Search This Blog

10.5.14

தியாக சீலர் கக்கன்!

இதோ ஒரு அற்புத நூல் தியாக சீலர் கக்கன்!
மனிதநேயர் கலைமாமணி திரு.வி. கே.டி. பாலன் (மதுரா டிராவல் சர்வீஸ்) உரிமையாளர் அவர்கள் முயற்சியால் மதுரா வெளியீடாக, வெளிவந்துள்ள தியாக சீலர் கக்கன் என்ற தலைப்பில் ஆற்றல்மிகு இளசை சுந்தரம் அவர் கள் எழுதியுள்ள மிக அருமையான தொரு நூலை மதிப்புரைக்காக விடுதலைக்கு அனுப்பியுள்ளார்.

உடனடியாகப் படித்தேன். ஒரே மூச்சில், கீழே வைக்க முடியாத அளவுக்கு அவ்வளவு விறுவிறுப்பும், புதினத்தைப் போல் ஆவலைத் தூண்டுவதாகவும், தூய்மையாளர் தொண்டறச் செம்மல் நேர்மையும் எளிமையும் உருக் கொண்ட உத்தமர் கக்கன் அவர்களது வாழ்க்கை வரலாற்று நூல் இந்நூல்!

கக்கன் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் தன்னை ஒப்புடைத்துக் கொண்ட நாள் முதல் இறுதி மூச்சடங் கும் வரை கட்சி, கொள்கை மாறாத நிறம் மாறாத பூ - என்றும் இன்றும் அதன் மணமும் மாறாதது!

தியாக வாழ்க்கையில் எப்படிப் புடம் போட்டு - சோதனை, சிறைச் சாலை, வறுமையிலும் செம்மை என்ற வாழ்விலக்கணத்தின் வைரம் பாய்ந்த நெஞ்சத்திற்கும் நேர்மைத் திறத்துக்கும் உரியவர் என்பதை, மிகவும் ஓடி, தேடி, பலரை நாடி சேகரித்த தகவல்களின் அரிய களஞ்சியமாகத் திகழ்கிறது.
ஆற்றொழுக்கான அழகு நடை சிறிய அத்தியாயங்கள், சலிப்பில்லாமல்  படிக்கும் வகையில் 100 அத்தியாயங் கள் நூறு மதிப்பெண் பெற வேண்டிய நவில்தோறும் நூல் நயம் தரும் அரிய இலக்கியப் பூங்காற்று.

தோல்வியால் துவளாத உள்ளம் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, அது வும் ஏழையாய்ப் பிறந்து, ஏழையாய் - உயர் பதவிகளை அலங்கரித்த நிலை யிலும் ஏழையாகவே வாழ்ந்து - ஏழை யாய் இறந்த ஈடு இணையற்ற தமிழ் நாட்டின் தியாகச் செல்வம் அவர் என்பது ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் கூறப்பட் டுள்ளது!

காமராசரின் நம்பிக்கைக்குரியவர். காவல்துறை அமைச்சர் என்பதைப் பெற்ற நிலையிலும் அவரது கடிதோச்சி மெல்ல எறிந்த நிலையும், உற்றார், உறவினர், இன்னார், இனியர் என்பவர்களைக் கூட சலுகைகள் பெறாத அளவுக்கு தூரத்தில் நிறுத்தி வைத்த தூய நெறியாளர்.

பலருக்குத் தெரியாத - ஆனால் தெரிய வேண்டிய செய்திகளைக் கோர்வையாய் தொடுத்த அற்புத மாலையை அவரது சிலைக்கும் சீலத் திற்கும் முன்பு அணி வித்திருக்கிறார்கள் ஆசிரியர் இளசை சுந்தரம் அவர்களும் அருமை வி.கே.டி. பாலன் அவர்களும்! இந்த உலகத்தில் இப்போதெல்லாம் மக்கள் தொகை பெருகிக் கொண்டி ருக்கிறது; ஆனால் மனிதர்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. இது ஓர் அறிஞரின் கணிப்பு என்ற சொற்றொ டருடன் துவங்குகிறது இந்த வாழ்க்கை வரலாற்று நூல்!

மேலூர் உரிமை கொண்டாடியது மதிப்பிற்குரிய கக்கன் அவர்களை முயன் றாலும் அவரது பூர்வீகம் - திருவாரூருக்கு அருகில் உள்ள கற்கார்குடி என்ற ஊரைச் சேர்ந்தவர் என்ற செய்தி.

அதுபோலவே

அன்றைய காங்கிரஸ் கட்சியோடும் சேவா சங்கத்தோடும் மிகவும் நெருங்கிய தொடர்புடைய கக்கன் சீர்திருத்த சிந்தனை உடையவர்; தாம் இந்துவாக இருந்தாலும் கிறித்துவப் பெண்ணை (திருமிகு: ஆசிரியை சொர்ணம் பார்வதி) மணந்து கொள்ள சம்மதித்தார்; இவரது நண்பர்கள் திட்டமிட்டபடி சீர்திருத்த திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டார்.

அந்த திட்ட அடிப்படையில் சிறா வயல் என்ற ஊரில் சிறப்பாக செயல் பட்டு வந்த காந்தி மன்றத்தை அணுகினர். மன்ற உறுப்பினர்களும் முழு ஒத்து ழைப்புக் கொடுக்க முன் வந்தனர்.

அம்மன்ற உறுப்பினர்களின் முயற் சியால் 1932ஆம் ஆண்டு சிறாவயல் என்ற ஊரில், தமிழ் நாட்டின் ஆறு பேச் சாளரில் ஒருவர் என்றிருந்த பெருமை யுடையவரும் பத்மாவதியைக் கலப்பு மணம் செய்து கொண்டவரும் பொது உடைமைச் சிந்தனையாளருமாகிய திரு. ப. ஜீவானந்தம் அவர்களின் தலைமை யில் கக்கனின் திருமணம் இனிதே நடைபெற்றது.

... வீரகாளியம்மன் திருக்கோயில் பூசாரியான, பூசாரி கக்கனுக்கு (இவரது தந்தையார்) இச்சீர்திருத்த திருமணத்தில் முழு மன நிறைவு இல்லை என்றாலும், திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் என்பது அவரது விட்டுக் கொடுக்கும் பண்பைக் காட்டுகிறது.
தடித்த பின் தட்டிக் கொடுப்பது கடுங் குளிருக்குப் பின்வரும் வெயில் போல இதமானது

- இப்படி பலப்பல அரிய தகவல்கள். மதுரை வைத்தியநாதய்யர் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு தொண்டு செய்தார் என்பது உண்மையாயினும் 1922-இல் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டியில் ஆலயப் பிரவேச தீர்மானத்தை பெரியார் கொண்டு சென்றபோது, திரு.வி.க. போன்றோர் ஆதரித்த நிலையில், வைத்திய நாதய்யர்தான் கடுமையாக எதிர்த்தார் என்ற தகவல் திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்பு நூலில் உள்ளதை நூலாசிரிய ருக்குச் சுட்டிக் காட்டுவது நமது கட மையாகும்.

இது ஒரு பொது வாழ்க்கையில் உண்மையாக ஈடுபடுவோருக்கு ஓர் இலக்கண நூல். தவறாமல் படியுங்கள் ஓங்குக தியாக சீலர் புகழ்!


                ---------------- கி.வீரமணி -”விடுதலை” 9-5-2014

20 comments:

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வில் கடைப்பிடிக்கப்படும் வெயிட்டேஜ் முறையை அறவே அகற்றுக தஞ்சை வல்லம் தலைமைச் செயற்குழு முடிவு


தமிழ்ப் படிப்பதைத் தவிர்ப்பதற்காக சி.பி.எஸ்.இ.க்கு மாறுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்

ஜூன் இறுதிக்குள் விடுதலைக்கு 12 ஆயிரம் ஆண்டு சந்தாக்களைச் சேர்க்க முடிவு

தஞ்சை வல்லம் தலைமைச் செயற்குழு முடிவு

வல்லம், மே 9- தமிழ்ப் படிப்பதைத் தவிர்ப்பதற்காக சி.பி.எஸ்.இ.க்கு மாறுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று இன்று (9.5.2014) தஞ்சை வல்லத்தில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று (09.05.2014) சனி காலை 10.30 மணிக்கு தஞ்சாவூர் வல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமயில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு :-

1. இரங்கல் தீர்மானம்

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் ஆயக்காரன் புலம் க.சுந்தரம் (வயது 104), அரியலூர் மு.சிங்காரம் (வயது 92) ஆகியோரின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. அவர்களது தொண்டிற்கு இக்கூட்டம் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் -2

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு

முல்லை பெரியாறு அணையில் 142 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்கி கொள்ளலாம் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை இக்கூட்டம் வரவேற்கிறது. இப்பிரச்சினையை அரசியல் ஆக்காமல், கேரள மாநில அரசு உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கு கட்டுப்பட்டு, தமிழ்நாடு-கேரள மாநில மக்களின் நல்லுறவை பேணிக்காக்குமாறு இச்செயற்குழு கேரள மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் - 3

சி.பி.எஸ்.இ. கல்வி முறைக்கு மாறும் கல்வி நிறுவனங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

மேல்நிலைப்பள்ளி வரை தமிழைக் கட்டாயம் படித்திட வேண்டும் என்ற இன்றைய கல்வி திட்ட முறையை தவிர்க் கும் வகையிலும் தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வி முறை யிலிருந்து தவிர்க்கவும் சி.பி.எஸ்.இ கல்வி முறைக்கு மாறும் போக்கு தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதை இக்கூட்டம் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு மத்திய அரசின் துணையோடு இதில் தலையிட்டு தடுத்து நிறுத்த ஆவன செய்யு மாறு இச் செயற்குழுக்கூட்டம் தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 4

வெயிட்டேஜ் முறையை அறவே அகற்றுக

ஆசிரியர் தகுதித் தேர்வில் கடைப்பிடிக்கப்படும் வெயிட்டேஜ் மார்க் முறையை அறவே அகற்றுமாறு இச் செயற்குழுக் கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 5

கழக பொறுப்பாளருக்கு களப்பணி பயிற்சி முகாம்

திராவிடர் கழக பொறுப்பாளர்களுக்கான களப்பணி பயிற்சி முகாமை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. மாநில மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர கழகப் பொறுப் பாளர்கள் கட்டாயமாக பங்கேற்குமாறு வலியுறுத்தப்படு கிறார்கள். முதற் கட்டமாக 24.05.2014 அன்று புதுச்சேரியிலும் 25.05.2014 கடலூர் மண்டலத்துக்கான களப்பணி பயிற்சி முகாமை குறிஞ்சிப்பாடியிலும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் - 6

விடுதலைக்குச் சந்தா சேர்க்கை

விடுதலை 80 ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி ஜுன்மாத இறுதிக்குள் கழக மாவட்டத்திற்கு 200 ஆண்டு சந்தாக்கள் வீதம் 12000 விடுதலை ஆண்டு சந்தாக்களைத் திரட்டுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/79950.html#ixzz31Gsuo0AZ

தமிழ் ஓவியா said...


தஞ்சையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி


முல்லைப் பெரியாறு:

கேரளம் - தமிழக உறவுகள் பேணிக் காக்கப்பட கேரளா ஒத்துழைக்க வேண்டும்

தஞ்சையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி


கேள்வி: முல்லைப் பெரியாறு பற்றி உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரளா எதிர்க்கிறதே?

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் பதில்: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒரு முக்கிய தீர்ப்பினை வழங்கி யுள்ளது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களுள் மூன்றாம் தூண் என்று கருதப்படுகிற நீதிமன்றம் அதுவும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப் புக்கு கேரள அரசு கட்டுப்பட வேண் டும். ஏற்கெனவே உச்சநீதிமன்றத் தால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட குழு தெளிவான அறிக் கையைக் கொடுத்துள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் தமிழ்நாட்டின் சார்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கேரளாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் ஆகியோர் அடங்கிய குழு முல்லைப் பெரியாறு அணைக் கட்டு மானம் உறுதியாக உள்ளது. 142 அடி தண் ணீரைத் தேக்கலாம் என்று கூறி விட்டதே.

கேரளா மாநில அரசின் அடாவடிப் போக்கால் நீதிபதி கே.டி. தாமஸ் இடையில் விலகிக் கொண்டார். இந்தத் தீர்ப்பினால் கேரள மாநிலத்திற்கு எந்தவிதப் பாதிப்பும் கிடையாது. தமிழ்நாடும் கேரளமும் அமர்ந்து பேசி உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி நடந்து கொள்ள முன் வர வேண்டும். இதில் உரசலுக்கு இடம் தரக் கூடாது. இரு மாநில மக்களின் நல்லுறவு பேணிக் காக்கப்பட வேண்டும்.

கேள்வி: கேரளாவில் உள்ள கம்யூனிஸ்டுக் கட்சியும்கூட நீதிமன்ற தீர்ப்பை எதிர்க் கின்றதே?

பதில்: தேசிய கட்சிகள் என்று சொல்லிக் கொண்டாலும் மாநில உணர்வுடன்தான் அத்துமீறி நடந்து கொள்கின்றன. கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல; பி.ஜே.பி. காங்கிரஸ் எல்லாமே இப்படித்தான் நடந்து கொள்கின்றன. வாக்கு வங்கி அரசி யலைத்தான் எல்லாக் கட்சிகளும் நடத்துகின்றன.

கேள்வி: தமிழ்நாட்டில் மின் வெட்டுப் பற்றி?

பதில்: மின்சாரம் இருந்தால் தானே மின் வெட்டு என்ற கேள்வி எழும்.

கேள்வி: நாட்டில் எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளைகள் நடந்து கொண்டுள்ளனவே?

பதில்: சட்டம் ஒழுங்கு பிரச்சினையே இல்லை; நாடு அமைதியாகவே இருக்கிறது என்று முதல் அமைச்சர் சொல்லுவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு முதல் அமைச்சர் என்றால் எதிர்க் கட்சிகள் கூறுவதை நிதானத்துடன் கேட்க வேண்டும்; கோபப்படக் கூடாது.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மேற்கண்ட வாறு கூறினார். (8.5.2014).

Read more: http://viduthalai.in/e-paper/79955.html#ixzz31Gt9jMhN

தமிழ் ஓவியா said...


மனிதன்



பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)

Read more: http://viduthalai.in/page-2/79958.html#ixzz31GtKHLwc

தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் முற்போக்கு எழுத்தாளர் அருணன் அவர்களுக்கு தமிழர் தலைவர் விருது வழங்கி பாராட்டு


வல்லம், மே 9- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வணிகவியல் துறை மேனாள் பேராசிரியரும் முற்போக்கு எழுத்தாளரு மான அருணன் அவர்களுடைய இலக்கிய ஆய்வு பணி களைப் பாரட்டி அவருக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இணை துணை வேந்தர் பேரா.எம்.தவமணி

இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத்தின் இணை துணை வேந்தர் பேரா.எம்.தவமணி வரவேற்புரையாற்றினார். அவர் தமதுரையில் விருது பெறும் அருணனின் பணி சிறப்புகளை எடுத்துக்கூறினார். அதனைத் தொடர்ந்து பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் இயக்குநர் பேரா.பழனி அரங்கசாமி தமது அறிமுக உரையில் தமிழ் இலக்கியத்தின் சிறப்புகள், பெரியார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள். எழுத்தாளர் அருணன் படைத்திட்ட பல்வேறு நூல்கள்பற்றி எடுத்துக் கூறி அறிமுக உரை ஆற்றினார்.

துணைவேந்தர் கர்னல் பேரா.நல்.இராமச்சந்திரன்

இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக் கழக துணைவேந்தர் கர்னல் பேரா.நல்.இராமச்சந்திரன் தலைமையுரை ஆற்றினார். அவர் தமது உரையில் பெரியார் பல்கலைக் கழகத்தின் பல்கலைப் பணிகள் மாணவர்களை திறன் மிகு கொள்கலன் ஆக்கும் ஆக்கப்பணி, அறிவுப் பணி என்று குறிப்பிட்டார். மேலும் தந்தை பெரியார் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. அதில் மிகவும் தொலைநோக்கு கொண்டது தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார் சிந்தித்து தமிழ் உலகிற்கு வழங்கியது என்பதை மிகச் சிறப்பாக குறிப்பிட்டார்.

வேந்தர் டாக்டர் கி.வீரமணி உரை

பல்கலைகக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர் பேரா. அருணன் அவர்களின் சீரிய இலக்கியப் பணியினைப் பாராட்டி சிறப்புக்குரிய பேரா.வெள்ளையன் விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பித்தார். நினைவுப் பரிசும் அளிக்கப்பட்டது. விருதுபெற்ற பேரா.அருணன் அவர்களைப் பாராட்டி வேந்தர் அவர்கள் தமது பாராட்டுரையில், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள பேரா.வெள்ளையன் விருதின் சிறப்பையும் அவ்விருது உருவான வரலாற்று நிகழ்வுகளையும் அவையோர் நெகிழ எடுத்துரைத்தார்.

பேரா.அருணன் இவ்விருதினைப் பெறுவதற்கு மிகப் பொருத்தமான அறிஞராவார். சிறந்த கருத்தாளர், சிறந்த சிந்தனையாளர், சமுதாயப் புரட்சிக்கு தனது அறிவை, ஆற்றலை பயன்படுத்தும் ஒப்பற்ற புகழுக்குரியவர்.

விருதின் பெயருக்குரிய வெள்ளையன் அவர்கள் சிறந்த பகுத்தறிவாளர் என்பதோடு கடவுள் தோன்றிய கதை என்று ஆங்கில நூலை தமிழில் மொழியாக்கம் செய்திட்ட பெருமைக்குரியவர். அவரது பெயரில் வழங் கப்படும் விருதை பெற்றிட நம்முடைய பாராட்டுக் குரிய அருணன் அவர்கள் மிகவும் பொருத்தமானவர்.

எப்படியெனில் பேரா.வெள்ளையன் அவர்கள் கடவுள் தோன்றிய கதை என்று நூல் எழுதினார்; அவர் பெயரில் வழங்கப்படும் விருது பெறும் அருணன் அவர்கள் கடவுளர் கதைகள் என்று நூல் எழுதியுள்ளார்.

ஆகவே இவ்விருதுக்குரியவர் நம் பாராட்டுக்குரிய எழுத்தாளர் அருணன் என்றால் அது மிகையாகாது. மாணவர்கள் இதுபோன்ற அறிவார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துகள் பெறும் வாய்ப்பு அரும் வாய்ப் பாகும் படிப்பறிவு மட்டும் மாணவர்கட்கு போதாது, அதோடு பல்துறை அறிவும் -பட்டறிவும் மிகவும் பயன் படக்கூடியதாகும்.

தமிழ் ஓவியா said...


இந்நிகழ்வை சிறப்பாக நடத்தக்கூடிய பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் இதுபோன்று இன்னும் பல நிகழ்வுகளை நடத்திட வேண்டும். இம்மய்யம் அனைத்து மாணவர்களுக்கும் பெரியார் சிந்தனையை கற்பிக்கும் வகையில் பொதுவான புதிய பாடத் திட்டம் வரும் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும். அது தேர்வுக்குரியதாக இருக்காது. ஆனால் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தேர்வதற்குரியதாக, வாழ்வியல் பாடமாக இருக்கும் என்று கூறினார்.

எழுத்தாளர் அருணன் அவர்கள் தமது ஏற்புரையில், என்னை ஈன்றவர்கள் எனது தாய் தந்தை என்றால் என்னை சீர்த்திருத்தவாதியாக ஆக்கியது சிங்காரவேலரும், பெரி யாரும் என்று தொடக்கத்திலேயே முத்தாய்ப்பாக குறிப் பிட்டார்கள். பெரியாரின் கொள்கை, பொதுவுடைமை கொள்கை கோலோச்சிட அடிப்படையான தத்துவம் ஆகும்.

பெரி யார் தத்துவத்தோடு இணைந்துதான் மார்க்சியம் வெல்ல முடியும். நாடெங்கும் தத்துவமும், தத்துவ விசாரணை யும் பன்னூறு ஆண்டுளாக நீற்றுப்போயிருந்த நிலையில், 1920 இல் இந்தியாவில் தென்கோடியில் தமிழ்நாட்டில் பெரியார் தத்துவம் பிரசவித்தது. பொது உடைமைப் பற்றி - பொருளாதாரம் பற்றி 1934 இல் பெரியார் எழுதிய மெட்டீரியலிசம் என்பது அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் யாரும் சிந்திக்காதது ஆகும்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் அதுவும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் பகுத்தறிவுப் பேராசிரியர் வெள்ளையன் பெயராலான விருதினை நான் பெறுவது எனக்கு கிடைத்தத்திட்ட பெரும் பேறாகும்.

இவ்விருதை வழங்கிய வேந்தர் மற்றும் பல்கலைக் கழகத்தின் பெருமக்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். விழாவில் பதிவாளர் அவர்கள் கலந்துகொண்டு சிறப் பித்தார். விழாவின் நிறைவாக பெரியார் சிந்தனை உய ராய்வு மய்யத்தின் துணை இயக்குநர் டாக்டர் க.அன் பழகன் அவர்கள் நன்றி கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/79948.html#ixzz31Gu1rAsb

தமிழ் ஓவியா said...


பார்வதி -பரமசிவன் முத்தக் காட்சி!


திருவாக்குஞ் செய்கருமங் கை கூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலாற் கூப்புவர்தங் கை

விநாயகக் கடவுளை வணங்கிக் காரியங்களைத் தொடங்கினால் நல்லது என்று கூறும் பண்டாரச் சன்னதிகளே! வேழ முகத்தானின் வாழ்க்கை வரலாற் றினைப் பாரீர்.

கசமுகாசுரன் என்பவன் தவம் செய்து, தான் மனிதராலும், விலங்குகளாலும், பிறவற்றாலும் காலமெல் லாம் இறவாதிருக்க வேண்டும் என்று வரம் பெற்றான். அந்த வரம் பெற்றமையால் அவன் தேவர்களைத் துன்புறுத்தினான்.

தேவர்கள் சிவபெருமானை வேண்ட சிவன் விநாயகனை உண்டாக்க வேண்டும் என்று எண்ணினான். அதனால் தன் துணைவி சக்தி யோடு தோட்டத்திலே வீற்றிருந்தார். அப்பொழுது அங்கே ஓர் ஆண் யானை, பெண் யானையைப் புணர்தல் கண்டு, சக்தி பெண் யானை வடிவங்கொள்ள, சிவன் ஆண் யானை வடிவங் கொண்டு புணர்ந்தார்.

அவர்கட்கு யானை முகமும் மனித உடலுமாக ஒரு குழந்தை தோன்றியது. இதுதான் இன்று ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கும் கரியின் முகவன் கதை, இதற்கு ஆதாரமாக, திருஞான சம்பந்தர் தனது தேவாரத்தில்-

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே

என்று பாடியுள்ளார். இப்படிக் காமத்தின் விளைச்சலால் மக்கள் பிறவியிலிருந்து, விலங்குப் பிறவியெடுத்து இணைந்த பிண்டங்களின் சதைக்கலப்பில் விளைந்த விநாயகன் வணங்க வேண்டிய கடவுளா? இதோடு மட்டுமல்ல, தன்னை ஈன்ற தாயும் தந்தையும் காமக் காய்ச்சல் மிகுதி யினால் உதட்டுச்சுவை பருகும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தாராம், நெற்றிக் கண்ணனார் பெற்ற மகன்.

மும்மைப் புவனம் முழுதீன்ற முதல்வி
யோடும் விடைப்பாகன் அம்மை தருக
முத்தமென அழைப்ப வாங்கே சிறிதகன்று
தம்மின் முத்தங்கொள நோக்கிச் சற்றே
நகைக்கும் வேழமுகன் செம்மை முளரி
மலர்த்தா ளெஞ்சென்னி மிசையிற் புனைவாமே

மூன்று உலகங்களையும் பெற்ற சக்தியிடத்து, எருதுவை ஊர்தியாக உடைய சிவபெருமான், அம்மையே முத்தம் தருக எனச் சொல்லி அழைக்க அவர்களுக்கு இடையே இருந்த விநாயகன் சிறிது நீங்கிட, சிவனும், பார்வதியும் ஒருவரை யொருவர் முத்தமிட்டு கொள்ள அதனைக் கண்டு புன்னகை செய்யும் யானை முகனது சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை எமது தலையின் மேல் அணிந்து கொள்வோம் என்று கூறுகிறது நந்திக் கலம்பகம் எனும் நூல்.

பெற்றவர்கள் முயங்கும் போது உற்றுப்பார்த்து மகிழ்ந் திடும் காமவல்லி பெற்ற திருக்குமரன் விநாயகக் கடவுளை வீரமரபில் வந்த தமிழினம் வணங்க வேண்டியது தானா? புராணப் புரட்டர்களின் மூளைச் சுரப்பிலிருந்து உதயமான ஆபாசக் கடவுளுக்கு ஆற்றங்கரையில் சிலை ஏன்? இந்த வெட்கங் கெட்ட உறவில் விளைந்த யானை முகத்தானுக்கு தேங்காய் உடைப்பும், நைவேத்தியமும் ஒரு கேடா? தமிழினமே! சிந்தித்துச் செயல்படு!

- பெரியகுளம் அருளாளன்

Read more: http://viduthalai.in/page-7/79978.html#ixzz31GuO1DIm

தமிழ் ஓவியா said...

சொர்க்கமா - நரகமா?

தன்னை எதிர்த்து பார்லிமென்டிற்குப் போட்டியிடும் ஒருவர் நடத்தும் தேர்தல் கூட்டம் ஒன்றிற்கு ஆப்ரகாம் லிங்கன் சென்றிருந்தார். மேடையில் பேசிக் கொண்டிருந்த பாதிரியார் லிங்கனைக் கண்டதும் அவரை அவமானப் படுத்த வேண்டும் என எண்ணினார்.

லிங்கன், சொர்க்கம் - நரகம் ஆகியவை மீது நம்பிக்கை அற்றவர் என்பது பாதிரியாருக்குத் தெரியுமாகையால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொர்க்கத்திற்குப் போக விரும்புபவர்கள் அனைவரும் தயவு செய்து எழுந்து நிற்கவும் என்றார். ஆப்ரகாமைத் தவிர, எல்லோரும் எழுந்து நின்றார்கள்.

மறுபடியும் பாதிரியார் சொன்னார். நரகத்திற்குப் போக விரும்பாதவர்கள் எழுந்து நிற்கவும் என்றார். இப்பொழுதும் லிங்கனை தவிர்த்து எல்லோரும் எழுந்து நின்றார்கள். உடனே பாதிரியார் லிங்கனை பார்த்துக் கேட்டார்.

நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்? லிங்கன் சொன்னார், நான் பார்லிமெண்டிற்கு போக விரும்புகிறேன், பாதிரியார் வாயடைத்துப் போனார்.

Read more: http://viduthalai.in/page-7/79978.html#ixzz31GuVzQWs

தமிழ் ஓவியா said...

விதியைப் பற்றி...

மனித சக்தி விதி என்ற சங்கிலியால் கட்டுண்டு கிடப்பது, பெரும் பரிதாபமே.

மனிதன் சிந்திக்கச் சிந்திக்க, விதியினின்று விடுதலை அடைகிறான். மனித மூளை சிந்தனையால் விதியை எதிர்த்து, அதை அழித்து, வெறும் பிரமை என்று நிரூ பிக்கவும் ஆற்றல் பெற்றுவிடுகிறது.

பலமற்றவர்கள், பாதகர்கள் - இவர்களே உழைக்காமல் சோம்பலில் மடிந்து, விதியைக் குறை கூறுகிறார்கள்.

- எமர்சன்

Read more: http://viduthalai.in/page-7/79978.html#ixzz31Guc2YkR

தமிழ் ஓவியா said...


பார்ப்பனம் மதம்- தர்மம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பார்ப்பனர்கள் எந்த காரியத்தி லானாலும் எந்தத் துறையிலானாலும் தங்கள் சொந்த ஜாதி (உயர்வு) நலனை அடிப்படையாகக் கொண்டுதான் பார்ப்பார்களே தவிர, மக்களின் பொது நலனைப் பற்றிய கவலையே அவர் களுக்கு ஏற்படுவதில்லை.

பார்ப்பனர்களுக்கு மதம், தர்மம் என்பதே அவர்களது ஜாதி பாதுகாப்பாகத்தான் ஆகி விட்டது

- தந்தை பெரியார் 22.5.1967 விடுதலை தலையங்கத்தில் ஒரு பகுதி

Read more: http://viduthalai.in/page-7/79979.html#ixzz31Gui7vE0

தமிழ் ஓவியா said...

விஞ்ஞானியும் - பார்ப்பானும்

ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சி சாலையில் கண்டறிந்த உண்மையானது, மறுநாளே, விளையாட்டு சாமான் செய்யும் தொழிலாளியையும் கூட 8 அணா சம்பாதிக்க வைக்கும்படி மேல்நாட்டில் வசதி ஏற்பட்டிருக்கிறது.

நமது நாட்டிலோ கோவில் பார்ப்பனன் ஏற்பாடு செய்த புஷ்பப்பல்லக்குக்கு மறுநாளே ஆயிரக்கணக்கான மைல் தூரமுள்ள ஏழைகளின் பணத்தையும் இழக்க வசதி உண்டு.

அரிது! அரிது!!

ஒன்றை ஆக்குதல் அரிது; அழித்தல் எளிது என்பது பழமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு எளிதாகப் புளுகி வைத்துள்ளார்கள். அவைகளை அழிப்பது மிக அரிதாகவே முடிகிறது தல்லவா?

- புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page-7/79979.html#ixzz31Gupy5B5

தமிழ் ஓவியா said...

இங்கர்சால் மணிமொழிகள்

தேவலோகம் என்று ஒன்று இருக்குமானால் - அதில் எல்லையற்ற இறைவன் இருப்பது உண்மையானால் அவர் கோழைகளின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார் நயவஞ்சகர்களின் செயல்களைக் கண்டு மகிழ மாட்டார் இந்த வஞ்சகர்களைக் கண்டு ஒருக்காலும் திருப்தியடையமாட்டார்.

மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து விடும் மதங்கள் அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி தூரப்போடுங்கள். சிந்திக்காதே அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்ராயம் எந்த மூலையில் எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.

முடிவில்லாத முதல்வன் இருப்பது உண்மையானால் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணம் உடைய வராய் இருக்க வேண்டும் என்று அவர் கருதுவாரானால் ஏன் அவன் ஒருவனுக்கு குறைந்த அறிவும், மற்றொருவனுக்கு அதிக அறிவும் கொடுத்தான். அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியாக எண்ண வேண்டும் ஒரே மாதிரியாக உணர வேண்டும் என்பது அவன் நோக்க மானால் அறிவு வித்தியாசங்கள் ஏன்?

எனக்கு இந்த உரிமைகள் வேண்டும் என்று கூறுகின்றவர் அதே உரிமைகளை வேறொரு மனிதன் விரும்பும்போது அளிக்க மறுத்தால் அவன் எந்த பாகத்திலிருந்தாலும் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என்று கூறினாலும் அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமீபத்தில் வசித்தவன் என்று நான் கூறுவேன்.

மனித குலம் கூவிய கூக்குரலும் கோரிக்கைகளும் பக்தியும் பைத்தியக்காரத் தன்மையும். கடவுள்களுக்குத் திருப்தியை உண்டு பண்ணியதா? இல்லை. இல்லவே இல்லை.

மனித இனத்திற்கு வர விருந்த எந்த விபத்தாவது தவிர்க்கப்பட்டதா? புதிய வரப்பிரசாதம் ஏதும் கிடைத்ததா? இல்லை அப்படியிருக்க இந்த ஆண்டவனுக்கு - இந்தக் கண்மூடிக் கபோதி ஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்தலாமா? கைகூப்பி வணங்கலாமா? தேவை இல்லை.

தொகுப்பு: மு.இராசசேகரன், கணியூர்

Read more: http://viduthalai.in/page-7/79979.html#ixzz31GuwyzCr

தமிழ் ஓவியா said...


அவசியம்

கருத்து வேற்றுமை ஏற்படுவது மனித இயல்பு; இது இயற்கையே. நமக்கே சில விசயங்களில் நாம் முன்பு நினைத்தது, செய்தது தவறு என்று தோன்றும். இது அதிசயமல்ல. என்னதான் கருத்து வேறு பாடு இருந்தாலும் மனிதத் தன்மை யோடு நடந்துகொள்வதே முக்கியமும் அவசியமுமாகும். - (விடுதலை, 17.6.1970)

Read more: http://viduthalai.in/page-2/80033.html#ixzz31MgHlWwK

தமிழ் ஓவியா said...


குஜராத் தான் மாடல் என்றால், தமிழ்நாடு சூப்பர் மாடல்

- குடந்தை கருணா

ஜீன் டிரெட்ஜ் என்ற பொருளாதார பேராசிரியர், மோடி புளுகி வரும் குஜராத் மாடலை அம்பலப்படுத்தி உள்ளார். அவரது கட்டுரையில், இந்தியாவில் குறிப்பிடும்படியான 20 மாநிலங்களின் வளர்ச்சியை கணக்கில் கொண்டு வெளியிடப் பட்ட புள்ளி விவரங்களின் அடிப் படையில் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புள்ளிவிவரங்கள்படி, மனித வளர்ச்சி குறியீடு, குஜராத் 9-ஆவது இடம்; குழந்தைகள் ஊட்டச் சத்து, இறப்பு விகிதம், கல்வி, நோய் தடுப்பு என்ற நான்கு அளவீடுகளைக் கொண்ட குழந்தைகள், சிறுவர்கள் திறன் குறியீட்டில், குஜராத் 9-ஆவது இடம்; உணவு, வீடு, சுகாதாரம், பள்ளி, மருத்துவ வசதியை உள்ளடக்கிய வறுமையின் பல பரிணாம குறி யீட்டில் குஜராத் 9-ஆவது இடம்; தனி நபர் நுகர்வு, வீட்டு வசதி, உடல் நலம், கல்வி, நகர்மயமாக்கல், தொடர்பு, நிதி உள்ளடக்கம் போன்ற குறியீடுகளை உள்ளடக்கிய ரகுராஜன் குழுவின் அறிக்கைப்படி, ஒட்டு மொத்த வளர்ச்சிக் குறியீட்டிலும், குஜராத் 9-ஆவது இடம்; தனி நபர் செலவினத்தை உள்ளடக்கிய வறுமை மதிப்பீடு பற்றிய திட்டக் குழுவின் 2011-12 அறிக்கையின் படி, குஜராத் 10-ஆவது இடம்.

செயல் திறன் ஒரு பத்தாண் டுகளில் ஒரு மாநிலத்தில் எவ்வாறு முன்னேற்றம் பெற்றுள்ளது என் பதை 2000-ஆம் ஆண்டு வளர்ச்சியை ஒப்பிட்டு, அளித்த ரகுராஜன் குழு வின் அறிக்கையின்படி, குஜராத் மாநிலம் 9-ஆவது இடத்திலிருந்து, 12-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குஜராத்தைவிட மகாராட்டிர மாநிலம், எல்லா குறியீடுகளிலும், முன்னேறிய மாநிலமாக உள்ளது.

பின் ஏன் மகாராட்டிரா மாடல் என யாரும் குறிப்பிடுவதில்லை? குஜராத் மாடல் சிறந்தது என்று எவராவது கூறினால், தமிழ்நாடும், கேரளாவும், சூப்பர் மாடல் என அழைக்கப்படவேண்டும். பின் எவ் வாறு, குஜராத் மாடல் என மோடி யாலும், அவருக்கு சாமரம் வீசுவர் களாலும், இடைவிடாமல் சொல்லப் படுகிறது? இந்த ஒளியியல் பொய் தோற்றம், மக்களை குழப்புவதில் நரேந்திர மோடிக்கு உள்ள அசாதாரணமான திறமையும், அவருக்கு ஆதரவு தரும் சில பொருளாதார வல்லுனர்களும் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை என பேராசிரியர் ஜீன் டிரெட்ஜ் தனது கட்டுரையில் தெரி வித்து உள்ளார்.

மோடி போன்ற பொய்யுரையர்களை உணர்ந்து தான், 2000 ஆண்டு களுக்கு முன்னரே, வள்ளுவர் மெய்ப் பொருள் காண்பது அறிவு என எழுதி உள்ளார் போலும்.

Read more: http://viduthalai.in/page-2/80038.html#ixzz31MgboTqL

தமிழ் ஓவியா said...



திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் 100 கோடி பேர்

குழந்தைகள் அதிகளவில் மரணமடைவதற்கு இப்பழக்கமே காரணம்!

அய்க்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவல்

சென்னை, மே 10- உலகம் முழுவதும் 100 கோடி பேர் திறந்த வெளி யைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் அய்ந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகளவில் மரணமடைவ தற்கு இப்பழக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது என அதிர்ச்சி தகவலை அய்.நா. வெளியிட்டுள்ளது.

எவ்வளவுதான் அறிவி யல் முன்னேறினாலும், வசதிகள் வந்தாலும் இன்ன மும் உலகம் முழுவதும் 100 கோடி பேர் திறந்த வெளியைக் கழிப்பிட மாகப் பயன்படுத்துகின் றனர், என்று அய்க்கிய நாடுகள் சபை தெரிவித் துள்ளது.

காலரா, வயிற்றுப் போக்கு, டையோரியா, ஹெப டைடிஸ் ஏ, டைபாய்டு போன்ற நோய்கள் தோன் றவும் பரவவும் காரண மாக இருக்கும் திறந்த வெளி மலம் கழித்தல் பழக்கத்தை உலகம் முழு வதும் இன்றும் மக்கள் பின்பற்றுகிறார்கள். அய்ந்து வயதுக்கு உட் பட்ட குழந்தைகள் அதிக அளவில் மரணமடைவ தற்கு இப்பழக்கம் முக்கிய காரணியாகும். வருவாய் பேதங்கள் இதுபோன்ற பழக்கங்கள் தொடர்வதற் குக் காரணமாக இருக்கின் றன என்று அய்.நா. தெரிவித்துள்ளது.

சுகாதாரத்தைப் பேண வறுமை மிகுந்த நாடுகளில் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கும் முயற்சிகள் அதற்காகச் செலவழிக்கப் பட்ட பணம் எல்லாமும் வீண். மனப்பாங்கு மாற வேண்டுமே தவிர, கட்ட மைப்பைக் குறை சொல்லி பயனில்லை. பல இடங் களில் கழிப்பறைகள், தேவையற்றப் பொருட் களை வைத்திருக்கும் கிடங்குகளாகத்தான் பயன் படுகின்றன என அய்.நா. புள்ளியியலாளர் ரோல்ப் லூயென்டிக் தெரிவித் துள்ளார்.
திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த பல நாடுகள் இன்று அப்பழக்கத்தை கைவிட்டிருக் கின்றன.

1990களில் வியட்நாமி லும், வங்காள தேசத்திலும் மூன்றில் ஒருவர் இப்பழக் கத்தைப் பின்பற்றினர். எனி னும், தொடர்ந்த விழிப் புணர்வு நடவடிக்கை களால் 2012-இல் இப் பழக்கத்தை இந்நாடுகள் முற்றிலும் கைவிட்டிருக் கின்றன. 1990-இல் இருந் ததைவிட தற்போது திறந்த வெளியில் மலம் கழிப்ப வர்களின் எண்ணிக்கை 100 கோடியாகக் குறைந்திருக் கிறது. அந்த நூறு கோடியில் 90 சதவீதம்பேர் கிராமங் களில் வாழ்கிறார்கள்.

இன்னமும் 26 ஆப் பிரிக்க நாடுகளில் இந்தப் பழக்கம் பின்பற்றப்படு கிறது. இதில் நைஜீரியா மிக மோசமாகி வருகிறது. அங்கு 1990-இல் இப்பழக் கத்தைப் பின்பற்றுபவர் கள் 23 கோடியாக இருந் தனர். ஆனால் 2012இல் 39 கோடியாக அந்த எண் ணிக்கை உயர்ந்துள்ளது என்று அய்.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.

அய்.நா.வின் இந்த அறிக்கையில் இப் பழக் கத்தைப் பின்பற்றும் 60 கோடி பேருடன் முன் னிலை வகிக்கிறது இந்தியா.

இந்திய அரசு ஏழை களுக்குக் கழிப்பறை கட்டிக் கொடுக்க பல கோடிகளை செலவழித்துள்ளது. மத்தி யில் இருந்து பகிரப்பட்ட இந்தப் பணம் மாநிலங் களுக்குச் சென்றது. இதைச் செயல்படுத்த மாநிலங்கள் தங்களுக்கென தனி பாதையைப் பின்பற்றின. ஆனால் கிடைத்திருக்கும் தகவல்களைப் பார்த்தால், அந்தப் பணம் ஏழைகளைச் சென்றடையவில்லை என்று தெரிகிறது என்கிறார் லூயென்டிக்.

இந்தியாவில் மிகவும் அதிர்ச்சியளித்த விஷயம், திறந்தவெளியில் மலம் கழிப்பதைப் பின்பற்றும் பெரும்பாலானவர்களிடம் கைப்பேசியும் இருக்கிறது என்பதுதான் என்கிறார் உலக சுகாதார நிறுவ னத்தைச் சேர்ந்த மீரா நீரா.

2025-க்குள் இப்பழக் கத்தை ஒழிப்பது என்று இலக்கு நிர்ணயித்திருப்ப தாக அய்.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/80029.html#ixzz31MhVKVZG

தமிழ் ஓவியா said...


சந்தேகம்


பார்ப்பனரல்லாதார் இயக்கம்

1. தங்களைப் பார்ப்பனர்களில் சேர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கும் பார்ப்பனர் களுக்கும் ஆச்சார அனுஷ்டானங்களில் எவ்வித வித்தியாசமுமில்லை என்றும், தங்களுக்கும் பார்ப்பன உரிமை உண்டென்றும் கருதிக் கொண்டு இருப்பவர் களுக்கும், பார்ப்பன மதத்தையும், வேதத்தையும், புராணத்தையும், பார்ப்பன தெய்வங்களையும் காப்பாற்ற முயலுகின்றவர்களுக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் இடமோ, அல்லது தான் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையில் ஏதாவது உரிமைபெற அருகதையோ உண்டா?

2. யாராவது ஒருவர் தன்னை மற்றவர்களை விட உயர்ந்த ஜாதி என்றோ அல்லது சத்திரியன் என்றோ, வைசியனென்றோ, சூத்திரனென்றோ, பஞ்சமன் என்றோ, சொல்லிக் கொண்டு தன்னுடைய தனி ஜாதிக்கென்று தனி சின்னமோ, ஆச்சார அனுஷ்டானமோ உண்டு என்று சொல்லிக் கொள்பவனுக்குப் பார்ப்பனரல்லாதான் இயக்கத்தில் இடமோ பார்ப்பனர்களிடமிருந்து கைப்பற்றும் உரிமைகளில் பங்கு பெற பாத்தியமோ உண்டா?

3. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பது பார்ப்பனியத்தை நீக்கிய இயக்கமா? அல்லது பார்ப்பனர்களை நீக்கிய இயக்கமா?

4. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்றால், பார்ப்பனர்களிடம் உள்ள உத்தி யோகத்தையும் பதவியையும் மாத்திரம் கைப்பற்றுவது என்ற கருத்தை உடையதா? அல்லது பார்ப்பனியத்தை ஒழிக்க வேண்டுமென்ற கருத்தை உடையதா?

5. பார்ப்பனியத்தை வைத்துக் கொண்டு எவ்வளவுதான் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் குலைத்தாலும், பார்ப்பனியமானது, பார்ப்பனர்களை உண்டு பண்ணிக் கொண்டும், பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டும் இருக்காதா?

6. பணக்கார ஆதிக்கம் கூடாது என்பதாகக் கருதிக் கொண்டு நாம் எவ்வளவுதான் எல்லோருடைய சொத்துக்களையும் பிடுங்கி எல்லா மக்களுக்கும் சரிசமமாய் பங்கீட்டுக் கொடுத்தாலும் மறுபடியும் யாரையும் சொத்து சேர்க்காமல் பார்த்துக் கொள்ளத்தக்க ஏற்பாடு செய்யாவிட்டால் எப்படி மறுபடியும் பணக்கார ஆதிக்கம் உண்டாய் விடுமோ அதுபோலவே பார்ப்பனனிடமிருக்கும் உத்தியோகத்தையும் பதவியையும் அடியோடு கைப்பற்றி எல்லோருக்கும் சரிசமமாய் பங்கிட்டு கொடுத்துவிட்டு பார்ப்பனியத்தில் ஒரு கடுகளவு மீதி வைத்திருந்தாலும் மறுபடியும் பார்ப்பன ஆதிக்கம் வெகு சீக்கிரம் வளர்ந்து விடுமல்லவா?

7. பார்ப்பனரல்லாதார் இயக்கம் பார்ப்பனியத்தை ஒழிப்பதற்கு இடையூறாய் இருக்குமானால், அது உடனே அழிந்து போக வேண்டாமா? ஏனெனில், பார்ப்பனரல்லாதார் இயக்கம் இல்லாவிட்டால் பார்ப்பன ஆதிக்கம் ஒன்று மாத்திரம்தான் இருந்துவரும் என்றும், பார்ப்பனியத்தை ஒழிக்கும் கொள்கை யில்லாத பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் வேறுபல ஆதிக்கங்களும் ஏற்பட இடமுண்டாகும் என்றும், சொல்வது சரியா? தப்பா? உதாரணமாக, பார்ப்பனரல்லாத இயக்கத்தின் பலனாய் இயக்கத்தில் உள்ள பார்ப்பனாதிக்கத்தோடு இப்போது ஜமீன்தார் ஆதிக்கம், பணக்கார ஆதிக்கம், ஆங்கிலம் படித்தவர்கள் ஆதிக்கம், முதலியன பார்ப்பன ஆதிக்கத்தைப் போல் மக்களை வாட்டி வருகின்றது என்று சொல்லுவதற்கு ஆதாரம் இருக்கின்றதா இல்லையா?

- குடிஅரசு - துணைத் தலையங்கம் 06.01.1929

Read more: http://viduthalai.in/page-7/80019.html#ixzz31MiU6CKm

தமிழ் ஓவியா said...

எது நாஸ்திகமில்லாதது?

ருஷ்யா தேசத்தில் கொஞ்ச நாளைக்கு முன்பிருந்தே கடவுளைப் பற்றி பிரசங்கங்களோ உபதேசங்களோ, வணக்கங்களோ அவசியமில்லை என்பதாக ஒரு சங்கம் ஏற்பட்டு அது தாராளமாய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த வருஷத்திய கிறிஸ்து பிறந்த நாளை உற்சவமாகக் கொண்டாடக் கூடாதென்று வெகுபலமான பிரச்சாரம் செய்யப்பட்டு வந்ததில் முழுதும் வெற்றியடையாமல் போனதால் அடுத்துவரும் ஈடர் உற்சவத்தை அதாவது கிறிஸ்து மறுபடியும் உயிர் பெற்றெழுந்தநாள் உற்சவத்தை யாரும் கொண்டாடாமல் இருக்கும்படி இப்பொழு திருந்தே வேண்டிய பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றதாம். இதற்கு அங்குள்ள சர்க்காரும் இந்த இயக்கக்காரர்களை அனுசரித்து உத்திரவு போட்டு சர்க்கார் மூலமாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றதாம். இதற்காக அநேக பிரபுக்கள் லட்சக்கணக்காக ரூபாய்கள் கொடுத்து உதவியிருக் கின்றார்களாம்.எனவே, கடவுள் பிறந்தநாளையும் மறுபடியும் உயிர்த்து எழுந்த நாளையும் கொண்டாடக் கூடாது என்று சொல்லுவதும் சர்க்கார் மூலமாகவே அவற்றைப் பிரச்சாரம் செய்வதும் அங்கு நாஸ்திகம் என்று கருதப் படுவதில்லை.

நமது நாட்டிலே, சாமி தாசி வீட்டுக்குப் போகும் உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! சமணரைக் கழுவேற்றும் உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! குடம் குடமாய் நெய்யையும் வெண்ணையையும் கொண்டுபோய் நெருப்பில் போட்டு வீணாக்கும் கார்த்திகை தீப உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! வெடி மருந்துக்கும் அடுப்புக்கரிக்கும் காசைப் பாழாக்கும் தீபாவளி உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! இளங்குழந்தைகளைப் பாலில்லாமல் கஷ்டப்பட வைத்துவிட்டு குடம் குடமாய் பால் கொண்டு போய் கல்லின் மீது கொட்டும் பாலாபிஷேக உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! அரசனிடம் குதிரை வாங்க என்று பணம் பெற்று தன்னிஷ்டப்படி செலவழித்து விட்டு அரசன் குதிரை எங்கே என்று கேட்டால் நரியைக் கொண்டு வந்து குதிரை என்று காட்டி அந்நரி அரசனுடைய பழைய குதிரைகளையும் கடித்து கொன்றுவிட்டதுடன் அரசனும் அடிபட்ட உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம் வேறு ஒரு மதக்காரர் (பவுத்தர்) கோவிலை இடித்து விக்கிரத்தைத் திருடிக் கொண்டு வந்து உடைத்த உற்சவத்தை நடத்த வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! எனவே, நமது நாட்டுக்கு எந்த காரியம்தான் நாதிகம் அல்லாததோ நமக்கு விளங்க வில்லை. - குடிஅரசு - துணைத்தலையங்கம் - 13-01-1929 காங்கிரசுக் கட்டுப்பாடு

சட்டசபை தேர்தல் காலாவதியை சர்க்கார் ஒத்திப் போட்டுவிட்டதினால் காங்கிரசுக் காரர்கள் தங்களது சுயமரியாதையையும் அதிருப்தியையும் காட்டுவதற்கு அறிகுறியாய் இனிமேல் கூட்டப்படப் போகும் சட்டசபை மீட்டிங்களுக்கு மறு தேர்தல் வரை யாரும் போகக் கூடாது என்று எல்லா இந்திய காங்கிரசுக் கமிட்டியார் திரு.காந்தியவர்கள் யோசனைப்படி தீர்மானம் செய்து எல்லா மாகாணங்களுக்கும் சார்பு செய்தாய்விட்டது.

அதை எல்லோரும் ஒப்புக் கொண்டதாகவும் பத்திரிகைகளிலும் வெளிவந்து விட்டது. ஆனால் சென்னை மாகாண தமிழ்நாட்டு காங்கிரசுக்காரர்களான பார்ப்பனர்கள் அக்கட்டுப்பாட்டுக்குக் கட்டுப்பட முடியாதென்றும் தாங்கள் எல்லா இந்திய காங்கிரஸ் கட்டளையை மீறி சட்டசபைக்குப் போகப் போவதாகவும் இரகசியமாய் தீர்மானித்து இருக்கிறார்கள். காங்கிரஸ் சட்டசபைக்குப் போகும்படி கட்டளை இட்டால் வெகு பக்தியாய் அக்கட்டளையை நிறைவேற்றுவார்கள். வேண்டாமென்றால் கட்டுப்பாட்டை மீறுவார்கள். நமது பார்ப்பனர்களின் காங்கிரஸ் பக்தி நமது ஆஞ்சநேய ஆழ்வாருக்குக் கூட கிடையாதென்றே சொல்லலாம்.

குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 16-06-1929

Read more: http://viduthalai.in/page-7/80019.html#ixzz31MifUAia

தமிழ் ஓவியா said...

சர்க்காரின் மனப்பான்மையும் நமது நோக்கமும்

இவ்வார சட்டசபைக் கூட்டத்தில் திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரியார், திரு. ராமசாமி நாயக்கர் மதத்தையும் சமூகத்தையும் தூஷித்து, பிரச்சாரம் செய்தது, சர்க்காருக்குத் தெரியுமா? அந்தப்படி அவரைப் பிரசாரம் செய்ய விடலாமா? என்பதாக சர்க்காரை ஒரு கேள்வி கேட்டிருப்பதாய் தெரிய வருகின்றது. அதற்கு சர்க்கார் திரு. நாயக்கர், மதத்தையும், சமூகத்தையும் தூஷித்துப் பிரச்சாரம் செய்தது எங்களுக்குத் தெரியாது என்பதாகப் பதில் சொல்லி இருப்பதாகவும் தெரிய வருகின்றது. இந்த விஷயத்தில் சர்க்கார், உண்டு அல்லது இல்லை என்ற இரண்டில் ஒன்றைச் சொல்லாமல் தங்களுக்குத் தெரியாது என்று சொல்லி யிருப்பது சர்க்காரின் தந்திரத்தன்மையைக் காட்டுகின்றது. ஏனெனில், திரு.நாயக்கர் சென்ற மாதத்தில் வேலூரில் சுமார் 5,6 - கூட்டங்களில் பேசி இருக்கின்றார். வேலூர் மகா நாட்டிலும், சுமார் 15, 20 தீர்மானங்களுக்கு மேலாகவே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இவ்வளவு சங்கதிகளையும் சர்க்கார் உத்தியோகஸ்தர்களான சுமார், 4,5 - தமிழ் சுருக் கெழுத்துப் போலீஸ் அதிகாரிகள் ஒன்று விடாமல் எழுதிக் கொண்டு போயிருக்கின் றார்கள்.

அவைகள் சர்க்கார் குப்பைத் தொட்டியில் இன்னமும் இருக்கக் கூடுமென்றே நினைக்கின்றோம். அப்படியிருக்க, திரு. நாயக்கர் பேசியவைகள், சர்க்காருக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டது நாணயமான பதிலாகாது என்றே மறுபடியும் சொல்லுவோம். அன்றியும், திரு.சத்தியமூர்த்தி கேள்வி கேட்டபிறகாவது சர்க்கார், சி.அய்.டி. ரிப்போர்ட்டுகளைப் பார்த்துப் பதில் சொல்லியிருக்கலாம். அப்படிக்கொன்றுமில்லாமல் ஒரேயடியாய் தங்களுக்குத் தெரியாது என்று சொன்னதிலிருந்து சமயம் வரும்போது, அதாவது திரு. நாயக்கர் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் வரும்போது திடீரென்று அப்பொழுதுதான் இந்த விஷயங்கள் தெரிந்தவர்கள் போல் பாவனை காட்டிப்பிடித்து உள்ளே போட சவுகரியம் வேண்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலேயேதான் இப்படித் தந்திரமாகச் சொல்லியிருக்க வேண்டும் என்பதைத் தவிர அதற்கு நம்மால் வேறு காரணங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் நமக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. திரு.சத்தியமூர்த்தி சாதிரிகளும் கூட, திரு.நாயக்கர் வேலூரில் மதத்தையும் சமூகத்தையும் தூஷித்தார் என்பதைப் பற்றிச் சட்டசபையாரிடம் போய் முட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் நேராகவே அவருக்கு நமது கருத்தை வெளிப்படுத்தி விடுகிறோம். இதன்மேல் அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள அவருக்குப் பூரண சுதந்திரம் உண்டு என்பதையும் அவருக்கு ஞாபகப்படுத்துகிறோம்.

மத விஷயம்: மதவிஷயத்தில் நாம் இந்து மதமென்பதாக ஒரு மதமே கிடையாது என்பதோடு இந்துமதம் என்பதாக ஒன்று உண்டு என்றும் தாங்கள் அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்ற மக்களின் உணர்ச்சியையே அடியோடு ஒழித்து, மனித சமூகத்தின் வாழ்வு,. அறிவு, மானம், அன்பு, இரக்கம், பரோபகாரம் முதலிய ஒழுக்கங்கள் ஆகியவை களே முக்கியமானவை என்பதை உணரச் செய்ய வேண்டும் என்பதும், இதற்கு விரோதமாக போலி விதமான இந்து மதம் மாத்திரமல்லாமல், வேறு எந்தமதம் தடையாயிருந்தாலும் அவற்றையும் வெளியாக்குவதே நமது முக்கிய நோக்கமாகும்.

சமூக விஷயம்: சமூக விஷயங்களில் எந்த சமூகம் மற்றொரு சமூகத்தைவிட தாங்கள் பிறவியால் உயர்ந்தவர்கள் என்றும், எந்த சமூகமும் பொதுவாழ்க்கையில் மற்ற சமூகத்தைவிடத் தங்களுக்குச் சற்றாகிலும் உயர் பதவியும் அதிக சுதந்திரமும் அடைய பிறவியால் உரிமை உண்டு என்று பாத்தியம் கொண்டாடுகின்றதோ, எந்தச் சமூகம், சமூகத்தின் சுயமரியாதைக்கு இடையூறாய் இருக்கின்றதோ அதைத் திருத்திச் சமநிலையை ஒப்புக் கொள்ளச் செய்வதும், அது முடியாவிட்டால் அவற்றை அடியோடு அழிக்க வேண்டும் என்பதுமே எல்லாவற்றையும் விட முக்கிய நோக்கம் என்பதை வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அன்றியும் இம்முயற்சியில் ஈடுபடுவதில் கெஞ்சுவதையோ, அன்னியர் மனம் நோகுமே என்பதான கவலை கொள்ளுவதையோ, கொள்கையாய்க் கொள்ளாமல், உண்மையுடன் உள்ளதை உள்ளபடி எடுத்துக்காட்ட யாரும் பின்வாங்கக் கூடாது என்பதுவும் நமது முக்கிய நோக்கமாகும். நன்மைகளிடத்தில் விருப்பும், தீமைகளிடத்தில் வெறுப்பும் கொள்ளவேண்டியது பரிசுத்தமான மனித உணர்ச்சியெனக் கருதுவதால் அதையும் வலியுறுத்துவது அவசியமாகும். ஆனால் இவைகள் வெற்றிபெற பலாத்காரத்தையோ, குரோதத்தையோ, உபயோகிக்கக் கூடாது என்பது எந்நிலையிலும் ஞாபகக் குறிப்புக் கொள்கையாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். - குடிஅரசு - கட்டுரை - 10.02.1929

Read more: http://viduthalai.in/page-7/80019.html#ixzz31Mim9yeU

தமிழ் ஓவியா said...


நமோ இனிமேல் பிராமணர்.. சு. சுவாமியின் கொழுப்பு!


சென்னை, மே11- பாஜக பிரதமர் பதவி வேட் பாளர் நரேந்திரமோடியை பிராமணராக நியமிக் கிறேன் என்று அக்கட்சி யில் சமீபத்தில் இணைந்த சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடி பிற்படுத் தப்பட்ட ஜாதியை சேர்ந்த வர் என்கிறார்; அதையே அவர் பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜனதா கட் சியை கலைத்துவிட்டு சமீ பத்தில் பாஜகவில் இணைந்த சுப்பிரமணியசுவாமி தனது டுவிட்டர் வலைத்தளத்தில் ஒரு கருத்தை வெளியிட் டுள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:' நமோ இனிமேல் பிராமணர்.. சு. சுவாமி அப்பாயிண்ட் மென்ட்! எனக்கு இருக் கும் அதிகாரத்தை பயன் படுத்தி நான் நமோவை (நரேந்திரமோடி) பிராமண ராக நியமிக்கிறேன்.

அவ ருக்கு பிராமணருக்குரிய குணநலன்கள் இருப்பதால் இதைச் செய்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அவரைப் பின்பற் றுவோர் சிலர் பாராட்டி யும், சிலர் விமர்சனம் செய்து கீச்சுக்களை வெளி யிட்டுள்ளனர். டுவிட்டர் மோதல் உச்ச கட்டமாகிய நிலையில், மோசமான வார்த்தைகளில் சிலர் டுவிட் செய்ததாக கூறப் படுகிறது.

இதைய டுத்து அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு (?) தொடர சுப்பிர மணியசுவாமி முடிவு செய் துள்ளாராம். இது குறித்தும் இன்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள் ளார். ரூ.3 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடுக்க உள்ளதாக அவர் அதில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/80072.html#ixzz31SUc8wHo

தமிழ் ஓவியா said...

எல்லாம் சமஸ்கிருதமயமே!

வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்குட்டிகளுக்கு முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா எப்படியெல்லாம் பெயர் சூட்டியுள்ளார்? தாரா, மீரா, பீமா, நம்ருதா ஆதித்தியா, கர்ணா, உத்ரா, அர்ஜுனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா, நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்று இதுவரை பெயர் சூட்டியுள்ளார்.

பிள்ளைகளுக்கும் பெயர் சூட்டினாலும் ஜெயராம், ஜெய கிருஷ்ணா, ஜெயராஜ் இத்தியாதி... இத்தியாதி...

அம்மையாருக்கு தமிழில் பெயர் கிடைக்க வில்லையா - மனம் இல்லையா? சமஸ்கிருதப் பெயர் களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்தல்லவா சூட்டுகிறார்! ஒன்றே ஒன்று கண்ணே கண்ணென்று காவேரி மட்டும் ஒப்புக்குச் சப்பாணியாகப் பெயர் சூட்டியிருக்கிறார்.

திராவிடர் இயக்கத்துக்கு என்று ஒரு வரலாறு உண்டு பெயர் சூட்டுவதில்கூட மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது திராவிடர் இயக்கம் - தன்மான இயக்கம்!

அதன் அடிப்படையாகத்தான் நாராயணசாமி நெடுஞ்செழியன் ஆனார்; இராமையன் அன்பழகன் ஆனார்; சோமசுந்தரம் மதியழகன் ஆனார். கோதண்ட பாணி வில்வாளன் ஆனார்; ரெங்கசாமி அரங்கண்ணல் ஆனார்.

திராவிட இயக்கத்தில் ஊடுருவிய அம்மையாரோ ஆரிய மொழியான சமஸ்கிருதத்திலிருந்து பெயர்களைப் பொறுக்கி எடுத்துச் சூட்டிக் கொண்டு வருகிறார். தமிழர்கள் அடையாளம் காண்பார்களாக!

Read more: http://viduthalai.in/e-paper/80070.html#ixzz31SV7IzgF

தமிழ் ஓவியா said...

மீனாட்சித் திருக்கலியாணம்

அன்னை மீனாட்சி திருக்கல்யாணம் விழாக்கோலம் மதுரை - என்று ஒரு ஏடு 8 பத்தித் தலைப்பில் செய்தியை வெளியிட்டுள்ளது. வைரக்கல் பதித்த தங்கத் தாலியை அம்மன் கழுத்தில் சுவாமி அணிவித்தாராம்.

இது சுத்தப் பொய், புரட்டு, பித்தலாட்டம் அல்லவா? கடவுளான சுந்தரேஸ்வரரா அணிவித்தார்? அர்ச்சகப் பார்ப்பான் தானே அணிவித்தான்! பக்தர்கள் இதுபற்றி சிந்திக்கக் கூடாதா? அர்ச்சகப் பார்ப்பான் தாங்கள் போற்றும் கடவுளச்சிக்குத் தாலி கட்டும்போது கூச்சல் போட்டுத் தடுத்து இருக்க வேண்டாமா பக்தர்கள்?

மனிதர்களுக்குள் தான் தாலி கட்டும் சமாச்சாரங்கள் என்றால், கடவுளுக்கு அது எப்படி வந்தது? யாராவது சிந்தித்தார்களா? அப்படியென்றால் மனிதனால் கற்பிக்கப்பட்ட கடவுள்மீது தனது பழக்க வழக்கத்தை மனிதர்கள் திணித்து விட்டார்கள் என்பது இப்பொழுது விளங்கிடவில்லையா?

பிள்ளை விளையாட்டு என்று வடலூர் இராமலிங் கனார் கூறியது சரிதானே?

வருஷா வருஷம் தாலி கட்ட வேண்டுமா? போன வருஷம் கட்டிய தாலியை எவன் அடித்துக் கொண்டு போனான்? என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/80070.html#ixzz31SVYeIhk