Search This Blog

2.12.14

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் செய்தி - அரிய முத்துக்கள்!


வரும் டிசம்பர் 2-(2014) எனது 82ஆவது பிறந்த நாள் என்பதை - எனக்கு நினைவிருப் பதைவிட தோழர்கள் நினைவூட்டுகிறார்கள்! மகிழ்ச்சியே!!
அனைவருக்கும் பிறந்தநாள் என்பது ஆண்டு தோறும் வருவது வாடிக்கைதானே!


குழந்தைகளுக்காக அதைக் கொண்டாடும் போது ஏற்படும் தனி குதூகலம்- எல்லையற்ற இன்பம் - முதுமையில் நமக்கு பிறந்தநாள் வருகையால் எளிதில் ஏற்படுவதில்லை.

வயது ஆகி விட்டதே என்பது ஒரு புறம்;முதுமை அதன் முத்திரையைப் பதிப்பித்து, நமது உடலின் பல உறுப்புக்களை வலுவிழக்கச் செய்கிறதே -நம்மோடு இன்றைய உலகின் இளைஞர்களோடு இணைந்து செல்ல முடியாத அளவுக்கு - தலைமுறை இடைவெளி - ஏற்படு கிறதே என்ற கவலையும் நம்மை வருத்துகின்றன.

பிறருக்குச் சுமையாக வாழக் கூடாது!

ஒருவர் நீண்ட காலம் வாழவேண்டும் என்பதைவிட, நோய் இல்லாமல் வாழ வேண்டும்; பிறரை எதிர்பார்த்து வாழ வேண்டும் என்ற நிலை ஏற்படாமல் இருந்தால் அதைவிட நல்வாழ்வு வேறு ஏது? மற்றவர்களுக்கு நம்மால் தொல்லை - எவ்வளவுதான் நெருக்கமாக இருப்பவர்கள் ஆனாலும்கூட - ஏற்படும் சுமைகளாக நாம் அமைந்து விடக்கூடிய நிலை தவிர்க்கப் படுதலே சாலச் சிறந்தது!

முதுமையின் தாக்கம் -பிறரின் தூக்கத்தையும் கெடுக் காமல், ஏக்கத்தையும் வரவழைக்காமல், நமக்கு நாமே கூடுமானவரை நமது அன்றாடப் பணிகளை, கடமைகளை ஆற்றி மகிழ்வது- மிகவும் ஆக்கத்தைத் தருவதாகும்!
நல்ல பகுத்தறிவாளர்களாகவும், சுயமரியா தைக்காரர்களாகவும் உள்ள நமக்கு அனைத்துச் செயல்களிலும் தெளிவும் உண்டு; துணிவும் உண்டு, ஏன் கனிவும் உண்டு நமது பார்வையால்.


தனி வாழ்வு சிறுத்து பொது வாழ்வு பெருத்த பணி!


எண்பது ஆண்டுகால  எனது எளிய வாழ் வில் - தனி வாழ்வு சிறுத்து, பொது வாழ்வு பெருத்த இடத்தைப் பெற்றுள்ள வாழ்வு எனக்கு மகிழ்ச்சியே!
எனக்கு தீராத மனக்குறை எதுவும் இல்லை. என் வாழ்வின் பேறு அது என்று மகிழ்கின் றேன். தவிர, அய்யோ தனி வாழ்க்கை சுருங்கி விட்டதே, மிகப் பெரிய வசதி வாய்ப்புகளை - சம்பாதனை களை இழந்து விட்டோமே, என்ற நினைப்பே என்றும் எனது உள்ளத்தில் தோன்றியதே இல்லை!


நான் பெற்று மகிழும் பெரும் பேறு என் அறிவுக் கண்ணைத் திறந்து மான வாழ்வை எனக்கு அருளிய எனது ஈடு இணையற்ற வழிகாட்டி- ஒளியூட்டியத் தலைவர் தந்தை பெரியாருடன் இருந்து பணி செய்து, பயன்பட்டு - அவர்தம் நம்பிக்கையைப் பெற்ற பேற்றைவிட, பெறுதற்கரிய பெரும் செல்வம் வேறு எதுவும் இல்லை என்று உறுதியாக நம்புகிறவன் யான்.


வாழ்வில், எனது ஞானாசிரியருக்கு அவரது இறுதிக் காலத்தில், நான் ஏதோ சிறிதளவில் பயன்பட்ட வாய்ப்பு எனக்குக் கிடைத் ததே என்ற மகிழ்ச்சியே - எனது நிரந்தர வைப்பு நிதியாகும்.

எனது சுயமரியாதை சுகவாழ்வை நிம்மதியாக வாழ உதவுகிறது.


தனி மனித விரோதம் கிடையாது!

தவறுகள் செய்திருக்கலாம். தவறே செய்யாத மனிதர்கள் கிடையாது என்பதே  உலகியல்; ஆனால் அது நாணயக் கேடாக ஒரு போதும் இருந்திருக்காது; எனது எந்த தவறுக்கும், உள்நோக்கம் இருந்திருக்க முடியாது. தனி மனித விரோதம் தலை தூக்கியது கிடையாது. சிலரின் கொள்கைகளே என் எதிரிகள். நம் அய்யா அவர்கள் கூறிய அறிவுரைகள் அனைத்தும் அனுபவத்தில் கனிந் தவை - ஆய்வில் முதிர்ந்தவை - அறிவில் உயர்ந்தவை. நாம் அறியாத பலவற்றை அறிந்து கொள்ள உதவியவை!


வெற்றியா - தோல்வியா? - கவலைப்படாதே!

அவற்றில் இரண்டு முக்கியம். ஒரு செயலில் நீங்கள் - லட்சியக் கண்ணோட்டத்தோடு செய்ய இறங்கும்போது அதில் வெற்றி கிட்டுமா? தோல்வி கதவை தட்டுமா?, என்று ஆராய்ந்து அலசுவதைவிட, அச்செயல் தேவையா? தேவை இல்லையா? பொது நலக் கண்ணோட்டத்தில் என்ற எண்ணமே நம்மை வழி நடத்திச் செல்ல வேண்டும்.

நல்ல லட்சியத்திற்கும் அதற்குரிய விலையும் கொடுத்தே வாங்க வேண்டும். எதனையும் இலவசமாகப் பெறுதல் கூடாது.

எதனையும் கஷ்டப்பட்டு - அதிக விலை கொடுத்து வாங்கும்போதுதான் அதன் உயர் சிறப்பின் அருமை நமக்குப் புரியும்

இதனால் மிசாக் கொடுமைகூட என்னைத் தளர வைக்க வில்லை!
இந்த வழிகாட்டும் நெறிகளே - எவ்வளவு துயர்களும் துன்பங்களும், எதிர்ப்புகளும் நான்கு முறை கொலை முயற்சிகளும் என்னைப் பயப் பட வைக்கவில்லை; மேலும் உறுதியாக்கிடவே செய்தன!

அவை மாமலைகளானாலும் - நமக்குக் கடுகுகளாகவே தெரிந்தன. நம் லட்சியப் பயணம் தடைப்படவில்லை.

எனது வாழ்விணையர் முதல் குருதிக் குடும் பத்தவர் அனைவருமே கொள்கைக் குடும்பத்த வரும் ஆவர்.

அதைவிட பெரு மகிழ்ச்சிதான் வேறு என்ன?

கொள்கைக் குடும்பத்தின் அரிய ஒத்துழைப்பு

கொள்கைக் குடும்பத்தவர்களின் அருமை இருபால் தோழர்கள் தரும் ஒத் துழைப்பு, பொழியும் அன்பு - காட்டும் கட்டுப்பாடு மேலும் என்னை இளமை யாக்கி, பணிசெய்து உழைத் திட ஊக்கப்படுத்தும் ஆணைகளாக உள்ளன.
எந்தப் பணியில் நமக்கு ஈடுபாடும் உறுதிப்பாடும் உள்ளதோ அந்தப் பணி எளிதாக முடிக்கும் பணியாவது இயல்பு தானே!

பிரச்சாரம் - போராட்டம்!

இயக்கப் பணிகளைப் பொறுத்தவரை நம்மை எதிர்நோக்கும் சவால்கள் அநேகம்.

திரிபுவாதங்களைத் தடுத்து, துரோகங்களைத் தூளாக்கி, கொள்கைக்காக பிரச்சாரம் - போராட்டம் ஆகிய இரு முனைகளிலும் இடை யறாது வினைமுடித்தல் நமது தொடர் பணியாகும்.

இவ்வாண்டு ஜாதி ஒழிப்புக்கான (இதில் தீண்டாமை  ஒழிப்பு, சமூகநீதி அடக்கம்) முனைப்பான திட்டங்களில், போராட்டங்களில் நம்மை ஈடுபடுத்தி, எத்தகைய விலையையும் தர ஆயத்தமாக வேண்டிய தருணம் இது!
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, குறிப்பாக இளைஞர் - மகளிர் - மாணவர் முதல் அனைத்துத் தரப்பினரையும் களத்தில் இறக்கிடும் திட்டங்கள், அடுக்கடுக்காக உள்ளன! நமக்காக சிந்தித்தவர் பெரியார்; செயலாற்று வோர் நாம்!

நமது எதிர்நீச்சல் பணி மேலும் முன்னிலும் வேகமாக தொடர்ந்தாக வேண்டும்.


நம் வாழ்க்கையின் தனிச்சிறப்பு என்ன தெரியுமா?

எதிர்பாராததை எப்போதும் எதிர்பார்த்து இருப்பதேயாகும்.
உழைக்க, களம்காண, ஏறிடும் வயது முக்கியமல்ல - சிறீடும் எதிர்ப்பே நமது உரம்! அதனைச் சந்தித்து வெற்றியைப் பறிப்பதே நமது திறம்!!
எனது உடல் நலத்தை, உழைக்க வசதி யாக்கிட உதவிடும் எனது வாழ்விணையர், மருத்துவ நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி கடன் என்றும் உண்டு.

தந்தையும் தாயும் இன்று உருவமாக நின்று நமக்கு ஆணை வழங்க இல்லா விட்டாலும் - இயக்கத் தூண்களாக வாழ்ந்த பலர் முதுபெரும் பெரியார் தொண்டர் வரலாறாகி விட்ட நிலையில் - அவர்தம் நெறிகளும்,  கொள்கை களும், விளக்கங்களும் எம்மை வழி நடத்துவ தோடு, நான் அமர்த்துள்ள தோள்கள் வலிவு மிக்கவை என்பதால், என் பணி மானம் பாராது, நன்றி பாராது, புகழ் தேடாது, இலட்சியப் பணி யாக உங்கள் அனைவரின் ஆதரவு, அர வணைப்புடன் என்றும் தொய்வின்றித் தொடரும்!

இறுதி மூச்சு வரை இந்தப் பணியே!

இறுதி மூச்சடங்கும் வரை இந்தப் பணியை விட்டால் எனக்கே  ஏது வேறு பணி?

அனைவருக்கும் தலை தாழ்ந்த நன்றி! நன்றி!!

உங்கள் தொண்டன், தோழன்


-------------------கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம் சென்னை 1.12.2014

 *********************************************


தந்தை பெரியாரின் மனிதநேயக் கொள்கைகளைத் தரணியெங்கும் பறைசாற்றி வரும் திராவிடர் கழகத் தலைவர், விடுதலை நாளேட்டின் ஆசிரியர், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 82ஆம் ஆண்டு பிறந்த நாளை (2.12.2014) முன்னிட்டு அவரது தனித் தன்மைகளை வழங்குவதில் பெருமைப்படுகிறோம். கி    ஒரே இயக்கம், ஒரே தலைவர், ஒரே கொடி, ஒரே கொள்கை எனத் தடம் மாறாத் தலைவர்.

-> அய்யாவின் தத்துவத்தை அகிலம் முழுதும் பரப்புகிறவர்.

-> பெரியாரைப் பற்றி பேசாத நாள் பிறவா நாள் எனக் கருதுபவர்.

-> பிரச்சாரம், போராட்டம் என்று இயக்கத்தைத் துடிப்புடன் வைத்திருப்பவர்.

-> கொள்கையில் சமரசம் கொள்ளாமல் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் தகுதியுள்ள தலைவர்.

-> தமிழர்களை நோக்கி தமிழா இன உணர்வு கொள்! எனும் தாரக முழக்கம் தந்தவர்.

-> 13 வயதில் இவர் ஆற்றிய வீரவேக உரையைக் கேட்டு பெரும் பேச்சாளரான அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்தின் திருஞானசம்பந்தன் என்று தொலைநோக் கோடு கூறிய பாங்கு! அந்த வயதிலேயே வெளிமாவட் டங்களுக்குப் பேச அழைக்கப்பட்ட விந்தை.

-> தமிழ்நாட்டு மேடையில் மேசைமீது ஏறிநின்று தமது சொற்பொழிவைத் தொடங்கிய முதல் சொற்பொழி வாளர். தன்னை மேசைமீது ஏற்றிய இந்த இனத்திற்கு நன்றிக் கடனாக அதைத் தன் தோள்மீது 70 ஆண்டுகள் சுமந்து வருபவர்.

-> படிப்பில் முதல் மாணவராய்த் திகழ்ந்து தங்கப்பதக்கம் வென்றவர்.

-> இளைஞர்களுக்கு முன் மாதிரியாக (ஸிஷீறீறீ விஷீபீமீறீ) தம்மை அப்படியே பின்பற்றும் அளவிற்கு அப்பழுக் கில்லா தூய தலைவர்

-> புத்தகத் தேனீ - நற்சிந்தனை நூல்களைத் தேடித்தேடிப் படித்து அவற்றைப்  பிறர் நுகரத் தருபவர்.

-> தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பொருள் பொதிந்த, எப்போதும் ஆதாரத்தை எடுத்துக் காட்டி உரையாற் றும் தேர்ந்த சொற்பொழிவாளர். தமிழிலும் ஆங்கிலத்தி லும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

-> தனி நபரை விமர்சிக்காதவர்.  தனிநபர் பகைமை கொள்ளாப் பண்பாளர்.

-> மாற்றுக் கருத்துடையோரையும் மதிக்கும் பண்பாளர்.

-> 1983 முதல் தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்குத் தனிஈழம் ஒன்று மட்டுமே தீர்வு என்று தெளிவுபடுத்தி, இன்று வரை அதை முன்னிறுத்தியே பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் செய்பவர். அரசியல் பலன் கருதி ஆர்ப்பரிக்கும் தலைவர்கள் மத்தியில் ஆழ்மன உணர்வோடு ஆதரிக்கும் ஈழப் போராளி.

-> இந்திய அரசியலில் சமூகநீதி அணி - சமூகநீதிக்கு எதிரான அணி என்னும் புதிய சமூக அரசியல் நிலைப் பாட்டை ஏற்படுத்திய - நிறுவிய சமூகக் காவலர்.

-> இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் பெரியார் மய்யம் நிறுவி சாதனை படைத்தவர்.

-> உலகளவில் பெரியார் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்க உலக மனிதநேய அமைப்பில் (மி.பி.ணி.ஹி.) 1994  முதல் திராவிடர் கழகத்தை உறுப்பினராக இணைத்து சாதனை படைத்தவர்.

-> 95 அடி உயர தந்தை பெரியார் சிலையுடன் கூடிய பெரியார் உலகம் தமிழ்நாட்டில் நிறுவ வித்திட்டு நாளும் அதற்காக உழைத்து வருபவர்.

-> தமிழகம் மட்டுமன்றி வெளிநாடுவாழ் தமிழர்களிடத்தும் உருக்கமான, நெருக்கமான தொடர்பு கொண்டிருப்பவர்.

-> தலை தூக்கும் தமிழர்களைத் தட்டிக்கொடுத்து உலகறியச் செய்வதில் ஒப்பற்றவர்.

-> கட்சிகளைக் கடந்து தமிழர்களால், மக்களால் மதிக்கப் பெறும் தலைவராக இருந்தாலும், பெரியார் தொண் டர்க்குத் தொண்டன் என்பதில் பெருமகிழ்வு பெறு பவர்.

-> உலகின் பல நாடுகளிலும் பரப்புரை நிகழ்த்தியவர்.

-> தூய தமிழ்ப் பெயர்களை மட்டுமே சூட்டுபவர். தன்னேரில்லாத் தமிழ்ப் பற்றாளர் என்றாலும் தமிழர் ஆங்கில அறிவாற்றலைப் பெறவேண்டியதன் அவ சியத்தை உணர்த்துபவர்.

-> சிக்கனத்தை வற்புறுத்தும் தலைவர். கல்வி வளர்ச்சிக்கு வாரி வழங்கும் வள்ளல்.

-> செல்லும் இடமெல்லாம் பெற்றோரையும், தம் வாழ் வின் உயர்வுக்கு உறுதுணையாயிருந்த பெருமக்களை யும் பேணிக் காப்பதோடு அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று சொல்லிவரும் தலைவர்.

-> இதழியல் வரலாற்றில் தொடர்ந்து 52 ஆண்டுகளுக்கு மேலாக -உலகின் ஒரே பகுத்தறிவு நாளே டாம் விடுதலை ஏட்டின் ஆசிரி யராக சாதனை படைத்து வரு பவர்.

-> நான்கு பக்கங்களாக இருந்த விடுதலையை 8 பக்கங்களாக்கி ஆஃப்செட்டில் பல வண்ணங் களில்  அச்சிட்டு, பூத்துக் குலுங் கும் புதுமலராக நுகரச் செய்த வர். திருச்சியிலும் இன்னொரு பதிப்பு.

-> படித்ததைப் பகிர்ந்து கொள் வதில் நாட்டம் உடையவர். வாழ்வியல் சிந்தனைகள்- என்னும் புதுவகை இலக்கியத் துறையைத் தமிழில் உருவாக்கி உலக மக்களுக்கு நல்வழிகாட்டி வரும் உத்தமத் தலைவர்.

-> அரசியலா, பொருளாதாரமா, எழுத்தா, பேச்சா, சரித்திரமா, உளவியலா, உடலியலா, மருத்து வமா, உணவியலா எல்லா அறிவும் படைத்த பல்துறை வல்லுநர்.

-> தாழ்த்தப்பட்டவர் ஒருவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்று முதன்முதலில் ஓங்கிக் குரலெழுப்பிய தலைவர். அதன் பயனாக மாண்புமிகு கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவரானதைக் கண்டு மகிழ்ந்தவர்.

-> காவிரி நீர் உரிமை, முல்லைப் பெரியாறு நீர்மட்ட உயர்வு, கச்சத் தீவு மீட்பு, சேதுக் கால்வாய்த் திட்டம் உள்ளிட்ட தமிழக உரிமைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்.

-> 1986இல் நாக்பூர் பல் கலைக்கழகத்தில் அம்பேத்கர் பற்றி இவர் ஆற்றிய சொற் பொழிவு (ணிஜ்மீஸீவீஷீஸீ லிமீநீக்ஷீமீ அப்பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க் கப்பட்டுள்ளது.

-> 1988இல் உலகிலேயே பெண்களுக்கான முதல் பொறியியல் கல்லூரியை தஞ்சை வல்லத்தில் தொடங் கியவர்.

-> எம்.ஜி.ஆர் முதல மைச்சராக இருந்தபோது, அவரால் கொண்டுவரப்பட்ட 9000/- ரூபாய் வருமான வரம்பு தீமைகளை விளக்கி, அவருக்கு புரிகின்ற வகை யில் எடுத்துரைத்து, அந்த ஆணையைத் திரும்பப் பெறச் செய்ததோடு, தம் அறி வுநுட்பத்தால் இடஒதுக்கீட்டு அளவையும் உயர்த்தும்படி செய்த பெருமை இவருக்கு மட்டுமே உரியது!

-> சமூக நீதிக்கு நீதிமன் றங்கள் மூலம் தமிழ்நாட்டில் 69ரூ இடஒதுக்கீடுக்கு தடை ஏற்பட்டபோது, இடஒதுக்கீடு நீடிப்பதற்கான சிறப்பு சட்ட முன்வரைவு (31சி) உரு வாக்கி தமிழக அரசுக்குக் கொடுத்து சமூகநீதி காத்தவர் இவரே!

-> தொண்டறம்  மான மிகு முதலிய சொற்களைத் தமிழுக்குத் தந்தவர்;

-> அனைத்துச் ஜாதியி னரும் அர்ச்சகராகும் உரி மைக்காக தொடர்ந்து போரா டுபவர். அதன் உட்பொருள் உணர்ந்த சமூக மீட்பர்.


-> சென்னை பெரியார் திடலில் இயங்கிவரும் பகுத் தறிவு ஆய்வு நூலகத்தைச் சிறப்பாக நிறுவியதோடு, தாம் சேர்த்து வைத்திருந்த பத்தா யிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்களை அந்த நூலகத் திற்கு அன்பளிப்பாக வழங்கி எல்லோருக்கும் வழிகாட்டி யவர்.


-> பெரியாரின் தத்துவங் களை ஆங்கிலம், பிரெஞ்சு முதலான உலக மொழிகளி லும், இந்தி, ஒரியா, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள் ளிட்ட  இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்துப் பரப்புவ துடன், தந்தை பெரியாரை உலக மயமாக்கி வரும் ஒப் பற்ற தலைவர்.


-> தந்தை பெரியார் வாழ்க்கையை திரைக்காவி யமாகத் தயாரித்து வெளி யிட்டு வெற்றிபெறச் செய்த சாதனையாளர்.

-> விடுதலை நாளிதழை - தமிழ் நாளிதழ்களிலேயே முதன்முதலில் இணைய தளத்திற்குக் கொண்டு சென்று உலகமெலாம் விடுதலையைப் பரப்பிய பெருமைக்குரியவர்.

-> வணிக ஏடுகளுக்கு நிகராக கொள்கை ஏட்டை வடிவமைத்த வியப்புக்குரியவர்.

-> தந்தை பெரியார் காலத்தில் இருந்த கல்வி தொடர்பான நான்கு நிறுவனங்களை இப்பொழுது, பல்கலைக் கழகம் உள்பட 50 நிறுவனங்கள் அளவுக்கு வளர்த்து பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மேன்மை அடைய வழிசெய்த மேலாண்மைத் திறன் மிக்கவர்.

-> பல மொழிகளிலும்  அலை அலையாக வெளியீடுகள், 1949 வரை குடிஅரசு தொகுப்பு, தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு தொடர்ச்சி. பழைய நூல்களை புதிய பொலிவிலும், புதிய நூல்களை உருவாக்கியும் வருபவர். இவரது கீதையின் மறுபக்கம் என்ற ஆய்வு நூல் எதிரியும் வியக்கும் ஈடு இணையற்ற நூலாகும்.


பெரியார் அறக்கட்டளையை வருமான வரித்துறை மூலம் அழித்துவிட முயன்ற ஆரிய சூழ்ச் சியை முறியடித்து, அறக்கட்டளைதான் என்று வருமான வரி தீர்ப்பாயத்திடமே (இரு நீதிபதிகளும் பார்ப்பனர்கள்) தீர்ப்புப் பெற்ற தீரர். வருமானவரித் துறையிடம் கட்டிய பணத்திற்கு வட்டி போட்டுத் திரும்பப் பெற்று வாகைசூடிய முதல் வீரர்!


-> மண்டல் குழுப் பரிந்துரைக ளைச் செயல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தி 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்தி, இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு வழி செய்தவர். ஆனாலும் தன்முனைப்பு இல்லாமல் தன் சாதனையை கூட்டுப்பணி என்று அடக்கத்தோடு கூறி சமூகப் போராளிகளுக்குப் பெருமை சேர்த்தவர்.

-> 1950இல் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவராக இருந்தபோது கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என நீதிமன் றங்கள் உத்தரவிட்டன.  இதைக் கண்டித்து தந்தை பெரியார் அவர்கள் கட்டளைப்படி வேலை நிறுத்தப் போராட்டமும், தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரமும் செய்தவர்.
-> இனத்திற்கு எதிரான கேட்டை முதலில் கண்டறிந்து  முறியடிக்க முந்துபவர்.
-> சிக்கலான நேரங்களில் இவர் கருத்தையே எல்லோரும் எதிர்நோக்கிக் காத்திருப்பர். இவர் முடிவு என்றும் தோற்றதில்லை.
-> 1957இல் ஜாதியை ஒழிப்பதற்காக நடைபெற்ற அரசி யல் சட்ட எரிப்புப் போராட்டத்திற்கு, தீ வைக்கப்பட வேண்டிய சட்டப் பகுதியை தொகுத்தளித்தவர்.
-> தொடர்ந்து ஜாதி  ஒழிப்பு மாநாடுகளை நடத்தியும், ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழாவான மன்றல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து  ஏற்பாடு செய்தும், ஜாதி ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்.
-> மூன்று முறை இதயம் திறக்கப்பட்ட பின்பும் தனது பகுத்தறிவுப் பயணத்தை விடாது தொடர்ந்து சோர்வற்று உழைக்கும் உறுதியாளர்.
-> நரிமணம் பெட்ரோலுக்கும் நெய்வேலியின் நிலக்கரிக் கும் கடுமையாய்ப் போராடி தமிழ்நாட்டுக்கு ராயல்டி பெற்றுத் தந்தவர். நுழைவுத் தேர்வை ஒழிக்க தொடர்ந்து போராடி கிராமப்புற மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றியவர். திடீர் திடீர் என்று கிளப்பப் படும் வதந்திகளாலும்,  சூரிய கிரகணத்தில் சாப்பிடக் கூடாது. மாயன் காலண்டரின்படி உலகம் அழிந்து விடும். பிள்ளையார் பால் குடித்தார் உள்ளிட்ட புரட்டு களை ஒழிக்க, களத்தில் இறங்கி விளக்கம் அளித்து மக் களின் அறியாமையையும் அச்சத்தையும் போக்கியவர்.
-> ராமஜென்மபூமி என்று இந்தியா முழுவதும் மதவெறி சக்திகள் கலவரத்தைத் தூண்டியபோது, மதவெறியை மாய்ப்போம். மனிதநேயம் காப்போம் என்னும் முழக் கத்தோடு தமிழ்நாடு முழுவதும் தொடர் பிரச்சாரத்தை நடத்தி, தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டியவர். எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்தவர்.

->  பெரியார் பற்றிய திரிபு வாதங்களை தவிடுபொடி ஆக்கி, திரிபுவாதிகளின் சூழ்ச்சியை - நோக்கத்தை முறியடித்தவர். உண்மைகளை உலகறியச் செய்பவர்.

-> யாருக்கும் எளிதில் கிடைக்காத பாராட்டும், நம்பிக்கையும் பெரியாரிடம் இவருக்கு மட்டுமே கிடைத்த பேறு! பெரியாரின் உண்மை மாணவர் என்ற உயர் தகுதி பெற்ற ஒரே மனிதர்.

-> தமிழர் தலைவர் கி.வீரமணி - மோகனா இணையர் வாழ்க்கை ஒப்பந்த விழா தென்னாட்டுத் திருவிழா என புரட்சிக் கவிஞரால் பாடப்பட்ட பெருமை இவரது இளமைத் தியாகத்திற்கு கிடைத்த பரிசு.

-> அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் பெரியார் பன்னாட்டமைப்பு  இவரது பெயரில், சமூக நீதிக்கான கி.வீரமணி விருது 14 ஆண்டு களாகத் தொடர்ந்து ஆண்டுதோறும் வழங்கப்படுவதும் அதை இந்தியப் பிரதமரே பெற்றதும் இவரது பெருமைக்கு எடுத்துக்காட்டு.

-> 72 ஆண்டு பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரருக்கு 82ஆம் ஆண்டு பிறந்த நாள். இதைவிட இவரது பெருமைக்கு வேறு என்ன வேண்டும்!

தந்தை பெரியார் கொள்கைகள் தான் இந்த மண்ணுக் குரியவை!  
சமுதாயத்தின் எல்லாத் தடத்திலும், தளத்திலும் தலைகீழ் புரட்சியை நடத்தியவை. பெரியார் மறைவுக்குப் பிறகு அந்தக் கொள்கை அடிப்படையில் பணியாற்ற விரும்புவோர் நாட்டில் நல்லது நடக்க வேண்டும்; பெரும்பலன்கள் வேண்டும்; பெரியாரியல் வெற்றி பெற வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் அணி வகுத்துக் கட்டுப்பாட்டுடன் பணியாற்ற வேண்டியது மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் இயங்கும் திராவிடர் கழகத்தில்தான்.


உங்கள் வாழ்த்துகளையும், கருத்துகளையும் தெரிவிக்க:www.viduthalai.in/asiriyar82

email: dkheadquarters@gmail.com
97501 34599 | 97109 44832 | 94442 10999 | 95788 96822

ஆசிரியர் 82 என துண்டறிக்கையாக அச்சடித்து தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

                           -------------------------"விடுதலை” 1-12-2014

54 comments:

தமிழ் ஓவியா said...

பூமியின் அபரிமிதமான கனிமத்துக்கு பிரிட்க்மனைட் எனப் பெயர் சூட்டல்


பூமியின் அபரிமிதமான கனிமத்துக்கு பெயர் சூட்டினர் விஞ்ஞானிகள். இது வரை பெயர் சூட்டப்படாத, பூமி யின் மிக அபரிமிதமான கனிமத்துக்கு பிரிட்க் மனைட் என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

பெர்ஜி பிரிட்க்மேன் என்ற பிரபல புவியியல் அறிஞரின் நினைவாக இப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூமியின் மொத்த அளவில் 38 சதவீதமும், பூமியின் கீழ் அடுக்கில் (மேன்ட்டில்) 70 சதவீதம் வரையிலும் பிரிட்க்மனைட் உள்ளது. இக்கனிமத்தை நன்றாக அறிந்து கொள் ளும் வகையில் மிக அழுத்தப் பரிசோ தனைகள் செய்வதில் பெர்ஜி பிரிட்க்மேன் முன்னோடியாக விளங்கினார். எனவே இந்தக் கனிமத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரிட்க்மனைட் மிகவும் அடர்த்தியான மெக்னீசியம் அயர்ன் சிலிகேட்டால் ஆனது. இதுவரை இக்கனிமம் பெரோவ்ஸ்கைட் என்று அழைக்கப்பட்டு வந்தது. சர்வதேச கனிம வியல் சங்கத்தின் விதிகளின்படி முறை யான பெயர் வைக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் 1879-ல் விழுந்த விண்கல்லில் கிடைத்த மாதிரியை கொண்டு இக்கனிமம் தொடர் பான ஆய்வில் அமெரிக்க புவியியல் அறிஞர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆய்வு வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/92130.html#ixzz3KjYFi8bn

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் அசல்

தந்தை பெரியார் அவர்களுடைய இலட்சியத்தையும் கொள்கை கோட் பாடுகளையும் சமுதாய எழுச்சிக்காக அவர் பொறுப்பு ஏற்றுள்ள பகுத்தறிவுப் பெரும் பணியை இன்று பட்டிதொட்டி சிற்றூர், பேரூர் எல்லாம் திறம்பட சிறப்புற எடுத்துச் சொல் கிற அரும் பணியை வீரமணி அவர்கள் ஆற்றி வருகிறார்கள்.

வீரமணி அவர்கள், இந்த இயக்கத் தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு எவ்வளவு காலம் ஆயிற்று என்பது தந்தை பெரியா ரோடு பழகியவர் களுக்குத் தான் - திராவிடர் கழகத்திலே தொடர்பு உடையவர்களுக்குத் தான் - அதிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்களுக்குத்தான் தெரியும்.
மிகச் சின்னஞ்சிறு வயதிலேயே பாலகன் என்று அழைக்கக் கூடிய பருவத்திலேயே, பெரியார் அவர்க ளுடைய கொள்கைகளை, திராவிட இயக்கத்தின் இலட்சியங்களை தன்னு டைய வெண்கலக் குரலால் இதுபோன்ற மேடைகளிலும் ஒலி பெருக்கி இல்லாத கூட்டங்களில் கூட, அனைவரும் கேட்கக் கூடிய அளவிற்கு உரத்த குரலில் பேசி தமிழ்நாட்டு மக்களை அவர் பல ஆண்டுகாலமாகக் கவர்ந்து வருகிறார்.

பார்க்கிற நேரத்திலே வீரமணி இன்றும் ஏதோ இளைஞனைப் போல காணப்பட்டாலும், தந்தை பெரியார் அவர்களோடு எத்தனை ஆண்டு கால மாக அவருக்கு மாணவராக அவருடைய அன்புத் தொண்டனாக, அவருடைய செயலாளராக, அவருடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவராக இன்றைக்கும் பெரியாருடைய வாரிசாக வீரமணி திகழ்கிறார் என்பதை யாரும் மறந்துவிட இயலாது.

அப்படிப்பட்ட வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்தின் கொள்கை களை சமுதாய ரீதியில், அரசியலில் தேவைப் படுகிற நேரத்தில், இந்த சமுதாயத்திற்காக வாழ்வு அளிக்கின்ற வகையிலே ஆதரவு களைத் தந்தாலும் சமுதாயம் முன்னேற, பகுத்தறிவு பரவிட, மூட நம்பிக்கைகள் அகற்றப்பட தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்.

வீரமணி அவர்கள்தான் திராவிடர் கழகத்தின் அசல், போலிகள் நடமாடக் கூடும்! இது அசல். அந்த அசல் கலந்து கொள்கிற ஒரு கூட்டத்தில், அவரோடு இணைந்து அவர் சின்னஞ்சிறிய பிள்ளையாக இருந்த காலத்திலே, மாணவர்களோடு சுற்றுப்பயணத்தில் அவரைவிட மூத்தவர் என்ற வகை யிலே, அவரை தஞ்சை மாவட்டத்திற் கும் வேறு பல நகரங்களிலும் நடை பெற்ற சுற்றுப்பயணங்களில் அழைத்து, தஞ்சைத் தரணியில் திருவாரூரிலே கழகத்தின் தொண்டனாக இருந்து மறைந்து விட்ட டி.என்.ராமன், வி.எஸ். டி.யாகூப் தலைமையில் சிங்கராயர் தலைமையில் பெரியார் அவர்களால் அன்போடு அழைக்கப்படும் ரங்கராசன் அவர்கள் தலைமையில், முத்து கிருஷ்ணன் அவர்கள் தலைமையில், இங்கே வீற்றிருக்கிற அருமை நண்பர் சிவசங்கரன் அவர்கள் தலையில், கூட்டத்தைப் பொறுத்தவரையில் மன்னை போன்ற திராவிடர் இயக்கத் தின் பெரு வீரர்கள் தலைமையில் அன் றைய தினம் பணியாற்றி இருக்கிறோம். - திருவாரூர் கூட்டத்தில் கலைஞர் (விடுதலை, 3.9.1979)

Read more: http://viduthalai.in/e-paper/92136.html#ixzz3KjYWaAQ5

தமிழ் ஓவியா said...

சமூகநீதி வரலாற்றில் ஆசிரியர் பதித்த முத்திரை

ஆயிரம் ஆண்டு களுக்கும் மேலாக பிறவி பேதத்தை, ஜாதியின் பெய ரால் உருவாக்கிய இந்து சமூகத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக் காக இட ஒதுக்கீடு, வகுப் புரிமை போன்ற உரி மைகள் சில மாநிலங் களில் நடைமுறைப்படுத் தினாலும், பார்ப்பன ரல்லாதார் இயக்கமாக அது உருவாக்கப்பட்டு, வகுப்புரிமை வழங்கப் பட்ட நெடிய வரலாறு, தமிழகத் திற்கு மட்டும்தான் உண்டு. தந்தை பெரியார் எழுப்பிய சமூகநீதிக் குரல், சூத்திர பஞ்சம மக்களின் நித்திரையைக் கலைத்த தோடு, பார்ப்பனர்களின் மேலாண் மையைத் தமிழகத்தில் தகர்த்து வெற்றி கண்டது.

பெரியாருக்குப் பின், சமூகநீதி களத்தில், மதிப்பிற்குரிய விடுதலை ஆசிரியர், தமிழர் தலைவரின் பங் களிப்பு அளப்பரியது. 1979-ஆம் ஆண்டு, தந்தை பெரியாரின் நூற் றாண்டு விழா தமிழகம் எங்கும் சிறப்பாக கொண்டா டப்பட்டு வந் தது. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர், தமிழக அரசின் சார்பிலும் விழாவைச் சிறப்பாக நடத்தி வந்தார்.

இந்த நிலையில் ஜூலை 2, 1979 அன்று, எம்.ஜி.ஆர் அரசு ஓர் ஆணையை பிறப்பித்தது. அந்த ஆணையின்படி, ஒன்பதாயிரம் ரூபாய் ஆண்டு வரு மானம் பெறும் பிற்படுத்தப்பட்டவர் குடும்பத்து பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு உரிமை கிடையாது என அறிவிக்கப்பட்டது.

அதுவரை 31 விழுக்காடு இட ஒதுக்கீடு பெறும் இந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், வருமான அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அரசின் ஆணையைக் கண்டித்து, ஆசிரியரின் கடிதம் விடுதலையில் ஜூலை 3, 4 தேதிகளில் வெளியிடப்பட்டது. 4.7.1979 அன்று சமுதாயத் தலைவர்களின் கூட்டத்தை பெரியார் திடலில் ஆசிரியர் ஏற்பாடு செய்தார். இதில் திமுக, காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ், உழைப்பாளர் கட்சி, பார்வார்டு பிளாக் மற்றும் சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநிலம் முழுவதும் அரசின் வருமான வரம்பு ஆணையைக் கண்டித்து விளக்கப் பொதுக்கூட்டம் ஆசிரியரால் நடத் தப்பட்டது. இதன் காரணமாக, பல ஊர்களில் மாணவர்கள் கிளர்ச்சி நடைபெற்றது. என்.ஜி.ஓ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குன்றக்குடி அடிகளாரும் இந்த எதிர்ப்பு அணியில் இணைத்துக் கொண்டார்.

14.7.1979 அன்று சேலத்தில் திரா விடர் கழகத்தால் நடத்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் உரிமை பாது காப்பு மாநாட்டில், ஒன்பதாயிரம் ரூபாய் ஆணை ரத்துச் செய்யப்பட வேண்டும்; இல்லையேல் அறப் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மீண்டும் ஒரே வாரத்தில், 22.7.1979 அன்று சென்னையில் பெரியார் திட லில் மாநாட்டை ஆசிரியர் நடத்தினார். கலைஞர், அப்துல் சமது, இரமணிபாய், அனந்த நாயகி, தா.பாண்டியன், திண்டிவனம் ராமமூர்த்தி, ஆண்டித்தேவர், என்.எம்.மணிவர்மா என தலைவர்கள் ஓரணியில் திரள வைத்தார் ஆசிரியர். இந்த மாநாட்டில் டாக்டர் பி.எம்.சுந்தரவதனமும் கலந்து கொண்டார்.

5.8.1979 அன்று மதுரையில் ஆசிரியர் நடத் திய கூட்டத்தில், கலைஞர் கலந்து கொண்டு, அரசின் ஆணை ரத்துச் செய்யப்பட வேண்டும் என பேசினார்.
எம்.ஜி.ஆர் அரசின் ஒன்பதாயிரம் ரூபாய் ஆணையினை ரத்து செய்ய வலியுறுத்தி, ஆசிரியரின் வேண்டு கோளுக்கிணங்க, 14.8.1979 அன்று, மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியரிடம் திராவிடர் கழகத்தா ரால் மனு அளிக்கப்பட்டது. சென்னையில் கோட்டையை நோக்கி மாணவர்கள் பேரணி நடைபெற்றது.

17.9.1979 அன்று நடைபெற்ற திராவிடர் கழக மத்திய கமிட்டியில், அரசின் ஆணையை ரத்து செய்யா விட்டால், 26.11.1979 அன்று ஆணைக்கு தீ வைப்பது என முடிவு செய்யப்பட் டது. இந்த முடிவினை மக்கள் மத்தியில் விளக்கிட, ஆசிரியர் தமிழகத்தின் பல்வேறு நகரங் களுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டார். நீதிமன்றத் தில் தோழர்கள் தர வேண்டிய வாக்கு மூலம் அந்தந்த ஊர்களில் தரப் பட்டது.
26.11.1979 அன்று, அரசின் ஆணை எரிக்கப்பட்டு, சாம்பல், கோட்டைக்கு அஞ்சல் துறை வழியே அனுப்பப் பட்டது.

தமிழ் ஓவியா said...

16.12.1979 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் கழகத்தின் மத்திய கமிட்டி யில் ஜனவரி 1980-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர். அரசை தோற்கடிக்க மக்களை கேட்டுக் கொண்டது. அதேபோன்று, ஜனவரியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக படுதோல்வி அடைந்தது. சமூக நீதிக்கு எதிராக எம்.ஜி.ஆர். எடுத்த நடவடிக்கைக்கு மக்கள் தக்க பாடம் கற்பித்தனர் என ஆசிரியர் 8.1.1980 அன்று அறிக்கை வெளியிட்டார்.

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர். அனைத்துக் கட்சிக் கூட் டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர், ஒன்பதாயிரம் ரூபாய் ஆணையின் பாதிப்பை ஆதாரத்துடன் விளக்கினார்.
இதனையடுத்து, 24.1.1980 அன்று, ஒன்பதாயிரம் ரூபாய் ஆணை ரத்து செய்யப்படுவதாக எம்.ஜி.ஆர். அறிவித் தார். அத்துடன், பிற்படுத்தப்பட் டோருக்கு நடைமுறையில் இருந்த 31 விழுக்காட்டை, அய்ம்பது விழுக்கா டாக உயர்த்தியும் ஆணை வெளி யிட்டார்.
இந்து, மெயில் பத்திரிகைகள், எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்பை கண்டு அதிர்ச்சி தலையங்கம் எழுதின.

எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து, 10.2.1980 அன்று நன்றி அறிவிப்புக் கூட்டத்தை ஆசிரியர் நடத்தினார். 11.2.1980 அன்று மயிலாடு துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், ஆசிரியரின் சிறப்பான செயல்பாட்டுக்கு நன்றி தெரிவித்து, வீர வாள் அளிக்கப் பட்டது.
சமூக நீதிக்கு எதிரான அரசின் ஆணையை எதிர்த்து ஆறே மாதத்தில் அதனை ரத்து செய்ய வைத்த தோடு, இட ஒதுக்கீட்டின் அளவை மேலும் உயர்த்தும் நிலையை அரசு மேற்கொண்டிட, ஆசிரியர் நடத்திய போராட்டம், செயல் பாடுகள், சமூக நீதி வரலாற்றில் ஓர் முக்கிய நிகழ்வாகும். இந்த ஆணை ரத்துச் செய்யப் படாமல் நடை முறையில் இருந்திருக்குமே யானால், இன்றைக்கு, சமூக நீதி என்ற சொல்லாடலே, தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழு மைக்குமே, அர்த்தம் அற்றதாக ஆகியிருக்கும்.

தமிழ் ஓவியா said...


எம்.ஜி.ஆர் 1980-ல் பிறப்பித்த ஆணை, தமிழகத்தில் இட ஒதுக் கீட்டை 68 விழுக்காடாக மாற்றியது. பின்னர் கலைஞர் ஆட்சியில் மலை வாழ் மக்களுக்கு ஒரு விழுக்காடு அளித்து ஆணை பிறப்பித்தார். இதன் காரணமாக, தமிழ் நாட்டில் 69 விழுக்காடு நடைமுறைக்கு வந்தது.
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக பதவி ஏற்றவுடன், மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக் காடு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளித்து பிறப்பித்த ஆணை தொடர் பாக உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப் பில், அய்ம்பது விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு இருத்தல் கூடாது என தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் நாட்டில் நடைமுறையில் இருந்த 69 விழுக்காட்டிற்கு எதிராக வழக்கு தொடர்ந்ததால், உச்ச நீதிமன்றம் 25.8.1993 அன்று, 69 விழுக்காட்டிற்கு தடை விதித்தது. உச்சநீதி மன்றத் தீர்ப் பைக் கண்டித்து ஆசிரியர் அறிக்கை வெளியிட்டதுடன், 1.9.1993 அன்று, தீர்ப்பை நாடு முழுவதும் எரித்து சாம்பலை நீதிபதிகளுக்கு அனுப்பச் செய்தார். தமிழ் நாடு முழுவதும் 15000 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். 13.10.1993 அன்று, தடையை நீக்கக் கோரி திராவிடர் கழகம் சார்பில் வழக்கும் தொடரப்பட்டது.

16.11.1993 அன்று தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்தப்பட்டது. இந்த போராட்டம் நடத்தினாலும், அரசுக்கு வழிகாட்டும் விதமாக, அரசியல் சட்டம் பிரிவு 31-சி-யின்படி, சட்டம் நிறைவேற்றலாம் என்ற கருத்தினை முன்வைத்து, சட்ட முன்வரைவு ஒன்றினை அரசுக்கு அனுப்பியும் வைத்தார். 26.11.1993 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் சட்ட முன்வரைவினை விளக்கி பேசினார்.

தமிழக அரசு இந்த சட்ட முன்வரைவை ஏற்றுக் கொண்டு 31.12.1993 அன்று இட ஒதுக்கீட்டு சட்டமாக சட்டமன்றத் தில் ஒருமனதாக நிறைவேற்றியது. ஆசிரியரின் கருத்தின் அடிப்படையில் இந்த சட்டம், ஒன்ப தாவது அட்ட வணையில் சேர்க்கப்பட் டது. குடி அரசுத் தலைவரின் ஒப்புதல் மற்றும் ஒன்பதாவது அட்ட வணையில் சேர்த்தல் என்ற இந்த இரு செயல் பாட்டிற்கும், ஆசிரியர் அளித்த உழைப்பு, பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் என்றைக்கும் மறக்கலாகாது.
இன்றைக்கு, உச்சநீதிமன்றத்தில் 69 விழுக்காடு தொடர்பாக வழக்கு இருந்தாலும், ஆசிரியர் அளித்த இந்த சட்ட முன்வரைவு சட்டமாக நின்று, நீதிமன்றத்தை எதிராக செயல்பட முடி யாமல் கேடயமாக நின்று தடுக்கிறது என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் உணர வேண்டும்.

69 விழுக்காடு இல்லாமல் இருந் திருந்தால்? இந்த கேள்விக்கு, மும் பையில் உள்ள ஆய்வு நிறுவனம் பதில் சொல்கிறது. 2013-_14 ஆண்டுக்கான மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை குறித்து ஆய்வு நடத்திய நிறுவனம் தந்த புள்ளிவிவரப்படி, மொத்தம் 2900 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் 69 விழுக்காடு இருப்பதினால், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 167 இடங்கள் கூடுதலாகவும், பிற்படுத்தப் பட்ட வகுப்பினரில் இஸ்லாமியர் 35 இடங்கள் கூடுதலாகவும், தாழ்த்தப் பட்ட வகுப்பினர் 427 இடங்கள் கூடுதலாகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பி னரில் அருந்ததியர் 86 இடங்கள் கூடுதலாகவும் பெற்றுள்ளார்கள் என அறிக்கை அளித்துள்ளது. தாழ்த்தப் பட்ட சமுதாய மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர் கள் இன்றைக்கு மருத்துவ கல்லூரியில் அதிக அளவில் படிக்கும் வாய்ப்பு ஏற் பட்டது என்றால், ஆசிரியர் அளித்த பாதுகாப்பு சட்டம் தானே.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும், ஏன் மத்திய அரசிலும், இட ஒதுக்கீட்டுக்கான ஆணைதான் இருக் கிறதே அன்றி, சட்டம் ஏதும் கிடை யாது. தமிழ் நாட்டில் தான் சட்டம் இருக்கிறது. இதற்கான காரியமும், காரணமும் ஆசிரியர் தான்.
ஒன்பதாயிரம் ரூபாய் ஆணையை ரத்து செய்தும், 69 விழுக்காட்டினை பாதுகாத்திட சட்டம் இயற்றிட காரணமாக இருந்தும், சமூக நீதி வரலாற்றில் ஆசிரியர் பதித்த சிறப் பான முத்திரை என கூறுவது மிகை யல்ல.

Read more: http://viduthalai.in/e-paper/92139.html#ixzz3KjYfvyjb

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பாராட்டுகிறார்


நல்ல கல்வி அறிவுள்ளவர். தொழில் ஆற்றலுள்ளவர். பொறுப் பானவர். அவர் நினைத்திருந்தால், ஆசைப்பட்டிருந்தால் நமது இயக்கம் அவருக்குள்ள செல்வாக்கு இதெல்லாம் கொண்டு முனுசீப்பாகி இருப்பார். வக்கீல் தொழில் செய் திருந்தாலும் நல்ல அளவுக்கு பணம் சம்பாதித்திருப்பார். இதை யெல்லாம் விட்டு பொதுத் தொண்டு செய்ய வேண்டுமென்ற கருத்துடன் செய்து வருகிறார். தங்களுடைய வாழ்வு தங்களுக்காகவே இருக்கக் கூடாது. பொது மக்களுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டுமென்கிற தன்னலமற்ற தன்மைக் காகவும் நிறைய பாராட்டக் கடமைப்பட்டி ருக்கிறேன்.

(விடுதலை 25.2.1968)



இன வரலாறு ஈந்திட்ட வீரமணி

திரு.கி.வீரமணி வெறும் ஆள் அல்ல. நம் தலைவர் போல, குருசாமியைப் போல அவர் பேசவில்லை. சற்றுத் துணிவாய்ப் பேசிவிட்டார். திரு.வீரமணி நம்மை போன் றவர் அல்ல - அவர் ஒரு வக்கீல். எவ்வளவோ நல்ல வாய்ப்பு அவரை அணுகக் காத்திருக்கிறது. அவற்றுக்குத் தடை எற்படலாம். என்னைப் பொறுத்தவரை அவருக்கு அப்படி ஏற்பட்டால் நமக்கு நல்லதாகிவிட்டது என்று தான் கருதுவேன். ஏன்? நம் இயக்கத்திற்கு ஒரு முழுநேரத் தொண்டன் நமக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்கிற ஆசை, இப்போது அவர் தொண்டு அரை நேரம், இனி அது முழு நேரமாகிவிடலாம்.


- 30.10.1960 இல் திருவல்லிக்கேணி கடற்கரை சொற்பொழிவில் தந்தை பெரியா

Read more: http://viduthalai.in/e-paper/92179.html#ixzz3KjZXM77w

தமிழ் ஓவியா said...

பெரியாரின் மாணவராய் எமக்கெல்லாம் ஆசிரியர் !

மருத்துவர்க்கும் மற்றவர்க்கும்
வழக்கறிஞர் கவிஞர் மற்றும்
வடநாடு, வெளிநாடு அறிஞர்கட்கும்
பல்துறையில் பாடஞ்சொல்லிப்
பகுத்தறிவுப் பகலவனின்
கருத்தாழம் புரியவைப்பாய்
வாய் பிளந்தே கேட்டிடுவார்!
என்பதையும் இளமையுடன்
இனிமையுடன் உழைத்திட்டே
உற்சாகம் தந்திடுவாய்
உம்மை நாம் வாழ்த்திடவே
மனமுண்டு வார்த்தையில்லை
வாழ்ந்திடுவீர் பல காலம்
மாணவராய்த் தொடர்ந்திடுவோம் !
வாழ்க பெரியார்!
வளர்க உம் தொண்டே!

சோம. இளங்கோவன்

Read more: http://viduthalai.in/e-paper/92177.html#ixzz3KjZhThEx

தமிழ் ஓவியா said...

எங்கள் தாய்!


நம் ஆசான் எம் தந்தை மறைந்தபோது
ஏகமாய் பீறிட்ட எம் சோகம் புதைத்தாய்
எமக்குத்தான் நிலைத்திட்ட நம்பிக்கை பெய்தாய்
எதிர்ப்புதனை இடிப்பொடித்து இயக்கம் காத்தாய்
என்றென்றும் தொண்டறத்தால் நிலைத்தாய்
துள்ளி வந்த துரோகத்தைச் துச்சமென
கிள்ளி எறிந்து அச்சமிலா நம் கொள்கை காத்தாய்
தலைதாழாச் சிங்கமென நடக்க வைத்தாய்
விலை பேச முடியாத வீரத்தை எம்முள் விளைத்தாய்
உதிர்ந்து வீழ்ந்த பிஞ்சுகளை அரவணைத்தாய்
முதிர்ந்து முற்றிய தியாகத்தின் எல்லைதனை அளந்தாய்
வாய் வீரம் பேசும் வக்கணைகள் மலிந்த நாட்டில்
தாய் வீரம் தமிழ் வீரம் தரணிக்குக் காட்டிய எங்கள் தாயே, தங்கமே என்றைக்கம்மா உனை மறந்தோம்
இன்றைக்கு உனை நினைக்க?
பாசமிகு பிள்ளைகளின் நேசமிகு கேள்வி இது!

- கி.வீரமணி

குறிப்பு: அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளையொட்டி எழுதப்பட்டது (16.3.2003 - விடுதலை)

Read more: http://viduthalai.in/e-paper/92180.html#ixzz3KjZsnBR7

தமிழ் ஓவியா said...

நினது சாயல் யாவர்க்கும் வேண்டும்!


நமது ஆசிரி யர்க்கு டிச. 2 ஆம் தேதி (2014) 82-ஆவது பிறந்த நாள். அவர் 72 ஆண்டு பொது வாழ்க் கைக்குச் சொந்தக்காரர். தமிழ் நிலத்தை வலம் வந்து கொண்டே இருப் பவர். தமிழ்நாட் டிற்கு அப்பாலும் கொள்கைப் பரப் புரையை செய்து வருபவர். வாய் மொழி நடை மலர்ந்த நம்பி அவர் - கொள்கைகளை விளக் குவதில்! அவருக்கு வயது 82 ஆகிவிட்டது. அவர் எழு தியவை, பேசியவை, செயலாற் றியவை எல்லாம் பதிவாகி இருக்கின்றன.

இப்பணிகளுக் கிடையே அகப்புற எதிரிகளிட மும் போராடி அவர் வெற்றி பெற்று இருக்கிறார். ஆசிரியர் திராவிடர் கழகத்தின் தலைவர். திராவிடர் கழகம் அரசியல் கட்சியல்ல. ஆனால் அரசியலை நெறிப்படுத்தும்கட்சி, திரா விடர் இயக்கச் சட்டத்திற்குள் அரசி யலில் வகைப்படுத்தும் இயக்கம். திராவிடர் இயக்கக் கொள்கை களை நினைவு கூரும் அமைப்பு.

இயக்க கொள்கை வழியை நிலை நாட்டுவதில் ஆசிரியருக்கு ஈடு ஆசிரியர்தான்! இதற்காகப் பழைய நிகழ்வுகளை நாம் தேடிப் போக வேண்டிய தில்லை. அண்மையில் நடை பெற்ற சில நிகழ்ச்சிகளையே எடுத்துக்காட்டாகக் கொள்ள லாம்.

கடந்த செப்டம்பர் மாதம் 23 முதல் 26 வரை தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ அளித்த விருதைப்பற்றி பெரியார் திடலில் ஆசிரியர் உரையாற் றினார். கட்டணம் நான்கு நாள்களுக்கு ரூ. 100/- வசூலிக் கப்பட்டது. இவ்வுரையைக் கேட்கத் தோழர்கள் திரளாக வந்து இருந்தார்கள். அமைதி யாக செவிமடுத்துக் கேட் டார்கள். வீடு திரும்ப வேண் டுமே என்கிற கவலையில்லாமல் அக்கருத்துகளை மனத்தில் பதிந்து கொண்டார்கள்.

நான்கு நாள் உரை

பெரியார் அவர்களுக்கு அய்க்கிய நாட்டுச் சபையில் ஒரு பிரிவான கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் சார்பாக (ஹிஸீவீமீபீ ழிணீவீஷீஸீ ணிபீநீணீவீஷீஸீ ஷிநீவீமீஸீநீமீ ணீஸீபீ சிறீக்ஷீணீறீ ளிக்ஷீரீணீஸீவீணீவீஷீஸீ ஒரு விருது 1970 ஆம் ஆண்டு வழங்கப் பட்டது. இந்நிகழ்வுக்கு மத்திய அமைச்சர் திரிகுண சென் தலைமை தாங்கினார்.

முதல்வராக இருந்த கலைஞர் அவ்விருதினை வழங் கினார். அவ்விருதில் ஓர் அருமையான கருத்தாக்கம் இடம் பெற்று இருந்தது. பெரியார் புது உலகின் தொலை நோக்காளர். தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்த்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று அந்த விருதில் குறிப் பிடப்பட்டு இருந்தது.

தமிழ் ஓவியா said...


இவ்விருதின் உள்ளடக்கத் தினைத் தான் மேலே நாம் குறிப்பிட்ட நான்கு நூல்கள் விரித்துரையாற்றினார் ஆசிரியர். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத் திற்கு அதிகமாக அவர் பேசினார். கருத்துகள் புது வெள்ளமாய் பாய்ந்து பெருக் கெடுத்து ஓடின. பெரியாரை வாசித்து பழக்கப்பட்டவர் களான நாம் அன்று சுவா சித்தோம் எனவும், வயதை மறந்து ஆசிரியர் விரிவுரை யில் தம்மை யும் மறந்து உரையாற் றினார்.

பெரி யாரை மக்களிடம் எடுத்துச் சொல்லச் சொல்ல ஆசிரி யரின் தெளிவு நம்மைப் போன்ற வர்களும் பெற வேண்டும் என்கிற உந்துதலால் இச்சொற் பொழிவுகள் உண்டாக்கின.

அவர் வெளியிடும் அறிக்கைகள்

ஆசிரியர் அவர்களிடத்திலே உலகளாவிய பார்வை உண்டு. எந்த ஒரு நிகழ்வையும் உன்னிப் பாகவும் கவனமாகவும் பார்க்கக் கூடியவர். பாராட்டுத் தெரிவிக்க வேண்டுமென்றாலும் சரி, கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றாலும் சரி, அவரது அறிக்கை ஊடகங்களில் முதலில் இடம் பெறும். தனிப்பட்ட பாராட்டுகளையும் தெரிவிப் பதில் தயக்கம் காட்டமாட்டார். கூட்டம் நடத்தி பாராட்டுத் தெரிவிக்க விரும்பினால் கூட் டத்தில் வழியும் பாராட்டு களைத் தெரிவித்து இருக்கிறார். அண்மையில் ஒரு நிகழ்ச்சி நடந் தது. வேலூரைச் சேர்ந்த வழக்குரைஞர் வேதாசலம் ஓர் அரிய செயலினைச் செய்து இருந்தார்.

அறிஞர் அண்ணா எழுதிய ஹோம்லாண்ட் ஆங் கில மடல்களைப் புத்தகமாக அவர் தொகுத்து இருந்தார். அப்புத்தகம் முதல் பாகம்தான். அத்தொகுப்பிற்கு டான் என்று தலைப்பிட்டு இருந்தார். இதன் விமர்சனம் தினத்தந்தியில் வெளி யிடப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த நாம் நண்பர் அ.நா. பாலகிருஷ்ணனிடம் சொல்லி இரண்டு புத்தகங்களைத் தருவித் தோம். ஒரு புத்தகத்தை ஆசிரி யரிடம் கொடுத்து இருக்கிறார் அ.நா.பா. உடனே வழக்குரைஞர் வேதாசலத்தைத் தொடர்பு கொண்டு ஒரு பாராட்டுக் கூட்டத்திற்கு ஆசிரியர் ஏற்பாடு செய்துவிட்டார்.

கடந்த நவம்பர் 13 ஆம் தேதி டான் புத்தகத்திற்குப் பாராட் டுக் கூட்டம் நடத்தி ஆசிரியர் மிக அருமையாக அந்தக கூட்டத்தில் ஆங்கிலத்திலும், தமிழிலுமாகக் கருத்துகளை எடுத்து வைத்தார். அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமையை விளக்கிப் பேசினார்.

தமிழ் ஓவியா said...

ஆங்கிலத்தின் அவசியத்தையும், ஆங்கில மேடைப்பேச்சுப் பயிற்சியினையும் இனி நாம் தொடங்க வேண்டும் என்றும் ஆசிரியர் அன்று பேசினார். வழக்கறிஞர் வேதாசலம் குடும்பத்தோடு வேலூரிலிருந்து வந்து கலந்து கொண்டார். அவர் பெருத்த மன நிறைவோடு விடைபெற்றுச் சென்றார்.

ஆர்.எஸ்.எஸைத் தொடர்ந்து அம்பலப்படுத்துபவர்

மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளையும் அதன் ஆர்எஸ்எஸ் பின்னணியையும் ஆசிரியர் தொடர்ந்து அம்பலப் படுத்தி வருகிறார். அதில் முன் வரிசையில் முதலில் அவர் இருக் கிறார். அதன் ஆபத்துகளை அவர் தோலுரித்துக் காட்டு வதில் தயக்கம் காட்டுவதில்லை. இந்தியாவை சமஸ் கிருத மயமாக்க நீண்ட காலமாகக் கனவு கண்டு கொண்டு வரு கிறது. மத்திய அரசு. பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ஒவ் வொரு அமைச்சரும் அறிவிப்புகளை வெளி யிட்ட வண்ணம் இருக் கிறார்கள்.

தமிழ் நாட்டில் அதற்குப் பலத்த எதிர்ப்புகளும் கண்டனங்களும் தோன்றியவுடன் மத்திய அரசு தலையை உள்ளே இழுத்துக் கொள்வது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. சமஸ் கிருத வாரம் கொண் டாடப்பட வேண்டும் என்கிற அறிவிப் பிலிருந்து கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் மூன்றாவது மொழித் தகுதி சமஸ்கிருதத் திற்கு மட் டுமே என்பது வரை ஆசிரியரின் அறிக்கை, போராட் டம் எல்லாம் எவ்வளவு வேக மாக நடைபெற்றன என்பதை எண் ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.

இக்கட்டுரை எழுதப்படு கின்ற இன்று (26.11.2014) கட்டாய சமஸ்கிருதம் சம்பந்த மாகக் கலைஞர் நீண்ட விளக்கம் அளித்து முரசொலியில் வினா விடையாக எழுதி இருக்கிறார். இதற்குப் பல்லவியை அமைத் தவர் ஆசிரியர். அதே போல அகில இந்திய வானொலி யில் 8 மணி நேர இந்தித் திணிப்புக்கு பாஜக அரசினர் வழி ஏற்படுத்த முயன்றனர். கடும் போராட் டத்தை சந்திக்க நேரிடும் என்று நீண்ட அறிக்கையை ஆசிரியர் வெளியிட்டார்.

ஆசிரியரின் அறிக்கையும் கலைஞரின் சமஸ் கிருதம் பற்றிய கருத்துகளையும் படித்த அமைச்சர் ஸ்மிருதி இராணி சமஸ்கிருதத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாக அறிக்கை வெளியிட்டார். சமஸ்கிருதம் இந்தித் திணிப்பு விஷயத்தில் மத்திய அரசு இடைக்கால அரசு அமைந்த காலத்திலிருந்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகிறது. இப் படிப்பட்ட எந்த ஆட்டத் தையும் எதிர்கொள்ள ஆசிரியர் எப்போதும் களத்தில் முன்ன ணியில் இருக்கிறார். பட்டாள உடுப்பை எப்போதும் அணிந் துள்ள இராணுவத் தளபதியைப் போல செயல்படுபவர் ஆசிரியர்.

ஆண்டு தோறும் நீதிக்கட்சி விழா

கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நீதிக்கட்சியின் 98-ஆவது ஆண்டு விழாவினை திராவிடர் இயக்க வரலாற்று ஆய்வு மய்யம் ஏற்பாடு செய்து இருந்தது. நமது இயக்கத்தின் பீடும் பெருமையும் நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் தான்! அவற்றின் கூட்டு வடிவமே திராவிடர் கழகம். ஆகவே அதன் ஆண்டு விழாவை ஆசிரியர் ஆண்டு தோறும் கொண்டாடத் தவறுவதில்லை. இந்த ஆண்டு சிறப்பு விருந்தின ராக நீதிபதி கோகுலகிருஷ்ணன் வந்து உரையாற் றினார்.

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் ஆர்எஸ்எஸ், பாஜக காரர்கள் வரலாற்றைத் திரிக்க தொடங்கிய போது நாம் வரலாற்று ஆய்வு மய்யத்தைத் தொடங்கி அவர்களுக்குப் பதிலடி கொடுத்து வந்ததை எடுத்துரைத்தார். ஆனால் அவர்கள் இன்றைய தினம் ஹிந்து எகனாமிக் ஃபோரம் பிவீஸீபீ ணிநீஷீஸீஷீனீவீநீ திஷீக்ஷீனீ என்று ஒன்றை உருவாக்கி இருக்கி றார்கள். நாம் திராவிடன் எகனாமிக் ஃபோரம் என்று ஒன்றை உருவாக்குவோம் என்று பேசியபோது அவையினரிடையே வரவேற்பு இருந்தது.

திராவிட நாகரிகத்தைப் பற்றிய இன்றைய ஆய்வையும் சிந்து சமவெளி ஆய்வை அய்ராவதம் மகாதேவன் வெளி யிட்டு இருப்பதையும் எடுத்துக் கூறினார் ஆசிரியர். இதுவன்றி பொதுவாக ஆசிரியர் ஆர்எஸ்எஸ்; பாஜகவினர் போக்கை நம்மவர்க்கு எடுத் துரைப்பதில் மிகத்தெளிவும் திட்பமும் நிறைந்தவராகக் காணப்படுகிறார்.

கூர்ந்து நோக்குகிறார்!

நடிகர் ரஜினிக்கு வலை விரித்து விருது வழங்கி அரசி யலுக்கு இழுக்கப் பார்ப்பது
இராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்கத் துடிப்பது
சமஸ்கிருத, இந்தித் திணிப்பு அறிவிப்புகள் செய்வது - நடைமுறைப்படுத்த முயல் வது.
தமிழ் மொழி, திருவள்ளுவர் பற்றி வடஇந்தியாவில் பரப்ப ஆர்வம் காட்டுவது போல் பம்மாத்து செய்வது
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு நடத்தியது ஷீ பாஜக 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு எதை வேண்டு மானாலும் செய்து முன் னேறுவது.

ஆகிய இப்பிரச்சினைகளை யெல்லாம் ஆசிரியர் கூர்ந்து பார்த்து கருத்துச் சொல்வதும், எழுதுவதும், பேசுவதும் தமிழ் மக்களை எச்சரிக்கை செய்வது மாய் பணியாற்றி வருகிறார். அவர் அதிகாரத்திற்கு வரப் போகிறவர் இல்லை. ஆனால் அதிகாரம் யாரிடத்தில் இருந் தால் நல்லது என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்லும் ஆசிரியர் அவர்! தமிழ்மக்களை மட்டுமல்ல அவர் எச்சரிக்கை செய்வது - தமிழக அரசியல் கட்சிகளையும் அவர் எச்சரிக்கை செய்து நெறிப்படுத்துகிறார். அய்யா பெரியாரின் சூத்திரத்தை அப்பழுக்கில்லாமல் ஆசிரியர் கடைப்பிடித்து நடைமுறைப் படுத்துகிறார்.

மத்திய செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவ ராக நியமிக்கப்பட்ட அவ்வை நடராசன் திடீரென்று அப்பொறுப்பி லிருந்து நீக்கப்பட்டார். முதல் கண்டனம் ஆசிரியரிடமிருந்து தான் வந்தது. சமூக அக்கறை, மொழி, இனப்பற்று, சிக்கல்களை ஆராயும் திண்மை, அவற்றை எடுத்துரைக்கும் வன்மை ஆகியவற்றை ஒருங்கே பெற்று இருப்பவர் நமது ஆசிரியர்! அவர் நூற் றாண்டு காலம் இனிதாக வாழ வாழ்த் துகின்றோம்.

நமது சுயநலம் கருதித்தான் அவரை வாழ்த்துகின்றோம். அவர் பணியின் வீச்சு நமது தமிழ்ச்சமுதாயத்திற்கு தேவை யாக இருக்கிறது. அது எப்படி யெல்லாம் பரிணமிக்கிறது பாருங்கள்.

தமிழ் ஓவியா said...


பல்துறைகளிலும் கவனம்
தேவை கருதி அறிக்கை எழுதி வெளியிடுவது
அன்றாடம் ஏடுகளைப் படிப்பது; சிந்தையில் இருத்துவது
அரிய நூல்கள் எழுதுவது; நூல் களை விமர்சிப்பது; முன்னுரை எழுதுவது
அகன்றாழ்ந்து அறிவொட்பம் மிளிர, கற்றுணர்ந்து வாழ்வியலை, பெரியார் இயலோடு புகட்டுவது
பொருளையொட்டிப் பேசுவது
ஆங்கிலத்திலும், தமிழிலும் மேடை யில் ஆற்றொழுக்காய் உரையாற்றுவது
கொள்கை விளக்கம் தருவது
இயக்கம் மற்றும் நிறுவனங்களை நிர்வாகம் செய்வது
கலந்துரையாடுவது
பாசறையைக் கூட்டிக் கொள்கைப் பயிற்சி அளிப்பது
போராடுவது - சிறை செல்வது.
தலைமைப் பண்பை நிலைநாட்டுவது

இவையெல்லாம் ஆசிரியரின் பன்முக ஆற்றல்கள், அவரின் ஆற்றல் உழைப் பெல்லாம் திராவிட இயக்கத்திற்கு முக்கால் நூற்றாண்டாய் பயன்பட்டு இருக்கிறது, பயன்பட்டு வருகிறது. அதுவும் முழுமையாய் பயன்பட்டு வருகிறது. நாம் மேலே மிகச்சுருக்கமாக இரண்டொரு நிகழ்ச்சிகளை மாதிரிக் காக எடுத்துக் காட்டினோம்.

அவரு டைய ஒவ்வொரு இயக்க நிகழ்வையும் விளக்கமாக எடுத்துரைத்தால் அவை பல தொகுதிகளாக விரியும். அவர் பணியின் பரப்பு அது! இதற்கு அவர் செலுத்திய உழைப்பு எவ்வளவு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆசிரியர் போல பணியாற்றுகின்ற பக்குவத்தை இளைஞர்கள் பெறத் தொடங்க வேண்டும். அதற்கான பயிற்சிகளை தானாக முன்வந்து பயில வேண்டும். அவரது பிறந்த நாளில் நினது சாயல் யாவர்க்கும் வேண்டும் என ஆசிரியரைக் கேட்பது போல் இக் கட்டுரைக்குத் தலைப்பிட்டு இருக் கிறோம். ஆசிரியர் தருவது அல்ல இது! அவரை முன் மாதிரியாகக் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

கடின உழைப்பு

ஆசிரியர் போல் பன்முக ஆற்றல் பெறுவதற்கு கடுமையான உழைப்பு என்கிற மூலதனம் வேண்டும். அப் போதுதான் அவர் சாயல் அனைவருக் கும் கிடைக்கும். திராவிடர் இயக்கம் மேலும் சிறப்படைய இதைப்போன்ற உழைப்பு தேவை. அதனை நாம் ஆசிரி யரின் பிறந்த நாளில் அடைவதற்குரிய உறுதியை மேற்கொள்வது நமது இயக் கத்தை முன்னேற்றுவது மட்டும் அன்று ஆசிரியரை முன்னிலைப்படுத்துவதும் ஆகும்.

Read more: http://viduthalai.in/e-paper/92181.html#ixzz3Kja4JUeX

தமிழ் ஓவியா said...

பெரியாருக்குப் பிறகும் திராவிடர் கழகம்


இந்தியா பல விதங்களில் அதிசயமான அலாதியான நாடு. உலக அதிசயமான சாதி முறை என்பது இந்தியாவில் தானுண்டு; உலகத்திலேயே காட்டுமிராண்டித்தன மான கும்பமேளாவும்- மகாமகம் விழாவும் இந்தியாவில் தானுண்டு. இது தீர்த்தம்-இதில் மூழ்கினால் புண்ணியம் என்று ஒரு தல புராணம் கூறினால் போதும்; -இந்தக் குட்டையில் மூழ்கினால் நாம் செய்த பாவம் எப்படி எந்த விதத்தில் போக முடியும்? என்பதைப் பற்றி சிந்திக்க முற் படாமலே குளத்தில் நீராட க்யூவில் நிற்கும் மனோபாவம்-இந்திய சமுதாயத்தின் _-குறிப்பாக ஹிந்து சமுதாயத்தின் சாபக்கேடு எதையும் கவுரவமாக திட்டமிட்டு பிரச் சாரம் செய்தால் அது ஒரு மகோன்னத மாகி விடமுடியும் இந்தியாவில் இந்த மனோபாவம் பல துறைகளில் நிழலா டாமல் போக முடியுமா?

பண்டித நேரு வாழ்ந்த போது இந்தியா வெங்கும் எழுந்த- ஏன் சர்வதேச அரங்கில் எழுந்த பெரிய கேள்வி என்ன தெரியுமோ?

நேருவுக்குப்பிறகு யார் என்பது தான். இந்தியப் பொது வாழ்வின் பூஜா மனோபாவத்துக்கு இக்கேள்வியை விட வேறு சாட்சியே தேவையில்லை. ஒரு நாட் டின் _ அரசியலின் எதிர்காலம் ஒரு தனி நபரைப் பொறுத்தா இருப்பது _ அந்தத்தனி நபர் எவ்வளவு பெரியவராக இருப்பினும் ரூஸ்வெல்டுக்குப் பிறகு யார்? என்ற கேள்வி அமெரிக்காவில் எழுந்ததுண்டா? உலக அரசியல் வரலாறு கண்ட அதிசயத் தலைவர் அபூர்வதலைவரான சர்ச்சிலுக்குப் பிறகு யார்? என்ற கேள்வி பிரிட்டனில் எழுந்ததுண்டா? அரசியல் ஜனநாயகம் அந்த நாடுகளில் எல்லாம் பரிணாமம் அடைந்து பொது வாழ்வு விஞ்ஞான ரீதியாக திட்டவட்டமான நெறிமுறை களின் அடிப்படையில் இயங்கி வருகிறது.

அங்குத் தலைவர்கள் தானே மலர்கி றார்கள்! அந்த நாடுகளின் பொது வாழ்வு அத்தன்மையது ஆனால் இந்தியாவிலோ நேர்மாறான நிலைமை; இங்குத் தலைவர்கள் தங்களைப் பூதாகரமான உருவமாக ஆக்கிக் கொண்டு அந்த அடிப்படையில் அந்தப் பலத்தைக் கொண்டு அரசியல் போக்கு களை நிர்ணயிக்கிறார்கள் மக்களின் மனத்தில் கால காலமாக ஊறிப்போயுள்ள மவுடீகமான பூஜா மனோபாவத்தை வைத்தே இந்த தலைவர்கள் தங்களைப் பீமசேனர்கள் போலவும் பகாசுரர்கள், பத்மாசுரர்கள் போலவும், ஆக்கிக் கொள் கிறார்கள்! அப்படி ஆக்கிக் கொண்ட பிறகு நாட்டின் அரசியல் பொருளாதாரக் கருத் தோட்டங்களை நிர்ணயிக்கிறார்கள்! அறிவுபூர்வமான அரசியல் கருத்து சட்டங்கள் புத்தம் புதிய சிந்தனைகள் தத்துவங்கள் தலைவர்களைப் புஷ்பிப்ப தற்குப் பதில் தலைவர்கள் அரசியலை சமு தாயக் கட்டுக் கோப்பைத் தீர்மானிக் கிறார்கள். இந்திய அரசியலின் அவலம் இது அதிசயமும் இதுதான். இதை மறைத்து வைக்கத் தேவையில்லை.

இதனால் தான் நேருக்குப் பிறகு யார்? என்ற பெரிய கேள்வி 1963 வரை எழுந்து நின்றது சர்வதேச அரங்கிலேயே. ஆனால் நேருவுக்குப் பிறகு ஒன்றும் முழுகி விட வில்லை நேருவையும் சில அம்சங்களில் மிஞ்சக் கூடிய லால்பகதூர் பிரதமரானார். பகதூருக்குப் பிறகு சாதாரணமாக இருந்து வந்த இந்திரா காந்தி இந்திய அரசின் உச்ச பீடம் ஏறினார்.

தமிழ் ஓவியா said...

ஆனால் பெரியாரைப் பொறுத்த அளவில் நிலைமை அப்படி அல்ல அவர் தான் திராவிடர் கழகம். அவருடைய நினைவே கழகத்தின் உயிர். அவருடைய நாவே கழகத்தின் பலம். பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழகம் இருக்க முடியுமா? என்ற பெரிய சந்தேகம் இருந்து வந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் பெரியாருக்குப் பிறகும் திராவிடர் கழகம் நீடிக்கிறது மணியம்மை யாரின் தலைமையில்! பெரியார் விரைந்து ஒரு மாதம் கூட இன்னும் ஆகாத நிலை யில் இப்படி ஒரு பெரிய முடிவை திராவி டர் கழகம் ஒரு மனதாக மேற்கொண்டது இருக்கிறதே -_ அதுவே இவ்வளவு காலம் அவர்கள் பயிற்சி பெற்ற தலைமை எத்த கையது என்பதைக்காட்டி விட்டது.

அதுமட்டுமல்ல பெரியார் எந்த இடத்தில் விட்டுவிட்டுச் சென்றாரோ, அதே இடத்தில் தொடர்ந்து கொண்டு காரியங் களைச் செய்வது என்ற தீர்மானம் சாதா ரணமானதல்ல- _ மனோரீதியாக! பெரி யாருக்குப் பிறகும் திராவிடர் கழகம் நீடிக்கிறது. பெரியாரின் கொள்கைகளை உயிராகக் கொண்டு, ஆயினும் பெரியாரை உயிராகக் கொண்டிருந்த அந்தத் திரா விடர் கழகம் இனி வரமுடியாது. எனினும் அவருடைய கொள்கைகளை உயிராகக் கொண்டு பயணத்தைத் தொட ருவதென்று தி.க.தலைமை செய்துள்ள தீர்மானமே மெச்சத்தகுந்தது.

இதிலே ஒரு வேடிக்கை, பெரியாரு டைய உடல் அடக்கம் செய்யப்படாமல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப் பட்டிருந்தபோது, அந்த சூழ்நிலையிலேயே ஒரு நிருபர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணியிடம் போய்.

திராவிடர் கழகம் நீடிக்குமா என்று கேட்க வேண்டுமா?

பெரியாரின் மரணத்தினால் தமிழ் இனமே கதிகலங்கி மருண்டு இனி நமக்கு யார் கதி? என்று தத்தளித்துக் கொண்டி ருந்தது என்றால் திராவிடர் கழகத்தினரின் மனோநிலை எப்படி இருந்திருக்க வேண்டு மென்பதை விவரிக்க வேண்டுமோ? அதிலும் வீரமணி உருவமும் நிழலும் போல பெரியாருடன் கூடவே இருந்தவர். எந்தப்பிரச்சனையானாலும் சரி அதில் பெரியாரின் நினைப்பு எப்படி இருக்க முடியும் என்பதை நினைத்து பார்த்து அந்த அடிப்படையிலே பேசவும் எழுதவும் தெரிந்தவர். பெரியார் ஒரு பிரச்சினையில் ஒரு முடிவைக்கூறிவிட்டால் அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகியவர். மனோ ரீதியாக எதிலும் எப்பொழுதும் பெரியாரை விட தீர்க்கமாக துல்லியமாக சிந்திக்க முடியாது என்ற முடிவு கொண்டவர். அவருக்கென்று தனி நினைப்போ சுதந்திர சிந்தனையோ இருந்திருப்பதாகக் கூடக் கூறமுடியாது. பெரியாரின் நினைப்பு என்னவோ அதுவே அவர் நினைப்பு.

தமிழ் ஓவியா said...

அவரே ஒரு தடவை கூறியிருப்பதைப் போல, நான், பெரியாரின் தொண்டன். முதலிலும் கடை சியிலும் அதைவிட ஒரு பெரிய பட்டம் அந்தஸ்து பெருமை இருப்பதாக நான் நினைக்கவில்லை திராவிடர் கழகத்தில் நான் ஒரு சிப்பாய் பெரியார் எந்தத்திசை நோக்கி சுடு என்று ஆணையிடுகிறாரோ அந்தத் திசை நோக்கி சுட்டுவிட்டு நின்று கொள்வேன் அதற்குமேல் நினைக்கவே மாட்டேன் பெரியார் உத்தரவு போட்டு விட்ட பிறகு அதில் சிந்தனை செய்வதற்கு அவசியம் ஏது? வீரமணியைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பெரியாரின் நினைவுக்கு அவர் ஒரு வேன் போல இருந்தார். பெரியாரின் உடலைத் தாங்கிக் செல்ல பொது மக்களிடமிருந்து நிதி ஒன்றைத் திரட்டி நவீன வசதிகளுடன் கூடிய வேன் ஒன்றைப் பெரியாருக்கு அமைத்துத் தந்தார். வீரமணி திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் வீரமணியின் இந்தத் தளரா முயற்சியைப் பாராட்டி வேன் பரிசளிப்பு விழாவில் தஞ்சையில் ஒரு தங்க மோதிரம் போட்டுப் பூரித்தார்! பெரியார் மேடையில் பெரியாருக்கு கைத்தடிபோலவும் காது போலவும் பயன்பட்டுவந்த வீரமணி பெரியாரின் அந்திமக் கட்டத்தில் அவருக்கு நினைவைத்தாங்கக்கூடிய வேன் போலவே விளங்கி வந்தார்.

பெரியாரின் தளபதிகளில் கடைக் கோடி வீரமணி -_ ஆனாலும் ஒரு விதத்தில் கொடுத்து வைத்தவர் எப்படி என்கிறீர் களா? பெரியாருடன் கடைசிவரை தளபதியாக இருந்தவர் இவர் ஒருவரே. இதற்குக்காரணம் எந்த நேரத்திலும் இவர் தன்னைத் தளபதி என்று கருதியதில்லை. இதற்கு வயது இடைவெளியும் ஒரு முக்கிய காரணம். வயதில் பெரியாருக்குப் பேரப்பிள்ளை போல வீரமணி. தமிழகப் பொதுவாழ்வின் இருசு போன்ற கேந்திர நிலையை பிரம்மாண்ட வடிவத்தைப் பெரியார் பெற்றுவிட்ட பிறகு வீரமணி பெரியாரின் தளபதி ஆனார். அதோடு வினயமும் அடக்கமும் மிகுந்த வீரமணி எந்த நாளிலும் தன்னை பெரியாருடன் ஒப்பிட்டுப்பார்க்கவே நினைத்து இருக்க வழியில்லை. அதனால் தான் இறுதிவரை பெரியாரின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார்.

பெரியாரின் தளபதிகள் வரிசை கொஞ்சமா? எஸ்.இராமநாதன், பி.ஜீவா னந்தம், எஸ்.வி.லிங்கம், பூவாளூர் பொன் னம்பலனார், பட்டுக்கோட்டை அழகிரி சாமி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மணவை, திருமலைச்சாமி, கோவை அய்யாமுத்து, திருச்சி தி.பொ.வேதாசலம், சி.என்.அண்ணா துரை, குத்தூசி குருசாமி இப்படி எத் தனையோ பேர்கள் இவர்களில் ஒருவ ராலும் (அழகிரி ஒருவரைத் தவிர) கடைசி வரையில் பெரியாரின் தளபதியாக நிற்க முடியவில்லை. அண்ணா மட்டுமே விதிவிலக்கு பெரியாரை விட்டுப்பிரிந்த போதிலும் (திமுகவைக் காண்பதற்காக) பெரியார் ஒருவரே என் தலைவர் என்று பகிரங்கச் சூளுரை செய்த பெருமை அண்ணாவுக்கு மட்டுமே உண்டு. எனினும் மறைந்த போது பெரியாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்தவர்களில் முக்கியமானவர்கள் ஆறேழு பேர்கள்.

இவர்களில் முதலிடம் முக்கிய இடம் மணியம்மையாருக்கே. இந்த அம்மையார் பெரியாருக்குச் செய்த தொண்டு வரலாறு ஆகிவிட்டது. பொது வாழ்வில் பெரியாரின் தொண்டு 95ஆண்டு நீடித்தது நீடிக்க முடிந்தது என்றால், அதற்கு முக்கிய காரணம் பெரியாருக்கு மணியம்மையார் செய்த பணிவிடையே தொண்டே. ஒரு குழந்தையை ஈ எறும்பு மொய்க்காது வேளாவேளைக்கு உணவும் உரிய மருந்தும் தந்து பேணிக்காக்கின்ற தாயைப்போலவே பெரியாரைப் பராமரித்து வந்தார் மணியம்மையார். பெரியாரின் உடல் நலனைக் காப்பதில் பெரியாருடனேயே தகராறு செய்யவும் தயங்கமாட்டார். மணியம்மை தனக்குஇருதய நோய் வந்துவிட்ட போதுங்கூட தன்னைப்பற்றி கவலைப்படாமல், அய்யோ நான் நோய் வாய்ப்பட்டு விட்டேனே அய்யாவை கவனிப்பது யார்!? என்று இதயம் துடிப்பவர் மணியம்மை. எமனையாவது ஏமாற்றி விடலாம் ஆனால் அவனுடைய கணக்கப் பிள்ளையாகிய சித்திரகுப்தனை ஏமாற்ற முடியாது.

பெரியார் சித்திரகுப்தன் உண் மையிலேயே! அந்த நாள் குடிஅரசில் சூட்டு கோல் போடும் கனல் கட்டுரை களைச் சித்திரகுப்தன் என்ற புனைபெயரில் பெரியார் எழுதுவது வழக்கம். பொது வாழ்விலும் அவர் ஒரு சித்திரகுப்தனே! ஒரு ஐம்பதாண்டுப் பொது வாழ்வின் ரிகார்டை கையில் வைத்துக்கொண்டு முழங்கி வந்தவர். பெரியாரை யாராலும் ஏமாற்ற முடியாது. அவரே ஏமாந்து விடத்தயாராய் இருந்தாலொழிய பாசாங்கு செய்தோ நடந்தோ பெரியாரை ஏமாற்றவே முடியாது. அப்படிச் செய்தால் அவரை உஷார் படுத்தியது போல ஆகிவிடும்! அப்படியிருக்க பெரியார் மீது மணியம்மையார் உயிரையே வைத்திருந்தார் என்பது. பெரியாருக்குத் தெரியும் மணியம்மை யார் சுயமரியாதைக் குடும்பத்தில் பிறந்தவர் பெரியாரை அவர் நேசித்தது கொள்கைத் தலைவர் என்ற முறையில்.

தமிழ் ஓவியா said...


மணியம்மையாரின் விசுவாசமும் அன்பும் பெரியாரின் கூர்மையான சோதனைகளை மிஞ்சி நின்றன. பரிசு தமிழகத்துக்குப் பெண் குலத்தில் எவருமே பெறாத பெறமுடியாத கவுரவத்தை மணியம்மையாருக்கு பெரியார் தந்தார். 1949 இல் திராவிடர் கழகத்தில் பூகம்பமே எழுந்தது. ஆனாலும் மணி யம்மை யாருக்காக கழகம் பிளவுபட் டதைப் பற்றிக்கூட பெரியார் கவலைப்பட வில்லை ஈவெரா மணியம்மை ஆனார் இங்குச் சில வார்த்தைகள்.

மணியம்மையார் அந்த நாளில் எஸ்எஸ்எல்சி வரை படித்தவர். அதைவிட சுயமரியாதைக் குடும்பத்தவர் பகுத்தறிவுப் பிழம்புடன் முப்பது ஆண்டு அருகிலிருந்து பழகியவர். அவர் பெரியாரின் இகவுலக மனைவியார் மட்டுமல்ல பெரியாரின் கருத்தோட்டங்களை அறிந்தவர். கனிந்த அனுபவம் உடையவர். பெரியாரைப் பேணிக்காத்தது _ 95 வயது பழுத்த பழமாகி விட்ட அந்த உடலை அல்ல. வற்றாத பகுத்தறிவு ஊற்றாய் இருந்ததே அந்த உட லுக்குள் ஓர்மனம் அதற்காக பெரியாரை நன்றாக நெருக்கமாக துல்லியமாக அறிந்தவர் மணியம்மையார்.

அவரைத் தலைவ ராக்கி கழகப்பணிகளை நீடிப்பதென திருச்சி பெரியார் மாளிகையில் கூடிய திராவிடர் கழக முக்கியஸ்தர்கள் ஒரு மன தாக முடிவு செய்திருக்கிறார்கள். இதோ பெரியார் போய்விட்டார். இனிமேல் கருப்புச் சட்டைக் காரர்களுக்குள் அடித் துக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்த வட்டாரங்கள் ஏமாற்றம் அடைந்தன.

திருச்சியில் திராவிடர் கழக மேலிடம் செய்த முடிவுகள் முக்கியமாக மூன்று. மணியமையாரின் தலைமையில் கழகப் பணிகளை பெரியார் உயிரோடு இருந்திருந் தால் என்னென்ன கிளர்ச்சிகளை (தமிழ்ச் சமுதாய இழிவு ஒழிப்புக்காக) நடத்த திட்டமிட்டிருந்தோமோ அவற்றை அப்படியே நடத்துவதென்பது முதல் முடிவு. மற்ற இரண்டு முடிவுகள் இதைப் போலவே முக்கியமானவை. எக்கார ணத்தைக் கொண்டும், எந்தச் சூழ்நிலை யிலும் கழகம் தனது கொள்கைகளில் இம்மியும் விட்டுத்தராது தமிழ் நாட்டுப் பொதுவாழ்வில் கடுமையான பத்தியங் களைக் கொண்டது திராவிடர் கழகம் மட்டுமே. அப்பத்தியம் என்ன தேர் தலில் ஈடுபடுவதில்லை அரசியலில் நேரடி பங்குகொள்வதில்லை என்பது வீரமணி யின் வாசகத்தில் கூறுவதென்றால்.

தமிழ் ஓவியா said...


நம் உயிர் இருக்கும்வரை தேர்தல் பக்கம் பதவிப் பக்கம் ஓட்டுச்சாவடிப் பக்கம் தலைவைத்து படுக்கமாட்டோம் படுக்கமாட்டோம், படுக்க மாட்டோம் எக் காரணத்தைக் கொண்டும் நமது கொள் கைகளை எவருக்கும் விட்டுத்தரமாட் டோம். இது மகத்தான முடிவு. இதைவிட பெரிய முடிவு இன்னொன்று. தமிழகப் பொதுவாழ்வில் திராவிடர் கழகம் தனித் தன்மையுடன் தொடர்ந்து நடக்கும் என்ற தீர்மானம் இதைவிட மகிழ்ச்சி தரக்கூடிய முடிவு தமிழினத்துக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.

ஏனெனில், திராவிடர்கழகம் சாதாரண ஸ்தாபனம் அல்ல; இந்திய காங்கிரசுக்கு ஈடான -_ எதிரிடையான ஸ்தாபனம் ஒன்று கொள்கை ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் ஒன்று இருக்குமானால் அது திராவிடர் கழகமே. மூர்த்தி சிறியதாயி ருக்கலாம் ஆனால் கீர்த்தி பெரியது. ஸ்தாபன ரீதியாக திராவிடர் கழகம் இலட்சோப லட்சம் தொண்டர்களை கொண்டதாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் போர் வீரனுக்குரிய மிடுக்கும் ஒழுங்குமுறைகளும் கொண்டது குறியும், நெறியும், கொள்கை உறுதியும் சபலப் பலவீனம் அற்ற ஆயிர மாயிரம் வைர நெஞ்சங்களைக் கொண்ட கோட்டை தி.க. இந்த ஸ்தாபனத்தை கை ஆயுதமாக கொண்டு தான் பெரியார் தமிழ் நாட்டு வரலாற்றை தன்னிச்சைப்படி மாற்றி அமைத்தார். இன்னும் சொல்வதென்றால் இந்தியாவிலேயே திராவிடர் கழகத்தைப் போன்ற பலமானதொரு ஸ்தாபனமே இல்லை எனலாம்.

1973 டிசம்பர் 24 வரையில் எப்படியென்றால், ஒரே ஒரு தலைவர் அவர்களது ஒரே வழி இவர் இடும் ஒரே ஒரு ஆணை எல்லாத் தொண்டர்களின் பார்வையும் ஒரே திக்கில் ஒரே குறியில்! உதாரணமாக, கடலினைக் காட்டி பாய்! என்று பெரியார் ஆணையிட்டால் ஏன்? என்று கேட்காமல் பாய்ந்துவிடக்கூடிய கட்டுப்பாடுமிக்க தொண்டர்களை (ஆர்எஸ்எஸ் என்ற இந்து வகுப்பு வெறி அமைப்பினைத் தவிர எங்குமே காணமுடியாது? தேர்தல்களில் நிற்க அனுமதிக்காததின் மூலம் பெரியார் தனது படையின் வீரத்தை மிடுக்கை அப்படியே காப்பாற்றி வந்திருக்கிறார்! பார்ப்பனரல்லாதார் இயக்கம் அடுத்து சுயமரியாதை இயக்கம் ஆகிய இரண்டின் சுத்தமான நேரடியான வாரிசு நாங்கள் என்று மார்தட்டிக் கூறக்கூடிய நெஞ்சுறுதி யும், மரபுப்பெருமையும் உடையவர்கள் திகவினர். அரசியலில் ஈடுபடாமலே அரசியலின் போக்குகளைத் திசைகளை தமிழர்நலனுக்கு_மேம்பாட்டுக்கு தமிழரின் விரோதிகளுக்கு விரோதமாகத் திருப்பி விட்டுக்கொண்டே வந்தவர் பெரியார்! அரசியலில் ஈடுபடாமல் சமுதாயத்தைத் திருத்தி அமைக்க முனைவது தான் திரா விடர் கழகத்தில் பலத்துக்கும் சுத்தத்துக் கும் வேர்க்காரணம். கழகத்தின் தனித் தன்மை என்பதே இதிலிருந்து முளைப்பது தான்.

தமிழ் ஓவியா said...


ஆக இந்த அம்சத்தைத் திருத்த தீர்மானம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத் துவது நிம்மதியைத் தரவல்லது _ தமிழினத் துக்கு அதை விடவும் மகிழ்ச்சிக்குரியது ஒன்று இருக்குமானால் திராவிடர் கழகம் தனித்தன்மையுடன் தொடர்ந்து இயங்குமென்ற முடிவை முதல்வர் கலைஞர் கருணாநிதி மனமார பாராட்டி வரவேற் றிருப்பது. இந்த முடிவு எங்களுக்கு தெம்பை உற்சாகத்தை, நல்ல ஆறுதலை அளிக்கிறது என்று கூறியிருப்பதன் மூலம் கலைஞர் கருணாநிதி அவருடைய அபூர்வ அரசியல் தெளிவுக்குச் சான்று காட்டியிருக்கிறார்.

தமிழ் ஓவியா said...


ஆன போதிலும், திராவிடர் கழகத்தை தனித்தன்மையுடன் நடத்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல - அதிலும் பெரியார் இல்லாத கழகத்தை என்பதைக் குறிப்பிட்டே தீர வேண்டியி ருக்கிறது. ஏனெனில், பெரியார் தனித் தலைவர் இந்தியாவே கண்டிராத அபூர்வ தலைவர் தமிழ்நாடு கண்டிராத அசாதா ரணத் தலைவர். அவர் தனக்கென்று எதை யும் நாடாதவர், தமிழினத்தின் தர்ம சத்திரம் போல, திராவிடர் கழகத்தை அவர் வைத் திருந்தார். அவருடைய வேர்க் கொள்கை ஒன்றே ஒன்றுதான்.

அது தமிழினத்தின் இழிவு எல்லாம் நீங்கி மானமும், மரியாதையும், கவுரவமும் சுயமரியாதையும் உடைய இனமாகி வளம் கொழித்து அறிவு ஆர்ந்த வாழ்க்கை வாழ வேண்டுமென்பது தான் தமிழர் கவுரவம் அடைவதற்காக தன் கவுரவமடையவும் பெரியார் தயங்கியதில்லை.

தமிழினம் உயர்வதற்காக தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளவும் கூடியவர், அரசியலில் எந்தப் பதவியையும் வார்ப்பட்டை அறுந்து போன மிதியடியைப் போல அவர் கருதினார். பதவி, பட்டம் - நாடாத மனம், ஒரே வெறி, ஒரே கொள்கை -_ தமிழி னத்தின் இழிவுக்குக் காரணமான சக்திகளை கருத்துக்களை ஒடுக்குவது, மூச்சு ஒடுங்குவது வரை அது ஒன்றே தாய்க் கொள்கை மற்ற கொள்கைகள் எல்லாம் இந்தத்தாய் கொள்கை பெற்றெடுத்த குழவிகளே! இக்கொள்கைப் போராட்டத் தில் அவருக்கு உறவு குறுக்கிட முடியாது.

தமிழ் ஓவியா said...

நண்பர் கள் கிடையாது. சொந்தம் - பந்தம் கிடையாது; இப்படிப்பட்ட தனித்தலைமை தமிழினம் இன்னொரு தடவை காண முடியுமா - என்பதே சந்தேகம். ஆக இந்தத் தனித்தலைவரின் தனித்தலைமை இயல் பாகவே திராவிடர் கழகத்துக்கு தனித் துவத்தைத் தந்து வந்தது.

இந்தத் தனித் தலைமையின் மூலம் திராவிடர்க் கழகம் என்ற தேரை - பெரி யார் சடார் -சடாரென திசை திருப்பிய துண்டு சில மேற்கோள்கள். 1954வரை காங்கிரசைக் கடுமையாக எதிர்த்து வந்த பெரியார், 1954இல் ராஜாஜியை வெளியேற்றி விட்டு காமராசர் வந்தவுடனே இருவருடைய நினைவை மோப்பம் பிடித்து, 1954-இலிருந்து 67 வரை பச்சை தமிழருக்கு நாமாவளி பாடி வந்தார்! தனது சுயநலத்துக்காகவா? தமிழரின் நலனுக்காக.

காமராசரைக் கருவியாகக் கொண்ட தன் குறிக்கோளை நிறைவேற்றிக் கொண்டார்! அதுபோலவே 1967 தேர்தலில் திமுகவை மூர்க்கமாக எதிர்த்து வந்த பெரியார் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அண்ணா பெரியாரைத் தேடி திருச்சிக்கு போய்ச் சந்தித்து தனது இதயத்தைத் திறந்து காட்டியவுடனே காமராசருக்கு அப்படியே, பிரிவு உபச்சாரம் தந்து விட்டு, சுத்தத் தமிழர் அண்ணா ஆட்சியையும், அதன் பிறகு பகுத்தறிவு ஆட்சியான கருணாநிதி ஆட்சி நிலையையும் பலமாக ஆதரித்து வந்தார். ஆக அவ்வப்போதைய சூழலுக்கு ஏற்ப தனிக் கோணத்தில் தனி வழியில் தனிக் கொள்கை எடுக்கும் ஆற்றல் பெரியாருக்கு எப்பொழுதுமுண்டு. இதனால் கட்சி அரசியலில் அவர் மாட் டிக் கொண்டதே இல்லை, அதோடு புனுகுப் பூனைக் கூண்டில் புலி அடைபட முடியுமா! அதுவே விரும்பினாலும்? அவரை எந்தக்கட்சியினாலும் கட்டிப் போட முடியாது. அவர் வடிவம் அத்தகையது.

திராவிடர் கழகத்திலுள்ள எந்த தலைவருக்கும் மட்டுமின்றி ஏன் தமிழகத்தின் தலைவர்கள் யாருக்குமே அந்த வடிவம் கிடையாது. ஆதலால் பெரி யார் இல்லாத திராவிடர் கழகம் தனது அரசியல் நிலைகளை மேற்கொள்ளும் பொழுது உஷாரும் - உன்னிப்பும் காட்டுவது அவசியம். இதை எழுதுவது தமிழினப் பாசமுடைய ஏடு ஒன்றின் விமர்சகன் என்பதைக் குறிப்பிட்டே தீரவேண்டியிருக் கிறது. அரசியல் போக்குகள் - _ நிகழ்ச்சிகள் எப்படி மாறினாலும் திராவிடர் கழகம் தமிழினத்தின் பொது ஸ்தாபனம். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட தன்மான ஸ்தா பனம் என்ற பெயரைக் காப்பாற்றிக் கொள்ளும் பெரிய பொறுப்பு திராவிடர் கழகத் தலைவர்களுடையது. இவ்வளவு காலம் பெரியாருடன் _- பெரியாரின் கீழ் பழகிப் பெற்றுள்ள தேர்ச்சியும் _ அனுபவ மும் அவர்களுக்கு நிச்சயம் இந்த சாதுரி யத்தை அளிக்கும் என்று நம்பலாம்.

பெரியார் இல்லாத திராவிடர் கழகம் தனது பணியைத் தொடர்ந்து நடத்துவது உண்மையிலேயே ஆச்சரியம்! தி.க தலை வர்கள் தங்கள் நிலைகளை கோணங்களை அணுகு முறைகளைப் பெரியாரின் கொள் கைகள் என்ற உரைகல்லில் அவ்வப்போது உரைத்துப் பார்த்துக் கொள்வதில் சிறிது சோர்வு காட்டினாலும் விபரீதம் விளையக் கூடிய வாய்ப்பு இருக்கவே செய்கிறது. இதை திராவிடர் கழகத்தின் முன்னணித் தலைவர்கள் உணர வேண்டிய அளவுக்கு உணர்ந்து இருப்பதற்குரிய ஜாடைகள் நன்றாகத் தெரிகின்றன. இதை விட நிம் மதியை தரக் கூடியது தமிழனத்துக்கு வேறு என்ன இருக்க முடியும்?

நன்றி: தமிழ்முரசு 3.2.1974, சிங்கப்பூர்

Read more: http://viduthalai.in/e-paper/92187.html#ixzz3KjaUOfqL

தமிழ் ஓவியா said...

பார்ப்பன நச்சரவம் இன்னும் சாகவில்லை


கூனிக்குறுகிக் கிடந்த தமிழ்ச் சமுதாயத்தைத் தள்ளாத வயதிலும், ஓயாது ஒழியாது தட்டியெழுப்பி யது தந்தை பெரியாரின் கைத்தடிதான்.

இந்தக் கைத்தடியின் அடி பட்ட பார்ப்பன நச்சரவம் புற்றிலேதான் ஒளிந்து கொண்டிருக் கிறதேயொழிய இன்னும் சாகவில்லை. தந்தை பெரியார் இல்லை என்ற துணிச் சலில்தான் ஆர். வி.எஸ். ஆட்சிக் காலத் திலே வெளியே வந்தது. காலங் காலமாக தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, இனமக்களின் நன்மையைத் தீண்டியது.

அம்மா அவர்களின் தலைமையிலே அந்த நெருக் கடி காலக் கொடுமை களையும் தாண்டினோம்.

அடிபட்ட ஆரிய ஆதிக்க நச்சர வங்கள் இன்னமும் வலம் வந்து கொண்டுதான் இருக்கின் றன. இந்த இயக்கம் ஒன்று இல்லாவிட்டால், தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் சமுதாய நலம் காக்க யார் இந்த நாட்டில் இருக்கிறார்கள் இந்த இயக்கத்தை விட் டால் தமிழ் மக்களுக்கு வேறு நாதி உண்டா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

தமிழகத்தின் இருண்ட காலமான மிசா ஆட்சிக் காலத்திலே காவல்துறை கமிஷனராக இருந்த கிருஷ்ணசாமி அய்யர் தன்னுடைய சொந்த இலாகா விலே தனக்குக் கீழே வேலை பார்த்த ஆறு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மேல் மோசடியான பொய் அறிக்கை தயாரிக்க எவ் வளவு முயன்றிருக்கின் றார் என்பது நீதிபதி இஸ்மாயில் கமிஷனர் அறிக்கையிலே மிகத் தெளிவாகக் கூறப்பட்டி ருக்கிறது.

அவர்தான் இன்றைக்கு லஞ்ச ஒழிப்புக் கமிஷ னின் உயர் அதிகாரியாக இருந்து கொண்டு லஞ் சத்தை ஒழிக்கப் பணி யாற்றிக் கொண்டிருக் கிறார். அரசு ஊதியத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அதி காரிகள் நிலை என்னவாகும் என் பதை தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பதிலே எங்களுக்கு கருத்து வேறு பாடு கிடையாது. இந்த சமுதாயத்திலே ஒவ்வொரு இடத்திலும் நேர்மையும், நாணயமும் இருக்க வேண் டும். சமூக ஒழுக்கம் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

ஆனால் நாணயத் தைக் காப்பாற்ற வேண் டிய இடத்திலே மோசடி யான அறிக்கை தயாரித்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மக்களை ஒழித்து விட எண்ணம் கொண்ட ஒருவரை அரசாங்கம் உட்கார வைத்திருக்கிறதே இது நியாயம்தானா? என்பதை தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண் டும்.

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தாற் போல என்று சொல்வார் களே; அப்படி இருந்தால் இந்த நிர் வாகத்திலே நீதியும், நேர்மையும் காக்கப் படுமா என்பதை சிந்தித் துப் பார்க்க வேண்டும்.

மாண்புமிகு முதல மைச்சரவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். கடந்த 8 மாத காலத் திலே லஞ்ச ஊழல் வழக் கிலே தொடுக்கப்பட்ட வழக்கிலே ஒரு பார்ப் பனராவது உண்டா? வழக்கு தொடுக்கப்பட் டவர்கள் அத்தனை பேரும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் தானே! லஞ்சம் வாங்குவது என்ற பொய்க் காரணங் காட்டி பார்ப்பனரல்லாத மக்களை ஒடுக்குவது ஒழிக்கப் பாடுபடுவது என்ன நியாயம்?

இந்த நாட்டு பார்ப் பனர்கள் எல்லாம் மோசடியின் மொத்த உரு வம் என்பது சரித்திரம் சொன்ன உண்மையா யிற்றே... அப்படிப்பட்ட பார்ப்பனர்களைப் பாதுகாக்க இப்படி ஒரு அமைப்பா? இப்படி ஒரு தலைவரா? அதுவும் நீதிக்குத் தலை வணங் குகிற ஆட்சியில் சரி தானா? என்பதை சிந்தித் துப் பாருங்கள்.

கடந்த 60 ஆண்டு காலமாக தந்தை பெரியார் அவர்களின் கடும் உழைப் பினால் ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்கள் எல்லாம் வகுப்புவாரி பிரதிநிதித் துவத்தாலே பதவிக்கு வந்தார்கள். அவர்களை யெல்லாம் பொய்யைச் சொல்லி மோசடியாக ஒழிக்க முற் படுவது என்ன நியாயம்?

அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த முற்பட்டால் அதை இந்த இயக்கம் ஒரு போதும் அனுமதிக்காது.

7.4.1978-இல் நடந்த நெல்லை சூளூரை நாள் கூட்டத்தில் தமிழர் தலைவர்

தமிழ் ஓவியா said...

சமூகநீதிக் காவலர் ஆசிரியர் கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி!
விடுதலை ஆசிரியர் வீரமணி
அய்யாவின் அடிச்சுவட்டில் நடைபோடும் வீரமணி
தமிழர் தலைவர் வீரமணி!

மானமிகு,தொண்டறம், வாழ் விணையர், வாழ்க்கை இணை ஏற்பு விழா எனப் புதுப்புதுச் சொல் லாக்க வீரர் வீரமணி!

தீண்டாமைக் கொடுமை இன்றும் சில குக்கிராமங்களில் உள்ளதே. இதனை நீக்க என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால் பிரச்சாரம், போராட் டம், சட்ட நடவடிக்கை என்னும் மூன்று வழிகள் வாயிலாகத் தான் அதனை ஒழிக்க முடியும் என்று சொன்ன சிந் தனையாளர் வீரமணி.

1944 நவம்பர் 19ஆம் நாள் சென்னை இராயபுரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகத் தொடக்க விழாவில் அறிஞர் அண்ணா, பேராசிரியர்அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் 11 வயதில் உரையாற்றித் தந்தை பெரியார் அவர் களால் தங்கப் பதக்கம் அணிவிக்கப் பெற்ற வீரமணி.

தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோது இனி திராவிடர் கழகம் இருக்குமா, இருக்காதா என்று யாரோ அவசரக்காரர்கள் கேள்வி கேட்க, நம்முடைய இளவல் வீரமணி அவர்கள் இரண்டும் இருக்கும். திராவிடர் கழகம் இணையாது.

அதே நேரத்தில் அணை யாது என்றும் அவர்கள் சொன்ன அந்தச் சொல் திராவிடர் கழகம் என்ற அமைப்புக்கு மாத்திரமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்புக்கு மாத்திரமல்ல, தந்தை பெரியார் அவர்கள் ஏற்றி வைத்த திராவிட இயக் கத் தீபத்திற்கு அவர்கள் அன்றைக்கு வழங்கிய உறுதிமொழிதான் இது. அந்தத் தீபத்தை அணையாமல் காப்பாற்ற இரண்டு கரஙகள். அந்தத் தீபத்தை இன்றைக்குப் பிடித்திருக் கின்றன. ஒரு கரம் என்னுடையது மற்றொரு கரம் நம்முடைய இளவல் வீரமணி அவர்களுடையது என்ற பெருமையைக் கூறி தலைவர் கலைஞர் உயர்த்திப் பிடித்தாரே அந்தப் பெருமைக்கு உரியவர் வீரமணி.

உற்ற நோய் நோன்றலும் ஊர்நலம் ஓம்பலும்
நற்றவம் என்பர் தொண்டென நவில் வார்!
தொண்டு மனப்பான்மை அந்தத் தூயரைக் கொண்டது குழந்தைப் பருவத்திலேயே!
தமிழர் அடிமை தவிர்த்துக் குன்றென
நிமிர்தல் வேண்டும் என்று நிகழ்த்தும்
பெரியார் ஆணைஒன்றே பெரிதெனக்
கருதிய கருத்து வீரமணியை
வீண் செயல் எதிலும் வீழ்த்தவில்லை!
அண்டிப் பிறரை அழிக்க அல்ல
உண்டிக்கல்ல உயர்வுக்கல்ல
தொண்டுக்காகக் கல்வித் துறையில்
சேர்ந்தோன் எம்.ஏ. தேர்விலும் தேர்ந்தோன்
நினைவின் ஆற்றல் நிறைந்த வீரமணி
படிக்கும் நேரத்திலும் பார்ப்பனர் கோட்டையை
இடிக்கும் நேரம் எட்டுப் பங்கதிகம்
தமிழர் நமக்கும் தமிழ் மொழிக்கும்
உழைப்பதே உயர்ந்த செல்வமாய்க் கொண்ட
மாண்பார் வீரமணி!

என்றுபுதுவைப் பாவலர் புரட்சிக் கவிஞரின் கவிதைப் பூக்களால் சூட்டப் பட்ட வீரமணி.
ஆபத்துகளில் எல்லாம் பெரிய ஆபத்து பண்பாட்டுப் படையெடுப்பு ஆகும். படையெடுப்புகளில் எல்லாம் மிகக் கொடுமையானது இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு.

நாம் பல காலம் சுட்டி வருவது போல, மற்ற அரசியல் படையெடுப்பும், பொருளாதாரப் படையெடுப்பும் புறப்பகைகள்; காலிலும் கைகளிலும் பூட்டிய விலங்குகள். ஆனால் பண்பாட்டுப் படையெடுப்போ அகத் தில் புகுந்து எளிதில் வெளியேற்ற முடியாத அளவுக்குப் பதிந்த நோய்க் கிருமி முறையில் பூட்டப் பெற்ற விலங்கு ஆகும் அதனை உடைக்கும் போதோ அகற்றும் போதோ மிகவும் இலாவகமாக அதனைச் செய்ய வேண்டும். மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்றுவதில் மருத்துவர்கள் எவ்வளவு கவலையுடன் கடமையாற்று கிறார்களோ அதைவிடப் பன்மடங்கு அதிகமான பொறுப்புடனும் கவலை யுடனும் செயலாற்ற வேண் டும்; மிகவும் துணிவும் மனத்திண்மையும் இருந் தால் ஒழிய அதில் எல் லோராலும் ஈடுபட்டு விட முடியாது என்று கூறித், தமிழ்ச் சமூகம் உணர வைத்தவர் வீரமணி.

தந்தை பெரியார் தமிழ கம் கடந்து, இந்திய மண் ணின் முக்கடல், இமயம் கடந்து, இன்று அமெரிக்கா, ஜெர்மனி, அய்ரோப்பிய நாடுகளில், கிழக்காசிய நாடுகளில் என மக்கள் மன தில் இடம் பெறச் செய்து பெரியார் உலகமயமா கிறார் என்று உணர்த்தி வருபவர் வீரமணி.

10.8.1969 விடுதலையில் தந்தை பெரியார் தோழர் வீரமணி அவர்கள் நான் உள்படப் பலர் வேண்டு கோளுக் கும் விருப்பத்திற்கும் இணங்கக் கழகத் திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து பத்திரிகைத் தொண் டையும் பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக் கொண்டு தொண்டாற்ற ஒப்புக் கொண்டு குடும் பத்துடன் சென்னைக்கு வந்துவிட்டார்.

இது நமது கழகத்திற்கு கிடைக்க முடியாத ஒரு பெரும் நல் வாய்ப்பு என்றே கருதித் திரு வீரமணி அவர் களை மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கு இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தப் பகுத்தறிவுப் பகலவன் மனம் திறந்து நெஞ்சம் நிறைந்து வரவேற்று எழு திய மாமனிதர் நம் தலைவர் வீரமணி.

தமிழ் ஓவியா said...


அய்யாவிற்குப் பின் அம்மா மணி யம்மையார் மருத்துவமனையிலிருந்து கழகக் கிரீடத்தைத் தூக்கித் தன் பிள்ளை என்று கருதிய பிள்ளையின் தலையில் அணிவித்தாரே அந்த பிள்ளையான வீரமணி.

நீ யாரைச் சொல் கிறாயோ, யாரை நீ விரும்பு கிறாயோ அவர்களையே செயற்குழுவில் இடம் பெறச் செய்வேன் என்ற அளவிற்கு அம்மாவின் நம்பிக் கையைப் பெற்ற ஒரே ஒருவர் வீரமணி.

20.11.1958ஆம் நாளிட்டு -_ 56 ஆண்டு களுக்குமுன் பேரன்பு டையீர், 1958ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை 5 மணி அளவில் செல்வன் கி. வீரமணி எம்.ஏ., செல்வி கி. மோகனா ஆகியவர்களுடைய வாழ்க் கைத் துணை ஒப்பந்த நிகழ்ச்சி திருச்சி பெரியார் மாளி கையில் நடைபெற ஏற்பாடு செய்ய ப்பட்டிருப்பதால் அந் நிகழ்ச்சிக்கு அருள் கூர்ந்து தாங்கள் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தங்கள் அன்புள்ள
ஈ.வெ. ராமசாமி
ஈ.வெ.ரா. மணியம்மை

என்று திருமண அழைப்பிதழ் அனுப் பிய பேறுபெற்ற வீரமணி.

இன்று -_ திராவிடர் கழகத் தலைவர், பத்திரிகை ஆசிரியர், நூலாசிரியர், பல்கலைக் கழகவேந்தர், நாற்பதுக்கும் மேற்பட்ட கல்வி, தொண்டு ஆகிய நிறு வனங்களை நிருவகிப்பவர் எனப் பெரும் உழைப்பும் எல்லையற்று உடையவர் வீரமணி.

58 வயது என்றாலே அது ஓய்வுக் காலம் எனப் பொருள் கொள்ளப்படும் நாட்டில் பத்து வயது முதல் 83 வயது வரையிலான பொது வாழ்வு என்பதான அளப்பரிய சாதனை உடையவர் வீரமணி. அது மட்டுமா?

உலகிலேயே ஒரு பத்திரிகையின் ஆசிரியராக 50 ஆண்டுகளுக்கு மேல் பொன் விழாக் கண்ட ஆசிரியராக விளங்கியவர் என்னும் சாதனைக்கு உரியவர் வீரமணி.

இப்படிப் பெருமைகள் -_ சிறப்புக்கள் _ உயர்வுகள் _ முறியடிக்கவியலாச் சாதனைகள் பலப்பலவாகும்.

ஆனால், இவை சிறப்பானவைதான். உயர்வானவைதான் _ ஆனாலும் _ ஆனாலும் நாம் ஆனாலும் அவர் என்றும் சமூகநீதிக் காவலராகக் களத் தில் நிற்கிற ஒரு சாதனை இருக்கிறதே அது முறியடிக்கப்படாத சாதனை. பிறரால் மட்டுமல்ல. மற்றவர்களால் மட்டுமல்ல. அவராலேயே முறியடிக்க முடியாத சாதனை.

டெல்லியிலே பெரியார் மய்யம் இடிக்கப் பெற்றது. ஆனால், மீண்டும் எழுந்து நிற்கிறது பெரியார் என்னும் புயல் டில்லியிலே என்றும் மய்யம் கொண்டிருக்கிறது. யாரால் இவரால் _ தமிழர் தலைவரால். ஆம்! எப்படி அகில இந்திய அளவிலே மாண்புமிகு இந்தியத் தலைமை அமைச்சராக விளங்கி வி.பி. சிங் சாதனை புரிந்தாரோ அதே போன்று தமிழக வரலாற்றில் சமூக நீதிக் காவலர் சமூகநீதியை வென் றெடுத்த வீரர் வெற்றி மணியாம் வீர மணியே ஆவார். எப்படி?

தமிழ் ஓவியா said...

இதற்காகவா?

சென்னை ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் எழும்பூர் இரயில் நிலையத்திற்குப் போகும் முனையில் கம்பீரமாகச் சிறுவர்களுடன் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மை நிற்கும் சிலை ஒன்றினைக் கண்டிருக்கலாம். இந்தச் சிலை அந்த இடத்தில் இடம் பெற்ற வரலாற்றின் பின்னே ஒரு வரலாறு இருப் பதைப் பலரும் அறிய மாட்டார்கள்.

அந்த இடத்தில் அன்னையாரின் சிலையை நிறுவியவர்கள் திராவிடர் கழக மகளிர் அமைப்பினர் அப் போதைய சென்னை மாநகரக் காவல் துணை ஆணையாளராக இருந்தவர் பார்ப்பனர். அந்த இடத்தில் சிலையை நிறுவிடத் தடையாகப் போக்குவரத் திற்கு இடைஞ்சல் என்று போலிக் காரணம் காட்டி மறுத்து வந்தார்.

சிலையை நிறுவிய மகளிர் அமைப்பினர் எவ்வளவோ வாதாடியும் தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை மணியம் மையாருக்குத் திடல் அருகே அமைப் பதற்குத் தடைக்கற்கள் பரப்பி வந்தார். சிலை திறப்புக்கு உரிய நாள் கிட்டே நெருங்கி வந்தது.

மகளிர் அமைப்பாளர்கள் ஆசிரியரி டம் வந்து நிலைமையை நேரில் விளக் கினர். அப்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் தனிப்பட்ட எந்தக் கோரிக் கைக்காக மட்டுமின்றி, 69 விழுக்காடு இடஒதுக்கீடு தவிர்த்த வேறு எந்தப் பிரச்சினைக்கும் முதல மைச்சரை ஆசிரியர் சந்தித்த தில்லை. எனவே இப்போது மகளிர் வேண்டு கோளை நிறைவேற்ற கட்டாயம் என் பதைவிட மணியம்மையார் சிலை திறப்பு என்பது மிகவும் முதன்மையானது.

அன்று மாலை தஞ்சை யில் நடைபெறும் நிகழ்விற்கு ஜெயலலிதா வருதாக ஏற்பாடு. எனவே காலையில் முதல்வரைச் சந்திக்கத் தமிழர் தலைவர் சென்றபோது, ஜெய லலிதா கேட்ட கேள்வி என்ன மிஸ்டர் வீரமணி. என்னைச் சாதார ணமாகச் சந்திக்க மாட்டீர்களே என்ன விஷயம்? அம் மாவின் சிலை திறப்புக்கு ஆணையாளர் விதித்த தடை குறித்து விளக்குகிறார் ஆசிரியர். சரி, நான் கவனிக்கிறேன் என்பது முதல் வரின் பதில்.

தஞ்சையில் சமூக நீதி காத்த வீராங் கனை பட்டம் பெறும். விழாவிற்கு மாலை முதல்வர் வருகிறார். அவரை வரவேற்க ஹெலிகாப்டர் இறங்கு மிடத்தில் நின்ற கலெக்டர், வெங்கடாச் சலம் அவர்கள் தமிழர் தலைவரிடம் இந்த விழா ஏற்பாட்டாளர்கள் நீங்கள். எனவே புரோட்டோ காலின்படி நீங்களே முதலில் முதல்வரை வரவேற்க வேண்டும் என்று கூறிவிடவே, முதல் வரை வரவேற்க ஆசிரியர் நிற்கையில் முதலமைச்சர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும்போதே என்ன மிஸ்டர் வீரமணி சிலை நிறுவ ஆணை பிறப் பித்து விட்டேனே.

அரசாணை பிறப்பித்திருக் கிறேனே பார்த்தீர்களா? என்று கேட்டிருக்கிறார். திருச்சி புறப்படும்முன் மதியம் தொலைக் காட்சிச் செய்தி களைப் பார்ப்பது வழக்கம். ஆதலால் அவற்றைப் பார்த்ததைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துக் கொண்டார். தமிழர் தலை வர் அரசியல் நாகரிகம் காப்பதில் அதே வேளையில் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதில் பின் நின்ற தில்லை என்பதற்கு இந் நிகழ்வு சான்றாகிறது. இத்தகவல் கூட ஆசிரியர் இதுவரை வெளியிட்ட தில்லை. மகளிர் அமைப்பினர் ஒருவர் வாயிலாக அறிந்தோம். இதற்காகக் கூட இல்லை பின் எதற்காக? என்று காண்போம்.

கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டுவதற்குப் பகுத்தறிவாளர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். தசரதனைக் குறித்துப் பாடுகையில் கண்ணிழந்தான் பெற்றிழந்தான் என்று பாடுவார் கம்பர்.

அந்த நிலையிலான சோதனை 1947 விடுதலைக்குப் பின் 1948 மே திங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஏற் பட்டது இப்படித்தான்.

1928இல் வகுப்புரிமைச் சிற்பி எஸ். முத்தையா முதலியார் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணை காலம் காலமாகக் கல்வி மறுக்கப்பட்டு வந்தவர்களுக்குக் கல்வி வாயிலாகத் திறந்து வைத்தது. ஆனால் விடுதலைக்கு ஓராண்டிற்கு முன் இடைக்கால அமைச் சரவையில் முதல்வரான தல்குதாரி பிரகாசம் பந்துலு அய்யர், சட்ட சபையில் 20.8.1946-இல் தாம் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணைக்கு எதிரி என வெளிப்படையாக முழங்கினார். விடுதலை கிடைக்கட்டும் வகுப்புரிமை ஆணையை ஒழித்துக் கட்டுகிறேன் பார் என்றும் அறைகூவல் விடுத்தார்.

தமிழ் ஓவியா said...


ஆந்திரத்துக் காங்கிரசுப் பார்ப்பனர் தென்னட்டி விசுவநாதம் என்பவர் 1947ஜூலையில் மேலும் ஒரு படி ஏறி அதனை ஒழிக்கத் தீர்மானமே கொண்டு வந்தார். ஆயினும் பார்ப்பன ரல்லாத சட்டமன்ற உறுப்பினர் முயற்சியால் அவர் தீர்மானம் தோற்றுக் குப்பைக் கூடையில் வீசி எறியப்பட்டது.

விடுதலைக்குப்பின் டில்லித் துரைத் தனத்தார் பிற்படுத்தப்பட்டவர்க்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்று டில்லி மாநிலங்களுக்குத் தாக்கீது அனுப்பியும் ஆட்சிக் கட்டிலில் இருந்த தாடி வைத்திடாத பெரியார் ஓமந்தூர் பெரியவளவு ராமசாமியார் அதனை ஏற்க மறுத்து இடஒதுக்கீட்டை அரிய ணையில் ஏற்றினார்.

அதன்பிறகுதான் நீலிக் கண்ணீர் வடித்து அரசாணை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று பார்ப் பனர் ஒருவர் வேண்டிடப் பார்ப்பனரே நிரம்பிய சென்னை உயர்நீதிமன்றம் ததாஸ்து ததாஸ்து என அவாளின் வாதத்தை ஏற்றதுதான் கொடுமை.

மாணவப் பருவத்திலேயே -_ தந்தை பெரியார் அறிவித்த மாணவர் வேலை நிறுத்தத்தில் மாணவர் வீரமணி கலந்து கொண்டார். இடஒதுக்கீட்டுக்குச் சொந் தம் கொண்டாடக் கூடிய தமிழகத்தின் ஒரு கட்சித் தலைவர் ஆசிரியர் வீரமணி ஒருவரும் அவர் தந்தை பெரியார் அறிவித்த போராட்டத்தில் கலந்து கொண்டார் எனில் சமுதாய உரிமைக் குக் குரல் கொடுக்க அன்றே ஒரு நாயகன் உருவாகி விட்டார். பாக்யராஜ் திரைப்படம் ஒன்றில் ஒரு நாயகன் உதயமாகிறான். மக்கள் இதயமாகிறான் என்று பாடிக் கதாநாயகனாக மாறு வதைக் காட்டுவதுதான் நம் நினைவுக்கு வருகிறது.

தந்தை பெரியார் எந்த அரசியல மைப்புச் சபை, அரசமைப்புச் சட்டத்தை எழுதி அளித்ததோ அதைக் கொண்டே அதில் திருத்தம் செய்து நிறைவேற்றச் செய்த வரலாறு அனைவரும் நன்கு அறிந்ததே

1979இல் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் இரண்டாம் பிற்படுத்தப் பெற்றோர் குழு அமைந் தது. பெரியார் மறைவிற்குப்பின்பட்டை தீட்டப் பெற்றது. 31.12.1980இ.ல் மண்டல் அறிக்கை அளித்தும் அதன் பரிந் துரைகள் என்னவென்று அறிவிக்கப் படாமல் மோடி மஸ்தான் வித்தை யாகவே பத்து ஆண்டுகளும் கழிந்தன. பத்து ஆண்டுகளில் வீரமணிப் புலி என்ன செய்தது. பதுங்கி விட்டதா? படுத்து உறங்கிக் குறட்டை விட்டதா? உறுமிக் கொண்டு இருந்தது.

அந்த உறுமல்களின் மறுபெயர்தான் அடுக் கடுக்காக நடத்திக் காட்டிய போராட் டங்கள் தொடர்ச்சியாக மாநாடுக,ள் தொய்வில்லாத சமூக நீதிக்கான சாலை அமைக்கும் பணி வேறு யாராவது ஆயின் வெறுத்து ஒதுங்கி நம் முயற்சி வீணோ என்று வேறு வேலையில் இறங்கி விடுவர். ஆசிரியர் வீரமணி யிடம் அதுதான் இல்லை.

தமிழ் ஓவியா said...


16 போராட்டங்கள் - ஆம்! 16 போராட்டங்கள் சமூக உரிமைக்காகச் சமூக நீதிக்காக 44 மாநாடுகள் திறவாத கதவுகளைத் திறக்கச் செய்ய கேளாக் காதுகளைக் கேட்கச் செய்ய பார்க்காத கண்களைப் பரிவு காட்டச் செய்ய. இந்தியாதான் இந்திரா என்றார்களே! இவர்தான் இளைய பாரதத்தின் எழுச்சி நாயகர். நவீன பாரதத்தின் சிற்பி. புத்துலகு காணப் புறப்பட்டவர் என்று மொழிந்தார்களே அவர்கள் ஆட்சிகள் தோன்றின. மறைந்தன, இடஒதுக்கீடு மட்டும் எட்டாக் கனியாகவே இருந்தது என்பது ஒளிவு மறைவில்லாத உண்மை வரலாறு.

வந்தார் தலைமை அமைச்சராகப் பிற்படுத்தப்பெற்றவர்களின் விடி வெள்ளி. விசுவநாத் பிரதாப் சிங் எனும் சமூக நீதிக் காவலர் இந்தத் தமிழகச் சமூகநீதிக் காவலர் என்னும் நெருப்பு அந்தப் பெரு நெருப்புடன் நட்புக் கொண்டது.

தமிழ் ஓவியா said...


இந்தக் காந்தம் அந்த இரும்புத் துண்டை இழுத்துக் கொண்டு விட்டது. ஆம்! இந்தச் சமூக நீதிக் காவலர் -_ அந்தச் சமூக நீதிக் காவலரை அதே மொழியில் அழைப்பித்துச் சிறப்பித்தார். 52 விழுக்காடு மக்கள் தொகைக்கு 27 விழுக்காடு கிடைத்தது. போரில் வெற்றி கிடைத்தது. ஆனால் போர்ப் படைத் தளபதி பதவியிழந்து பாவிக்கூட்ட மேற்படியார்களின் சதியால் வெளியேறினார்.

இதற்கு முன்தை, இடஒதுக்கீட்டுக்கு அப்போதைய முதல்வரான எம்.ஜி.ஆர். வருமானத்தை வழிகாட்டியாகக் கொண்டு ஆணை ஒன்று பிறப்பிக்க 9000 ரூபாய் அரசாணை என்னும் இருட்டுக் கவ்வுவதை முதலில் கண்ட வீரமணி என்ற வெளிச்சக் கதிரவன் எதிர்ப்பு எனும் முதல் ஒளியைப் பாய்ச்சினார். நல்ல வாய்ப்பு என்பது இதுதான் என்பதோ என்னவோ தமிழர் தலைவர் வாதம் எடுபட்டது. 9000 வருமான உச்சவரம்புத் திரை அகன்றது.

அத்துடன் பிற்படுத்தப் பெற்றோருக்கு இருந்த இடஒதுக்கீடு அளவு 31 விழுக்காடு என இருந்தது. 50 விழுக்காடு என உயர்த்தினார். மொத்த இடஒதுக்கீடு தாழ்த்தப் பெற்றோர் ஒதுக்கீடு சேர்த்து 69 விழுக்காடு என உயர்ந்தது. பிற் காலங்களில் அது 50 விழுக்காடு எனும் எல்லைக் கோட்டைத் தாண்டக் கூடாது என உச்சநீதிமன்றம் அழிச்சாட்டியம் செய்தது.

தமிழ் ஓவியா said...

இதனைக் காட்டி ஒருவர் வழக்குப் போட்டார் அரசியலமைப்புச் சட்டக் கூறு 31 (சி) இன்படி மாநில அரசுக்குத் தனிச் சட்டம் இயற்றும் உரிமை உள்ளது என்பதை எடுத்துக் காட்டியது தமிழர் தலைவரின் வழக்கறிஞர் மூளை. அன்றைய ஆளும் கட்சி அ.தி.மு.க. முதலமைச்சர் செல்வி ஜெய லலிதா நாடாளுமன்றத் தலைமை அமைச்சர் பி.வீ. நரசிம்மராவ் குடி அரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா ஜெயலலிதாவின் ஆட்சியில், அரசில் ஆயிரம் குறைபாடு கள் உண்டு. ஆனால் இந்தச் சமூகநீதிக் கான சட்டம் நிறைவேற்றியதற்குப் பாராட்டிடத் தவறுவதில்லை.

ஆசிரியர் நிறைவேற்றப்பட வேண் டிய சட்டத்தையே தாமே! உருவாக்கி அளித்து தமிழகச் சட்டப் பேரவையில் எதிர்ப்பார் எவருமின்றி நிறைவேற்றச் செய்தார். அரசமைப்புச் சட்டம் இணைப்பு ஒன்பதில் அதைச் சேர்த்திட அரசமைப்புச் சட்டம் திருத்தப் பெற வேண்டும். அரசமைப்புச் சட்டம் ஏற்கெனவே 75 முறை திருத்தப் பெற்றது. இப்போது 76ஆவது முறை யாகத் திருத்த வேண்டியிருந்தது.

தமிழ் ஓவியா said...

முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் உருவாக்கிய சாதனையாளர் தந்தை பெரியார் வழியில், தமிழர் தலைவர் இடஒதுக்கீட்டின் பொருட்டு அரசமைப்புச் சட்டத்தை திருத்திடச் செய்த செயற்கரிய செயலைச் செய்து காட்டி வரலாற்றில் சமூகநீதிக் காவலராக உயர்ந்து நிற்கிறார்.
இத்திருத்தத்திற்குக் காரணமான முதலமைச்சர், இந்தியத் தலைமை அமைச்சர் குடிஅரசுத் தலைவர் ஆகிய மூவரும் பார்ப்பனர் எனில் தமிழர் தலைவரின் சாதனைப் பெருமை இமயம்போல் எவ்வளவு உயர்ந்தது என்பதைத் தமிழ்ச் சமூகம் உணரும்.

அடுத்து சமூகநீதி அடிச்சுவட்டில் மய்ய அரசு நடத்தும் உயர்கல்வி நிலை யங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட் டிற்கான சட்டங்களையும் அரசமைப்புச் சட்டத் திருத்தங்களையும் மய்ய அரசு கொண்டு வரவும் தமிழர் தலைவர் காரணமாக இருந்தார் என் பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.

தமிழர் தலைவரின் பெருஞ் சிறப்பு நாம் முதன்முதலாகச் சுட்டிக் காட்டிய பெருமைமிகு வரிசையில் அமைந்திருந் தாலும், ஆதிக்கச் சிறுபான்மையின் வல்லாண்மையிலிருந்து 97 விழுக் காட்டுப் பெரும்பான்மையினரைக் காத்ததில் தான் இருக்கிறது.

நம் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுத் தரும் சமூகக் காவலராக முழு மூச்சாய் உழைப்பதற்கு உள்ள ஒரே மாமனிதர் தமிழர் தலைவரைத் தவிர வேறு எவரும் இல்லை என்று உறுதிப்படக் கூறலாம். எனவே, தமிழர் தலைவரின் பெருமைகள் சிறப்புக்களில் எல்லாம் விஞ்சி நிற்பது தந்தை பெரியாரின் மறைவிற்குப் பின் கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து தம் தோள்மீது சுமந்து திரிகிறார் தமிழர் தலைவரும் சமூக நீதிக் காவலருமான வீரமணி.

தமிழ் ஓவியா said...

வேதனையில் சாதனை படைப்பவர்


1980களில் அரசியல், பத்திரிக்கைகள் இரண்டும் எனக்கு சிறுவயது முதலே அதிகமாகியது. அதற்குக் காரணம், என் தந்தை திரு வண்ணாமலை மாவட்ட காஙகிரசில் முக்கியப் பிரமு கராக இருந்தார். காலை எழுந்தவுடன் படிப்பு என் றால் தினத்தந்தி, தினமலர், நாத்திகம், தினமணி என் றாகிப்போனது. எப்போது அப்பா பேப்பரைப் படித்து விட்டுக் கீழே போடுவார் என்று ஒரு கண்ணால் பாடப் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டே மறுகண்ணால் ஏங்கிய காலமது. அப்போது தேசிய அளவில் இந்திரா _ மொரார்ஜி சண்டை, கலைஞர் -_ எம்.ஜி.ஆர். ஆகியோரின் அறிக்கைப் போர், மூப்பனார் _- சிவாஜி ஆகியோரின் கோஷ்டி சண்டை போன்றவை பத்திரிக் கைச் செய்திகளில் அதிகம் இடம்பிடிக்கும். அதேபோல் ஆசிரியரின் அறிக்கைகள் சிறுசிறு செய்தியாக பத்திரிக்கைகளில் வெளிவரும்.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதில் ஆழமாகக் கருத்துச் சொல்வது ஆசிரியரின் பாணி என்பது அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது. 7, 8, 9, 10ஆம் வகுப்புகள் படிக்கும் போது மாலையில் சிறப்பு வகுப்பு உள்ளது என்று பொய் சொல்லி திருவண்ணாமலையில் அப்போது இருந்த கலைஞர் படிப்பகம், ப.உ.தியாகராசன் படிப்பகம், இளைஞர் நற்பணி மன்றப் படிப்பகம், மாவட்ட நூலகம் ஆகியவற்றில் பத்திரிக்கைகளை படித்து வந்ததால் தீவிர ஆத்திகனா யிருந்த நான் மெல்ல மெல்ல நாத்தி கனானேன்.

நெற்றியில் போட்டிருந்த மூன்று பட்டையும், பொட்டும், சிறிது சிறிதாக மாறி நெற்றி சுத்தமானது. அப் போது ஆசிரியர் எழுதிய கோவில்கள் தோன்றியது ஏன் என்ற புத்தகம் என் லேசான மயக்கத்தையும் முற்றாகப் போக்கி முழுப் பகுத்தறிவாளனாக மாற்றியது.

தமிழ் ஓவியா said...


இந்திராகாந்தி, கலைஞர், எம்.ஜி.ஆர். சிவாஜி ஆகியோரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறி கி. வீரமணியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என்னை மிகுந்த ஆவலுக் குள்ளாக்கியது. 1983 என்று நினைவு அப்போது பெரியார் சிலை அருகில் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே ஆசிரியர் நடந்து வருகிறார். ஓடிப் போய் பேசலாம், கைகுலுக்கலாம் என்று எண்ணி சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு புறப்படும்போதுதான் தெரிந்தது ஆசிரியரவர்களின் துணைவியாரின் தாயார் இறுதி ஊர்வலத்தில் நடந்து வருகிறார் என்று. ஆனா லும் வணக்கம் சொல்வோம் என்று வணக்கம் வைத்தேன்.

சிறு புன்முறுவலுடன் பதில் வணக்கம் செய்து சென்றார். அப்போதி லிருந்து அவர் புத்தகங்கள், விடுதலையில் வரும் கட்டுரைகள் என்று வாங்கிப் படித்தேன். இயக்க ரீதியாக தொடர்பு கொள் ளவில்லையே தவிர கொள்கை ரீதியாக, புத்தக வாயிலாக ஆசிரியரின் பேச்சுகளை, கருத்துகளை கேட்டுக் கொண்டிருந்தேன்.

தமிழ் ஓவியா said...

சென்னை டாக்டா அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சோந்தவுடன் கழக மாண வரணியில் இணைந்து பணியாற்றியபோது ஆசிரியரை நெருங்கிப் பார்த்து அவரின் நல்ல பண்புகளை முழுவதும் உணர்ந்தேன். 30.10.1988ல் நடந்த இளைஞரணி, மாணவரணி பயிற்சி முகாமில் கலந்து கொண்டு இயக்க வேலைகளை எப்படி செய்ய வேண்டுமென்று அறிந்து கொண்டேன். அப்போது இந்திய அரச மைப்புச் சட்டத்தைப் பற்றியும், முதலா வது திருத்தம் தந்தைப் பெரியாரால் எவ்வாறு ஏற்பட்டது என்பதை விரிவாக வும், விளக்கமாகவும், நுட்பமாகவும், திட்பமாகவும் எடுத்துரைத்த பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது.

அதனால் சட்டக் கல்லூரியில் பயிலும் காலத்தில் ஆசிரியரின் கூட்டம் எங்கே நடந்தாலும் கலந்து கொள்வதும், அவர் பேசும் கூட்டங்களை சட்டக் கல்லூரி கழக மாணவரணி சார்பில் ஏற்பாடு செய்யும் விதமாக இருந்தேன். 1990 முதல் 1993 வரை நான்காண்டுகள் சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் உரையாற்றுவார். நாங்கள் படிக்கும்போது சட்டக் கல்லூரியில் மாணவர் மன்றம் இல்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக கல்லூரி விடுதியிலும் கல்லூரி யிலும் கவிஞர் கலி. பூங்குன்றன் மற்றும் ஆசிரியரையும் அழைத்து கூட்டம் -நடத்தினோம். கூட்டத்தின் இறுதியில் பார்வையாளர்களின் கேள்விக்கு ஆசிரியர் அளிக்கும் விடை அற்புதமாக இருக்கும். அந்தப் பேச்சுக்களும், வினா-_விடைகளும் கழகத்தின் சார்பில் அப்போது ஒலி நாடாவாக விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பெரும் வரவேற்பும் இருந்தது. சட்டக்கல்லூரி படிப்பு முடித்து வக்கீலான போது ஆசிரியர் எனக்கு கூறிய அறிவுரை, எவ்வளவுக்கெவ்வளவு படிக்க முடியுமோ அவ்வளவு படியுஙகள்.

தமிழ் ஓவியா said...

ஒரு கமா, புல் ஸ்டாப் ஆகியவற்றுக்குக்கூட சட்டத்தில் நிரம்ப வேறுபாடு உண்டென்று கூறினார். பிறகு 1994ஆம் ஆண்டு 69% இட ஒதுக்கீட்டிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட ஒரு வழக்கில் நமது கழகத்தை ஒரு பிரதிவாதியாக சேர்க்க வேண்டுமென்று இடை மனு (Impleading Petition) ஒன்றை தாக்கல் செய்வதற்கு ஆசிரியரிடம் கையெழுத்து வாங்கச் சென்றேன். அந்த மனுவில் தமிழ்நாட்டில் நிலவி வந்த இட ஒதுக்கீட்டு முறையைச் செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றம் செண்பகம் துரைராஜ் வழக்கைப் பற்றி அப்பிட விட்டில் குறிப்பிடப்பட்டி ருந்தது. நாம் செண்பகம் என்று கேள்விப் பட்டதைப் போலவே ‘Shenbagam Durairaj’ என்று டைப் செய்யப்பட்டி ருந்தது. அதைப் பார்த்த ஆசிரியர் ‘Chan bakam Durairaj’ என்றுதான் இருக்க வேண்டும் நன்றாகப் பாருங்கள் என்று என் தவறை உணர்த்தினர். இட ஒதுக்கீடு சம்பந்தமாக எத்தனையோ மேடைகளில் சட்டக் கல்லூரி மாணவனாக, ஜுனியர் வக்கீலாக பேசிவந்த நான் மேற்படி வழக்கின் தீர்ப்பினை படிக்காமலே பேசியது எனக்கு சுரீரென்று பட்டது. பின்பு வேகமாக வந்து சட்டப் புத்த கத்தைப் பார்த்த பொழுது ‘Chanbakam Durairaj’ என்று தான் இருந்தது. இந்த நிகழ்வின் மூலம் எந்த ஒரு புத்தகத்தையும் ஊன்றிப் படிக்க வேண்டும் என்ற எண் ணம் எனக்கு ஆழ்மனதில் வேர் ஊன்றி விட்டது..

1996-_1997 ஆண்டுகளில் ஊன்றிப் படித்து உண்மையை உணர வேண்டும் என்ற ஆசிரியரின் அறிவுரையை ஏதோ வொரு மயக்கத்தில் உணரத் தவறி அவரை விமர்சித்தேன். ஆனால் அந்த விமர்சனங்களுக்கெல்லாம் பெரியாரை உயர்த்திப் பிடித்து பகுத்தறிவுக் கொள் கைகளைப் பரப்பும் முயற்சியில் கண்ணாக அவரிருந்த காரணத்தினால் என் விமர்சனம் எனக்கே சங்கடத்தை ஏற்படுத் தியது. தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யாமல் கொள்கையை விமர்சனம் செய்யும் ஆசிரியரின் பாங்கு பெரியாரின் கொள்கையைப் பரப்பும் உண்மைத் தொண்டர் இவரே என்று நான் உணர்ந்து மீண்டும் கழகத்தில் பணியாற்ற அனுமதி கேட்க அவரைப் பார்க்கச் சென்றபொழுது மிகுந்த மகிழ்ச்சியோடு என்னை வரவேற்று அமரவைத்து எப்போதும் போலப் பேசினார். கண்களில் நீர்க் கோர்க்க நாத் தழுதழுக்க என்ன பேசுவதென்றே தெரியாமல் அமர்ந்திருந்தேன். “Ignore all the past happenings” என்று கூறி என்னைத் தட்டிக் கொடுத்து இயக்கப் பணியாற்ற அனுமதித் தது என் வாழ்க்கையில் கிடைத்த ஒரு நல்வாய்ப்பாகும்.

1976, பிப்ரவரி 2ஆம் தேதி மிசாக் காலத்தில் ஆசிரியர் அவர்கள் சென்னை மத்திய சிறையில் சிறைக் காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு அதன் காரணமாக ஏற்பட்ட வலி மூக்கிற்கும், இடப்பக்க கண்ணிற்கும் இடைப்பட்ட நரம்பு பலவீனமானது. அந்த வலி இன்றைக்கும் அவரைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக் கிறது.

தமிழ் ஓவியா said...

அ.தி.மு.க. வினர் மம்சா புரத்தில் ஆசிரியரை அடித்து முகமெல்லாம் காயம்-பட்டு ஏற்கனவே அடிபட்ட இடத் திலேயே மீண்டும் அடிபட்டு அதன் காரணமாக ஏற்பட்ட வலியும் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. உடல் உபாதைகளையும் வலியையும் பொருட்படுத்தாமல் பெரி யாரின் கொள்கைகளை மக்களி டத்தில் கொண்டு செல்வது தனக்கு ஏற்ற, உற்றபணி என்று இன்று வரை தொய்வின்றி செய்து வரு கிறார். வேதனை யிலும் சாதனை படைக்கும் அவருக் கும் நாம் உற்ற துணை யாக இருந்து, ஒப்பாரும் மிக் காரும் இல்லாத, தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமை யில் தந்தை பெரியார் பணி முடிப் போம் என்று சூளுரைப்போம்.

வாழ்க தந்தை பெரியார்
வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

மகத்தான மனிதர்


தமிழகத்தின் தலை வர்களுள் ஆசிரியர் மான மிகு கி. வீரமணி தனித் திறமும் தனிப் பெருமை யும் வாய்ந்தவர்; தலை வர்களுள் சிலர் பேச் சாளர்களாக இருப்பர்; சிலர் எழுத்தாளர்களாக இருப்பர்; இன்னும் சிலர் செயல் வீரர்களாக இருப் பர்; ஆனால், பேச்சாள ராகவும், எழுத்தாளராக வும், செயல் வீரராகவும் ஒருங்கே இருப்பவர் யாரோ ஓரிருவராகவே இருப்பர்; ஒருவர் இம்முத்திற ஆற்றலையும் ஒரு சேரப் பெறுவது அரிதினும் அரிதாகும்.

இந்த அரிய ஆற்றலுக்கு இலக்கணமாக இருப் பவர்தான் ஆசிரியர்; ஆசிரியர் என்றால் குற் றத்தைப் போக்கி நல்வழி காட்டுபவர் எனப் பொருள்; நம் ஆசிரியர், தம் பேச்சாலும், எழுத்தா லும், செயல் திறத்தாலும், தமிழ்ச் சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் அறியா மையையும், மூடத்தனத் தையும் இழிவையும் போக்க உழைத்து வரு பவர்; அவற்றின் வழி நல்வழிகாட்டுபவர்; பத்து வயது தொடங்கி என் பதைக் கடந்தும் இன்னும் உழைத்துக் கொண்டும் தொண்டாற்றிக் கொண் டுமே வருகிறார்; இடை யீடின்றி அயராது தளராது உழைத்துக் கொண்டே இருக்கிறார்; புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் என் பதற்கேற்பச் செயல்பட்டு வருகிறார்; அவரொரு உழைப்புத் தேனீ. அவரை நெருங்கிப் பார்த்தாலும் எட்டேயிருந்து பார்த் தாலும் அவ்வுண்மையை அறியலாம்.

அறமென்று கொள் ளடா செந் தமிழ்ப் பணியை என்றார் புரட் சிக் கவிஞர்; இவரோ சமுதாயத் தொண்டே அறமென்று கருதுகிறார்; அதில் தமிழ்த் தொண்டும் அடங்கும். அவரது தொண் டின் முத்திறத்தையும் ஒருவாறு சுருங்க நோக் குவது நம் கடமை; முதலில் அவரது பேச்சுத் திறத்தை அறிவது ஏற்றது.

ஆசிரியர் இளம் பருவம் தொட்டுப் பேசி வருவ தால் அவர் பண்பட்ட பேச்சாளராக விளங்கு கிறார்; அவர் பேச்சு, சாதாரண பேச்சு அன்று; அது கற்றுமுற்றியவரின் பேச்சு; அப்பேச்சு பொருள் நிறைந்தது; எளிமையும் தெளிவும் கொண்டது; பல் வகை அறிவு மிக்கது; விழிப்புத் தருவது. கேட் டாரைப் பிணிப்பதாகவும் கேளாரை வேட்பதாகவும் இருப்பது; தமிழ்ச் சமு தாயத்தைப் பண்படுத்தி வருவது; எங்கெல்லாம் தீங்கும், கேடும் தோன்று கின்றனவோ அங்கெல் லாம் போர் முரசு கொட் டுவது; எங்கெல்லாம் அநீதியும், அட்டூழியமும் முளைக்கின் றனவோ அங்கெல்லாம் புயல் எழுப் புவது; அவரது பேச்சில் கருத்தும் ஆதாரமும் அடுக்கடுக்காக வரும். அவை கேட்போரைச் சிந்திக்க வைக்கும்; தெளிவை ஏற்படுத்தும்.

அவரது பேச்சு ஊற்று நீர்ப் போலச் சலசலவென வற்றாது ஓடும். கேட் போரை இன்புறுத்தும்; ஆவலைத் தூண்டும்; அறிவைப் பெருக்கும். சில தலைவர்களைப் போல மேடைகளில் மட்டும் பேசுபவர் அல்லர் அவர்; அவர் மேடையிலும் பேசுவார்; பட்டி தொட் டியிலும் பேசுவார்; சந்து முனையிலும் பேசுவார்; சிற்றூரிலும் பேசுவார்; எங்கும் பேசுவார்; அவர் கூலிப் பேச்சாளர் அல் லர்; குடி உயரப் பேசுபவர்; ஆம், மக்களுக்காகப் பேசுவார்.

தவறான அர சாணையோ, தீங்கான சட்டமோ வேண்டாத பேச்சோ, கேடான நீதி மன்றத் தீர்ப்போ வெளி வருமாயின் அனலும் கனலும் மிக்க பதி லுரையாய் இவர் பேச்சே எரியீட்டியாய் முதலில் வெளிப்படும்; அதுவும் காலம் தாழ்த்தாது வரும். குத்தொக்க சீர்த்த இடத்து என்பதற்கேற்ப விரைந்து வரும். விரைந் துவந்து உண்மையைக் காட்டும்; நீதியை நிலை நிறுத்தும் கல் லூரிக் காலத்திலேயே பேச்சில் ஒப் பாரும் மிக்காரும் இன்றி விளங்கியவர்; இதில் இப்போதும் தனி நாயகராக விளங்குபவர். சுருங்கக் கூறின் யார் கொல் இச்சொல்லின் செல்வன் என்ப தற்கேற்ப நம்மை வியக்க வைப்பவர்.

அவர் நல்ல எழுத் தாளருமாவார்; பேச்சைப் போன்றே எழுத்திலும் வல்ல வர்; இடை வெளியின்றித் தொடர்ந்து எழுதி வருபவர். இயக்கத் தலைவராக வும் ஓய் விலாச் சுற்றுப் பயணம் மேற் கொள்பவராகவும் இருப்பவர் தொடர்ந்து எழுதுவது அரிதினும் அரிதாகும். பேசுவது எளிது; எழுதுவது மிக அரிது; அதுவும் நன்றாக எழு துவது அதனினும் அரிது; பிறரைப் போன்று ஒரு பொருளைப் பற்றி மட்டும் எழுதுபவர் அல்லர் இவர்; பல பொருள்பற்றி எழுதுபவர். இவர், தத்துவம், சமயம், அரசியல், அறிவியல், சட்டம், சமூகநீதி, வர லாறு எனப் பல துறை யிலும் எழுதுபவர்.

இப்போதும் எழுதுகிறார்; எப்போதும் எழுதுவார்; பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, மத மூடத் தனம் ஆகியன குறித்து மிகுதியாக எழு துபவராக இருப்பினும் அவ்வப்போது தத்துவம், வரலாறு குறித்தும் ஆழ மாக எழுதி வருகிறார். பகவத் கீதை குறித்தும், சமூகநீதி குறித்தும் இவர் எழுதியிருப்பது காத்திர மானவை; மத மூட நம்பிக்கை குறித்தும், பார்ப்பனீய சூழ்ச்சி குறித் தும் இவர் எழுதியிருப் பதைப் போன்று வேறொரு வர் எழுதவில்லை என லாம். பரந்து விரிந்த வாசிப்பு இருந்தால்தான் இவ்வா றெல்லாம் எழுத முடியும்; ஆசிரியர், இன்றும் ஒரு மாண வரைப் போன்றே ஓயாது. கற்று வருகிறார், பாடை ஏறினும் ஏடது கை விடேல் என்பதற்கேற்ப அவர் காட்சியளிக்கிறார்;

தமிழ் ஓவியா said...


இவரது வாசிப்பு ஒரு துறையோடு அடங்குவது அன்று; பல துறை களோடு உறவு கொண் டது; அன்றன்று வெளி வரும் புதுச் சிந்தனை கொண்ட நூல்களை விரைந்து கற் கிறார்; இதில் தளர்ச்சி கொள் ளாதவர். வெளிநாடு களுக்குச் சென்றால் இவர் முதலில் செல்வது நூலக மும், பல்கலைக் கழக மும்தாம். உலகிலுள்ள சிறந்த நூலகங்கள் எல் லாம் இவர்க்கு அத்துப் படி. தலைவர்களுள் மிகுதியாகக் கற்கும் மிகச் சிலரில் இவர் ஒருவர்; பரந்து விரிந்த வாசிப்பு இருப்பதால் தான் இவ ரால் பல துறைகளில் பற்பல நூல்களை எழுத முடிந்தது எனலாம். சிறப்பாக இவரை நூலா ருள் நூல்வல்லன் என்றே கூறலாம்.

தமிழ் ஓவியா said...

பெர்ட்ராண்டுரசல் கணிதத் தத்துவம் ((Philosophy of Mathematics) ABC of relativity சார்பியல் கோட்பாட் டிற்கான அரிச்சுவடி) போன்ற சிந் தனையாழம் கொண்ட நூல்களை எழுதியதோடு நடப்பியல் வாழ்வு குறித்து இன்பத்தின் வெற்றி (Conquest of Happiness) போன்ற நடப்பியல் நூல் களை எழுதியதுபோல நம் ஆசிரியரும் சிந்தனைக் களம் கொண்ட நூல் களை எழுதியதோடு நடப்பியல் குறித்து வாழ் வியல் சிந்தனைகள் எனுத் தலைப்பில் எளியவர்க்கும் கற்கண்டு போன்ற நூல் களையும் எழுதியுள்ளார். இந்நூல்கள் கற்றவர்க்கும் கல்லாத வர்க்கும் களிப் பருளும் களிப்பாக உள்ளன. ஆசிரியரின் இம் முயற்சி ஒரு நன்முயற்சி என்றே கூறலாம்.

இயக்க வேலைகளும், சுற்றுப் பயணங்களும் இவரை நெருக்கினும் அயராது எழுதிக் கொண்டிருக் கிறார். இது வியப்புக் குரியது. எழுதுவதற்கு ஒய்வும் மன அமைதியும் மிக வேண்டியன; இவை இல்லாவிடின் எழுத முடியாது. ஆசிரியர் மிகுந்த பணிச்சுமையிலும் இவற்றை எப்படியோ ஏற்படுத்திக் கொள்கிறார். இதுகாறும் அவர் தொண் ணூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளா ரெனில் அவரது உறுதி யையும், ஆற்றலையும் நன்கு உணரலாம்.

இந்நூல்களுக்கிடையே தம் சுய வரலாற்றையும் எழுதி வெளியிட்டுள் ளார்; மேலும் எழுதி வருகிறார். சுயவரலாற்றை எழுதுபவர்களுள் சிலர் தம் நூல்களுக்குக் கவர்ச் சியான தலைப்புகளைச் சூட்டுவார்கள்; அந்தத் தலைப்பே நம்மைப் படிக்கத் தூண்டும். எடுத்துக்காட்டாக, ஹிரேன் முகர்ஜி எழுதிய Potrait of parliament; Reflections and recollections, எம். My own boswell லாவின் Fight for freedom, என்.ஜி. ரங்காவின் My days ஆர்.கே. நாராயணனின் விஹ் பீணீஹ் போன்ற நூல்களின் தலைப்புகள் குறிப்பிடத் தக்கன; நேரு தம் சுய சரிதைக்கு மிக எளி மையாக An autobiography என்றே எளிய பெயர் வைத்ததைப் போன்று நம் ஆசிரியரும் தம் நூலுக்குப் பெரியார் அடிச்சுவட் டில் எனப் பெயர் வைத் துள்ளார்.

இரு நூல்களின் தலைப்புகள் எளிமையாக இருந்தாலும் உள்ளடக்கத் தில் அருமை கொண் டவை. பெரியார் அடிச்சுவட்டில் எனுந் தலைப்பு ஆயிரம் பொருள் பொதிந்தது. அவற்றை இங்கு விரிக்க முடியாது. சுருக்க மாகக் கூறின் தம் அறிவுப் பேராசானின் சிந்தனையையும் தொண் டையும் என்றென்றும் பரப்பும் சீராசான் தான் என்பதையும் தந்தை வழியில் தொண்டாற்றும் தனயன் தான் என்ப தையும் அத் தலைப்பு நினைவுறுத்துகிறது. இது தானே தந்தை பெரி யாருக்குச் செய்யும் கைம் மாறு! அதனைத்தான் ஆசிரியர் செய்திருக்கிறார்.

தமிழ் ஓவியா said...


ஆசிரியரின் பேச்சுத் தொண்டையும், எழுத்துத் தொண்டையும் பார்த்தோம்; ஆனால், அவரது சமுதாயத் தொண்டோ பெரும் பெருமை கொண்டது. நின்று போகவிருந்த விடுதலை நாளிதழுக்கு வாழ்வளித்தார்; இடஒதுக்கீட்டில் 69% விழுக்காட்டிற்கு உயிர் கொடுத்தார். இவற்றைப் போன்று பலவற்றைக் கூற முடியும்.

அவற்றைப் பலரும் அறிவர். தந்தை பெரியாரின் இறப்புக்குப் பின் அவர் சாதித்த சாதனைகள் பற்பல; அவை வரலாற்றில் தடம் பதிப்பவை; பெரியார் காலத்தில் வெளிவந்த நூல்களின் அமைப்பும் வடிவமும் வேறு வேறு; ஆசிரியர் காலத்தில் வெளிவரும் நூல்களின் அமைப்பும் வடிவமும் வேறு; வேறு; அவர் காலத்தில் வெளிவந்த விடுதலையின் பொலிவு வேறு; இவர் காலத்தில் வெளிவரும் விடுதலையின் பொலிவு வேறு; நடிக வேள் எம்.ஆர். ராதா அரங்கும், பெரியார் நூலகமும் மிகவும் எழில் பொங்கும் இடங்களாக உள்ளன; இவற்றிற்கெல் லாம் காரணம் யார்? ஆசிரியர் தானே! ஆசிரியர் எதிர்கால நோக் குக் கொண்ட ஒரு திட்ட வல்லுநர்; பேரறிஞராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும் எதிர்கால நோக்கும் திட்ட வல்லமை யும் இல்லையென்றால் பயனில்லை; வெற்றி பெற முடியாது.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் காலத் தில், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நாகம் மையார் குழந்தைகள் இல்லம் போன்ற சில இருந்தன; இப்போதோ மழலையர் பள்ளி, மெட் ரிகுலேசன் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், முதியோர் இல் லங்கள், உயிரித் தொழில் நுட்ப ஆய்வகங்கள், இலவச மருத்துவமனை கள், அய்.ஏ.எஸ்., அய். பி.எஸ்., பயிற்சி நிறுவ னங்கள், கணினி மய்யம், மகளிர் மேம்பாட்டு நிறு வனம் இப்படி நாற்பதுக் கும் மேற்பட்ட நிறுவ னங்களைக் கூடுதலாக ஆசிரியர் உருவாக்கியிருப் பது அவரது நிருவாக மேலாண்மையையும், திட்ட வல்லமையையும் புலப்படுத்துவதாகும். இதுதான் முக்கியமானது; மிக முக்கிய மானது. தந்தை பெரியார் காலத் தில் பத்தாக இருந்ததை நூறாகப் பெருக்கியுள் ளார் ஆசிரியர். தந்தை பெரியார் பெயரில் வலைக் காட்சியையும், ஊடகத் துறையையும் அமைத்தும், அவரது நினைவாகத் தில்லியில், இரு இடங் களில் பெரியார் மய்யத் தையும் அமைத்துள்ளார்.

பெரியாரின் எழுத்து களையும் பேச்சுகளையும், கடவுள், மதம், ஜாதி பெண்ணியம், தீண்டாமை பகுத்தறிவு ஆகிய தலைப்புகளில் தொகுதி தொகுதிகளாக ஏற்கெ னவே வெளியிட்டிருப்ப தோடு, குடியரசில் வெளி வந்த தந்தை பெரியாரின் எழுத்துகளையும், பேச்சுகளையும் தொகுத்து இப்போது கால வரிசை யில், உயர்ந்த தாளில், நல்ல வடிவில், அழகிய எழுத்தில், சிறந்தகட்ட மைப்பில் 42 தொகுதி களாக வெளியிட்டிருப்ப தும், பெரியாரின் எழுத் துக்களை ஆங்கிலத்தில் வெளியிட்டிருப்பதும், வரலாற்றுச் சாதனை யாகும்; நூல் பதிப்புப் பணியில் பல்கலைக் கழகத்தையும் அவர் விஞ்சி யுள்ளார்.

அரசு அதி காரத்தில் இருந்த, இருக் கும் கட்சிகள்கூட, தம் தலைவர்க்கோ இயக்கத் திற்கோ செய்யாத -_ செய்ய முடியாத அரும் பெரும் பணிகளை ஆசிரியர் செய்து முடித் திருக்கிறார். இப்படி, இந்திய அளவில் யாரும் செய்திராத வரலாற்றுப் பணியை ஆசிரியர் செய் திருக்கிறார். வரலாற்று நாயகருக்கு (தந்தை பெரியாருக்கு) வரலாற் றைப் படைத்து ஆசிரியரும் வரலாறாகி விட்டார்.

ஆசிரியர் இவ்வாறு எல்லாப் பணிகளிலும் உள்நுழைந்து முனைந்து செயற்படுபவராக இருப் பினும், அவரது தணியாத அறிவுத் தேடலும், அறிவு வேட்கையும் பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்தத் தேடலும், வேட் கையும் செயல் திறனும் தான் அவரைப் புகழ் பூத்த தலைவராக நிலை நிறுத்தியுள்ளன. அவரது தேடலுக்கு ஒரு நிகழ்வை எண்ணிப் பார்ப்பது ஏற்றது. தலைவர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். அவர்கள் தாய் நாட்டிற்குத் திரும் பும்போது எதை யெதையோ கொண்டு வரு கின்றனர்.

நம் ஆசிரியர் வெளிநாட்டிற்குச் சென்று வந்தால், புது நூலையோ, புதுச் செய்தியையோ கொண்டு வருவார். அது முற்றிலும் புதுமையான தாக இருக்கும். பல முறை அவர் இலண்டனுக்குச் சென்றுள்ளார். அப் போது ஒவ்வொரு முறை யும் புதியதைக் கொண்டு வருவார்.

ஒரு முறை இலண்டனிலிருந்து திரும் பும்போது செக்மண்டூஃப் ராய்டின் அதுவரை கிடைக்காதிருந்த அவரது கிடைத்தற்கரிய அரிய பேச்சை ஒலிநாடாவாகக் கொண்டு வந்திருந்தார். ஃப்ராய்டைப் பலர் அறிந்திருந்தாலும் அவரொரு தீவிரமான உறுதி வாய்ந்த நாத்திகர் என்பதை பலர் அறியார். நாத்திகத்தைப்பற்றி அவர் பேசிய பேச்சு அறிவியல் நோக்குக் கொண்டது. அதனை அவர் லண்ட னில் செவி மடுத்ததோடு நின்று விடாமல், அவ்வு ரையைப் பலரும் கேட்க வேண்டுமென் பதற்காக ஒருமுறை பெரியார் திடலில் அதனை ஒலி பரப்பினார்.

இதிலிருந்து ஆசிரியரின் தேடலையும் பகுத்தறிவைப் பரப்பும் பணியையும் அறியலாம். அவரது எல்லாப் பணி களையும் ஒருங்கு நோக் கின் அவர் ஒரு மகத்தான மனிதர் என்பதை உணரலாம்; செயற்கரிய செய்வர் பெரியார் எனும் வள்ளுவர் வாய்மொழிக்கு அவர் இலக்கணமாவார்; இப்போது சொல்லுங்கள் அவர் மகத்தான மனிதர் தானே! ஆம், அவரொரு விந்தை மனிதர்.

Read more: http://viduthalai.in/e-paper/92159.html#ixzz3Kjcwwcfc

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 82ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா மு.க.ஸ்டாலின், வைகோ, ஆ.இராசா வாழ்த்து


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 82ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா
மு.க.ஸ்டாலின், வைகோ, ஆ.இராசா வாழ்த்து

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தொலைபேசிமூலம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செய லாளர் வைகோ, மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா ஆகியோர் தங்களின் வாழ்த் துக்களையும், மகிழ்வினை யும் தெரிவித்துக் கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி ஸ்டாலின், திமுக தலைவர் கலைஞரின் உதவியாளர் சண்முக நாதன், இனமுரசு சத்தியராஜ், பெரியார் ஆப்பி ரிக்கன் பவுண்டேசன் சாலை மாணிக்கம், கானா நாட்டிலிருந்து எழிலரசன், மும்பையி லிருந்து சு. குமணராசன், இரவிச்சந்திரன், சென்னை மண்டலத் தலைவர் தாம்பரம் தி.இரா.இரத்தினசாமி, மூத்த வழக்குரைஞர் தியாகராசன், திராவிடர் கழக சட்டத்துறை தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், வழக்குரைஞர் நாகநாதன், துபாய் மூர்த்தி ஆகியோர் தொலைப்பேசி வாயிலாக தமிழர் தலைவர் தம் பிறந்தநாள் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டனர்.

ஜெர்மனியிலிருந்து...

பெரியார் பன்னாட்டமைப்பு ஜெர்மனி ஸ்வென், கிளாடியா, ஜெர்மனி பேராசிரியை உர்லிக் நிக்கலஸ், குவைத் செல்லப் பெருமாள், லியாகத் அலிகான், பொறியாளர் சுந்தரராஜூலு குடும் பத்தினர் ஆகியோரும் தங்களின் வாழ்த்துகளையும், மகிழ்வினையும் தெரிவித்துக் கொண்டனர்.

காங்கிரசு கட்சியின் மேனாள் தலைவர் கே.வி. தங்கபாலு, ராஜா சிறீதரன் (SRMU), துரை. காசி ராஜன், மணப்பாறை, எழுத்தாளர் வி.சி. வில்வம், ப.சேரலாதன், லால்குடி அன்புராசா, திராவிடர் கழக மாநில மகளிர் பாசறை பொருளாளர் திருப்பத்தூர் அகிலா, திருப்பத்தூர் நகர மகளிரணி கவிதா, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலிருந்து துணைவேந்தர் நல்.இராமச்சந் திரன், நூலகர் நர்மதா, பதிவாளர் அசோக்குமார், பெங்களூருவிலிருந்து ஜே.கே., திண்டுக்கல் சுரேஷ், துபாய் அமுதரசன், திருச்சியிலிருந்து பன்னீர், வடலூர் இரமாபிரபா, யாழ்.திலீபன் ஆகியோர் தமிழர் தலைவர் அவர்களின் 82ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வை குறுஞ்செய்தி மூலம் தெரி வித்துக் கொண்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/92306.html#ixzz3KwnoPqBM

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சனி பகவான்

சனிபகவான் சன்னதி யில் தீபம் ஏற்றி வழிபட் டால் சகல தோஷங் களும் நீங்கி சகல யோகமும் கிடைக்குமாம். குறிப்பாக தஞ்சை மாவட்டம் சூரியனார் கோயில், திருமங்கலக் குடி மங்களேஸ்வரர் கோயில்கள் சிறந்தவை. யாம் நமக்கு ஒரு சந் தேகம்! இந்த ஊர்களி லேயே குடியிருக்கிறார் களே அவர்களுக்கு எந்த அளவு தோஷங்கள் நீங் கின? யோகங்கள் சிக்கின? புள்ளி விவரம் உண்டா?

Read more: http://viduthalai.in/e-paper/92313.html#ixzz3KwnyPWOJ

தமிழ் ஓவியா said...

காரணமல்ல...


மறைமுகமாகச் செய்துவிட்டுத் தப் பிக்கப் பார்ப்பவர், இராமனைப்போல் பேடியும், அயோக்கியனுமே ஆவார் கள். குற்றம் செய்தவர்கள் தப்பித்துக் கொள்ள வசதி அளித்திருப்பதாலும், நல் வாழ்வும், சுயநலமும் பெற வசதி இருப் பதாலும் குற்றங்களும், குற்றவாளிகளும் அதிகமாகிறார்களே ஒழிய, மனிதச் சுபாவமே காரணமல்ல.
(விடுதலை, 30.12.1965)

Read more: http://viduthalai.in/page-2/92314.html#ixzz3KwoBvkWC

தமிழ் ஓவியா said...

தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் முதல் இடம் பார்ப்பனருக்கே!


சுதந்திரம் அடைந்த இந்தியாவில் தீண்டாமையின் நிலைபற்றி அமெரிக்காவைச் சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக் கழகத்தின் சமூக பொருளாதார மய்யம், இந்திய மனிதவள மேம்பாட்டு மய்யத்துடன் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. சமூக தளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆய்வது, கணிப்பது இதன் விழுமிய நோக்கமாகும்.

அப்படி எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவு என்ன கூறுகிறது என்பது மிகவும் முக்கியமானது.

தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் பார்ப்பனர் கள்தான் முதலிடத்தில் இருக்கின்றனர் பார்ப்பனர்களில் 54 விழுக்காட்டினர். தீண்டாமையை அனுசரிப்பதில் உறுதியாகவே உள்ளனர். தீண்டாமையை அனுசரிப்ப தில்லை என்று கூறும் பார்ப்பனர்கள் கூட, பொது இடங்களில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், வீட்டில் ஆச்சாரம் கடைப்பிடிக்கப்படும் என்று கூறியதையும் கவனிக்க வேண்டும்.

மதவாரியாக எடுத்துக் கொண்டாலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் தீண்டாமையை அதிகம் கடைப்பிடிக்கின்றனர். (35%) என்றும் ஆய்வு கூறுகிறது.

பார்ப்பனர்களால் பிரச்சினை ஏதும் இல்லை - பார்ப்பனர் அல்லாதார்தான் தாழ்த்தப்பட்டவர்களை அவமதிக்கின்றனர் என்று மேதா விலாசமாகப் பேசுகிறவர்களின் கண்கள் இனிமேலாவது திறக்க வேண்டும்.

அடிப்படையில் இந்து மதத்தின் ஆரிய வேராக இருக்கக் கூடியவர்கள் பார்ப்பனர்கள்தாம். மேம் போக்கில் அவர்கள் திருந்தி விட்டதாகக் வேடம் கட்டிக் கொள்கிறார்களே தவிர, உள்ளப் பாங்கில் அவர்கள் அடிப்படைவாதிகளே!

தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொல்லுகிற சங்கராச்சாரியார் தானே அவர்களின் ஜெகத்குரு? தீண்டாமைபற்றி காந்தியார், காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதியைச் சந்தித்துக் கேட்டுக் கொண்டும்கூட சங்கராச்சாரியார் என்ன சொன்னார்?

சாஸ்திரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள் அவர்கள் மனம் நோகும்படி தன்னால் நடந்து கொள்ள முடியாது என்று தானே காந்தியாரிடமே கூறினார்.

சாஸ்திர நம்பிக்கையாளர்கள் மனம் நோகக் கூடாது என்பதில்தான் ஜெகத் குருக்களின் எண்ணம் தோய்ந்து கிடக்கிறதே தவிர - தீண்டாமை என்னும் கொடுமையால் இழிவுபடுத்தப்படுகிற, உரிமைகள் மறுக்கப்படுகிற கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின், மனம் படும் துயரம்பற்றி ஜெகத் குருக்களுக்குக் கவலையில்லை எனபதையும் கவனிக்க வேண்டும். இன்னும் ஆண்டுக்கொரு முறை ஆவணி அவிட்டம் என்ற பெயரில் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்களே, அதன் பொருள் என்ன? தாங்கள் துவி ஜாதியினர் - இரு பிறவியாளர்கள் - பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் - பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்று சொல்லாமல் சொல்லுவதாகத்தானே பொருள்.

தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கோயில்களில் அர்ச்சகராகும் உரிமை வேண்டும் என்று தந்தை பெரியார் தெரிவித்த கருத்தும், திராவிடர் கழகத்தின் முயற்சியும் - தி.மு.க. அரசின் சட்ட ரீதியான செயல் பாடுகளும் முடக்கப்பட்டு இருப்பது ஏன்?

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றம் சென்று அதனை முடக்கியவர்கள் யார்? பச்சைப் பார்ப்பனர்கள்தானே? சங்கராச்சாரியார் சிபாரிசும், மறைந்த ராஜாஜி அவர்களும் தானே ? இல்லை என்று மறுக்க முடியுமா?

பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் கோயிலின் அர்ச்சகராக ஆனால் சாமி சிலை தீட்டுப்பட்டு விடும் என்று வைகனாச ஆகமத்தை உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்காட்டியவர்கள் பார்ப்பனர்கள் தானே!

சங்கர மடங்களில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் சங்கராச்சாரியாகும் பொழுதுதான் உண்மையான சுதந்திரம், தீண்டாமை ஒழிப்பு நிலவுவதாகப் பொருள் என்று பார்ப்பனரான காகா கலேல்கர் கூறவில்லையா!

தாழ்த்தப்பட்டவர்கள் சங்கராச்சாரியாராக ஆவது ஒருபுறம் இருக்கட்டும்; குறைந்தபட்சம் சங்கரமடத்தில் ஒரு பணியாளராக தாழ்த்தப்பட்ட ஒருவர் நியமிக்கப் படுவாரா என்பதை சவால் விட்டே கேட்கிறோம்.

சிறீரங்கம் கோயில் கோபுரம் கட்டப்படுவதற்கு பெரும் அளவு நன்கொடை அளித்த இசைஞானி இளையராஜாவுக்கு குட முழுக்கு விழாவில் குறைந்த பட்சம் ஒரு ஆடை போர்த்திக் கவுரவிக்கத் தவறியது ஏன்?

காஞ்சி சங்கர மடத்தில் சரிக்குச் சமமாக நாற்காலி போட்டு சுப்பிரமணிய சாமிகள் உட்காருவதும், மாண்புமிகு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தரையில் உட்கார வைக்கப்படுவதும் ஏன்?

சங்கரமடத்தின் பார்வையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல; பார்ப்பனர் அல்லாதவர்கள் அத்தனைப் பேரும் தீண்டத்தகாதவர்கள் தான் என்பது இதன் மூலம் தெற்றென விளங்கவில்லையா?

ஒரு பல்கலைக் கழகமே ஆய்வு செய்து வெளிப்படுத்திய தற்குப் பிறகும்கூட, பார்ப்பனர்கள் நல்லவர்கள், அவர்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரச்சினை இல்லை என்று பம்மாத்துப் பேசுவதைப் பார்ப்பனர் அல்லாதார் கைவிட வேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள்.

பார்ப்பனர் அல்லாதார் தீண்டாமையைக் கடைப் பிடித்தால் கண்டிப்பாக சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் திராவிடர் கழகத்துக்கு மாற்றுக் கருத்தும் கிடையவே கிடையாது.

Read more: http://viduthalai.in/page-2/92317.html#ixzz3KwoNcWeG

தமிழ் ஓவியா said...

மாடுகளே தேவையில்லை: வருகிறது செயற்கைப் பால்

மாடுகள் வேண்டாம். பண்ணைகள் வேண்டாம். செயற்கையாகப் பால் தயாரிக்க முடியும் என்று அமெரிக்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் ஆராய்ச் சியை மேற்கொண்ட பெருமாள் காந்தி, ரையான் பாண்டியா, இஷா தத்தார் ஆகிய மூவர் அணியினர் செய்ற்கைப் பால் தயாரிப்புக்காக மூபிரீ என்ற பெயரில் ஒரு கம்பெனியைத் தொடங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு ஜூலை வாக்கில் தங்களது பால் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஈஸ்ட் போதும். அதை அடிப்படையாக வைத்து பயோ-எஞ்சினீரிங் முறையில் செயற்கைப் பால் தயாரிக்கப் போகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அடிப்படையில் பால் என்பது என்ன? ஆறு வகைப் புரதங்கள். எட்டு வகையான கொழுப்புப் பொருட்கள், அவ்வளவுதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.

செயற்கைப் பால் தயாரிப்பு முறையில் சிறிது மாற்றங்களைச் செய்வதன் மூலம் பசும் பால், எருமைப் பால், ஆட்டுப் பால் என பலவகை யான பால்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. செயற்கைப் பால் பார்வைக்கு அசல் பாலைப் போலவே இருக்கும். அத்துடன் அசல் பாலைப் போலவே அடர்த்தி கொண்ட தாக, ருசி கொண்டதாக சத்து கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைப் பாலில் சில சாதகங்களும் உள்ளன. அசல் பாலில் லாக்டோஸ் இருக்கும். இது பலருக்கும் ஒத்துக்கொள்ளாது. செயற்கைப் பாலில் லாக்டோஸ் இராது. அத்துடன் கெட்ட கொலஸ்ட்ராலும் இராது. செயற்கைப் பால் கெட்டுப் போகாது. பல நாட்கள் கெடாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அசல் பால் மூலம் தயாரிப்பது போலவே செயற்கைப் பாலிலிருந்தும் பால் பொருட்களைத் தயாரிக்க முடியும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

Read more: http://www.viduthalai.in/page-7/92345.html#ixzz3KwqNrld4

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அருகம்புல்

சிவாலயத்திற்குச் சென்று அருகம்புல் மாலை கட்டி ஆனை முகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள் - எதிர்பார்ப்புகள் நிறை வேறுமாம்.

சரி. அருகம்புல்லை மேயும் ஆட்டுக்கும் மாட் டுக்கும் மனிதர்களைவிட அதிக பலன் கிட்டுமோ!

Read more: http://viduthalai.in/page1/92200.html#ixzz3KwqxXxcE

தமிழ் ஓவியா said...

ஆலயத்தை மூடுங்கள் உயர்நீதிமன்றம்


சென்னை, நவ.2_ கோவில் என்பது மக்கள் அமைதியாக வழிபாடு நடத்துவதற்காகத்தான். ஆலயத்தில் மக்கள் அமை தியாக வழிபட முடிய வில்லையெனில், அதை இழுத்து மூடுவதில் தவ றில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரி வித்துள்ளது. கோவில் திருவிழாக்களில் யாருக்கு முதல்மரியாதை கொடுப் பது என்பது தொடங்கி, தேர் இழுப்பது வரை சிக் கல்தான். இரு குழுக்களாக பிரிந்து சண்டையிட்டுக் கொள்வது இன்றைக்கு வழக்கமாகிவிட்டது.

இதேபோல ஒரு பிரச்சினை காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோயிலைப் பூட்டி, வரு வாய்த் துறை அதிகாரிகள் "சீல்' வைத்து விட்டனர். எனவே இந்த கிரா மத்தைச் சேர்ந்த இ.சமன் என்பவர் உயர் நீதிமன்றத் தில் இது தொடர்பாக பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனுவில், எங்களது கிரா மத்தில் இரண்டு கங்கை யம்மன் கோயில்கள் உள்ளன. ஊரில் இரண்டு குழுக்களுக்குள் பிரச் சினை ஏற்பட்டதால், கோயிலைப் பூட்டி, வரு வாய்த் துறை அதிகாரிகள் "சீல்' வைத்து விட்டனர். அதனால், வழிபட முடி யாமல் மக்கள் சிரமப்படு கின்றனர். கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற் றக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தேன். ஆனால், அதற்கு எந்தப் பதிலும் இல்லை. எனவே, கங்கையம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற மாவட்ட ஆட் சியர், வருவாய்த் துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராய ணன் ஆகியோர் அடங் கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் தங்களின் உத்தரவில், கோயில்களில் வழிபடுவதில் சண்டை யிட்டுக் கொள்ளும் அள வுக்கு இந்த சமுதாயத்தில் பிரிவினை உள்ளது. இது வருத்தமளிப்பதாக உள் ளது. கோயிலைப் பூட்டி, வழிபாட்டு உரிமையில் குறுக்கிட்டனர் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மக்களால் அமைதியாக வழிபட முடியவில்லையெ னில், கோயிலை இழுத்து மூடலாம். கோயிலை மூடி, அதிகாரிகள் சீல் வைத்தது சரியான முடிவுதான் என்று கூறினார். மேலும், இந்த மனுவை பொது நல வழக்காகக் கருத்தில் கொள்ள முடியாது. என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தமிழ் ஓவியா said...

பலே அரியானா பெண்கள்!


அரியானா மாநிலம் ரோட்டக் நகரில் ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் களை இரு பெண் சகோதரிகள் எதிர்த்துத் தாக்குதலைத் தொடுத்த தகவல் இந்தியா முழுமையும் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.

ஆர்த்தி, பூஜா என்ற சகோதரிகளுக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த சில இளைஞர்கள் பாலியல் தொல்லைகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பெண்கள் ஒரு கட்டத்தில் அத்துமீறி அந்த இரு தடிப் பயல்களும் நடந்தபோது, தம் வசமிருந்த பெல்டுகளைக் கழற்றி அந்த இரு தடியன்களையும் தாக்கத் தொடங்கினர். இதில் என்ன கொடுமையென்றால் பேருந்தில் பயணித்த யாரும் உதவிக்கு முன்வரவில்லை; நடத்துநரும், ஓட்டுநரும்கூட தலையிடவில்லை. மாறாக சண்டையிட்டுக் கொண்டிருந்த பெண்களையும், பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்களையும் பேருந்திலிருந்து இறக்கி விட்டனராம்.

வெளியிலும் அந்த இளைஞர்கள் அந்தப் பெண் களைத் தாக்கத் தொடங்கியபோது செங்கற்களைக் கையில் எடுத்து இரு பெண்களும் அந்தத் தடியர்களின்மீது வீசத் தொடங்கவே - தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்துள்ளனர். அந்த ஆண்களின் செயல் பாடுகளை ஒரு பெண் கைப்பேசி மூலம் படம் எடுத் துள்ளார். காவல்துறையிலும் புகார் கொடுக்கப்பட்டது - கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த இரு சகோதரிகளுக்கும் இப்பொழுது பாராட்டுகளும், அன்பளிப்புகளும் குவியத் தொடங்கி விட்டன. ஆனால், இதில் இன்னும் மோசமானது என்ன தெரியுமா? அந்த சகோதரிகளின் தந்தையார் ராஜேஷ் குமார் சொன்ன தகவல்தான் அது! இந்தச் சம்பவத்தில் சமாதானமாக செல்லுமாறு காவல்துறையினர் நிர்ப்பந்திக்கிறார்களாம் - என்ன கொடுமையடா இது!

இப்பொழுது காவல்துறையிலிருந்து, நீதிமன்றம் வரை கட்டப் பஞ்சாயத்துதான் நடக்கிறது. இந்த நிலை நீடித்தால் நாடு காடாகி விடும் என்று எச்சரிக்கின்றோம்.

பெண்கள் என்றால் போகப் பண்டம் என்று கருதுகிற அகம்பாவமும், வெறியும், அநாகரிகக் குரூர வக்கிரப் புத்தியும்தான் இதுபோன்ற பாலியல் சீண்டல்களுக்குக் காரணம்.

இதனை வெளியில் சொன்னால் வெட்கம் என்று கருதுகிற பெண்களின் மனப்பான்மைதான் அவர்கள். மேலும் மேலும் பெண்களைச் சீண்டிப் பார்ப்பதற்கு முக்கிய காரணமாகும்.

அந்த நிலையிலிருந்து விடுபட்டு, அரியானாவில் ஆர்த்தியும், பூஜாவும் எப்படி துணிந்து இறங்கினார் களோ, அந்த நிலைக்குப் பெண்கள் தயாராகி விட்டார்கள் என்ற செய்தி பரவும் மாத்திரத்திலேயே ஆண்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு ஒடுங்கி, ஒதுங்கிப் போய் விடுவார்கள்.

அரசுகளும், காவல்துறையும், நீதித்துறையும் ஒரு சார்பாக நடந்து கொள்ளும் நிலையில், தன் கையே தனக்கு உதவி என்ற முறையில் பெண்கள் வீதியிலே இறங்கும் பொழுதுதான் ஆண்களின் அயோக்கியத் தனமான அநாகரிகங்களுக்கு ஒரு முடிவு ஏற்பட முடியும்.

பெண்களுக்குக் கோலாட்டம், கோலம் போடுதல் இவற்றைச் சொல்லிக் கொடுக்காமல், கைக் குத்து, குஸ்தி போன்றவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற தந்தை பெரியார் கொள்கை, காலந் தாழ்ந்தாலும் அரியானாவில் செயல்பாட்டுக்கு வந்தது வரவேற்கத் தக்கதாகும்.

இதில் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் நடந்து கொண்ட விதமும், காவல்துறை நடந்து கொண்ட போக்கும் வெட்கித் தலைகுனியத் தக்கதாகும். இவர்கள் அரசுப் பணியாளர்கள் என்ற முறையில் உரிய வகையில் தண்டிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இந்த இரு பெண்களையும், ஊருக்கு ஊர் அழைத்து வரவேற்பு கொடுக்க வேண்டும், பாராட்டுத் தெரி விக்கவும் வேண்டும்.

காதல் திருமணத்தால் ஒழுக்கம் கெட்டுப் போகும் என்று கர்ச்சிக்கும் கனவான்கள் இப்படி ஆண்கள் பெண்களிடம் நடந்து கொள்ளும் அநாகரிகம் பற்றிக் குரல் உயர்த்துவதில்லையே ஏன்?

காலம் காலமாக ஆண் என்றால் எஜமான், பெண் என்றால் அடிமை என்ற மனப்பான்மை சமுதாயத்தில் ஊறித் திளைத்து விட்டது.

அதிலிருந்து அவ்வளவு எளிதாக அவர்களால் வெளியில் வர முடியாது. இந்த நிலையில் பெண்களே தனிச் சங்கங்களைக் கூட ஏற்படுத்திக் கொண்டு, அடிக்கடி கூடிக் கலந்தாலோசித்து அந்தந்தப் பகுதி களில் நடைபெறும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும்.

குற்றம் புரியும் ஆண்களைக் கடுமையாகத் தண்டிக்கும் வகையில் சட்டமும் இயற்றப்பட வேண் டும் என்று வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page1/92204.html#ixzz3Kws8564l

தமிழ் ஓவியா said...

வாழ்வியல் ஆசிரியர் அகர வாழ்த்து!

- புலவர் குறளன்பன், கோவை

அறிவுப் பெரியார் உலகம் அமைக்கும் அறிவினாய் வாழி!
ஆரியப் பார்ப்பு அலறப் பணிபுரி ஆர்வினாய் வாழி!
இனநலப் போரில் இடையறா தியங்கும் இன்பினாய் வாழி!
ஈ.வெ.ரா. கொள்கை ஏந்தி நிலனாள் ஏறினாய் வாழி!
உண்மை உலகில் ஓங்க ஒலிக்கும் உரையினாய் வாழி!
ஊரும் உலகும் விருதினால் ஊக்கும் உழைப்பினாய் வாழி!
எழுகதிர் போல் எழும் எழுச்சிப் பெரியார் இயல்பினாய் வாழி!
ஏய்க்கும் மூட இயக்க மடமை எதிர்ப்பினாய் வாழி!
ஐயம் நீக்கி அறிவறம் கூறும் அழகினாய் வாழி!
ஒழுக்கம் எவர்க்கும் உயிரெனும் கொள்கை உணர்வினாய் வாழி!
ஓதிய வாறே ஒழுகும் வாழ்க்கை ஒளியினாய் வாழி!
ஓளவியம் அறியா அழகிய மனநல அன்பினாய் வாழி!
அஃகா வீரமணி அருங்குணம் பாடி ஆடுவோம் வாழி!

Read more: http://viduthalai.in/page1/92213.html#ixzz3Kwsf2ZiD

தமிழ் ஓவியா said...

கடலூர் முதல் கருப்பூர் வரை...


கண் உறங்கா கடலலையாய்!

காலமெல்லாம் உழைக்கின்றார்!

புண் படுத்தும் சாதி மத புரட்டுகளை.

புறம் தள்ளி எதிர்க்கின்றார்! மண் மணக்க மனிதத்தை ,

மாண்புடனே உரைக்கின்றார்! பெண் இனத்தின் விடுதலைக்கு,

பெரியார் ஒருவரே வழி என்றார்! வன்கொடுமை சட்டத்துக்கே,

வரிந்து குரல் கொடுக்கின்றார்! கண் விழியை இமை மூடி காப்பது போல்,

கருத்துடன் நம்மை காக்கின்றார்! வெண்முத்து நிகர்த்த பொன் சிரிப்பால்,

வித்தகர் நம்மிடை விதைக்கின்றார் பண்பாட்டுப் படையெடுப்பின் பாதகங்கள்,

பக்குவமாய் எடுத்து உரைக்கின்றார்!

பொன் நிகர்த்த தாய் மடியில் பிறந்திட்ட கடலூர்!

புரட்சி மிக்க நடை போட்டு, சேர்ந்திட்ட கருப்பூர்! எண்திசையும் பெரியாரின் புகழ் பரப்பும் ஏற்றமிகு பணியினை

செய்கின்றார்! விண்முட்டும் பாசம் மிக்க எங்கள் அய்யா,

வீரமணி ஒருவர் தானே நம் தலைவர்! தண்கடல் அழியினும், அழியா தந்தை கொள்கை,

தன் மூச்சாய் கொண்ட தமிழர் தலைவர்,

வாழ்க! வாழ்கவே!!


- தகடூர் தமிழ்ச்செல்வி

Read more: http://www.viduthalai.in/page1/92223.html#ixzz3KwtCrjCf

தமிழ் ஓவியா said...

மத்திய ஆட்சியைப் புரிந்துகொள்ளுங்கள்!

- ஊசிமிளகாய்

டில்லியில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் -இரு அவைகளிலும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அங்கே மாநிலங்களவையில் பேசிய இரண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்ட ஒரு முக்கிய கருத்து, பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அவைக்குக் கொண்டு வாருங்கள் என்று கூறியதேயாகும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள், யார் யாரையோ அழைத்து வருகிறார்கள் நம் நாட்டுக்கு, தயவு செய்து நாடாளுமன்றத்திற்கு நமது பிரதமர் மோடி அவர்களை அழைத்து வாருங்கள்; அதற்கான ஏற்பாட்டினைச் செய்யுங்கள் என்று சிரிப்பொலிக்கிடையே கூறினார்.

மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., திரு.டெரெக் ஓ பிரியென் அவர்கள் பேசுகையில், நமது பிரதமர் மோடி அவர்கள் உலக நாடுகளுக்குச் சென்று தொழில் தொடங்க முதலாளிகளையெல்லாம் நம் நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுக்கிறார்; விசாவை தங்கு தடையின்றி வழங்குவோம் என்றெல்லாம் கூறியுள்ளார்.

தயவு செய்து அவைக்கு வருவதற்கு தலைவர் அவர்களே அவருக்கு விசா வழங்கி உள்ளே இந்த அவையில் அமர வைத்து எங்களது கேள்விகளுக்கு பதில் கூறிட வாய்ப்பளித்தீர்களேயானால், நாங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறுவோம் என்று பேசி, அங்கே பதிவாகி இருக்கிறது!

உலகில் எந்த நாட்டு நாடாளுமன்றத்திலாவது இப்படித் தங்கள் பிரதமர்கள்பற்றிப் பேசியுள்ளனரா என்று அரசியல் நோக்கர்கள் ஆய்ந்து கொண்டுள்ளார்கள்!

பொதுவாக பிரதமர் நாடாளுமன்றம் நடைபெறுவதற்கு முதல் முன்னுரிமை தருவதுதான் சரியான நடைமுறையாக இருக்கவேண்டும் - பார்லிமெண்டரி ஜனநாயகத்தில்.

சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ நடைபெறுகையில், முக்கிய அரசு அறிவிப்புகளைக்கூட முதலில் அங்கேதான் அறிவிக்கவேண்டுமே தவிர, வெளியிலோ, வேறு பொதுக்கூட்ட விழாக்களிலோ அறிவிக்கக்கூடாது; பிரதமர் மோடி அதையும்கூட லட்சியம் செய்யாது அறிவிப்புகளை வெளியிடுவதாக முன்னாள் அமைச்சர் புதுவை நாராயணசாமி அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரதமர் வெளிநாடுகளுக்குச் செல்வது தவறல்ல. ஆனால், நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பதுபோல அடிக்கடி அவை கூடிடும்போது செல்வது விரும்பத்தக்கதா? மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதில் அளிக்கவேண்டாமா?

#######

அண்மையில், ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி புதிதாகக் கூடுதலாக மோடி அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட, இந்துத்துவா கதாகாலட்சேப பெண் அமைச்சர் ஒருவர் டில்லி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு, மிகவும் தரக்குறைவானதும், மதக் கலவரங்களைத் தூண்டும் வகையிலும் அமைந்தது குறித்து நாடாளுமன்ற அவைகளில் அத்துணை எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து, அவைகளை நடக்கவிடாமல் ஒத்தி வைக்கும் சூழ்நிலை உருவாகியது.

இப்படி ஒரு மத்திய அமைச்சர், அதுவும் ஒரு பெண் அமைச்சர் பேசலாமா?

மத்திய பெண் அமைச்சரின் செங்காங்கடைப் பேச்சு

டில்லியில் பா.ஜ.க.வுக்கு வாக்கு அளித்தால் அவர்கள் இராமனுக்குப் பிள்ளைகள்; இன்றேல் அவர்கள் தவறான வழியில் பிறந்த பிள்ளைகள் என்று பேசியுள்ளார்.

கையால் எழுதவே கூசுகிறதே! எவ்வளவு மோசமான, மற்றவர்களை அசிங்கப்படுத்தும் - மற்றவர்களின் தன்மானத்திற்கு சவால்விடும் கேவலமான சவடால் பேச்சு இது!

மோடியை எதிர்க்கிறவர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவர் என்று உளறிக்கொட்டிய திமிர்ப் பேச்சுப் பேசிய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.காரர் பாட்னாவைச் சார்ந்த பிகார்காரர் அமைச்சராக்கப்பட்டிருக்கிறார் - பரிசு கொடுப்பதுபோல!

இதுவும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின் சாதனைதான்!

பஞ்ச பாண்டவர், குந்தியின் பிள்ளைகள் என்ற மகாபா(தக)ரதக் கதையில்,

அய்வரும் ஒரே தகப்பனாருக்கு முறைப்படி திருமணம் செய்த பிறகுதான் பிறந்தவர்களா?

இந்த அமைச்சரான கதாகாலட்சேப ஆர்.எஸ்.எஸ். சேவகி அம்மாள்தான் பதில் கூறவேண்டும்!

மகாபாரதக் கதையில், விபச்சாரத்தால் பிறந்த பிள்ளைகளைப் பட்டியலிட்டால், இவர்கள் முகத்தைத் தொங்க விட்டுக் கொள்ளமாட்டார்களா?

இராமர் பிள்ளைகள் - லவ; குசா கதைப்படி - எங்கே பிறந்தனர்? காட்டில். ஏன் காட்டுக்கு சீதை அனுப்பப்பட்டாள்?

இராமனின் சந்தேகம்தானே காரணம்!

அட வெட்கங்கெட்ட மூளிகளே, இப்படி ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக்கொள்வது ஏன்?

மோடியின் அமைச்சராக இப்படிப்பட்டவர் இருந்தால், அதைவிட பிரதமர் மோடிக்குக் கேவலம் உண்டா?

நாட்டுக்கு அவலம், அசிங்கம் வேறு உண்டா?

சிந்தியுங்கள்!

தெருக் குப்பையை அள்ளிக் கொட்டுமுன், இந்த அமைச்சரவைக் குப்பைகளை அள்ளி வெளியே கொட்டுங்கள் மோடிஜி!

டில்லி வாக்காளர்கள் இதற்கு தக்க பதிலடி தரவேண்டும் - தேர்தலில்!

Read more: http://viduthalai.in/page1/92268.html#ixzz3KwuPQrWE

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் நான்கில் ஒருவன் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறான்: ஆய்வு முடிவு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியாவில் நான்கில் ஒருவன் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறான்:

முதலிடம் பார்ப்பனர்களுக்கே!

அமெரிக்காவின் மேரிலேண்டு பல்கலைக்கழக ஆய்வு முடிவு


புதுடில்லி, டிச.3_ தீண் டாமையைக் கடைப் பிடிப்பதில் பார்ப்பனர்கள் தான் முதலிடத்தில் உள் ளனர். இந்தியா சுதந்திர மடைந்து 64 ஆண்டுகள் ஆனபிறகு தீண்டாமை குறித்த ஒரு கணக்கெ டுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் சமூகப்பொருளாதார ஆய்வு மய்யம் இந்திய மனிதவளமேம்பாட்டு மய்யத்துடன் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் பல்வேறு இன மொழி மத மக்கள் வாழும் நாடான இந்தி யாவில் கடந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்ட சமூக மாற்றம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆகியும் இன் றும் தீண்டாமைக் கொடுமை நாடெங்கிலும் தலைவிரித்தாடுகிறது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒரு பாவச்செயல், என்று குறிப்பிட்டு இருப்பினும் அந்தப்பாவச்செயலை நான்கில் ஓர் இந்தியன் செய்துகொண்டு தான் இருக்கிறான்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல் வேறு குழுக்களாகப் பிரிந்து இந்த ஆய்வை நடத்தினர். இந்த ஆய் வின் முடிவில் தீண்டா மையை அதிகம் இன்றள வும் கடைப்பிடிப்பதில் முதலிடம் வகிப்பவர்கள் பார்ப்பனர்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தீண் டாமை இதர மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கிய மதங்களைவிட இந்துமதத்தில்தான் அதிகம் இருக்கிறது, இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் தனது மதத்தைச் சார்ந்தவர்களையே தாழ்த் தப்பட்டவர்கள் என்று கூறி ஒதுக்கிவைத்துள்ள னர். முக்கியமாக பார்ப்ப னர்களிடம் இந்த தீண் டாமைத் தொடர்பான கண்ணோட்டம் மிகவும் அதிகமாக உள்ளது.

ஆய்வின்போது கேட் கப்பட்ட நீங்களும், உங் கள் குடும்பத்தினரும் தீண் டாமையைக் கடைப்பிடிக் கின்றீர்களா? என்ற கேள்விக்கு பார்ப்பனர்களில் 54 விழுக்காட்டினர் ஆம் என்றே கூறியுள்ளனர்.

இல்லை என்று கூறிய பார்ப்பனர்களில் பொது இடங்களில் தீண்டாமை யைக் கடைப்பிடிப்ப தில்லை என்றாலும் எனது வீட்டில் ஆச்சாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதர சாதியினரை எங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று பதிலளித்துள்ளனர். இந்து மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் தாழ்த்தப்பட்டவனாக இருப்பின் நாங்கள் முற்றி லும் அனுமதிக்கவே மாட் டோம் என்று கூறியுள்ள னர். இதே வேளையில் மற்ற மதத்தவர்களிடம் தீண்டாமையைக் கடைப் பிடிக்கின்றீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஜெயின் சமூகத்தினர் தீண்டாமையை அதிகம் கடைப்பிடிப்பதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஆய்வுக் குழு உறுப்பினர்களில் ஒரு வரான அமித் தோராட் என்பவர் கூறும்போது ஜெயின் சமூகத்தினர் மிகவும் குறைந்த அள விலேயே உள்ளனர். ஆனால் அவர்களில் முக் கால் பங்கினர், நாங்கள் தீண்டாமையைக் கடை பிடிப்பவர்கள் என்று கூறியுள்ளனர்.

தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்களில் கிறிஸ்தவர்களும், முஸ்லீம் களும் கூட அடங்குவர். இந்தியாவில் மட்டுமே இந்த மதத்தவர்களிடம் தீண்டாமை நிலவி வரு கிறது. இவர்கள் இந்து மதத்தில் இருந்து பிரிந்து சென்ற காரணத்தால் இப் பழக்கம் இவர்களிடையே தென்படுகிறது. பார்ப்பனர் வீட்டில் பிறக்கும் ஒருவனுக்கு அவனை வளர்க்கும் முறை யிலேயே தீண்டாமை மனதளவில் உடன் பிறந்த ஒன்றாகிவிடுகிறது, இக் காரணத்தால் அவன் பொதுவிலும் தீண்டா மையைக் கடைப்பிடிக்கத் தயங்குவதில்லை. தென் மாநிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் உயர்சாதி யினருக்கென தனி வழி பாட்டு இடங்களும் அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என தனி வழிபாட்டு இடங்களும் உள்ளன.

இந்துமக்களிடையே தீண்டாமை வடமாநிலங் களில் அதிகம் காணப்படு கிறது. இதில் அதிகம் மத்தியப்பிரதேசத்தில் உள்ளது. இங்கு 57 விழுக் காட்டு மக்கள் தீண்டா மையைக் கடைப்பிடிக்கின் றனர். அதாவது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து உயர்சாதியி னருமே தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் வருந்தவில்லை. மத்தியப் பிரதேசத்திற்கு அடுத்து இமாச்சலப்பிரதேசம் 50 விழுக்காடு, சத்தீஷ்கர் 48, ராஜஸ்தான் பிகார் 47, உத்தரப்பிரதேசம் 43, உத் தரகண்ட் 40 குஜராத் 39, தமிழகத்தில் 27 விழுக் காட்டினர் தீண்டாமை யைக் கடைப்பிடிப்பதாகக் கூறியுள்ளனர்.

மேற்குவங்கத்தில் ஒரு விழுக்காட்டினரும், கேர ளாவில் இரண்டு விழுக் காட்டினரும், மகாராஷ் டிராவில் 4 விழுக்காட்டி னரும் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாகக் கூறி யுள்ளனர்.பார்ப்பனர்களில் அதிகம்பேர் தீண்டாமை யைக் கடைப்பிடிப்பதை தவறாகக் கருதவில்லை அது எங்களது உரிமை எங் களது சொந்த விருப்பம் என்று பதிலளித்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page1/92265.html#ixzz3Kwuff6EL

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவருக்கு இனமானப் பேராசிரியர் வாழ்த்து!

எனது பேரன்புக்கும், மதிப்புக்கும் உரிய நண்பர், திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கட்கு எனது வணக்கம்.

தங்களின் 82ஆவது பிறந்த நாள் இன்று என்பதை முன்னதாக அறியத் தவறினேன். பகல் 1 மணி அளவில்தான் அறிந்தேன். தவறு இழைத்தாலும், என்றுமுள வாழ்த்து நாளும் உண்டு என்ற முறையில் வாழ்த்துகின்றேன்.

தாங்கள் நோய்நொடிக்கு ஆளாகாது உடல் நலம் காத்து, பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து, தந்தை பெரியார் தொடங்கிய இனமானம் காக்கும் தொண்டினை, அவரது அடியொற்றி, அவரது மறையாத நெஞ்சம் உவக்குமாறும், குறிக்கோள் வெற்றி பெறுமாறும் தொடர்ந்து - தொடர்ந்து - தொடர்ந்து நடத்துமாறு உள்ளம் உவந்து வாழ்த்துகின்றேன்.

தன்மானம் மீட்போம்!
தமிழ்மானம் காப்போம்!

இனமானம் நாட்டுவோம்! என்று தி.மு.க. பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/92267.html#ixzz3Kwuyo4PI