிய தாவது:

காகிதப் புலிக்கும், கம் பீரமான வங்கப்புலிக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. மேற்கு வங்க சுந்தரவனத்தில் இருப் பவைதான் உண்மையான புலிகள்.

மதப்பிரிவினை: இந்துக் கள் மற்றும் முஸ்லிம்கள் இடையிலும், வங்காளிகள் மற்றும் வங்காளிகள் அல் லாதோர் இடையிலும் பிரிவினையைத் தூண்டு பவர்களுக்கு பிரதமர் நாற் காலியில் அமர அரசியல் சாசனத்தின் அடிப்படை யில் எந்த உரிமையும் இல்லை.

மதச்சார்பின்மைதான் பல்வேறு மதம், நிறம், இனங்களைச் சேர்ந்தவர் களை ஒன்றிணைக்கும் சக்தி என்பதை உணர்ந்தே பாபா சாஹிப் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் அர சியல் சாசனத்தை உருவாக் கியுள்ளனர் என்றார் மம்தா பானர்ஜி.

Read more: http://viduthalai.in/e-paper/79592.html#ixzz30bqrIJu5

தமிழ் ஓவியா said...


பொது மக்கள் நலன்!


இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக் காகத் தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல. - (குடிஅரசு, 25.8.1940)

Read more: http://viduthalai.in/page-2/79572.html#ixzz30br3h3CL

தமிழ் ஓவியா said...


கோடையில் இளைப்பாற்றிட்ட குளிர்தரு புத்தகச் சங்கமத் திருவிழா!


தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி நடை பெற்றதையொட்டி ஏகப்பட்ட களே பரம்! கெடுபிடிகள் -இத்தியாதி! இத் தியாதி!

இந்த பரபரப்புக்கிடையில் ஆர வாரமில்லாத ஆக்கப் பூர்வ அறிவுத் திருவிழா - அறிவுத் தேரோட்டம் ஒன்று தலைநகர் சென்னையில் நடைபெற்றது. (உலகப் புத்தக நாள் ஏப்ரல் 23ஆம் தேதியையொட்டி) ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 27ஆம் தேதி ஞாயிறு இரவு 9 மணியோடு முடிவடைந்தது. அதுதான் சென்னை புத்தகச் சங்கமம் என்ற திருவிழா!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமான தந்தை பெரியார் அறக்கட்டளை, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, இணைந்து, பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகம் இன்னும் சிலரது அரிய ஒத்துழைப்புடன் மிக அமைதியாக, அதே நேரத்தில் அறிவை விரிவு செய்து அகண்டமாக்கி, விசாலப் பார்வையால் உலகை விழுங் கும் மனிதநேயப் பெரு விழாவாக இந்த புத்தகத் திருவிழா, நகரின் மய்யமான ராயப்பேட்டை ஓய். எம்.சி.ஏ. மைதானத்தில் விசாலமான வியத்தகு ஏற்பாடுகள் - பாராட்ட வார்த்தைகளே இல்லை எனும் அளவுக்கு நடைபெற்றது.

210 பதிப்பகத்தார்களின் கடைகள் தமிழ் புத்தகங்கள் மட்டுமல்ல; ஆங்கில வெளியீட்டவர்களும் கடைவிரித்தனர்; கொள்பவர்களை ஈர்த்தனர். மாலை வேளைகளில் கண்ணுக்கும் காட்சிக்கும் அறிவைத் தூண்டும் அருமையான அற்புதக் கலை நிகழ்ச்சிகள், உரைகள்!

வருவோர்க்கும் வாங்குவோருக்கும் வசதியாக மருத்துவ அவசரப் பிரிவுகூட!

உணவுக் கூடங்களும் பல் வகையில்! குடும்பம் குடும்பமாக குதூகலத்துடன் வந்தனர்; வாங்கிச் சென்று மகிழ்ந்தனர்!

சென்னை ஊடகங்களில் இதற்குப் போதிய விளம்பரம் கொடுக்கப்பட வில்லை; காரணம் வெளிப்படை.

இப்பொருள் இவர் வாய் கேட்டால்...?

இப்பொருள் இத்தனையது என்றால்!... எப்படி விளம்பரப்படுத்துவது? பத்திரிகா தர்மபாவங்களில் அது சேர்ந்து விடாதோ என்ற விரிந்த பார்வை; என்னே விசித்திரக் கண்ணோட்டம்!

என்றாலும் ஒரு கோடி புத்தகங்கள் - ஏராளமானோர் வருகை!

எல்லாக் கருத்து கொள்கை யாளர்க்கும் எவ்வித வேறுபாட்டுக்கும் இடமின்றி சம வாய்ப்புத் தரப்பட்டது அமைப்பாளர்களால்!

புத்தகர் விருது என்ற புதுமை வெளிச் சம் இட்டது புதுமையிலும் புதுமை!

அரிய பணிகளை புத்தகங்களைப் பரப்புவது இளைஞர்களிடம் அறிவைக் கொண்டு செல்லும் தொண்டறப் பணியை முன்னெடுத்ததாக அமைந்தது.

புத்தகர் விருதுக்கு தேர்வு செய்த நான்கு பேர்களும் புத்தகப் புத்தொளி பாய்ச்சும் பொலிவுறு வைரங்களாகும்!

1. பொள்ளாச்சி நசன்
2.. பழங்காசு ப. சீனிவாசன்
3. தி.மா.சரவணன்
4. புத்தகத் தாத்தா சண்முகவேல்

இந்நால்வர் போன்று நானிலம் முழுவதும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய, விளம்பரம் விரும்பாது எம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அடக்கமிகு தொண்டறப் பணி செய்யும் தூய்மையானவர்கள் ஏராளம் உண்டு.

இவ்வளவு சிறப்புகளைச் செய்த பெருமை கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், ஒருங்கிணைப்பில் மிகப் பெரிய அமைப்பாளர்களாக உழைப்பை சளைக்காது தந்த பதிப் பாளர்கள் எமரால்ட் கோ. ஒளி வண்ணன், சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் கே.எஸ். புகழேந்தி, விழிகள் பதிப்பகம் உரிமையாளர் த. வேணுகோபால், பெரியார் திடல் நிர்வாகி ப. சீத்தாராமன் தலைமையில் உழைத்த தோழர்கள் அனைவருக்கும், பங்கேற்ற பதிப்பகத் தினர் முதல் கலை நிகழ்ச்சியாளர்கள் அனைவரும் பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவர்களே!

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/79577.html#ixzz30brDFdeM

தமிழ் ஓவியா said...


மயிலாடுதுறைப் பொதுக் கூட்டம்


சென்ற 18.4.2014 மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத் தில் உங்களை சந்திக்க மாலை 6.45 மணியளவில் வந்தேன். அதற்குள் கூட்டம் தொடங்கி விட்டது. கூட்டம் முடிந்து மேடையை விட்டுத் தாங்கள் இறங்கி வரும்பொழுதும் தள்ளுமுள்ளு ஆகி விட்டது. நெரிசல் மிகுதியால் தங் களை சந்திக்க இயலாமல் போய் விட்டது.

மயிலாடுதுறைக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி அவர் களைப் பற்றிக் குறிப்பிட்டவை யாவும் வரவேற்கத் தக்கவையாகும். வெளிநாட்டு சக்திகளும் இதில் ஈடுபட்டிருப்பதைக் குறிப்பிட்டது (அதா வது மோடி பிரதமராக வேண்டும்) திடுக் கிடும் செய்தியாகும். இதை முறியடித்து நாட்டைக் காப்பாற்றுவது நம் அனை வரின் தலையாய கடமையாகும்.

- சு. பாலகிருஷ்ணன்,
திரு.வி.க. நூல் நிலையம், மேலப்பாதி

Read more: http://viduthalai.in/page-2/79583.html#ixzz30brSuvRG

தமிழ் ஓவியா said...


சாமியார் சல்லாபம்: டி.வி. காட்டிக் கொடுத்தது


பெங்களூர், மே 2-வாஸ்து நிபுணர் மற்றும் ஜோசியக்காரர் என்று தன்னைத் தானே விளம் பரப்படுத்திக்கொண்ட சாமியாரான தேவி சிறீ ராமசாமி என்பவர் கர்நாடகாவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஆசிரமத்தில் பூஜையின் போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி கன்னட டி.வி. சேனல்களில் நேற்று அதிரடியாக ஒளிபரப்பானது.

இந்த வீடியோ டி.வி.யில் ஓட ஆரம்பித்தவுடன் சாமியாரின் ஓட்டமும் ஆரம்பமானது. டி.வி.யில் வீடியோ ஒளிபரப்பான தகவல் கிடைத்தவுடன் சாமியாரின் ஓட்டுநர் அவரை காப்பாற்றி காரில் ஏற்றிச் சென்றுவிட்டார். அந்த ஆசிரமத்தில் சீடனாக இருக்கும் வசந்த் என்பவரும், ஆசிரமத்தின் ஊழியரான உதயா என்பவரும் சாமியாரின் லீலைகளை பார்த்து வெறுப்புற்று அவரைக் கையும் களவுமாக பிடிக்க அவருக்கு தெரியாமலேயே இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.

பின்னர் இந்த வீடியோவை அவர்கள் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கொடுத்துள்ளனர். இதை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியவுடன் சாமியாரின் தீவிரமான சீடர்கள் கடும் கோபத்துடன் ஆசிரமத்தை அடித்து நொறுக்கினர். காரில் தப்பிய சாமியார் தற்போது தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருடன் இருக்கும் பெண் யாரென்று இதுவரை தெரிய வில்லை.

Read more: http://viduthalai.in/page-3/79546.html#ixzz30bryRxDl

தமிழ் ஓவியா said...


காரவன் படப்பிடிப்பு


இந்து மதத்திற்கு அடிக்கல்லாகவிளங்கும் (நமது) புராணங்களும், இதிகாசங்களும், சாதிமுறைகளை உருவாக்கியதுடன்அந்த சாதிமுறையிலேயே பல பிரிவுகளையும் துணைப்பிரிவுகளையும் உண்டாக்கி ஒரு இந்துவுக்கு இன்னொரு இந்துவை எதிரியாக்கியதுடன் பெரும்பான்மையானவர்களைப் படுகுழியில் தள்ளி யிருக்கின்றன.

மனிதனை மனிதன் என்று அழைப்பதற்கு பதிலாக பிராமணன் என்றும், சூத்திரன் என்றும் அழைக்கின்றன. அவ்வேதப் புத்தகங்கள், நேரடியாகவே பொறாமையையும், கொடுமைகளையும், போதித்ததுடன், பெண்களுக்கு மாபெரும் அநீதியை இழைத்திருக்கின்றன.

அத்துடனின்றி சூத்திரர்களை மிகவும் தாழ்மையாக கருதி - அவர்கள் பண்பட்ட சமூகத்தில் வாழ அருகதையற்றவர்கள் என்றும் பறைசாற்றி வருகின்றன. எனவே இந்து சமுதாயம் மாறிவரும் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்வதெனில் நாம் நம்மைப் பிடித்திருக்கும் சம்பிர தாயங்களையும், நம்மை அறியாமையில் மூழ்கடிக்கும் உபதேசங்கள், அவற்றின் மகிமைகள் ஆகியவற்றையும் வெறுத்து ஒதுக்க வேண்டும். இதுவே துன்பத்தையும், வறுமையையும் ஒழிக்கும் சிறந்த வழி!

மதங்களும், புராண இதிகாசங்களும் சமுதாயத் திற்காக ஏற்படுத்தப்பட்டவைகளே சமுதாயம் மதங் களுக்காகவும் புராண இதிகாசங்களுக்காகவும் உருவானதல்ல. நமது முன்னேற்றத்தை தடுப்பது எதுவாக இருந்தாலும் அவற்றை தாட்சண்யமின்றி உடனே களைந்தெறிய வேண்டும். அவ்வாறு களைந்தெறியும் வேளையில் சில கஷ்டங்கள் வந்தாலும் அவற்றை பொருட்படுத்தக்கூடாது.

(காரவன், ஏப்ரல்-1, 1977

Read more: http://viduthalai.in/page-7/79570.html#ixzz30bsqtAXw

தமிழ் ஓவியா said...

உண்மை

உண்மைதான் உலகத்தின் அறிவுச்செல்வம். தொழில்களிலெல்லாம் தலைசிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மைதான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய். உண்மையை கடைப் பிடிப்பவன்.

நன்மையைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான். ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவி னாலுமே உண்மையைக் கண்டுபிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மையோடு நடக்க முடியும்.

கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும்.

உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத் தைக் காட்டுபவன் ஆவான்

-ஆர்.ஜி.இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page-7/79570.html#ixzz30bsxyqeg

தமிழ் ஓவியா said...

பிறப்பில் தீண்டாமை கருதலாமா?

தீண்டாதாரிடை ஒழுக்கமில்லை என்று சிலர் சொல் கிறார்கள். மற்றவரெல்லாரும் ஒழுக்க முடையவரா? என்று அச்சகோதரரைக் கேட்கிறேன். தீண்டாதார் என்று சொல்லப்படு வோரும் எத்தனையோ பேர் ஒழுக்க சீலரா யிருக்கிறார்கள். உயர் வகுப்பாரென்று சொல்லப்படுவோருள், எத்தனையோ பேர் ஒழுக்க ஈனராயிருக்கிறார்கள்.

அவரைப் பார்ப்பனரென்றும் இவரைத் தீண்டாதா ரென்றும் ஏன் கொள்ளுதல் கூடாது? பிறப்பில் தீண்டாமை கருதுவது கொடுமை! வன்கண்; அநாகரிகம். பிறப்பில் தீண்டாமை கருதப்படுமிடத்தில் தேசபக்தி எங்ஙனம் இடம் பெறும்?

- திரு.வி.க.
(சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து பக்கம் -79)

Read more: http://viduthalai.in/page-7/79570.html#ixzz30bt3PUIh

தமிழ் ஓவியா said...

வாருங்கள், கடவுளாகலாம்!

இந்தியாவில் மனிதர்களைக் கூட கடவுளாக்கி விடுவார்கள் என்று அமெரிக்க பத்திரிகையான, லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் டொரோதியா சி.ஹில் என்பவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நானும், என் கணவரும் இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் ஒரு காட்டுப்பகுதியில் ஜீப் ஒன்றில் சென்று கொண்டிருந்தோம். எங்கள் பயணத்தின் நோக்கம் புலிகளைப் படம் எடுப்பதாகும். வழி தெரியாததால் எதிரில் வந்த ஒரு பெண்ணிடம் எங்கள் டிரைவர் வழி கேட்டார்.

வழி கூறிய அந்தப் பெண் என் கணவரைப் பார்த்ததும் அவரை நெருங்கி வந்து இரு கைகளையும் தூக்கி ஒன்று சேர்த்து குவித்து பின்பு கீழே விழுந்து எழுந்தாள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

கடவுள்தான் நேரே வந்திருக்கிறார் என்று கருதித்தான் அந்தப்பெண் உங்களை கும்பிட்டாள் என்று எங்கள் டிரைவர் கூறிய பின்னர் தான் எங்களுக்கு உண்மை விளங்கியது. இந்தியா எவ்வளவோ முன்னேற வேண்டியிருக்கிறது என்று உணர்ந்து கொண்டோம்.

Read more: http://viduthalai.in/page-7/79570.html#ixzz30bt8ohRO

தமிழ் ஓவியா said...


இந்திய விஞ்ஞானியும் மூடநம்பிக்கையும்

முயன்ற காரியம் முடிய வேண்டுமென்பதற்காக கடவுளுக்கு லஞ்சம் கொடுக்க மருத்துவ நிபுணர்களும் விஞ்ஞானிகளும் தாயத்துக்களை அணிகின்றனர்; தேங்காய் உடைக்கிறார்கள் என்று பெங்களூருவில் நடந்த ஒரு கூட்டத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் குழுவின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் ஒய். நாயுடம்மா கூறினார்.

பெங்களூருவில் பல்கலைக் கழகத்தில், விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும் பற்றி விரிவாக அளவிடும் போது, நாட்டில் பரவியுள்ள பலவிதமான மூடநம்பிக்கைகளின் பட்டியலைத் தயாரிப்பது மிகவும் கடினமான செயல் என்றும் குறிப்பிட்டார்.

கடவுள் தந்த வரப்பிரசாதம் என்று சொல்லி ஏமாற்றும் மந்திரவாதிகளையும் சோதிடர்களையும், கைரேகை பார்ப்பவர்களையும் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் நம்புகிறார்கள். இப்படிப்பட்ட மோசடிக்காரர்களுக்கும் பத்திரிகைகளில் அதிக இடம் கிடைக்கிறது. அதிகமாகப் படித்தவர்கள் கூட, ஒரு செயலைத் தொடங்குமுன் நல்ல நேரம், நல்லநாள், நல்ல வாரம், பார்க்கிறார்கள்.

மூடநம்பிக்கைகளின் விளைவாக, சூரிய சந்திரனை ராகுவும் கேதுவும் விழுங்குவதால்தான் கிரகணங்கள் உண்டாகின்றன என்று எண்ணுகிறார்கள். பட்டினியால் செத்தவர்களுக்கு எப்படி ஏராளமான உணவுப் பொருள்களை பார்சல் அனுப்ப முடியும் என்று டாக்டர் நாயுடம்மா கேட்டார்.

மதத்தின் பேரால் பலரைச் சிலர் சுரண்டுவதன் விளைவுதான் என்று அவரே விடையும் பகர்ந்தார். மந்திரங்களினால் தேவையான உணவுப் பொருள் களைக் கொடுக்க முடியுமென்றால், இந்த உலகம் வாழ்வதற்கு வசதியான இடமாக இருக்கும். மழை பெய்வதற்காக மழைக்காலத்தில்தான் யாகம் செய்ய வேண்டுமா? என்று கேட்டார்.

இன்றைய தினம், இந்தியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தரப்படும் விஞ்ஞானக் கல்வி, பரிசோதனை செய்வதற்கேற்ற வசதிகள் இல்லாமையால் தந்திரம் (மாஜிக்) போல் தாழ்வான நிலையை அடைகிறது.

தகவல்: வீ.து.சச்சிதானந்தன்

Read more: http://viduthalai.in/page-7/79571.html#ixzz30btHb58z

தமிழ் ஓவியா said...

அய்யா உடைத்த அட்வான்ஸ் பிள்ளையார்

1953ஆம் ஆண்டு, மே மாதம் 10ஆம் தேதி, தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. அந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் பிள்ளையார் உடைப்பு போராட்டம் பற்றியும் அதன் போர்முறைத் திட்டம் பற்றியும், பொதுவாக கழகத் தோழர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியும் விளக்கிக் கொண்டு வருகிறார்.

பிள்ளையாரின் பிறப்பு ஆபாசங்களை புராணத்தின் பகுதிகளில் இருந்து எடுத்துக் கூறி பிள்ளையார் உடைப்பு போராட்டம் ஏன் என்பதற்கான காரணங்களை தெளிவாக விளக்கிப் பேசிக் கொண்டிருக்கும் போது, தாம் கொண்டு வந்திருந்த பெரியதும் சிறியதுமான இரண்டு பிள்ளையார் பொம்மைகளை எடுத்து கூட்டத்தாரிடம் காண்பிக்கிறார்.

இரண்டு பொம்மைகளும் வண்ணப் பொம்மைகள். இதுபோன்ற வண்ணப் பிள்ளையார் படங்களையோ அல்லது மண் பிள்ளையார் பொம்மைகளையோ வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இவைகளை 27ஆம் தேதியன்று உடையுங்கள் என்று அய்யா கூறுகிறார்.

கூட்டம் ஆரவாரமெழுப்பி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கிறது. அதைத் தொடர்ந்து 27ஆம் தேதி பிள்ளையார் உடைப்பதற்கு அட்வான்சாக சாம்பிளாக என் கையில் உள்ள இந்த சின்ன பிள்ளையாரை இன்றைக்கு தூளாக்குவோமா? என்று கூட்டத்தை நோக்கிக் கேட்கிறார்.

கூட்டத்தினர் மகிழ்ச்சிப் பெருக்கில் உடைப்போம், உடைப்போம் என்று உணர்ச்சிப் பெருக்குடன் முழங்குகின்றனர். அதைத் தொடர்ந்து-

சின்ன விநாயகன், சித்தி விநாயகன், ஆனை முகத்தவன் என்று பக்தர்களால் கூறப்படும் பிள்ளையார் கடவுள் உடைக்கப்பட்டது மேடையிலே, மேஜையின் மேலே - புரட்சி வேந்தர், புத்துலகச் சிற்பி தந்தை பெரியார் தம் கையால்.

எங்கெங்கும் ஆனந்த ஒலிகள்! எக்காள முழக்கம், பந்தலெங்கும் எதிரொலித்தது. கணபதி ஒழிக! விநாயகன் ஒழிக! பிள்ளையார் ஒழிக! என்று கிளம்பிய முழக்கம் அடங்க வெகுநேரம் ஆகியது.

Read more: http://viduthalai.in/page-7/79571.html#ixzz30btSYGiU

தமிழ் ஓவியா said...


புனித கர்மாவைக் குணப்படுத்தல் நிகழ்ச்சி பகுத்தறிவாளர்களின் எதிர்ப்பால் நின்றது


மங்களூர், மே 3- நிம்ஹான்ஸ் என்கிறஅரசு உதவி பெறும் நிறுவன அரங்கத்தில் சிலர் ஏற்பாடு செய்திருந்த புனித கர் மாவைக் குணப்படுத்தல் நிகழ்ச்சி மங்களூர்பகுதி பகுத்தறிவாளர்களின் எதிர்ப் பால் கைவிடப்பட்டது.

நிம்ஹான்ஸ் இயக்குநர் பி.சத்தீஷ்சந்திராவுக்கு, இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் நரேந் திர நாயக் புனித கர் மாவைக் குணப்படுத்தல் நிகழ்ச்சி குறித்து கடிதம் எழுதியிருந்தார். அதன் விளைவாக சத்தீஷ்சந்திரா வேகமாக நடவடிக்கை எடுத்து நிகழ்ச்சியை நிறுத் தினார்.

மே 11ஆம் தேதி அன்று நிம்ஹான்ஸ் கூட்ட மய்யத் தில் புனித கர்மாவைக் குணப்படுத்தல் நிகழ்ச்சி மங்களூரில் நடைபெறுவ தாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நிகழ்ச்சி குறித்து இந்திய பகுத்தறி வாளர் சங்கத்தின் தலைவர் நரேந்திர நாயக் தன்னு டைய கடிதத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

நியூராலஜிக் கோளாறு களுக்கு ஒருவருடைய கர்மா காரணமாக உள் ளதா? ஆதாரங்களுடன் உள்ள மருந்துகள், மருத் துவம் கூறுகின்ற உண்மை களை மறுப்பதும், முற்றி லும் எதிரானதுமாக உள்ள புனித கர்மாவைக் குணப் படுத்தல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கலாமா? என்று கேட்டு அனுமதியை மறுபரிசீலனை செய்யு மாறு கோரிக் கடிதம் எழுதி யிருந்தார். மேலும், கடிதத் தில் குறிப்பிடும்போது, 2004இல் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, அங்கீகாரமில்லாத, ஆதாரங்களின் அடிப்படை இல்லாத குணப்படுத்துவ தாக கூறிக்கொள்ளும் எந்த செயலையும் அங்கீகரிக் கவோ, அதற்கு ஆதரவா கவோ அரசு இருக்கக் கூடாது என்கிறது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அதன்படி, அரசின் நிதி உதவியுடன் செயல்படு கின்ற நிம்ஹான்ஸ் நிறுவன மும் அதே அடிப்படையில் வருகிறது என்றார்.

நிம்ஹான்ஸ் இயக்குநர் டாக்டர் சத்தீஷ்சந்திரா கூறும் போது பகுத்தறிவாளர்கள் கூறுகின்ற வாதம் முற்றி லும் சரியே என்றும், அந்த நிகழ்ச்சியின் அமைப்பா ளர்களை அழைத்து நிகழ்ச் சியை நிறுத்திவிடுமாறும், அந்த நிகழ்ச்சிக்காக அளிக் கப்பட்ட தொகை முழு மையாக திரும்ப அதன் ஏற்பாட்டாளர்களுக்குக் கொடுத்துவிடுவதாகவும் கூறிவிட்டார். மேலும், அந்த நிகழ்ச்சிக்காக அரங் கைப் பதிவுசெய்தபோது, இதுபோன்ற நிகழ்ச்சி என்று என் கவனத்துக்கு வரவில்லை என்றார். நிகழ்ச்சி குறித்து கவனத் துக்கு கொண்டு வந்ததும் நடவடிக்கை எடுத்துள் ளேன் என்றார். மேலும், இதுபோன்ற ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என்பது நிம்ஹான்சின் கொள்கையா கும். பகுத்தறிவாளர்கள் அந்த நிகழ்ச்சிகுறித்து சுட் டிக்காட்டிக் கடிதம் எழு தியதும், அந்த நிகழ்ச்சி அமைப்பாளரை அழைத்து பெறப்பட்டத் தொகையை முழுமையாக திருப்பிக் கொடுத்துவிட்டு, அந்த நிகழ்ச்சியை நிறுத்தி விட்டோம். நிம்ஹான்ஸ் வளாகத்தில் எங்கும் அந்த நிகழ்ச்சி நடைபெறாமல் நிறுத்திவிட்டோம் என்று கூறினார்.

- தி ஹிந்து ஆங்கில நாளிதழ், 2-5-2014

Read more: http://viduthalai.in/e-paper/79646.html#ixzz30hhsBL4Y

தமிழ் ஓவியா said...


மோடி இளம் பெண்ணை வேவு பார்க்க உத்தரவிட்ட விவகாரத்தை விசாரிக்க விசாரணை ஆணையத்துக்கு விரைவில் நீதிபதி


மோடி இளம் பெண்ணை வேவு பார்க்க உத்தரவிட்ட விவகாரத்தை விசாரிக்க
விசாரணை ஆணையத்துக்கு விரைவில் நீதிபதி நியமிக்கப்படுவார் மத்திய உள்துறை அமைச்சர் தகவல்

புதுடில்லி, மே 3- குஜராத்தில் இளம்பெண் ஒருவரை வேவுபார்க்க முதலமைச்சராக இருக்கும் நரேந்திர மோடி உத்தர விட்டதாக கூறப்படும் விவகாரத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் அமைப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததையொட்டி இந்த புகார் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசா ரணை ஆணையத்திற்கு விரைவில் நீதிபதி நியமிக் கப்படுவார் என மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே தெரிவித் துள்ளார்.

பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, குஜராத் முதல் அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் குஜராத்தில் இளம்பெண் ஒருவரை வேவு பார்க்கு மாறு கூறியதன் பேரில், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமித்ஷா, இது தொடர்பாக காவல் துறைக்கு உத்தரவிட்டார் என கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தில் அமித் ஷா மற்றும் காவல் துறை அதிகாரிகள் இடையே நடைபெற்ற உரையாடல் அடங்கிய டேப் ஆதாரங் களை ஊடகங்கள் வெளி யிட்டன. இதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் அமைப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலை மையிலான குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறி வித்தது. எனினும் இந்த குழுவுக்கான நீதிபதி இது வரை நியமிக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று (2.5.2014) சிம்லாவில் செய்தி யாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச் சர் சுசில்குமார் ஷிண்டே, குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த, குழு ஒன்றை அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய் தது. இந்த குழுவுக்கான நீதிபதி 16ஆம் தேதிக்கு முன் நியமிக்கப்படுவார் என்றார்.

அப்போது அவரிடம், நாடாளுமன்ற தேர்தலுக்கு இடையே நீதிபதியை நிய மிப்பது தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லையா? என்று கேட்டதற்கு, இந்த முடிவு 4 மாதங்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டது என்றும், எனவே இது தேர் தல் நடத்தை விதிமீறல் இல்லை என்றும் தெரி வித்தார்.

மேலும், குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி, இளம்பெண் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வேவு பார்த்துள்ள நிலையில், அவர் பிரதம ரானால் பெண்களுக்கு என்னென்ன நடக்கும்? என் பது குறித்து உண்மையி லேயே வருத்தப்படுவ தாகவும் ஷிண்டே கூறினார்.

இதற்கிடையே மத்திய அரசின் இந்த முடிவு, அர சியல் உள்நோக்கம் கொண் டது என பா.ஜனதா கூறி யுள்ளது. இது குறித்து அக் கட்சியின் மூத்த தலை வர்களில் ஒருவரான அருண் ஜெட்லி, மோடிக்கு எதிராக காங்கிரசின் அரசி யல் காழ்ப்புணர்ச்சி நட வடிக்கை இது என்று தெரி வித்தார். மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக் கைக்கு எந்த நீதிபதியும் ஒத்துழைக்கமாட்டார் என்றும் அவர் கூறினார். இதைப்போல, காங் கிரஸ் கட்சியின் உள் நோக் கம் கொண்ட இந்த நடவ டிக்கைக்கு, மதிப்பு மிக்க நீதித்துறை துணை போகாது என நம்புவதாக ரவிசங்கர் பிரசாத்தும் கூறினார்.

ஆனால், இந்த விவகா ரத்தில் மே 16ஆம் தேதிக்கு முன் கண்டிப்பாக நீதிபதி நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறியுள்ளது. இது குறித்து மத் திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறியிருப்பதாவது:

இந்த விவகாரத்தில் மே 16ஆம் தேதிக்கு முன் கண் டிப்பாக நீதிபதி நியமிக்கப் படுவார் என காங்கிரஸ் திட்டவட்டமாக கூறியுள் ளது. இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் மேலும்கூறியிருப்பதாவது:

இந்த விவகாரத்தில் பா.ஜனதா தலைவர்கள் ஏன் இவ்வளவு கவலைப்படுகி றார்கள்? என்று எனக்கு தெரியவில்லை. விசா ரணைக்குழுவில் எந்த நீதி பதியும் சேரமாட்டார்கள் என ஏன் வெளிப்படையாக கூறுகிறார்கள்? இந்த விவ காரத்தின் உண்மை நிலை அவர்களுக்கு தெரியும்.

ஏனெனில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவ காரத்தில் மோடி என்ன செய்தார் என்பது குறித்த தெளிவான ஆதாரம் உள் ளது. எனவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட் டால், மோடியை யாராலும் காப்பாற்ற முடியாது என் பது அவர்களுக்கு தெரியும்.

இவ்வாறு மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79641.html#ixzz30hi2zwYc

தமிழ் ஓவியா said...

பிரதமர் வேட்பாளருக்கு நரேந்திரமோடி தகுதியானவர் இல்லை
லாலு பாய்ச்சல்

பாட்னா, மே 3- பிரதமர் வேட்பாளருக்கு நரேந்திர மோடி தகுதியானவர் இல்லை. ஆர்எஸ் எஸ் சொல்லிக் கொடுப்பதை அப்படியே சொல்லும் கிளியாக பாஜ தலைவர்கள் செயல்படுகின் றனர் என்று லாலு பிரசாத் யாதவ் கிண்டலடித்துள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பாட்னாவில் அளித்த பேட்டி:

பாஜ.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியாக இருந்தாலும், நான் தான் உண்மையான பிரதமர் பதவியை கையாளுவேன். ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த எனக்காக பாஜ.வுக்கு வாக்களியுங்கள் என்று பீகார் மக்களையும், அவரது இனத்தவரையும் ராஜ்நாத் சிங் ஏமாற்றி வருகிறார். நாட்டின் உயர்ந்த பதவிக்கு நரேந்திர மோடி தகுதியானவர் இல்லை.

பீகார் மக்களை முட்டாளாக்கி வரும் ராஜ்நாத் சிங் குக்கும், நரேந்திர மோடிக்கும் மக்கள் அரசியல் அடிப் படையை கற்றுத் தருவார்கள். ஆர்எஸ்எஸ் சொல்லிக் கொடுப்பதை அப்படியே சொல்லும் கிளியை போல, பாஜ தலைவர் ராஜ்நாத் சிங் செயல்படுகிறார். தலித்து களின் நலனுக்காக சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் உண்மையிலேயே பாடுபடுகின்றனர். இவ் வாறு லாலு பிரசாத் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79648.html#ixzz30hiM4J12

தமிழ் ஓவியா said...

தைரியம் இருந்தால் நேருக்கு நேர் பேசுங்கள்
மோடிக்கு பிரியங்கா சவால்

அமேதி, மே 3- தைரி யம் இருந்தால் நேருக்கு நேர் பேச வேண்டும் என்று மோடிக்கு பிரியங்கா சவால் விடுத் துள்ளார். காங்கிரஸ் தலைவரும், அமேதி மக் களவை தொகுதி வேட்பாள ருமான சோனியா காந்தியை ஆதரித்து, மகள் பிரியங்கா காந்தி நேற்று கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள ஷாஹ்காரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது: நான் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் இடங் களில் எல்லாம், என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றி யும் அவதூறான குறிப்புகள் கொண்ட புத்தகங்களை இர வோடு இரவாக பா.ஜ கட்சி, கோழைத்தனமாக வெளி யிட்டு வருகிறது. அவர்களுக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேர் நின்று பேசவேண்டும்.
நாட்டில் தற்போது தேர்தல் பிரச்சாரம் என்பது மிகவும் மட்டரகமாகப் போய் கொண்டு இருக்கிறது. அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தோடு இருப்பவர்களுக்குதான். ஆனால், ஒரு சில தலைவர்கள் தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றனர். மக்க ளின் அடிப்படை நலன் குறித்து கொஞ்சம் கூட நினைத்து பார்க்காமல் செயல்படுகின்றனர். நரேந்திர மோடி பத விக்காக ஆசைப்படுகிறார். எனவே, இந்த தொகுதியில் போட்டியிடும் எனது தாய் சோனியா காந்தியை ஆதரித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பிரியங்கா பேசினார்.

Read more: http://viduthalai.in/e-paper/79648.html#ixzz30hiRgLpT

தமிழ் ஓவியா said...

வாஜ்பாய் மகாத்மா காந்தியாம்!
மோடி நேதாஜி சுபாஷ் சந்திரபோசாம்!!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்கிறார்

டில்லி, மே. 3- பாஜகவில் நரேந்திர மோடியை நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடனும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மகாத்மா காந்தியுடனும் ஆர்.எஸ்.எஸ் தலை வர் இந்திரேஷ் குமார் ஒப்பிட்டு பேசி பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளார். சி.என்.என். அய்.பி.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்தரேஷ்குமார் கூறியிருப்பதாவது: வாஜ்பாயும், மோடியும் ஒன்றுபோல் தான். ஒருவர் மகாத்மா காந்தி போன்றவர்; மற்றொருவர் சுபாஷ் சந்திர போஸ் போன்றவர். வாஜ்பாயும் மோடியும் ஒரே மாதிரியான கொள்கையை பின்பற்றுகிறவர்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் உத்தர பிரதேசத்தில் பாஜக வின் தேர்தல் பிரச்சாரத்தை வழி நடத்துகிறது. இவ்வாறு இந்தரேஷ்குமார் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/79648.html#ixzz30hiXDH7H

தமிழ் ஓவியா said...


நல்ல வர்க்கம் (சித்திரபுத்திரன்)


நமது நாட்டில் கல்யாணம் செய்வதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பெண் தேடுவதிலோ, மாப்பிள்ளை தேடுவதிலோ நல்லவர்க்கமாக இருக்க வேண்டும் என்கின்ற சாக்கைச் சொல்லிக் கொண்டு பணக்காரர்கள், பிரபுக்கள் வீட்டிலேயே போய் சம்பந்தம் வைத்துக் கொள்ள பிரயத்தனப்படுவதைப் பார்க்கின்றோம்.

ஆனால் பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் என்கின்றவர்களின் வீட்டுப் பிள்ளைகளில் பெரிதும் சமையல்காரன் வர்க்கமாவும், மோட்டார் டிரைவர் வர்க்கமாகவும் முடிந்து விடுகின்றது.

அந்த பிரபுக்கள் வர்க்கமெல்லாம் தாசிகளிடமே போய் சேர்ந்து விடுகின்றது. ஏனெனில் பிரபுக்கள் என்றால் அவர்களுக்குக் கட்டாயம் தாசிகள் இருந்தாக வேண்டும்.

இல்லா விட்டால் பிரபுப்பட்டம் பூர்த்தியாவதில்லை. ஆதலால் இவர்கள் வர்க்கம் தாசி களிடமே இறங்கி விடுகின்றது. அப்பிரபுக்களின் மனைவிமார்கள் அய்யோ பாவம்!

வேறு வகையின்றியும் குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டாமா என்கின்ற கவலைமீதும் தங்கள் கணவர்களைப் போல் வெளியில் வேறு தக்க மனிதர்களின் சிநேகம் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்குள்ளாகவே சரிபண்ணிக் கொள்ளக் கருதி சமையல் காரனுடனேயோ, அல்லது மோட்டார் டிரைவருடனேயோ மாத்திரம் தான் பெரிதும் சம்பந்தம் வைத்துக் கொள்ள முடிகின்றது.

ஆகவே இதனால் சமையல் வர்க்கமும் டிரைவர் வர்க்கமும்தான் பிரபுக்கள் வீட்டில் இறங்கிவிடுகின்றது. இதைக் கண்ட ஒரு தாசி தன் மகனைப் பார்த்து சமஸ்தானாதிபதிக்குப் பிறந்த நீ சங்கீதத்தில் பிழைக்கின்றாய், சமையல் காரனுக்கு பிறந்தவன் சர்வாதிகாரம் பண்ணு கின்றான்.

என்னே! கடவுளின் திருவிளையாடல் என்று சொன்னதாக ஒரு பழமொழி சொல்லிக் கொள்ளப்படுவதுண்டு. ஆதலால் அறிவும் கல்வியும் அழகும் உடையது தான் நல்லவர்க்கமாகுமே தவிர பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் என்கின்ற தனாலேயே அவர்கள் எப்படி இருந்தாலும் நல்ல வர்க்கம் என்று நினைப்பது வெறும் மதியீனமும் பேராசையுமேயாகும்.

குடிஅரசு - கட்டுரை - 30-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79650.html#ixzz30hlIianZ

தமிழ் ஓவியா said...

வட இந்தியாவிலும் நாஸ்திகம்

இந்தியாவில் ஆங்கில அரசாட்சியை ஒழித்துவிட்டு ருஷிய தேச ஆட்சி முறையை நிறுவச் சதியாலோசனை செய்ததாக 31 பேர்கள் மீது கொண்டு வரப்பட்ட வழக்கு மீரத்தில் விசாரணையிலிருக்கிறது. இம்மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது பப்ளிக் பிராஸிகியூட்டர் போல்ஷ்விக்காரர் (எதிரிகள்) கடவுள், நம்பிக்கையை ஒழிப்பவர்கள்.

இவர்கள் கிறிஸ்தவக் கடவுள், மகமதியக் கடவுள் பௌத்தக் கடவுள் ஆகிய கடவுள்கள் மீதுள்ள நம்பிக்கையெல்லாம் ஒழித்துவிட்டு இறுதியில் இந்துமதக் கடவுள்கள் மீதுள்ள நம்பிக்கையையும் தங்கள் ஆட்சிமுறைக் காலத்தில் அழிப்பது நிச்சயம். இவர்கள் கொள்கைப்படி உலகத்திலுள்ள எல்லா மதங்களும் அழிந்துவிட வேண்டும்.

இதற்கென இவர்கள் சர்வ மதங்களிலுமுள்ள குருக்களைக் கொன்று கோயில்களை இடித்துத் தகர்க்கும் திட்டத்தையே உழைப்புத் திட்டமாகக் கொண்டுள்ளவர்கள். கடவுளுக்கு எதிர்ப்பிரச்சாரம் புரியும் திட்டத்தைப் படைத்தவர்கள்.....

இக்கொள்கைக்காரர்கள் தங்கள் மனோபாவங்களை வாழ்க்கையில் அனுசரித்து அதற்கேற்ற வேலைத்திட்டங்களையும் செய்து வருகிறார்கள். இதற்கென இப்படித்தான் செய்தல் வேண்டும் லட்சியங்கள் இவைகள்தான் என்றும் இவர்கள் வரையறுத்துள்ளனர் என்று எடுத்துக் காட்டினார்.

அப்போது எதிரிகளின் வக்கீல் எதிரிகள் மீது தப்பெண்ணம் கற்பிப்பதற்காக இந்த விஷயங்களைப் புகுத்திப் பிரசாரம் செய்யப்படுகின்றது என்று கூறினார்.

வழக்கின் தத்துவம் எவ்விதமாயினும் உலகமெங்கும் கடவுள் மத சம்பந்தமான இத்தகைய உணர்ச்சி பரவியிருக்கிறதென்பதற்கும் அதிகமாகப் பேசப் படுகிறது என்பதற்குமே இதை எடுத்துக் காட்டினோம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு- 16-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79650.html#ixzz30hlXGNeM

தமிழ் ஓவியா said...

இப்பொழுது மதம் எங்கே?

திருப்பதி தேவஸ்தான சமஸ்கிருத பாட சாலையில் வியாகரணம் இலக்கணம் வகுப்புகளில் பார்ப்பனரல்லாதாரை சேர்த்துக் கொள்ளுவது மதத்திற்கு விரோதமென்று மகந்துவும் பள்ளிக்கூட அதிகாரிகளும் சொல்லி பார்ப்பனரல் லாதார்களை விலக்கிவிட்டார்கள்.

இப்பொழுது மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் அப்பள்ளிக் கூடத்தில் எத்தகைய வகுப்பு வித்தியாச மும் இல்லாமல் எல்லா வகுப்பு பிள்ளைகளுக்கும் எல்லாப் பாடமும் போதிக்க வேண்டுமென்று உத்திரவு போட்டு விட்டார்கள். எனவே, இப்பொழுது அந்த மதம் இருக்கிறதா என்று கேட்கின்றோம்.

பழைய காலத்தில் சர்க்கார் சம்பந்தமான மரங்களில் பேய் இருக்குமானால் 3 நாள் வாய்தா போட்டு சர்க்கார் முத்திரை போட்ட ஒரு தாக்கீதை அந்த மரத்தில் கட்டி விட்டால் அந்த வாய்தாவுக்குள் பேய் ஓடிப்போகும் என்பார்கள். அதுபோல் இப்போது சுப்பராய மந்திரவாதி தாக்கீதைக் கண்டால் மதப்பேய் பறந்து விடுவ தாகத் தெரிகிறது.

குடிஅரசு - செய்தி விளக்ககுறிப்பு - 16-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79651.html#ixzz30hlorfcT

தமிழ் ஓவியா said...

நாஸ்திகத்தின் சக்தி

ருஷியாவில் கடவுளே இல்லை என்றும், கடவுள் நம்பிக்கை இல்லை என்றும் சபைகளும் மகாநாடுகளும் கூட்டி, கடவுள் மறுப்புக் கண்காட்சிகளும் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, கடவுளுக்கு எதிர் பிரச்சாரம் பலமாக நடைபெறுகின்றது. இதன் பலனாக கடவுளால் முடியாத காரியங்களைக் கூட அந்தத் தேசத்தில் உள்ளவர்கள் செய்து காட்டிவருகின்றனர்.

அதாவது செத்தவர்களை பிழைக்க வைத்து விடுகின்ற விஷயம் பத்திரிகைகளில் பறந்த வண்ணமாயிருக்கிறது. கடவுளுக்குப் பிறக்கச் செய்வதும் இறக்கச் செய்வதும்தான் தெரியுமேயொழிய செத்தவர்களுக்கு உயிர் கொடுக்கத் தெரியாது. இந்த வேலை தமக்குத் தெரியாது, சக்தியில்லை என்று அவர் பேசாமல் அடங்கி விட்டாரோ என்னமோ தெரிய வில்லை.

அல்லது இந்தப் புதிய வேலையை அவர்களே செய்து கொள்ளட்டும், நமக்கு ஏன் இந்த வீண் தொல்லை என்று கருதி பிறப்பிப்பதும், காயலாக் கொடுத்து சாகடிப்பதுமான இந்த இரண்டு வேலையுடன் சும்மா இருந்துவிட்டார் போலும். நாதிகத்தின் சக்தியே சக்தி!

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 23-06-1929

Read more: http://viduthalai.in/page-7/79649.html#ixzz30hm96jfZ

தமிழ் ஓவியா said...


சந்தி சிரிக்கும் கடவுள்களின் சக்தி


கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை

கலிக்கநாயக்கன்பாளையம் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலையும், அங்கு நகை பணம் திருட்டுப் போனதால், காவல்துறையினர் விசாரணை நடத்துவதையும் காணலாம். உள்படம்: உடைக்கப்பட்ட உண்டியல்.

வடவள்ளி.மே 3- கோவை அருகே கோவில் உண்டியலை உடைத்து உள்ளே இருந்த நகை, பணத்தை சிலர் திருடிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையை அடுத்த கலிக்கநாயக் கன்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை யில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் திருவிழா நேற்று முன் தினம் நடந்ததாம். இதையொட்டி காணிக்கைகளை பக்தர்கள் உண்டியலில் செலுத்தினராம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிலின் கதவு பூட்டை உடைத்து சிலர் கோவிலுக்குள் புகுந்தனர். அவர் கள் அங்கிருந்த 5 அடி உயர சூலாயு தத்தைப் பயன்படுத்தி உண்டியலில் இருந்த 2 பூட்டுக்களையும் உடைத்துள் ளனர். பின்னர் அவர்கள் உண்டியலில் இருந்த தங்கம், வெள்ளி பொருள்கள் மற்றும் பணத்தை திருடி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

நேற்று காலையில் வழக்கம்போல் கோவிலில் நடை திறப்பதற்காக பூசாரி வந்தார். அப்போது அவர், கோவில் கதவு உடைக்கப்பட்டு உண்டியலில் உள்ள பொருள்கள் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாகி, உடனடியாக தொண் டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் தொண்டாமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங் களைப் பதிவு செய்தனர். கோவில் விழா நடந்த மறுநாளே உண்டியலில் இருந்த நகை, பணம் திருட்டு போயுள்ளது.

திருட்டு போன தங்கம், வெள்ளி மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருக் கும் என்று கூறப்படுகிறது.

தன்னுடைய உண்டியலையே காப் பாற்றிக் கொள்ளாத அந்த பத்ரகாளியம் மன், எப்படி பக்தர்களின் குறையைப் போக்குவாள்?

Read more: http://viduthalai.in/page-8/79631.html#ixzz30hmPIEFv

தமிழ் ஓவியா said...

கோவில் திருவிழாவில் மோதல்: காயம் - கைது

ஆரணி, மே 3- ஆரணி அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட குழு மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர். 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பற்றி காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆரணி அடுத்த சேவூர் எஸ்எல்எஸ் மில் அருகே வசிப்பவர் முனிவேல் மகன் மணிகண்டன் (22). அங்குள்ள மாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடந்ததாம்.

விழாவையொட்டி மணிகண்டன், நண்பர்கள் வேல், வடிவேல், ரகு ஆகி யோருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சம்பத் மகன்கள் மோகன், மதன் மற்றும் ராஜேஷ், கரிகாலன், யுவராஜ், மணிவாசகம் ஆகியோர் ஏன் சாலையில் சத்தம் போட்டுச் செல்கிறீர்கள் என்று கேட்டு ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதில் கைகலப்பு ஏற்பட்டு ஒரு வரை ஒருவர் கையாலும், கல்லாலும், தடியாலும் தாக்கி கொண்டனர். இதில் மோகன், யுவராஜ், கரிகாலன் ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குழு மோதல் குறித்து ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் மணிகண்டன், மணிவாசகம் ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில் காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து மதன், ராஜேஷ், மணிகண்டன், ரகு, வேல், வடி வேல் ஆகிய 6 பேரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின் றனர்

Read more: http://viduthalai.in/page-8/79631.html#ixzz30hmWenj1

தமிழ் ஓவியா said...


மோடி சொல்வது முழுப் பொய்- ஆதாரமற்றதுமோடியின் முகமூடியைக் கிழிக்கும் அகமதுபட்டேல்

புதுடில்லி, மே 3- குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ நான் எப்போதுமே சந்தித்தது கிடையாது. இது தொடர் பாக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியது சுத்தப் பொய் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி யின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல்.

இந்த சர்ச்சை எழ கார ணம் தொலைக்காட்சிக்கு மோடி கொடுத்த பேட்டி யில் வெளியான விவரங் கள்தான்.

அகமது பட்டேல் காங் கிரஸ் கட்சியில் எனக்கு உள்ள நெருக்கமான நண் பர்களில் ஒருவர். இப் போது அவர் மாறி இருக் கிறார். அதற்கு ஏதாவது பிரச்சினை இருக்கலாம், தொலைபேசியில் நான் தொடர்பு கொண்டாலும் அவர் அதற்கு பதில் அளிப் பதில்லை.

அகமது பட்டேலின் வீட்டுக்கு சென்று அவரு டன் சேர்ந்து உணவு அருந் தியிருக்கிறேன். அது நல்ல சினேகிதம். அந்த தனிப் பட்ட தோழமை உறவு தொடரவேண்டும் என அந்தப் பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

அகமதுபாய் என எப் போதும் அவரை அழைத் ததில்லை. மாறாக பல ஆண்டுகளாக பாபுபாய் என்றே அழைத்து வருகி றோம்.

பொது வாழ்வில் அவருக்கு உரிய மரியாதை தர வேண்டும். பாபுபாய் என்று அழைத்தால் அது நல்லதாக இருக்காது. மியான் சாஹிப் என்றால் இன்னும் மரியாதை. இந்த மரியாதைமிக்க வார்த் தையை நான் பயன்படுத்து கிறேன், என்று மியான்பாய் என பட்டேலை அழைப்ப தற்கான காரணம்பற்றி கேட் டதற்கு மோடி சொன்ன பதில்.

மோடியின் இந்த பேட்டி தொடர்பாக பட்டேல் கூறிய விளக்கம் வருமாறு:

காங்கிரஸில் மோடிக்கு நண்பர்களாக உள்ளவர்கள் யார், நண்பர்களாக இல் லாதவர்கள் யார் என்பது எனக்கு தெரியாது. மோடி சொல்வதெல்லாம் சுத்தப் பொய். ஆதாரமற்றது. நகைப்புக்குரியது. அவரது வீட்டுக்கோ, அலுவலகத் துக்கோ சென்று ஏதாவது சலுகை கேட்டு பெற்றதாக அவர் நிரூபித்தால் பொது வாழ்விலிருந்து விலகத் தயாராக இருக்கிறேன்.

என்னை தனது நண்பர் என மோடி கூறியதை கேட்டு சிரிப்புதான் வரு கிறது. எனது வீட்டுக்கு அவ ரும், அவரது வீட்டுக்கு நானும் சென்று உணவு சாப் பிட்டதாக மோடி கூறுவது உண்மைக்கு மாறானது.

1980-களில் அவர் பாஜக பொதுச்செயலாளராக இருந்தபோது, அவர் எனது வீட்டுக்கு வந்தது நினை விருக்கிறது. அப்போது அவரை நாங்கள் உபசரித் தோம்.

முதல்முறையாக முதல் வராக பொறுப்பேற்ற போது அவர் தொலைபேசி யில் அழைத்துப் பேசினார், அவர் போன் செய்தால் பதிலுக்கு மரியாதை கார ணமாக எடுத்துப் பேசிய துண்டு.

தேர்தல் சமயத்தில் மோடி இவ்வாறு பேசுவது மக்களை குழப்பவே. பெரிய பொறுப்பில் உள்ள வருக்கு ஏற்றதாக இது இல்லை. ஒரு கட்சியின் பிரதமர் வேட்பாளர் அவர். அவர் பேட்டியில் அரசியல் இருக்கிறது. தேர்தல் ஆதா யத்தைக் கருதியே அவர் இவ்வாறு பேசுகிறார் என் றார் அகமது பட்டேல். மோடி ஒரு பிரிவினைவாதி:

Read more: http://viduthalai.in/page-8/79635.html#ixzz30hmebCa1

தமிழ் ஓவியா said...

பா.ஜ.க.வும் - மோடியும் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர் கபீர் மடாலயத் தலைவர்

வாரணாசி, மே 3-பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந் திர மோடி ஒரு பிரிவினை வாதி; வாரணாசியில் மோடி போட்டியிடுவதால், பா.ஜ.க.வும் - மோடியும் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர் என்று கபீர் மடாலயத்தின் தலைவர் விவேக் தாஸ் ஆச்சார்யா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறிய தாவது:

புனித நகரான காசி பல் வேறு கலாச்சாரம், மதங் களின் சங்கமம் ஆகும். பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி ஒரு பிரிவினைவாதி. அவர் காசியின் பன்முக கலாச்சாரத்தைப் பிரதி பலிப்பவர் அல்ல, அதற்கு எதிரானவர்.

காசியில் பல நூற்றாண் டுகளாக இந்துக்களும் முஸ் லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இங்கு மோடி போட்டியிடு வது வாய்ப்புக் கேடானது.

இங்கு போட்டியிடுவ தன் மூலம் பாஜகவும், மோடியும் அரசியல் ஆதா யம் தேட முயல்கின்றனர். மோடியின் பெயரில் போலி யான அலை உருவாக்கப் பட்டுள்ளது.

வாரணாசி தொகுதியின் தற்போதைய எம்.பி. முரளி மனோகர் ஜோஷி கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக் காக எதுவும் செய்யவில்லை. பாஜகவின் மூத்த தலை வர்களில் ஒருவரான ஜோஷியே எதுவும் செய் யாத நிலையில் மோடி யிடம் இருந்து பெரிதாக எதிர்பார்க்க முடியாது.

நான் முற்றும் துறந்த துறவி தான். எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். எனினும் நாடு எதிர் கொள் ளும் முக்கியப் பிரச்சினை களில் மவுனமாக இருக்க முடியாது.

உலகின் அடையாளச் சின்னங்களில் காசியும் ஒன்றாகும். இந்த நகரைப் பாதுகாக்க அனைத்து தரப் பினரும் முயல்கின்றனர். அரசியல்வாதிகள் இந்த புனித நகரைச் சீர்குலைக்க அனுமதிக்க முடியாது. - இவ்வாறு அவர் தெரி வித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/79635.html#ixzz30hmloOyW

தமிழ் ஓவியா said...


சாதிச் சண்டையும், ஆடை மாற்றமும்


அண்மையில், சமுதாய சிந்தனை என்ற சிற்றிதழில் (மார்ச் 2014) படித்த செய்தி இது:

மத்திய மேல் நிலைக் கல்வி வாரியம் (CBSE) 9ஆம் வகுப்பு வரலாறு பாட நூலில், சாதிச் சண்டையும் ஆடை மாற்றமும் என்ற தலைப்பில், குமரி மாவட்டத்தில் 1822 முதல் 1859 வரை நடந்த மேலாடைப் போராட்டத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு தந்திருந்தது. அதில் புரோட்டஸ்டண்டு கிறிஸ்தவ மிஷனரி களின் பணி சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. பொறுக்க இயலாத இந்து நாடார் அமைப்புகள், அதை நீக்க, இழிவு... இழிவு... எனக் கூச்சல் போட்டன. இது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய குள்ள நரி உலகம் அழியப் போகிறது என்று கூச்சல் போட்டதற்குச் சமமாக இருந்தது. உடனே நாடார்களை வளைத்தெடுக்கும் நோக்கில் எல்லா அரசியல் கட்சிகளும் போராட களம் இறங்கின. பிற மாநில மாவட்ட நாடார் களும் வழக்கம்போல போராட்டத்தில் இணைந்தனர். கன்னியாகுமரி வளர்ச்சி ஆய்வு மன்றம் விளக்கம் கொடுத்து கன்னியாகுமரி மாவட்ட புரோட்டஸ் டண்டு கிறிஸ்தவர்களின் புனிதமான விடுதலை வரலாற்றை இருட்டடிப்பு செய்யக் கூடாது என்று சி.பி.எஸ்.ஈ.யைக் கேட்டுக் கொண்டது. அதை ஏற்றுக் கொண்டது. இச்செயலுக்கு யாரும் உரிமை கொண்டாட முன்வரவில்லை. காரணம், புரோட்டஸ்டண்டு கிறிஸ்தவர் களுக்கு மானம், மரியாதை, உரிமை முதலியவைமீது அக்கறை இல்லை. பிழைப்பு, ஆசீர்வாதம் முதலியவை மீதுதான் கவலை.

பல பட்டங்களுக்குச் சொந்தக்காரரான சமுதாய சிந்தனை ஆசிரியரும் கன்னி யாகுமரி வளர்ச்சி ஆய்வு மன்ற நிறுவனரு மான டி. பீட்டர் அவர்களின் மேற்கண்ட கூற்று கடும் கண்டனத்திற்குரியது. நாடார்களைப்பற்றி சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தில் எழுதப்பட்டதை நீக்கக் கோரி களத்தில் இறங்கியவை இந்து நாடார் அமைப்புகள் அல்ல. நாடார் சங்கங்கள் தான் களத்தில் இறங்கின. அங்கே இந்து நாடார்களும் உண்டு; கிறித்தவ நாடார் களும் உண்டு.

சேர நாட்டு (திரு விதாங்கூர்) நாடார்கள் ஆதிகாலம் தொட்டே தீண்டத்தகாத - பார்க்கத் தகாத குலத்தவர்கள் அல்ல; அதுபோல மேலாடை அணியாதவர்களும் அல்ல. பாண்டிய நாட்டில் நாடாண்டவர்கள் நாடார் குலம் ஆனது போல, சேர நாட்டில், மன்னர் சேரமான் பெருமாள் மரபில் வந்தவர்கள் சான்றோர் குலத்தவர்கள் ஆனார்கள். இவர்களையே தென் திருவிதாங்கூரில் நாடார்கள் என்றனர்.

மன்னர் சேரமான் பெருமாள் மரபில் வந்த வர்கள் மக்கள் (மகன்கள்) வழி வாரிசு கொள்கையைக் கொண்டவர்கள். பிற் காலத்தில் திருவிதாங்கூரை ஆண்ட மார்த்தாண்ட வர்மா மருமக்கள்(மருமகன்கள்) வழி யைக் கடைபிடித்தவர். இதை சேரமான் பெருமாள் மரபினர் எதிர்தததால்தான் அவர்கள் மார்த்தாண்ட வர்மாவால் அடக்கி ஒடுக்கப்பட்டு தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதை புராட் டஸ்டண்டு கிறித்தவர்கள் ஆதரித்தார்கள். காரணம், அப்பொழுதுதான் அவர்கள் பிழைப்பை இங்கே நடத்த முடியும்.

மீட் பாதிரியாரால் கிறித்தவ மதத்தில் சேர்ந்த பெண்களுக்கு குப்பாயம் அணியும் உரிமைதான் கிடைத்தது. இதை அணிந்துகொண்டு பொது இடங்களில், தைரியமாக நடந்து செல்ல கிறித்தவ நாடார் பெண்களால் முடியவில்லை என்பதே உண்மை. நாடார் பெண்கள் பாண்டிய நாட்டுப் பெண்களைப் போல மேலாடை அணியவே விரும்பினார்கள். அதற்காக இந்து நாடார்கள் நடத்திய போராட்டங்கள் - கொடுத்த விலை சாமானியமானதல்ல; அதைக் குறைவாக மதிப்பிட முடியாது. வைகுண்ட சுவாமி கள் என்று மக்களால் அன்புடன் அழைக் கப்படுகின்ற முத்துக்குட்டி தலைமை தாங்கி நடத்திய போராட்டங்களே திருவிதாங்கூரில் நாடார் பெண்கள் மார்பை மறைத்து சேலை அணியக்கூடிய உரிமையைப் பெற்றுக் கொடுத்தன. நாத்திகரான முத்துக்குட்டியை இன்று கடவுளாக்கியதால் அவர் வரலாற்றின் பக்கங்களிலிருந்தே மறைந்து விட்டார்.

திருவிதாங்கூர் நாடார் பெண்கள் இழி நிலைக்குத் தள்ளப்பட்டதும் மீண்டு வந்ததுமான வரலாறு இதுதான். நாடார் கள் இழி நிலையிலிருந்து மீள முத்துக் குட்டி முதற்காரணம்; பிற்காலத்தில் நாடார்களை முழுமையாக உயர்த்திய பெருமை தந்தை பெரியார் அவர்களையே சாரும்.

திருவிதாங்கூர் நாடார்களின் உண் மையான நிலை இதுதான். மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் இதைக் கவனத்தில் கொண்டு பாடநூலில் திருத்தம் செய்ய வேண்டும்.

- த. அமலா, திருச்செந்தூர்

Read more: http://viduthalai.in/page2/79605.html#ixzz30hnDORTB

தமிழ் ஓவியா said...குடிஅரசுத் திரட்டு!

நமக்கு இதுவரை ஏற்பட்ட அனுப வத்தில், பிராமண தேசீயவாதிகளென் போரில் பெரும்பாலோர், தங்கள் சுய நலத்திற்கும், தங்கள் வகுப்பு முன்னேற் றத்திற்கும், பிராமணரல்லாத மற்ற எல்லா சமூகத்துக்கும் துரோகம் செய்வதற்குமே உழைத்து வந்திருக்கின்றார்களென்றும் சிறீமான் நாயக்கர்போன்றாரை உபயோ கப்படுத்திக் கொண்டு வந்திருக் கின்றார்களென்றும், நினைக்கும் படி யாகவே ஏற்பட்டுப்போய் விட்டது.

பிராமணர்களின் தியாகமென்று சொல்லப்படுவதும் பிராமணரல்லாதாரின் கெடுதிக்காகவே செய்யப் படுவதாய் காணப்படுகிறது.

####

குடிஅரசின் போக்கையும் அதன் தொண்டையும் விரும்புகிறவர்கள் இது சமயம் முன் வந்து உதவாவிடில் எதிர் பார்க்கும் பலனை அடைய முடியாது.

அதாவது ஒவ்வொரு பட்டணங் களிலும் குடிஅரசுக்கு கவுரவ ஏஜெண் டுகள் முன்வர வேண்டும்.

அவர்கள் பத்திரிகையை தெருத் தெருவாய் விற்க வேண்டும்.
சந்தாதாரர்களைச் சேர்க்க வேண்டும். நமது முன்னேற்றத்திற்கு விரோதமான பத்திரிகைகளை விலக்கச் செய்ய வேண்டும்.

####

அரசியல் தலைவர்கள், தேசாபி மானிகள், தேச பக்தர்கள் என்பவர்கள் என்னை வையவும் என்னைத் தண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன்.

இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்ய வேண்டும்?

சிலருக்காவது மன வருத்தத்தையும், அதிருப்தியையும் கொடுக்கத்தக்க காரி யத்தை ஏன் செய்யவேண்டும்? என்று நானே யோசிப்பதுண்டு.
சிற்சில சமயங்களில் யாரோ எப் படியோ போகட்டும்.
நாம் ஏன் இக்கவலையும், இவ்வளவு தொல்லையும் அடைய வேண்டும்?
நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ்,கீர்த்தி, சம்பாதனையா?
ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?
ஒரு பத்திரிகையாவது உதவியுண்டா?
ஒரு தலைவராவது உதவியுண்டா?
ஒரு தேச பக்தராவது உதவியுண்டா?

####

குடிஅரசினால் தேசிய வாழ்வுக் காரரின் பிழைப்புக்கு ஆபத்து நேரிட்டி ருப்பதும், புராண பிழைப்புக்காரருக்கு ஆபத்து நேரிட்டிருப்பதும் அவர்களை நம்முடன் வந்து விவரமில்லாமல் அடிக் கடி முட்டிக் கொள்வதாலேயே நாம் நன்றாய் உணருகின்றோம்.

யார் பிராமணன்?

யார் பிராமணன்? என்று கேட்கும் போது மாத்திரம் தன் மனதை அடக்கி ஆண்டு கொண்டும் யோக்கியனாக இருந்து கொண்டும் இருக்கிறவன் பிரா மணன் என்று சொல்லுவதும் மற்ற சமயங்களில் மான ஈனமின்றி உலகிலுள்ள சகல அயோக்கியத்தனங் களையும் அதாவது கொலை, களவு, திருட்டு, புரட்டுகள் செய்வதும் சாமி தரிச னைக்கும், தாசி தரிசனைக்கும் தரகு பெறு வதும், போலீசு வேலை செய்வதும், வக்கீல் வேலை செய்வதும், இஷ்ட மில்லாத பெண்களைக் கூட்டிக் கொடுத் தாவது உத்தியோகம் பெறுவதும்,

அவ்வுத்தியோகத்தில் லஞ்சம் வாங் குவதம், தங்கள் வகுப்பாரைத் தவிர மற்ற வகுப்பார் தலையெடுக்காமல் அழுத்து வதும் தங்கள் பிள்ளைகளைத் தவிர மற்ற பிள்ளைகளை படிக்க விடாமல் தடுப் பதும்,

தேசத்தையும், ஏழை மக்களையும் காட்டிக் கொடுத்து உயிர் வாழ்வதுமான காரியங்களையெல்லாம் செய்துகொண்டு தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக் கொண்டும், இந்தப் பிராமணத் தன்மைக்காக கள்ளுக்கடை, வேசி வீடு முதல் கடவுள் சன்னிதானம் என்பது வரையில் தங் களுக்கு வேறு உரிமையும் மற்றவர் களுக்கு வேறு உரிமையும் இருக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டு மக்களை வதைத்துக் கொண்டிருக்கின்றது மான அக்கிரமங்களை இனியும் எத்தனை காலத்திற்கு மறைக்கலாம் என்று திரு. ஆச்சாரியார், கருதிக் கொண்டிருக்கின்றார் என்பது நமக்கு விளங்கவில்லை.

- தொகுப்பு: க. பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page3/79608.html#ixzz30hnNCntq

தமிழ் ஓவியா said...


பெண்கள்பற்றி துளசிதாசர்


அவர்களுக்கு அறிவு அதிகமாக இருப்பதில்லை; அவர்கள் கடுமையானவர்கள்; அவர்களிடம் மென்மையிருப்பதில்லை - என்று பெண்களைப்பற்றி துளசிதாசர் இப்படிக் கூறுகிறாரே! - என்பதற்காக நாம் அவரிடம் குறைபட்டுக் கொள்ளவில்லை. வாழையடி வாழையாக பாரத நாட்டு அறப்பாதையை வகுத்துவரும் எத்தனையோ பேர் இதே போன்ற கருத்துகளைத் தான் கூறி வந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் ஸ்மிருதிகள் எழுதியவர்கள்; சிலர் சாது சந்தியாசிகள்; சிலர் உயர்குல ஆரியர்கள் - நாம் குறைபட்டுக் கொள்வதெல்லாம் முற்போக்கு என்ற சொல்லுக்கு இன்று தரப்படும் விளக்கத்திற்கு ஏற்ப துளசிதாசர் ஒரு முற்போக்குக் கவிதான்! என்று கூறி அத்தனை துறைகளிலும் அவருக்கு முற்போக்குகள் இதற்கு (இராமாயணத்திற்கு) தீ வைக்காமல் இருக்கிறார்களே அதுவே பெரிய செய்தி!

- இப்படி எழுதியிருக்கிறார் ஒரு இந்தி எழுத்தாளர்,

பதந்த் ஆனந்த கௌசல்யாயன். இராமாயணம் பற்றி பெரியாரும், அண்ணாவும் கொண்டுள்ள கருத்துகள் இந்தியாவைச் சிறுமைப்படுத்தக் கூடுமானால், சில எழுத்தாளர்கள் இராமாயணம் பற்றி கொண்டுள்ள கருத்துகள் இந்தியாவிற்குப் பெருமை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடுமானால், இத்தகு கருத்துக்களை வெளியிட்டுள்ள புத்தமதத் துறவியை - இவர்கள் நாத்திகர் பட்டியலில் சேர்க்கப் போகிறார்கள் அல்லது பிற்போக்காளர் பட்டியலிலா?

எல்லா வகையான சூது - பாவம் - தீமை இவற்றின் சுரங்கம் பெண்ணின் உள்ளம் - துளசிதாசர் இராமாயணம் (அயோத்திகா காண்டம் 162-2)

- குயில் 2014 மார்ச் - ஏப்ரல் பக்கம் 16

Read more: http://viduthalai.in/page4/79611.html#ixzz30hnyRr3m

தமிழ் ஓவியா said...


பெரியார் வழியை அறிந்திட்டால்.....


பல்லி சத்தம்
பக்தனுக்கு பரவசம் - ஆம்
நல் சகுணம்
பல்லிக்கோ அது
உல் தினம்
என்னை பார் யோகம் வரும்
கழுதை முகத்தினிலே
அவன் தலையில்
கழுதை இருந்தும்
மழை வேண்டி
புண்ணிய திரு நாட்டில்
கழுதைகளுக்கு திருமணம்
விதவைத் தன்மை கொண்டதனாலேயே
மணக்கோலத்தில் நின்றிட்ட
மகனே தாயை வணங்க
மறுத்திடும் கயமைத்தனம்
ஆன்மீகமும் அறிவியலே என்ற
பொய்மைவாத புரட்டுத்தனம்
பக்தியால் புத்தி அழிந்து
உறவையே இழந்து நிற்கும் - மடமைத்தனம்
இவையெல்லாம் அழிந்து போகும்
இக்கணமே பெரியார் வழியை அறிந்திட்டால்
அறிவில் தெளிவு உண்டாகும்.


- ஆறுமுகம், ஆசிரியர்
ப.க. துணைச் செயலாளர், நன்னிலம்

Read more: http://viduthalai.in/page5/79613.html#ixzz30hoQ5CR9

தமிழ் ஓவியா said...


திராவிடர் இயக்கம் என்ன செய்தது?


திராவிடர் இயக்கம் என்ன செய்தது என்று நன்றி உணர்வில்லா நாக்குகள்சில பேசுகின்றன.

சென்னையில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதிகள் இல்லாத அந்தக் கால கட்டத்தில் - அதுவும் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தங்கும் இடம், உணவு, இலவசக் கல்வி அளிக்க முன் வந்தனர், திராவிடர் இயக்கத் தலைவர்கள் என்றால், அது என்ன சாதாரணமா? இதோ (ஏப்ரல் 28) குடிஅரசு இதழில் வெளிவந்த ஒரு விளம்பரம். (1937 ஏப்ரல் 18).

தியாகராய நகர் இல்லம்

(Theagaraya Nagar Home)

தியாகராய நகர், சென்னை
ஆதி திராவிட மாணவிகளுக்கு
இருப்பிடமும், உணவும், படிப்பும், நன்கொடை

மேற்படி இல்லம் 1937 ஜூனில் தியாகராய நகர் பள்ளிக்கூடத்தை ஒட்டித் துவக்கப்படும்.

2. அதில், கல்வியில் விருப்பமும், வேண்டிய அறிவுக் கூர்மையும், போதிய படிப்புத் தேர்ச்சியும், உள்ள கிறிஸ்தவர் அல்லாத ஏழை ஆதி திராவிடப் பெண்களுக்கு இருப்பிடமும், உணவும், நன்கொடையாக அளிக்கப்படும். படிப்பதற்கு அவர்கள் தியாகராய நகர் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

3. அவர்கள் 1937 ஜூலை 1உயில் கீழேகுறிப்பிட்ட வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும்.

வகுப்பு வயது வகுப்பு வயது
4வது 10 7வது 13
5வது 11 8வது 14
6வது 12

4. ஆதி திராவிடர் முன்னேற்றத்தில் நாட்டமுள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்த மேலே குறிப்பிட்ட தகுதியுடைய ஆதி திராவிடப் பெண்களை மேற்படி இல்லத்தில் சேரத் தூண்டவும், சேர்ப்பிப்பதற்கான துணை புரியவும் வேண்டப்படுகிறார்கள்.

5. சேர்க்கை விண்ணப்பங்கள் இப்பொழுது படிக்கிற பள்ளிக்கூடத்தின் மூலமாக அனுப்பப்பட வேண்டும். அவை இப்பொழுது முதலே பெறப்பட்டு ஆராய்ச்சி செய்யப்படும். இன்னும் வேண்டிய விவரம் தெரிய விரும்புகிறவர்கள் நேரிலாவது, கடித ம் எழுதியாவது தெரிந்துகொள்ளலாம். தபால் வழி விடை விரும்புகிறவர்கள் தங்கள் கடிதத்துடன் தங்கள் விலாசம் எழுதி முத்திரையொட்டிய உறை வைத்து அனுப்ப வேண்டப்படுகிறார்கள்.

65-கி, சர். மகம்மது செ.தெ. நாயகம்
உஸ்மான் சாலை, (C.D. Nayagam)
தியாகராய நகர், சென்னை மேல்அதிகாரி

குறிப்பு: (1938 இந்தி எதிர்ப்புப் போரில் முதல் சர்வாதிகாரியான சுயமரியாதை இயக்கத்தலைவர்)

குறிப்பு: கிறித்தவர் அல்லாதார் என்று குறிப்பிடப் பட்டதற்குக் காரணம் அவர்களுக்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள் விடுதிகள் ஏராளமாக இருந்தன.

Read more: http://viduthalai.in/page7/79616.html#ixzz30homSCXC

தமிழ் ஓவியா said...


மோடியின் தந்திரம்


உத்தரப்பிரதேசம் வாரணாசி தொகுதியில் போட்டி யிடும் நரேந்திரமோடி மனுதாக்கலில் வெவ்வேறு சமூகத்தைச்சேர்ந்த நால்வரிடம் பரிந்துரைக்க கையொப்ப மிடத் திட்டமிட்டது. அதன்படி பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பேரன் ஒரு கையொப்பம் போட்டார். பாரத ரத்னா பட்டம் பெற்றவரும் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்தவருமான பிஸ்மில்லா ஹ்கான் குடும் பத்தினரிடம் ஒரு கையொப்பமிட்டு பெற முயன்றனர். அதனை நிராகரித்து விட்டனர் - அவரின் குடும்பத்தினர்.

Read more: http://viduthalai.in/page7/79615.html#ixzz30hovPfGW