Search This Blog

23.4.09

கலைஞர் அறிவித்த வேலை நிறுத்தம் பலனைத் தந்துள்ளதா?


ஈழத் தமிழர்ப் பிரச்சினை
வேலை நிறுத்தம் முழு வெற்றி!

அகில இந்திய காங்கிரஸ் கூடியும், மத்திய அமைச்சரவைக் கூடியும்
போர் நிறுத்தத்தை வலியுறுத்தியது, மிக முக்கியமானது.
- தமிழர் தலைவர் அறிக்கை


இன்றைய தினம் தமிழ் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

இலங்கையில் நடை பெறும் தமிழ் இனப் படுகொலை உச்சக்கட்டத்தை அடைந்து, எங்கே தமிழ் இனமே பூண்டோடு அற்றுப் போகுமோ என்ற அச்சமும், கவலையும், உண்மையான தமிழ் இன உணர்வாளர் களை மிகவும் வேதனை அடையச் செய்கிறது.

இந்நிலையில் கையறு நிலைபோல் கைபிசைந்து நிற்பதோ, வேடிக்கை பார்த்து நிற்பதோ பயன் அளிக்காது என்பதால்தான் ஆறு கோடி தமிழர்களின் பிரதிநிதியாக தமிழக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள முதலமைச்சர் கலைஞர் அவர்கள் - தொடக்க முதலே ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கும் முயற்சியை ஒரு கட்சிக் கண்ணோட்டத்திலோ, அரசியல் பார்வையோடோ அணுகாமல், அனைவரும் ஓரணி, ஒன்று பட்டுக் குரல் கொடுக்க வேண்டும் என்று தொடர் முயற்சிகளை அலுப்பு சலிப்பின்றி - ஆயிரமாயிரம் அநியாய விமர்சனங்களையும் புறந்தள்ளி, இனமானம் காக்க தன்மானத்தைக் கூடத் தள்ளி வைத்து - இப்பிரச்சினையில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தன் தொடர்ச்சிதான், அவர்களால் வேண்டுகோள் விடப்பட்டு, இன்று (23.4.2009) நடைபெறும் முழு வேலை நிறுத்தம் என்ற அறப் போராட் டமும்கூட!

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு

ஈழத்தமிழர் பிரச்சினையில் யாருக்கு உண்மை யான அக்கறையும், கவலையும் உள்ளதோ அவர்கள் இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று வரவேற்று, சிங்கள இராஜபக்சேயின் தமிழின அழிப்புப் போர் நிறுத்தப்பட, அழியும் நம் மக்கள் பாதுகாக்கப்பட இப் படிப்பட்ட ஒரு அறப் போரைத் தவிர - நாடாளு மன்றத் தேர்தலில் நாடு தழுவிய அளவில் நடை பெற்றுவரும் நிலையில் - வேறு வழி தென்படவில்லை என்பதால், அனைத்துக் கட்சிகள், ஏட்டாளர்கள், ஊடகத் துறையினர் அனைவ ருக்கும் வேண்டுகோள் கடிதங்களையே எழுதியுள்ளார் முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள்.

உடனடியான விளைவு

உடனடியாக இதற்கு நல்ல விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்பதை - கருத்துப் பார்வை அற்றவர்களைத் தவிர - மற்ற அனைத்து நடுநிலையாளர் களாலும் புரிந்துகொள்ள முடியும். இதோ பட்டியல்:-


1. திருமதி சோனியா காந்தி அறிவுறுத்தலுக் கேற்ப, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூடி, இலங்கையில் உடனடியா கப் போர் நிறுத்தம் ஏற்பட்டு, அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படுவதோடு, அரசியல் ரீதியான தீர்வுகளை அங்குள்ள தமிழர்களின் நல் வாழ்வு, பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை அறிவிக்க வேண்டும்; அரசியல் பிரச்சினைக்கு இராணுவ நட வடிக்கைகள் ஒருபோதும் தீர்வாகாது என்று தீர்மானம் நிறைவேற்றி, அதை அனைத்து ஏடுகளுக்கும் கூட அனுப்பியுள்ளார்கள்!
திருமதி சோனியா காந்தி தலைமையிலான அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியே இப்படி ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது இதுதான் முதல் தடவையாகும்.

அமைச்சரவையின் அவசரக் கூட்டம்

நேற்று (22.4.2009) இரவு பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் தலைமையில் அமைச்சரவையின் அவசர அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் கூடி, அதில் ஈழச்சிக்கலுக்கு உடனடிப் போர் நிறுத்தம் செய்து தீர்வு காணவேண்டும் என்றும் முடிவு செய்துள்ளது!

கலைஞர் அவர்களது வேலை நிறுத்த அறிவிப்பு நல்ல தாக்கத்தினை உருவாக்கியிருக்கிறது.
இதுபற்றி அக்கூட்ட முடிவில் வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் ஒரு அறிக்கையில் மேற்கண்ட கருத்துகளை விளக்கியுள்ளார்.

இவை எல்லாம் இத்துடன் உலக நாடுகளின் ஆதரவினையும்கூட அது திரட்டியுள்ளதாகவும் அவரது அறிக்கை தெளிவாக்கு கிறது!

கபட நாடகமா?

இப்படி ஆக்கபூர்வப் பலன்கள் கிட்டி வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, முதல்வரின் இந்த வேலை நிறுத்தத்தினை கபட நாடகம் என்று நாக்கில் நரம்பின்றி, சிறிதும் வெட்கமின்றி அவரது நோக்கில் கூறியுள்ளார்!

அவருடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஈழப் பிரச்சினைக்கே தான்தான் காப்பி ரைட் பெற்ற களப் போராளி என்று மார்தட்டும் வைகோ கூட இதனை வரவேற்காமல், அம்மா குரலின் பின்னணிப் பாட்டுக்குப் பின்பாட்டு பாடுகிறார்! திடீர் ஈழத் தமிழர் பாதுகாவலர்களான இடதுசாரி நண்பர்களும் இதில், பக்க வாத்தியம் வாசிக்கிறார்கள்.

பல்டி மாஸ்டரும், பச் சோந்தியுமான பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் இலங்கைத் தமிழரின் திடீர் விசுவசியான நிலையில் என்ன சொல்கிறார்? உடனே தமிழக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமலே இப்படி நாடக மாடுகிறார் என்கிறார்! தி.மு.க.விடம் பிச்சை கேட்டு வாங்கிய தனது மகனின் மாநிலங்களவை பதவியைக் கூட ராஜினாமா செய்யாமலேயே இப்படி மற்றவர்களைக் கை நீட்டிக் குற்றம் சுமத்தும் நிலையில், அவரைக் கண்டு நாடே நகைக்கிறது!

சரியான நேரத்தில் சரியான முயற்சியை - அறப்போரை அறிவித்ததை வரவேற்காவிட்டாலும் பரவாயில்லை; வாய் மூடி சும்மாவாவது இருந்திருந்தால் அந்த அம்மையாரின் மரியாதையாவது சற்றுக் காப்பாற்றப்பட்டிருக்குமே!

போர் நிறுத்தமும் - வேலை நிறுத்தமும்!

உலகமே போர் நிறுத்தம் கேட்கும் போது, கருணாநிதி வேலை நிறுத்தம் செய்யச் சொல்லி கேட்கிறார் என்பது அசல் சிறு பிள்ளைத்தனமான அரை வேக்காட்டு வாதம் அல் லவா?

போர் நிறுத்தத்தை வலியுறுத்துவதற்குத் தானே, தமிழ்நாடே ஈழத்தமிழர் களைக் காப்பாற்ற ஒன்று பட்டு நிற்கிறது என்று இங்குள்ள இராஜபக்சேக்களுக்கு காட்டுவதற்குத் தானே - மத்திய அரசுக்கு அழுத்தம் தரத்தானே இந்த 12 மணிநேர வேலை நிறுத் தம்?

இவரது அரசியல் அணியினரைத் தவிர, ஒட்டு மொத்த அத்துணைப் பேரும் வரவேற்று ஆதரவு தருவதிலிருந்து ஜெயலலிதா அணியினர் - இலங்கைத் தமிழர் ஆதரவு என்ற தேர்தல் நாடகத்தில் போட்ட ஒப்பனை - சாயம் - வேஷம் கலைந்துவிட்டது!

மற்றவர்கள் கலைப்பதை விட அவர்களே கலைத்துக்கொண்டு விட்டார்கள்.

வரலாறு மன்னிக்குமா?


கலைஞர் அறிவித்த போராட்டத்தை கபட நாடகம் என்று கூறும் இந்த அம்மையார் - வேலை நிறுத்தத் தில் கலந்துகொள்ளாமல் வீம்பு காட்டுவதுபோல் - வழக்கமான பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவாராம் - சொல்கிறார்.

ஈழத் தமிழர்கள் பற்றிய இவரது வேலைப்பாடுகள் - ஈவு இரக்கமற்ற வகையில் வைகோக்கள் மறக்கலாம்; ஆனால், வரலாறு மறக்குமா? மன்னிக்குமா?

நினைவூட்டுகிறோம் நினைவூட்டுகிறோம் அனைவருக்கும்

ஏப்ரல் 2002

உடனடியாக இந்திய இராணுவத்தை இலங் கைக்கு அனுப்பி பிரபாகரனைக் கைது செய்யவேண் டும். ராஜீவ் கொலை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும்.

மே 2005

விடுதலைப்புலிகள் ஒரு பெண் மனித குண்டை அனுப்பி என்னைக் கொல்லப் பார்க்கிறார்கள்!

பிப்ரவரி 2007

இலங்கையில் போரில் ஈடுபடும் தீவிரவாதக் குழுக்களை ஊக்குவிக்கக் கூடாது. தமிழர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அவரை ஆதரிக்கவேண்டும் என்ற வாதத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்.

மே 2007

இலங்கைத் தமிழர்கள் என்ற போர்வையில் ஆயுதக் கடத்தலில் ஈடுபடுபவர்களை அரசு கண்டுகொள்வ தில்லை. விடுதலைப்புலி களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், தமிழ் நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் 2008

போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி விடுதலைப்புலிகளைக் காப்பாற்ற நினைக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. புலிகள் தமி ழர்களை உயிர் தப்பிப் பிழைக்கவிடாமல் பாது காப்புக் கேடயமாய்ப் பயன் படுத்துகிறார்கள். இலங்கை யின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவது இந்திய இறையாண்மைக்கு ஆபத்தினை ஏற்படுத்தும். பிரபாகரன் ஒரு அழிவுச் சக்தி. போர் நிறுத்தத்தை, ஆயுதங்களை சேகரிக்கவே பயன்படுத்திக் கொள்வார். விடுதலைப்புலிகளை எதிர்க்கும் ஒரே தலைவர் நான்தான்.

பிப்ரவரி 2009

ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது இயற்கை. இராஜபக்சே அரசு தமிழர்களை அழிக்கவில்லை - இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட முடியாது.

வேறு எந்த ஆயுதமும் கிடைக்கவில்லை

தேர்தல் அறிவிப்பு வந்த வுடன் - ஒரே நாளில் திடீரென்று இலங்கைத் தமிழரின் இணையற்ற பாதுகாவ லராக வேடத்தினை தரித்து, அதற்குரிய வசனங்களை எழுதி, அவரது திடீர் பாத்திரங்களான வைகோ, இராமதாஸ், பாண்டியன்கள் மற்றும் இடதுசாரிகளுக்கு வேறு எந்த ஆயுதமும் ஆட்சியின்மீது குறை சொல்ல கிடைக்கவில்லை என்றவுடன், இதனைப் பயன்படுத்தி வீர வசனங்களைப் பேசி, ஈழத் தமிழர்கள் சிலரை ஏமாற்றலாம்! இங்குள்ள எவரையும் ஏமாற்ற முடியாது.

நல்ல பலன்கள் கிடைத்துள்ளன

காரணம், இவர்களுக்குத் தெளிவாகப் புரியும் - ஓநாய் ஒருபோதும் சைவமாகி விடாது என்பது! வரலாறு யாரை மன்னிக்காது என்பது இப்போது புரிகிறதா?

எனவே, இன்று கலைஞர் அறிவித்த வேலை நிறுத்தம் நல்ல பலனைத் தந்துள்ளது. அதற்கான விளைவுகளை உலகம் புரிந்துகொள்ளும் என்பது உறுதி.

------------------ "விடுதலை" 23.4.2009

15 comments:

Unknown said...

உன்னை மாதிரி அடிவருடிகள் முதலில் திருந்த வேண்டும். தெரியாமல் தான் கேட்கிறேன் உங்களுக்கு ஆறறிவு உள்ளதா?

கோவி.கண்ணன் said...

தேவை இல்லாமல் பலரது வயிற்றெரிச்சலை வாரிக் கொட்டிக் கொள்கிறீர்கள்.

பெரியார்கருத்துக்களாக வாசிக்கப்படும் உங்கள் வலைப்பதிவு ஆளுங்கட்சி பிரச்சார வலைப்பதிவாக எண்ணி பலர் புறக்கணிக்கக் கூடும்.

நீங்கள் என்ன எழுதவேண்டும் என்று யாரும் சொல்ல வேண்டியது இல்லை என்றாலும் அவற்றை புறக்கணிக்கும் உரிமையை நீங்கள் தீர்மாணிக்க முடியாது

Unknown said...

தொலைக்காட்சி செய்திகள் பார்த்தபோது பந்த் நல்ல பலனை தந்ததகாவே உணர முடிந்தது.

அசுரன் திராவிடன் said...
This comment has been removed by the author.
அசுரன் திராவிடன் said...

ராமதாசை போன்று கடைந்தெடுத்த நம்பர் ஒன் அயோக்கியர்களை என் வாழ்கையிலும் பார்த்தது இல்லை .பெரியார் இதனால் தான் அரசியலையும் அரசியல் வாதிகளையும் சாடி இருக்கிறார் என்றே கருதுகிறேன் ..ஐந்து வருடம் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர் பதவியை அனுபவித்து விட்டு இப்போது காங்கிரசை எதிர்த்து அம்மா புராணம் பாடுகிறார் ....இவர் யோக்கியமானவர் என்றால் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டி இடவேண்டியது தானே .....இவர்களை நினைத்தாள் மிகவும் கேவலமாக இருக்கிறது ..... கடந்த ஐந்து வருடம் வேட்டி துவைத்தார் ......இப்பொழுது சேலை துவைக்க சென்று இருக்கிறார் ....இவரிடம் ஆறறிவு இருந்தால் தமிழ் ஓவியா அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்

மு. மயூரன் said...

திராவிடர் கழகமே இவ்வாறான் குருட்டுத்தனமான அரசியல் கூர்மையற்ற சந்தர்ப்பவாத அரசியலில் மூழ்கிக்கிடக்கிறதா, அல்லது நீங்கள் மட்டும்தான் இவ்வாறான் கருத்துக்களை வெளியிட்டு தி. க விற்க்கு தவறான பெயரை உருவாக்கி வருகிறீர்களா?

சுயமரியாதை உள்ள பெரியாரிஸ்ட் இப்போது செய்ய வேண்டியது, சாகும் மக்களின் அவலத்தில் சந்தர்ப்பவாதப்பிழைப்பு பிழைத்து நக்கித்தின்னும் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட அத்தனை பாராளுமன்ற அரசியல் பிணந்தின்னிகளையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நேர்மையான புதிய போக்கினை தமிழக அரசியலில் உருவாக்கப் பாடுபடுவதே.

இவ்வளவு அவலத்துக்கு நடுவிலும், தமிழ் மக்களை எப்படி வேண்டுமானாலும் என்னால் எம்மாற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை வளர்த்துக்கொண்டுள்ள கருணாநிதி என்ற மனிதவிரோதப் பிசாசும் அவன் கட்சியும் சரியான அடியை தமிழக மக்களிடம் வாங்கிக்கட்ட வேண்டும். அவன் மட்டுமல்ல மற்ற எல்லா பாராளுமன்றப்பொறுக்கிகளும்தான்.

பரணீதரன் said...

அரசியல் உதவி இல்லாமல் எவளவு கொள்கை பேசினாலும் அது வெறும் ஏட்டு சுரக்காய் போலவும், தண்ணீரில் எழுதிய எழுத்து போலவும் தான் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.

எனவேதான் ஆசிரியர் அவர்கள் இன்று இருக்கும் சூழ்நிலையில் அதாவது அரிசியலில் கலைஞர் அவர்களை பின்பற்றி செல்கிறார். அவருடைய ஆதரவு இல்லாவிட்டால் இன்றைய சூழ்நிலையில் எதனையும் எந்த அரசியல்வாதி வந்தாலும் நாம் இப்பொழுது செயும் அளவு கூட செய்ய இயலாத சூழ்நிலைதான் ஏற்படுமே ஒழிய வேற என்ன ஏற்படும்.

எப்படி அய்யா அவர்கள் காமராஜரை பயன்படுத்தி தன் கொள்கைகளுக்கு ஒரு உயிரோட்டம் கொடுத்தாரோ அதுபோல தான் இப்பொழுது ஆசிரியர் அவர்கள் செயல்படுகிறார். எனக்கு என்னவோ கலைஞரை விட்டால் இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலையில் நம் கொள்கைக்கு யாரும் உகந்தவர்கள் அல்லர். அப்படி இருந்தால் கூறட்டும் நம் அவர்களுக்கு அடிவருடிகளாக (அவர்களது பசையில் சொன்னேன். நாம் எப்பொழுதும் யாருக்கும் அடிவருடிகளாக இருந்தது இல்லை இருக்க போவதும் இல்லை)
இருந்து விட்டு போவோம்.

இப்பொழுது நடக்கும் ஈழ பிரச்னையும் அவ்வாறுதான். நாம் எவளவு போராட்டம் நடத்தினாலும் அரசியல் உதவி இல்லை என்றல் தீர்வு என்பது கிடையாது. இன்னும் சொல்லபோனால் கலைஞர் அவர்கள் ஆட்சியில் இல்லை என்றல் நம் ஈழ மக்களுக்காக போராட்டம் நடத்திய அனைவரும் சிறையில் இருந்திருப்போம் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

நம் தோழர்கள் சொல்லுவது போல கலைஞரை எதிர்த்து பிரசாரம் செய்வோம். அனால் அவருக்கு மாற்று இருந்தால் சொல்லுங்கள் . அந்த மாற்று தலைவர் இவரைவிட சிறப்பாக இருக்க வேண்டும். சும்மா அரசியல் அயோக்கியர்களை அடையாளம் காட்ட முன்வரக்கூடாது. இன்னும் ஒன்றும் நன் கேட்கிறேன் ஏன் தமிழகத்தில் கலைஞர்தான் ஈழ பிரச்சனையை தீர்த்து வைக்கும் திறமை உள்ளவரா. எத்தனையோ தமில்தூக்கிகள் இருக்கிறார்கள் அல்லவா. அவர்களால் இதனை முடிவுக்கு கொண்டு வர இயலாத. எல்ல ஒட்டு பொறுக்கி அரசியல்வாதிகளும் என்ன செயிகிரர்கள். எங்கள் ஆசிரியர் ஒன்றும் உங்களிடம் வந்து ஒட்டு போருக்குவதர்க்க எதனையும் செயவில்லை. எதனை நாங்கள் செய்தலும் மக்களுக்கதான். அதனால் நாங்கள் மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

கோவி.கண்ணன் said...

//அவருக்கு மாற்று இருந்தால் சொல்லுங்கள் .//

எழவு வீட்டில் பிணத்துக்கு விழுந்த மாலைகள் பல, அங்கு மாலை போட்டுவிட்டு ஒருவன் 'நான் போட்ட மாலைதான் பிணத்துக்கு எடுப்பாக இருகிறது' என்றானாம்

Unknown said...

மூன்றாம் அணி , பி ஜே பி , காங்கிரஸ் ன்னு கருணாநிதி அணி மாறினா அது ராஜ தந்திரம் , அதையே ராமதாஸ் செய்தா பச்சோந்தி தனம், அடிமைகளே ... ராமதாஸ் பயம் என்னன்னா, கருணாநிதி கூட மட்டும் நீண்ட நாள் இருந்தால் 'கொலைகாரன் பட்டமோ ' எங்க ஸ்டாலினிக்கு ஆப்பு அடிசிடுவாங்கலோன்னு 'துரோகி' பட்டமோ சுமக்க வேண்டி இருக்குமொங்கறதுதான்.

ஐந்தறிவு ஜென்மங்களே ... கட்சி ஆரம்பித்த போது ராமதாஸ் தனியாகத்தான் போட்டியிட்டார். ஒரு அண்ணாவோ , எம்.ஜி.ஆர் ரோ இப்ப்போது இருந்தால் கட்சி மாறவேண்டிய அவசியம் இருக்காது. இன துரோகத்திர்ர்க்கு பச்சோந்தி பட்டம் பரவா இல்லை.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளஞ்சேரன்

aathirai said...

velinaatu thamilargal padum paadu pattu poraadi,
aiyikkiya naadu sabayailirundhu ROD vandhiruppadhaal ivargal por nirutham patri pesugirargal. sivasankara menon ilangaiku odugiraar.

ungalukku mental hospital il viraivil idam ready.

பரணீதரன் said...

தோழர் கோவி கண்ணன் அவர்கள் சொன்னதுபோல சாவு வீட்டில் பல மாலைகள் விழுந்தால் தான் அதில் என்னுடைய மாலை சிறந்தது என்று சிறிதும் மனிதபிமான அற்ற முறையில் சொல்லி கொள்ளலாம். அனால் அங்கு விழுத்த மாலையே ஒன்றே ஒன்று என்றல் என்ன செய்வீர்கள் தோழர் கோவி கண்ணன் அவர்களே.

அது போல இங்கு ஈழ பிரச்சனைக்கு போடப்பட்ட மாலை ஒன்றே ஒன்றுதான். அதுதான் திருமா , கலைஞர், ஆசிரியர் இருக்கும் ஒரே அணி. வேண்டுமானால் இவர்கள் இல்லாமல் தமிழகத்தில் ஈழ வரலாறை நீங்கள் கூற முடியுமா. இப்பொழுது இவளவு மக்களும் ஈழம் பற்றி பேசுவது யாரால் என்று யோசித்து பாருங்கள். 1950 இந்த பிரச்சனையை தமிழகத்து எடுத்து வந்தவர் பெரியாரும் அவர் வழி வந்தவர்களும் தான். சும்மா நேற்று கட்சி ஆரம்பித்து இன்று ஈழம் பேசுபவர்கள் கிடையாது. ஏன் ஈழம் சென்று போர் களத்தில் இருந்தவர்கள் கூட திராவிடர் கழகத்தில் இருக்கிறார்கள். சும்மா ஏதோ பேசிவிட்டால் தீரும் பிரச்னை அல்ல ஈழம்.

நீங்கள் கூறுவது எல்லாம் ஏன் கலைஞர் கூட இருந்து வசை பாடுகீரிர்கள். ஈழ பிரச்சனைக்க பஸ் கொளுத்தவேண்டும், காங்கிரஸ் அலுவலகத்தை சூறை ஆடவேண்டும், காங்கிரஸ் காரனை அடிக்கவேண்டும், டெய்லி எதாவது பிரச்னை செயவேண்டும் அரசுக்கு எதிராக. அப்பொழுது தான் ஆசிரியர் சரியான வழியில் போகிறார் என்று உங்களை போன்றவர்கள் சான்றிதல் கொடுப்பீர்கள். அப்புறம் இயக்கத்தை தடை செய்து உள்ளதும் போச்சடா நொள்ள கண்ணா என்று திராவிடர் கழகம் இருத்த இடம் திரியாமல் போகும். இதை தன் நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள்?

Web-Hosting said...

காங்கிரசை ஒழிக்க வேண்டும் சரி ஒழித்து விட்டு மதவாத BJP யிடம் ஆட்சியை ஒப்படைக்கவேண்டும் என்கிற தோரணையில் பெரும்பாலானவர்களின் கருத்துகள் உள்ளன.BJP ஆட்சியில் இலங்கைக்கு ரூபாய் 300 கோடி மற்றும் பிற ஆயுத தளவாடங்களும் வழங்கப்பட்டதே ...இந்திய ஆயுதம் அழிக்க விட்டால் ராஜபக்ச போரை நிறுத்தி விடுவாரா .....மாறாக சீனாவும் மற்றும் பாகிஸ்தானும் ராஜபக்சேவுக்கு ஆயுதம் வழங்கி வருகின்றனர் ....இந்தியா அனைத்து உதவிகளையும் நிறுத்தினாலும் அங்கு எந்த மாற்றமும் வரப்போவது இல்லை ...ராஜபக்சேவை ஒழித்தால் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கு நிம்மதி ஏற்படுத்த முடியும் ... அதை விடுத்தது இந்தியாவையும் கருணாநிதியையும் மற்றும் கூட்டணி தலைவர்களயும் இழிவு படுதுவதுவதால் தமிழ் ஈழமும் தமிழர்கள் கொல்லபடுவதும் நின்று விடாது .....வேண்டுமென்றால் அவ்வாறு குறை கூறுவது திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கொஞ்ச நஞ்ச விடுதலை புலிகளின் ஆதரவாளர்களையும் விடுதலை புலிகளின் எதிர்ப்பாளர்களாக மாற்றும் ...

ஈழபிரச்சனை இந்தியா தேர்தலோடு முடிந்து விடாது ....

ஆட்சியாளர்களை முடிந்த வரையில் நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் ....அதை விடுத்து அவர்களை எதிர்பதால் தனி ஈழம் அமைந்து விடாது ...வேண்டுமால் அவ்வாறு எதிர்ப்பவர்கள் தங்களை ஈழ தமிழர்களின் பிரதிநிதிகள் போல காட்டி கொள்ளலாம் மற்றும் ஈழத்தமிழர்களை ஏமாற்றலாம் ஆனால் தமிழ்நாட்டு வாக்களர்களை ஏமாற்ற முடியாது ......

Web-Hosting said...

ராமதாஸ் எல்லாம் ஒரு அரசியல் வாதி என்றே நான் மதிப்பதில்லை இருப்பினும் இவளவு கீழ்த்தரமான ஒருவருக்கு சப்பைக்கட்டு கட்டுவர்களை நினைத்து தான் இங்கே சில கேள்விகள் ....

ஜெயலலிதாவுடன் கூட்டணி வைப்பது தாயுடன் புணர்வது என்று கூறினாரே...இப்பொது எப்படி ஜெயலலிதா இவருக்கு சகோதரியாகவும் அன்புமணி ராமதாசுக்கு அத்தை ஆகவும் மாறினார்?

என் குடும்பத்தில் உள்ளவர்களை அரசியலுக்கு கொண்டுவந்தால் என்னை நடு ரோட்டில் நிக்க வைத்து சாட்டையால் அடியுங்கள் என்றாரே?

கருணாநிதி கோவணத்தை கூட உரிவிடுவார் என்று சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணியில் இருந்தபோது கூறினீர் ...அதற்கப்புறம் கருணாநிதயுடன் காங்கிரஸ் தலைமைலான கூட்டணியில் மத்தியிலும் மாநிலத்திலும் பங்கு வகித்திர்களே! அபொழுது உங்களின் கோவணம் எங்கே மருத்துவர் அய்யா ....அல்லது கோவணத்தை கருணாநிதி உருவி விடுவர் என்று தெரிந்து கோவணமே கட்டாமல் கூட்டணியில் பங்கு வகிதிர்களா?......இன்னும் நிறைய கேள்விகள் உள்ளது மருத்துவர் அய்யா?....அப்புறம் வருகிறேன்!!!!!!

தமிழ் ஓவியா said...

//தேவை இல்லாமல் பலரது வயிற்றெரிச்சலை வாரிக் கொட்டிக் கொள்கிறீர்கள்.

பெரியார்கருத்துக்களாக வாசிக்கப்படும் உங்கள் வலைப்பதிவு ஆளுங்கட்சி பிரச்சார வலைப்பதிவாக எண்ணி பலர் புறக்கணிக்கக் கூடும்.//

தங்களின் மேலான ஆலோசனைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

பெரியார் கொள்கைகளை பரப்பும் நோக்கில்தான் வலைப்பதிவு தொடர்ந்து இயங்கும். பற்றி எரியும் பிரச்சினையின் போது பெரியாரியல் அடிப்படையில் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையில் சில பதிவுகள் இட்டே ஆக வேண்டும். இதில் ஆளும் கட்சி பிரச்சார வலைப்பதிவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

பெரியார் மக்கள் பின்னனல் சென்றவரல்ல.மக்களைத் தன் பின்னால் வரவழைத்தவர். பெரியாரியல் அடிப்படையிலேயே வலைப்பதிவு இயங்கும்.

மீண்டும் நன்றி கோவி.கண்னன்