Search This Blog
12.4.09
ஈழத் தமிழர்களைக் காப்பாற்றிட எங்களுடைய உயிரையும் இழக்கத் தயாராக இருக்கிறோம்- வீரமணி அறிவிப்பு
மத்திய அரசே உலக நாடுகளிடம் வலியுறுத்தி போரை நிறுத்துக!
தமிழர்களே, ஈழப் பிரச்சினையை அரசியலாக்காதீர்!
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் வேண்டுகோள்
இலங்கையில் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதலை நடத்தி வருகின்றார் ராஜபக்சே. போரை நிறுத்தி - தமிழர்கள் சாவைத் தடுத்து நிறுத்திட மத்திய அரசு உலக நாடுகளுக்கு அழுத்தம் தர வேண்டும். ஈழப் பிரச்சினையை எக்காரணம் கொண்டும் அரசியல் ஆக்கக்கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.
இலங்கையில் தமிழினப் படுகொலையை நடத்தி வரும் சிங்கள அதிபர் ராஜபக்சே கொடுங்கோலனைக் கண்டித்தும் போர் நிறுத்தம் கோரியும் திராவிடர் கழகம் சார்பில் தமிழ் நாடெங்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. சென்னையில் இன்று (12.4.2009) காலை 11 மணிக்கு பொது மருத் துவமனைக்கு எதிரில் உள்ள மெமோரியல் ஹால் முன்பு திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை வலியுறுத்தி கவிஞர் செ.வை.ர. சிகா மணி, வழக்குரைஞர் கெ. கணேசன் ஆகியோர் ஒலி முழக்கங்களை எழுப் பினர். அதை திராவிடர் கழகத் தோழர்கள், தோழி யர்கள் உணர்ச்சியுடன் பின்பற்றி முழங்கினர்.
அதன் பின்னர் கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கினார். கழகப் பொருளாளர் வழக்கறி ஞர் கோ. சாமிதுரை, கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழர் தலைவர் உரை
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
30 கல் தொலைவிலே இருக்கக் கூடிய நம் முடைய தொப்புள் கொடி உறவுள்ள தமிழினத்தை அடியோடு அழிக்கும் செயலில் இன அழிப்புச் செயலில் சிங்கள அதிபர் ராஜபக்சே ஈடு பட்டு வருகின்றார்.
தீவிரவாதத்தை அழிக் கிறோம், ஒழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கம் விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு இலங்கையில் தமிழினத்தைப் பூண்டோடு அழிக்கின்ற வேலையில் ராஜபக்சே அரசு ஈடுபட்டு வருகிறது.
தமிழக முதல்வரின் இடையறாப் பணி
தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்திட, போரை நிறுத்திட இடையறாமல் மத்திய அரசின் மூலமாக அழுத்தம் கொடுத்துக் கொண்டு வருகின்றார்.
கலைஞர் அரசுமீது வேறு எந்த குறையும், குற்றமும் காண முடியாத சிலர் இந்தப் பிரச்சினையை எடுத்துக் கொண்டு, இதை ஒரு பகடைக் காயாக காட்டி அரசியல் லாபம் பெறலாம் என்று கருது கிறார்கள்.
ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் நம்மிடையே கட்சி இல்லை - ஜாதி இல்லை, மத வேறுபாடுகள் இல்லை.
எல்லோரும் இந்த பிரச்சினையிலே ஒன்று பட்டு நிற்கிறோம் என்று காட்ட வேண்டிய மகத்தான பொறுப்பு நமக்கு உண்டு.
இந்த பிரச்சினையிலே நமக்குள்ளே அரசியல் இருக்கக் கூடாது என்று திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஆரம்பம் முதலே இரட்டைக் குழல் துப்பாக்கி போன்று தெளிவுபடுத்தி வருகின் றோம்.
பிரபாகரனை கைது செய்ய வேண்டுமா?
ஏதோ ஒரு நாள் நாடகத்தை நடத்தி விட்டு சிலர் திசை திருப்பப் பார்க்கிறார்கள். நம் அனைவருக்குமே பொது எதிரி ராஜபக்சே தான். 2002 ஏப்ரலில் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்திலே என்ன பேசினார்? இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனைக் கைது செய்து இங்கே கொண்டு வர வேண்டும் என்று சொன்னார்.
ஆனால் இன்றைக்கு என்ன செய்திருக்கிறார்? ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தியிருக் கிறார்.
ஆகவே, இந்த தேர்தலுக்காக இலங்கைத் தமிழர் பிரச்சினையை அரசியலாக்காதீர்கள்.
நாம் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் எதிர்ப் பாட்டுப் பாடி கொண்டிருந்தால் நமது பொது எதிரிக்கு இது லாபமாக அமைந்து விடக் கூடும். கொரில்லா யுத்தம் என்பது முடிவடையக் கூடியது அல்ல என்பதை பல ஆர்ப்பாட்டங் களில் நாம் சொல்லியிருக்கின்றோம். இலங்கையில் தமிழர்களான சிறு குழந்தை கள், பெண்கள், மற்றும் அப்பாவி பொது மக்கள் மீது ராஜபக்சேவின் சிங்கள இராணுவப் படை குண்டுவீசி, விஷப்புகைகளைப் பரப்பி தமிழர் களை அடியோடு அழிக் கின்ற கொடிய செயலில் மிருகத்தனமாக ஈடுபட்டு வருகிறது. ஹிட்லர் செய்த அதே வேலையை ராகபக்சே செய்து வரு கின்றார்.
மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்
இலங்கையில் உடன டியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அமெரிக்கா, லண்டன், நார்வே போன்ற நாடுகள் அய்.நா. சபையை வலியுறுத்தி இலங்கையில் உடனடி யாக போர் நிறுத்தம் ஏற்பட, அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படு வதைத் தடுத்து நிறுத்திட மத்திய அரசு உலக நாடுகளுக்கு அழுத்தம் தர வேண்டியது அவசியம். மாநில அரசு தன் எல்லையில் இருந்து அதற்கும் மேல் தொடர்ந்து பணி செய்து கொண்டு வருகின்றது.
எங்கள் உயிரையும் இழக்கத் தயார்!
ஈழத் தமிழர்களைக் காப்பாற்றிட எங்களுடைய உயிரையும் இழக்கத் தயாராக இருக்கி றோம்.
இவ்வாறு தமிழர் தலைவர் பேசினார். தொடர்ந்து ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இறுதியாக மதியம் 12 மணிக்கு ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
---------------"விடுதலை" 12-4-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//பிரபாகரனை கைது செய்ய வேண்டுமா?
ஏதோ ஒரு நாள் நாடகத்தை நடத்தி விட்டு சிலர் திசை திருப்பப் பார்க்கிறார்கள். நம் அனைவருக்குமே பொது எதிரி ராஜபக்சே தான். 2002 ஏப்ரலில் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்திலே என்ன பேசினார்? இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனைக் கைது செய்து இங்கே கொண்டு வர வேண்டும் என்று சொன்னார்.//
கருணாநிதி போல் பேசுகிறீர்கள்.
கருணாநிதியிடம் போய் நீங்கள் தமிழின விரோதி என்று சொன்னால், செயலலிதாவை பாருங்கள் அவர் பெரிய எதிரி என்கிறார்.
நான் அதை செய்தேன் இதை செய்தேன் என்று பட்டியல் இடுவார்.
அது புளித்துப் போனது,
அய்யா, செயலலிதா மோசமானவர் தமிழின எதிரி. உண்மைதான். தெரிந்து போனதால் பலர் செயலலிதாவை விமர்சிப்பதில்லை. ஏனெனில் அது எல்லோருக்கும் வெட்ட வெளிச்சம். நான் ஒரு பாப்பாத்தி என்று சட்ட மன்றத்தில் பதிவு செய்தவர்.
எல்லோருக்கும் தெரியும் பார்ப்பனர்கள் தமிழர்களுக்கு எதிரி என்று. ஆனால் கருணாநிதி துரோகி என்பது தெரிந்தும் கருணாநிதியை தமிழனத்தின் காவலர் போல் பேசுவதும், எழுதுவதும் கருணாநிதி பேசும் பொய்யைவிட கேவலமானது.
//மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்
இலங்கையில் உடன டியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அமெரிக்கா, லண்டன், நார்வே போன்ற நாடுகள் அய்.நா. சபையை வலியுறுத்தி இலங்கையில் உடனடி யாக போர் நிறுத்தம் ஏற்பட, அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படு வதைத் தடுத்து நிறுத்திட மத்திய அரசு உலக நாடுகளுக்கு அழுத்தம் தர வேண்டியது அவசியம். மாநில அரசு தன் எல்லையில் இருந்து அதற்கும் மேல் தொடர்ந்து பணி செய்து கொண்டு வருகின்றது..
கோழித்திருடன் கூடச்சேர்ந்து தேடினானாம் அது போல காங்கிரசு நடிக்கிறது. இந்திய அரசு தான் அங்கே போரை நடத்துகிறது. அதனுடன் சேர்ந்து நீங்களும் தேடுகிறீர்கள். உலக செய்திகளை படியுங்கள்.
இது உலகு அறிந்த விசயம் ஆனால் உலக நாடுகள் அழுத்தம் தரவேண்டுமாம்.
எவ்வளவு பெரிய நாடகம்.
தோழர் சுகுமாறன் அவர்களின் சிந்தனைக்கு....
இன்றைக்கு ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையை வைத்து அரசியல் நடத்துகின்றார்கள். ஜெயலலிதா அம்மையார் திடீரென்று உண்ணா விரதம் நாடகம் நடத் தினார். அதன் மூலம் உலகத்தமிழர்களுடைய கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி விடலாம் என்று நினைக் கிறார்கள். ஏதோ மற்றவர்கள் எல்லாம் ஏமாந்து விடுவதைப் போலவும் ஏதோ கலைஞரோ திராவிட முன்னேற்றக் கழகமோ, திராவிடர் கழகமோ அதைப்பற்றிக் கவலைப்படாத நிலை யில் இருப்பதைப்போல இன்றைக்கு ஒரு படத்தை வரையலாம் என்று நினைக்கின்றார்கள்.
தயவு செய்து அப்படி நினைக்கிறவர்களுக்குச் சொல்கின்றோம். மற்றவர்கள் ஈழப்பிரச்சினை யைப் பற்றி சிந்திக்காத முன்பே சிந்தித்த ஒரு இயக்கம் இருக்கிறதென்றால் அதுதான் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஆகும். (பலத்த கைதட்டல்)
1939 லே இலங்கையிலே இருக்கின்ற தமிழர்கள் இன்னல்கள் பட்டதற்காக அவர்களு டைய துன்பம் போக்கப் படவேண்டும் என்று திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுவிலே தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
இதே மேடையிலே பல கூட்டங்களிலே சொல்லியிருக்கின்றோம்.
பிறகு 1956 இலே சிதம்பரத்திலே அண்ணா அவர்களுடைய தலைமையிலே கலைஞர் அவர்களுடைய முன்னிலையிலே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தீர்மானம் நிறைவேற்றிருக்கின்றார்கள்.
எனவே எங்களுக்கு இப்படிப்பட்ட வரலாறு உண்டு. ஆனால் அப்பொழுதெல்லாம் இதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். இப்பொழுது திடீரென்று கவலைப் படுகிறார்கள்.
இலங்கையிலேபோர் நிறுத்தம் நடைபெற வேண்டும். ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை பெற வேண்டும் என்பதற்காக முதல் முறையாக அக்கறை எடுத்துக்கொண்டு இந்தப் பிரச்சினையை மற்றவர்களிடத்திலே கொண்டு வந்த முயற்சி திராவிடர் கழகத்தையே சாரும்.
இதே பெரியார் திடலிலிருந்து தான் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை கோரி ரயில் மறியல் போராடடம் நடத்தி அதற்காக கைது செய் யப்பட்டோம்.
23.09.2008 இல் இந்த பிரச்சினைக்காக நாங்கள் கைது செய்யப்பட் டோம். அதுவரை எந்தக் கட்சியும் கவலைப்படாத ஒரு நிலை இருந்தது. ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு திராவிடர் கழகத்தின் சார்பில் இரண்டாயிரம் பேர் நாங்கள் கைது செய்யப்பட் டோம்.
எங்களோடு விடு தலைச் சிறுத்தைகளைச் சார்ந்த சகோதரர் தொல். திருமாவளவன் அவர்கள் வட எங்களை வாழ்த்து வதற்கு வந்திருந்தவர் அவரும் எங்களோடு கைதானார்.
அதற்குப் பிறகுதான் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி உண்ணாவிரதம் ஆரம்பித்தது.
இன்றைக்கு அ.தி.மு. கவோடு கூட்டணி சேர்ந்திருக்கின்றார்களே அந்த நண்பர்கள் கூட, அவர்கள் சார்பில் வருவார்கள்.
ஆள் அனுப்புவார் கள் (அதிமுக சார்பில்) ஆதரவு காட்டுவார்கள் என்றெல்லாம் எதிர் பார்த்து கடைசி வரையிலே காத்திருந்து, காத்திருந்து பார்த்து ஏமாந்தார்கள்.
காக்க வைப்பது அவர்களுடைய தர்மம். காத் திருப்பது இவர்களுடைய சகிப்புத்தன்மை.
அன்றைக்கும் காத் திருந்தார்கள். இன்றைக்கும் இப்பொழுதும் காத் திருக்கின்றார்கள். ஆகவே காத்திரக்கட்டும். நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை.
-----கி.வீரமணி-விடுதலை" 12-4-2009
Post a Comment